சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
985 topics in this forum
-
அந்த காலம் . ஊசி போடாத Doctor. சில்லறை கேட்காத Conductor .. சிரிக்கும் police... முறைக்கும் காதலி .. உப்பு தொட்ட மாங்கா .. மொட்டமாடி தூக்கம் .. திருப்தியான ஏப்பம்... Notebookன் கடைசிப்பக்கம் ... தூங்க தோள் கொடுத்த சக பயணி .... பார்த்த நொடியில் உரிமை எடுத்துகொள்ளும் பால்ய நண்பன்.. இப்பவும் டேய் என அழைக்கும் தோழி .. இரவு 2 மணிக்கு கதவை திறந்துவிடும் அம்மா... கோபம் மறந்த அப்பா .. சட்டையை ஆட்டய போடும் தம்பி.. அக்கறை காட்டும் அண்ணன்.. அதட்டும் அக்கா ... மாட்டி விடாத தங்கை.. சமையல் பழகும் மனைவி ... சேலைக்கு fleets எடுத்துவிடும் கணவன் .. வழிவிடும் ஆட்டோ காரர்... High beam போடாத லாரி ஓட்டுனர்.. அரை மூடி தேங்கா .. 12மணி குல்பி .. sunday சாலை ... மரத்தடி அரட்டை ... தூங்க விடாத குறட…
-
- 0 replies
- 280 views
- 1 follower
-
-
இனமொன்றின் குரல் is with Tamil Payen and 4 others. மணலாறு மற்றும் வவுனியா மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளில் நடை பெற்ற சிங்கள குடியேற்றங்கள். நாங்கள் மத்திய அரசில் பங்குதாரர்களாக இருக்கிறோம் . ஹெலி வசதிகள் உட்பட சகல வசதிகளும் எங்கள் மக்கள் பிரதிநிதிகளுக்கு கிடைக்கிறது . ஆனால் ககுறைந்த பட்சம் இந்த கொடுமைகளை பற்றி பேச யாருமே இல்லை மணலாறு (வெலி ஓயா) 117.1 சதுர கி.மீ.பரப்பளவிலிருந்த வெலிஓயா தற்போது, 164.2 சதுர கி.மீ. பரப்பளவில் வெறும் சிங்கள பிரிவாக விஸ்தீரணமடைந்துள்ளதை முல்லைதீவு மாவட்ட செயலக அதிகாரிகள் உறுதிப்படுத்துகின்றனர். கூடுதலாக 47 கிமீ சதுரம் அதாவது 11ஆயிரத்து 639 ஏக்கர் பரப்பளவில் வெலிஓயா வளர்ச்சி அடைந்து இருக்கிறது.ச…
-
- 0 replies
- 1.4k views
-
-
மருத்துவர் தினத்தில் எனது வேண்டுகோள்! Dr. Hariharan V MBBS, MD., Diet consultant. 2006-07ல் நான் நைட் டூட்டி டாக்டராக சிறிய மருத்துவமனைகளில் பணியாற்றியுளேன். பதினாலாயிரம் சம்பளம். மறக்க முடியாத தருணங்கள் அவை. "டாக்டர், என் ஏழு வயது பையனுக்கு கேன்சர். ஒரே பையன். எல்லாம் பண்ணியாச்சு. அவன் இன்னும் மூன்று மாதத்தில் இறந்துடுவான். இன்னிக்கு ரொம்ப வலி, பெத்திடின்-பினர்காண் ஊசி போட்டா வலி போயிடும், ஊசி போட்டா ஒரு வாரம் கழிச்சு தான் வலி வரும், நாங்க வழக்கமா போகும் மருத்துவமனையில் மறுத்துட்டாங்க. டாக்டர் மாறிட்டார். நாங்களும் நாலு ஹாஸ்பிடல் போயிட்டோம். எல்லாரும் மறுத்துட்டாங்க. ப்ளீஸ் ஊசி போடுங்க", என மூன்று வயது குழந்தை சைஸ் இருக்கும் ஏழு வயது வலியில் துடிக்கும…
-
- 0 replies
- 1.3k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கீரி என்று சொன்னாலே, பாம்பு குறித்த நினைவு நமக்கு வந்துவிடும் அளவுக்கு, இந்த இரண்டு உயிரினங்கள் பற்றிய கதைகளும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. கீரி - பாம்பு இடையே நிகழும் ஆக்ரோஷமான சண்டைகள் இயற்கைச் சமநிலையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உயிர் பிழைத்திருப்பதற்கான உத்திகள், பரிணாம தகவமைப்புகள், சூழலியல் சமநிலை ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த இரண்டு உயிரினங்களுக்கு இடையிலான பகையுணர்வு சுற்றுச்சூழலுக்கு மிக முக்கியமானது. ஆனால், அடிப்படையில் இவையிரண்டுக்கும் இடையே இருக்கும் இயற்கையான பகை மக்களிடையே பிரபலமான அளவுக்கு, அதற்கான காரணம் அதிகமாகப் பிரபலமடையவில்லை. பாம்பு - கீரி இரண…
-
- 0 replies
- 504 views
- 1 follower
-
-
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வைரலாக ஏதாவது புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கும். இப்பொழுது TikTokஇல் கடும் உறைப்பான மிளகாயில் செய்யப்பட்ட ‘சிப்ஸ்’ஐச் சாப்பிடும் போட்டி ஒன்று வந்திருக்கிறது. இப்படியான வில்லங்கமான விடயங்கள் எந்தளவுக்கு பள்ளி மாணவர்களைச் சென்றடைகின்றன என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணம். யேர்மனி நோர்ட்ரைன் வெஸ்ற்பாலன் மாநிலத்தில் உள்ள Euskirchener பாடசாலையில் ஐந்தாம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் TikTokஇல் நடந்து கொண்டிருக்கும் Hot Chip Challengeஐ தாங்களும் செய்து பார்க்க எத்தனித்திருக்கிறார்கள். விளைவு, பாடசாலை வளாகமே கடந்த வெள்ளிக்கிழமை அம்புலன்ஸ் வாகனங்கள், வைத்தியர்கள், தாதியர்கள் என பரபரப்பாக இருந்திருக்கிறது. உறைப்பான சிப்ஸை சாப்பிட…
-
- 0 replies
- 613 views
-
-
"அறிவும்" அறியாமையும் ! ==================== வரலாற்றுக் காலம் முதல் உளவியல் போரில் பல்வேறு உரிமைகளை இழந்து போனவர்களாக வாழ்ந்ததும் வாழப் பழகியதுமாக இருந்தவர்கள் தமிழர்கள். இதன் தொடர்ச்சியாக ஒரு தொன்மைச் சமூகம் இன்று இழிநிலையின் விளிம்பில் நின்று அல்லாடிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பல இரட்டை மலைச் சீனிவாசன்கள் , பெரியார்கள் வந்தாலும் எதைச் சாதிக்க முடியும் என்பது இற்றைவரையான யதார்த்தமான கேள்வி. பெரியார் போன்ற பல சக்திகள் பயணப்பட்ட பாதை என்பது இன்னும் கண்ணுக்கு எட்டிய தூரத்தை கூட கடக்கவில்லை என்றளவிற்கு சமூக ஏற்றத் தாழ்வுகள் , அடிமைத்தனங்கள், தீண்டாமைகள் என்பன தமிழர் தேசத்தில் இன்றும் பரவி அழுத்தமாக காணப்படுகின்றது. இன்றைய காலகட்டத்தில் சமூக அரசியல்…
-
- 0 replies
- 923 views
-
-
கிழச்சிங்கமும், நரிகளின் திரி(ணி)ப்பும் !!! கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு (Systematic Genocide), ஒரு இனத்தின் வரலாற்றை சிறுகச்சிறுகக் கருவறுக்கும். இது பாரிய இனவழிப்பு யுத்தத்தின் மூலம் மக்களைக் கொத்துக்கொத்தாகக் கொன்றொழிப்பதை விட அபாயமானது. அதுபோன்றே, திட்டமிட்ட கருத்தியல் விதைப்புக்களூடாக வரலாற்று மகோன்னதங்களின் விம்பங்களை உடைத்து, அவற்றுக்கு மாற்றீடாக நேரெதிர் விம்பங்களை மக்கள் சிந்தைக்குள் புகுத்தி, பட்டாபிஷேகம் நடத்தும் நுண்ணரசியற் பொறிமுறை. …
-
- 0 replies
- 1k views
-
-
திரைப்பட ஆக்கம் பற்றிய தீராத வெறிகொண்ட ஒருவர் : மற்றயவர் இசைமீது தீராத வெறிகொண்டவர் : இதனால்தான் இருவரும் ஒருபோதும் மோதிக்கொள்ளவில்லை ! இளையராஜா பாலுமகேந்திராவால் - அறிமுகப்படுத்தப்பட இருந்தவர் - சலீல் சௌத்திரியின் நட்பு தடுத்துவிட்டது : இசையருவி ராஜாவை தனது படத்தில் எந்த பின்னணி இசையுமற்று மூடுபனி - மூன்றாம் பிறை படங்களில் சில இடங்களில் காட்சிகள் நகரும் : அங்குதான் இயக்குனரும் - இசையமைப்பாளரும் கவனிக்கப்படுகிறார்கள் : பார்வை வடிவம்தான் (Visual art) திரைப்படம் - அலங்காரமற்ற அழகே அது - பாலுமகேந்தி…
-
- 0 replies
- 486 views
-
-
வாசலில் பெரிதாக A.M.Agrawal என்று போர்டு இருந்த வீட்டுக் கதவைத் தட்ட நினைத்து, எதிர்வீட்டு பெல்லை அழுத்திவிட்டேன். கடுப்புடன் கதவைத் திறந்த பெண்மணியின் தீப்பொறி பறக்க நோக்கி, படார் எனக் கதவை அறைந்து சார்த்திவிட்டார் . ”நல்லநாளிலேயே அந்தம்மா அதிகம் பேசாது. அதுவும் அகர்வால் வீடுன்னு கேட்டீன்னா” என்றார் முகேஷ் அகர்வால் சிரித்துக்கொண்டே. “ எங்களுக்குள்ள கொஞ்சம் ஆகாது.அத விடு. எப்படி இருக்கே? பாத்து பன்னெண்டு வருஷம் இருக்குமா? 2004ல இடார்ஸில பாத்தது இல்லையா?” முகேஷ் அகர்வால் ரிடையர்டு ஆகி பல வருடங்கள் இருக்கும். அரசு நிறுவனம் என்றால் சோம்பேறிகளாக , லஞ்சம் வாங்குபவர்களாகவே இருப்பார்கள் என்ற முத்திரைகளை உடைத்தவர். “மூத்தவன் வீடு இது. ரெண்டாவது பையன் போப்பால்ல இ…
-
- 0 replies
- 1.2k views
-
-
கதறும் மாடுகள், இரத்த வெள்ளத்தில் ஆடுகள். யேர்மனியில் செல்ம் (Selm) நகரத்தில் உள்ள இறைச்சிக் கூடத்தில் சட்ட விரோதமான முறையில் மிருகங்களுக்கு வேதனைகள் தந்து கொல்லப்படுவதாக விலங்கு உரிமை ஆர்வல நிறுவனமான Soko Tierschutz தொடர்ந்த வழக்கு 15.09.2023 விசாரணைக்கு வந்தது. டோர்ட்மூண்டிற்கு அருகிலுள்ள செல்ம் நகரத்தில் உள்ள இறைச்சிக் கூடத்தில் மூன்று ஆண்கள் தங்கள் இஸ்லாமிய முறையில் குறைந்தது 188 விலங்குகளை படுகொலை செய்துள்ளனர். இந்த முறையில் விலங்குகள் கொல்லப்படும் போது அவை மிகுந்த வேதனைகளை அனுபவிக்கின்றன என்பதே வழக்கின் விபரம். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இறைச்சிக் கூடத்தின் உரிமையாளரும்(54) அவரது இரண்டு மகன்களும் ஆவர். மயக்க மருந்து இல்லாமல் விலங்குகளின் கழுத்தை …
-
- 0 replies
- 419 views
-