கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
772 topics in this forum
-
குளிர்..... ----------------------- கதவுகளின் இடுக்குகளினூடாக கசிந்து வருகின்றது துருவங்களில் பயணித்த குளிரின் சாரல் கிளைகளினூடே தாவி ஏறுகின்ற குளிர் இலைகளின் விளிம்பில் உதிர்ந்து என் அறையெங்கும் வியாபிக்கின்றது வெளியே பூனை ஒன்று குளிரின் அரவம் கேட்டு தன் மீசைகளை ஒடுக்கி கதவுகளினூடே உள் நுழைகின்றது குளிர் எப்போதுமே இளமை காலம் ஒன்றில் கடந்து போன திருவெம்பாவை பாடல்களையும் வைரவர் கோவிலின் அதிகாலைப் பூசைகளையும் அந்தோணியார் கோவிலின் மார்கழி மாத இயேசு பிறப்பையும் நினைவுபடுத்திக் கொள்கின்றது இடையிடையே மார்கழி மழையில் நனைந்த நந்தியாவட்டை பூவின் வாசத்தையும் பவள …
-
- 14 replies
- 2.1k views
-
-
தாலாட்டுப் பாடிய தாயும் எங்கே? தானாக வந்த உறவுகள் எங்கே? தயவு படைத்த நெஞ்சமும் எங்கே? தாண்டி வந்த இளமை,செழுமை,இன்பம் போனது எங்கே? திரும்பி பார்த்தேன் எல்லாம் எங்கே? எங்கே? சென்றது என்றே!!!! மார்பில் சுமந்த செல்வங்கள் எங்கே? மாய்ந்து தேடிய செல்வங்கள் எங்கே? மாட்டைப் போல ஓடியோடி உழைத்தவையெல்லாம் எங்கே? எங்கே? காணவே இல்லை தேடியும் பார்த்தேன் எல்லாம் எங்கே?எங்கே? சென்றது என்றே!!!!! ஆடியடங்கிடும் வாழ்க்கையினிலே ஆழ்ந்த அன்பு,பாசம் அனைத்தும் போனது எங்கே? அருகே இருந்த சுற்றமும் நட்பும் அழிகை இடத்துக்கு முற்றும் துறந்து போனதை அதிர்ந்து பார்த்தேன் எல்லாம் எங்கே? எங்கே? சென்றது என்றே!!!!! நாட்பட நாட்பட மனம் நல்லவை நாடும் மெய்ப் பொருள…
-
- 6 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 961 views
-
-
ஈழத்துக் காவலனே ஈகத்துக்கே உதாரணமாய் ஆனவரே வீரம் நிறைந்தவரே விவேகத்தின் பேரொளியே உலகே அதிசயித்து பார்த்தவரே உலகையே வென்ற ஒப்பற்ற எம் தேசியத் தலைவனே காலப் பெருவெளியில் என்றும் கரைந்திடாத தமிழினத்தின் அடையாளமே ஞாலத்தின் சுழற்சியிலே எப்போதும் நிலைத்திருக்கும் உம் நாமம்!!!!! 66வது அகவைத் திருநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா!!!!!
-
- 8 replies
- 1.6k views
-
-
வித்து.... விதைக்கப்பட்டு.. மரமாகிறது..... ! மரத்தின் இலைகள்.... புதைக்கப்பட்டு.... உரமாகிறது.... ! விதைத்தாலும்... புதைத்தாலும்.... பயன் இருக்கிறது.... ! நம் மண்ணில்..... உடலங்கள்... இலட்சக்கணக்கில்..... புதைக்கப்பட்டன.... ஆயிரக்கணக்கில்... விதைக்கப்பட்டன...! புதைத்ததால் நம்.. இனத்தை உலகறிந்தது... ! விதைத்ததால் நாம்... தலைநிமிர்ந்து... வாழ்கிறோம்..... !!! @ கவிப்புயல் இனியவன்
-
- 0 replies
- 943 views
-
-
அப்படியே நினைத்து பார்க்கவே .... பயமாக இருக்கிறது நம் காதலை .....!!! ஓடாமல் இருக்கும் மணிக்கூட்டில் நான் ... நிமிட முள்ளாய் ... இருந்தென்ன பயன் ....? அணைத்தேன் துன்பம் ... அழைத்தேன் இன்பம் நீ அருகில் இருப்பதை ... விட தூர இரு .....!!! ^ கவிப்புயல் இனியவன் முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை
-
- 14 replies
- 1.7k views
-
-
தடுப்பூசி வரும் வரை..... தனிமைப்படுத்தலே மருந்து..... ! கட்டிப்பிடிக்காதே..... கால் கை கழுவி உள்ளே வா...... ! குடும்பத்தோடும் தனித்திரு.... கூட்டம் கூடி பேசாதே... ! கிடைப்பதெல்லாம் உண்ணாதே.... கீரை வகைகளை உண்...! இதை விட கொடியநோய்க்கு... கொரோனா ஒரு பயிற்சியாகும்...... !!! +++ கவிப்புயல் இனியவன் மணிபல்லவம் யாழ்ப்பாணம் " கவிதைகள் தொடரும் "
-
- 1 reply
- 843 views
-
-
விதியின் சிக்கலான கோடுகளுக்கிடையே இணைந்த சுதந்திரத்துடன், மென்மையாக்கப்பட்ட சொற்கள் இன்னும் உச்சரிக்கப்படுகின்றன. முந்தைய வாழ்க்கை மற்றும் சந்தோசமான நாட்கள் இன்னும் அழைக்கின்றன. மாத்திரைக் குடுவைகள் மட்டுமே நிவாரணமளிக்குமாதலால், மரியாதைக்குரிய தலைகள் குனிந்து, முதுகுத் தண்டுகள் வளையத் தொடங்கின. ஒருபோதும் திருப்பிச் செலுத்தப்படாத சபிக்கப்பட்ட வாழ்வு கிடைத்தபின், எம் பரிபூரண ஆத்மாவின் சபதங்களின் குரல் அடங்கிப் போனது. ஆழ்மனதில் நேசித்த பூமி நினைவுகளுடன் கலந்தது. ஒரு சிறகு காற்றில் மிதந்து வருவதைப் போல, …
-
- 0 replies
- 535 views
-
-
நயாகராவே என் நாயகியே..! ஈழத்து ஒரு மூலையில் இருந்த போதே ஒருதலைக் காதல் உன் மேலே என்றோ ஒரு நாள் சந்திப்போம் காதலை அன்று சொல்ல நினைத்திருந்தேன். கொலண்டிருந்து பறந்து வந்தேன் நான்கு பனை உயரத்தில்-நீ இருந்து பார்த்தாய் இருநாடுகளுக்கான இதயம் நீ என்றாலும்-என் கனவுக்கன்னியே கலங்காத தெளிந்த உன் வெள்ளை மனம் என்னை கொள்ளை கொண்டதடி வானவில்லாய் உன் புருவம் வற்றாத ஜீவனாய் உன் உயிரோட்டம் அமெரிக்காவில் தலை வைத்து கனடாவில் கால் பதித்து-நீ ஆடும் மயில் ஆட்டமோ என்றும் காணாத …
-
- 7 replies
- 860 views
-
-
கட்டுப்பாடுகள் விட்டுப் போகையில் மனம் கெட்டுப் போய்விடும் எம்மில் முட்டி மோதியே எழும் சிந்தைகளை அது கட்டிப் போட்டு விடும் அதை வெட்டி வீழ்த்தியே வெற்றி வாகை சூடினால் வானம் நம் வசப்படும் எதுவுமே தெரியாதென்று ஒதுங்கினால் வாழ்வு பெட்டிப் பாம்பாய் அடங்கி விடும் எல்லாம் தெரிந்து கெட்டித்தனமாய் இருந்தால் வாழ்வு சிறந்து விடும் எதையும் பட்டுத் தெளிவோம் என்று விட்டு விட்டால் பின்பு கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா என ஆகி விடும் திட்டுத் திட்டாய் மனதில் தோன்றும் பல வன்மங்கள் அவை சொட்டு சொட்டாய் நம்மை அழித்து விடும் மட்டு மட்டாய் நாம் வழங்கும் அன்பு கூட இறுதியில் பட்டுப் பட்டாய் கரைந்து போய் விடும் கொட்டும் மழை போல் அன்பை வாரி வழங்கினால் விட்டுப…
-
- 10 replies
- 1.4k views
-
-
அறம் சிறக்க-நெஞ்சில் மறம் பிறக்க மானத் திறம் இருக்க இரும்புத் தோள்கள் கொண்டு தமிழர் துயர் துடைக்க ஈழ மண் விடுதலையடைய வியர்வை சிந்தி-தங்கள் அயர்வை மறந்து இளமைக் காலக் கனவைத் துறந்து கரிகாலன் படையில் இணைந்து நிலை தளராது-ஈழக் கனவினை மறவாது நெஞ்சில் உரம் இழக்காது நம்மை நம் நாட்டை நலம் பல பேணி நாளும் காத்து-மாற்றானுடன் வெஞ்சமர் புரிந்து-எதிரியை வீழ்த்தி தனித் தமிழீழம் பெற வழிகாட்டியே சந்தனப் பேழைகளில் உறங்கும் மாவீரர்களே!!!! சாகலின் நன்றோ அடிமையாய் வாழ்வது என உணர்ந்து வீறு கொண்டெழுந்து ஆண்டுகொண்டிருக்கும் சிங்கள பேரினவாதத்தின் பிடியினுள் மாண்டு கொண்டிருந்த எம் இனத்தினை மீண்டு கொண்டெழ உரிமை உணர்வினை தூண்டினீர்! உம்முடல் தன்னும் அதனுள் ஓடும் செங்குருதியும் உணர்வும் நரம்பும் எம் …
-
- 2 replies
- 1.1k views
-
-
எனது 10 “இருவரிக்கவிதைகள்”உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். இது கொரோனா காலம்..! “”””””””””””””””””””””””””” கொரோனா எங்களைத் தனிமைப் படுத்த முன்பே கை பேசிகள் தனிமைப் படுத்தி விட்டது. ********************************************* 2020இல் இயற்கை மழையை விடவும் மக்களின் கண்ணீர் மழைதான் உலகை நனைக்கிறது. ********************************************** ஆரத் தழுவி அணைத்து முத்தமிட விமானங்களைக் காணாமல் கண்ணீர் வடிக்கின்றன முகில் கூட்டங்கள். ********************************************* தார்ச்சாலைகள் எல்லாம் திரும்பி படுத்து உறங்குகின்றன எழுப்புவதற்கு வாகனங்கள் இல்லாததால். ********************…
-
- 6 replies
- 1k views
-
-
வருவதை தள்ளி வாழுவோம் நண்பா..! ******************************* ஓலைக் குடிசையில் வாழ்ந்தனான் நண்பா ஒளிவு மறைவின்றி சொல்லுறேன் நண்பா காலை உணவுகூட கஞ்சிதான் நண்பா காலத்தால் நானொரு ஏழைதான் நண்பா வாழப்பிடிக்காமல் வாழ்ந்தநான் நண்பா -இந்த வையகம் ஏனென்று ஏசினேன் நண்பா பிறந்ததன் பயன் பற்றி யோசித்தேன் நண்பா பிடித்தது வாழ்க்கையில் பற்றொன்று நண்பா மனிதர்கள் எல்லோரும் வேறு வேறு நண்பா மடையராய் எங்களைப் பார்ப்பார்கள் நண்பா உலகத்தில் எல்லோரும் ஒன்றுதான் நண்பா உணர்ந்தாலே போதுமே வெல்லலாம் நண்பா. படித்ததன் வேலையோ கிடைக்கேல்ல நண்பா பாசங்கள் காட்டவோ யாருமில்லை நண்பா எடுத்ததன் பிறவியின் புரி…
-
- 6 replies
- 1.8k views
-
-
குட்டிக் கவிதைகள்..! உணவு..! உணவை அறிந்தே உண்ணுவோம் உலகின் உயர்வையே எண்ணுவோம். விவசாயி..! கரையழுது நுரை தள்ளுவது-ஒருபோதும் நடுக் கடலுக்கு தெரிவதில்லை. அன்பு..! அறுக் கமுடியாத இரும்புச் சங்கிலி அறுந்துடைந்தால் ஒட்டமுடியாத கண்ணாடித் துவள்கள். துர்நாற்றம்..! பொறாமைச் செடியில் பூக்கும் இதயம் அன்பை அழிக்கும் மணமே வீசும். அன்புடன் -பசுவூர்க்கோபி-
-
- 6 replies
- 1.4k views
-
-
-
- 5 replies
- 920 views
-
-
திடீரென்று ஒரு நாள்மம்மல் பொழுதொன்றில்எல்லைப் பிரதேசத்தில் உள்ளஎன் வீட்டு வேப்ப மரத்தில்பறவை ஒன்று வந்துகுந்தி இருக்கத் தொடங்கியதுஅதன் ஈனஸ்வரமானபசிக்குரலைக் கேட்டுஎன் உணவில் சிறிதளவைஅதற்கு நான் வழங்கியும்இருந்தேன்,மறுநாள் கூடு கட்டவும்குடும்பமாயும் குழுமமாயும்வந்திருக்கவும் தொடங்கியது,என் நாளாந்தச் சமையலுக்காகவைத்திருந்த விறகுகளைகுச்சிகளாய்ப் பிரித்தெடுத்துகூடு கட்டுவதை நான்கவனித்தேன்,சில நாட்களில் முட்டை இட்டுக்குஞ்சும் பொரித்தது,அதன் பின்னர் ஒரு போதும் அதுஉணவு கேட்டுக் கத்தியதில்லைஎனக்குத் தெரியாமலும்தெரியவும் கூடஎன் சமையற் கட்டுக்குள்புகுந்து உணவுகளைஎடுக்கத் தொடங்கியதுஅதில் பலவந்தம் இருந்ததைநான் அவதானித்தேன்சொந்தம் கொண்டாடுவதையும், குஞ்சு பொரித்த காலங்களில்மரத்தின…
-
- 4 replies
- 1.6k views
-
-
எடுக்கவோ.....கோர்க்கவோ. அரவக்கொடியோனின் அரண்மனைதனில் பரவித் தொடுத்த முத்தாடை அணிந்து இரவியின் பெயருடை பானுமதியாள் புரவித் தேருடை மன்னனுடன் கரத்தில் தாயக் கட்டைகளோடு உருட்டி ஆடுகின்றாள் சதுரங்கம். அங்கதேசத்து மன்னனாம் கர்ணன் தங்கக் கவச குண்டலத்துடன் பிறந்தோன் இங்கு மாமன்னன் துரியனைக் காணவந்தவன் தங்கையனைய மங்கை வேண்ட --- சதுர் அங்கம் ஆட மஞ்சத்தில் எழுந்தருளி சிங்கம் போலவும் வீற்றிருந்தனன். ஆட்ட சுவாரசியத்தில் மலர்ந்திருந்தவள் இட்ட இலக்கங்கள் இல்லாமலாகி வாட்டமுடன் கட்டைகளை க…
-
- 11 replies
- 4k views
-
-
நீ தந்த உணர்வுகளால் நான் என் நிஜம் தொலைத்தேன்.. மனசெல்லாம் ரணமாகி யாருமற்ற தனிமைப் பொழுதுகளில் வாழ்வது உறுதியானது.. நான் கொண்ட மனநிலைப் பிறழ்வுகளால் என்னை வேண்டாமென வெறுத்து பிடிவாதமாய் விலக்கி வைத்திருக்கும் உறவுகளை சந்திக்கும் நிலையில் என் மனநிலை இல்லை.. மன்னிப்பு கேட்கும் முன்பே நிராகரிப்பட்டேன் என் நிஜங்களின் முன்.. நிஜங்கள் இல்லாது வாழ்வென்பது எப்படி? மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்று இன்னொரு பிறவியில் தெரிந்து கொள்கிறேன்.. நான் தவறானவன்.. செய்த தவறுகளுக்காக இந்தப் பிறவி வலிகளோடு போகட்டும்.
-
- 1 reply
- 815 views
-
-
என் உயிரானவள்..! ************** மின்னல் வந்த திசையைப்பார்த்தேன்-அவள் கண்கள் தெரிந்தது மேக முகில் அழகைப்பார்த்தேன்-அவள் கூந்தல் பறந்தது முல்லைப்பூவின் மலர்வைப்பார்த்தேன்-அவள் பற்கள் ஒளிர்ந்தது முழுமதியின் வரவைப்பார்த்தேன்-அவள் முகமே தெரிந்தது தேன் சொட்டும் பேச்சைக்கேட்டேன்-தமிழாய் பொழிந்தது தேசத்தின் முதல் பெண் இவழே.. என்னுயிரும் கலந்தது. அவள் வந்தபின்னாலே தமிழனானேன்-எனி ஆகுதியில் எரிந்தாலும் அழிவே இல்லை. -பசுவூர்க்கோபி-
-
- 5 replies
- 1.6k views
-
-
-
- 5 replies
- 2.4k views
-
-
நீங்கள் கெட்டவரா?நல்லவரா? ************************ அடுத்தவன் வாழ்வைக் கெடுத்தவன் அவனியில் அவனோ பெரியவன் எடுத்தவன் கொள்ளையடித்தவன் உலகினில் அவனோ உயர்ந்தவன். உழுதவன் உணவு படைத்தவன் ஊர்களில் உயிரே அற்றவன் உழைத்தவன் உணவு கொடுத்தவன் உறவுகளால் கால் மிதிபட்டவன். படித்தவன் பட்டங்கள் பெற்றவன் பட்டணியோடு வேலைக்கலைபவன் கால் பிடித்தவன் அரச வால் பிடித்தவன் கஸ்ரமில்லாமலே காசில் மிதப்பவன். கஞ்சா குவித்தவன் கற்பைக் கெடுத்தவன் மந்திரியோடவன் மதுக்கடைப் பெரியவன் லஞ்சம் பெற்றவன் ஊளல் புரிந்தவன் வஞ்சனைக் காரனே வாழ்வில் உயர்ந்தவன் நல்லவன் வாழ்வதேயில்லை-எனினும் நானிலம் போற்…
-
- 3 replies
- 1.7k views
-
-
கடவுள் ஒரு கைப்பிள்ள! முன்பொரு நாளில்... கடவுளை மனிதன் படைத்தான்... அன்றிலிருந்து கடவுள் மனிதனைப் படைக்கத் தொடங்கினார்... தாயுமானார், தந்தையுமானார்... பின்னொரு நாளில்... "மகனே நந்தனா, உள்ளே வா" சொல்லத் தயங்கினார்... பதிலுக்கு "சற்றே தள்ளி இரும் பிள்ளாய்" திருவாய் மலர்ந்தார்... நிற்க... "எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் நான் அவதரிப்பேன்" "பஞ்ச்" அடிப்பதில் வல்லவர்... தன் பெயராலே ஓர் அதர்மம் தடுப்பதற்கோ அஞ்சினார்... இன்றொரு நாளில்... கடவுளுக்கு மனிதன் தேவையோ இல்லையோ தப்ப முடியாது... மனிதனுக்கு "கடவுள்த்தேவை" மிக அதிகம்... ஏனென்றால் கடவுள் ஒரு கைப்பிள்ள... - பராபரன்
-
- 4 replies
- 1.5k views
-
-
**************************************** அன்பு கொண்டேன் ஆப்பு வைத்தாள்..! ************************** வெள்ளை நிறத்தவள் விரும்பினேன் அவளுடலை மெல்லிடை தனைப் பிடித்து மேனியில் தீயையேற்றி சொண்டிதழ் தன்னுள் வைத்து சுகம் கண்டேன் இழுத்திழுத்து என்.. வெந்தணல் நூந்தபின்பு வீசினேன் வீதிதன்னுள் அழிந்தவள் அவளினாவி ஆளுக்குள் உட்புகுந்து உறுப்புகள் கெட்டு நொந்து உயிருக்கே கொள்ளிவைத்தாள். பசுவூர்க்கோபி-
-
- 8 replies
- 1.6k views
-
-
"கவிதை' என்றால் என்ன ? பாட்டென்பார்! செய்யுளென்பார்! "கவி'யாலே ஆனதுதான் தமிழ்மொழி என்பார்! "கவிதை' என்னும் சொல்லை எடு; "தை'யை ஓரமாய் நீக்கி வை "கவி' மழையில் நீ நனைவாய்; கவிஞன் ஆவாய்! முதல் எழுத்து "க'வை நீக்கிப் பார்த்தால் முளை விட்டுத் துளிர்க்கின்ற "விதை' கிடைக்கும்,அங்கே விதவிதமாய் சொல் விதைகள் குவியல் ஆகும்! "கவி' என்னும் எழுத்திரண்டை நீக்கிப் பார்த்தால் ஓரெழுத்தில் "தை' மாதம் பிறப்பெடுக்கும்! அந்தத் தை பிறந்தால் அனைவருக்கும் புது வழி ஒன்று பிறந்திருக்கும் "வி' என்னும் எழுத்ததனை விரட்டி விட்டால்-நீ விரும்புகின்ற "கதை' ஒன்று விரிந்தெழும்பும்! விரிந்தெழுந்த "கதை'தனைக் கேட்டுக் கொண்டே விரித்…
-
- 4 replies
- 1.1k views
-
-
ஒரு செய்தியைக் கூட விட்டுச் செல்லாமலும்ஓர் வார்த்தையைக் கூடச் சொல்லாமலும்அன்று நீ காணாமற் போனாய்..சித்தம் கலங்கிப்போய் உன் தந்தையும்சாவீடு போல உன் வீடும் சிதறிப்போய்க் கிடந்ததுநீ இறந்திருக்கலாமெனபலர் தமக்குள் பேசிக்கொண்டார்கள்காலமும் ஓடிப்போயிற்றுவழமை போலவே தியாகங்களும்நினைவுகளும் எமக்குள்மங்கிப்போயின..சுரணை அற்ற வாழ்வுக்காகதொலை தேசத்திற்கு நான்வந்திருந்தபோதுபனிப் பொழிவினிடையேஉன்னைப் போலவே ஒருவனைப் பார்த்தேன்..!அது நிச்சயமாக நீதான்அதே கூர் மூக்கு,தெத்திப்பல்ஆயின்..நீ இறக்கவில்லை..!ஆனால் இறந்திருந்தாய்நிற்க முடியாமலும் இருக்க முடியாமலும்காலைச் சவட்டியபடி,கல்லூரிக் காலங்களில்எப்படி எல்லாம் கலகலப்பாய்இருந்தாய்..! இப்போதோபேச்சுக் கொடுத்தாலும்பெரும் மெளனம் காக்கின்றாய்..முட்கம…
-
- 13 replies
- 2.7k views
-