தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
694 topics in this forum
-
நாளும் இன்னிசையால் தமிழ் வளர்த்த தமிழிசை - இயல், இசை, நாடகம் என்ற முப்பெரும் பகுதிகளில் குறவஞ்சி - இசை, நாடகத் தமிழில் தனிச்சிறப்பு பெற்றது. பொதுவாக குறவஞ்சி நாடகங்கள் அனைத்தும் கதை அமைப்பில் ஒரே நிலையிலிருக்கும். பாட்டுடைத்தலைவன், தலைவி மட்டும் வேறுபட்டிருப்பர். - தலைவன் நாடெங்கும் பவனி வருதல் - தலைவி அவனைக் கண்டு காதல் கொள்ளுதல் - விரகமுற்ற தலைவி சந்திரனைப் பழித்தல், மன்மதனைப் பழித்தல் - குறத்தி வருதல் - தன் மலைவளம், நாட்டுவளம் கூறுதல் - தலைவி தலைவனோடு சேருதல். இவைகள் அனைத்தும் எல்லா குறவஞ்சி நாடகங்களின் அடிப்படைக் கூறுகள். குறவஞ்சி இசை நாடகங்கள் பல உள்ளன. 1. திருக்குற்றாலக் குறவஞ்சி 2. சரபேந்திர பூபாலக் குறவஞ்சி 3. அழகர் குறவஞ்சி 4. விராலிமலை குறவ…
-
- 0 replies
- 619 views
-
-
தமிழ் எழுதப்படும் துணையெழுத்துகள், எழுத்துருக்கள் ஆகியவற்றை விளக்கும் படம் இது. ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு போன்றவற்றை அறிந்திருக்கும் நம்மில் பலருக்கு மேல்விலங்கு, கீழ்விலங்கு என்றால் என்னென்று தெரியாது. தமிழில் எழுதப்படும் ஒவ்வோர் எழுத்தும் எத்தகைய சேர்ப்பு வடிவத்தினால் அதன் வரிசையில் இன்னோர் எழுத்தாகிறது என்பதனை நாம் அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு சேர்க்கப்படும் ஒவ்வொரு வரைவுக்கும் ஒரு பெயர் இருக்கிறது. அவற்றையும் அறிந்திருக்க வேண்டும். மூத்த தமிழாசிரியர்களிடையே அறியப்பட்டிருக்கும் தமிழ்த் துணையெழுத்துப் பெயர்கள் புதிய தலைமுறைத் தமிழாசிரியர்களிடையே பரவலாகாமல் இருப்பதைப் பார்க்கிறோம். அவர்களுக்கும் நம் மாணார்க்கர்களுக்கும் தமிழ்த் துணையெழுத்துப் பெயர்களின் பட்டியல்…
-
- 1 reply
- 868 views
-
-
விவேக சிந்தாமணி - நல்ல தமிழ் அறிவோம் அழியும் ஆறு "மூப்பில்லாக் குமரி வாழ்க்கை முனை இல்லா அரசன் வீரம் காப்பில்லா விளைந்த பூமி கரையிலாது இருந்த ஏரி கோப்பிலான் கொண்ட கோலம் குருஇலான் கொண்ட ஞானம் ஆப்பில்லா சகடு போலே அழியுமென்று உரைக்கலாமே " பருவமடையாத பெண்ணின் வாழ்க்கை, விவேகம் இல்லாத அரசனின் வீரம் காவல்காரன் இல்லாமல் விளைந்து நிற்கும் பூமி, கரை இல்லாத ஏரி வசதி இல்லாதவன் செய்யும் ஆடம்பரம், குரு இல்லாமல் கற்கும் அறிவு அச்சாணி இல்லாத சக்கரம் போல், ஒரு சில நாட்கள் சுழலுமே தவிர நிலையாக நில்லாமல் அழிந்து போகும் ஆறு விஷயங்கள் ஆகும் +++++++++++++++ பயன் இல்லாத ஏழு "ஆபத்துக்கு உதவாத பிள்ளை அரும்பசிக்கு உதவாத அன்னம் தாகத்தைத் த…
-
- 0 replies
- 572 views
-
-
கிட்கிந்தா காண்டம் சீதையைத் தேடிச் செல்கின்ற இராமனும், இலக்குவனும் கிட்கிந்தைக்கு வருகிறார்கள். அங்கு அனுமனைச் சந்திக்கிறார் இராமர். அனுமன் சுக்கிரீவன் என்பவரை இராமருக்கு அறிமுகம் செய்கிறார். சுக்கிரீவனின் மனைவியை சுக்கிரீவனுடைய அண்ணன் வாலியே கவர்ந்து சென்று விடுகிறார். அதனால் இராமன் வாலியைக் கொன்று சுக்கிரீவனின் மனைவியை மீட்கிறார். இராமனும் தன்னைப் போல மனைவியை இழந்து தவிக்கிறான் என்பதை அறிந்த சுக்கிரீவனும், அவனுடைய குடிமக்களான வானரங்களும் இராமனுக்கு உதவ முன்வருகிறார்கள். அங்கதன் என்பவர் தலைமையில் அனைவரும் செல்கின்றனர். வழியில் சம்பாதி எனும் சடாயுவின் அண்ணனைச் சந்திக்கின்றனர். சம்பாதி இலங்கையில் சீதை சிறைப்பட்டு இருப்பதைத் தெரிவிக்கின்றார். இலங்கைக்குச் செல்…
-
- 0 replies
- 835 views
-
-
பெண்ணைக் குறிக்கும் சொற்கள், தமிழில் ஏராளம் உண்டு. அதில், பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்று ஏழு பருவங்களுக்கும் தனித்தனிப் பெயர்கள். இவற்றைத்தவிர, வேறு சில சொற்களும் உள்ளன. அவை, அணங்கு, ஆடவள், ஆட்டி, இளம்பிடி, இளையாள், காந்தை, காரிகை, கோதை, சிறுமி, சுந்தரி, சுரிகுழல், தையல், நல்லாள், நாரி, நுண்ணிடை, பாவை, பூவை, பெண்டு, மகடூ, மகள், மடவரல், மடவோள், மாது, மாயோள், மானினி, மின், வஞ்சனி, வஞ்சி, வனிதை, நங்கை, மதங்கி, யுவதி, விறலி.
-
- 5 replies
- 13.2k views
-
-
உளமார, உளமாற – எது சரி ? உள்ளம் என்பதுதான் உளம் என்றும் பயிலும். அச்சொல்லோடு சேர்கின்ற ஆர, ஆற ஆகிய இரு சொற்களின் பொருள்களையும் பார்க்கலாம். ஆர்தல் என்பதற்கு நிறைதல், பொருந்துதல், ஒத்துப்போதல் போன்ற பொருள்கள் உண்டு. ஆறுதல் என்றால் தணிதல். “மனம் நிறைந்து ஒன்றைச் சொல்கிறேன், மனத்தில் எவ்வேறுபாடுமின்றி முழுமையாய்ப் பொருந்திப்போய் இதைச் சொல்கிறேன்” என்ற பொருளில் அமைவது ‘மனமாரச் சொல்கிறேன்”. மாற்று எண்ணமோ வேறுபாடோ இல்லாமல் மனம் நிறைந்த நிலையில் ஒன்றைச் சொல்வது - மனமாரச் சொல்வது. கண்கள் நிறைந்துவிடுமளவுக்கு ஒன்றைக் காண்பது ‘கண்ணாரக் காண்பது’. விடுபாடில்லாமல் முழுமையாய்க் கேட்டால் அது ‘காதாரக் கேட்பது’. …
-
- 18 replies
- 11k views
- 1 follower
-
-
தேனினும் இனிய தெள்ளு தமிழில் வான் புகழ் வள்ளுவன் யாத்த 1330 குறட்பாக்களில் பல அதிசயச் செய்திகள் உள்ளன. இவைகளை அப்படியே நம்புவதா? அல்லது உவமைக்காகக் கூறப்படும் மரபுச் செய்திகளா? என்று தெரியவில்லை. இவைகள் குறித்து அறிவியல் முறையில் ஆராய்ந்தால் உண்மை புலப்படும். கவரி மானின் மயிர் நீங்கி விட்டால் அது இறந்து விடும் என்றும், முகர்ந்து பார்த்தாலே அனிச்சமலர் வாடி விடும் என்றும், பத்தினிப் பெண்கள் மழை பெய் என்றால் மழை பெய்யும் என்றும் பல அதிசயச் செய்திகளை அடுக்குகிறார் வள்ளுவர். தற்காலத்தில் திருக்குறளுக்குப் புதிய உரை எழுதி வருவோர் பழங்காலத்தில் உரை எழுதியோர் விஷயங்களைத் தள்ளி விட்டு வள்ளுவர்க்குப் புதிய "வியாக்கியானம்" செய்ய முனைந்துள்ளனர். இது தவறு. 1500 ஆண்டுகளுக்கு முன் வா…
-
- 0 replies
- 542 views
-
-
தமிழ்மொழியின் சிறப்பு, பலவகைகளில் உள்ளன. இதன் சிறப்பு, படைப்பு நூல்களான இலக்கியங்களிலும் படைப்பு நூல்களின் படைப்பினைத் திறவுகோல் இட்டுத் திறக்கும் இலக்கணங்களிலும் மிளிர்கிறது. இலக்கணம் கசப்பானதா? தேவையற்றதா? தள்ள வேண்டியதா? என்று பலரும் பலவாறாகச் சிந்திக்கும் வண்ணம் அதன் கடுமை அமைந்துள்ளது. முன்னோர்கள் மிகக் கடுமையாக இலக்கணக் கருத்துகளைக் கூறியுள்ளமைக்குக் காரணம் என்ன? "இலக்கியம்', அறைக்குள் இருக்கும் வைரக்கல் என்றால், "இலக்கணம்', அதனைப் பார்ப்பதற்குகதவைத் திறக்கத் துணை செய்யும் சாவி திறவுகோல் என்பதை இங்கு இரண்டு மேற்கோள்களால் விளக்கலாம். ""மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்'' என்பது திருக்குறள் கடவுள் வாழ்த்து. நிலமிசை நீடுவாழ்வோர் யார…
-
- 1 reply
- 964 views
-
-
"பா' என்பது தமிழ்ச்சொல். தொல்காப்பியர், செய்யுளியலில், "பா' என்றே குறிப்பிடுவார். "கவி' என்ற சொல்லை எங்கும் எடுத்தாளவில்லை. தமிழில் செய்யுளின் வேறு பெயர்களாக யாப்பு, தூக்கு, தொடர்பு, பனுவல் போன்ற தமிழ்ச் சொற்களையே தனித்தமிழ்ப் புலவர்கள் கையாள்வர். நால்வகைப் பாக்களும் ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா, என்றே வழங்கப்படும். இவற்றுடன் "கவி' என்ற சொல்லை இணைப்பதே இல்லை. தொல்காப்பியர் பாவின் வகைகளைக் கூறுமிடத்து, ""ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென நாலியற் றென்ப பாவகை விரியே!'' (தொல்.செய்யு-101) என்றே குறிப்பிட்டுள்ளார். நம் செந்தமிழ் மொழியுடன் வந்து கலந்து, பெருவாழ்வு பெற்றுவிட்ட வட சொற்களில் ஒன்றுதான் கவிதை என்ற சொல். தமிழ் இலக்கியத்தில் முதன் முதலாக நல்லந்துவனார் எ…
-
- 0 replies
- 569 views
-
-
திரைப் படங்களில் வரும் பாடல்களில் உள்ள கற்பனைகள் சில சமயம் விமர்சனத்திற்குள்ளாவது சகஜம். கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய ஒரு பாடலை கவிக்கோ அப்துல்ரகுமான் விமர்சனம் செய்தார். "தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவர் இல்லை என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்” என்ற பாடலின் அர்த்தம் என்னவென்றால் தன்னுடைய உயிர் பிரிவதை யாரும் பார்க்க முடியாது. ஆனால் காதலன் தன்னைவிட்டுப் பிரிந்து செல்லும் போது அவளுடைய உயிரே பிரிந்து செல்வதைப் பார்த்து நிற்கின்றாளாம் காதலி எனச் சொல்லும் அற்புதமான கற்பனை இது. ஆனால் இப்பாடலை இந்திப் படப் பாடல் ஒன்றில் கேட்க நேர்கிறது கவிக்கோவிற்கு “யாராவது உயிர் போவதைப் பார்த்ததுண்டா? இதோ என் உயிர் போய்க்கொண்டிருக்கிறது" என்று காதலன் ஒருவன் இந்திப் படத்தில்…
-
- 0 replies
- 986 views
-
-
செயற்கை நுண்ணறிவில் தமிழ் மொழியின் பயன் சிறப்பாக இருக்கும் என்று குறிப்பிடுகின்றார்.
-
- 3 replies
- 1.1k views
- 1 follower
-
-
"பா' என்றும் "கவி' என்றும் சுட்டப்படும் "கவிதை', வடமொழிச் சொல்லா இல்லை தமிழ்ச் சொல்தானா? 'பா - கலப்படமில்லாத தமிழ்ச் சொல்; "கவி'-சுத்தமான வடமொழிச் சொல்; "கவிதை'- வடமொழி கலந்த தமிழ்ச் சொல். வடமொழியின் நிகண்டான ""அமரகோஷம்', "கவி' என்ற சொல்லுக்கு, "சுக்கிரன் (வெள்ளி), வியாழன் (குரு), புலவர், பரசுராமர், கலை வல்லோன்' - என்று விளக்கம் அளிக்கிறது. ஆகவே, "கவி' என்ற சொல் வடமொழி என்பது தெளிவாகிறது. நாகரிகம் வளர வளர, தமிழ்மொழி வார்த்தைகளின் நீளம், அதைக் கையாளும் விதம், அதன் உச்சரிப்பு போன்றவைகளும் மாறத் தொடங்கி எளிமைப்படுத்தப்பட்டன. விளைவு, "பா' (பாட்டு), கவிதையானது. "தை' என்ற உயிர்மெய்யெழுத்து, வடமொழியான "கவி'யுடன் கலக்க, அது "கவிதை' என்று உருமாறியது. அதுபோல், "பா'வண்ணம்- …
-
- 0 replies
- 786 views
-
-
முக்கோடி வாழ்நாள் ஆயுளை உடையவன், கடும் முயற்சிகள் எடுத்து தவங்கள் செய்தவன், முக்கடவுள்களில் முதல் கடவுளாகிய பிரம்மனிடம் அரக்கர் தேவர் முதலானவர்கள் யாராலும் வெல்லப்படாத வரத்தை வாங்கியவன், உலகையே அடக்கி வைத்த வலிமையுடைவன் என்ற பெருமைகளையெல்லாம் (“முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் முதல்வன் முன்நாள் எக்கோடி யாராலும் வெலப்படாய் எனக் கொடுத்த வரமும், ஏனைத் திக்கோடும் உலகு அனைத்தும் செருக்கடந்த புயவலியும்”) உடையவனாக இருந்தவன் இராவணன். அவன் வேதங்களைக் கற்றுத் தேர்ந்தவன். பல கலைகளில் வல்லமை பெற்றவன். நாட்டு மக்களை செல்வச் செழிப்புடன் வைத்திருந்தவன். இப்படி எத்தனையோ சிறப்புகளை அவன் பெற்றிருந்தாலும் அவனுக்குக் கடைசி வரை பெருஞ்சிறப்பைக் கொடுத்தது அவனது வீரமே. மாரீசன் …
-
- 0 replies
- 3.2k views
-
-
ஒருவனுக்கு பசி தோன்றிய போது அவனிடத்தில் உள்ள சிறந்த குணங்கள் அனைத்தும் போய்விடும். இதை தான் "பசி வந்தால் பத்தும் பறக்கும்" என்பார்கள். அவை மானம், குலப்பெருமை, கல்வி, வலிமை, அறிவு, பிறருக்கு கொடுக்கும் குணம், தவம், பெருந்தன்மை, தளராத முயற்சி, தேன் போல் பேசும் மங்கையர் மேல் உள்ள ஆசை ஆகிய பத்தும் பறந்து போகும்.
-
- 0 replies
- 945 views
-
-
தமிழ் இலக்கியத்தில் இயற்றப்பட்ட பேரிலக்கியங்களில் நந்திக் கலம்பகமும் ஒன்று. தொட்ட இடமெல்லாம் கவிச்சுவை சொட்டும் தேன்தமிழ் நூல். கலம்பகம் என்பது, பல பூக்களைக் கலந்து மாலை தொடுப்பது போல் பலவகையான செய்யுள் உறுப்புகளைக் கொண்டு அக, புறச் செய்திகளைக் கொண்டு திகழும் அரிய நூல். கலம்பக நூல்கள் கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் தொடங்கி இதுவரை பல தோன்றியுள்ளன. நந்திக் கலம்பகம் ஏனைய கலம்பக இலக்கண வரம்பிற்கு உள்படாது, பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டதாகும். அவ்வாறு மன்னனை வைத்துப் பாடப்பட்ட முதல் கலம்பகம் மட்டுமல்ல, கலம்பக நூல் வரிசையில் முதலாவதாக வைத்து எண்ணப்படுவதும் இந்த "நந்திக் கலம்பகம்'தான். இதற்குப் பிறகு மன்னர் மீது பாடப்பட்ட கலம்பக நூல் எதுவு…
-
- 0 replies
- 1.2k views
-
-
வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன? இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை? - மங்காத சீரகத்தைத் தந்தீரேல், தேடேன் பெருங்காயம்! ஏரகத்துச் செட்டியாரே! இது சித்தர்களின் பரிபாஷையில் எழுதப்பட்டதொரு பாடல். புலவர்களில் சிலர், மறைமுகச்சித்தர்களாக விளங்கினார்கள். சித்தர்கள், ரிஷிகளில் பல மாதிரியான மனப்பான்மை,குறிக்கோள்கள்,நடைமுறை,சித்தாந்தம் முதலியவற்றைக் கொண்டவர்களாக விளங்கினர். சிற்சில அடிப்படைகளில் அவர்களை வகைப்படுத்திப் பிரித்து விடமுடியும். சிலர், உடலைப்பக்குவப்படுத்தி மூப்பு, நரை, நோய், நொடி,இல்லாமல் நீண்டகாலம் இருக்கப் பார்ப்பார்கள். சிலரோ இறக்காமலேயே இருந்து விடவேண்டும் என்று எண்ணுவர். பலவகையான உணவுக்கட்டுப்பாடுகள், ஹடயோக, ராஜயோகப் பயிற்சிகள், சமாதிநிலைகள், ம…
-
- 0 replies
- 763 views
-
-
திருப்தியுடன் உண்ட சுகத்தில், கவிஞர்கள் எழுதிய பாடல்களைப் போலவே, பசிப் பிணியாலும் இதர உடற்பிணியாலும் வருந்திய கவிஞர்களாலும் அருமையான பாடல்கள் பாடப் பட்டுள்ளன. அவ்வையார் பாடாத பொருள் இல்லை. பசிக்கு உணவளித்தவர்களைப் பாடியது போலவே, பசிப்பிணியை உணர்த்தும், வயிற்றையும் நொந்து அதனுடன் பேசுவதாக ஒரு பாடல் பாடி இருக்கிறார். "ஏ வயிறே! உன்னோடு வாழ்வது அரிதான செயலாகிவிட்டது. ஒரு நாளைக்கு உணவில்லாமல் இருக்கக் கூடாதா என்றால் கேட்க மறுக்கிறாய். எங்காவது விருந்துக்குப் போனால் இரண்டு நாட்களூக்கு போதுமான அளவு உண்டுவிடு என்றாலூம் கேட்பதில்லை. என் வலி உனக்குத் தெரியவில்லயே!" என்று பாடுகிறார். ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் இருநாளைக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும் என்…
-
- 2 replies
- 884 views
-
-
தமிழில் மனைவி என்பதற்கு 62 வகையான பெயர்கள் 01.துணைவி 02.கடகி 03,கண்ணாட்டி 04.கற்பாள் 05 காந்தை 06.வீட்டுக்காரி 07.கிருகம் 08.கிழத்தி 09.குடும்பினி 10.பெருமாட்டி 11.பாரியாள் 12.பொருளாள் 13.இல்லத்தரசி, 14.மனையுறுமகள் 15.வதுகை 16வாழ்க்கை 17.வேட்டாள் 18.விருந்தனை 19.உல்லி 20.சானி 41.தலைமகள் 42.ஆட்டி 43.அகமுடையாள் 44.ஆம்படையாள் 45.நாயகி 46.பெண்டாட்டி 47.மணவாட்டி 48.ஊழ்த்துணை 49.மனைத்தக்காள் 50.வதூ 51.விருத்தனை 52.இல் 53.காந்தை 54.பாரியை 55.மகடூஉ 56.மனைக்கிழத்தி 57.குலி 58.வல்லபி 59.வனிதை 60.வீட்டாள் 61.ஆயந்தி 62.ஊடை 🤔🤔
-
- 7 replies
- 3.6k views
-
-
தமிழ்ச் சித்தர்களைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இருக்க மாட்டார்கள். சித்தர்கள் பற்றிக் கேள்விப்படாதவர்கள் கூட சித்தர் பாடல்கள் இரண்டொன்றைச் செவி மடுத்திருப்பார்கள். நாதர்முடி மேல் இருக்கும் நாகப் பாம்பே! நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே! பாதலத்தில் குடிபுகும் நல்ல பாம்பே! பாடிப்பாடி நின்று ஆடு பாம்பே! திரைப்படத்திலும் வந்து சக்கை போட்ட பாடல் இது. இதை இயற்றியவர் பாம்பாட்டிச் சித்தர். பதினெண் சித்தர்கள் என்பது மரபு. ஆனால் அவர்கள் யார் யார் என்பதில் கருத்து ஒற்றுமை இல்லை. அதனால் பதினெட்டுக்கும் மேற்பட்ட சித்தர்கள் பெயர்கள் காணப்படுகின்றன. ஒரு பழம்பாடல் பதிணென் சித்தர்களது பெயர்களை வரிசைப்படுத்துகிறது. நந்தி, அகத்தியர், திருமூலர், புண்ணாக்கீரர் நற்றவத…
-
- 35 replies
- 5.7k views
-
-
அடேயப்பா கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா? நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்......(01) பாராத பயிரும் கெடும்.(02) பாசத்தினால் பிள்ளை கெடும்.(03) கேளாத கடனும் கெடும்.(04) கேட்கும்போது உறவு கெடும்.(05) தேடாத செல்வம் கெடும்.(06) தெகிட்டினால் விருந்து கெடும்.(07) ஓதாத கல்வி கெடும்.(08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.(09) சேராத உறவும் கெடும்.(10) சிற்றின்பன் பெயரும் கெடும்.(11) நாடாத நட்பும் கெடும்.(12) நயமில்லா சொல்லும் கெடும்.(13) கண்டிக்காத பிள்ளை கெடும்.(14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.(15) பிரிவால் இன்பம் கெடும்.(16) பணத்தால் அமைதி கெடும்.(17) சினமிகுந்தால் அறமும் கெடும்.(18) சிந்திக்காத செயலும் கெடும்.(19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.(20) சுயமில்லா வே…
-
- 4 replies
- 1.5k views
-
-
சமஸ்கிருதமாக்கி.. அழிக்கப்பட்ட, தமிழ்ச் சொற்கள்... பூவை புஷ்பமாக்கி அழகை சுந்தரமாக்கி முடியை கேசமாக்கி தீயை அக்னியாக்கி காற்றை வாயுவாக்கி பிணத்தை சவமாக்கி கெட்டதை பாவமாக்கி முகத்தை வதனமாக்கி அறிவைப் புத்தியாக்கி அவையை சபையாக்கி ஆசானை குருவாக்கி இசையை சங்கீதமாக்கி குண்டத்தை யாகமாக்கி பெரியதை மஹாவாக்கி மக்களை ஜனங்களாக்கி நிலத்தை பூலோகமாக்கி அமிழ்தை அமிர்தமாக்கி அருள்மிகுவை ஶ்ரீ ஆக்கி ஆடையை வஸ்திரமாக்கி உணர்வற்றதை சடமாக்கி ஓவியத்தை சித்திரமாக்கி கலையை சாஸ்திரமாக்கி விண்ணை ஆகாயமாக்கி குளியலை ஸ்நானமாக்கி …
-
- 2 replies
- 1.1k views
-
-
1610 ல் கலிலியோ கலிலி தனது முதல் தொலைநோக்கி மூலம் அதன் வளையங்களை கண்டுபிடித்தார்.ஆனால்,முதன் முதலில் சனிக்கிரகத்தை கண்டுபிடித்தவர் கபிலர் காலம்:கி.மு 3-ம் நூற்றாண்டு! கபிலர் சங்க காலத்து தமிழ்ப் புலவர்களில் குறிப்பிடத்தக்கவர். ... இன்னா நாற்பது என்ற பதினெண் கீழ்கணக்குத் தொகுதியில் உள்ள நூலின் ஆசிரியரான ”கபிலரும்” இவரும் ஒருவரல்லர். சங்க கால புலவர் கபிலரின் காலம் கி. மு 3 ம் நூற்றாண்டின் ஆரம்ப காலமாகும்.எந்தவொரு தொழில் நுட்பமும் இல்லாத காலத்திலேயே சனிக்கிரக்தை கணடறிந்தவர்கள் நம் முன்னோர்கள். சனிக் கோளை மைம்மீன் என்று சங்கத்தார் அழைத்துள்ளனர். மைம்மீன் என்றால் கருமையான கோள் என்று பொருள். ‘‘மைம்மீன் புகையினும் ’’ ( புறம் 117) என்ற…
-
- 6 replies
- 1.4k views
-
-
இது ஒரு பழைய பாடல் தான்.. பல முறை கேட்டு கடந்து சென்று இருக்கிறேன். ஆனால் சில நாட்களாக அப்படி இல்லை. புத்தனுக்கு ஞானம் வந்ததுபோல், ஓர் மாலையில் காதில் விழுந்த இந்த வரிகளும் எண்ணுறக்கம் திண்கிறது. பாடல் வரிகளை கேட்பதனால் இன்பமா இல்லை அது மீட்டுத்தரும் நினைவுகள் இன்பமா தெரியவில்லை. பாடலில் ஒளிந்திருக்கும் மறைபொருள் இதுவோ!? அதுவோ ?!! என்று என் கற்பனைகளையும் அதனுடன் பொருத்திப் பார்க்கும்போது உடலெங்கும் இன்பம் தோய்கிறது. உங்கள் கற்பனைகளே.. உங்கள் உயிர்ப்பினை உறுதி செய்யும்..! கீழ் உள்ள வரிகள் உங்களுக்காக. சுட்டிக்காட்டிய வரிகளுக்கு பொருள் அறிந்தாலும் / புரிந்தாலும் பதிவிடுங்கள். அறிய ஆவல் !! மாதுளம் கனியே நல்ல மலர்வனக் குயிலே மரகத மணியே என் மயில் இள மய…
-
- 5 replies
- 1.7k views
-
-
கடிதம் தமிழில்லையா ? ** தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களில் ஆங்கிலச் சொற்களை எளிதாய் அடையாளம் கண்டுபிடித்துவிடலாம். “இப்ப டைம் என்ன ?” என்பதில் எது ஆங்கிலச் சொல் ? ‘டைம்’ என்பது ஆங்கிலச் சொல். இது உடனே நமக்குத் தெரிகிறது. டைம் என்பதற்கு நேரம் நல்ல தமிழ்ச்சொல். ‘இப்ப நேரம் என்னாச்சு ?” என்று தமிழில் கேட்கலாம். “டைம் ஆச்சு. கிளம்புங்க” என்பதைப் போலவே “நேரம் ஆச்சு. கிளம்புங்க” என்று சொல்வதும் வழக்கத்தில் இருக்கிறது. ஆங்கிலத்தைப் போலவே வடசொற்களையும் அடையாளம் கண்டுபிடித்துவிடுவோம். ”நல்ல உதாரணத்தோடு பேசினான்” என்பதில் வடசொல் எது ? ‘உதாரணம்’ என்பது வடசொல். உதாரணம் என்பதற்கு ‘எடுத்துக்காட்டு, சான்று’ ஆகியன தகுந்த தமிழ்ச்சொற்க…
-
- 1 reply
- 2.5k views
-
-
நினைவு கூர்தலா, நினைவு கூறுதலா ? எது சரி ? நினைவு கூறுதல், நினைவு கூர்தல் என்னும் இருவகையான தொடர்களுக்குள் குழப்பம் வருகிறது. “என் இளமைக் காலத்தை நினைவு கூறுகிறேன்” என்று எழுதுவதா ? “என் இளமைக் காலத்தை நினைவு கூர்கிறேன்” என்று எழுதுவதா ? அத்தொடரின் பொருள் என்ன ? ஒன்றினை ஆழ்ந்து நினைத்துப் பார்க்கும் செயல் என்று தெரிகிறது. நினைவு மேலோட்டமானதாக இருக்கும்போது அதனை மேலும் துலக்கமாக எண்ணிப் பார்ப்பது. ஒன்றுக்கு இரண்டுமுறை நினைத்துப் பார்ப்பது. நினைவுக்குள் சரிபார்ப்பது. இதுதான் அத்தொடரின் பொருள். நினைவு கூறுதல் என்றால் என்ன ? கூறுதல் என்பதற்குப் பொருள் தெரியும். ஒன்றினைச் …
-
- 1 reply
- 8.7k views
-