கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
773 topics in this forum
-
காலச்சுவடு -2 KALACHUVDU - 2 * நம்பிக்கை கவிதையை 1968ம் ஆண்டில் எழுதி வெளியிட்டேன். இக்கவிதையும் பொதுவுடமை புரட்சிவரபோகிறது என நம்பிய என் இளமையில் எழுதியதாகும். நம்பிக்கை புரட்சிக்காக இராணுவப் புவியியலை அறிந்துகொள்ள வன்னிக் காடுகளில் திரிந்த காலத்தில் உருவானதாகும். . இக்கவிதையிலும் தமிழ் பாட்டாளிகளின் எழுச்சியின் முதல் குரல் வன்னியில் எழும் என்கிற நம்பிகையையே பாடினேன். * நம்பிக்கை.. வ.ஐ.ச.ஜெயபாலன். . காலச்சுவடு -2 KALACHUVDU - 2 * நம்பிக்கை கவிதையை 1968ம் ஆண்டில் எழுதி வெளியிட்டேன். இக்கவிதையும் பொதுவுடமை புரட்சிவரபோகிறது என நம்பிய என் இளமையில் எழுதியதாகும். நம்பிக்கை புரட்சிக்காக இராணுவப் புவியியலை அறிந்துகொள்ள வன்னிக்…
-
- 5 replies
- 625 views
-
-
மாறி மாறி உருவெடுத்து வருகுதடா கொரோனா- ஊசி அடித்து உவத்திரவ கொரோனாவை துரத்தி விடுவம் என்றால் ஊசியார் கூட அவர் வாழும் காலம் வலுவிழக்க சண்டை போட முடியாமல் கொண்டு போன ஆயுதமும் முடிஞ்சு போக ஒளித்திருந்த கொரோனா ஓடி வந்து திரும்பக் குந்துது அட பாடுபட்டு ஒன்றுக்கு இரண்டு ஊசி போட்டும் தேடித் தேடி வருகுது திரும்பத் திரும்பத் கொரோனா மாறி மாறி உருவெடுத்து வருகுதடா கொரோனா போன கதையைக் காணோம் இன்னும் இனி ஆளுக்கு ஒரு ஊசி என்று அடுத்தடுத்து போட்டு வாழும் வரை இது தானோ ஆருக்குத் தெரியும். பா.உதயன் ✍️
-
- 6 replies
- 622 views
-
-
வருடச் செய்முறை ------------------------------ முப்பது கிலோ கோழி இருபது கிலோ மீன் பதினைந்து கிலோ ஆடு இவற்றை கழுவி துண்டு துண்டாக்கி கறியாக்கவும் ஒரு பகுதியை பொரிக்கவும் 50 கிலோ அரிசி இதை சோறாக்கவும் பத்து கிலோ பருப்பு போதும் இதைவிடக் குறைய கத்தரிக்காய் வாழைக்காய் பயற்றங்காய் போன்றன இவற்றில் பொரித்த குழம்பு பொரிக்காத குழம்பு பால்கறி இப்படி எல்லாம் வைக்கவும் தேவையான அளவு பாகற்காய் பொரிக்கவும் மிளகாய் பொரிக்கவும் வடகம் பொரிக்கவும் வாழைக்காய் பொரிக்கவும் அப்பளம் பொரிக்கவும் ஊறுகாய் வாங்கவும் தயிர் வாங்கவும் நல்ல நாட்களில் வடை சுடவும் பாயாசம் வைக…
-
-
- 11 replies
- 619 views
-
-
"இடையது கொடியாய் இளமையது பொங்க" "இடையது கொடியாய் இளமையது பொங்க நடையது அன்னமாய் நயனம் இமைத்து உடையது ஜொலிக்க உச்சாகம் தந்து சடையது அலைபாய சஞ்சலம் தந்தவளே!" "அழகில் மயிலாய் அன்பில் தாயாய் ஆனந்தத் தேனாய் ஆசைக்கு நாயகியாய் வானின் தேவதையாய் வாழ்க்கைக்கு துணையாய் தன்னையே தந்து தந்திரமாய் பறித்தவளே!" "பணிந்து உன்னை பலவாறு காட்டி பண்பின் திறனை பலவாறு விளக்கி பருவ எழிலை பலவாறு வீசி பந்தத்தை ஏற்படுத்தி பத்தினியாய் வந்தவளே!" "என்னை அறிந்து எல்லா…
-
- 0 replies
- 619 views
-
-
“முதுமையின் அரவணைப்பு” “முதுமையின் அரவணைப்பு தனிமையைப் போக்கும் பதுமையுடன் விளையாடும் மழலைப் போலவே! பெதுமை பருவத்தில் மகிழ்ச்சி காணும் புதுமை செய்யும் குழந்தை போன்றே!" "பாளையாம் செத்தும் பாலனாம் செத்தும் காளையாம் செத்தும் இளமை செத்தும் மூப்பும் ஆகியும் மூலையில் ஒதுக்கியும் தனித்து விட்ட கொடூரம் எனோ?" "பொன்னேர் மேனி அழகு இழந்து நன்னெடுங் கூந்தல் நரை விழுந்தாலும் மாறாத அன்பு நிலைத்து நிற்க வயதான மக்களைத் தழுவ வேண்டும்!" "இளமை நீங்கி உடலும் மெலிய தளர்ச்சி பெற்று கோலிற் சாய களைப்பு கொண்ட உள்ளம் ஆற பாசம் கொடுக்கும் கைகள் தேவை!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 617 views
-
-
-
- 1 reply
- 614 views
-
-
செந்தமிழ் சொல்லெடுத்து சிலேடைகள் தான் புகுத்தி திரைதனில் தவிழ்ந்தவன் தரணியில் தமிழ் கவிஞன் என்பதனால் ஈழத்தில் தமிழன் நிலை கண்டு கண்ணீரால் கவிதை எழுதி கலங்கி நின்றது போதும் உறவுகளுக்காய் அவன் வருந்தியது மெய்யென்றாகாதோ..?! களத்தில் அவன் கட்டுமரத்திலும் ஏறலாம் அண்ணா கழகத்திலும் குந்தலாம்... கவிஞன் அவனுக்கும் வாழ்வும் வயிறும் இருக்குத்தானே..?! நிச்சயம் அது துரோகமில்லை கவிஞன்.. மொழியாய்.. மொழிக்காய்.. வாழ்பவன். ஆட்சிக்கட்டில் அவனுக்கு சாமரம் வீச கவர் கன்னியருமில்லை கறுப்பின் கவர்ச்சில் மொய்க்க சிம் மையீக்களும் இல்லை அருட்டிவிட்டால் அழும் அந்த மீரூ பொம்மைகள…
-
- 1 reply
- 611 views
-
-
தடையெனவே இருந்தவைகள் எல்லாமே தளரட்டும் உடையட்டும் ஒழியட்டும் வாழ்விற்கு வளம் கொழிக்கும் எல்லாமே வளரட்டும் படரட்டும் செழிக்கட்டும்! சுமையெனவே துயர் தந்த எல்லாமே நகரட்டும் விலகட்டும் மறையட்டும் நல்லோர்க்கு நலம் சேர்க்கும் எல்லாமே பரவட்டும் தொடரட்டும் பலம் பெறட்டும்! பொய்மைக்கு துணை போன எல்லாமே உடையட்டும் நொறுங்கட்டும் சிதறட்டும் உண்மைக்கு வலுச் சேர்க்கும் எல்லாமே நிறையட்டும் நிமிரட்டும் வலுக்கட்டும்! கீழ்மைக்குத் துதி பாடும் எல்லாமே கிழியட்டும் எரியட்டும் அழியட்டும் மேன்மைக்கு எழில் கூட்டும் எல்லாமே வளரட்டும் உயரட்டும் நிலைக்கட்டும்! எழில் கொண்டு எழில் கண்ட பொழில் கொள் இப்பூவுலகிலே எழில் உளங்கொண்டு வாழும் நல்மாந்தர் எல்லாமே வாழட்…
-
- 6 replies
- 609 views
-
-
"பேதையே போதையேன்" "சிறியகட் பெறினே, எமக்கீயும் மன்னே சிற்றிடையாள் ஒளவை அன்று கூறினாள் சினம் ஏன் இன்று உனக்கு ?" "பேதையே போதையேன் நானும் கேட்கிறேன் பேரறிவு கொண்ட தலைவனே சொல்லாயோ? பேச்சில் எதற்குத் தையல் மட்டும் பேரொலி உடன் விடலையைச் சேர்க்கையோ?" "தெண்கள் தேறல் மாந்தி மகளிரென தென்னாட்டு மூதை பாட்டுப் பாடினாள் தெளிவாகத் தெரியுது இருவரும் அருந்தினரென" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 609 views
-
-
-
- 0 replies
- 607 views
-
-
"நீரின்றி உலகில்லை நீயின்றி நானில்லை" "நீரின்றி உலகில்லை நீயின்றி நானில்லை நீலக்கண்ணீர் வடிக்கிறான் நீலவானின் கீழே! நீங்காத காதலென்று அவளும் நம்பி நீதியாய் நடப்பானென்று மகிழ்வில் மிதந்தாள்!" "அன்பு பேச்சில் மனத்தைத் தொலைத்து அச்சம் மடம் நாணம் மறந்து அன்னை ஈன்ற உடல் முழுவதையும் அழகு கொட்டிட அவனுக்கு கொடுத்தாள்!" "அமைதியான ஓடத்தில் ஆசைகளும் தீர அம்புலி தன்னை மேகத்தால் மறைக்க அந்தரத்தில் விட்டுவிட்டு எங்கோ போனான் அணங்கு அவளோ நீருடன் சங்கமித்தாள்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
-
- 1 reply
- 604 views
- 1 follower
-
-
"குடையின் கீழ் தாயும் மகனும்" [படக் கவிதை] "குடையின் கீழ் தாயும் மகனும் எடுபிடி வேலையில் சிறு ஓய்வு! குட்டிச் சிறுவன் பசி தீர்க்கிறான் நனைந்த ஆடை வலியைக் காட்டுது வருடித் தாய் கருணை பொழிகிறாள்!" "செங்கல்லும் சுத்தியலும் அருகில் கிடக்குது அங்கங்கள் படும் பாட்டைக் குறிக்குது! தங்கமான மனசு வேதனைப் படுகுது குங்குமப் பொட்டு அழிந்து போயிட்டு மங்கலான வாழ்வை ஒளியேற்றத் துடிக்குது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 601 views
-
-
பேசாமல் நகர்வதும் பேசிவிட்டு செல்வதும் பாசத்தின் வெளிப்பாடு அன்பிற்கு இல்லை எந்நாளும் பாகுபாடு சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 598 views
-
-
"ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே" "ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே செத்த பிணங்களும் எழும்பி பார்க்குது சொத்தை மனமும் பூரிப்பு கொள்ளுது பித்தம் ஏறி என்காலும் தொடருது!" "ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே ஒளிரும் அவள் பல் அழகில் ஒடிந்து நானும் காதல் கொள்ள ஒப்புதல் கேட்டு மனம் கெஞ்சிநிற்குது!" "வித்தை பல உடலால் காட்டி கத்தை கத்தையாக காதல் எறிந்து முத்தம் பல இதழால் தந்து ஒத்தையடிப் பாதையில் அத்தமக போகிறாள்!" "ஒழிந்து ஓடி ஆடிப் பாடி ஒற்றை காலில் சலங்கை கட்டி ஒய்யாரமாய் வரம்பில் விழாமல் நடந்து ஒத்தையடிப் பா…
-
-
- 4 replies
- 597 views
-
-
கவிஞர் பளநிபாரதியவர்களின் கவிதை ஒன்று படிக்கும் போது இங்கு பதிவிடத் தோன்றியது அதனால் இங்கு இணைக்கிறேன்..எமது நாடு பற்றியது. அங்கே நான் உன்னை அழைத்துச் செல்லமாட்டேன் அது கருணையற்ற நிலம் பிரிவின் யுகாந்த வெள்ளத்தில் அது மூழ்கடிக்கப்பட்டது காதலற்ற சொற்களின் முள்வேலியால் …
-
-
- 3 replies
- 596 views
-
-
"அன்பே ஆருயிரே" "அன்பே ஆருயிரே அழகான மயிலே கன்னம் இரண்டும் சிவந்தது எனோ? சின்ன இடை ஆசையத் தூண்டுதே அன்ன நடையில் அருகில் வாராயோ? இன்பக் கடலே என்னைத் தழுவாயோ?" "காதலே காவியம் படைக்கும் உறவே மோதலைத் தவிர்த்து புன்னகை பூக்காயோ? ஆதரவாய் என்றும் நான் இருப்பேனே இதயத்தில் வலியை ஏன் தருகிறாய்? சாதல் வருமுன் என்னை அணைக்காயோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
-
- 1 reply
- 596 views
-
-
இலக்கில்லா சிறுகுருவி ------------------------------------- இந்த குருவியை எழுத எழுத என்று நினைத்து எழுதாமலேயே போய்க் கொண்டிருக்கின்றேன் இது ஒரு சின்ன சிட்டுக் குருவி தான் கொய்யா மரத்தின் கீழ் கொப்பில் நின்று அப்படியே பறந்து முருங்கையின் ஒரு கொப்பிற்கு அது போகின்றது அங்கிருந்து கண்ணாடி யன்னலில் பாய்ந்து அப்படியே அது சறுக்கி கீழே விழுகின்றது எழும்பி அது மீண்டும் பறந்து கொய்யா மரம் போகின்றது இப்படியே செய்து கொண்டு இடையிடையே நின்று செட்டைகளை விரித்து நீவி விடுகின்றது தன் வாலையும் அப்பப்ப ஆட்டிக் கொள…
-
-
- 3 replies
- 590 views
-
-
யாரைத்தான் நம்புவதோ? **************************** எழுபது ஆண்டுகளாக எம்மேல் ஏறி உழக்கியவர்களும் எம்மில் சவாரி செய்தவர்களும் எம்மினத்தை கொத்துக் கொத்தாக கொண்றழித்தவர்களும் எம்மை பயங்கர வாதிகளாக காட்டி வாக்கு பறித்தவர்களும் எம் தேசமெங்கும்-புத்தர் சிலை விதைத்தவர்களும் ஊழல் லஞ்சமென பெருக்கி உயிர் வாழ்ந்த அந்த அரசியல் தலைமைகளை.. சிங்களமக்களே! ஓடவெருட்டி ஒன்றுசேரும் இந்நேரம் இங்கோ. அனைத்துத் தரப்பும் மேடையில் ஏறி தமிழ் உரிமை தமிழ் விடிவு தமிழ் சுதந்திரம் தமிழ் ஈழத்துக்கான சம உரிமை. தமிழ்! தமிழ்! தமிழ்! எனக் கத்திவிட்டு-பின் தமிழை அழித்த இன…
-
-
- 7 replies
- 590 views
-
-
"மண்ணும் மரமும்" "மண்ணும் மரமும் பண்பு காட்டும் ஒன்றுபட்டு மனிதனை வாழ வைக்கும் கண்ணும் இமையும் போல இருந்தே மனித வாழ்வைத் தக்க வைக்கும்!!" "வானத்தின் அடியில் மண் இருக்கும் நீண்டு நிரப்பும் வேருக்கு தொட்டிலாகும்! விதை புதைந்து மரம் உயரும் மண்ணில் வளர்ந்து வானம் தொடும்!!" "பழைய கதைகளை மண் கிசுகிசுக்கும் தோண்டிப் பார்த்தால் வரலாறு புரியும்! காலத்தின் தழுவலில் இயற்கையின் பிணைப்பில் மண் உடலே! மரம் கருணையே!!" . [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 584 views
-
-
-
- 0 replies
- 581 views
-
-
"காதல் ஈன்ற இன்பம் மகிழ்ச்சியே!" "புரிந்துணர்வில் புதிய பரிமாணம் கண்டு புத்தம்புது வாழ்வைக் கூடி அமைத்து புதுமை படைக்கும் எண்ணம் கொண்ட புதுமணத் தம்பதிகள் இல்லம் சொர்க்கமே!" "காரணம் தெரிந்து சொற்களை அளந்து காலம் அறிந்து மனம் ஒன்றி காமம் கலந்த பாசம் தரும் காதல் ஈன்ற இன்பம் மகிழ்ச்சியே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 581 views
-
-
"நிலவில் முகம் பார்த்து" "மஞ்சள் நிலவில் முகம் பார்த்து கொஞ்சும் மொழியில் இனிமை கண்டு நெஞ்சம் நிறைந்த காதல் கொண்டு மஞ்சம் காண மணம் முடித்து தஞ்சம் அடைந்தேன் அவள் மடியில்!" "மதியின் அழகு மனதைக் கவர விதியின் பயனில் அவளும் சேர புதிய மலராய் மகிழ்ச்சி மலர பதியாய் என்னை உவந்து ஏற்க கைதி ஆனேன் பாசக் கூண்டில்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 577 views
-
-
நத்தார் கவிதை -2021 வாருங்கள் தோழர்களே! இந்த மானிலம் மீதினில் அன்பு செழித்து நம் மானுட வர்க்கம் மகிழ்ந்த நன்னாளிது வாருங்கள் தோழர்களே! மாட்டுத் தொழுவத்திலே எங்கள் மன்னன் பிறந்தனன் அந்த நற்செய்தியைக் கேட்டுக் கிழக்கிருந்தே - வந்து கிறிஸ்துவென்றே குறித்தேற்றினர் ஞானிகள் வாருங்கள் தோழர்களே! – நாமும் வாழ்த்திக் கொண்டாடுவம் யேசு பிறப்பினை வாருங்கள் தோழர்களே. பாவிகளாகாதீர் - உங்கள் பாவங்கள் தன்னை நான்ஏற்றுப் பரிசுத்த ஆவிக்குள் சேர்த்திடுவேன் உயர் அன்பில் முகிழ்த்து நற்பண்பில் மலர்ந்திட தேவையென் ரத்தமெனில் எந்தன் தேகத் தசையும் அதற்குரித்தே நோவைப் பொருட்படுத்தேன் நான…
-
- 2 replies
- 570 views
-
-
TAMIL ORIGINALபாடா அஞ்சலிவ.ஐ.ச.ஜெயபாலன்..உதிர்கிற காட்டில் எந்த இலைக்கு நான் அஞ்சலி பாடுவேன்? . சுனாமி எச்சரிக்கை கேட்டுமலைக் காடுகளால் இறங்கிகடற்கரைக்குத் தப்பிச் சென்றவர்களின் கவிஞன் நான்.பிணக்காடான இந்த மணல் வெளியில் எந்த புதைகுழியில் எனது மலர்களைத் தூவ யாருக்கு எனது அஞ்சலிகளைப் பாட..வென்றவரும் தோற்றவரும் புதைகிற உலகோஒரு முதுகாடாய் உதிர்க்கிறது. எந்தப் புதைகுழியில் என் மலர்களைச் சூடஎந்த இலையில் என் அஞ்சலிகளை எழுத... .இந்த உலகிலும் பெரிய இடுகாடெது?பல்லாயிரம் சாம்ராட்சியங்களைப் புதைத்துபுதிய கொடிகள் நாட்டப்படுகிற பெரிய அடக்கத் தலம் அது.நடுகற்களின் கீழ்அடிபட்ட பாம்புகளாய் கிழிந்த எங்களூர்ச் சிறுமிகளின் இறுதிச் சாபங்கள் அலைகிறதே.எந்த சாபத்துக்கு நான் கல்வெட்டுப் பாடுவேன்..…
-
- 0 replies
- 568 views
-
-
2016 பனி உறையும் கனடாவின் கூதிர்காலத்தில் டொறன்ரோ நகரில் இருந்தேன். கைகுலுக்கிச் சிரிக்கும் வெண்மணல் பாலைப் பொன் மணல் அல்லது கருங்கற் சிற்பங்களுக்கு மத்தியில் உயிர்த்த சுடுமண் பாவையாக என்னுடைய கவிதையின் சினேகிதியை சந்தித்தேன். மொழிமட்டும் எனது தாய்தந்தது. கவிதையும் விநோதங்களும் அழகும் நம்மைச் சூழ்ந்து நம்மை வாழவைக்கும் இயற்கையும் பெண்களும் தருகிற வரங்கள் தானே. இன்று மீண்டும் அந்தக் கவிதையை நினைத்தேன். . கவி நாயகி/ muse - வ.ஐ.ச.ஜெயபாலன் . வெண்பனிக் கோலமும் இல்லாத புகை வண்ணக் கொடுங்குளிர் நாள். தேனீரால் உயிரை சூடாக்கியபடி கண்ணாடி மாளிகையுள் இருந்தேன் * தூரத்துக் கரும் அணில்கள் கோடையில் புதைத்த கொட்டைகளை மீட்க்க அலைந்தன. நானோ அந்த உறைந்த நெடும் பகல…
-
- 0 replies
- 567 views
-