இலக்கியமும் இசையும்
இலக்கிய கட்டுரைகள் | நேர்காணல்கள் | கர்நாடக இசை | நவீன இசை
இலக்கியமும் இசையும் பகுதியில் இலக்கிய கட்டுரைகள், நேர்காணல்கள், கர்நாடக இசை, நவீன இசை சம்பந்தமான தரமானதும் அவசியமானதுமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இலக்கியக் கட்டுரைகள், படைப்பாளிகளின் நேர்காணல்கள், கர்நாடக இசை, நவீன இசை பற்றிய தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
204 topics in this forum
-
‘மாஸ்டர்’ - ஜெயமோகன் கதைகளை தொடராக வெளியிடத் தொடங்கி அதைப்பற்றி சிலவற்றை பேசியபோது எனக்கு வந்த கடிதங்களில் முக்கால்பங்கு வசைகளும் ஏளனங்களும்தான். பெரும்பாலும் எங்காவது வசைகளை எழுதி அதை எனக்கு நகல் அனுப்புவது. போலி முகவரிகளிலிருந்து வரும் மின்னஞ்சல்கள் மிகுதி. ஏறத்தாழ ஆயிரம் கடிதங்கள் என்றால் ஆச்சரியப்பட மாட்டீர்கள். அவர்களில் கால்வாசிப்பேர் இளைஞர்கள். ஒரு அவர்களுக்காக மட்டும் சில சொல்ல விரும்புகிறேன். வசையாளர் அல்லது ஏளனம் செய்பவர்களைப்பற்றிய ஆச்சரியம் என்பது பலர் தங்களுடன் என்னை ஒப்பிட்டுக்கொள்வதுதான். எனக்கு வரும் கடிதங்களில் நேர் பாதியின் ஆதாரமனநிலை அதுதான். ‘அதெப்டி, நாங்கள்லாம் அப்டி இல்லியே” என்று. அப்படி ஒப்பிட்டுக்கொள்பவர்களை பார்க்கிறேன், சாதாரணமானவ…
-
- 1 reply
- 893 views
-
-
"இந்த மண் எங்களின் சொந்த மண்" பாடல் குறுந்தட்டு வெளியீடு 13.03.21 அன்று சென்னையில் நடைபெற்றது. பாடல்களுக்கான இசையை மண்வாசக் கலைஞர் முனைவர் சித்தன் ஜெயமூர்த்தி அவர்கள் பார்த்திருக்கிறார். இந்நிகழ்வில் தமிழின உணர்வாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். செங்கோல் படைப்பகத்தின் அமைப்பாளர் சுதன் தலைவனின் தம்பி அவர்கள் தயாரிப்பில் உருவாகியிருக்கிறது. 1990 வெளியான கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் இந்த மண் எங்களின் சொந்த மண் பாடலை தற்காலத்துக்கு ஏற்ற வடிவில் மீளுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இக்குறுந்தட்டில் மேலும் எட்டுப் பாடல்கள் வெளியாகியுள்ளது. தமிழகக் கவிஞர்கள் இளையகம்பன் , கவிபாரதி , ஆகியோருடன் எங்கள் கவிஞர்கள் பேராசிரியர் திருக்குமரன் , அகத…
-
- 1 reply
- 1.2k views
-
-
பழைய நேரலைக் காட்சி என்றுமே எனக்கு பிடித்ததால் சிலர் பகிர்ந்ததால் நான் பகிர்ந்திட்டேன்...
-
- 1 reply
- 858 views
-
-
வளர்கலை: வயலின்(Violin) – பிடில்(Fiddle) June 17, 2025 — மங்கள கௌரி விராஹநாதன் (இசைப்பட்டதாரி ஆசிரியை)— ஐரோப்பிய சங்கீதத்திலிருந்து நமக்கு கிடைத்துளள ஒரு இசைக்கருவியே வயலினாகும். இதற்கு பிடில் என்று பெயருண்டு. பண்டைக் காலத்தில் தனூர் வீணை என்ற பெயருடன் விளங்கியது எனவும் பின் வயலின் என்ற உருவில் அமைந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேல் நாட்டுக்கும் கீழைத்தேயத்தும் பொருத்தமான நரம்புக் கருவியாகும். ஓர் இடத்திலிருந்து இன்னோரிடத்திற்கு இலகுவாக எடுத்துச் செல்லக்கூடிய தந்தி வாத்தியமாகும். வயலின், வயலின் செலோ, வயோலா ஆகியன மேல்நாட்டு இசைக்கருவிகளென பொதுவாகக் கூறப்பட்டு வந்துள்ளது. (1786 – 1858) ஆண்டுகளில் கீழ்நாட்டில் வாசிக்கப்பட்டது. பழைய காலத்து பிடில்கள் பல்வேறு வடிவ…
-
- 1 reply
- 247 views
-
-
மஜ்னு முதல் மாமாக்குட்டி வரை சி.சரவணகார்த்திகேயன் காதல் - எத்தனை இனிமை ததும்பும் ஒரு சொல்! எவ்வளவு இன்ப மயமான ஒரு செயல்! காதலின் ஆதார குணம் பரஸ்பரத் தன்மை. ஆனால் காதல் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரி அனுபவத்தை அளிக்கிறதா? ஆணின் காதலும் பெண்ணின் காதலும் ஒன்று போலவேதான் நமது சமூகத்தால் அணுகப்படுகிறதா? காதலில் இருக்கிறதா சமத்துவம்? வரலாறு நெடுகிலும், புராணப் பக்கங்களிலும், இலக்கிய இடுக்குகளிலும் ஆண்களின் காதலானது கொண்டாடப்படாதது மட்டுமின்றி கண்டுகொள்ளப்படாதது மட்டுமல்லாது, கேலிக்கும் கிண்டலுக்கும் வசைக்கும் வெறுப்புக்கும் உள்ளாகியேதான் வந்திருக்கிறது. ஆணின் காதல் என்பது அவனது இதர வெற்றிகளைக் காட்டி அடையும் ஒரு பரிசாகவே காலங்காலமாகவே இ…
-
-
- 1 reply
- 376 views
-
-
நேர்காணல் – அ.முத்துலிங்கம் | யாவரும்.காம் April 30, 2020 போர் எங்களிடம் நிரந்தரமான காயத்தை உண்டுபண்ணி விட்டது – அ. முத்துலிங்கம் கேள்விகள் – அகர முதல்வன் அ.முத்துலிங்கம் ஈழ எழுத்தாளர்களில் மிகவும் தனித்துவமானவர்.கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்கிறார். தமிழ் இலக்கியவுலகில் அவருடைய எழுத்துக்களுக்கு இருக்கும் வாசகப்பரப்பு பெரிது. வினோதமான விவரிப்புக்களும்,நுண்மையான உவமைகளும் கொண்டது அவரின் சிறுகதைகள். “அக்கா” என்ற தனது முதல் கதைத்தொகுதியின் மூலமே வெகுவான கவனத்தை ஈர்த்தவர்.ஆனந்த விகடன் இதழில் “கடவுள் தொடங்கிய இடம்” என்ற நாவலை தொடர்கதையாக எழுதி பெரும் வாசக விவாதங்களையும் உரையாடல்களையும் உண்டுபண்ணியவர்.இவருடைய புகழ்பெற்ற கதைகள் ஏராளம். உங்கள் சிறுகதைகளின் வாசகன் …
-
- 1 reply
- 947 views
-
-
தமிழ் மின்னிலக்கியம் - அலைபேசி எழுத்தும் கிண்டில் வாசிப்பும் சுரேஷ் பிரதீப் எழுதுவதற்கான உந்துதல் எந்தச் சூழலிலும் வரலாம் என்ற நம்பிக்கை பதின்மத்திலேயே என்னுள் ஆழமாக பதிந்துவிட்டது. பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது ஒரு கதையை கணித குறிப்பேட்டின் கடைசி மூன்று பக்கங்களில் எழுதினேன். அதைப்படித்த நண்பனொருவன் என்னை அப்போது எழுத்தாளன் என்று ஒப்புக் கொண்டான். வகுப்பு பெண்களிடம் அந்தக் கதையை காட்டப்போவதாக அடிக்கடி பாவனையாக மிரட்டுவான். நானும் "காட்டிடாதடா" என்பது போல பதறுவேன். இருந்தாலும் உள்ளுக்குள் அந்தக்கதையை எங்கள் வகுப்பிலேயே அதிகமாக பெண் தோழிகளுடைய அவன் கொண்டுபோய் அவர்களிடம் காண்பிக்கமாட்டானா என்றிருக்கும். பள்ளி முடியும் வரை அவன் அந்தக் கதையை காண்பிக்கவில்லை. கல…
-
- 1 reply
- 1.1k views
-
-
பொதுரசனைச் செவ்வியல் உருவாகும் தருணம் jeyamohanNovember 7, 2025 அண்மையில் ஒரு துயரமான மனநிலையில் புதுச்சேரியில் இருந்து கோவைக்கு காரில் வந்து கொண்டிருந்தபோது எண்ணங்களை மாற்றும் பொருட்டு இசையை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். வெவ்வேறு கவிஞர்கள் முருகனைப் பற்றி எழுதிய பாடல்களைப் பற்றி பேச்சு சென்றது. பூவை செங்குட்டுவன் எப்படி ஒரு பக்தி கவிஞர் ஆனார் என்பதை அவர் ஒரு உரையாடலில் சொன்னதை நான் நினைவு கூர்ந்தேன். 2006ல் அவர் இளையராஜாவை சந்திக்க வரும்போது ஒருமுறை சந்தித்திருக்கிறேன். இளையராஜா அவரை ஒரு முனிவரை எதிர் வருவது போல வணங்கி எதிர்கொள்வதை பார்த்தேன். அதன் பிறகு தான் அவர் எவர் என்று விசாரித்து தெரிந்து கொண்டேன். தமிழ் விக்கியில் அவரைப் பற்றிய ஒரு பதிவு போடும்போது மீண்டும் அவருடை…
-
- 1 reply
- 121 views
-
-
படைப்பே முதல். படைப்பாளியே முதல்வன் என்று பேச நமது விமர்சகர்கள் முன்வரவில்லை: தெளிவத்தை ஜோசப் – அகழ் இலங்கையின் மலையக இலக்கிய முன்னோடி என்று ‘தெளிவத்தை ஜோசப்பை’ தயக்கமின்றிச் சொல்லலாம். மலையக மக்களின் வாழ்வியலை பிரச்சாரம் இன்றி முற்போக்கு அம்சத்துடன் எழுதியவர் அவர். மலையக சமூகத்தில் ஊடுருவியிருந்த சுரண்டலும், ஒடுக்குமுறையும் அவரது புனைவுலகத்தின் அடிநாதமாக ஒலித்தன. அவரது காதாமந்தர்கள் பெரும் தத்தளிப்பு சிக்கல் கொண்டவர்கள் அல்ல. மாறாக எளிய அன்றாட பிரச்சினைகளில் சிக்கி அழுத்தப்படுபவர்கள். தெளிவத்தை ஜோசப்பின் படைப்புலகம் என்பது எளிய மனிதர்களின் அன்றாடச் சுமையின் துயரம்தான். சிலசமயம் அந்தத் துயரில் ஒளி ஒரு கீற்றாக வெளிப்படுகிறது. எந்தவித கட்சி சார்போ, கோட்பாடு சார்ந்த…
-
- 1 reply
- 1.2k views
-
-
இசையில் நனைந்த லண்டன்… சிம்பொனி அரங்கேற்றிய இளையராஜா 9 Mar 2025, 7:34 AM லண்டனில் இசையமைப்பாளர் இளையராஜா தனது நீண்ட நாள் கனவான சிம்பொனியை இந்திய நேரப்படி இன்று (மார்ச் 9) நள்ளிரவு 12.30 மணிக்கு அரங்கேற்றினார். கடந்த ஆண்டு, தான் சிம்பொனி எழுதி வருவதாகவும் விரைவில் அதனை அரங்கேற்ற உள்ளதாகவும் இளையராஜா தனது ரசிகர்களுக்கு அறிவித்தார். இதற்காக இளையராஜா முழு மூச்சில் தீவிரமாக பணியாற்றி வந்தார். இந்தநிலையில், லண்டனில் சிம்பொனி அரங்கேற்றுவதற்கு முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட அரசியல் மற்றும…
-
- 1 reply
- 194 views
-
-
அகதிகளுக்கான பைபிளை எழுதுகிறேன் - ஷோபாசக்தி நேர்காணல் இருபது வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்தும் எழுத்தில் இயங்கி வரும் நீங்கள்; தற்காலஇலக்கியப் போக்குகளால் சலிப்படைகிறீர்களா? சலிப்பு என்பதற்கு என் வாழ்வின் எந்தக் கட்டத்திலும் இடமே கிடையாது. சலிப்பையோ, விரக்தியையோ, உளச் சோம்பலையோ ஒருபோதுமே நான் உணர்ந்ததில்லை. கற்பனைத் திறன் உள்ளவனுடைய வாழ்க்கை வேறு. உலகம் வேறு. அவனுக்கான ஒழுங்குகளும் பழக்கவழக்கங்களும் ஒழுக்கமும் வேறு. நான் அங்கேயேதான் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறேன். பலரால் மகிழ்ச்சியை அடையத்தான் முடியும். எனக்கு அதை உருவாக்கவே தெரியும். மகிழ்ச்சி என் சுண்டுவிரல் அசைவுக்காகக் காத்திருக்கும் நாய்க்குட்டி. எனவே வாழ்வின் எந்தக் கட்டத்திலும் என்னை எதிர்மறை …
-
- 1 reply
- 729 views
-
-
இலக்கியம் என்பது தான்தோன்றித்தனமாக வருவதில்லை: சேனன் உரையாடல் அனோஜன் பாலகிருஷ்ணன் லெயிட்டஸ்டோனில் அமைத்திருக்கும் Alfred Hitchcock பப்பில் என்னை மாலை சந்திப்பதாக சேனன் சொல்லியிருந்தார். போய்ச் சேர்ந்தபோது கறுத்த குளிரங்கியை அணிந்தவாறு கடும் களைப்புடன் அவருடைய வேலைத் தளத்திலிருந்து வந்து சேர்ந்திருந்தார். Alfred Hitchcock இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவுக்கு சென்று திரைப்படங்களை இயக்கியவர். அவர் எடுத்த சைக்கோ திரைப்படம் பெரும் புகழ்பெற்றது. அவர் சிறுவயதில் வளர்ந்த வீட்டைத்தான் விடுதியாக மாற்றியிருந்தார்கள். அந்த விடுதியில் இரண்டு கின்னஸ் ஸ்டவுட் பியரை ஓடர் செய்துவிட்டு வெளியே வந்து அமர்ந்தோம். வெளியே குளிர் காற்று இதமாக வீசிக்கொண்டிருந்தது. ச…
-
- 1 reply
- 811 views
-
-
அ.முத்துலிங்கமும் ஈழப்போரும் July 12, 2021 அன்புள்ள ஜெ, சமீபத்தில் அ.முத்துலிங்கம் அவர்களின் சிறுகதைகள், கட்டுரைகள் தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன். ஈழ எழுத்தாளர்களில் அவருடைய நடை வித்தியாசமானது. பல நாடுகளில் வேலை நிமித்தம் அவர் வசித்ததால் அந்த நாடுகளின் மண் சார்ந்தும் எழுதியிருக்கிறார். ஆனால் என் நண்பர்களில் சிலர் அவர் மீது ஒரு விமர்சனம் வைக்கின்றனர். ஈழப் பிரச்சினைகளில் அவர் மேம்போக்காக எழுதியிருக்கிறார் என்றும் தீவிர ஈழ எழுத்தாளர்களான ஷோபாசக்தி, வாசு முருகவேள், தமிழ்நதி போன்றவர்களை போல் போர் பற்றியும் ஈழ பிரச்சினை குறித்தும் தீவிரமாக எழுதவில்லை என்கின்றனர். என் கேள்வி ஒரு எழுத்தாளன் தன் மண் சார்ந்த பிரச்சினைகளை கட்டாயம் எழுதியே தீர வேண்டுமா?…
-
- 1 reply
- 488 views
-
-
எழுதுவது எப்படி? சொல்கிறார்கள் உலக எழுத்தாளர்கள்! எஸ்.அப்துல் மஜீத் ஜார்ஜ் ஆர்வல் (George Orwell): என்னைப் பொருத்தவரையில் எழுதுவதற்கு நான்கு விஷயங்கள் துணைபுரிகின்றன. அது ஒவ்வொரு எழுத்தாளருக்கும், அவரவர் வாழும் இடத்துக்கும் காலத்திற்கும் ஏற்றவாறு மாறுபடும். அவை: 1. ஈகோ: புத்திசாலியாக இருக்க விழைவது, தன்னைப் பற்றி பிறர் பேச வேண்டும் என எண்ணுவது, தான் இறந்த பின்னும் நினைவுகூரப்பட வேண்டும் என நினைப்பது, சிறுவயதில் தாழ்த்தியவர்கள் முன் உயர்ந்து வாழ நினைப்பது… இப்படி! எழுத்தாளர்கள் மட்டுமில்லாது அறிவியலர்கள், கலைஞர்கள், அரசியலர்கள், வழக்குரைஞர்கள், படை வீரர்கள் மற்றும் தொழில்முனைவோர்களிடமும் இத்தகைய தன்மையைக் காணலாம். மனிதர்களில் பெரும்பாலானவர்கள…
-
- 1 reply
- 947 views
-
-
யுத்தம் கதைகளை உருவாக்கி இரகசியமாக வைத்திருக்கிறது March 2, 2023 ஷோபாசக்தி படைப்பு தகவு பிப்ரவரி -2023 இதழில் சுருக்கப்பட்டு வெளியாகியுள்ள நேர்காணலின் முழுமையான வடிவம் இங்கே. நேர்கண்டவர் :அம்மு ராகவ் -சினிமா, இலக்கியம், போராளி இவற்றில் எந்தவொன்றில் ஷோபாசக்தி நிறைவு பெறுகிறார்? முதலில், நான் போராளி இல்லை என்பதை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். என்னுடைய பதின்ம வயதுகளில் நான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஆயுதப் பயிற்சி பெற்ற உறுப்பினனாக இருந்தேன். ஆனால், சனநாயக மத்தியத்துவமற்ற, இறுக்கமான அந்த அமைப்பில் தலைமையின் எண்ணங்களையும் கட்டளைகளையும் நிறைவேற்றும் ஆயிரக்கணக்கானோரில் நானும் ஒருவன் மட்டுமே. விசுவாசத்தாலும் இயக்கக் கட்டுப்பாடு என்ற கா…
-
- 1 reply
- 945 views
-
-
இளையராஜாவும் சினிமாவுக்குப் போன சித்தாளும் "எனது எழுத்துக்கள் எல்லாமே எவர் எவர் மனத்தையோ உறுத்தும். அந்த உறுத்தல் நல்லது. அதற்கு நானா பொறுப்பு? 'பொழுதுபோக்கு, கொஞ்சம் நேரம் மகிழ்ந்திருத்தல்' என்ற ஓட்டை வாதங்களையே இவர்கள் ஓயாமல் பதிலாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நம் 'பொழுதுபோக்கும்' 'கொஞ்சம் நேரம் மகிழ்ந்திருத்தலும்' ஏன் இப்படிச் சீரழிந்து கிடக்கிறது என்றும் இதில் சிக்காமல் உயர்வு காண வேண்டும் என்றும் ஒரு சிலருக்கேனும் தோன்றுகிறபோது அதற்காவது மரியாதை தர வேண்டாமா?" தமிழகமே எம்ஜியார் எனும் மந்திரத்தால் கட்டுண்டு கிடந்த போது சமூகத்தின் மீது பேரன்பு கொண்ட கலைஞனாக ஞானாவேசத்தோடு, ஆனால் மிகக் குன்றிய இலக்கியத் தரத்தோடு, ஜெயகாந்தன் எழுதிய 'சினிமாவுக்குப் போன சித்தாளு' கத…
-
- 1 reply
- 808 views
-
-
ஆயிரத்தொரு சொற்கள் June 14, 2019 ஷோபாசக்தி நான் ஒன்றரை வயதிலேயே நன்றாகப் பேசத் தொடங்கிவிட்டதை, எனது அம்மா சரியாக ஞாபகம் வைத்திருக்கிறார். ஆனால் நான் எத்தனை வயதில் எழுதத் தொடங்கினேன் என்பது அவருக்கோ எனக்கோ சரியாக ஞாபகமில்லை. பள்ளிப் பருவத்திலிருந்தே எழுதிக்கொண்டிருக்கிறேன். பாடசாலையில் நாங்களே நடிக்கும் ஓரங்க நாடகங்களைத்தான் முதலில் எழுதினேன். 1981 இனவன்முறையில், எங்கள் கிராமத்திலிருந்து நான்கு கிலோ மீற்றர்கள் தூரத்திலிருந்த யாழ்ப்பாணப் பொது நூலகம் இலங்கை அமைச்சர்களின் உத்தரவின்பேரில் போலிஸாரால் முற்றாக எரியூட்டப்பட்டபோது எனக்குப் பதின்மூன்று வயது. 90 000 நூல்களும் பழந்தமிழ் ஓலைச் சுவடிகளும் வானம் நோக்கி எரியும் சுவாலையை, அந்த இரவில் எங்கள் கிராமத்தின் கட…
-
- 1 reply
- 923 views
-
-
பாலுணர்வை அறிதலும் எழுதுதலும் - ஜெயமோகன் ஹாவ்லக் எல்லிஸ் சமீபத்தில் ஓர் இளம் எழுத்தாளர் எழுதிய நாவலை வாசித்தேன். பாலியல் நிகழ்ச்சிகளை விரிவாக எழுதியிருந்தார். ‘துணிந்து’ எழுதியிருப்பதாக அவர் எண்ணிக்கொண்டிருந்திருக்கலாம். இதற்குமுன் இல்லாதவகையில் எழுதியிருப்பதாக பெருமிதம் கொண்டிருக்கவும்கூடும். இளம்வாசகர்கள் சிலர் அதை வாசித்து “ஆகா!” போட்டிருக்கலாம். அப்படி ஒருவர் கவனம் பெற்றுவிட்டால் பலர் உருவாகி வருகிறார்கள். தமிழ்நாட்டில் பாலியல்வரட்சி மிகுதி. ஆகவே என்றுமே பாலியலெழுத்துக்கு வாசகர்கள் அதிகம். அத்துடன் பெரும்பாலான வாசகர்கள் பாலுறவு மட்டுமே வாழ்க்கை என எண்ணிக்கொண்டிருக்கும் முதிரா இளமையில் வாசிக்க வருகிறார்கள். அவர்கள் இவ்வகை எழுத்துக்களையே தெரிவுசெய்கி…
-
- 1 reply
- 1.7k views
-
-
தமிழக கவிஞர் சபரிநாதனுக்கு இந்திய சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது : June 14, 2019 சாகித்ய அகாடமி வழங்கும் யுவபுரஸ்கார் மற்றும் பால யுவ புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடமும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருதை வழங்கி வருகிறது. இந்த வருடத்திற்கான யுவபுரஸ்கார் விருது வால் கவிதைத் தொகுப்புக்காக கவிஞர் சபரிநாதனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தனது `வால்’ கவிதைத் தொகுப்பின் மூலம் பரவலாக அறியப்பட்டவர் சபரிநாதன். கோவில்பட்டியைச் சேர்ந்தவர். தமிழ் நவீனக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். இதேவேளை பால யுவ புரஸ்கார் விருது மறைந்த எழுத்தாளர் அழ.வள்ளியப்பாவின் மகளும், எழுத்தாளருமான தேவி நாச்ச…
-
- 1 reply
- 895 views
-
-
``காதலாலும் சாதியாலும் மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கிறேன் ..." கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் வாழ்வு சார்ந்த தோல்விகள், மனஅழுத்தங்களை எதிர் கொள்ளும்போதெல்லாம் எழுத்து, கவிதை, இயற்கை, ஆர்வம், காதல் என தப்பிக்க வேறு ஏதாவது ஒரு கதவு திறந்தது. ஒரு துறை சார்ந்து மட்டும் வாழ்பவர்களுக்கு இந்த வாய்ப்புகள் குறைவு என்றே நினைக்கிறேன். வ.ஐ.ச.ஜெயபாலன் ( கிராபியென் ப்ளாக் ) வ.ஐ.ச.ஜெயபாலன்... ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் மற்றும் கவிஞர். அவர் எழுதிய ‘சூரியனோடு பேசுதல்’, `நமக்கென்றொரு புல்வெளி’, `ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்’, `ஒரு அகதியின் பாடல்’, `வ.ஐ.ச. ஜெயபாலன் கவிதைகள்’ உள்ளிட்ட படைப்புகள் மிக முக்கியமானவை. …
-
- 1 reply
- 998 views
-
-
பின்லாந்தின் நாட்டுப்புறக் காவியக் கதைப்பாடல் கலேவலா: அஸ்கோ பார்பொலா written by கால.சுப்ரமணியம்August 29, 2021 நாட்டுப்புறவியல் துறை உயர்நிலையை அடைந்த நாடுகளில் பின்லாந்து முதன்மையானது. இந்த உச்சத்தை அந்த நாட்டு ஆய்வாளர்கள் தம் தேசியக் கதைப்பாடலான ‘கலேவலா ’ (Kalevala) என்ற வாய்மொழிக் காவியத்தைத் திரட்டிச் செம்மைப்படுத்தி வெளியிட்டதன் மூலம்தான் அடைந்தார்கள் என்றுகூடச் சொல்லலாம். தம் தேசியக் காவியத்தை உலகம் முழுதும் பரப்புவதற்காக நிறைய முயற்சியும் மானிய நிதியுதவிகளும் செய்துள்ளார்கள். அப்படித் தமிழிலும் மிக அட்டகாசமாக அதன் தமிழ் வடிவம் வெளிவந்து எல்லோருக்கும் பெரும்பாலும் இலவசமாக அன்பளிப்பாக விநியோகிக்கப்பட்டது. ஆனால் என்ன துரதிர்ஷடம் என்றால் அதை படித்து இரசிக்க முடி…
-
- 1 reply
- 723 views
-
-
இமையத்திற்கு இயல் விருது! தமிழ் இலக்கியத் தோட்டம், 2018-ஆம் ஆண்டிற்கான வாழ் நாள் சாதனையாளர் இயல் விருதை, 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கி வரும் எழுத்தாளர் இமையத்திற்கு அறிவித்துள்ளது. “தமிழில் இதற்கு இணையாக நாவல் இல்லை” என்று அவரது முதல் நாவலான “கோவேறுக் கழுதைகள்” நூலை தமிழின் முன்னோடி எழுத்தாளர் திரு. சுந்தர ராமசாமி விமர்சித்திருக்கிறார். இந்நாவல் Beasts of Burden என ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. மனித மனங்களின் பல்வேறுபட்ட மனநிலைகளை தன் ஒவ்வொரு புனைவிலும் காத்திரமாக பதிவுசெய்துவரும் இமையம் தமிழ் படைப்பாளிகளில் தவிர்க்க முடியாத ஆளுமையாகவும், சாதி ஆதிக்க மனோபாவத்தை தொடர்ந்து விமர்சித்து வரும் ஒருவராகவும் விளங்குகிறார். இவருடைய…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழக அரசின் இலக்கியவிருதுகள் - ஜெயமோகன் June 5, 2021 புதிய திமுக அரசின் இலக்கியத்துறை சார்ந்த அறிவிப்புகள் பற்றி பல கேள்விகள் வந்தன. ஊடகத்தினரின் கேள்விகளை தவிர்த்துவிட்டேன். அவர்கள் நான் சொல்வதைப் போடமாட்டார்கள். சமூக ஊடகங்களுக்கு வசைபாடுவதற்கு உகந்தவகையில் எதையும் வெட்டி எடுத்துக்கொள்ள தெரியும். இதில் விவாதிப்பவர்கள் ’திமுக அரசு எழுத்தாளர்களை கொண்டாடவில்லை’ என்ற ஒற்றைவரியை வைத்துக்கொண்டு பொத்தாம்பொதுவாகத் தடவித்தடவிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே இவை சார்ந்து மிகத்தெளிவாக பேசப்பட்டவற்றை படிப்பதில்லை. மீண்டும் அதே ஒற்றைவரி உழப்பல்கள். சவடால்கள். தேவதேவன் திமுக அரசு எழுத்தாளர்களைக் கொண்டாடவில்லை என்று எவரும் சொல்லவில்லை. கொண்டாடியிருக்கிறார்…
-
- 1 reply
- 1.1k views
-
-
படத்தின் காப்புரிமை எஸ்.ராமகிருஷ்ணன் /Facebook இந்த ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது எஸ். ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் எழுதி 2015ல் வெளியான ‘சஞ்சாரம்’ நாவலுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. பக்கிரி என்ற பாத்திரத்தின் மூலம் நகரும் இந்த நாவல் நாதஸ்வர இசை, நாதஸ்வர இசைக் கலைஞர்களை அடிப்படையாகக் கொண்டது. பெரிதும் அவர்களது துயரம் குறித்துப் பேசுகிறது. "நாதஸ்வர இசைக் கலைஞ்களில் தஞ்சை மண்டலத்தைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர்கள் பேசப்படும் அளவுக்கு கோவில்பட்டி போன்ற கரிசல் பகுதியைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர்கள் பேசப்படவில்லை. …
-
- 1 reply
- 1.3k views
-
-
புனைவு வாசிப்பு அடிமைப்படுத்துமா? ஜெயமோகன் September 21, 2021 Vincent Van Gogh “The Novel Reader” அன்புள்ள ஜெ, நலம்தானே? என் நண்பர்களில் புத்தகம் வாசிப்பவர்கள் மிகக்குறைவு. அவர்களிலேயேகூட பலர் புனைவுகளை வாசிப்பதில்லை. “இருபத்தஞ்சு வயசு வரை கதை படிக்கிறது ஓக்கே. அதுக்குமேலே வாசிச்சா அவன் தத்தி”என்று என் நண்பன் ஒருவன் சொன்னான், கற்பனைக்கதைகள் வாசிப்பது வெட்டிவேலை என்ற எண்ணம் பலரிடமும் உள்ளது. பொதுஅறிவை அளிக்கும் கட்டுரைநூல்களை வாசிக்கிறோம் என்று சொல்வார்கள். அவர்கள் கட்டுரைநூல்கள் என்று சொல்வது பெரும்பாலும் அரசியல்நூல்கள். இடதுசாரி அரசியல்நூல்கள்தான் அதிகமும். சிலர் சேப்பியன்ஸ் போன்ற நூல்களைப் படிப்பார்கள். ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை வரலாறு போன்…
-
- 1 reply
- 685 views
-