பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
ஈழத்தின் ஆயுதப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான திரு சத்தியசிலன் அவர்களின் நேர்காணல். ஈழப் போராட்ட வரலாற்றில் திரு சத்தியசீலன் அவர்களை யாரும் மறந்துவிட முடியாது. அறவழிப் போராட்டங்கள் தோல்வியடைந்ததை அடுத்து அன்றைய இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த போது இவர் தோற்றுவித்த தமிழ் மாணவர் பேரவைதான் ஊன்றுகோலாக விளங்கியது. தற்போது வெண்புறா என்ற தொண்டு நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார். வஜ்ரம் என்ற இதழுக்காக அவரை நேர்காணல் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. யாழ் இணையத்தள நண்பர்களுக்காக இங்கு தருகிறேன். நீங்கள் தோற்றுவித்த தமிழ் மாணவர் பேரவை ஈழப்போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய அமைப்பு. ஆயுதப் போராட்டத்திற்கு வழிவகுத்த அமைப்பு…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஈழத்து நவீன இலக்கிய உருவாக்கத்தில் தமிழகத்தின் செல்வாக்கு 1. ஆங்கிலரது ஆட்சியின் விளைபேறாக உருவான மேனாட்டு மயவாக்கமே (westernisation) தமிழில் நவீன இலக்கிய உருவாக்கத்திற்கான முக்கியமான காரணமாக கூறப்படுகின்றது. தமிழ்நாட்டிற்கு இக்காரணம் பொருந்துமாயினும், ஈழத்தைப் பொறுத்தவரையில் அதுமட்டுமன்றி, இந்திய, தமிழக தொடர்பும் இவ்விடத்தில் முக்கிய இடம் பெற்றிருப்பதாகக் கூறலாம். இவ்வாறான தொடர்பினால் ஈழத்தில் தமிழில் நவீன இலக்கிய உருவாக்கம் ஏற்பட்டமை பற்றி ஆராய்வதே இவ்வாய்வின் முக்கிய நோக்கமாகின்றது. 2. மேற்கூறியவாறான இந்திய தமிழக - ஈழத்து தொடர்பு அல்லது செல்வாக்கு என்பது பல்வேறு விதங்களில் அமையுமாயினும் இவ்விடத்தில் வசதி கருதி, இந்திய / தமிழகம் சார்ந்த அரசியல், சமூக, இ…
-
- 0 replies
- 7.5k views
-
-
ஆசுகவி என்னும் பட்டத்திற்கு உரியவரான இவர் கவிஞர் மட்டுமல்ல; சிறந்த உரை நடை வசனகர்த்தா.அஞ்சமை மிக்க பத்திரிகையாளர். சிறந்த சரித்திர ஆய்வாளர். உயர்ந்த சைவத்தொண்டர். ஈழத்தில் மட்டுமல்ல இந்தியா, மலேயா போன்ற தேசத்துப் பெரியார்களாலும் " வித்தகர்" எனப் பாராட்டப்பட்டவர். http://kanapraba.blogspot.com/2007/03/blog-post_9731.html
-
- 1 reply
- 983 views
-
-
1. ஞானப்பால் உண்டது உ திருச்சிற்றம்பலம் திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச் செய்த தேவாரத் திருப்பதிகங்கள் முதல் திருமுறை 1. திருப்பிரமபுரம் பண்: நட்டபாடை பதிக வரலாறு: சோழ நாட்டிலே, சீகாழியிலே, தவம்பெருகும் கவுணிய குலத்தில், சிவதீட்சை பெற்ற வேதியர்குல திலகராகிய சிவபாத இருதயருக்கும் பகவதியம்மையாருக்கும் வேதநெறி தழைத் தோங்க, மிகுசைவத் துறைவிளங்க, சித்திரைமாதத்துத் திரு வாதிரைத் திருநாளிலே திருமகனார் ஒருவர் தோன்றினார். இவருக்கு மூன்றாமாண்டு நடக்கும்பொழுது ஒருநாள் சிவபாத இருதயர் சீகாழிக் கோயிலுள் இருக்கும் பிரமதீர்த்தத்தில் நீராடச் சென்றார். குழந்தையும் அழுது கொண்டே உடன் சென்றது. சிவபாத இருதயர் உடன் வந்த சிறுவரைக் கு…
-
- 4 replies
- 1.9k views
-
-
"பிராமணன் வீட்டில் பேசுவது தமிழ், தமிழைச் சுத்தமாக உச்சரிப்பதில் வேறு எந்தப் பிரிவினருக்கும் பின் தங்கியவர்கள் அல்ல பிராமணர்கள். தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் தொண்டு புரிந்தவர்கள் பிராமணர்கள். அமெரிக்காவில் வளர்கின்ற தன் வீட்டுக் குழந்தைகள் கூடத் தமிழ் கற்காமல் இருந்து விடக் கூடாதென்று முனைபவர்கள் பிராமணர்கள், தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் பிராமணர்கள். ஆனாலும் தமிழர்கள் வேறு, பிராமணர்கள் வேறு, என்ற பிரசாரம் இடைவிடாது நடத்தப்படுகிறது. வீட்டிலே தெலுங்கு பேசுகிற லட்சக்கணக்கானவர்கள், தெலுங்கைத் தாய் மொழியாகப் பிரகடனம் செய்பவர்கள், கழகங்களிலே இருப்பதால் அவர்கள் தமிழர்கள், உருது மொழியைத் தாய் மொழியாக ஏற்கிற ஒருபகுதி முஸ்லீம்கள் கூட தமிழ் நாட்டில் வாழ்வதால் அவர்கள்…
-
- 43 replies
- 7.9k views
-
-
இலக்கியங்களில் யாழ் தொல்காப்பியத்தில் தொடங்கி, அகநானூறு, புறநானூறு, நற்றிணை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பரிபாடல், மலைபடுகடாம் முதலிய இலக்கியங்களில் யாழ் வாசிப்பைப் பற்றியும், பல்வகை யாழ்களைப் பற்றியும், யாழின் உறுப்பமைதியைப் பற்றியும் குறிப்புகள் பல இருக்கின்றன. இசைக் களஞ்சியமாய் விளங்கும் சிலப்பதிகாரத்தில் அரங்கேற்று காதையில் யாழாசிரியனின் அமைதியும், கானல் வரி மற்றும் வேனிற் காதையில், யாழ் வகைகளும், யாழின் உறுப்புகள் பற்றியும், யாழ் நரம்புகளை பரிசோதித்து சுருதி கூட்டிப் பின்னர் யாழை எங்கனம் இசைப்பது என்பதற்கான இலக்கணங்களும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. சீவக சிந்தாமணியில் காந்தர்வதத்தைக்கும் சீவகனுக்கும் இடையில் நடக்கும் யாழிசைப் போட்டி பற்றிய பாடல்களில், …
-
- 6 replies
- 4.4k views
-
-
நான் ஏன் எழுதுகிறேன்? பரந்த வயல்வெளி. நடுவே பிள்ளையார் கோயில். அருகே குளம். அந்தக் கோயிலுக்குப் பக்கத்தில் எங்கள் வீடு. ஒரு நாள் காலை நேரம். என்னைத் தன் தோளில் சுமந்து சென்றவர் அப்பா. கூட வந்தவர் என் தாயாரும் என் அக்காவும். வெற்றிலை, பாக்கு, பழம், அரிசி. தாம்பாளங்கள் இவற்றுடன் அப்பாவின் உதவியாளர்கள் பின்னாலே வந்தனர். வயல் வரப்புகளில் நடந்து கோயிலுக்குப் போனோம். அங்கே முன் மண்டபத்தில் என் தந்தையாரின் தாயாரும் அவரது தம்பியும் காத்து இருந்தனர். அன்று 1944ஆம் ஆண்டின் கலைமகள் பூசை. மறவன்புலவு வள்ளக்குளப் பிள்ளையார் கோயில் முன் மண்டபத்தில் தாம்பாளத்திலே அரிசியைப் பரப்பினர், அருகிலே நிறைகுடம் வைத்தனர், குத்துவிளக்குகள் ஏற்றினர். பழம், பாக்கு, வெற்றி…
-
- 5 replies
- 1.3k views
-
-
பகுதி - 1 இந்து மதம் எங்கிருந்து வந்தது? நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு ஓடிச் செல்லுங்கள் முடிகி றதா? உங்கள் மனக்குதிரையில் ஏறி உட்கார்ந்து கொண்டு கற்பனை, சிந்தனை இரண்டு சாட்டைகளாலும் விரட்டுங்கள். வரலாறு துல்லியமாக கணிக்க முடியாத காலத்தின் பாதாளப் பகுதி அது. மலைகள், காடுகள் என மனிதர்களையே பய முறுத்தியது பூமி. இமயமலைக் குளிர் காற்றில் நடுங்கியபடி ஓடிக் கொண்டிருக்கிறது சிந்து நதி. என்ன திமிர்? அத்தனை குளிரிலும் மானசரோவரில் பிறந்த சுமார் ஆயிரம் மைல்கள் மலையிலேயே நடை பயின்று பிறகுதான் கீழி றங்குகிறாள் சிந்து. அது அந்தக்கால ஆப் கானிஸ்தான் நிர்வாண மனிதர்கள். சாப்பிடத் தெரியாது. எதுவும் தெரியாது. மாலை மயங்கி இருள் இழைய ஆரம்பித்தால் பயத்தில் சிகரத்தில் ஏறி குகைகளுக்க…
-
- 3 replies
- 2.9k views
-
-
இந்து சயத்தை பற்றி நாலு வார்த்தை எதிராய் எழுத தெரியுமா? பெரியாரை போட்டோவில் பாத்திருக்கிறிங்களா? அவர் பேசிய உரையை படித்திருக்கிறீர்களா? மற்றவர்கள் பேசுவதை வெட்டி பேச தெரியுமா? ஏலாகட்டத்தில் கருத்தை திசை மாற்றி வேறு திசையில் கொண்டு செல்ல வேண்டும். எல்லாவற்றிலும் மேலாய், யார் என்ன சொன்னாலும் சொன்னதில குறியா இருக்கனும். இவை எல்லாம் உங்களுக்கு இருந்தால்….இதோ நீங்களும் பகுத்தறிவு வாதி ஆகி விட்டீர்கள். மேற்கண்டவை தான் இங்கு இணையத்தில் பகுத்தறிவு பேசும் சிலரின் தகமைகள்…. ஒரு பகுத்தறிவாளன் எப்படியிருப்பான்? பெரியாரை கூட பகுத்தறிவாளனாய் ஏற்றுக்கொள்ளாதவன் நான் ஏனெனில் பகுத்தறிவு என்பதற்க்கு இன்னும் சரியான விளக்கம் எம்மவர்கள் சிலரால் புரியப்படவில்லை. வாழ்வின் முற்பகுதியில், இந…
-
- 31 replies
- 5.3k views
-
-
எங்கள் வீட்டு பிரச்சினையை சந்தியில் நின்று கதைப்பது எங்களுக்கு தான் இழுக்கு இன்று இணையப்பரப்பில் அலம்பும் கூட்டங்களுக்கு ஒரு கருவாக அமைந்து விட்டது சாதி. அதுவும் ஈழத்தமிழர்களிடையே சாதியம் பற்றி பல ஆய்வாளர்கள் ஆய்வெழுதி தள்ளுகின்றனர். ஆனால் இவர்கள் அனைவரும் என்ன செய்கின்றனர்? முதலில் இந்;த சாதிய பிரச்சினைகள் பற்றி விவாதம் “உணர்வுகள்” என்ற இணையத்தில் ஆரம்பித்தது. என்று நினைக்கிறேன் சாதியம் இல்லை என்று அவர் வாதிட, அது இருக்கிறது என்று இன்னும் சிலர் வாதிட வாதாட்டம் இணையங்களிலும் தொற்றி கொண்டது. கருத்துக்களத்தில் கருத்துக்கள் பல பரவின. இதற்காகவே பலர் பல பிறவிகள் எடுத்து கருத்தை வைத்தனர். அனைவரும் சாதியத்தை அழிக்க பிறப்பெடுத்தவர்கள் என்றால் அது பொய். உண்மையில் சாதியத்தை அழ…
-
- 30 replies
- 4.7k views
-
-
அறியப்படாத ஆலயமாக திருவள்ளுவர் கோயில் ----------------------------------------------------------------- ரா. சுந்தரமூர்த்தி திருவள்ளுவரையும் அவர் அருளிய உலகப் பொது மறை திருக்குறளையும் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவருக்கு சென்னையில் ஒரு திருக்கோயில் உள்ளது என்பது பொதுவாகத் தெரியாத விஷயமாகவே இருக்கிறது. சென்னை மைலாப்பூரில் திருவள்ளுவர் அவதரித்த −டத்திலேயே அழகான கோயில் எழுப்பியுள்ளனர் சான்றோர்கள். திருவள்ளுவர் திருக்கோயில் இன்று நேற்றல்ல 16 ஆம் நூற்றாண்டிலேயே கட்டப்பட்டுள்ளது. காசி அரசன் ஒருவனால் இக் கோயில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. கோயிலின் அமைப்பே அது 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என கணக்கிட உதவுவதாக அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரத்தை ச…
-
- 1 reply
- 1.9k views
-
-
அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிராக இறுதிவரை போராடிய தமிழ் அரசர்கள் கண்டி இராச்சியம் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டு மார்ச் மாதம் 02டன் 192 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இலங்கைத் தீவில் தனியரசுகளாக விளங்கிய யாழ்ப்பாணத் தமிழ் அரசைப் போராட்டத்தின் பின்னர் போர்த்துக்கேயர் கைப்பற்றினர். அந்நியருக்கெதிராக இறுதிவரை போரிட்டு மாண்டவன் யாழ்ப்பாணத்துத் தமிழ் அரசன் சங்கிலியன் என்பது வரலாறு. சுயலாபம் கிட்டும் என்ற ஆசையால் காக்கை வன்னியன் என்ற தமிழனே சங்கிலியனைப் போர்த்துக்கேயர் தோற்கடிக்கக் காரணமாயமைந்தான் என்று கூறப்படுகிறது. எவ்வாறாயினும், இறுதிவரை அந்நியரை எதிர்த்து நின்ற பெருமை யாழ்ப்பாணத் தமிழ் அரசனுக்கு உண்டு. அதேபோன்று, வன்னித் தமிழரசரும் அந்நியருக்கெதிராக போராடிய வீ…
-
- 0 replies
- 946 views
-
-
-த.மனோகரன்- திருகோணமலை என்றவுடன் நெஞ்சிலே நிழலாடுவது திருக்கோணேஸ்வர ஆலயமாகும். காலத்தால் முந்தியது இதிகாச புராணகாலத்திலும் சிவத்தலமாக விளங்கியது இவ்வாலயம் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் பல உள்ளன. இதிகாசங்களில் பாரதத்திற்கு முந்தியது இராமாயணம். இராமாயணக்காலம் இற்றைக்கு ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென்பர் பலர். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென்பர் வேறு சிலர். எவ்வாறாயினும் இலங்கையின் வரலாறு என்று குறிப்பிடப்படும் காலத்திற்கு முற்பட்டது திருக்கோணேஸ்வரம் என்பது வரலாற்றுக் குறிப்புகளூடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள உண்மையாகும். விஜயன் இலங்கையில் கரையொதுங்கிய போது அவனுடன் வந்தொதுங்கிய உபதிஸ்ஸன் என்ற பிராமணன் இலங்கையின் வடக்கேயிருந்த நகுலேஸ்வரத்திற்கும், கிழக்கேய…
-
- 0 replies
- 1.2k views
-
-
தென்னாட்டில் ஹிந்திக்கு வித்திட்ட பெரியார் - கவிஞர் கலைக்களஞ்சியம் பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்தான் தென்னாட்டில் முதன்முதலில் ஹிந்திக்கு வித்திட்டவர். இவர் 1922-ல் ஈரோட்டில் ஹிந்திப்பள்ளி ஒன்றை ஆரம்பிக்க இலவசமாக இடம் கொடுத்தார். "திரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்புகள்" என்ற நூலில் பக்கம் 436ல் "இராமசாமி நாயக்கர் காங்கிரசில் தொண்டாற்றிய காலத்தில் அவர் முயற்சியால் ஈரோட்டில் ஹிந்தி வகுப்பொன்று நடைபெற்றது. திறப்பு விழாவுக்கு யானுஞ் சென்றிருந்தேன். தென்னாட்டில் ஹிந்திக்கு விதை இட்டவர் நாயக்கரே" என்று திரு.வி.க. அவர்கள் எழுதியுள்ளார். 1917-ஆம் ஆண்டிலிருந்து 1925-ஆம் ஆண்டுவரை பார்ப்பனர்களின் தாசனாக விளங்கி வந்த பெரியார் ஈ.வெ.ரா. 1925-க்குப் பிறகு பார்ப்பனர்களின் சிம்…
-
- 8 replies
- 3k views
-
-
காலியில் கிடைத்த தமிழ்க்கல் -அன்பரசு- பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஒரு ஆங்கிலேய நீரியற் பொறியியலாளர் காலித் துறைமுக நகரில் ஒரு கற்பலகையைக் கண்டெடுத்தார். 12 செ. மீ. தடிப்புள்ள அந்தக் கருங்கற் பலகை வடிகால் மூடியாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது. மேலிருந்து கீழாக அதில் சீனம், தமிழ், பாரசீகம் ஆகிய மொழிகளில் ஒரு செய்தி கூறப்பட்டிருந்தது. செய்தியின் கீழ் பெப்ரவரி 15, 1409 என்ற திகதி மும்மொழிகளிலும் பொறிக்கப்பட்டிருந்தது. கொலம்பஸ், மகலன், வஸ்கொ டகாமா ஆகிய மாலுமிகளுக்குப் பல வருடம் முந்தியவரான சீனக் கடற்தலைவன் செங்கீ (ணுர்நுNபுர்நு) தனது ஏழு (7) கடற் பயணங்களில் மூன்றாவதின்போது தென்னிலங்கைக்கு வந்தார். அந்த வருகையை நினைவுறுத்தும் நோக்கில் அவர் இந்த நினைவுக்கல்லை நாட்டினா…
-
- 0 replies
- 1.1k views
-
-
http://img119.imageshack.us/img119/298/pooddulf5.jpg பொட்டு வைத்த முகமோ... எவ்வளவு அழகாக மேக்-அப் செய்திருந்தாலும், எவ்வளவு விலை உயர்ந்த உடைகள் அணிந்திருந்தாலும், வைரத்திலே ஆபரணங்கள் பூட்டியிருந்தாலும் முகத்திற்கு ஒரு பொட்டு மட்டும் வைக்காமல் இருந்தால், அழகு முழுமை பெறவில்லை என்பது பலரின் கருத்து. அதுவும் பட்டுப்புடவை கட்டிவிட்டால், பொட்டு அவசியம் தேவை என்று வலியுறுத்துகிறவர்களும் உண்டு. இந்தியப் பெண்களைப் பொறுத்தவரையில் பொட்டு அழகின் சின்னமாக கருதப்படுகிறது. முன்பு குறிப்பிட்ட மதத்தினர் மட்டும்தான் பொட்டு வைப்பார்கள் என்று கருதப்பட்டது. இப்போது அழகு என்ற அடிப்படையில் எல்லோருக்கும் பிடித்ததாக பொட்டு மாறிக்கொண்டிருக்கிறது. கடல் கடந்து வெளிநாடுகளிலும் ப…
-
- 14 replies
- 2.6k views
-
-
பையன்கள் பாசை பள்ளிக்கூடக் காலத்துப் பையன்கள் பாசை... உணர்வுகளைக் கையாள உதயமான படைப்பு கோபத்தின் உச்சியில் ஒற்றை வார்த்தை சொன்னால் கோபத்தின் பெரும்பாதி பனியாக்கும் மருந்து நாட்டார் பாடலின் தனித்துவம் போல பையன்கள் பாசைக்கு ஆராய்ச்சி இல்லை செவிவழி வாழ்ந்த அற்புத இலக்கியம் புலம்பெயரும் நிகழ்வால் அழிந்திடும் அவலம் காட்டுமலர்களின் கிறங்கவைக்கும் அழகு பெருந்தெருப் பயணிகள் அறியாத புதையல் மிகைப்பாட்டு இலக்கியங்கள் கோலோச்சும் வரைக்கும் பையன்கள் பாசைக்கும் தீண்டாமை இருக்கும். புலத்திலிருந்து நிலம் பார்க்கச் செல்வோர் படித்த பள்ளிக்கும் சுற்றுலா செல்வர் குறித்த சுவர்களை கண்களாற் துளாவி பொறித்த பாசையைப் பார்த்திடத் துடிப்பர் பையன்கள் பா…
-
- 6 replies
- 2.1k views
-
-
தமிழ் காட்டுமிராண்டி மொழி என்றும், தமிழர்கள் சூடுசுரணை அற்றவர்கள் என்றும், கருங்காலிகள் என்றும் தந்தை பெரியார் கடிந்து கொண்டதாக பல இடங்களில் குற்றச் சாட்டு இருக்கிறது. பெரியார் மீது பற்றுக் கொண்ட எங்களுக்கு இதை உண்மை என்று ஒத்துக்கொள்கின்ற பக்குவம் உண்டு. பெரியார் சொன்ன ஒன்றை சொல்லவில்லை என்று அடம்பிடித்து பொய் கூற மாட்டோம். அது எங்கள் வழக்கம் இல்லை. ஆனால் பெரியார் ஏன் அப்படி சொன்னார். தமிழை சீர்திருத்த வேண்டும் என்று அரும்பாடு பட்டவர் அவர். தமிழிசைக்காக குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். ஆனால் அவர் ஏன் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார். இதோ அவரே அதற்கு விளக்கம் சொல்கிறார் அட முட்டாள்களா! உங்கள் தமிழை பார்ப்பான் நீசமொழி என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு …
-
- 1 reply
- 8k views
-
-
யாழ்ப்பாணத்துச் சைவர்களிடம் பூணூல் அணியும் வழக்கமும் சிவதீட்சை பெறும் வழக்கமும் இருந்ததததாக குறிப்பிடுகிறார், Rev. James Cartman, OBE, M.A., B.D., M.Th. தன்னுடைய Hinduism in Ceylon என்ற நூலில். பூணூல் அணியும் பழக்கம் எப்படித் தோன்றியது, அது முதலில் எதைக் குறிப்பதற்காக அணியப்பட்டது என்பவற்றைப் பற்றிப் பலரும் பல்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளார்கள். ஒருவேளை அது நெசவோடு தொடர்புடையதாக இருக்கலாம். நூல் நூற்போர் தம் தொழிலைக் காட்ட இதை முதன்முதலில் பயன்படுத்தியிருக்கலாம். என்றோ ஒரு நாள் நெசவுத் தொழில் சமூகச் செல்வாக்குப் பெற்றிருந்த நாளில் மக்களின் ஆட்சி அவர்கள் கைகளிலிருந்திருக்கலாம். இன்றும் இலங்கையில், தாய் தந்தையரின் சிதைக்குக் கொள்ளி வைக்கும் போதும், ஈமச் சடங்குக…
-
- 0 replies
- 3.9k views
-
-
கம்பர் இராமாயணத்தை எழுதினார். இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் தமிழுக்குத் தந்தார். வியாசர் மகாபாரதத்தை வழங்கினார். மனுதர்ம சாத்திரத்தை மனுவேதான் படைத்தார். சந்தேகமேயில்லை! ஆனால்… யாரும் பெண்ணை எழுதவில்லை. உண்மையில் அவள் பேசிய வார்த்தையை எழுதவில்லை. கம்பரின் ராமன்: சீதை! நீ இவ்வளவு நாளா ராவணனோடை இருந்தனியெல்லோ… நீ எப்பிடிக் கற்போடை இருந்திருக்க முடியுமெண்டு ஒரு வண்ணான் கேக்கிறான். நான் இந்தக் குடிமக்களுக்கெல்லாம் அரசன். நீ பத்தினிதான் எண்டு அவையளுக்கு நான் நிரூபிக்காட்டில் நாளைக்கு என்னை நாயெண்டும் மதிக்கமாட்டாங்கள். நீ குறைநினைக்காமல் கொஞ்ச நாளைக்குக் காட்டிலை போய் இரு. கம்பரின் சீதை:நீங்கள் சொல்லி நான் எண்டைக்காவது மாட்டனெண்டு சொல்லியிருக்கிறனா……
-
- 11 replies
- 2.1k views
-
-
http://sinnakuddy.blogspot.com/2007/01/blog-post.html மொழி உச்சரிப்பு வித்தியாசம் நாட்டு எல்லைகளுக்குளே இருக்கிறது. தமிழ் மொழி மட்டுமல்ல வேறு மொழிகளில் இருப்பது கண்கூடு. .. இங்கே இங்கிலாந்ததில் கூட வடக்கு பக்கம் இருக்கிற லிவப்பூல் பகுதியில் இருக்கிற ஆங்கிலம் கதைப்பவருக்கும் தென் கிழக்கு பகுதியிலுள்ளவர்க்கும் வித்தியாசம் இருக்கும்.கொலண்டை பார்த்தீங்களாயின். லிம்பேர்க், பிறிஸ்லாண்ட் , வடக்கு கொலண்ட் பகுதியில் இருக்கிறவர்களுக்கும் இடையிலே பெரும் வித்தியாசம் இருக்கும் சிலவேளை புரியவே மாட்டாதாம்.. ஜெர்மனியில் முன்சன்,நோட்றன் வெஸ்ட்பாளின் பெர்லின் போன்ற இடங்களில் பேசுகிறவர்களுக்கும் உச்சரிப்பில் வித்தியாசமாக இருக்கும். ஈழத்தில் பிரதேச வேறு பாட்டால் உச்சரிப்பும் …
-
- 9 replies
- 2.1k views
-
-
மீறல் இப்படியொரு பதிவு போடும் துரதிஸ்டமான நிலையில் நாம் இன்றைக்கும் இருக்கிறோம் என்பது வேதனையானதுதான். அழுக்கு வெளிப்படையாகக் தெரியும் கீழைத்தேய மனிதர்களைத் தாண்டி வாசனைகளால் நாற்றம் மறைக்கும் மேலையத்தேயத்தில் இருந்து கிளம்பும் ஈழத்தமிழரின் சாதிய நாத்தம் சென்னைத் தமிழன் மூக்குவரை வருகிறது. இன்றைக்குப் பெண்ணியம் பேசுவதும் சாதியம் பேசுவதும் தங்களைத் தக்கவைத்துக் கொள்ளுவதற்கும் பிரபல்யப்படுத்துவதற்குமானவ
-
- 45 replies
- 6.3k views
-
-
இன்று சர்வதேச தாய்மொழித் தினம் [21 - February - 2007] [Font Size - A - A - A] பெப்ரவரி 21 சர்வதேச தாய்மொழித் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. வங்காள மொழியை அரசகரும மொழியாக ஆக்கக் கோரிய போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக பெப்ரவரி 21 சர்வதேச அளவில் மொழி தொடர்பாக நினைவு கூரப்படும் தினமாகக் கொண்டாடப்படுகிறது. வங்காள தேச அரசாங்கத்தின் முயற்சிகள், சர்வதேச அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகளின் யுனஸ்கோ அமைப்பு பெப்ரவரி 21 , 1999 ஆம் ஆண்டு சர்வதேச தாய் மொழித்தினமாக பிரகடனப்படுத்தியது. 2000 ஆம் ஆண்டு முதல் இத்தினம் உலகம் முழுவதும் சர்வதேச தாய்மொழித்தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த தினத்தில் , உலகில் உள்ள 6000-700…
-
- 4 replies
- 1.4k views
-
-
சார்க் 2007: இராஜபக்சாவின் வருகையும் தமிழகத்தின் கடமையும் மறவன்புலவு க. சச்சிதானந்தன்இ (தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் குழு முன்னாள் உறுப்பினர்) மறவன்புலவு க. சச்சிதானந்தன் பற்றி தெற்காசியக் கூட்டமைப்பின் 14ஆவது உச்சி மாநாடு இந்த ஆண்டு ஏப்பிரல் 3இ 4 நாள்களில்இ புதுதில்லியில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தெற்காசியாவின் ஒவ்வொரு நாட்டுத் தலைவரையும் நேரடியாகச் சென்று அழைப்பைக் கொடுத்து வருகிறார். புதிதாக இணைந்துள்ள ஆப்கானிஸ்தானுடன்இ இந்தியாஇ இலங்கைஇ நேபாளம்இ பாகிஸ்தான்இ பூடான்இ மாலைதீவு ஆகியன இந்தக் கூட்டமைப்பில் உள்ள ஏழு நாடுகள். ஆண்டுக்கு ஒருமுறை உச்சி மாநாடு நடக்கவேண்டுமென்பது மரபு. ஆனாலும் இதுவரை 13 மாநாடுக…
-
- 0 replies
- 979 views
-
-
விதியா மதியா வாழ்வை கெடுக்கிறது...??? அர்த்தமுள்ள இந்துமதம் துன்பங்களிலிருந்து விடுதலை... கவிஞர் கண்ணதாசனின் அhத்தமுள்ள இந்துமதம் சொல்கிறது.... பார்பனிய வாதிகளிற்க்கும் பகுத்தறிவாளர்களுக்கும் இவருடைய கருத்து வயிற்றில் புளிளை கரைக்கும் என நம்பலாம்.... இவரை முற்ப்போக்கு வாதியாக பார்க்கலாமா அல்லது பிற்போக்க வாதியாக பார்க்கலாமா...?? உங்கள் கருத்தென்ன...??? எடுத்து இயம்புங்கள்... ஆனால் அதிக தெய்வ நம்பிக்கையை கொண்டவராக தன்னை காட்டி கொள்ளும் இவருடைய கருத்தில் சிலதில் நமக்க உடன் பாடு இல்லை ஆனால் பலதை முற்றாக ஏற்கலாம். நல்ல கருத்துகளை மிக லாவகமாக அவர் மொழிந்திருக்கிறார் நீங்களும் படித்து பயன் அடையுங்கள்..... உங்களது வாத பிரதி வாதங்…
-
- 0 replies
- 1.6k views
-