இலக்கியமும் இசையும்
இலக்கிய கட்டுரைகள் | நேர்காணல்கள் | கர்நாடக இசை | நவீன இசை
இலக்கியமும் இசையும் பகுதியில் இலக்கிய கட்டுரைகள், நேர்காணல்கள், கர்நாடக இசை, நவீன இசை சம்பந்தமான தரமானதும் அவசியமானதுமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இலக்கியக் கட்டுரைகள், படைப்பாளிகளின் நேர்காணல்கள், கர்நாடக இசை, நவீன இசை பற்றிய தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
204 topics in this forum
-
சுஜாதா பத்திரிக்கைப் பேராளுமை எஸ்.சங்கரநாராயணன் ஆணாதிக்க சமுதாய அதித சுதந்திரத்துடனும் அங்கீகாரத்துடனும் தானே அமைத்துக்கொண்ட ராஜபாட்டையில் உல்லாச வலம் வந்தார் சுஜாதா. உற்சாகத்துக்கு மறுபெயர்சுஜாதா. அவர் எழுத்தில் அலுப்பைப் பார்க்க முடியாது. சுவாரஸ்யமே எழுத்தின் தாரகமந்திரம் அவருக்கு. சுவாரஸ்யமாக்கும் கவனத்தில் தன்னடையாளம் கூட அவருக்குரெண்டாம்பட்சம் என்று தோன்றுகிறது. கணையாழியில் ஒருவர் அவரை 'எழுத்துலகின்சிலுக்கு,' என்று குறிப்பிட்டார். புனைகதைகளில் அவர் எழுதிக்காட்டிய ஆபாச வசனங்களுக்கு அவரைசொந்தமாக்க முடியாத அளவு நல்ல மனிதராக நட்புபேணுகிறவராகஎளிமையானவராக அவர் இருந்தார். விளம்பரங்களில் சினிமாவில் கொஞ்சூண்டுஆபாசம்…
-
- 0 replies
- 1.1k views
-
-
சுய கண்டடைதல் : கல்பற்றா நாராயணன் தமிழில் : அழகிய மணவாளன் “கண்ணாடி மிக அதிகமான பதிப்புகள் வெளிவந்த பெஸ்ட் செல்லர் ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரதிகள் கொண்ட என்றென்றைக்குமாக வாசிக்கப்படும் நூல் பைபிளைவிட அதிகமாக ஸ்தோத்திரம் செய்யப்பட்ட புனிதமான நூல்.“ (நிழலை கைப்பற்றுதல் – கல்பற்றா நாராயணன்) கண்ணாடிக்கு பச்சைத்தண்ணீரின் நிறம். பிரதிபலித்தல் என்ற ஒரே ஒரு நோக்கத்திற்காக மீண்டும் மீண்டும் உருவாக்கப்படும் நீலநிற நீர்த்தேக்கம் (Now I am a lake mirror- Sylvia Plath). நார்ஸிஸஸ் தன் நீர்ப்பிம்பத்தால் ஈர்க்கப்பட்டு மூழ்கி மறைந்த தடாகம் ஒவ்வொருமுறை நான் கண்ணாடி பார்க்கும்போதும் எழுந்துவருகிறது. மனிதர்கள் அதில் நீந்த…
-
- 0 replies
- 387 views
-
-
செல்வம் அருளானந்தம்- நேர்காணல் திராவிடமணி மே 25, 2025 செல்வம் அருளானந்தம் எனும் இயற்பெயரையுடைய இவர் ‘காலம் செல்வம்’ என்றே இன்று எல்லோராலும் அழைக்கப்பெறுகின்றார். இவர் 1953ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் நாள் யாழ்ப்பாணம் சில்லாலையில் சவேரிமுத்து, திரேசம்மா இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவர் தமது தொடக்கக்கல்வியை சில்லாலை ரோமன் கத்தோலிக்க பாடசாலையிலும், பின்பு புனித ஹென்றி கல்லூரியிலும் முடித்தார். மேலும், பிரான்ஸ் நாட்டில் பாரிஸில் உள்ள செயின்ட் அகஸ்டின் பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பிரெஞ்சு மொழியையும் கற்றுத் தேர்ந்தார். பிற்பாடு கனடாவில், டொரொண்டோவில் உள்ள செயின்ட் டேனியல் கல்லூரியில் நர்சிங் டிப்ளோமா பெற்றுள்ளார். இவர் 1986ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் நாள் தேவராணி என்…
-
- 0 replies
- 144 views
-
-
ஜெயமோகனின் “பத்துலட்சம் காலடிகள்” சிறுகதையை வாசிப்பது எப்படி?- ராஜன் குறை April 30, 2020 - ராஜன் குறை · இலக்கியம் ஓளசேப்பச்சன் கதாபாத்திரம் ரொம்ப குடிக்கிறது. தொடர்ந்து ஏப்பம் விடுகிறது. பலரையும் ஏசுகிறது. யாரையும் பேசவிடாமல் அதுவே பேசிக்கொண்டிருக்கிறது. இதுபோன்ற பாத்திரங்களை ஜெயமோகன் கொஞ்சம் கட்டுக்குள் வைக்க வேண்டும். கதை சொல்லியையும் அந்த பாத்திரத்திற்கு எதிரே உட்கார வைத்த பிறகு சும்மா ஏப்பம் விடுவதை எண்ணிக்கொண்டிருந்தால் சரியாக வராது. ஒளசேப்பச்சனின் அபத்தமான கருத்துக்களை மறுத்து ரெண்டு வார்த்தை பேச வேண்டும். ஒளசேப்பச்சன் உளறுவதையெல்லாம் குறிப்பெடுத்து பதிவுசெய்வதற்கா கதைசொல்லி மற்ற பாத்திரங்களுடன் உட்கார்ந்திருக்கிறான்.…
-
- 0 replies
- 585 views
-
-
-
- 0 replies
- 468 views
-
-
ஜெயமோகனின் பிதற்றல்கள் 1. ஒருமுறை ரஞ்சகுமார் ஜெயமோகனின் புத்தகம் எழுதும் வேகத்தை கண்டு “இதன்ன நாங்கள் காலையில் எழுந்து மலங்கழிப்பதுபோல் இந்தாள் புத்தகங்கள் எழுதிக்கொண்டிருக்கு!” என்று சொன்னதாக எனக்கொரு நண்பர் கூறினார். ரஞ்சகுமார் என்ன கருத்தில் அதைச் சொன்னாரோ தெரியாது, ஆனால் ஜெயமோகன் ஆரம்பத்தில் எழுதிய ‘விஷ்ணுபுரம்’, ‘காடு’, ‘கொற்றவை’ என்பவை போன்ற சிலதைத்தவிர ஏனையவை எல்லாம் மலங்களாய் வெளித்தள்ளப்படும் கழிவுப்பொருட்களே! (உதாரணம்: பாரதம் இரண்டு பாகம்) விந்து கதித்தவன் விலைமாதரிடம் செல்லும் தொழிலே அவர் எழுத்தாகிவிட்டது. 2. இத்தகைய இவருடைய புத்தகங்களை வாசித்து எவரும் விமர்சனம் செய்யாததாலும் அதன் மூலம் இவருக்கு publicity கிடைக்காததாலும், தன்னை ஏதோ விதத்தில் ஒரு…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஜெயமோகன் தமிழ் இலக்கியத்தில் முதலிடத்தில் இருக்கும் எழுத்தாளரா? புள்ளி விபரங்களின் அடிப்படையில் ஓர் ஆய்வு ஜெயமோகன் என்ன எழுதினாலும் அது பெரும் சர்ச்சை ஆகிவிடுகிறது. அவரும் பெரியாரிஸ்டுகள், அம்பேத்கரிஸ்டுகள், இடதுசாரிகள் என்று எல்லாரையும் சகட்டு மேனிக்கு சுழற்றி அடிக்கிறார். அவரை மறுக்க ஒரு பெருங்கூட்டம் புறப்படுகிறது. சில நாட்கள் பின்பு இன்னொரு கட்டுரை, இன்னொறு மறுப்பு. ஓர் எழுத்தாளர் சமூகப்பிரச்சினைகள் குறித்து தனது கருத்துக்களை வெளியிடுவது அவரது உரிமை. ஆனால் ஜெயமோகனின் கருத்துக்களுக்குக் கிடைக்கும் விளம்பரம், அவை தமிழின் முதன்மையான எழுத்தாளரால் வெளியிடப்படுகிறது என்ற பிரச்சாரத்தால்தான். ஜெயமோகன் எப்போதிருந்து தமிழிலக்கியத்தில் முதலிடத்தில் இருக்க…
-
- 2 replies
- 1k views
-
-
ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-1 Posted : வெள்ளிக்கிழமை, ஜுன் 05 , 2020 06:29:10 IST கொரோனா விளைவாக நிலவும் பொது முடக்க காலத்தில் மனம் எதிலும் நிலைகொள்ளாமல் தவித்தது.எதிலும் கவனம் குவியாமல் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தது. ஊரடங்கு காலத்தை விடுமுறையாக மாற்றிக்கொள்ளும் மனமும் இல்லை. தொலைக்காட்சி ,சினிமா என்று கேளிக்கையில் மூழ்கும் உற்சாக மனநிலையும் இல்லை. தொலைக்காட்சி செய்திகள், விவாதங்கள் என்று வேடிக்கை பார்த்து பற்றிக்கொள்ளும் பரபரப்புகளில் கவனம் செல்லவும் ஆர்வமில்லை. கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கைகளைப் பார்த்துவிட்டு நேற்று எத்தனை? இன்று எத்தனை என்று ஒப்பிட்டுப் பார்க்கும் பொறுமையு…
-
- 5 replies
- 2.5k views
-
-
தடம் இதழ் ஜெயமோகன் விகடன் தடம் இதழ் நிறுத்தப்பட்டுவிட்டதாகக் கேள்விப்பட்டேன். தமிழுக்கு முக்கியமான இதழாக இருந்தது என்பதே என் உளப்பதிவு. எந்த ஒரு சிற்றிதழும் அதற்கான ஒரு சிறிய சாய்வுடனேயே இருக்கும். விகடன் பேரிதழ் கூட அந்தச் சாய்வுகொண்டதுதான். தடமும் அச்சாய்வு கொண்டிருந்தது. பொதுவாக தமிழ் அறிவுலகில் உள்ள இடதுசாரி,தமிழ்த்தேசிய, திராவிட அரசியல் சாய்வு என அதை வகுத்திருந்தேன். ஆனால் தமிழிலக்கியத்தின் எல்லா குரல்களும் அதில் ஒலிக்க இடமளித்தது. தமிழில் இதுவரை வெளிவந்த இதழ்களிலேயே பார்வைக்கு அழகானது தடம்தான். பக்கவடிவமைப்பில் அது ஒர் உச்சம். நான் தொடர்ச்சியாக வாசித்த ஒரே இதழ். பெரும்பாலும் இதழ்களில் எழுதியுமிருக்கிறேன். நான் தடம் இதழில் எழுதிய கட்டுரைகள் முக்கி…
-
- 5 replies
- 2.2k views
-
-
தனி தேசமே தமிழருக்கு ஒரே வழி.! மறைந்த குமரிக்கண்டத்தின் எச்சமேஇலங்காபுரி,ஈழவர் தம் பெருமைதனை உலகிற்கு பறைசாற்றும் நெடிய பாரம்பரியத்தைக் கொண்ட தமிழ் சமுதாயத்தின் பண்பாட்டுப் பெருமையை உலகிற்கு எடுத்துரைத்த இராவண வம்சத்தவரின் சிவபூமி.இது வால்மீகி இராமயணத்தில் அறியலாம். இதனை கம்பர், ஒட்டக்கூத்தர் போன்ற வித்துவான்களே ஆதரித்துள்ளனர். இலங்கையின் வரலாறு கிமு ஆறாம் நூற்றாண்டில் தோற்றம் பெற்றதாகவும் கலிங்க தேசத்திலிருந்து துரத்திவிடப்பட்ட விஜயனும் அவனது 700 தோழர்களும் வந்து இறங்கியதுடன் ஆரம்பமாகின்றது என்கின்றனர் ஆய்வாளர்கள். எனினும் இலங்கையின் ஆதிக்குடிகள் இயக்கர், நாகர் ஆட்சி வழித்தோன்றலே என்று மகாவம்சம் கூறுகின்றது. பல்வேறு அரசுகள் ஆட்சி பீடம் ஏறியது, பொலன…
-
- 0 replies
- 525 views
-
-
“நாங்கள் அருகில் இருந்திருந்தாலும் எங்கள் தந்தையின் மறைவை இத்தனை மரியாதையுடன் அணுகியிருக்க மாட்டோம். தமிழ் இலக்கிய உலகம் எங்கள் தந்தையின் இறுதி மரியாதையை கண்ணியத்துடன் நடத்தியது” என்று நினைவுகளைக் கூறி நெகிழ்கிறார், ஈழத்து எழுத்தாளர் கே.டானியலின் மகனான டானியல் வசந்தன். கே.டானியல் இலக்கியம் என்பது ஒரு காலம் வரை குறிப்பிட்ட சமூகத்தின் வாழ்வியலை மட்டுமே பதிவு செய்தது. சொல்லப்போனால் இலக்கியம், ஒரு பொழுதுபோக்குக் களமாக மட்டுமே இருந்த காலம். அப்போது அதனை ஒருவர் தலைகீழாக மாற்றி அரசியல் படுத்தியவர் எழுத்தாளர் கே.டானியல். ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் வாழ்வியலை, வாழ்க்கை அனுபவங…
-
- 18 replies
- 1.7k views
- 1 follower
-
-
தமிழக அரசின் இலக்கியவிருதுகள் - ஜெயமோகன் June 5, 2021 புதிய திமுக அரசின் இலக்கியத்துறை சார்ந்த அறிவிப்புகள் பற்றி பல கேள்விகள் வந்தன. ஊடகத்தினரின் கேள்விகளை தவிர்த்துவிட்டேன். அவர்கள் நான் சொல்வதைப் போடமாட்டார்கள். சமூக ஊடகங்களுக்கு வசைபாடுவதற்கு உகந்தவகையில் எதையும் வெட்டி எடுத்துக்கொள்ள தெரியும். இதில் விவாதிப்பவர்கள் ’திமுக அரசு எழுத்தாளர்களை கொண்டாடவில்லை’ என்ற ஒற்றைவரியை வைத்துக்கொண்டு பொத்தாம்பொதுவாகத் தடவித்தடவிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே இவை சார்ந்து மிகத்தெளிவாக பேசப்பட்டவற்றை படிப்பதில்லை. மீண்டும் அதே ஒற்றைவரி உழப்பல்கள். சவடால்கள். தேவதேவன் திமுக அரசு எழுத்தாளர்களைக் கொண்டாடவில்லை என்று எவரும் சொல்லவில்லை. கொண்டாடியிருக்கிறார்…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழக கவிஞர் சபரிநாதனுக்கு இந்திய சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது : June 14, 2019 சாகித்ய அகாடமி வழங்கும் யுவபுரஸ்கார் மற்றும் பால யுவ புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடமும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருதை வழங்கி வருகிறது. இந்த வருடத்திற்கான யுவபுரஸ்கார் விருது வால் கவிதைத் தொகுப்புக்காக கவிஞர் சபரிநாதனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தனது `வால்’ கவிதைத் தொகுப்பின் மூலம் பரவலாக அறியப்பட்டவர் சபரிநாதன். கோவில்பட்டியைச் சேர்ந்தவர். தமிழ் நவீனக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். இதேவேளை பால யுவ புரஸ்கார் விருது மறைந்த எழுத்தாளர் அழ.வள்ளியப்பாவின் மகளும், எழுத்தாளருமான தேவி நாச்ச…
-
- 1 reply
- 894 views
-
-
மலேசியா சிங்கப்பூரில் தமிழ்நூல்களை விற்பனைசெய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள தமிழாசியா என்னும் தளத்தின் தொடக்கவிழாவுக்காக ஆற்றிய வாழ்த்துரை. https://tamilasiabooks.com/ https://www.jeyamohan.in/145363/
-
- 0 replies
- 802 views
-
-
இசை ஞானி இளையராஜா இசைப் புயல் ஏ ஆ ர் ரகுமான் தேனிசை தென்றல் தேவா சிர்ப்பி ஸ் ஏ ராஜ்குமார் வித்தியா சாகர் வரத் வாஜ் யுவன் சங்கர் ராஜா ஹரிஷ் ஜெயராஜ் விஸ்வநாதன் தமன் அனிருத் சந்தோஷ் நாராயணன் ஜி.வி. பிரகாஷ் ------------------- நன்றி - வீர பையன்26 ரசோதரன் அண்ணா எப்போதும் தமிழன்
-
-
- 3 replies
- 1.2k views
-
-
தமிழ் சமூகத்தால் இளையராஜா பெற்றதென்ன? தந்ததென்ன? -சாவித்திரி கண்ணன் மேல்தட்டு வர்க்கத்தின் நலனுக்கான ஐ.ஐ.டியில் இசைப் பயிற்சிகள் தரவுள்ளாராம் இளையராஜா! இளையராஜா என்ற இசைஞானி உருவானது எப்படி? அவரது வளர்ச்சியின் முழுமையான பின்னணி என்ன? இன்றைக்கு அவரைப் பயன்படுத்திக் கொள்ளத் துடிப்பவர்கள் யார்? என்ன நடந்து கொண்டிருக்கிறது..? ‘மேஸ்ட்ரோ இளையராஜா இசை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்’ அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், சென்னை ஐஐடி மற்றும் இளையராஜா மியூசிக் மற்றும் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இடையே கையெழுத்தாகியுள்ளது. மிகப் பிரம்மாண்டமாக கட்டி எழுப்பப்படவுள்ள இந்த சிறப்பு மையம், ஒரு ஆண்டில் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் …
-
- 2 replies
- 524 views
-
-
தமிழ் மின்னிலக்கியம் - அலைபேசி எழுத்தும் கிண்டில் வாசிப்பும் சுரேஷ் பிரதீப் எழுதுவதற்கான உந்துதல் எந்தச் சூழலிலும் வரலாம் என்ற நம்பிக்கை பதின்மத்திலேயே என்னுள் ஆழமாக பதிந்துவிட்டது. பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது ஒரு கதையை கணித குறிப்பேட்டின் கடைசி மூன்று பக்கங்களில் எழுதினேன். அதைப்படித்த நண்பனொருவன் என்னை அப்போது எழுத்தாளன் என்று ஒப்புக் கொண்டான். வகுப்பு பெண்களிடம் அந்தக் கதையை காட்டப்போவதாக அடிக்கடி பாவனையாக மிரட்டுவான். நானும் "காட்டிடாதடா" என்பது போல பதறுவேன். இருந்தாலும் உள்ளுக்குள் அந்தக்கதையை எங்கள் வகுப்பிலேயே அதிகமாக பெண் தோழிகளுடைய அவன் கொண்டுபோய் அவர்களிடம் காண்பிக்கமாட்டானா என்றிருக்கும். பள்ளி முடியும் வரை அவன் அந்தக் கதையை காண்பிக்கவில்லை. கல…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழ் வணிக எழுத்தின் தேவை | எழுத்தாளர் ஜெயமோகன் January 18, 2021 தமிழ் நாவல்கள் விமர்சகனின் சிபாரிசு அன்புள்ள ஜெ உங்கள் வலைப்பதிவில் பல பதிவுகளில் பொழுது போக்கு எழுத்தாளர்களின் படைப்புகளைக் கடந்து இலக்கிய வாசிப்பிற்கு வருவது பற்றி நீங்களும், பிறரும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். வாசிப்புத்தேடல் உள்ளவர்களைப் பொறுத்த அளவில் (என்னைப்போல் குறைவான வாசிப்பு உள்ளவர்களுக்கும் ) அது உண்மைதான். தேடல் உள்ளது. தொடர்கிறது. முன்பு விழுந்து விழுந்து படித்த பல படைப்புகள், மற்றும் சில எழுத்தாளர்கள் பக்கமே போக நாட்டமில்லை. இப்பதிவுகளில் சுஜாதா, பாலகுமாரன் பெயர்கள் அடிக்கடி (எள்ளலாக ) சுட்டிக்காண்பிக்கப் படுவதைப் பார்த்திருக்கிறேன்.ஏற்கனவே படித்துக் கடந்து வந்…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் புகழ்வணக்க நினைவேந்தல் (நவ.05 – சென்னை தி.நகர்)
-
- 0 replies
- 486 views
- 1 follower
-
-
தமிழ்ச்சூழலில் எழுதுதல்.. இளங்கோ-டிசே இன்று புதிதாக எழுத வரும் பலருக்கு, தமது படைப்புக்கள் பரவலாக வாசிக்கப்படவில்லை என்கின்ற கவலையும் சலிப்பும் இருக்கின்றது. ஒருவகையில் சமூக ஊடகங்கள் வந்ததன் பிறகு, எழுதப்படும் எல்லாமே உடனே கவனிக்கப்படவேண்டும் என்கின்ற பதற்றம் வருவதும் இயல்பானது. ஆனால் எழுத்துக்கு நேரடியான கருத்தைச் சொல்லும் வாசகர்களை விட, வாசித்துவிட்டு அதைப் பகிராமல் இருக்கும் மெளனமான வாசகர்களே அதிகம். சில நாட்களுக்கு முன் ஒரு நண்பர் கவலையுடன் எவரும் தனது படைப்பைக் கவனிக்கவில்லை எனக் கூறினார். எந்தப் படைப்பிற்கும், அது எழுதப்படுவதற்கு எடுக்கும் காலத்தைப்போல், வாசிப்பதற்கும் விவாதிப்பதற்கும் ஒரு கால அவகாசம் தேவைப்படும். இணையத்தில் தமிழைப் படித்து அ…
-
- 0 replies
- 465 views
-
-
தரவுகளையும் கதைகளையும் எப்படி நாவலாக மாற்றுவது? ஈழத்தை சேர்ந்த இளம் எழுத்தாளர் ஒருவர் இக்கேள்வியைஎன்னிடம் எழுப்பியிருந்தார். அவர் ஈழப்போரின் பின்னணியில் ஒருஅடித்தட்டு மனிதரின் நிஜக்கதையை நாவலாக எழுதவுள்ளதாகவும், அதற்காக நிறைய தரவுகளையும், நேர்முகங்களைக் கண்டு பதிவுபண்ணியுள்ளதாகவும், இத்தகவல்களையும் உணர்வுகளையும்எப்படித் தொகுத்து நாவலாக எழுத ஆரம்பிப்பது என்று வினவினார். நான் அவரிடம் சொன்ன சில விசயங்களை உங்களில் இளம்நாவலாசிரியர்களுக்கு பகிர்வது பயனுள்ளதாக இருக்குமெனநம்புகிறேன். ஏதாவது ஒரு பாத்திரத்தை தேர்வு பண்ணி அவரது பார்வையில்கதையைச் சொல்லுங்கள். அப்பாத்திரம் உங்கள் மனதுக்குநெருக்கமாக, வித்தியாசமாக இருக்க வேண…
-
- 0 replies
- 1.4k views
-
-
தஸ்தயெவ்ஸ்கி - மனங்களின் வித்தகர் | கனலி ’’உலக இலக்கியத்தில் தலை சிறந்த நாவல் டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’என்றுகூறப்பட்டாலும் கூட உலக இலக்கியத்தில் தலை சிறந்த நாவலாசிரியர் யார் என்றுகேட்டால் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கிதான் என்று விமர்சகர்கள் சந்தேகத்துக்கிடமின்றிசொல்லி விடுவார்கள்’’ என்கிறார் எம்.ஏ.அப்பாஸ் [என்றென்றும் வாழும்படைப்புகளும்,படைப்பாளர்களும்]. ரஷ்ய சமூகத்தில் 19 ஆம் நூற்றாண்டில் நிலவிய சமூக பொருளாதார ஆன்மீகப்பின்புலச் சூழலை மனதில் கொண்டு மனித மன அமைப்பை, அதன் வினோதங்களைக்கண்டறிய முயன்ற ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி உலக இலக்கியத் தளத்தில் மிகச்சிறந்த ஒரு மனோதத்துவ அறிஞராக விமரிசகர்களால் அங்கீகரிக்கப்பட்டவர். தானும்கூடக் கற்றுக் கொள்வதற்கான உளவியல் …
-
- 0 replies
- 570 views
-
-
திரும்பத் திரும்ப நந்திக் கடலை நோக்கியே நடந்து கொண்டிருப்போம் – நிலாந்தன் May 18, 2020 நேர்கண்டவர் : அகர முதல்வன் நிலாந்தன் -ஈழத்தின் அரசியல் ஆய்வாளர்களில் மிகக் குறிப்பிடத் தகுந்தவர். அதுமட்டுமில்லாது கவிஞர், ஓவியர், கட்டுரையாளர் பல்கலை ஆற்றல் கொண்டவர். ”மண்பட்டினங்கள்”, “யாழ்ப்பாணமேஓ எனது யாழ்ப்பாணமே” “வன்னிமாண்மியம்”, ”யுகபுராணம்” ஆகிய இவரின் கவிதைத் தொகுப்புக்கள் ஈழத்தமிழரின் நவீன விடுதலைப்போரை இலங்கைத்தீவின் பண்டைய வரலாற்றோடு விவாதித்தவை. இவருடைய “புலிகளுக்கு புலிகளுக்கு பின்னரான தமிழ் அரசியல்” என்ற கட்டுரைத் தொகுப்பு 2018ம் ஆண்டு காலச்சுவடு பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்திருக்கிறது. ஈழப்போராட்டத்தின் முதல் தெருவெளி நாடகமான “விடுதலைக்காளி ” படைப்பின் …
-
- 5 replies
- 1.2k views
-
-
துயரத்தில் முடிந்த சுந்தரராமசாமியின் காவியம் சு, வேணுகோபால் சுந்தர ராமசாயின் கட்டுரைத் தொகுப்பைப் படித்துக் கொண்டே வந்தபோது உடனடியாகத் தோன்றியது அவரது ‘சவால்’ கவிதைதான். …. இந்தக் கவிதையை அவர் எழுபதுகளின் துவக்கத்தில், எழுதாமல் இருந்துபின் எழுத வந்த காலத்தில் எழுதப்பட்டது என்பது இலக்கிய வாசகர்கள் அறிந்த ஒன்று. இந்தக் கவிதையை எழுதப்படாத துவக்க காலத்திலேயே அவர் மனதில் எழுதிவிட்டார். அவரது கட்டுரைகளின் வழி தன் இருப்பு குறித்து தெரிவிக்க முயன்ற சாரம் அதுதான். இதனை 1963 வாக்கில் பாரதி குறித்து எழுதவந்த கட்டுரையிலேயே காணலாம். எனவே சுந்தர ராமசாமி பெரும் கனவுகளோடுதான் விரும்பி இலக்கியத்துறைக்கு வந்துள்ளார். இந்தக் கனவுகளே க.நா.சு. போல சற்று மூர்க்கமாக தம…
-
- 0 replies
- 1k views
-
-
தோற்றுப் போதலின் அழகியல் - உமையாழ் மிலன் குந்தரேவின் சிறுகதையான The Apologizer-யை முன்வைத்து... எல்லோரையும் முந்திக் கொண்டு தமிழில், உலக இலக்கிய மொழிபெயர்ப்பு நிகழ்வது பற்றி முகநூலில் எழுதி இருந்தேன். அதை வாசித்த நண்பி, “ஆனால் மிலன் குந்தரேவின் புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படவே இல்லையே” என பதில் இட்டிருந்தாள். அது பற்றி அப்போது நான் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. பின்னர் மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி, குந்தரேயின் The Unbearable Lightness Of Beingயை மொழிபெயர்க்க காலச்சுவடு கண்ணனிடம் மொழிபெயர்ப்பு உரிமையை வாங்கச் சொல்லி மன்றாடுவதாகச் சொன்னபோதுதான் அந்த நாவலே இன்னும் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை என்பது உறைத்தது. எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் ராஜகோபாலு…
-
- 2 replies
- 990 views
-