Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைக் களம்

கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. காதல் உன்னைக் கட்டிக்கொள்ள காமம் என்னை விட்டுச்செல்ல அடங்க வைத்தது வயது அடக்கம் செய்தது மனது வெள்ளத்தில் ஓடும் உள்ளம் பள்ளத்தில் நாடத் துள்ளும் சிற்றின்ப மாயையில் நெஞ்சம் சிலகாலம் மகிழ்வாய்த் துஞ்சும் ஆசையின் வழியோ சிறிது ஆக்கிரமிக்கும் அளவோ பெரிது அறுசுவை உணவு ருசிக்கும் அடிமையானால் அதுவுன்னைப் புசிக்கும் மோனம் உள்ளே செல்ல மோகம் வெளியே செல்லும் இருக்கும் நாட்கள் குறையும் இகவாழ்வு நாளும் கரையும் தேடி அலையாதே என்னை தேடு உனக்குள் உன்னை பார்ப்பவை எல்லாம் அழகு பார்வையை மாற்றிடப் பழகு அறிவின் வடிவே உலகு அன்பே இறையின் அலகு சரவிபி ரோசிசந்திரா

  2. இரவில் இன்பம் தரும் உன் விரல்கள் பகலில் விலகிப் போக வருத்தமொன்றே விருப்பப்பாடமாக எடுத்த எனக்கு மறுஇரவு முழுநிலவாகுமோ!

  3. "வலைத் தளங்களில் மூழ்கும் சிறுவர்களே!" "வலைத் தளங்களில் மூழ்கும் சிறுவர்களே கலையும் பண்பாடும் கொஞ்சம் அறியுங்கள்! இலைமறை காய்போல் அது உங்களை விலையும் பேசும் மோசமும் செய்யுமே!" "மலையாக உடல் அசையா குழந்தைகளே! மாலை உடற் பயிற்சியும் அற்றுப்போக காலை படிப்பிலும் கவனம் சிதற நிலை தடுமாறி வாழ்வு கெடுமே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  4. ஐந்தாண்டுக்கு ஒருமுறை அரங்கேறும் திருவிழா அயல் வீடு அறியாதார்.. அத்தனை வீட்டுக்கும் அஞ்சலில் வருவார் சிரித்தமுகம்.. கூப்பிய கரம்... வண்ணங்களில் அச்சிட்ட வாக்குறுதிகள்... ஆம், கெளரவ யாசகர்கள். பழையன கழிதலும் புதியன புகுதலும்... சொல்லப்படும் நியதி பழையனவே மீண்டும் புகுதல் இ‌ங்கு பழகிவிட்ட பண்பாடு.. இனி.. புகுந்தவரின் புழுகலும் புலம்பலும் சட்டமாகும். அவர் உறவுகளின் பெயர்ப்பலகை அலங்கரிக்கும் உயர் நாற்காலிகள் புள்ளடி இட்டவரின் கட்டைவிரல் மை ஈரம் காயும் முன் மறந்துவிடும் அவ‌ர் வாய் வீரங்கள் என் சொல்வது ?. சுதந்திர சேலை சூடிய தேசத்திரௌபதி தன் துகிலு…

  5. Started by uthayakumar,

    நிலம் எமக்கோ குந்தி இருக்க ஒரு முழ நிலம் கூட இல்லை எமக்கு முன்னும் பின்னும் அருகிலும் பக்கத்திலும் புத்தரின் வேர்கள் முளைத்து விட்டன இப்போது எல்லாம் சப்பாத்து கால்களின் சத்தங்கள் தான் நிலம் முழுக்க நிரம்பிக் கிடக்கின்றன உதைபடும் நிலங்கள் மௌனமாக அழுதுகொண்டு இருப்பதை யார் தான் அறிவர் .

    • 13 replies
    • 1.6k views
  6. பாரதிக்கு பிறந்த நாள் பறவைகள் பறக்கும் பொழுது தான் சுதந்திரத்தின் அருமை புரிந்தது பாரதியை படித்த பின்பு தான் தமிழின் அழகு தெரிந்தது.

  7. கனவில் கருங்கூந்தல் கலைய கண்ணிமைகள் காவியம் புனைய கைவிரல்கள் கவி பாட வெண்கழுத்து வெட்கத்தில் சிவக்க செவ்விதழ்கள் சுவை சொட்ட வியர்வையில் துவண்ட உன் எழிலுக்கு துகில் கலைக்க வந்த என் கைகள் காற்றில் கலந்தது! விலகும் உன் பெண்ணியம் கண்டு.

  8. "பெண் மனம்" "பெண் மனம் நிலாவரை கிணறோ கண் ஜாலத்தால் மயக்கும் மந்திரவாதியோ மண்ணின் பெருமையின் கலங்கரை விளக்கோ பண்பாட்டின் கலைவடிவம் இவளின் நாட்டியமோ?" "ஆடவள் உள்ளம் ஆடவனின் தடாகமோ அடக்கம் நிறைந்த அழகு மடந்தையோ அடங்கா மனிதனையும் அன்பில் அடக்குவாளோ திடம்பட காதல் கொடுப்பதே பெண்மனமோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]

  9. ஐந்தாண்டுக்கு ஒருமுறை அரங்கேறும் திருவிழா அயல் வீடு அறியாதார்.. அத்தனை வீட்டுக்கும் அஞ்சலில் வருவார் சிரித்தமுகம்.. கூப்பிய கரம்... வண்ணங்களில் அச்சிட்ட வாக்குறுதிகள்... ஆம், கெளரவ யாசகர்கள். பழையன கழிதலும் புதியன புகுதலும்... சொல்லப்படும் நியதி பழையனவே மீண்டும் புகுதல் இ‌ங்கு பழகிவிட்ட பண்பாடு.. இனி.. புகுந்தவரின் புழுகலும் புலம்பலும் சட்டமாகும். அவர் உறவுகளின் பெயர்ப்பலகை அலங்கரிக்கும் உயர் நாற்காலிகள் புள்ளடி இட்டவரின் கட்டைவிரல் மை ஈரம் காயும் முன் மறந்துவிடும் அவ‌ர் வாய் வீரங்கள் என் சொல்வது ?. சுதந்திர சேலை சூடிய தேசத்திரௌபதி தன் துகில…

  10. நம்பிக்கை ஒளி தெரிகிறது! ******************************** பேய்களையெல்லாம் ஓடக் கலைத்து பெருந்துயரனைத்தும் தீயில் கொளுத்தி புதுமுக வரவால் பொங்குது மண்றம் பொறுப்போம் விரைவில் விடியுமெம் தேசம். குடு குடு கிளடுகள் கதிரையில் இல்லை குடும்ப ஆட்சியும் கோட்டையில் இல்லை கொள்ளையும் திருட்டும் வரப்போவதில்லை கோயிலும் மசூதிக்கும் அழிவேதுமில்லை. இனங்களைப் பிரிக்கும் தந்தரமில்லை இளையோர் நெஞ்சில் வஞ்சகமில்லை எனிவரும் காலம் பஞ்சமுமில்லை எல்லோர் மனத்துக்கும் துன்பமுமிலை. தமிழர் தரப்பிலே ஒற்றுமையில்லை தனித் தனி சுயநலம் தேவையுமில்லை-சிலர் போரின் அவலத்தை புரிந்ததேயில்லை போன கதிரயை மறப்பதேயில்லை. தெற்கைப் போலவே திடமாய் நீ சேரு தென்றலாய் மண…

  11. மன்னித்துவிடு முத்துக்குமரா..!: எண்களில் தொலைந்தது இன முழக்கம் ! ஏழுக்கும் ஐந்துக்கும் மூன்றுக்கும் ரெண்டுக்கும் விலைபோயின அக்னி மரணங்கள்.! உரத்து முழங்கியவன் சிறையிடப்பட்டான் ! அடக்கி வாசித்தவன் அணியில் சேர்க்கப்பட்டான் மேடைப்புலிகளின் வீரவாள் உறையிடப்பட்டது ! இனி மடிந்து வீழுங்கள் தேர்தல் முடிந்து பார்ப்போம்.! இன உணர்விற்கு குறுக்கே எலெக்ஷன் வந்தால் என்ன செய்வது.! வாருங்கள் முட்டாள்களே ! ஜனநாயக கடமையாற்றுவோம் இறையாண்மை காப்போம். போங்கடாங் ...! நன்றி :தாமிரா. Thamira Kathar Mohideen ................................................................................................................

    • 2 replies
    • 731 views
  12. எல்லாவற்றிலும் முழுமை காண விரும்பும் நாம் தான் பாதி வாழ்க்கையை தொலைத்துவிடுகிறோம் முழுமையாய்... சரவிபி ரோசிசந்திரா

  13. இயற்கையின் இனிமையைத் தொலைத்து‌ மழலையின் சிரிப்பை மறந்து‌‌‌‌ நண்பனின் நகைச்சுவையைப் பிரிந்து‌‌‌ பெற்றோரின் பேணலைப் புறக்கணித்து‌‌ இரவு பகலாய் நிம்மதியைத் தொலைத்து பணப்பேயின் பிடரியைத் தொடர்ந்து பின் பலிகடாவாகி‌ சர்க்கரையை சகவாசம் செய்யும் நாமனைவரும்‌‌‌ இயந்திரமாய் திரியும் இவ்வாழ்க்கையில்‌‌ சுவரில்லா சித்திரமாய்‌‌ நரக‌ வாசம் செய்யும் நகரவாசிகளே !!!‌‌‌‌‌‌

  14. பூனைகள் விசித்திரமானவை என் வளவில் உணவுதேடிப் பல பூனைகள் வருகின்றன நான் அவற்றுக்கு எந்த உணவும் கொடுப்பதேயில்லை பாவம் அம்மா பூனைகள் என்கின்றனர் பிள்ளைகள் வீட்டுப் பூனைகளும் சரி துரத்திவிடப்பட்டவைகளும் சரி நிரந்தரமாய் ஓரிடத்தில் உணவு தேடுவதில்லை. பசி எடுக்கும் வேளைகளில் அயலில் உள்ள வீடுகளுக்கெல்லாம் அலைந்து திரிகின்றன பக்கத்துவீட்டில் தாராளமாய் உண்டபின்னும் கூட அடுத்தவீட்டிலும் மியாவ் என்றபடி உணவுக்காய் நிற்கின்றன அவை தம் வீட்டில் மட்டும் உண்ணாமைக்கு என்ன காரணம் இருக்கும் என நான் எண்ணுவதுண்டு. வீட்டு உணவு அவற்றிற்கு உருசிப்பதில்லையோ??? அன்றி போதுமானதாக இருப்பதில்லையோ??? கட்டாக்காலி நாய்களைப்போல்தான் பூனைகளும் இப்போ ப…

  15. "யாரடா மனிதன்? எங்கே இருக்கிறான்??" "உலக வாழ்க்கையின் மகத்தான மேடையில் வரலாறு படைக்கும் இதயங்களின் மத்தியில் மானிடப் பிறவி எடுத்தவன் மனிதனா? மனிதம் கொண்ட ஒருவன் மனிதனா??" "வெறும் சதையும் எலும்பும் மனிதனல்லா வெறும் பலமும் செல்வமும் மனிதனல்லா வெறும் புகழும் பதவியும் மனிதனல்லா யாரடா மனிதன்? எங்கே இருக்கிறான்??" "கண்கள் விழித்து கருணை காட்டும் கொடுமையைக் கண்டு மனது குமுறும் அறிவுடன் அறிந்து உதவும் கரமும் எங்கே இருக்குதோ? அவனே மனிதன்!!" "துயரம் கண்டு அக்கறை காட்டி ஆறுதல் கொடுக்கும் புன்னகை உதிர்ந்து தனக்கென வாழாது உலகத்து…

  16. 'ஏதோ ஒன்று நடக்கிறது' / 'Something happens' ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்று நடக்கிறது, ஆனால் உண்மையில் எதுவும் அர்த்தமுள்ளதாக இல்லை... மழை பெய்தாலும், என் இதயம் வறண்டு கிடக்கிறது, சூரியன் உதித்தாலும், என் நிழல் மட்டுமே வளர்கிறது. இலங்கையின் வாசனை மறைந்துவிட்டதா? அல்லது நான் என்னையே இழந்துவிட்டேனா? Every day, something happens, Yet nothing truly makes sense… Though it rains, my heart stays dry, Though the sun rises, my shadow only grows. Has the scent of Sri Lanka faded away? Or have I simply lost myself? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] 'ஏதோ ஒன்று நடக்கிறது' / 'Something happens' https://w…

  17. "மூன்று கவிதைகள் / 13" 'பஞ்சணை வேண்டுமா நெஞ்சணைப் போதுமே' பஞ்சணை வேண்டுமா நெஞ்சணைப் போதுமே வஞ்சனை இல்லா கம்பீர நாயகனே! கொஞ்சும் மொழியாலே உன்னைத் தாலாட்டவா தஞ்சம் தேடி என்னிடம் வந்தவனே மிஞ்சும் அழகு மகிழ்ச்சி தருகுதே! துள்ளும் ஆசை இதயத்தில் எழ சொல்லும் வார்த்தைகள் தேனாய் இனிக்க கள்ளும் தராத மயக்கம் வர உள்ளும் புறமும் நீயே தோன்ற அள்ளும் ஆசை அலையாய் பாயுதே? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ----------------------------- ''புகைப்படக் கவிதை'' "பெண்ணில் பிறந்தவன் அவளையே நாடுகிறான் மண்ணில் தவழ்ந்தவன் அதுவே ஆகிறான்! வண்ண விளக்கில் அணிச்சலை வெட்டுகிறான் வண்ணாத்திப் பூச்சியாய் மகிழ்ச்சியில் பறக்கிறான்!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தி…

  18. மனிதநேயம் பேசும் மகாத்மாக்கள் இங்கு அதிகம்! மதவெறியை பிரசவிக்கும் ஜாதிக்கட்சிகள் இங்கு ஏராளம்! மக்களாட்சியைப் பேசும் மன்னராட்சிக் கட்சிகள் இங்கு ஏராளம்! க‌வர்ச்சி காட்டி பணமீட்டும் கலர்ஃபுல் சேனல்கள் இங்கு ஏராளம்! பெண்களைத் துர‌த்தும் நடுநிசி நாய்கள் இங்கு ஏராளம்! அன்னையின் கருவறையில் நசுக்கப்படும் பெண் சிசுக்கள் இங்கு ஏராளம்! பெற்றோரை முதியோர் இல்லம் சேர்க்கும் கார்ப்பரேட் காலர்கள் இங்கு அதிகம்! ஏழையின் செந்நீரை உறிஞ்சும் இலட்சாதிபதிகள் இங்கு ஏராளம்! இவைய‌னைத்தும் அழிய‌ வேண்டிய‌ அவலங்களே !!!

  19. வேர் - வ.ஐ.ச.ஜெயபாலன் * நாற்பது வருடங்களுக்குப் பின்னும் எங்கள் பல்கலைக் கழக மலைவேம்புகள் முட்டி மோதித் தலையிடாதும் . . . சோடி பிரியாதும் வேர்கள் கோர்த்த காதலுடன் இன்னும் அருகருகாய். விடைபெறும் காதலரை வாழ்த்தி புதியவர்களுக்குக் குடை விரித்தபடி. . அன்று கண்கோர்த்தும் மனம் கோர்த்தும் புகலின்றி அலைந்தோமே இப் புனித நிழல்களைக் காணும்வரை. . சாதி அற்று காதலர் சிறகசைப்பது இருளின் வரமாய் மட்டுமிருந்த . யாழ்ப்பாணத்தின் நடுவே ஆண் பெண் விடுதலைப் பிரதேசமாய் ஒரு பல்கலைக் கழகம் வருமெனவும் அங்கு அஞ்சேலென மலைவேம்புகள் நிழலாகுமெனவும் என் பதின்ம வயசுகளில் கனவுகூடக் கண்டதில்…

    • 1 reply
    • 1.5k views
  20. கவிதையைப் பிரித்த ஐபிஎல் தூய வெள்ளை அரம்பையர் நின்றுமே துணங்கைக் கூத்திட வீரர் குழாத்தினர் ஆய தம்திறன் காட்ட, எறிந்த பந்(து) அண்டை வந்திட வீசி அடித்ததை பாயச் செய்து பவுண்டரி சிக்ஸராய் பலத்தைக் காட்டும் ஐபிஎல் களமதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அணிதிரண்டு குதிக்குமழகிலே நேயமுற்றனன் ஆதலினால் என்றன் நெஞ்சை நீங்கினளாம் கவிக்காதலி காலை மாலையிரவெனத் தேர்ந்திடாக் காதல் மேவ ஐபிஎல் லைப் பார்த்ததால் வேலையாவும் ஓர் மூலையிற் போனது வேறு நற்செயலில்லை யென்றானது. காலமோடியதாற் கவிக்காதலி காத்திருக்க விருப்பிலளாயினள் பாலையானது நெஞ்சப் பெருவெளி பாடயாதும் வராது தவிக்கிறேன் சீல மேவிய என் எழில் நங்கையை தேடி யெங்குமலைந்து திரிக…

    • 0 replies
    • 910 views
  21. ப “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” (நன்னூல் நூற்பா 426) பிரிந்து போகும் 2021டே உனக்கு பிரியா விடைதந்து அனுப்பும் இவ்வேளை.. இன்று.. புலரும் புது ஆண்டே இனம்,மொழி, சாதி,மதம், கறுப்பு,வெள்ளை ஏழை,பணம், அகதி,அடிமை என்னும் மனிதப்பிரிவுகள் நீக்கி மனிதநேயத்தை மனங்களில் இருத்தி அனைத்துயிரோடும் அன்பைப் பொழிந்து. அகிலத்தில் அனைத்தும் ஒன்றேயென்ற உறுதி மொழி கொடுத்து உயிர் கொல்லி நோய்கள் நீக்கி எம்மை வாழவைக்க வா! வா! 2022 புத்தாண்டே! உன்னை வாழ்த்துகின்றோம், வணங…

  22. வாழ்க்கை ஒன்றும் பாடத்திட்டம் அல்ல அப்படியே படித்துப் படியெடுக்க அது ஒரு இனிய கலை கற்க பணம் தேவையில்லை தெளிந்த நல்மனமே தேவை... சரவிபி ரோசிசந்திரா

  23. காணாமல் போன உறவுகளும் அது தந்த வலிகளும்

    • 8 replies
    • 1.2k views
  24. "மீண்டும் வேண்டும் இளமைப் பருவம்" "வாலிப வயதில் தவற விட்டதை வானம் பார்த்து ஏங்கி துடித்ததை வாலைக் குமாரியை தொழுது கேட்கிறேன் வாட்டம் தராமல் வாலியம் அருள்வாயா வாழா என் வாழ்வை வாழவே!" "வண்டுக் கண்கள் விரிந்து பார்த்து கண்டும் காணாத அழகை ரசித்து குண்டுக் கன்னத்தில் முத்தம் கொடுக்க மண்ணின் வாழ்வு முழுமை பெற மீண்டும் வேண்டும் இளமைப் பருவம்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [‘வாலைக் குமரி’ : இது, பொதுவாக, கடவுளைப் பெண்ணாக வணங்கிப் போற்றும் கவிஞர்கள் கையாளும் சொற்றொடர்!]

  25. அந்தாதிக் கவிதை / "சிந்தனை" & "பாமாலை" "சிந்தனை" "சிந்தனை செய்து சீராக வாழ்ந்தால் வாழ்ந்ததின் பெருமை உலகுக்கு புரியும்! புரிந்த வழியில் நேராக சென்றால் சென்றதின் பயன் மகிழ்வைக் கொடுக்கும்! கொடுத்து வாங்கி ஒழுங்காய் இருந்தால் இருந்ததின் அர்த்தமே நல்ல சிந்தனை!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ....................................................... "பாமாலை" "பாமாலை தொடுத்து பூமாலை போட்டேன் போட்ட மலர்களை முகர்ந்து பார்த்தாள்! பார்த்து என்னை அருகில் அழைத்தாள் அழைத்த எனக்கு பாடினாள் பாமாலை!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.