Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழும் நயமும்

இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. விடுபூக்கள் : கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள் கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள் கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள் போன்றவர்களின் ஆதரவுடன் 2001-ம் ஆண்டு டொராண்டோவில் கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம் ஓர் அறக்கட்டளையாகத் தொடங்கப்பட்டது. ஆண்டுதோறும் வாழ்நாள் சாதனையாளர் விருது (இயல் விருது) உள்ளிட்ட பல விருதுகளை கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கிவருகிறது. 2015-ம் ஆண்டுக்கான, 17-வது இயல் விருது, தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையதளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தைத் தொடங்கி வெற்றிகரமாக இயக்கிவரும் இ.மயூரநாதனுக்கு வழங்கப்படுகிறது. சுந்தர ராமசாமி, அம்பை, நாஞ்சில் நாடன், தியடோர் பாஸ்கரன் உள்ளிட்ட ப…

  2. ஒருவர் வந்து என்னிடம் இக் கேள்வியைக் கேட்டு விடை கூறச்சொன்னார். எனக்கு விடை தெரியவில்லை. உங்களில் யாருக்காவது தெரிந்தால் தந்துதவவும். தட்டானிற்கு சட்டை போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான் அவன் யார். (சில வேளையில் கேள்வியில் பிழையிருக்கலாம்) வடிவேலின் 23ம் புலிகேசியில் வருகின்ற கேள்வி இது.

    • 8 replies
    • 7.8k views
  3. மக்களே.... எழுத்துலகில் விண்வெளி தொடர்பான கட்டுரைகளில் ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொல் அறியாமல் பல பேரும் பலவிதமான சொற்களை கையாண்டு வருகின்றனர் என்பது வருத்தமளிக்கும் விதயமாக உள்ளது. இது செந்தரப்படுத்தாமையால வந்த விளைவு. இது தொடர்ந்தால் மொழிச் சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது; இதனால் பொருள் பிரளும். ஆகவே அதைப் போக்கும் விதமாக இதை எழுதுகிறேன். Rocket(Space) - ஏவூர்தி Rocket(Weapon)- உந்துகணை/ தெறிப்பு தெறிப்பு - பழைய ஈழப் புத்தகம் ஒன்றில் இச்சொல் இப்பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. Missile - ஏவுகணை Satellite - செய்மதி(ஈழ.வழ.), செயற்கைக்கோள் (தமி.வழ) இதில் நான் செய்மதி என்பதையே என்னுடைய விடைகளில் கையாள்கிறேன். என்னைப் பொறு…

  4. "புயல்காட்டுங் கூந்தல் சிறுபுறங்காட்டப் புனமயிலின் இயல்காட்டி இடைஒதுங்க வினங்காட்டு முழத்தியர்கள் முயல்காட்டு மதிதோற்கு முகங்காட்ட கண்மூரிக் கயல்காட்டுந் தடங்கள்பல கதிர் காட்டுந் தடம் பணைகள்" - தேவாரம் புயல்காட்டுங் கூந்தல் சிறுபுறங்காட்டப் - பிடரியில் படர்ந்து அலைந்து திரியும் கூந்தல் புயல் உருவாகும் முன் அலைந்து திரியும் மேகங்களைக் காட்ட புனமயிலின் இயல்காட்டி இடைஒதுங்க - அவள் நடக்கும்போது அசையும் இடையானது நிலத்தில் இருக்கும் மயில்களின் சாயலை ஒத்து அசைய வினங்காட்டு உழத்தியர்கள் முயல்காட்டு மதிதோற்கு முகங்காட்ட - கூட்டமாக அங்கு இருக்கும் உழத்தியர்களின் முகம் நிலவு போன்றதாயினும் நிலவில் உள்ள கறை இவள் முகத்தில் இல்லாமையால் அம்மதியானது…

  5. வியப்பளிக்கும் வினையடிகள் வினையடி என்பது ஒரு வினைச் சொல்லின் அடிப்படை வடிவம். ‘ஓடினான்’ என்ற வினைச் சொல்லை ஓடு+இன்+ஆன் என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். இதில் ‘ஓடு’ என்பதுதான் வினையடி, ‘இன்’ என்பது இறந்த கால இடைநிலை, ‘ஆன்’ என்பது ஆண்பால் படர்க்கை விகுதி. ஆக, ‘பேசினாள், சிரித்தான், கொடுத்தார், அழைப்பார், கடிக்கும்’ போன்ற சொற்களைக் கொடுத்து இவற்றின் வினையடிகளைக் கேட்டால் முறையே, ‘பேசு, சிரி, கொடு, அழை, கடி’ என்று சரியாகச் சொல்லிவிடுவோம். சற்றே மாறுபட்ட வினைகள் இருக்கின்றன: ‘வந்தான், வாருங்கள், வருவார், தந்தார், தாருங்கள்’ போன்ற வினைகள். இலக்கணம் தெரியாவிட்டாலும் இவற்றின் வினையடிகளையும் நாம் ஓரளவுக்குக் கண்டுபிடித்துவிட முடியும்: வா, தா. இன்னும் சில சொற்கள் - அதிக…

  6. Started by pryanka,

    தமிழர் சமுதாயம் பல கலாசார, பண்பாட்டு விழுமியங்களைத் தன்னகத்தே கொண்ட சமுதாயமாகும். நம் முன்னோர்கள் பல நம்பிக்கைகளையும் சடங்குகளையும் எமக்கு விட்டுச் சென்றுள்ளார்கள். அவற்றை நாம் பின்பற்றும் காரணத்தால் தலைமுறைகள் பலவற்றைக் கடந்தாலும் எமது சமுதாயம் உயிர்ப்புடன் வாழ்கிறது என்றால் அது மிகை இல்லை. விரல்களில் மோதிரங்களை அணிவதால் மருத்துவப்பயன்பாடு கிடைப்பதாக பலர் கருதுகிறார்கள். பலருக்கு தங்கள் கை விரல்களை மடக்குவதற்கு அல்லது நீட்டுவதற்கு இலகுவாக இருப்பதில்லை. அதிலும் பெண்களுக்கு இவ்வாறான பிரச்சனைகள் அதிகமாக உள்ளன. பெண்களுக்கு அதிகளவான இரத்த இழப்பு ஏற்படுவதோடு அவர்களின் எலும்புகள் விரைவில் பலவீனமடைவதே இதற்கு காரணம் என தற்கால வைத்தியர்கள் விதந்துரைக்கிறார்கள். எது எப்படி என…

  7. தமிழரின் கலைவடிவங்களில் ஒன்றான வில்லிசையை இலங்கையிலும் மலேசியா, இந்ததியா போன்ற நாடுகளிலும் 80ம் ஆண்டுகளில் மிகவும் பிரபலமாக நிகழ்த்தியோரில் கலாவிநோதன் சின்னமணி கணபதிப்பிள்ளை அவர்களும் ஒருவர். அவர் தாயகத்திலிருந்து வந்து சுவிஸ் நாட்டில் 2004ல் நிகழ்த்திய 'வள்ளி திருமணம்' என்ற வில்லிசை நிகழ்வு யாழின் ஒளித்தடம் பகுதியில் உள்ளது.

    • 26 replies
    • 7k views
  8. வில்லுப்பாட்டு கச்சேரி என்பது, கீழ்கண்ட கருத்தில் இருக்க வேண்டும். மக்களுக்கும் புரிய வேண்டும். வில்லுப்பாட்டுக்கான கதைகள் பல்வேறு வகையில் அமைகின்றன. மரபு வழிக்கதைகள் முதல் தற்கால நிகழ்வுகள் வரை எதையும் வில்லுப்பாட்டுக்கான கதையாகக் கொள்ளலாம். ஆனால் கட்டமைப்பு நிலையில் அவை பொதுவான வடிவத்தைக் கொண்டு விளங்குவதைக் காணலாம். வில்லுப்பாட்டில் வரும் கதைகள் பொதுவாகப் பின்வருமாறு அமையும், அவை அ) தொன்மைக் கதைகள் ஆ) நாட்டுப்புறக் கதைகள் இ) தெய்வக் கதைகள் ஈ) சமுதாயக் கதைகள் உ) வரலாற்று வீரர் கதைகள் ஊ) நடப்பியல் நிகழ்வுகள் போன்றனவாகும். இவ்வகையில் அய்யன் கதை, வள்ளியம்மன் கதை, பார்வதியம்மாள் கதை, மார்க்கண்டன் தவசு, அரிச்சந்திரன் கதை, கிருட்டிணசாமி கதை, பெருமாள்சாமி கதை, மாகாளியம்மன் கதை…

  9. சமீபத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய "வில்லோடு வா நிலவே" என்ற புத்தகத்தை படித்தேன். இது 1993ல் வெளிவந்தது. இப்பொழுது தான் எனக்கு அதை படிக்கும் வாய்ப்பு கிட்டியது. சேரன் செங்குட்டுவனின் தம்பி ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், காக்கை பாடினியார் நச்செள்ளை எனும் புலவரை பக்கத்தில் கொண்டதாக புறநானுற்றில் ஒரு குறிப்பு காணப்படுகிறது. "பக்கத்து கொண்டான்" எனபதற்கு பட்டத்து மனைவியாகக் கொண்டான் என்ற பொருளைக் கொண்டு எழுதப்பட்ட கவித்துவமான நாவல். கவிதை இனிது.. காதல் இனிது... வீரம் இனிது. இந்த மூன்றையும் சங்க காலத்து பிண்ணனியில் கொடுத்த இந்தக் கதையும் இனிதாக இருக்கிறது. அம்பைத் தீண்டுவது வீரனின் செயல், வம்பைத் தீண்டுவது காதலனின் செயல். இவர் இரண்டையும் தீண்டியுள்ளார். "வம்பு" என்பதன் மற்…

  10. Started by nunavilan,

    09 மார்ச் By அகரம் அமுதா 38 விளாங்காய்! பொதுவாக வெண்பா எழுதும் நம்மில்பலர் தம்மையறியாமலேயே விளாங்காய்ச்சீரை அமைத்து எவெண்பா எர்களுக்கு இவ்விளாங்காய்ச்சீர் மிக அதிகமாக அமைந்துவிடுகிறது. ன விளாங்காய்? அசைபிரித்துச் சொல்கையில் விளங்காய்ச்சீர் என்றல்லவா எழுதுகிறோம். அப்படியே அல்லவா படித்தும் இருக்கிறோம் என்கிறீர்களா? உண்மைதான். அதென்ன விளாங்காய்ச்சீர்? பார்த்துவிடுவோமா? ஈரசைச்சீர்கள்:- நேர்நேர் -தேமா நிரைநேர் -புளிமா நிரைநிரை -கருவிளம் நேர்நிரை -கூவிளம் மூவசைச்சீர்கள்:- நேர்நேர்நேர் -தேமாங்காய் நிரைநேர்நேர் -புளிமாங்காய் நிரைநிரைநேர் -கருவிளங்காய் நேர்நிரைநேர் -கூவிளங்காய் ப் பொருத்தவரை இவ்வெட்டுச் சீர…

  11. Started by Theventhi,

    தமிழ் இலக்கியமான விவேக சிந்தாமணி அருமையான கவி வரிகளைக் கொண்டது, இந் நூல் தற்போது எம்மவரிடம் கைவசம் இருப்பதே அரிதிலும் அரிது. ஆகவே இப் பாடல்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் சந்தோசம் அடைகின்றேன். இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர்கள் வாசியுங்கள், அத்துடன் கருத்துக்களையும் எழுதுங்கள், தற்காலத்தில் அதன் பயன்பாட்டை நோக்குவோம். (விவேக சிந்தாமணியை எனது பதிவான "தமிழ்" பகுதியில் முன்னர் பதிவு செய்திருந்தேன், ஆனால் "விவேக சிந்தாமணி"யை தனிப் பிரிவில் பதிவு செய்வதே சிறப்பாக இருக்குமென்பதால் தனித் தலைப்புக்கு மாற்றியுள்ளேன், சிரமத்துக்கு மன்னிக்கவும்) விவேக சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்கதேவர்எனக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் இதற்கு ஆதாரம் போதியளவு இல்லாததால் ஆசிரியர் யாரென உறுத…

    • 31 replies
    • 25.8k views
  12. வீரமாமுனிவர் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி ஆகிய நூல்களை பிற மொழிகளில் மொழி பெயர்த்த வீரமா முனிவர் பிறந்த தினம் இன்று (1680) கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்பது இவரின் இயற்பெயர் .கிறிஸ்துவ மதத்தை இங்கே பரப்ப வந்தவர் அதற்கு இம்மக்களின் மொழியை கற்கவேண்டும் என கற்க ஆரம்பித்தவர் தமிழ் மீது தீராக்காதல் கொண்டார் என்பது வரலாறு . தைரியநாதசாமி என்று தம் பெயரை மாற்றிக்கொண்டு பின்னர் அது வடமொழி சொல் என்றறிந்து வீரமாமுனிவர் என்று தன் பெயரை மாற்றிக்கொண்டார். 23 நூல்களை தமிழில் இயற்றிய இவர் கிறிஸ்துவின் கதையை தேம்பாவணி என எழுதினார் . அந்நூலில் கதை மா…

    • 0 replies
    • 719 views
  13. வெட்கப்பட்ட ஆறு! தலைவன் சில காலம் தலைவியைக் காணவராமல் இருந்தான். அவனது பிரிவாற்றாமையால் வருந்திய தலைவி தலைவனின் மலையிலிருந்து ஓடிவரும்அருவியிடம் இவ்வாறு பேசுகிறாள்.. எம் தலைவரது மலைநாட்டிலிருந்து வரும் ஆறே…. எம் அணிகலன்கள் நெகிழுமாறு துன்பம் மிகுந்தது! மெல்லிய தோளும் மெலிந்து போயிற்று! உடல் பாழ்பட பசலையும் படர்ந்தது! உடலைப் பார்த்து நெற்றியும் பசலை கொண்டது! (புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டதுபோல என்றொரு பழமொழி சொல்வார்கள். அது போலவே தலையின் நிலை உள்ளது உடலைப் பார்க்கும் ஆற்றல் நெற்றிக்குக் கிடையாது என்றாலும் பார்த்தது அதனால் நெற்றியும் கெட்டது என்கிறாள். அறிவுக்கு இடம்கொடுக்காமல் கவிதையின் கற்பனை உலகத்துக்கு உள்ளே போனால் தலைவியன் நிலை சிரிக்கவைப்பதாக உள…

  14. "வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில் பட்டு உருவுங்கோல் பஞ்சில் பாயாது-நெட்டிருப்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும்" - நல்வழி யானையின்(வேழத்தில்) மீது பட்டு துளைத்துச் செல்லும் அம்பானது, பஞ்சின் மேல் வீசுங்கால் அதைப் பாய்ந்து செல்லாது. இரும்பை வைத்து அடித்தாலும் பிளக்க முடியாத கரும்பாறையானது பசுமையான மரத்தின் வேருக்கு நெகிழ்வதைப் போல வன்சொற்களால் யாரையும் வெல்ல முடியாது. மென்சொற்களே மேன்மையாகும்... இன்றைய பொழுது இனிதாக அமைய என் வாழ்த்துகள் !!

  15. வணக்கம் வாசகர்களே !! கள உறவுகளே !!! இத்துடன் வேங்கையின் மைந்தன் சரித்திர நாவலை நிறைவு செய்கின்றேன் . நாம் யார் ??? எமது பின்னணி என்ன ??? எமது இனம் செய்த வீரதீரங்கள் என்பனவற்றை இந்த சரித்திர நாவலில் அகிலன் சரியாகவே சொல்லியிருக்கின்றார் . நான் இந்த நாவலில் கற்றுக்கொண்டது என்னவென்றால் , இந்த நாவல் ஓர் வரலாற்றுப் புதினமாக இருந்தாலும் , இதில் வருகின்ற ரோகணத்து ஐந்தாம் மகிந்தர் , அவருடைய சதித்திட்டங்கள் இறுதியில் சோழரிடம் படுதோல்வியில் முடிந்தாலும் , கால ஓட்டத்தில் அதே பெயரை நவீன மகிந்தராக வரித்துகொண்டு அதே ஈழத்தில் புதுயுகம் படைக்க வந்த சோழசாம்ராஜயத்தின் வாரிசுகளை சூழ்சியால் வென்ற சரித்திரத்தை என்னால் ஜீரணிக்க முடியவில்லை . ஒரு கற்பனையான வரலாற்றுப்புதினம் எவ்வாறு எமது …

  16. வேடன் வருவான்!! வலையை விரிப்பான்!! சிக்கிக்கொள்ள மாட்டோம்!!!!

    • 1 reply
    • 890 views
  17. மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளுடன் தமிழுக்கு இருந்த உறவு அரசியல் காரணங்களால் நலிவடைந்தது. திராவிட மொழிகளுள் மூத்த மொழியான தமிழ், இந்திய விடுதலைக்கு முன்புகூட தன் சக மொழிகளுடன் நல்லுறவு கொண்டிருந்தது. மொழிவாரி மாநிலம் உருவான பிறகு ஏற்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி, மொழி மீதான அரசியல்வாதிகளின் நிதானமற்ற ஆவேசம் இரண்டும் ஒரு குடும்ப மொழிகளுக்குள்ளே மாறுபாட்டை உருவாக்கிவிட்டன. கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளுக்கும் தமிழுக்குமான உறவில் சில அரசியல் காரணங்களால் இடைவெளி வந்துவிட்டது. என்றாலும், விதிவிலக்காகப் பண்பாட்டு ஆய்வாளர் சிலர் இனத்துக்கும் மொழிக்குமான பழைய உறவைச் சரியாகவே பதிவுசெய்துள்ளார்கள். ஷெட்டரின் ஆராய்ச்சி சங்க இலக்கியங்களின் கன்னட மொழி பேசிய பகுதியின் வரலாற்றை நே…

  18. வைசிய புராணமும்- வளையாபதியும் எது உண்மை? வளையாபதியின் சிறப்பு; வட மொழியில் தோன்றிய ரகுவம்சம் குமார சம்பவம் சிசுபால வதம் நைடதம் கிராதர்ஜீனியம் ஆகிய 5 நூல்களை பஞ்ச காவியம் என்று அழைப்பர்.அதே போல தமிழில் தோன்றிய சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம்,மணிமேகலை,வளையாபதி ,குண்டல கேசி ஆகிய 5 நூல்கள் ஐம்பெரும்காப்பியம் எனப்பட்டன. இந்த பாகுபாட்டை யார் வகுத்தது என்று தெரியவில்லை.. நன்னூலுக்கு உரை வழங்கிய மயிலை நாதர் ஐம்பெரும்காப்பியம் எண் பெரும்தொகை,பத்து பாட்டு எட்டு தொகை பதினொண்கீழ்கணக்கு என இலக்கியங்களை வகைபடுத்தியுள்ளார்..ஆனால் அவர்க் கூட ஐம்பெரும்காப்பியம் எவை எவை என்று வகைப்படுத்தவில்லை.. பிற்காலத்தில் ஆசிரியர் பெயர்தெரியா பாடலென்று ஐம்பெரும் காப்பியத்தினை வகை…

    • 3 replies
    • 8.1k views
  19. உலகின் மிகவும் பிரபலமான பல்கலைக்கழங்களில் ஒன்றான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தனியாகத் தமிழ்துறை ஒன்று தொடங்கப்படவுள்ளது. ஹார்வர்டில் தனித் தமிழ்துறை விரைவாக அமையவுள்ளது. ஆறு மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் இந்தத் துறை ஹார்வர்டில் ஆரம்பிக்கபடவுள்ளது என இந்த முன்னெடுப்பைச் செய்தவர்களில் ஒருவரான டாக்டர் விஜயராகவன் ஜானகிராமன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். அவரும் அவரது நண்பரும் சக மருத்துவருமான திருஞானசம்பந்தனும் ஆளுக்கு அரை மில்லியன் டாலர்களை இதற்காக அளித்துள்ளதாகவும், இதர ஐந்து மில்லியன் டாலர்களை வட அமெரிக்காவில் வாழும் தமிழர்களும், தமிழ்ச் சங்கங்களும் அளிக்க முன்வந்துள்ளதாகவும் அவர் கூறினார். இதற்கான கொள்கை அளவிலான ஒப்புதலை அப்பல்கலைக்கழகம் சில தினங்களுக்கு…

    • 2 replies
    • 1.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.