இலக்கியமும் இசையும்
இலக்கிய கட்டுரைகள் | நேர்காணல்கள் | கர்நாடக இசை | நவீன இசை
இலக்கியமும் இசையும் பகுதியில் இலக்கிய கட்டுரைகள், நேர்காணல்கள், கர்நாடக இசை, நவீன இசை சம்பந்தமான தரமானதும் அவசியமானதுமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இலக்கியக் கட்டுரைகள், படைப்பாளிகளின் நேர்காணல்கள், கர்நாடக இசை, நவீன இசை பற்றிய தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
204 topics in this forum
-
படைப்பாளியைச் சுரண்டிக் கொழுக்கும் பதிப்பகத்தார்கள்! -எழில் முத்து தமிழ்நாட்டில் பதிப்பகங்களுக்கு பஞ்சம் இல்லை. ஆனால், அதில் நேர்மையாக எழுத்தாளனுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு தான் பஞ்சமோ பஞ்சம்! உச்சபட்ச பித்தலாட்டமும், சுரண்டலும் நிலவும் துறைகளில் பதிப்பகத் துறை முக்கியமானது. சொன்னால் நம்பமாட்டீர்கள், பல அறிவாளிகளை எல்லாம் அதோகதிக்கு ஆளாகியுள்ளார்கள்! நல்ல வேளையாக எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு நேர்மையான மீனாட்சி புத்தக நிலையத்தார் அமைந்தனர்! இந்த பதிப்பகம் வருடம்தோறும் ஜே.கேவுக்கு லட்சக்கணக்கில் ராயல்டி கொடுத்தனர். அவர் இறந்த பிறகும் விற்பனையில் 15% ராயல்டி இன்றும் தந்து வருகின்றனர். ஆனால், பிரபல எழுத்தாளர் சுஜாதாவிற்கு அப்படி அமையவில்லை.ம…
-
- 0 replies
- 450 views
-
-
மேடைவதைகள், சில நெறிகள். ஜெயமோகன் February 19, 2022 (Peter Saul ) இலக்கிய கூட்டங்கள் பற்றிய ஒரு செய்தியை அண்மையில் வாசித்தேன். மறைந்த குமுதம் நிறுவனர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை பற்றி அமுதசுரபி ஆசிரியரும் எழுத்தாளர் சங்கத்தலைவருமாக இருந்த விக்ரமன் ( வேம்பு) ஒரு கட்டுரையில் குறிப்பிடும்போது அவர் தமிழின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவர் என்றார். பிறரும் அதை பதிவு செய்திருக்கிறார்கள். கல்கி மறைந்தபோது எஸ்.ஏ.பி. ஆற்றிய உரை தமிழின் தலைசிறந்த உரைகளில் ஒன்று என்று அவருடைய மகன் ராஜேந்திரன் தன் குறிப்பொன்றில் பதிவு செய்திருக்கிறார். விவேகானந்தர், பகவத் கீதை இரண்டிலும் பெரும் ஈடுபாடு கொண்டவராகிய எஸ்.ஏ.பி. விவேகானந்தர் நூற்றாண்டின்போது தமிழகத்தின் பல ஊர்களுக்குச் சென்…
-
- 0 replies
- 545 views
-
-
இலத்திரனியல் சாதனங்கள்,இணையம்,தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களின் வருகையாலும் ஆக்கிரமிப்பாலும் வாசிப்பு இன்று எம்மை விட்டு தொலைவாகிக்கொண்டு இருக்கிறது…. இயந்திரமாய் ஓடும் வாழ்க்கையில் கிடைக்கும் சிறிது நேரத்தையும் தொலைக்காட்சிக்கும் தொலைபேசிக்கும் கொடுத்துவிடுகிறோம்… எழுத்தாளர்கள் அதிக நூல்களை வாசிப்பவர்கள்.. அவர்களின் உரையை கேட்கும்போது அவர்கள் வாசித்த பலநூல்களின் அனுபவங்கள் எமக்கு கிடைக்கும்… புத்தகங்களை வாசிக்க நேரமில்லாதவர்கள் ஆர்வத்தையும் சிந்தனையையும் தூண்டும் எழுத்தாளர்களின் உரையை கேட்கும்போது நம்மை அறியாமலே பல்வேறு புத்தகங்களை நாம் படித்துவிடுகிறோம் அவர்களின் உரைகளினூடு… எஸ் ராவின் அருமையான இந்த பேச்சை நேரம் ஒதுக்கி கேட்பவர்கள் நிச்சயமாக இனி நான் தொடர்ந்து இங…
-
- 0 replies
- 335 views
-
-
இரு வகையான வழக்குகள் written by ஆர்.அபிலாஷ்January 30, 2022 தமிழில் சமூக வலைதளங்கள் வேர்கொண்டு கிளைவிட்டு தழைத்தபோது தோன்றிய ஒரு இயல்பு பேச்சுவழக்கில் நிலைத்தகவல்களை எழுதுவது. பேஸ்புக்கில் குறிப்பாக, ஆங்கிலம், கொச்சையான சொற்கள் கலந்து நேரடியாக ஒரு விசயத்தைச் சொல்லத் தலைப்படும் எழுத்துக்கு இங்கு ஒரு மதிப்பு ஏற்பட்டது. அதே நேரம் வட்டார வழக்குக்குப் பெரிய மதிப்பு இருந்ததில்லை. நீங்கள் எந்தப் பதிவர்களைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து இது மாறும் என்றாலும் பேச்சுவழக்கு என்னதான் எதார்த்தமாகவும் பாசாங்கற்றதாகவும் இருந்தாலும், பொதுவழக்கே பொதுவாகக் கோலோச்சுகிறது. இந்தப் பொதுவழக்கைப் பயன்படுத்துகிறவர்கள் இடையிலும் இலக்கிய வழக்கு மீது ஒரு கிண்டல், மறுப்பு, அது போ…
-
- 0 replies
- 456 views
-
-
காலம் இல்லாமல் ஒரு கதையை எழுத முடியுமா? ஆர். அபிலாஷ் இதென்ன கேள்வி என உங்களுக்குத் தோன்றலாம். ஆனால்கதையின் ஆன்மா காலத்தினுள் புதைந்திருக்கிறது என்றுஅரிஸ்டாட்டில் துவங்கி இன்றைய விமர்சகர்கள் பலர்கருதுகிறார்கள். தமிழ் நாவல்கள், சிறுகதைகளின் வடிவத்தைபுரிந்து கொள்ளவும் இந்த கேள்வி மிகவும் உதவும். நாம்காலத்தைப் பற்றி பேசும் முன்பு காரண-விளைவு தர்க்கம் நம்வாழ்வில் எப்படி செயல்படுகிறது எனப் பார்ப்போம். பேருந்தில் நின்று கொண்டு வரும் போது பக்கத்தில் நிற்பவர்என் காலை மிதித்து விடுகிறார். நான் கோபமாக திரும்பிப்பார்க்கும் முன்பே அவர் “சாரி சார், தெரியாம மிதிச்சிட்டேன்” என்கிறார். “பரவயில்லை”, நான் அமைதியாக…
-
- 0 replies
- 395 views
-
-
ஐரோப்பிய கலாச்சாரத்தில், இசை, செழிப்பு மிகுந்த, மற்றும் பாரம்பரிய ரீதியிலான சிறப்புகள் அடங்கியதான ஒரு முக்கியமான இடத்தை வகிக்கின்றது. இது பாரம்பரியமான சாஸ்திரிய இசை ( classical music ), மற்றும் மக்கள் இசை ( modern pop music ) என வகைப்படுத்தப்படுகின்றது. ஐக்கிய இராச்சியம் முழுவதிலுமே, இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு வசதியாக ஏராளமான இசை அரங்குகள் அமைந்திருப்பதுடன், அவற்றில் வருடம் முழுவதும் இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. பல நூற்றாண்டுகளாகவே, பாரம்பரியமான சாஸ்திரிய இசை, ஐக்கிய இராச்சியத்தில் பிரபலம் மிக்கதாக விளங்குகின்றது. ஹென்றி புர்செல் (1659 - 95 ) ( Henry Purcell ) வெஸ்ட் மினிஸ்டர் அபேயில் ( Westminster Abbey ) ஆர்கன் இசைக்கருவியை ( organ ) வாசிப்பவர…
-
- 0 replies
- 667 views
-
-
எழுதுவது எப்படி? சொல்கிறார்கள் உலக எழுத்தாளர்கள்! எஸ்.அப்துல் மஜீத் ஜார்ஜ் ஆர்வல் (George Orwell): என்னைப் பொருத்தவரையில் எழுதுவதற்கு நான்கு விஷயங்கள் துணைபுரிகின்றன. அது ஒவ்வொரு எழுத்தாளருக்கும், அவரவர் வாழும் இடத்துக்கும் காலத்திற்கும் ஏற்றவாறு மாறுபடும். அவை: 1. ஈகோ: புத்திசாலியாக இருக்க விழைவது, தன்னைப் பற்றி பிறர் பேச வேண்டும் என எண்ணுவது, தான் இறந்த பின்னும் நினைவுகூரப்பட வேண்டும் என நினைப்பது, சிறுவயதில் தாழ்த்தியவர்கள் முன் உயர்ந்து வாழ நினைப்பது… இப்படி! எழுத்தாளர்கள் மட்டுமில்லாது அறிவியலர்கள், கலைஞர்கள், அரசியலர்கள், வழக்குரைஞர்கள், படை வீரர்கள் மற்றும் தொழில்முனைவோர்களிடமும் இத்தகைய தன்மையைக் காணலாம். மனிதர்களில் பெரும்பாலானவர்கள…
-
- 1 reply
- 947 views
-
-
-
- 0 replies
- 421 views
-
-
புலம்பெயர் தமிழ் இலக்கியத்துக்கு வயது ஏறக்குறைய 40 ஆண்டுகளே. மிஞ்சிப் போனால் இன்னும் ஒரு 50, 60 ஆண்டுகள்தான் இப்போதைய தொடர்ச்சியில் அதனால் ஒரு தீவிர அலையாக இயங்க முடியும். அதற்குப் பின்பு அது மெலிந்து ஒடுங்கி விடக் கூடிய சூழலே உண்டு. பிறகு அது வெவ்வேறு மொழிகளில் வேறு விதமானதாகவே இயங்கும். ஆகவே மொத்தமாகப் பார்த்தால் தமிழில் அதனுடைய ஆயுட்காலம் 100 ஆண்டுகளுக்குள்தான். இதற்குள்ளேயே அதனுடைய சாத்தியங்கள், சாதனைகள் எல்லாம். இந்த அவதானிப்பை வேறு யாரும் தங்களுடைய அவதானங்களின் வழியாகவும் வேறு தர்க்கத்தினாலும் மறுத்துரைக்கலாம். ‘இதென்ன வகையான சோதிடம் – ஆருடம்? யாரிந்தத் தீர்க்கதரிசி?’ என்று அவர்கள் நகைக்கவும் கூடும். ஆனால், ‘புலம்பெயர் தமிழ் இலக்கியம்’ உருவாகி வந்த வழியை நோக்க…
-
- 0 replies
- 472 views
-
-
எழுத்தாளர் ஜெயமோகனுடன் ஒரு நேர்காணல் தமிழ் இலக்கியத்தின் மறுக்கமுடியாத எழுத்தாளர்களில் முக்கியமானவர் ஜெயமோகன் அவர்கள். தமிழ் மொழியின் உச்சத்தை தொட்டவர் என்று சொல்லப் பொருத்தமானவர். தமிழிலும் மலையாளத்திலும் மிகப்பெரிய வாசகப்பரப்பு இவருக்கு உண்டு. புனைவின் எல்லா தளங்களிலும் அவரது எழுத்துக்கள் காத்திரமாக பேசப்படுகின்றன. zoom செயலி ஊடாக நடாத்தப்பட்ட இந்த நேர்காணல் பின்பு எழுத்துருவாக்கப்பட்டது . கேள்வி: மிக நீண்ட காலமாக ஈழத்து இலக்கிய சூழலையும் அதன் போக்குகளையும் அவதானிப்பவர் என்றவகையில்; அவை நகர்ந்து சென்றிருக்கின்ற செயற்பாட்டு இயங்கியலை எப்படிப்பார்க்கிறீர்கள்? பதில் : ‘ஈழ இலக்கியம்;ஒரு விமர்சனப் பார்வை’ எனும் தலைப்பில் பத்துவருடங்களுக்கு முன்பே ஒரு…
-
- 0 replies
- 893 views
-
-
அதே கம்பீரம், அதே ஆளுமை... சாகாவரம் பெற்ற குரல் உங்களுக்கு SPB ஸார் . We miss you!!! 🙏
-
- 0 replies
- 564 views
-
-
போரும் வாழ்வும் – அகரமுதல்வன் கதைகளை முன்வைத்து: ஆர். காளிப்பிரஸாத் அகரமுதல்வனின் காதல் விவரிப்புகள் சுவாரசியமானவை. ஒரு காலத்திற்குப் பிறகு தமிழில் காதல் கதைகள் எழுதுவது நின்றே விட்டது. காதல் அனுபவங்களை கவிஞர்கள் தங்கள் மிகைக் கூற்றுகளுக்கென எடுத்துக்கொள்ள இயல்பான காதல் வர்ணனைகள் உரைநடையில் குறைந்து போயின. காதலும் வீரமும் தமிழரின் பண்பு என்று பள்ளிக்கூடத்தில் படித்திருந்தாலும் இலக்கியத்தில் அவை பாரதிதாசன் காலத்தோடு நின்றுவிட்டன. காதல் வீரம் தியாகம் துரோகம் ஏதும் சமகால இலக்கியங்களில் பெரிதும் இடம்பெறுவதில்லை. வணிக இலக்கியம் அதற்கான ஊடகமாக ஆகியது. அடுத்து திரைப்படங்களிலும் அவை மேலும் நுண்மையாக்கப்பட்டன. தீர அலசப்பட்டன. அவ்வாறே ஒருகட்டத்தில் கேலியாகவும் ஆயின. விடுதலைப் ப…
-
- 0 replies
- 479 views
-
-
கவிப்பேரரசு வைரமுத்துவுடன் ஒரு இலக்கிய சந்திப்பு
-
- 0 replies
- 388 views
-
-
புகலிட இலக்கிய யதார்த்தம் Posted by: sudumanal மேற்குலகம் நோக்கி நாம் (தமிழர்கள்) போரினால் புலம்பெயர்ந்து அதிக பட்சம் முப்பத்தியேழு வருடங்களாகிறது. இந்த முதல் சந்ததி இப்போ இரண்டாவது முன்றாவது சந்ததிகளாக விரிடைந்திருக்கிறது. முதலாம் சந்ததி குறித்து பருண்மையாக சொல்வதெனில் ஓர் ஒடுங்கிப்போன சமூகமாக தமக்குள் குறுகியே அது இயங்கிவந்திருக்கிறது. இந்த ஒடுங்கிப் போதலுக்கு கணிசமானவர்கள் தமிழன் என்ற பெருமிதத்தை அல்லது (இந்துப்) பண்பாட்டை தமக்குள் உயர்த்திப்பிடிப்பதானது உளவியல் ரீதியில் சுயதிருப்திகொள்ள வைக்கிறது. செவ்வாய்க் கிரகத்தை றோவர் தரைதொட்டபோது உலகம் குதூகலித்துக் கொண்டிருக்க, நாம் (தமிழிச்சியாக இல்லாதபோதும்) ஸ்வாதி மோகனின் நெற்றியில் பொட்டைக் கண்டு குதூகலி…
-
- 0 replies
- 453 views
-
-
‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன் கோமகன் : ஓர் தலை சிறந்த கவிஞராகக் கணிக்கப்பட்ட நீங்கள் எதற்காக சினிமாத்துறையைதேர்வு செய்தீர்கள் ? வ.ஐ.ச.ஜெயபாலன் : அது ஓர் பெரிய கதை. இலங்கையில் போராட்டம் மிகவும் சரிவு நிலையை அடைந்து கொண்டுருந்த கால கட்டத்தில் நான் மிகவும் மனமுடைந்திருந்தேன். இந்த சூழலில் அதாவது 2010-ல் மிகவும் மனமுடைந்து தற்கொலை மனப்பான்மையில் இருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக வெற்றி மாறன் அழைத்து நடிக்கும்படி சொன்னார். எனக்குத்தயக்கமாக இருந்தது. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. வாழ்க்கையில் மனைவியின் முன்பாகவே நடித்து இருக்கின்றேன். எனது தயக்கத்தைப் பார்த்து வ…
-
- 22 replies
- 1.7k views
-
-
வட்டார மொழிகளின் அரசியலை எதிர்கொள்ளுதல் by vithaiAugust 1, 2021 பன்னிரண்டு வயது வரை யாழ்ப்பாணத் தமிழைப் பேசக்கூடிய கிராமச்சூழலில் வளர்ந்தோம். ‘கெற்றப்போல்கள்’ எனப்படும் கவண்களால் குருவிகளை அடிப்பது விளையாட்டு, பொழுதுபோக்கு. ஊரில் வாய்மொழியாக வந்து சேர்ந்த நம்பிக்கை ஒன்றிருந்தது. ‘தோட்டக்காட்டான் குருவியடிச்சு ரத்தத்தை கெற்றப்போலில் தடவினால் நல்லா அடிக்கும்’. அந்தக் குருவி கத்தும் ஓசை ஒருவகை இரட்டைச் சந்தத்தைக் கொண்டிருக்கும் நாங்கள் அதன் சத்தத்தைப் பின்பற்றி அவ் இரட்டைச் சத்தத்தை ’தோட்டக்காட்டான் – வாடா பாப்பம்’ என்று கூவிக்கொண்டே குருவியைத்தேடி அடிப்போம். இது வட்டாரப் பேச்சு மொழியின் மொழியிலும் மன அமைப்பிலும் பிள்ளைகளுக்கு சமூகம் வழங்கியிருக்க கூடிய மொழி…
-
- 0 replies
- 459 views
-
-
நான் ஒரு இலக்கியவாதியே இல்லை-நேர்காணல்-சாத்திரி கோமகன் : அதென்ன சாத்திரி ………. ? சாத்திரி : அது என்னுடைய நண்பன் ஒருவனின் புனை பெயர்தான். திருகோணமலை குச்சவெளி கரையோர கிராமத்தை சேர்ந்தவன். சிறந்த மாலுமி. சிறந்த போராளி நிச்சயம் ஒரு சிறந்த சமையல்காரனாக இருப்பான் என்று சொல்வார்கள், அதே போல அவனும் சிறந்த சமையல்காரன். ஒரு கடல் விபத்தில் இறந்து போய் விட்டான். அந்த சம்பவமோ அவன் பெயர் விபரமோ வெளியே தெரிய வந்திருக்கவில்லை. அப்படிப் பலர் இருக்கிறார்கள். பின்னர் நான் எழுத தொடங்கியபோது அவனின் புனை பெயரை எனதாக்கிக் கொண்டேன். ஓவியம் : எஸ். நளீம் இன்னுமொரு காரணமும் உண்டு: பொதுவாக எமது மக்கள் ஒரு செயலை அல்லது நிகழ்வை செய்ய முன்னர் ஊரிலுள்ள சாத்திரியார் ஒருவரிடம் ப…
-
- 29 replies
- 2.4k views
- 1 follower
-
-
கல்வலைக்கோடுகள் July 19, 2021 எனக்கு மூன்று வயதிருக்கும், அன்றெல்லாம் எங்கள் வீட்டில் ஆனந்தவிகடன், குமுதம், கல்கி, மலையாள மனோரமா, மாத்ருபூமி ஆகியவற்றை வாங்குவார்கள். அனேகமாக தினமும் ஒரு வார இதழ். அன்று வந்தது விகடன் தீபாவளி மலர். பேப்பர்போடும் மாமாவிடமிருந்து இதழை வாங்கி கொண்டுவந்து ஒட்டுத்திண்ணையில் வைத்து பிரித்து படம்பார்க்கலானேன். நடுப்பக்கத்தில் நான் கண்ட ஒரு கோட்டோவியம் இன்றும் மூச்சடைக்கவைக்கும் துல்லியத்துடன் நினைவிருக்கிறது. சில்பி வரைந்த அகோரவீரபத்ரன். அதன்பின் பலமுறை நான் மதுரை சென்று அகோரவீரபத்ரரின் முன் நின்றிருக்கிறேன். உக்கிரமும் குழைவும், கொடூரமும் அருளும் ஒன்றே என முயங்கும் அச்சிற்ப அற்புதம் ஒரு கனவு அழியாமல் அசைவிலாமல் நிலைகொண்டிருப்பதுப…
-
- 0 replies
- 738 views
-
-
புனைவின் பல வாயில்கள் – ஆர். அபிலாஷ் July 19, 2021 - ஆர்.அபிலாஷ் · இலக்கியம் அ. முத்துலிங்கம் ~ ஜெயமோகன் நேர்காணலில் இருந்து ஒரு கேள்வியும் பதிலும் பகுதியை கார்ல் மார்க்ஸ் தன் பேஸ்புக் பக்கத்தில் எடுத்துப் போட்டு சிலாகித்திருந்திருந்தார். அதில் அ.முத்துலிங்கத்தின் எழுத்தில் வரும் நுட்பமான அவதானிப்புகளை பாராட்டி விட்டு, அவரது எழுத்தில் ஏன் படிமங்கள் வருவதில்லை என ஜெயமோகன் வினவுகிறார். அதற்கு முத்துலிங்கம் சொல்லும் பதிலுக்கு செல்லும் முன் அதென்ன ஜெ.மோ சொல்லுகிற “படிமம்” என நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அசோகமித்திரனின் “தண்ணீர்” நாவலில் நீர் ஒரு குறியீடு. நீரின் கழிவு கலந்த தன்மை, எதையும் தன்னில் கலந்து அழுக்காகும் போதும் ஓரிடத்தில் நின்று விடாமல் ஓட…
-
- 0 replies
- 699 views
-
-
அ.முத்துலிங்கமும் ஈழப்போரும் July 12, 2021 அன்புள்ள ஜெ, சமீபத்தில் அ.முத்துலிங்கம் அவர்களின் சிறுகதைகள், கட்டுரைகள் தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன். ஈழ எழுத்தாளர்களில் அவருடைய நடை வித்தியாசமானது. பல நாடுகளில் வேலை நிமித்தம் அவர் வசித்ததால் அந்த நாடுகளின் மண் சார்ந்தும் எழுதியிருக்கிறார். ஆனால் என் நண்பர்களில் சிலர் அவர் மீது ஒரு விமர்சனம் வைக்கின்றனர். ஈழப் பிரச்சினைகளில் அவர் மேம்போக்காக எழுதியிருக்கிறார் என்றும் தீவிர ஈழ எழுத்தாளர்களான ஷோபாசக்தி, வாசு முருகவேள், தமிழ்நதி போன்றவர்களை போல் போர் பற்றியும் ஈழ பிரச்சினை குறித்தும் தீவிரமாக எழுதவில்லை என்கின்றனர். என் கேள்வி ஒரு எழுத்தாளன் தன் மண் சார்ந்த பிரச்சினைகளை கட்டாயம் எழுதியே தீர வேண்டுமா?…
-
- 1 reply
- 488 views
-
-
https://youtu.be/Hs77KPdoSWk மாதாந்தம் நடைபெறும் இந்த நேரலை நிகழச்சியை உலகெங்கும் உள்ள தமிழர்களின் நிகழ்வுகளை எடுத்து லண்டனில் இருந்து தொகுத்து வழங்குகிறார்கள்.
-
- 0 replies
- 799 views
- 1 follower
-
-
இனப்படுகொலையைச் சந்தித்த இனத்தைச் சார்ந்த ஒருவனின் கண்களிற்கு குருதிச் சிவப்புநிற மாலைச் சூரியனை பார்க்க நேர்கையில் எத்தகையை காட்சிகளை அது தோற்றுவிக்கும்? என்பதனை வரிகளில் நான் எழுதி இருக்கிறேன், மகாகலைஞன் சித்தன் ஜெயமூர்த்தி இசையமைத்து பாடியிருக்கிறார், நந்திக்கடற்கரையில் மெளனித்துப் போன வீரயுகவரலாற்றை மாலைச் சூரியனின் சிவப்பு நிறத்திற்குள்ளால் பார்க்கிறேன்..
-
- 6 replies
- 873 views
- 1 follower
-
-
மஹாகவியின் கிராமம் ஜூன் 27, 2021 –எம்.ஏ.நுஃமான் இக்கட்டுரை செங்கதிரோனை ஆசிரியராக் கொண்டு கொழும்பு தமிழ் சங்க மாதாந்த ஏடாக வெளிவந்த ‘ஓலை’ சஞ்சிகையின் 17வது இதழில் (2003) வெளிவந்தது. மஹாகவியின் 50 வது நினைவு தினத்தையொட்டி (ஜுன் 20) இக்கட்டுரை வெளியிடப்படுகின்றது. மஹாகவியின் பெரும்பாலான கவிதைகள் யாழ்ப்பாணக் கிராமிய வாழ்வைக் கருப்பொருளாகக் கொண்டவை. கிராமியத்தை மஹாகவிபோல் தமிழ்க் கவிதையில் கொண்டுவந்த பிறிதொரு கவிஞன் இல்லை எனலாம். இந்த வகையில் இவருக்கு அண்மையில் நிற்கக்கூடியவர் நீலாவணன் ஒருவர்தான். ஆனால், கிராமியத்தைப் பொறுத்தவரை அளவிலும் தன்மையிலும் மஹாகவி அவரை மிஞ்சி நிற்கிறார். மஹாகவியின் முக்கியமான பெரும்பாலான கவிதைகளில் யாழ்ப்பாணக் கிராமப்புற வாழ…
-
- 0 replies
- 885 views
-
-
சீனக்கவிதைகள் குறித்த விரிவான உரை ஒன்றை மொழிபெயர்ப்பாளர் ரெட் பைன் நிகழ்த்தியிருக்கிறார். இவரது இயற்பெயர் பில் போர்ட்டர். (Bill Porter/Red Pine,) அமெரிக்கரான இவர் ஜென் குருவாகச் செயல்பட்டு வருகிறார். இவரது உரை தற்போது இணையத்தில் காணக்கிடைக்கிறது. பண்டைய சீனக்கவிதைகள் மற்றும் ஞானநூல்களின் மொழிபெயர்ப்பாளரான இவர் வரலாற்றில் சீனக்கவிதைகளின் இடம் குறித்த சிறந்த அறிமுகத்தைத் தருகிறார். Burton Watson மொழியாக்கம் செய்த சீனக்கவிதைகளை வாசித்திருக்கிறேன். அவரது தொடர்ச்சியை போலவே ரெட் பைனும் செயல்படுகிறார். இந்த உரையில் சீனவரலாற்றுக்கும் கவிதை மரபுக்குமான தொடர்பு, சீனாவில் விவசாயிகள் எவ்வாறு கவிஞர்களைக் கொண்டாடினார்கள். கவிஞர்களுக்கான நினைவிடத்தை உருவாக்கினார்கள். ஆயிரம…
-
- 0 replies
- 993 views
-
-
நாம் எதனால் வாசிப்பதில்லை? written by செல்வேந்திரன்June 24, 2021 வாசிப்பதன் பயன்களைப் பற்றி பள்ளியிலும் கல்லூரியிலும் தொடர்ச்சியாக அறிவுரைகள் வழங்கப்பட்டாலும் நம்மால் ஏன் வாசிக்க முடியவில்லை? விரிவான ஆய்வுகள் வாசிப்பைத் தடை செய்யும் சில காரணிகளைப் பட்டியலிடுகின்றன. குடும்பச் சூழல் – உண்மையில் பல குடும்பங்களில் வாசிப்பதற்கான சூழலே இருப்பதில்லை. வறுமை அல்லது எந்நேரமும் பூசலிடுவது அல்லது குடும்பத் தொழில் காரணமாக வாசிப்பதற்கான உளநிலைகள் அமையாமல் இருப்பது. தமிழகத்தில் இருபது சதவீத மாணவர்கள் கல்லூரிக்கு வருவதே கடுமையான வறுமைக்கு மத்தியில்தான். சில மாணவர்கள் பகுதி நேரமாக வேலை பார்த்தால்தான் கல்வியைத் தொடர முடியும் நிலையில் உள்ளார்கள். அவர்களால், உள்ளபடியே வாசிக்க இயல…
-
- 28 replies
- 2.8k views
-