மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
944 topics in this forum
-
18.10.2000 அன்று ஓயாத அலைகள் 4 படை நடவடிக்கையில் நாகர்கோவில் களமுனையில் விழுப்புண்ணடைந்து 23.10.2000 அன்று வீரச்சாவை அணைத்துக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் அவர்களினதும், இதே நாள் திருகோணமலைத் துறைமுகத்தில் வைத்து சிறிலங்கா கடற்படையின் மூன்று கடற்கலங்களை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் ரெஜி, மேஜர்கள் திருமாறன், மயூரன், நித்தி, நிதர்சன், றோஸ்மன் ஆகியோரின் 10ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீர மறவர்களிற்கும், இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.
-
- 11 replies
- 2.4k views
-
-
14.10.1999 முல்லை மாவட்டம் கொக்குளாய்க் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் மோதல் நடைபெற்றுக் கொண்டிருந்தவேளை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட படகு விபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அருந்தவம், லெப்.கேணல் புவனேஸ் உட்பட்ட ஆறு கடற்கரும்புலி மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். கொக்குளாய் கடற்பரப்பில் கடற்படையினரின் டோறா கடற்கலங்கள் கடற்புலிகளால் வழி மறிக்கப்பட்டு தாக்கப்பட்டுக் கொண்டிருந்தவேளை டோறா கலங்களை இலக்கு வைத்து நகர்ந்து கொண்டிருந்த இரு கடற்கரும்புலிப் படகுகள் எதிர்பாராத விதமாக ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதினால் ஏற்பட்ட விபத்தில் லெப்.கேணல் அருந்தவம், லெப்.கேணல் புவனேஸ், மேஜர் கலைமகள், மேஜர் சூரியப்பிரபா, மேஜர் பரணி, கப்டன் சுதாகரன் ஆகிய கடற்க…
-
- 8 replies
- 1.9k views
-
-
தமிழீழ தாயக விடுதலைப் போரில் வீரச்சாவைத் தழுவிய முதல் பெண் மாவீரர் லெப்.மாலதியின் 23ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
-
- 26 replies
- 4.4k views
-
-
07.10.1999 அன்று மன்னார் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்புலிகளின் துணைத் தளபதி லெப்.கேணல் நிரோஜன் உட்பட்ட கடற்புலிகள் 12ம் ஆண்டு நினைவு நாளும், வடபோர் முனையில் 07.10.2006 அன்று சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் அக்பர் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு நாளும், இந்து மாகடலில் 07.10.2007 அன்று சிறலங்கா கடற்படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கபிலன், லெப்.கேணல் அண்ணாமறவன் உட்பட்ட கடற்புலி மாவீரர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். கடற்புலிகளின் பல்வேறு வெற்றிகர தாக்குதல் நடவடிக்கைகளை வழிநடத்திய லெப்.கேணல் நிரோஜன் அவர…
-
- 8 replies
- 2.5k views
-
-
சூரியக்கதிர் நடவடிக்கைக்கு முன்னேற்பாட்டு நடவடிக்கையாக சிறிலங்கா படையினரால் வலிகாமம் கிழக்குப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இடிமுழக்கம் நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் ஜீவன்(அசிம்) உட்பட்ட 170 வரையான மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
-
- 14 replies
- 2.6k views
-
-
தமிழீழ கடற்பரப்பில் 01.10.1999 அன்று சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அண்ணாச்சி(சிறி) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காய் தனது இன்னுயிரை ஈந்த இந்ம மானமாவீரனிற்கு வீரவணக்கங்கள். படத்தைப் பெரிதாய்ப் பார்க்க படத்தின் மீது அழுத்தவும்.
-
- 14 replies
- 2.6k views
-
-
சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட யாழ்.தேவி படைநடவடிக்கையில் கிளாலி நோக்கிய முன்நகர்விற்கு எதிரான முறியடிப்புச் சமரில் 29.09.1993 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் நரேஸ்(நாயகம்) உட்பட்ட மாவீரர்களினது 17ம் ஆண்டு நினைவு நாளும் 29.09.2006 அன்று யாழ். தீவகக்கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் ரதன்(பொன்முடி) அவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். படங்களைப் பெரிதாய்ப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்.
-
- 10 replies
- 2.3k views
-
-
27.09.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் நிசாந்தன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
-
- 9 replies
- 2.5k views
-
-
27.09.1998 அன்று கிளிநொச்சி படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஓயாத அலைகள் 2 படை நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். லெப்.கேணல்கள் சித்தார்த்தன்(சித்தா), செல்வி(றியன்சி), ஞானி, ஈஸ்வரகாந்தன், காந்தசீலன், விசு, மைந்தன், மணிமேகலன் உட்பட 400 வரையான மாவீரர்கள் கிளிநொச்சி மண்ணை மீட்பதற்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கினர். தாயக விடுதலை என்ற உயரிய இலட்சியத்தை அடைவதற்காக தம்மை ஆகுதியாக்கிய இம்மாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள்
-
- 19 replies
- 2.6k views
-
-
-
-
- 38 replies
- 7k views
-
-
25.09.1992 அன்று பூநகரி பள்ளிக்குடா பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் இரு மினி முகாம்கள் மற்றும் 62 காவலரண்கள் மீதான அழித்தொழிப்புத் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் அவர்கள் உட்பட்ட மாவீரர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீர மறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.
-
- 16 replies
- 2.3k views
-
-
24.09.2006 அன்று சுகவீனம் காரணமாக சாவடைந்த நவம் அறிவுக்கூட நிர்வாகப் பொறுப்பாளர் லெப்.கேணல் பிறையாளன்(சுட்டா) மற்றும் அதே நாள் புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் செவ்வேள், லெப்.கேணல் சீராளன், லெப்.கேணல் புயலினி உட்பட்ட கடற்புலி மாவீரர்களின் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள். படங்களைப் பெரிதாய் பார்க்க அவற்றின்மீது அழுத்தவும்
-
- 7 replies
- 2k views
-
-
23.09.1990 அன்று சிறிலங்கா கடற்படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கிளிநொச்சி மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் சந்திரன் அவர்களின் 20ம் ஆண்டு நினைவு நாளும், 23.09.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் குயில் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள். படங்களைப் பெரிதாய்ப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்.
-
- 5 replies
- 1.9k views
-
-
22.09.1998 அன்று முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்டினன்ட் கேணல் அருணா(அருணன்) அவர்களின் 12ம் ஆண்டு நினைவு நாளும், 22.09.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் கேணல் புத்தொளி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும் தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்ம மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள் ஒளிப்படங்களைப் பெரிதாய் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்.
-
- 17 replies
- 3.1k views
-
-
19.09.1994 அன்று மன்னார் கற்பிட்டிக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் “சாகரவர்த்தன” போர்க் கலத்தினை மூழ்கடித்து வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நளாயினி, மேஜர் மங்கை, கப்டன் வாமன், கப்டன் லக்ஸ்மன் ஆகியோரின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்(19.09.2010) கீழேயுள்ள படங்களைப் பெரிதாய்ப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்
-
- 10 replies
- 2.8k views
-
-
சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட மின்னல் படைநடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரில் 17.09.1991ம் ஆண்டு வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின், 2ம் லெப். மில்ராஜ் ஆகிய மாவீரர்களின் 19ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 17.09.2006 அன்று சிறிலங்கா கடற்பரப்பில் கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் லெப்.கேணல் அந்தணன், லெப்.கேணல் விதுசன், லெப்.கேணல் கலைச்செல்வன் மற்றும் லெப்.கேணல் வெற்றியரசன், லெப்.கேணல் நான்முகன் உட்பட்ட கடற்புலிகளினதும் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வளங்கள் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளையே இவர்கள் வீரச்சாவைத…
-
- 10 replies
- 2.3k views
-
-
அம்பாறை வனப்பகுதியில் 15.09.2007 அன்று எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் பவமாறன், லெப்.கேணல் அயோனி லெப்.கேணல் மிதுலன் மற்றும் மேஜர் எரிமலை ஆகிய மாவீரர்களின் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். அம்பாறை வனப்பகுதியில் நிலைகொண்டிருந்த விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிப்போராளிகளான இவர்கள் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தனர். இவர்களில் லெப்.கேணல் பவமாறன் சிறப்பு அதிரடிப்படையினருக்கு பல தாக்குதல்களை நடத்தி பல படையினரின் உயிரிழப்பிற்கும் அவய இழப்பிற்கும் காரணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அம்பாறை வனப்பகுதிக்குள் புகுந்த சிறப்பு அதிரடிப்படையினருக்க…
-
- 14 replies
- 3k views
-
-
20.08.2004 அன்று மட்டக்களப்பு மாவட்டம் காயன்கேணிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் ஒத்துழைப்புடன் தேசவிரோதிகள் நடத்திய தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியற்துறை நிர்வாகப் பொறுப்பாளர் லெப்.கேணல் பாவா(தயாசீலன்), தொண்டுநிறுவனங்களிற்கான மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட இணைப்பாளரான லெப்.கேணல் யோகா ஆகியோரின் 6ம் ஆண்டு நினைவு.
-
- 7 replies
- 2.6k views
-
-
http://3.bp.blogspot.com/-h_zfONJ0RYI/Ts0X4q7f8TI/AAAAAAAAAIg/U_29UotCMP0/s640/Malaravan+2011.jpg போர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரியல் வரலாற்றின் ஒரு அங்கமான அந்தப் படைப்பின் கர்த்தா - கப்டன் மலரவன். 1992 கார்த்திகை 24ம் நாள், பலாலி – வளலாயில் 150 காவலரண்களை தாக்கியழித்து பாரிய வெற்றியைப் பெற்ற தாக்குதலில் அந்த விடுதலைப் படைப்பாளி வித்தானான். கப்டன் மலரவனை விடுதலைப்போராட்டம் இழந்து பத்தொன்பது வருடங்கள் கடந்துவிட்டதன் நினைவுநாள் இன்று. கப்டன் மலரவன் ஒரு பன்முக ஆற்றலுள்ள போராளி. விடுதலைப்போராட்டத்தில் அவரது ஆளுமையும் பங்களிப்பும் காத்திரத்தன்மையும் நீண்டகாலத்திற்கு …