தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
694 topics in this forum
-
மறைக்கப்பட்ட வரலாறுகள் மனித வாழ்வியலில் திருக்குறளின் அவசியம்.... உயர் கல்வியின் பொருட்டு வெளியூர் செல்லவேண்டிய நிற்பந்தம், இவ்வளவு காலமும் தாய் தந்தையரின் அரவணைப்பில் வாழ்ந்த ஒரு இளைஞன் முதல் முறையாக பெற்றோரை பிரிந்து செல்லுகின்றான். அவனுக்கு எதை கொண்டு செல்லவேண்டும் எதை தவிர்க்கவேண்டும் என்பதில் ஒரு தடுமாற்றம். எப்படியான ஆடைகளை தெரிவுசெய்வது? இதுவரை படித்த நூல்கள் ஏதேனும் தேவைப்படுமா? புதிய மொழி, கலாச்சார அமைப்புக்கொண்ட பிரதேசத்தில் எப்படி சவால்களை எதிர் கொள்வது? போன்ற எண்ணற்ற கேள்விகள் அவனது ஆழ் மனதில் எழுந்தன. அதற்கு அவனுடைய தந்தை புறப்படும் பொழுது அவனுக்கு ஒரு திருக்குறள் நூலை கொடுத்து மூன்றே மூன்று வார்த்தைகளை மட்டுமே கூறி வழியனுப்பினார் புதிய கலாச்சாரம், புத…
-
- 1 reply
- 3.2k views
-
-
கயமூழ்கு மகளிர் கண்கள். தலைவன் தன்னைவிட பரத்தையரையே பெரிதும் விரும்புகிறான். இதைத் தோழிக்குத் தெரியக்கூடாது என்று மனதுக்குள்ளே மறைக்கிறாள் தலைவி. தலைவனோடு ஊடல்கொள்ள தலைவிக்கு இது போலப் பல காரணங்கள் இருந்தாலும், அவற்றைத் தன் மனதில் கொள்ளாமல் தோழி வாயிலாக வந்தமை ஏற்றுத் தலைவனின் தவறை மறந்தாள் மறைத்தாள். உப்பங்கழியில் நெய்தல் மலர்கள் மலர்ந்துள்ளன. அம்மலர்களின் காம்பு இலைகளுக்கு மேல் உயரமாக வளர்ந்துள்ளது. அலைபெருக்கெடுத்து வரும்போதெல்லாம், நெய்தல் மலர்கள் நீருள் மறைந்து மறைந்து தோன்றுகின்றன. இக்காட்சி, குளத்திலே குளிக்கும் போது நீருள் மூழ்கி மூழ்கி எழும் பெண்களின் கண்களைப் போலவே காட்சியளிக்கின்றன. கண்களல்லாத நெய்தல் மலரானது, மகளிர் கண்கள் போலக் காட்சி தருகிறது. க…
-
- 0 replies
- 2.3k views
-
-
முதலில் தோன்றியது நீரா? நிலமா? பூமியைப் படைத்தது சாமியென்றும் சாமியைப் படைத்தது பூமியென்றும் காலகாலமாகப் பேசிவந்த பேச்சுக்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க எண்ணிய இன்றைய அறிவியலாளர்கள், பூமிக்கு அடியே ஆழத்தில் ஹீலியம் தூண்களை மோதவிட்டு உயிரினங்களின் தோற்றத்தையும், படிநிலை வளர்ச்சியையும் காணமுற்பட்டு அதில் பெருமளவு வெற்றியும் கண்டிருக்கிறார்கள். “பிக் பேங்“ என்னும் மாவெடிப்புக் கொள்கையின்படி சுமார் 10மில்லியன் காலத்திற்கு முன்னர் அண்டம் முழுவதும் இருளால் நிறைந்திருந்தது. எங்கும் பரவியிருந்த ஹைட்ரஜன் நெருப்புக்கோளமானது, பல மில்லியன் நெருப்புக்குமிழ்களை உமிழ்ந்துகொண்டிருந்தது. இந்த நெருப்புப் பந்தின் வெப்பநிலை எல்லை மீறியபோது வெடித்துச்சிதறியது. நெருப்புக்கோளத்…
-
- 9 replies
- 1.6k views
-
-
அந்த நாட்களில் பாடசாலையில் ஆங்கில பாடத்தில் ஓர் பாடம் கற்றுக்கொடுத்தார்கள் ஞாபகம் வரும் என நினைக்கிறன்... ஒவ்வொரு நாட்டின் குடிமகனும் எவ்வாறு I'm Ann I'm from England I'm Saman I'm from Japan இப்படியெல்லாம் ஆங்கிலம் கற்று .... நாளை தமிழன் கற்பான் I'm Tamingkalam I'm from ... from .... from.....? http://soundcloud.com/esai1985/bsdp0274dne4
-
- 2 replies
- 1.1k views
-
-
மலரினும் மெல்லியது காமம் சிறிய கூதளச்செடிகள் காற்றில் ஆடும் பெரிய மலை! அங்கு ஒரு பெரிய தேனடை! அதைக் கண்ட காலில்லாத முடவன், தன் உள்ளங்கையை சிறுகுடைபோல குவித்து தேனடையை நோக்கி சுட்டி கையினை நக்குவது போல... என் காதலர் என்னை நினைக்கவோ, விரும்பவோ இல்லை, எனினும் அவரை பலமுறை காண்பது கூட என் உள்ளத்துக்கு இனியதே! அவரைக் இப்போது காணாததால் அந்த இன்பமும் இப்போது எனக்கு இல்லாமல் போனது என்று தன் ஆற்றாமையைத் தோழியிடம் புலப்படுத்துகிறாள் தலைவி. குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப் பெருந்தேன் கண்ட விருக்கை முடவன் உட்கைச் சிறுகுடைஐ கோலிக் கீழிருந்து சுட்டுபு நக்கி யாங்குக் காதலர் நல்கார் நயவா ராயினும் பல்காற் காண்டலு முள்ளத்துக் கினிதே. குறுந்தொகை 60 பரணர். (பிரிவிடை ஆற…
-
- 0 replies
- 2.7k views
-
-
நன்றி முகனூல் apple : அரத்திப்பழம் , குமளிப்பழம் . orange : கமலாப்பழம் , நாரத்தை, நாரந்தம் , கிச்சிலி , நாரந்தம்பழம் , தோடம்பழம் . strawberry : செம்புற்றுப்பழம் . durian : முள்நாரிப்பழம் . blueberry : அவுரிநெல்லி . watermelon : குமட்டிப்பழம் , தர்பூசணி , முலாம்பழம் . cranberry : குருதிநெல்லி . blackberry : நாகப்பழம் , நாவல் பழம் . peach : குழிப்பேரி . cherry : சேலாப்பழம் . kiwi : பசலிப்பழம்
-
- 9 replies
- 16.4k views
-
-
தமிழ் இலக்கணம் தொடர்பான மின் நூல்களை பதிவிறக்கம் செய்ய: http://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு%3Aதமிழ்_இலக்கணம் #நூலகம் # Grammar #Tamil #Language #தமிழ் #தமிழ்மொழி#தமிழர்
-
- 3 replies
- 6k views
-
-
வெட்கப்பட்ட ஆறு! தலைவன் சில காலம் தலைவியைக் காணவராமல் இருந்தான். அவனது பிரிவாற்றாமையால் வருந்திய தலைவி தலைவனின் மலையிலிருந்து ஓடிவரும்அருவியிடம் இவ்வாறு பேசுகிறாள்.. எம் தலைவரது மலைநாட்டிலிருந்து வரும் ஆறே…. எம் அணிகலன்கள் நெகிழுமாறு துன்பம் மிகுந்தது! மெல்லிய தோளும் மெலிந்து போயிற்று! உடல் பாழ்பட பசலையும் படர்ந்தது! உடலைப் பார்த்து நெற்றியும் பசலை கொண்டது! (புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டதுபோல என்றொரு பழமொழி சொல்வார்கள். அது போலவே தலையின் நிலை உள்ளது உடலைப் பார்க்கும் ஆற்றல் நெற்றிக்குக் கிடையாது என்றாலும் பார்த்தது அதனால் நெற்றியும் கெட்டது என்கிறாள். அறிவுக்கு இடம்கொடுக்காமல் கவிதையின் கற்பனை உலகத்துக்கு உள்ளே போனால் தலைவியன் நிலை சிரிக்கவைப்பதாக உள…
-
- 5 replies
- 1k views
-
-
வலி்ச்சாலும் பிடிச்சிருக்கு! மீன் கொடித் தேரில் மன்மத ராசன் ஊர்வலம் போகின்றான் என்றொரு திரைப்படப் பாடல் கேட்டிருப்பீர்கள்.. மன்மதன் கரும்பை வளைத்து வில்லாக வைத்திருப்பானாம் அவனுடைய தோள்களில் தொங்கும் அம்பறாத்துணியில் மலர்கள் நிரம்பி வழியுமாம் அந்த மலர்களை அம்புகளாக (கணைகளாக) ஆண்களின் மீதும் பெண்களின் மீதும் எய்துகொண்டிருப்பானாம். அப்படி எய்யப்படும் மலர்(க்கணைகள்) அம்புகள் எவர் மீது விழுகின்றனவோ, அவர்களுக்குக் காதல் அரும்புமாம். இது பழந்தமிழர் நம்பிக்கை. இது சரியா? தவறா? என்று ஆய்வு செய்யும் முன்னர்... ஆண் மீது பெண்ணுக்கும் - பெண் மீது ஆணுக்கும் ஏற்படும் ஈர்ப்புக்கு இன்றைய அறிவியல் கூறும் வேதியியல் (ஆர்மோன்) விளக்கத்தோடு ஒப்புநோக்கத்தக்கதாக இச்சிந்தனை வி…
-
- 9 replies
- 1.7k views
-
-
-
தமிழ் எழுத்துக்கள் 247 என்றுதான் பள்ளியிலே படிக்கிறோம். ஆனாலும், எழுதும்போது வடமொழி எழுத்துக்களான ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ, ஸ்ரீ எனப்படும் கிரந்த எழுத்துக்களையும் சேர்த்தே எழுதவேண்டிய சூழலுக்கு ஆளாகிறோம். இந்த வடமொழி கிரந்த எழுத்துக்கள் எந்தக் காலகட்டத்தில், எப்படி தமிழ் எழுத்துகளுக்குள் நுழைந்தன? என்பது பற்றி தமிழ் மொழி ஆராய்ச்சியாளரும், தமிழ்ப் பண்பாட்டு தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் மு.இளங்கோவனிடம் பேசினோம். அவர் தந்த கருத்தினை இங்கு தருகிறோம். தமிழ்மொழி பிற மொழிகளின் துணையின்றித் தனித்து இயங்கும் பேராற்றல் பெற்றது. உலகில் பிறமொழிகளுக்கு இல்லாத தனித் தன்மை இதுவாகும். தமிழ்மொழி பன்னெடுங்கால வரலாறு உடையது. அரசியல், தன்னலம் காரணமாகத் தமிழ்மொழியின் சிறப்பு சில பொழுது குறைத்துக…
-
- 0 replies
- 1k views
-
-
நயமான ஊடல். பரத்தையரிடமிருந்து மீண்டும் தலைவியிடம் வந்த தலைவன் தம் புதல்வனைத் தூக்கி விளையாடினான்.. தலைவனுக்குத் தம் புதல்வனை நீங்கிச் செல்ல மனமும் இல்லை.. பரத்தையர் நினைவையும் அவனால் கைவிடமுடியவில்லை..பரத்தையரோ தலைவன் வேறு யாருடனும் கூடக் கூடாது என்பதற்காகப் பல அணிகளையும் அடையாளமாக அணிவித்து அனுப்பிவைக்கிறாள். இதைப் பார்த்து ஊடல் (கோபம்) கொண்ட தலைவி தலைவனை நீ இங்கு இருக்கவேண்டாம் பரத்தையரிடமே செல்க என்று கோபமாகச் சொன்னாலும் நயமாக அவன் தவறை அவனுக்குப் புரியவைப்பது போலச் சொல்கிறாள்.. அழகான உவமை. பறவைகள் ஒலிக்கின்ற அகன்ற வயல்! அங்கு, ஒலிக்கின்ற செந்நெல் இடையிலே தாமரை மலர்ந்திருக்கிறது! அந்தத் தாமரை மீது முதிர்ந்த கதிர்கள் சாய்ந்திருக்கின்றன! இக்க…
-
- 10 replies
- 1.5k views
-
-
இலக்கியமும் உணவுக் குறிப்புகளும் தொல்காப்பியம், பத்துப் பாட்டு, எட்டுத் தொகை என அமையும் சங்க நூற்களில் உணவு முறை பற்றிய பல்வேறு குறிப்புகள், புலவர்களால் வருணனைகளாகவும், உவமைகளாகவும் பாடல் களில் கூறப்பட்டுள்ளன. கவிதை போன்ற இலக்கியப் படைப்புகளில் உணவு முறை போன்ற குறிப்புகள் முழுவதுமாக எதிர்பார்க்க இயலாது. எனினும் இலக்கியம் என்பது சமூக வாழ்வை விவரிக்கும் போக்குடையதால், அதிலும் குறிப்பாக, நாகரிகம் வாய்ந்த சங்க காலத்து மக்களின் வாழ்வைச் சங்க இலக்கியங்கள் படம்பிடித்துக் காட்டுவதால், சங்க இலக்கியங்களிலிருந்து அக்கால மக்களின் உணவு முறைகளும், பழக்கங்களும் தெளிவாகத் தெரிகின்றன. தொல்காப்பியம் தரும் உணவுக் குறிப்புகள் : தொல்காப்பியத்தின் இலக்கண நூற்பாக்களில் சில, அக…
-
- 8 replies
- 3.6k views
-
-
தமிழ் இலக்கியம் – ஐம்பது வருட வளர்ச்சியும் மாற்றங்களும் வெங்கட் சாமிநாதன் 1998-ம் வருடம் என்று நினைக்கிறேன். Indian Council for Cultural Relations, இந்தியா சுதந்திரம் அடைந்து 50 வருஷங்கள் ஆனதை ஒட்டி, இந்திய மொழிகள் அனைத்திலும் காணும் இலக்கிய வளர்ச்சியைப் பற்றி எழுதப் பலரைக் கேட்டிருந்தார்கள். அத்தோடு ஒரு சில, மாதிரிப்படைப்புக்களையும் மொழிபெயர்த்துத் தரச் சொல்லிக் கேட்டார்கள். தமிழ் மொழி வளர்ச்சி பற்றி எழுத என்னைப் பணித்திருந்தார், இதன் ஆசிரியத்வம் ஏற்ற ICCR இயக்குனர் திரு ஓ.பி. கேஜ்ரிவால். இவை அனைத்தும் தொகுக்கப் பெற்று Indian Horizons என்ற தலைப்பில் 500 பக்கங்கள் கொண்ட ஒரு தொகுப்பு ஜனவரி-ஜூன், 1999-ல் வெளியானது. இந்திய மொழிகள் அனைத்திலிருந்துமான (டோக்ரி, கஷ்மீரி, ஸ…
-
- 3 replies
- 6.9k views
-
-
சிந்து எழுத்துச் சிக்கலுக்குத் தீர்வு உலக நாகரிகங்களின் தொல்லெழுத்துகள் அனைத்தும் படிக்கப்பட்டுவிட்டன. படவுருத்தன்மை கொண்ட சுமேரிய ஆப்பெழுத்து (Cuneiform) வடிவங்களும், எகிப்திய புனிதப்பொறிப்பு (Hieroglyphs)வடிவங்களும் அவற்றின் படவுருத் தன்மையின் காரணமாகப் படிக்கப்பெற்றுவிட்டன. உயிர்மெய்யன் (Syllabary) எழுத்து முறையான இலீனியர்-பி மற்றும் சைப்ரட் எழுத்துகளும் ஒப்பீட்டு முறையில் படிக்கப்பெற்றுவிட்டன. சிந்து எழுத்து முழுமையான படவுருவன் முறைக்குரிய சொல்லசையன் (logo syllabic) எழுத்து முறையாக இருந்திருப்பின் இதற்குள் படிக்கப்பெற்றிருக்கும். 1. சிந்து எழுத்துச் சிக்கலுக்குத் தீர்வு காண உரோசட்டா (Rosetta) கல்வெட்டுப் போன்றதொரு கல்வெட்டிற்காகத் தவம் கிடக்கி…
-
- 3 replies
- 941 views
-
-
உயிராகி மெய்யாகி ஆயுதமான தமிழ் மொழியில் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு, ஒரு நாழிகையில் 24 நிமிடங்கள், நாழிகைக்கு 360(15*24) மூச்சு எனச் சித்தர்களால் வகுக்கப்பட்டுள்ளது. (இதை வைத்தே வட்டத்துக்கு 360 பாகைகள் வைக்கப்பட்டது) ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு, ஒரு நாளைக்கு 21,600 மூச்சு வீதம் ஓடுகிறது. இதற்கும் தமிழுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கின்றீர்களா? சம்பந்தம் இருக்கிறது. இந்த 21,600 மூச்சுக்களைக் குறிக்கவே தமிழில் 216(உயிர்மெய்) சார்பெழுத்துகள் உருவாக்கப்பட்டன. மூச்சை இப்படி 21,600 வீதம் செலவு செய்தால் ஒரு மனிதன் 120 ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கலாம். மூச்சின் விகிதம் கூடினால் ஆயுள் குறையும். மூச்சாற்றலை அதிகம் விரயம் செய்யாமல் பேசும் ஒரே மொழி உலகத்திலேயே தமிழ் மொழி ம…
-
- 4 replies
- 4.6k views
-
-
இந்த உலகம் இன்னும் இயங்கக் காரணம்? நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் இயற்கைக்கூறுகள் இந்த உலகம் இயங்க அடிப்படையானவையாகும் என்று பாடம் படித்தோம். இருந்தாலும், மக்காத குப்பைகளாலும் வேதியியல் உரங்களாலும் மண்ணை மலடாக்கினோம், காடுகளை அழித்தோம், விவசாய நிலங்களைப் பட்டாப்போட்டு விற்றோம், தொழிற்சாலைக் கழிவுகளால் நீர்நிலைகளை விசமாக்கினோம், நச்சுப் புகையால் காற்றை மாசாக்கினோம் இப்படிப் பல வழிகளில் இயற்கையை அழித்தோம் அதனால், ஆறுகளிலும், குளங்களிலும் தண்ணீர் இல்லை! மழையில்லை, வெயில் வாட்டி வதைக்கிறது! எப்போது மழைவரும்? எப்போது புயல்வரும்? எப்போது கடல்சீற்றம் வரும்? என்பது யாருக்கும் தெரியாது வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இருந்தாலும் உலகம் இன்னும் இயங்கிக்கொண்டுதான் இருக…
-
- 9 replies
- 1.3k views
-
-
நாலடியார் -40: காம நுதலியல் முயங்காக்கால் பாயும் பசலைமற்று ஊடி உயங்காக்கால் உப்பின்றாம் காமம்; - வயங்கு ஓதம் நில்லாத் திரையலைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப! புல்லாப் புலப்பதோர் ஆறு. 391 கடல் அலைகள் ஓயாது மோதுதற்கு இடமான நீண்ட கழிகளினது குளிர்ச்சி பொருந்திய கரையையுடைய அரசனே! கணவனுடன் கூடிப் புணராவிடின் மேனி எங்கும் பசலை படரும்; ஊடி வருந்தாவிடின் காதலானது சுவையில்லாமல் போகும். எனவே முதலில் கூடிப் பின் ஊடுவதும் காதல் நெறியாம். (தலைவனுக்கு வாயில் நேர்ந்த தோழி, தலைவியின் புலவி நீங்கச் சொல்லியது). தம்அமர் காதலர் தார்சூழ் அணியகலம் விம்ம முயங்கும் துணையில்லார்க்கு - இம்மெனப் பெய்ய எழிலி முழங்கும் திசையெல்லாம் நெய்தல் அறைந்த…
-
- 0 replies
- 5.1k views
-
-
சங்கப் பாடல்களின் முக்கிய சிறப்பியல்பு மானிட வாழ்வின் மீது, அதன் இன்ப, துன்பங்களின் மீது அதற்குள்ள அக்கறையே ஆகும். ஆனால், எந்த ஒரு பாடலும் இயற்கையை விட்டு முற்றிலும் விலகி நிற்க இயலாது. இயற்கை மானிட வாழ்வின் ஒரு நாடகம் அரங்கேறும் மேடையாகவும், பின்னணியாகவும் சங்க இலக்கியத்தில் இடம் பெறுகிறது. இயற்கை அதன் எல்லாத் தன்மைகளிலும் முக்கியத்துவம் பெற்று, மனித வாழ்க்கையை வண்ணமயமாக்குகிறது. அதாவது, இயற்கையின் முன்னிலையில் மனிதன் பெறும் உணர்ச்சிகளைத் தெளிவாகக் காட்டுகிறது. காதலனைப் பிரிந்து துயருறும் தலைவிக்கு கடல்நீரின் "இழும்' எனும் ஓசை, தன் சொந்த அழுகுரலைப் போலவே கேட்கிறது (கலி.…
-
- 0 replies
- 724 views
-
-
சே, என்னமா சொல்லித்தராரு? “ஏண்டா தினேஷ், இன்னிக்கு ஒரு சில்லறை மேட்டரோட ஆரம்பிக்கலாமா?” “அது என்னடா சில்லறை மேட்டர்?” “போன முறை நாம இந்த ர/ற பத்திப் பேசினோமே. அப்போ சில்லறையா சில்லரையான்னு பேசாம விட்டுட்டோமேன்னு சொல்லி இருக்காரு எழுத்தாளர் இரா முருகன். நியாயப்படி சேர்த்து இருக்க வேண்டிய விஷயம்தான். அதை இப்போ சொல்லிடலாம். சில்லரைன்னா சில அரைகள் அப்படின்னு சொல்லறது மாதிரி ஆகிடும். சில என்றால் இரண்டுக்கும் மேல். உதாரணமா ஒரு நூறு ரூபாயை மாத்தினோமுன்னா, நூறு ரூபாய் மதிப்புதானே திரும்பக் கிடைக்கும். ஆனா சில அரைன்னு சொன்னோமுன்னா நூறு ரூபாய்க்கு மேல கிடைக்கணும்தானே. அதனால அது தப்பு. அதே சமயம் சில்லறைன்னா சில பகுதிகளாக நறுக்குவதால் அறுப்பது என்பது போல அறை என்பது வரும். எனவே…
-
- 4 replies
- 1.2k views
-
-
சந்தேகத்திற்குரிய மதவாதியான ”சத்குரு” ஜக்கி வாசுதேவ் தன்மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிப்பாரா அல்லது அமைதி காத்து குற்றவாளி என ஒத்துக் கொள்வாரா? மடங்கள் என்றாலே மர்மங்கள் நிறைந்த டிராகுலா குகை என்றாகிவிட்டது. சாயிபாபா, மாயி, ஐக்கி துவங்கி பல்வேறு கார்ப்பரேட் சாமியார்களின் அரண்மனைகளில் கொலைகள் துவங்கி பல்வேறு வன்முறைகள் அரங்கேறியிருக்கின்றன. மக்களை மூடர்களாக்கி பதப்படுத்தும் வேலையை சாமியார்கள் செய்வதால் அவர்களது மோசடி, தகிடுதத்தங்களை ஆளும் வர்க்கம் கண்டு கொள்ளாமல் விடுகிறது. ஜக்கி வாசுதேவின் அத்தகைய மோசடி ஒன்றை இனியவன் ஆதாரப்பூர்வமாக எழுதியிருக்கிறார். பலருக்கும் ஜக்கியின் இந்த கருப்புப் பக்கம் தெரியாது என்பதால் இங்கு வெளியிடுகிறோம். -வினவு …
-
- 1 reply
- 1.4k views
-
-
திருவள்ளுவர் திருநாளும், தொல்காப்பியர் திருநாளும் தமிழ்ச் சங்க இலக்கியங்களையும், அவை மருவிய காலச் சூழலையும், கல்வெட்டுக்களையும் ஆராயும் தமிழறிஞர்கள் திருக்குறள் சங்கம் மருவிய காலமாகிய கி.பி. நான்காம் நூற்றாண்டு வாக்கில் உருவாகிய நூலெனவும், வள்ளுவர் சமண சமயம் சார்ந்தவர் என்பது துறவு, புலால் உண்ணாமை போன்றவற்றை வலியுறுத்துவதாலும், கடவுள் வாழ்த்து அதிகாரத்தாலும் சான்று காட்டியுள்ளனர். சமணர்கள் என்றைக்குமே வள்ளுவதேவர் அருளிய தமிழ்மறையை “எம் ஓத்து” என்று கொண்டாடுகின்றனர். களப்பிரர் காலத்தில் தமிழில் சிரமண சமயங்களின் கொடை மிகுதியானது. அப்போதைய சமணக் காப்பியம் சிலப்பதிகாரமும், பெளத்தர்களின் காப்பியம் மணிமேகலையும் சிறந்த ஆதாரங்கள். பதினெண் கீழ்க்கணக்கில் சிறந்த குறளும், நாலடியா…
-
- 0 replies
- 2.1k views
-
-
தமிழ் மொழிக் கல்வியில் பண்பாடும் மதிப்புகளும் (தகவுகளும்): அறிதல், புரிதல், நலம் பாராட்டுதல் by nmuthumohan Culture and Values in Tamil Language Instruction: Knowing, Understanding, Appreciating தமிழ் மொழிக் கல்வியில் பண்பாடும் மதிப்புகளும் (தகவுகளும்): அறிதல், புரிதல், நலம் பாராட்டுதல் பல்லினக் கலாச்சாரச் சூழலில் பண்பாட்டுக் கல்வியின் முக்கியத்துவம் இன்றைய உலகின் மிக அடிப்படையான உண்மையாக பல்லினக் கலாச்சாரச் சூழல் அமைந்திருக்கிறது. இந்த உண்மை உலகின் எல்லாப் பகுதிகளுக்கும் எல்லா நாடுகளுக்கும் பொருந்தக் கூடிய எதார்த்தமாக உள்ளது. ஆசிய நாடுகள், குறிப்பாகத் தெற்காசிய, தென்கிழக்காசிய நாடுகள் அடர்ந்த காடுகள…
-
- 0 replies
- 4k views
-
-
தமிழ் ஒர் ஒலிப்பொழுக்கம் நிறைந்த மொழி. அதாவது தமிழில் எழுதுவதற்கும் உச்சரிப்பது அல்லது பலக்குவதற்கும் நேரடியான, வரையறை செய்யப்பட்ட, இயல்பான தொடர்பு இருக்கின்றது. ஆகையால் தமிழை ஒலிப்பியல் மொழி என்றும் வகைப்படுத்துவர். தமிழ் ஒலிப்புமுறை கட்டுரை தமிழ் மொழியில் இருக்கும் தனித்துவ ஒலி இயல்புகளை, வரையறைகளை விளக்குவதற்கும், தமிழைத் தெளிவாக உச்சரிப்பதில் இருக்கும் பிரச்சினைகளை அடையாளப்படுத்துவதற்கும், தமிழைப் பேசுவதில் இருக்கும் பன்முகத் தன்மையைப் பட்டியலிடுவதற்கும், பிறமொழி ஆள் இடப் பெயர்களைப் பலக்குவதில் இருக்கும் சிக்கல்களை விளக்குவதற்கும் ஒர் அறிமுகக் கட்டுரையாக இருக்கும். தமிழ்ச் சொற்களில் இன்ன எழுத்துக்கள் முதலில் வராதவை, இன்ன எழுத்துக்கள் இறுதியில் வராதவை, இன்ன இன்ன எழ…
-
- 0 replies
- 3.3k views
-
-
இராவணன் இயற்றிய நூல்கள் என அறியப்பட்டுள்ள நூல்கள் விபரம் 1. உடற்கூறு நூல் 2. மலை வாகடம் 3. மாதர் மருத்துவம் 4. இராவணன் – 12000 5. நாடி, எண்வகை பரிசோதனை நூல் 6. இராவணன் வைத்திய சிந்தாமணி 7. இராவணன் மருந்துகள் - 12000 8. இராவணன் நோய் நிதானம் - 72 000 9. இராவணன் – கியாழங்கள் – 7000 10. இராவணன் வாலை வாகடம் – 40000 11. இராவணன் வர்ம ஆதி நூல் 12. வர்ம திறவுகோல் நூல்கள் 13. யாழ்பாணம் – மூலிகை அகராதி 14. யாழ்பாணன் – பொது அகராதி 15. பெரிய மாட்டு வாகடம் 16. நச்சு மருத்துவம் 17. அகால மரண நூல் 18. உடல் தொழில் நூல் 19. தத்துவ விளக்க நூல் 20. இராவணன் பொது மருத்துவம் 21. இராவணன் சுகாதார மருத்துவம் 22. இராவணன் திராவக தீநீர் நூல் – அர்க்க பிரகாசம் 23. இராவணன் அறுவை ம…
-
- 0 replies
- 6.2k views
-