மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
944 topics in this forum
-
எல்லோருக்கும் கடைசிப்பிள்ளை லெப். கேணல் ஈழப்பிரியன்.! Last updated Dec 31, 2019 பிரியா என் அன்பு நண்பனே…! உனக்கு…… என் வீரவணக்கங்கள்..! ஈழப்பிரியன், ஆரம்பத்தில் இருந்தே அரசியல் துறைப்பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ் செல்வன் அவர்களின் வளர்ப்பில் வளர்ந்தவன். மெய்ப்பாதுகாவலனாக, தனிப்பட்ட உதவியாளனாக, கிலோ வண் முகாம் பொறுப்பாளனாக, அரசியல் துறைக்கு ஆயுத அறிக்கை பரிசோதனாக, பயிற்சியாளனாக, துப்பாக்கி சூட்டு பயிற்சியாளனாக, வினியோக அணி பொறுப்பாளனாக, முகாம்கள் கட்டுமான பணிப்பாளனாக, இறுதியாக படையணிப்பொறுப்பாளனாக….. எவ்வளவு பணிகள்? எவ்வளவு பொறுப்புக்கள்.. சிறிய வயதிற்குள்.. மிகப்பெரிய பொறுப்புக்கள்… கிளிநொச்சி உருத்திரபுரம் தான் அவனது பெற…
-
- 3 replies
- 1.5k views
-
-
கேணல் ராயூ அண்ணாவுக்கு வீர வணக்கம் 🙏 / தமிழீழ போராட்டத்தில் கேணல் ராயூ அண்ணாவின் திறமை எம் போராட்டத்துக்கு மிகவும் பலம் சேர்த்தது , ஏழாலை எனும் அழகான ஊரில் பிறந்து வளந்து போராட்ட களம் நோக்கி சென்ற தளபதி எங்கள் ராயூ அண்ணா 🙏🤞/ தமிழீழ தேசிய தலைவரின் அன்பு தம்பி , தலைவர் அருகில் கூடவே இருந்து வளந்த திறமையான அறிவான தளபதி ராயூ அண்ணா 🙏 / எம் போராட்டத்துக்காக இரவு பகல் என்று பாராமல் அயராது பாடு பட்ட தளபதி ராயூ அண்ணா 🙏/ புற்றுநோய் வந்த போதும் உயிரை பற்றி யோசிக்காம போராட்டத்தை நேசித்த தளபதி ராயூ அண்ணா 😓 ராயூ அண்ணாவை நேரில் பார்க்கும் சர்ந்தப்பம் எனக்கு கிடைக்கல , ராயூ அண்ணா அருகில் நி…
-
-
- 9 replies
- 1.6k views
- 1 follower
-
-
1984 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 02 ஆம் நாள் முல்லைத்தீவு மாவட்டத்தின் தென்மேற்கு எல்லைக் கிராமமான ஒதியமலைக்குள் நுழைந்த இலங்கை இராணுவத்தினர், அக்கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் 32 பேரை வெட்டியும் சுட்டும் படுகொலை செய்தது. எல்லைக் கிராமங்களில் இருந்து தமிழர்களை வெளியேற்றும் நோக்குடன் நடத்தப்பட்ட இந்தப் படுகொலைக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை.
-
- 0 replies
- 603 views
-
-
ஒரு உண்மை வீரனின் கதை - லெப்.கேணல் நவநீதன் ஒரு உண்மை வீரனின் கதை நவநீதனைப்பற்றிச் சொல்வதானால் சண்டையில் தான் ஆரம்பிக்க வேண்டும்; சண்டைகளால் தொடர வேண்டும்; சண்டையொன்றில் முடிக்க வேண்டும். அவனது சண்டைகளை விளக்குவதன் மூலம் தான் அவனை வர்ணிக்க முடியும். அந்தளவுக்கு சண்டைக்களங்களிலேயே அவனது வாழ்வு உருண்டோடியது; சண்டைக்களங்களிலேயே அவன் தூங்கி விழித்தான் பழம்பாசியில் ஒரு சண்டை. பால்ராஜ் அவர்கள் வன்னிக்குத் தளபதியாக இருந்த போது அவரது பாதுகாப்பு அணிக்குப் பொறுப்பாக இருந்தவன் நவநீதன் தான். தவிர்க்க முடியாத ஒரு பயணம்; தளபதி போகவேண்டியிருந்தது. அரசியலுக்குப் பொறுப்பாக இருந்த லெப்ரினன்ட் கேணல் சந்திரனும் கூட. போயே ஆகவேண்டும்; நோக்கம் முக்கியமானது. அது இ…
-
- 1 reply
- 425 views
-
-
ஒரு மறைமுகப் போராளியின், வீரப் பாதங்களின் சுவடு.! விடுதலைப்புலிகள் என்றால் யார்? அந்த வீரர்களின் மனத்துணிவு எத்தகையது? அவர்கள் தமது தேசத்தையும், மக்களையும், தமது சக போராளிகளை யும் (நண்பர்கள்) எவ்வளவு தூரம் நேசித்தார்கள்? இந்த கேள்விகளுக்கான விடையை, நீங்கள் ஒரு உண்மை சம்பவத்தின் ஊடாக அறிய முடியும் என்பதே எனது நம்பிக்கை.! இது போல பல தியாகங்களுக்கு கட்டியம் கூறி நிக்கும், பல நூறு சம்பவங்கள் எமது போராட்ட வரலாற்றில் உள்ளன. அதில் ஒன்றை இந்த கேள்விகளுக்கான விடையாகப் பதிவு செய்கின்றேன். நான் இதை பதிவு செய்வதற்கு காரணம், புலிகள் ஏதோ ஒரு ஆயுத குழுவோ, அல்லது கொடும் கோலர்களோ அல்ல. மாறாக தமது தேசத்தையும், மக்களையும் உளமார நேசித்து அதற்காகவே மடிந்த உன்னத வீர்கள். மடி ச…
-
- 0 replies
- 854 views
-
-
ஒரு வீரனின் ஆசை நவம்பர் 23, 2020/தேசக்காற்று/கரும்புலிகள் காவியங்கள்/0 கருத்து கரும்புலி லெப். கேணல் போர்க் மாப்பாணப்பிள்ளை அரசரத்தினம் ஆறுமுகத்தான் புதுக்குளம், வவுனியா பிறப்பு: 11.11.1959 வீரச்சாவு: 23.11.1990 வன்னிப் பிராந்தியத்தின் மையத்தில் – அதன் இருதயத்தில் மாங்குளம் சிங்களப் படைமுகாம் இருந்தது. அது அங்கு பல அட்டூழியங்களைச் செய்து வந்தது. இரண்டாவது ஈழப்போர் தொடங்கிய நாட்களிலிருந்து இம் முகாம் புலிகளால் முற்றுகையிடப்பட்டிருந்தது. எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அமைந்துள்ள இப்படைமுகாம் மீது தாக்குவதற்கான திட்டம் தயாரிக்கப்படுகிறது. அப்படை முகாம்மீது கரும்புலித் தாக்குதல் நடாத்தி அதைக் கைப்பற்றுவது என்று தீர்மானிக்கப்பட…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஓட்டுக்குழு கருணா சதிவலையில் சிக்குண்ட லெப். கேணல் நீலன் என்றும் அழியாத சுவடு மட்டு – அம்மாறை மாவட்ட புலனாய்வுத்துறை துணைப் பொறுப்பாளர் லெப். கேணல் நீலன் வீரவணக்க நாள் இன்றாகும். தென் தமிழீழத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒட்டுக்குழு கருணாவின் துரோகத்தனத்தால் துரோகிகள் மேற்கொண்ட தீய செயல்களால் 12.04.2004 அன்று துரோகி கருணாவால் சுட்டபட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட புலனாய்வுத்துறை துணைப் பொறுப்பாளர் லெப். கேணல் நீலன் உட்பட ஏனைய போராளிகளின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலை போராட்டத்தின் கறுப்பு பங்கங்களில் முதல் பக்கமாக பெயர் கூட குறிப்பிட முடியாத துரோகங்கள் சி…
-
-
- 7 replies
- 1.9k views
-
-
ஜெயசிக்குறு படை நடவடிக்கைக்கு எதிராக ஒமந்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஊடறுப்புத் தாக்குதலில் வீரகாவியமான தமிழீழத்தின் புகழ்பூத்த பாடகர் மேஜர் சிட்டு உட்பட்ட 137 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். வன்னி மண்ணை ஊடறுத்து யாழில் நிலை கொண்டிருந்த படையினருடன் இணைப்பை ஏற்படுத்த ஜெயசிக்குறு என்ற குறியீட்டுப் பெயருடன் மேற்கொள்ளப்பட்ட பாரிய நடவடிக்கை மூலம் முன்னகர்ந்து நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீது 01.08.1997 அன்று வவுனியா மாவட்டம் ஒமந்தைப் பகுதியில் விடுதலைப் புலிகளால் ஊடறுப்புத் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டது. ஏற்கனவே தாண்டிக்குளம், மற்றும் பெரியமடுப் பகுதியில்களில் மேற்கொள்ளப்பட்ட ஊடறுப்புத் தாக்குதல்களைத் தொடர்ந்து உச்சவழிப்பு நிலையில் படையினர்…
-
-
- 8 replies
- 1.7k views
-
-
-
- 0 replies
- 1.5k views
-
-
“ஓயாத அலைகள் - 04” நடவடிக்கையின்போது யாழ். நாகர்கோவில் பகுதியில் காவியமான லெப்.கேணல் சாந்தகுமாரி(ஜெயசுதா) உட்பட்ட 23 மாவீரர்களினதும், அரியாலை, கல்வயல், சாவகச்சேரி பகுதிகளில் காவியமான நான்கு மாவீரர்களினதும் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 06.10.2000 அன்று யாழ். நாகர்கோவில் பகுதியில் “ஓயாத அலைகள் - 04” நடவடிக்கையின்போது லெப்.கேணல் சாந்தகுமாரி (ஜேசுதா) (சூசைப்பமொராயஸ் ரமணி - மன்னார்) மேஜர் வேழினி (முருகையா சந்தானலட்சுமி - வவுனியா) கப்டன் அறிவொளி (தேவசகாயம் கமலதாஸ் - வவுனியா) லெப்டினன்ட் களத்தேவி (செபமாலை மரியான் நிர்மலா - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் பனிநிலா (இரத்தினம் திலகவதி - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் ஈகைவேங்கை (தங்கவேல் பக்தகௌரி - கண்டி) 2ம் லெப்டின…
-
- 3 replies
- 880 views
-
-
முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கையில் 21.07.1996 அன்று வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் மிதுபாலன் மற்றும் கப்டன் சயந்தன் உட்பட்ட 12 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 18.07.1996 அன்று முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கை தொடங்கப்பட்டு படைத்தளத்தின் பெரும்பகுதி மீட்கப்பட்ட நிலையில் இந்நடவடிக்கையை முறியடிக்கவும், இழந்த தளத்தை மீளக் கைப்பற்றவும் சிறிலங்கா கடற்படையினரால் அலம்பில் பகுதியில் தரையிறக்கப்பட்ட படையினரால் முல்லைத்தீவுதளம் நோக்கி பாரிய முன்னகர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்க மேலதிக தரையிறக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா…
-
- 6 replies
- 870 views
-
-
[size=3] [size=4]கிளிநொச்சி படைத்தளம் தாக்கியழிக்கப்பட்ட ஓயாத அலைகள் - 2 நடவடிக்கையில் காவியமான 293 மாவீரர்களின் நினைவு வணக்க நாள் இன்றாகும்.[/size] [size=4]27.09.1998 அன்று கிளிநொச்சி படைத்தளம் மீது “ஓயாத அலைகள் 2” படை நடவடிக்கை விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கையின்போது 2000 வரையான படையினர் கொல்லப்பட்டதுடன் பெருமளவானோர் படுகாயமடைந்தனர். பெருமளவான போர் ஆயுதங்கள், வெடிபொருட்கள், படை ஊர்திகள் என்பன விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டன. கிளிநொச்சிப் பகுதி சிறிலங்கா படைகளின் வல்வளைப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட “ஓயாத அலைகள் - 2” நடவடிக்கையின் வெற்றிக்காக 400 வரையான போராளிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர். 27.09.1998 அன்று ஓயாத அலைகள் - 2 நடவடிக்கை…
-
- 11 replies
- 1.4k views
-
-
“ஓயாத அலைகள் - 3” நடவடிக்கையில் காவியமான லெப்.கேணல் குமணன் உட்பட்ட 10 மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 12.12.1999 அன்று ஒயாத அலைகள் - 3 நடவடிக்கையின்போது பூநகரி, இயக்கச்சி, வடமராட்சி ஒல்லன்காடு மற்றும் வெற்றிலைக்கேணி ஆகிய பகுதிகளில் 10 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். பூநகரிப் பகுதியில் வீரவேங்கை வர்ணன் (விக்கினேஸ்வரன் அஜந்தன் - யோகபுரம், மல்லாவி, முல்லைத்தீவு) என்ற போராளியும், இயக்கச்சிப் பகுதியில் இடம்பெற்ற சமரில் லெப்டினன்ட் பாணன் (நாதன்) (சன்னாசி நாகராசா - வட்டக்கச்சி, கிளிநொச்சி) என்ற போராளியும், வடமராட்சி ஒல்லன்காடு பகுதியில் இடம்பெற்ற சமரில் லெப்.கேணல் குமணன் (சாள்ஸ்) (கந்தையா சிவனேஸ்வரநாதன் - கோவில்புளியங்குளம், வவுனியா) லெ…
-
- 6 replies
- 952 views
-
-
||| ஓயாத அலைகள் ஒன்று – முல்லைப் பெரும் சமர் ||| விடுதலைப்புலிகளால் ஓயாத அலைகள் என்று பெயரிடப்பட்டு முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல் தொடுக்கப்பட்டு அப்படைமுகாம் வெற்றி கொள்ளப்பட்டது. அதன் மூலம் முல்லைத்தீவு என்ற நகரம் மீட்கப்பட்டதோடு போராட்டத்தின் அபாரப் பாய்ச்சலுக்கும் வித்திடப்பட்டது. ஓயாத அலைகல் நினைவூடல் இத்தாக்குதல் நடத்தப்பட்ட காலகட்டம் மிகவும் முக்கியமானது. அதுவரை புலிகளின் கோட்டையாகவும் போராட்டத்தின மையமாகவும் தலைமையிடமாகவும் கருதப்பட்ட யாழ்ப்பாணம் சிங்களப் படைகளால் முற்றாகக் கைப்பற்றப்பட்ட நிலையில், இனிமேல் புலிகள் என்ன செய்யப்போகிறார்களென்று எல்லோரும் கேள்வி கேட்ட நேரத்தில், புலிகளில் 80 சதவீதம் பேர் அழிந்து விட்டார்கள், இன்னும் 20 சதவீ…
-
- 0 replies
- 3.7k views
-
-
கிளிநொச்சி படைத்தளம் தாக்கியழிக்கப்பட்ட ஓயாத அலைகள் – 2 நடவடிக்கையில் காவியமான 293 மாவீரர்களின் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.27.09.1998 அன்று கிளிநொச்சி படைத்தளம் மீது “ஓயாத அலைகள் 2” படை நடவடிக்கை விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கையின்போது 2000 வரையான படையினர் கொல்லப்பட்டதுடன் பெருமளவானோர் படுகாயமடைந்தனர். பெருமளவான போர் ஆயுதங்கள், வெடிபொருட்கள், படை ஊர்திகள் என்பன விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டன.கிளிநொச்சிப் பகுதி சிறிலங்கா படைகளின் வல்வளைப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட “ஓயாத அலைகள் – 2” நடவடிக்கையின் வெற்றிக்காக 400 வரையான போராளிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர்.இவ்வெற்றிச் சமரில் முக்கிய பங்கேற்று ஊடறுப்பு அணி ஒன்றின் தலைவியாகச் சென்று வீரச்சாவை…
-
- 0 replies
- 511 views
-
-
27.09.1998 அன்று கிளிநொச்சி படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஓயாத அலைகள் 2 படை நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். லெப்.கேணல்கள் சித்தார்த்தன்(சித்தா), செல்வி(றியன்சி), ஞானி, ஈஸ்வரகாந்தன், காந்தசீலன், விசு, மைந்தன், மணிமேகலன் உட்பட 400 வரையான மாவீரர்கள் கிளிநொச்சி மண்ணை மீட்பதற்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கினர். தாயக விடுதலை என்ற உயரிய இலட்சியத்தை அடைவதற்காக தம்மை ஆகுதியாக்கிய இம்மாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள்
-
- 19 replies
- 2.6k views
-
-
ஓயாத அலைகள் 3 பாரிய படை நடவடிக்கையில் ஒட்டுசுட்டான் படைத்தளம் மீதான தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் ராகவன், தளபதி லெப்.கேணல் இளையவன்(நியூட்டன்) உட்பட்ட மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 02.11.1999 அன்று தொடங்கப்பட்ட ஓயாத அலைகள் 3 படைநடவடிக்கையின் வெற்றிக்கு அடித்தளமிட்ட ஒட்டுசுட்டான் படைத்தள வீழ்ச்சிக்காக தம்மை ஆகுதியாக்கிய சிறப்புத் தளபதி லெப்.கேணல் ராகவன், தளபதி லெப்.கேணல் நியூட்டன், மேஜர் சாரங்கன்(ஆறுமுகம் கதீபன்), கப்டன் ஜீவராசா(விசுவலிங்கம் சசிக்குமார்), லெப்.இருதயன்(வில்விறட் சுதேசன்), லெப். தரன்(தர்மு செல்வம்), லெப். செல்லத்தேவன்(பழனியாண்டி விமலன்), 2ம் லெப்.வண்ணன் (நல்லையா ரகுச…
-
- 13 replies
- 2.9k views
- 1 follower
-
-
ஓவியர் வீரசந்தானம் ஐயா ! உங்கள் பெயர் ஈழ வரலாற்றில் எழுதிவைக்கப்படும். தலை வணங்கி கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்குகிறேன்! விடுதலைப் பயணத்தில் இதுவரை இழப்புக்கள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன. ஆனாலும் மனம் இறுகவில்லை. பதிலாக, ஒவ்வொரு இழப்புக்களின் போதும் மனம் கலங்கி, தடுமாறித்தான் போகின்றது.
-
-
- 6 replies
- 3.3k views
-
-
மூலம் http://irruppu.com/2021/09/22/கடமையுணர்வு-கொண்ட-கப்டன்/ நினைவுப்பகிர்வு: கொற்றவன். http://irruppu.com/wp-content/uploads/2021/09/IMG-138e0c5ac5e8fd151b2fbf71566ddc95-V.jpg யாழ்மாவட்டத்தில் வடமராட்சிகிழக்கு உடுத்துறையை பிறப்பிடமாகக் கொண்ட கப்டன் கலைஞன் தனது பள்ளிப்படிப்பபை உடுத்துறை மகாவித்தியாலயத்தில் தொடர்ந்தார். 2004ம் ஆண்டு பிற்பகுதியில் தன்னை தமிழீழ விடுதலைப்பேகாராட்டத்தில் இணைத்துக்கொண்ட கலைஞன் தனது அடிப்படை படையப்பயிற்சிகளை முடித்துக்கொண்டபின்னர் கடற்புலிகள் உறுப்பினராகச்செயற்படலானார். 2005-ம்ஆண்டுகாலப்பகுதியில் சிறிதுகாலம் திருமலைமாவட்டத்தில் போராட்டச்செயற்பாடுகளை முன்னெடுத்த கலைஞன் மீண்டும் வன்னிக்குவந்தார். வன்னிக்கு வந்…
-
- 1 reply
- 436 views
-
-
கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி கடலன்னையின் பெண் குழந்தை: முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி. உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம். சாதாரணமாக எந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இந்த வெண்மணற் பரப்பைப் பார்த்தால் தோழியருடன் ஓடிப்பிடித்து விளையாடத் தோன்றும். நீச்சல் பயிற்சியில் ஈடுபடவென கரைக்கு வந்த பெண் புலிகளின் மனம் ஏழைகளின் கண்ணீரில் இளகியது. அனுதாபத்துடன் அந்த மக்களின் நிலையைப் பற்றித் தமக்குள் பேசிக்கொண்டார்கள். அங்கயற்கண்ணியின் மனம் இறுகிப் பாறையானது. “இவங்களுக்கு இதுக்கு ஒரு சரியான பதிலடி குடுக்கவேணும்” அந்த நிமிடத்திலேயே மனதளவில் அவள் ஒரு கரும்புலியான…
-
- 6 replies
- 1.5k views
-
-
[size=4]திருமலை பள்ளித்தோட்டம் பகுதியில் இராணுவத்துடன் ஏற்ப்பட்ட நேரடி மோதலின் போது வீரசவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் அன்புக்கினியன் மற்றும் மட்டக்களப்பு நகர் பகுதியில் சிறீலங்கா படைகளுடன் இணைந்து செயல்ப்பட்ட தேசத்துரோகிகள் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் உதயகீதன் ஆகிய மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும் [/size] [size=4]தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்[/size] http://www.facebook.com/karumpulimaveerarkal
-
- 12 replies
- 1.1k views
- 1 follower
-
-
கடற்கரும்புலி கப்டன் அறிவரசன் டிசம்பர் 30, 2020/தேசக்காற்று/கடற் கரும்புலிகள்/0 கருத்து கடற்கரும்புலி கப்டன் அறிவரசன்: “தக்க நேரத்தில்” “ஓயாத அலைகள் 03” சூடுபிடித்து நகர்ந்து கொண்டிருந்த நேரம். ஆனையிறவுப் பெருந்தளத்தை அழிப்பதற்கான நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தன. இந்த நாட்களில் ஒருநாள் 30-12-1999ம் அன்று கிளாலியிலிருந்து ஆனையிறவை நோக்கி எதிரியின் 3 நீருந்து விசைப்படகுகள், 4 கூவக் கிறாப் 7 – 8 புளுஸ்ரார் என்பன நகர்ந்து கொண்டிருந்தன. இந்த எதிரியின் நகர்வை முறியடிக்க, கடற்புலிகளின் சிறிய ரகப் படகுகள் இரண்டுடன் ஒரு கரும்புலி படகும் அணியமாகியது. இந்நிலையில் கடற்புலிகள் எதிரியின் கலன்களை வழிமறித்து தாக்குதல் செய்ய கரும்புலிப் படகின் ப…
-
- 0 replies
- 416 views
-
-
கடற்கரும்புலி கப்டன் இன்னிசை நவம்பர் 11, 2020/தேசக்காற்று/கடற் கரும்புலிகள்/0 கருத்து என்னினிய தமிழீழ மக்களுக்கு, நான் இறுதியாக எழுதும் உறுதிமொழி, தமிழீழ மக்களாகிய நீங்கள் எமது தலைவனின் காலத்தில் தமிழீழம் கிடைப்பது உறுதி என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். தமிழீழத்தில் எமது தலைவன் ஒரு கொடை. மக்களாகிய நீங்கள் கிளர்ந்தெழுந்து எமது தலைவனுடன் தோளோடு தோள் நின்று போராடுங்கள். நிச்சயம் தமிழீழம் கிடைக்கும். எமக்கென்று ஒரு நாட்டை உருவாக்க வெகு விரைவாக உங்கள் பணிகளைச் செய்யுங்கள். இப்படிக்கு போராளி இன்னிசை 1996.05.16 ஆனையிறவு இராணுவத்தினரின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்களால் இன்னிசையின் குடும்பம் வெற்றிலைக்கேணியிலிருந்து பருத்தித்துறைக்கு இடம்…
-
- 1 reply
- 589 views
-
-
கடற்கரும்புலி கப்டன் இளங்குயிலன் விடாமுயற்சி, ஓர்மம், பிடிவாதம், குறும்புத்தனம் என கலந்துகட்டிய ஓர் அருமையான தோழன் இளங்குயிலன். எமது வாகனம் புதுக்குடியிருப்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. விசுவமடு றெட்பானாவைத் தாண்டும்போதுதான் அவனைப் பார்த்தேன். எதிர்முனையிலிருந்து சைக்கிளில் வந்துகொண்டிருந்தான். வாகனம் ஓரளவு மெதுவாகச் சென்றதால் வடிவாக அவனைப் பார்க்கக் கூடியதாகவிருந்தது. என்றாலும் நம்பமுடியவில்லை. பக்கத்திலிருந்த செல்வனைக் கேட்டேன். செல்வன் அவனைக் கவனிக்கவில்லை. அவன் சைக்கிளோட்டிச் செல்வதைச் சொன்னபோது செல்வனும் நம்பவில்லை. ஏனென்றால் அவன் தனது இரண்டு கால்களையுமே சில மாதங்களின் முன்னர் இழந்திருந்தான். இளங்குயிலனின் இயற்பெயர் பற்றிக் எட்மன்…
-
- 0 replies
- 531 views
-
-
[size=4]21.10.2001 அன்று தமிழீழக் கடற்பரப்பில் வழங்கல் பணியை மேற்கொண்டிருந்த கடற்புலிகளின் கலங்களிற்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட [/size] கடற்கரும்புலி கப்டன் இளங்குயிலன் றோயல்இம்மனுவேல் பற்றிக்எட்மன் மன்னார்[size=4] [/size] [size=4]மற்றும் இதேநாள் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படையின் டோறா கடற்கலங்களை முல்லைக் கடற்பரப்பில் வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட [/size] கடற்கரும்புலி மேஜர் றோசா கணேசன் கற்புக்கரசி யாழ்ப்பாணம் [size=4]ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு வணக்கம் இன்றாகும் [/size] [size=4…
-
- 7 replies
- 889 views
-