சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
985 topics in this forum
-
'அருஞ்சொல்' இதழ் அம்பேத்கரின் பத்து கடிதங்களை வெளியிட்டிருக்கின்றது. அம்பேத்கரின் கடிதத் தொகுப்புகள் ஒரு புத்தகமாக வெளிவந்திருக்கின்றது. அதில் இருந்து பத்து கடிதங்களை தெரிந்தெடுத்து வெளியிட்டிருக்கின்றனர். இரண்டு கடிதங்கள் இங்கு கீழே உள்ளது. அம்பேத்கர் நேருஜிக்கு எழுதியது ஒன்று, மற்றயது நேருஜி எழுதிய பதில் கடிதம். அன்றைய அரசியல்வாதிகளின் ஆற்றலும் திறமையும், இன்று அரசியலில் இருப்போரின் ஆற்றலும் திறமையும் அன்று மலையாகவும், இன்று மடுவாகவும் இருக்கின்றது. அதே நேரத்தில், வசதி வாய்ப்புகளில், அன்று அரசியலில் இருந்தோர் மடுவாகவும், இன்று இருப்போர் மலையாகவும் இருக்கின்றனர். https://www.arunchol.com/book-of-ambedkar-letters ************************* 26,…
-
- 0 replies
- 358 views
-
-
துட்டுக்கு ரெண்டு கொட்டைப் பாக்கு இப்பிடித்தான் London போய் ஆறு மாசத்தில, “டேய், கார் வாங்கீட்டாய் தானே,சனி ஞாயிறு வேலை இல்லாட்டி வீட்ட வா” எண்டு சஞ்சீவ் சொல்ல , சரி எண்டு சொல்லீட்டு காஞ்சு போன வாய்க்கு வீட்டுச் சாப்பாட்டு கிடைக்கிற அவாவில வெள்ளிக்கிழமை வெளிக்கிட்டு எப்பிடி வாறது எண்டு வழி கேட்டால், உப்பிடியே Gantshill roundabout ஆல நேர வந்து A 406 எடுத்து அடுத்த roundabout இல மூண்டாவது exit எடுத்து அப்பிடியே north circular ஆல வந்து பிறகு அடுத்த roundabout ஐஞ்சாவது exit ஆல வெளீல வந்து எண்டு சொல்ல, ஊரில இருக்கிற சந்தி மாதிரி இருக்கும் எண்டு நெச்சு இருக்கிற roundabout பேரை எல்லாம் பாடமாக்கீட்டு் , வடிவா விளங்காட்டியும் ஆரையும் கேட்டாவதூ போகலாம் எண்டு நெச்சபடிக் …
-
-
- 6 replies
- 1k views
-
-
எல்லோரும் ஃபுட்பால் பார்க்கிறாங்களே என்று நானும் பார்ப்பமே என்று தேட............ இது தான் என் தேடலில் வந்தது.......🤣
-
-
- 7 replies
- 944 views
- 1 follower
-
-
தந்தை இறந்த பின் தன் தாயை கவனிக்க முடியாமல் முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார் மகன் . மனைவியும் வேலைக்கு போவதால் தன் தாயை வீட்டில் கவனிக்க யாருமில்லை என்ற காரணத்திற்காக முதியவர் இல்லத்தில் சேர்த்து விட்டார். மாதத்திற்கு ஒரு முறை தன் தாயை அங்கு சென்று சந்தித்து வந்தார். வருடங்கள் கடந்தன. ஒருநாள் அவருடைய தாய் ரொம்பவும் முடியாமல் இருப்பதாக தகவல் வந்தது. மகனும் உடனடியாக தன் தாயை சந்திக்கச் சென்றார். தாய் சாகும் தருவாயில் இருந்தார்கள். “உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?” என மகன் கேட்டார். “ இந்த முதியவர் இல்லத்தில் மின் விசிறிகள் எதுவும் இல்லை. காற்று இல்லாமலும், கொசுக் கடித்தும் நிறைய நாட்கள் தூங்காமல் இருந்திருக்கிறேன். இங…
-
-
- 2 replies
- 628 views
- 1 follower
-
-
03 JUL, 2024 | 05:08 PM இவ்வுலகில் பிறக்கின்ற ஒவ்வொருவரும் ஏதோவொரு திறமையுடையவர்களாகத்தான் பிறக்கின்றனர். என்றாலும் ஒவ்வொரு மனிதனது வாழ்க்கையின் வெற்றிக்கு அவனது மனமும் செயற்பாடுகளுமே காரணமாக அமைகின்றன. குறிப்பாக, மனதை ஒருநிலைப்படுத்தி செயற்படுவதன் மூலம் எதனையும் சாதிக்க முடியும் என இஸ்ரேலைச் சேர்ந்த பிரபல உளநல ஆலோசகரான கையி ரெகேவ் ரோசன்பெர்க் (Guy Regev Rosenberg) தெரிவித்தார். அண்மையில் இலங்கை வந்த அவரை கொழும்பில் சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இஸ்ரேலில் பிறந்த கத்தோலிக்கரான கையி ரெகேவ் ரோசன்பெர்க்கிற்கும் இலங்கைக்கும் இடையில் பல தலைமுறைகளாக தொடர்புகள் காணப்படுவதாகவும், அந்த வகையில் இலங்கையையும் இலங்கை…
-
- 0 replies
- 400 views
- 1 follower
-
-
இரும்பு மனிதர்கள் - சுப.சோமசுந்தரம் எங்கள் ஆசிரியர் சங்கமான MUTA வின் புலனக் குழுவில் (WhatsApp group) பேரா. நீலகிருஷ்ண பாபு அவர்கள் வழக்கம் போல பேரா. சுப.வீரபாண்டியன் அவர்களின் ஒரு நிமிடச் செய்தி ஒலி நாடாவைப் பதிவு செய்திருந்தார். அப்பதிவு கீழேயுள்ள இணைப்பில் உள்ளது. தயவு கூர்ந்து அதனைக் கேட்ட பின் அச்செய்தி என்னுள் எழுப்பிய நினைவலைகளை வாசிப்பது (வாசிப்பதாக இருந்தால்) வாசிப்போரின் உடலுக்கும் (!) உள்ளத்திற்கும் நலம் பயப்பது : நீங்கள் (மக்கள்) விரும்பும் மனிதர் ஹிட்லராக இருந்தால், அவருக்கும் 'இரும்பு மனிதர்' என்று பெயரிட்டுக் கொண்டாடலாம். சர்தார் வல்லபாய் படேல் கதையைக் கையிலெடுத்து இக்கருத்தை நுட்பமாக (with su…
-
-
- 2 replies
- 537 views
- 1 follower
-
-
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் - சுப.சோமசுந்தரம் நேற்றைய (23-06-2024) ஒரு அனுபவப் பகிர்வு : உறவினர் மகளின் திருமண வரவேற்புக்குச் சென்றிருந்தேன். கல்லூரியொன்றில் கணிதப் பேராசிரியையாய்ப் பணியாற்றி ஓய்வு பெற்றிருந்த நண்பரின் கணவர் வந்திருந்தார். "சார், மேடம் வரவில்லையா ?" என்று கேட்டேன். "அவளுக்கு சுமார் ஒரு வருடமாக சுயநினைவு இல்லை. அல்சீமர் (Alzheimer) ஆட்கொண்டுள்ளது" என்றார். "பலரை நினைவில்லை. ஆனால் உங்கள் mathematics மீது அவளுக்குப் பெரிய அபிமானம் உண்டு. உங்களைப் பார்த்தால், epsilon delta எல்லாம் நினைவு வரலாம். ஒருநாள் வீட்டிற்கு வாருங்கள்" என்றார். மேடத்திற்கு பக்தி நெறியில் ஈடுபாடு உண்டு. ஒரு முறை அவரிடம் பெரியாழ்வார் பாசுரம் ஒன…
-
-
- 4 replies
- 872 views
- 1 follower
-
-
"நான் எதுவாக விரும்பினேனோ நான் அதுவாக இருக்கின்றேன்" - "குறை நல்லது" என்ற தலைப்பில் பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜ். This is from the "நல்லவை கேட்பின் - Chennai Special Peecharangam". Featuring Raja, Bharathi Baskar and many others as Speakers.
-
-
- 1 reply
- 368 views
- 1 follower
-
-
சாதி கெட்ட 'சாதி' - சுப.சோமசுந்தரம் தலைப்பில் முதலில் வரும் சாதி, ஒழுக்கம் எனப் பொருள்படும் தமிழ்ச் சொல்; பின்னர் வரும் 'சாதி', ஜாதி எனும் பிரிவினையின் தமிழ் வடிவம். ஒரு கணித ஆசிரியர் என்ற முறையில், மும்பையில் கணித மாணாக்கர்க்காக அகில இந்திய அளவில் நடைபெற்ற ஒரு தொடர் நிகழ்வில் பங்கேற்ற பின் ஞாயிறன்று (16 ஜூன் 2024) ஊர் திரும்பியதும் நேற்று (17 ஜூன்) ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தோழர் பேரா.வ.பொன்னுராஜ் அவர்களுடன் கலந்து கொள்ளும் நல்வாய்ப்பு அமைந்தது. அந்தப் பக்கம் செல்லும்போது கணித உலகின் நட்பு வட்டம் "Back in the saddle" என்று நினைக்க வைப்பதும், இந்தப் பக்கம் வரும்போது தோழர்கள் அதே உணர்வைத் தருவதும் (இல்லாத) இ…
-
-
- 3 replies
- 637 views
- 2 followers
-
-
பளார் (The Slap - थप्पड़) - சுப.சோமசுந்தரம் தலைப்பைப் பார்த்ததும் எது பற்றியதாக இருக்கும் என்று கன்னத்தில் கை வைத்து யோசிக்க வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. தற்போது சில நாட்களாய்ப் பரபரப்பாகப் பேசப்படும் கன்னத்தில் 'கை வைத்த' சமாச்சாரம்தான் என்று இந்தியத் திருநாட்டில் விவரம் அறிந்த சிறு பிள்ளைகளுக்கும் தெரியும். சண்டிகர் விமான நிலையத்தில் திரைப்பட நடிகையும் பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் விழுந்த 'பளார்' சத்தம் தென்குமரியில் விவேகானந்தர் பாறையில் பட்டு எதிரொலித்ததாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கங்கனாவிற்கு அறைவிட்ட …
-
-
- 2 replies
- 485 views
- 1 follower
-
-
மேகநாதன் முனுசாமி · உண்மை நிகழ்வு.. தமிழரை திருமணம் செய்த நியுசிலாந்து வெள்ளைகார பெண் தன் தமிழ் கணவர் மற்றும் குடும்பத்துடன் இரயிலில் திருச்சிக்கு பயணம் செய்துகொண்டிருந்தார்..அவரிடத்தில் அவரின் கணவர் மூலம் அறிமுகமான நான் பேசிகொண்டிருந்தபோது.. அவர் சொன்னார் தான் முதல்முறையாக தமிழ்நாட்டுக்கு வருவதாகவும் தன் கணவர்மூலம் தனக்கு தமிழ் நன்றாக பேச தெரியும் என்றும்..தன் கனவரின் சொந்த ஊருக்கு போய் கொண்டிருப்பதாகவும் சொன்னார்கள்.. பேச்சுவாக்கில் தமிழ் திரைபடங்கள் மற்றும் தமிழ் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் அதி…
-
-
- 2 replies
- 861 views
-
-
மகள் சோம. அழகு 'திண்ணை' இணையத்தில் எழுதிய 'தனித்திரு' எனும் கட்டுரை அவளுக்கே உரிய அங்கத நடையில் : தனித்திரு சோம. அழகு கோவிட் காலம், அதுவல்லாத காலம், இளமை, முதுமை என எல்லா நிலைகளிலும் எனக்கு மட்டும்தான் ‘தனித்திரு’ என்னும் இச்சொல் இன்பத்தேனாகப் பாய்கிறதா? “‘கொடிது கொடிது தனிமை கொடிது; அதனினும் கொடிது முதுமையில் தனிமை’. வயசானாதான் அதுலாம் தெரியும். இப்போ அதுபற்றி உனக்குப் புரியாது” – இதைத்தானே சொல்லப் போகிறீர்கள்? ஒப்புக்கொள்கிறேன். முதல் வரியில் ‘முதுமை’யைச் சேர்த்துக் கொள்ள எனக்குத் தகுதி இல்லைதான். ஆனால் ‘முதுமையில் நாம் தனித்திருக்க இயலாது’ என்னும் ஒற்றைக் காரணத்திற்காக ந…
-
-
- 6 replies
- 872 views
- 2 followers
-
-
கசகிஸ்தான் போய் வந்த தன்னுடைய சமீபத்திய அனுபவம் ஒன்றை ஜெயமோகன் எழுதியுள்ளார். மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் பயணம், வசதிகள் என்று முன்பின் தெரியாத ஒரு இடத்திற்கு போவதால் வரும் சிக்கல்களை நன்றாக எழுதியிருக்கின்றார். எந்த எந்த நாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற அறிவுரையும் பயனுள்ளதே. ************************ கசகிஸ்தான், சென்றதும் மீண்டதும் -- ஜெயமோகன் -- May 16, 2024 -------------------------------------------------------------------------------------------------- நண்பர் கிருஷ்ணன் தான் கசகிஸ்தான் திட்டத்தைப் போட்டது. அவர் கருதியது ஒன்றே, விசா தொல்லைகள் இல்லை. டிக்கெட் கட்டணம் கம்மி. நேராகச் சென்றிறங்கி, சுற்றிப்பார்த்து திரும்பி விடலாம். நானும் அவ…
-
-
- 17 replies
- 1.6k views
- 1 follower
-
-
Tamil baker Tharshan Selvarajah, who arrived in France from Sri Lanka in 2006, will be the first Eelam Tamil to carry the Olympic torch at this year’s relay. Selvarajah will be one of 10,000 people to carry the torch. Speaking to France 24, Selvarajah said the decision came as a “good surprise” and said he was “very lucky” to be selected. The torch will be travelling through over 400 French towns and ter…
-
- 0 replies
- 613 views
-
-
சில காலம் முன்பு 'நானே நானா ?' எனத் தலைப்பிட்டு ஒரு கட்டுரையை நமது இந்த 'யாழ்' இணையதளத்தில் பதிவிட்டிருந்தேன். அதில் வரும் கதைமாந்தர்களும் நிகழ்வுகளும் தமிழ் நிலத்திற்கு வெளியேயுள்ள, தமிழறியாத எனது சில நண்பர்களின் கவனத்திற்கும் உரியவை. எனவே அவர்களுக்காக அக்கட்டுரையை நான் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்ததே இப்பதிவு. மொழிபெயர்ப்பு என்பதை விட மொழிமாற்றம் என்பதே இங்கு சரியானது. Transformation and not translation. ஏனெனில் வரிக்கு வரி ஆங்கிலம் ஆக்காமல், ஒவ்வொரு பத்தியையும் மீண்டும் வாசித்து செய்தியை எனது ஆங்கில நடையில் தந்திருக்கிறேன். தமிழ் நிலத்தின் சொந்தங்களும் மொழி மாற்றப்பட்டது என்றில்லாமல், ஆங்கிலத்தில் ஏதோ புதிய கட்டுரையாக எண்ணி வாசிக்கலாம். தமிழை மட்டுமே பொதுத்தளத்தில் எழ…
-
-
- 1 reply
- 575 views
- 1 follower
-
-
எங்களை விட தெளிவாக இருக்கினம் தாயக சிறுவர்கள் ..வரும் கால இளைஞர்கள் .... தமிழ் தேசியத்தை அவர்கள் புரிந்து வைத்திருக்கும் அளவுக்கு எங்களுக்கு புரிதல் இல்லை...
-
- 1 reply
- 702 views
-
-
1958 ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் சிலோன் (இலங்கை) இடையே தொடங்கப்பட்ட இந்த பேருந்து சேவை உலகின் இரண்டாவது மிக நீண்ட பேருந்து பயணமாக கருதப்படுகிறது. பயணத்தின் போது இந்த பேருந்து இந்தியாவின் ராமேஸ்வரத்தில் இருந்து கப்பலில் பேருந்தை ஏற்றிக்கொண்டு இலங்கைக்கு பயணித்தது. 42 நாட்கள் 20000 கிலோமீட்டர் பயணம் செய்த இந்தப் பயணம் எவ்வளவு அற்புதமாக இருந்திருக்கும்? Vino Rajacholan VII
-
- 1 reply
- 696 views
-
-
முதியோர் இல்லத்திற்கு அன்னதானம் •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••• செய்யப் போறீங்களா, •••••••••••••••••••••••••••••• ஒரு நிமிடம் இதை படியுங்கள். ஒரு முதியோர் இல்லத்துக்கு சென்று, அங்குள்ள நிர்வாகியிடம் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தேன். எனக்கு 10 ஆண்டுகளாக அவரோடு பழக்கம் உண்டு.அந்தச் சமயத்தில் அங்கு வந்த ஒரு நன்கொடையாளர், தன் மகளின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு வேளைக்கு மட்டும் அன்னதானம் அளிக்க விரும்புவதாகக் கூறினார். மேலும் "குறித்தநாளில் பகல் 12 மணிக்கு வாழைப்பழம், Sweet, பீடா, வடை, பாயாசத்தோடு சாப்பாடு முதியோர் இல்லத்துக்கு வந்துவிடும். உணப்பொருட்களை கொண்டு வந்த பாத்திரங்களை திரும்பவும் ஓட்டலுக்கு கொடுக்கும் போது மிகவும் சுத்தமாக…
-
-
- 3 replies
- 1k views
-
-
“ யாரொடு நோகேன்…….. 2015 சனி இரவு 10:30 இருக்கும் சூப்பர் சிங்கர் பாத்துக்கொண்டு இருந்தன் . விளையாடிக் கொண்டிருந்த phoneஐக் கொண்டந்து “அப்பா உங்களுக்கு call “எண்டு தந்தாள் மகள். சேர் “இருபத்தி ஐஞ்சு வயசு , கிளிநொச்சீல இருந்து அனுப்பினவை “எண்டு சொல்லத்தொடங்க , சரி நான் வாறன் எண்டு phone ஐ வைச்சிட்டு சாரம் கழற்றி உடுப்பு மாத்தி வெளிக்கிட்டன். அங்க போய் உடனயே operation தொடங்க வேணும் எண்டு யோச்சபடி. இண்டையான் on call surgeon னிடசொல்லி அவையின்டை operationஐ நிப்பாட்டி எங்கடை case ஐச் செய்யக் கேக்கோணும், ஆர் anaesthetist எண்டு கேக்க வேணும் ICU bed தேவைப்படும் ,bed இல்லாட்டித்தான் பிரச்சினை எண்டு பல யோசனைகளோடு நான் வெளிக்கிட்டன். Theatre க்கு நான் போக எல்லாம…
-
- 0 replies
- 501 views
-
-
மகள் சோம. அழகு 'திண்ணை' இணையத்தில் எழுதிய, 'மகிழ்' என்று தலைப்பிட்ட சிறுகதையை இங்கே மீள்பதிவு செய்கிறேன். அரசியல் சமூகம் மகிழ் ! -------சோம. அழகு உவன் பணிக்குச் சென்ற பின் சுடச்சுட போர்ன்விட்டாவுடன்(உவள் ஒரு ‘tea’totaller! ஏன்? தேநீர் என்று எழுதினால்தான் எழுத்துக்குரிய இலக்கணமும் உணர்வும் பெறுமா? தேநீரின் ஒவ்வொரு மிடறுக்கும் ச…
-
- 0 replies
- 933 views
- 1 follower
-
-
லௌ(வ்)கீகம் இப்பவுமே “ லவ் மரீஜ்” எண்டு சொல்லிறதை செய்யக்கூடாத ஒரு பாவமாத்தான் ஊர் பாக்கிறது .சாதி, மதம் தாண்டி “ லவ்” எண்டாலே ஒரு தீண்டாமையான விசயமா இருந்திச்சுது . பள்ளிக்கூடத்தில படிக்கேக்க பெடியளுக்கு லவ் ஏன், எப்பிடி வாறதெண்டு தெரியாது, பிரண்ட் ஒருத்தன் “அநேமா மச்சான் அவள் உன்னைத்தான் பாக்கிறாள்”எண்டு உசுப்பேத்திவிட வாற காதல் தான் கூட. Friend உசுப்பேத்திறதோட மட்டுமில்லை ஊரெல்லாம் பரப்பியும் விடுவான். “ ஏன்டா எண்டு கேட்டா“ ஏற்கனவே ஒருத்தன் பாக்கிறான் எண்டு தெரிஞ்சா வேற ஒருத்தனும் பாக்க மாட்டான்டா” எண்டு விளக்கம் சொல்லுவான். பழகிப்பாத்து பாத்து வாறதில்லை பெடியளின்டை லவ். பாத்தோன்னயே வரும் , எதைப்பாத்து பிடிக்குது எண்டு தெரியாது. “மச்சான் ஏன்டா அவளை லவ…
-
- 2 replies
- 965 views
- 1 follower
-
-
1950களில் வீரகேசரி நாளிதழின் அலுவலகம். இந்தப் புகைப்படம் தொடர்பாக ஒரு அன்பரின் கருத்து இதோ... வீரகேசரி நிறுவனம் 1930 ஆம் ஆண்டு சுப்ரமணிய செட்டியாரால் செட்டியார் தெருவில் ஆரம்பிக்கப்பட்டது. வீரகேசரி என்பது அவரது மகனின் பெயர். சில மாதங்களே செட்டியார் தெரு அலுவலகம் செயற்பட்டது. பின்னர் சில காலங்கள் மருதானையில் செயற்பட்டது. பின்னரே கிராண்ட்பாஸ் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு இன்று வரையும் இயங்கி வருகின்றது. மருதானையில் அலுவலகம் செயற்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட படமே இது. இப்படத்தில் தோளில் கருப்பு துண்டுடன் நிற்பவர் இலங்கை திராவிட கழகச் செயலாளராகவும் இந்திய இலங்கை தொடர்பாளராகவும் விளங்கிய ஏ.எஸ்.மணவைத் தம்பி ஆவார். இந்த படம் அவரிடமே இருந்தது. தற்போது இலங்கை இந்திய…
-
- 0 replies
- 669 views
-
-
சாண் ஏற பப்பா சறுக்கும் நேற்றைக்கு விட்டதை எப்பிடியாவது இண்டைக்குப் பிடிக்கோணும் எண்ட எண்ணம் இரவு நித்திரையைக் குழப்பிச்சுது. நித்திரையால காலமை எழும்பி வீட்டில ஒருத்தரும் பாக்காத நேரம் அலுமாரிப் பெட்டீக்க பயந்து பயந்து வைச்ச கைக்கு அம்பிட்டதோட போனன் , “ எப்பிடியும் விட்டதை இண்டைக்கு பிடிக்கிறதெண்டு “ . காலமை முழுக்க கவனம் சிதறினபடி இருக்க மத்தியானம் சாப்பாட்டு மணி அடிச்ச உடனயே ஓடிப்போய் ரகசியமா விக்கிறவனைக் கண்டு பிடிச்சு கையில இருக்கிற காசை குடுத்தா மூண்டு தந்தான். புளியமரத்தடீல போய் நிண்ட ஆக்களோட சேர மூண்டு இருந்தால் சேக்கேலாது , குறைஞ்சது நாலாவது வேணும் எண்டு சொல்லி திருப்பி அனுப்பினாங்கள். என்னை மாதிரி மூண்டோட நிண்ட ஒருத்தனைக் கண்டு பிடிச்சுக் “…
-
- 3 replies
- 782 views
- 1 follower
-
-
இரண்டும் முரண்பட்டுக் கொண்டன. கடுமையாக முட்டி மோதிக் கொண்டன. முடிவில் இரண்டுமே செத்து மடிந்து விட்டன. நடந்த சண்டையில் இரண்டில் ஒன்றும் வெற்றிபெறவில்லை. மாறாக ஓநாய்க்கு எவ்வித சிரமமுமின்றி இரண்டும் உணவாகி விட்டன. இதற்கு இரண்டுமே ஒரே பரம்பரை, ஒரே இனம்; ஒரே வீட்டைச் சேர்ந்தவை. இது போன்றுதான் சிலவேளை நமது குடும்பத்தினுள் நிகழும் சண்டைகளும் கூட நமக்கு மத்தியில் பிரிவையும் பகையையும் தவிர வேறு எதுவும் மிஞ்சப் போவதில்லை. நமது சகோதரனுடன் நாம் சண்டையிட்டு வெற்றியீட்டினால் அதன்மூலம் நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்று அர்த்தமல்ல. மாறாக நமது சண்டையினால் மூன்றாம் நபரான எதிரியின் சந்தோஷத்திற்கு நாம் இரையாகி/விடுவதோடு பேரிழப்புகளுக்கும் ஆளாகி விடுகின்றோம். உலக…
-
- 0 replies
- 834 views
-
-
சங்கீத கலாநிதி 'சங்கீத கலாநிதி' விருது பெற்ற திரு.டி.எம்.கிருஷ்ணா அவர்களை வாழ்த்துவோம். அவர் பார்ப்பன சமூகத்தில் தோன்றிய முற்போக்குச் சிந்தனையாளர் என்பது அவருக்கான கூடுதல் தகுதி, சிறப்பு; நமக்கான கூடுதல் மகிழ்ச்சி. தமிழ்நாட்டு மக்கள் தொகையில் சுமார் மூன்று சதவீதம் உள்ள பார்ப்பனர்கள், 'மெட்ராஸ் மியூசிக் அகாடமி' யை நிரப்பிக் கொண்டு திரு. டி.எம்.கிருஷ்ணாவுக்கு எதிராகப் பிற்போக்குத்தனமாகக் கொதிக்கிறார்கள், குதிக்கிறார்கள் என்றால் ஒரு காலத்தில் அவர்கள் என்னவெல்லாம் ஆட்டம் போட்டிருப்பார்கள் என்பதை இன்றைய இளைய தலைமுறையினரின் கற்பனைக்கு விட்டு விடுவோம். சுமார் ஐம்பது வருட காலம் அடங்கி இருந்தவர்கள் இப்போது ஒன்றியத்தில் ஒரு மதவாத, பார்ப்பனிய, பாசிச அரசு அமைந்தத…
-
-
- 7 replies
- 1.3k views
- 1 follower
-