கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
649 topics in this forum
-
பொன்னம்மா அத்தையைத் தெரியாதவர் எம்மூரில் இல்லை. ஆனாலும் அவர் பற்றி விபரம் கேட்டால் யாருக்கும் சொல்லத்தெரிவதில்லை. உண்மையில் அவர் எனக்கு அத்தை கிடையாது. என் பெரியம்மாவின் கணவரின் தங்கை அவர். பெரியம்மாவின் பிள்ளைகள் அத்தை என்று கூப்பிடுவதனால் நாங்களும் அப்படியே கூப்பிட்டுப் பழகிவிட்டது. கூப்பிடுவது மட்டுமேயன்றி அவருக்கும் எமக்குமான நெருக்கமோ அன்பான பார்வையோ கூட என்றும் இருந்ததில்லை. என் வீட்டிலிருந்து இரண்டாவது வீடு அவர்களது எனினும் எண்ணிக்கை நினைவில் உள்ள நாட்களே நான் அங்கு செல்ல நேர்ந்திருக்கிறது. அவர்கள் வீடும் கூட ஒரு ஒதுக்குப்புறமாக இருந்ததும் வீட்டைச் சுற்றி யாரும் இனி வைத்தும் பார்க்க முடியாதவாறு சுற்றிவர மதிலும் இருந்ததாலுமோ என்னவோ நான் மட்டுமல்ல மற்றையவர்கள் கூ…
-
- 2 replies
- 1.1k views
-
-
லவ் பேர்ட்ஸ் -------------------- 'அன்பே வா' படத்தில் எம்ஜிஆர் நடிக்கவே மாட்டார் என்று சொல்லி விட்டாராம். ஒரு அம்மா, தங்கை செண்டிமென்ட், வில்லன்களை புரட்டி எடுத்தல், சில போதனைகள் இல்லாமல் என்னுடைய படம் எப்படி ஓடும் என்று நேரடியாகவே கேட்டார் என்பார்கள். வாத்தியார் நடிகர்களிலே மிகவும் தெளிவானவர். முன்னும் அவர் போல ஒருவர் இருக்கவில்லை, பின்னும் ஒருவரும் வரப் போவதில்லை. 'சரி, உங்களுக்காக நடிக்கிறேன்....... உங்களின் படம் என்றே சொல்லுங்கள்.....' என்று ஏவிஎம்மில் அவர் வைத்திருந்த மதிப்பு காரணமாக நடிக்க ஒத்துக் கொண்டார். படம் பெரிய வெற்றி. வாத்தியாரின் படங்களிலேயே வித்தியாசமான ஒரு படமாக இது என்றும் நிற்கின்றது. சரோஜாதேவி 'லவ் பேர்ட்ஸ்.......லவ் பேர்ட்ஸ்........…
-
-
- 20 replies
- 1.1k views
- 1 follower
-
-
கப்டன் தாரகன் தாரகையாய் ஒளிர்கிறான்....! கப்டன் தாரகன் வீரனாய் :- 03.04.1974வித்தாய் :- 01.02.2000 சொந்த இடம் - முள்ளியவளை. வன்னியின் வளங்களையெல்லாம் தன்னகத்தேயும் கொண்டமைந்ததே முள்ளிவளைக் கிராமம். அடங்காப்பற்றின் வீரமும் வரலாறும் முள்ளியவளை நிலமெங்கும் பரவியிருப்பதை வன்னியர்களின் வரலாறு சொல்கிறது. வீரமிகு வரலாற்றையும் வீரத்தையும் கொண்ட முள்ளியவளைக் கிராமம் தமிழீழ மீட்பிற்காக தனத புதல்வர்களையும் புதல்விகளையும் ஈந்த பெருமைக்குரிய கிராமங்களில் ஒன்றாகும். 03.04.1974 தம்பு தம்பதிகளின் பிள்ளையாகப் பிறந்தான் பார்த்தீபன். அக்கா , அண்ணா , தங்கையின் அன்பிற்கு அவன் ஆதாரம். சிறுவயதுக்கேயுரிய இயல்புகள் அவனையும் ஆட்கொண்டிருந்தது. வயல்களும் வரப்புகளும் இயற்கையி…
-
- 7 replies
- 1.1k views
-
-
கொஞ்சம் மங்களான பொழுது சூரியன் அப்பொழுதுதான் குளக்கரையின் முடிவில் மீனுடன் பேசிக்கொண்டு இருந்தான் தலையில் கொஞ்ச விறகு கட்டைகளை சுமந்தபடி மணியக்கா வேகமா குளக்கட்டின் விளிம்பில் நடந்தபடி இருந்தார் .... மேச்சலுக்கு போன லட்சுமி வீடு வரமுன் போகவேணும் என்னும் வேகம் மட்டும் மணியக்கா கண்களில் குடிகொண்டுள்ளது தான் போக கொஞ்சம் சுணங்கினாலும் களனி தண்ணியை தட்டி ஊற்றி முற்றம் எல்லாம் சேறா ஆக்கி போடுவாள் என்று சேலை தலைப்பை இழுத்து செருகிக்கொண்டு நடந்தாள் மணி ... அந்த அந்திசாயும் பொழுதுதான் கண்ணனுக்கு பிடிச்ச பொழுது குளக்கரை ஆலமரம் எப்பொழுதும் தனியா வந்து இருத்து ரசிப்பது அவனுக்கு ரொம்ப பிடிக்கும் தனிமையில் இருக்கும் பொழுதுகளில் அவனின் சிந்தனை எல்லாம் எதிர்காலம் எப்படி அமையும் என்பதே .…
-
- 4 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
காமாட்சி அம்மா, பேரன் விளையாடி கொண்டு இருப்ப தை பார்த்து கொண்டு அருகில் இருந்த படிக்கட்டில் இருந்தார். பக்கத்து வீட்டு பொபி .. பேரன் சங்கர் ...முன் வீட்டு மைக் ...இவர்கள் விளையாட ஆரம்பித்தால் பொழுதுபோவதே தெரியாமல் விளையாடுவார்கள் .கால நிலை நன்றாக் இருந்தால் மட்டு இது நடக்கும் இடையிடையே பேரன் சங்கர் ... அம்மம்மா ஜூஸ் என்றும் சிப்ஸ் என்றும் உள்ளே வந்துபோவான். குளிர் காலங்களில் கம்புட்டர் கேம் என்று ... கூப்பிடுவதும் கேட்காமல் வி ளை யாடுவார்கள். அன்று வழக்கம்போலவே விளையாடி விட்டு . குளிக்க செல்லும்போது அம்மாம்மா எனக்கு முட்டையும் பானும் தாங்கோ என்றான். ஓம் ராசா என்றவள் ..இவள் வேணி யையும் இன்னும் காணவில்லை மணி ஏழாகி விட்டது பேரனுக்கு பசி போலும் என்ற…
-
- 4 replies
- 1k views
-
-
இம்மாத ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகையில் வெளிவந்த என் சிறுகதை சிவாவுக்கு இன்னும் தூக்கம் கலையவில்லை. இரவு அடித்த வொட்காவின் தாக்கம் தலையிடியாய் மாறி அவனை எழுப்பியிராவிட்டால் இன்னும் கன நேரமாக அவன் தூங்கியிருப்பான். அப்பவும் எழும்ப மனமின்றிப் புரண்டே படுத்தான். இதமாக இளங்காலையில் வீசிய காற்றினால்கூட அவனை எழுப்ப முடியவில்லை. அதற்காக அவன் இரசனை அற்றவனும் அல்ல. மதுவையும் பெண்களையும் எப்படி இரசிக்கின்றானோ அதுபோல் இயற்கையின் விந்தைகளையும் தன்னை மறந்து இரசித்துமிருக்கிறான். வேலை அற்ற நாட்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் ஏனோ அவனுக்கு வெள்ளனவே விழிப்பு வந்துவிடும். அந்த நாள் முழுவதையும் அமைதியாக வீட்டிலிருந்தபடியே கரைப்பதான அவனின் அந்தத் தீர்மானத்தை யாராலும் கலைக்க முட…
-
- 3 replies
- 1k views
-
-
என் விழியே......... என்று ஆரம்பித்த அந்த கடிதத்தின் ஆரம்ப வரிகளை வாசித்தபோது அவளின் மனதில் இருந்து எழுந்த மெல்லிய நடுக்கம் உடலெங்கும் பரவி பெருமூச்சாக வெளிவந்தது. கடிதம் முழுவதையும் வாசிக்கவேண்டும் போலவும், அப்படியே அந்த கடிதத்தை கண்களில் வைத்து சத்தமிட்டு அழவேண்டும் போலவும் இருந்தது ரேவதிக்கு. தன்னுணர்வில்லாமல் கடிதம் கிடந்த அந்த கொப்பியை மூடியவள், ஒரு உந்துதலால் கொப்பியின் முதல் பக்கத்தை திறந்து பார்த்தாள். "மறத்தல் கொடுமையானது அதிலும் கொடுமையானது மறந்தது போல நடிப்பது" என அவளின் கையெழுத்தில் எழுதப்பட்டு இருந்தது. தனக்கு மட்டும் கேட்கக்கூடியவாறு அந்த வரிகளை வாசித்தவளுக்கு, முகத்தில் அறைந்தது போல இருந்தது அந்த வரிகள். அறையின் புழுக்கமும், ப…
-
- 3 replies
- 1k views
-
-
பெரியத்தார் வைத்தியசாலையில் அனுமதீக்கப்பட்டிருப்பதாக அறிந்து அவரைப்பார்க்க சென்றிருந்தேன். அவருடைய அறை இரு கட்டில்களைக்கொண்டது அறைக்குள் போனதுமே இருவர் தமிழில் வணக்கம் சொன்னார்கள் அத்தாருடன் பேசிக்கொண்டிருந்தபோது பக்கத்திலிருந்தவரும் சேர்ந்து கொண்டார் இவர் வயோதிபர் இல்லத்திலிருந்து இங்கு வந்துள்ளார் என அத்தார் அறிமுகப்படுத்தியதால் கொஞ்சம் அவரைக்கவனிக்கத்தொடங்கினேன் எனக்கு இது புது அனுபவம். நீங்கள் இன்னாரின் மகனல்லவா என என்னைக்கேட்டு எனது தகப்பனாரது பெயரைச்சொல்லி என்னை அதிசயிக்க வைத்தார் அவரை எப்படித்தெரியும் என்பதற்கு அவரைத்தெரியாமல் இருக்கமுடியுமா என்றார். இத்தனைக்கும் அவர் யாழ்ப்பாணத்தில் வேறு ஒரு ஊரைச்சேர்ந்தவர். பிரான்சிலுள்ள ஒரு பெர…
-
- 0 replies
- 1k views
-
-
ஆடி மாத பின்னிரவு ,அந்த நாள் ஏறித்த கோரவெய்யிலை சற்று தணித்து அதிகாலையை வரவேற்க பச்சை வயல்களை தழுவிய படி மெல்லிய இளங்காற்று தஞ்சாவூரை வருடுகின்றது . உரத்தநாட்டு கிராமம் - தஞ்சாவூர் புதுக்கோட்டை நெடுஞ்சாலையின் ஓரம் ஒரு கீற்றுக்கொட்டகையில் பெற்றோமக்ஸ் விளக்கு ஒளியின் உதவியுடன் சிற்பிகள் சிலர் உளியால் கருங்கற்களை செதுக்கிக்கொண்டு இருக்கின்றார்கள். பல்லவர் காலத்தில் இருந்து இன்று வரை இந்த உளிஓசை இங்கு கேட்டுக்குகொண்டுதான் இருக்கு . கொட்டகையை சுற்றி எங்கும் பெரிய பெரிய கருங்கற்கள் தீட்டபடாமல் நீண்டுகிடக்கின்றன. அங்கிருக்கும் ஒரு பெரிய கருகங்கல்லில் தலைக்கு கையை கொடுத்தபடி சாய்ந்திருகின்றான் சாரங்கன், அவனருகில் இருந்து இடது கைவிரலை ஆட்டிய படி எதையோ அழுத்திசொல்லும்…
-
- 0 replies
- 1k views
-
-
கடைசி எட்டு நாட்கள் ---------------------------------- ஏன் இறந்தவர்களுக்கு எட்டு என்ற ஒரு சடங்கைச் செய்கின்றார்கள் என்று நான் கேட்க மறந்துவிட்டேன். அம்மாச்சியிடம் அல்லது அம்மாவிடம் தான் இப்படியான கேள்விகளைக் கேட்பது. இருவரும் போன பின், வேறு எவரிடமும் இதைக் கேட்கத் தோன்றவில்லை. ஷெஹான் கருணாதிலகவின் 'மாலி அல்மேடாவின் ஏழு நிலவுகள்' என்ற நாவல் தலைப்பையும், சுருக்கத்தையும் பார்த்த உடனேயே, எட்டுச் சடங்கிற்கான விளக்கம் கிடைத்துவிட்டது. ஷெஹானிற்கு 2022ம் வருடத்திற்கான புக்கர் பரிசு கிடைத்தது. ஷெஹான் என்று ஒரு சக மனிதன் இந்தப் பூமியில் இருக்கின்றார் என்றே அதற்கு முன்னர் தெரியாது. இந்த நாவலின் உள்ளே என்ன உள்ளதென்றும் அப்பொழுது வரை தெரியாது. இந்த நாவலை ஏழு வருடங்கள…
-
-
- 14 replies
- 985 views
- 1 follower
-
-
பூவரசம் வேர் -------------------- எனக்குத் தெரிந்து பூவரசு மரத்திற்கு ஒரே ஒரு பயன் தான் அன்று இருந்தது. இலையைப் பிடுங்கி, நுனியைக் கிள்ளி விட்டு, அதைச் சுருட்டி, பீப்பீ செய்து ஊதுவது தான் எனக்குத் தெரிந்திருந்த அந்த ஒரு பயன். ஆட்டுக்கு போதிய குழை இல்லாத நாட்களில், கிடைக்கும் சில முள்முருங்கை, கிளிசரியா குழைக்குள் நடுவில் பூவரசம் குழையை வைத்து ஆடுகளைப் பேய்க்காட்ட சில தடவைகள் முயன்றிருக்கின்றேன். பூவரசங்குழை வீட்டிலும், வெளியிலும் தாராளமாகக் கிடைத்துக் கொண்டிருந்தது. ஆனாலும் ஆடுகள் அறிவுள்ளவையாக இருந்தன. பூவரசம் குழை குப்பைக்குள் மட்டுமே போய்க் கொண்டிருந்தது. பின்னர் ராதிகா 'பூவரசம் பூ பூத்தாச்சு.................' என்று அறிமுகமானார். பூவரசு திடீர…
-
-
- 11 replies
- 977 views
- 1 follower
-
-
"காலத்தினால் செய்த உதவி" "காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது." காலத்தோடு செய்த உதவியானது அளவால் சிறிதே என்றாலும், அதன் பெருமையோ உலகத்தை விடப் பெரியதாகும் என்கிறார் திருவள்ளுவர். ஆமாம் உதவி என்பது எப்படி செய்கிறோம், எவ்வளவு செய்கிறோம் அல்லது யாருக்கு செய்கிறோம் என்பது ஒரு பொருட்டே அல்ல என்பதை என்றும் தன் நெஞ்சில் பதித்து வாழ்பவள் தான், ஒரு பெரிய மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமத்தில், வாழும் உடலாலும் மனதாலும் அழகிய இந்த இளம் பெண். அவளின் பெயர் 'அருள்மலர்'. பெயருக்கு ஏற்ற அன்பு, இரக்கம், மற்றும் எந்தநேரமும் உதவும் இயல்பு கொண்டவள். ஒரு சிறிய கருணை செயல்…
-
- 1 reply
- 973 views
-
-
அந்த குதிரை கடை கடையாக போய் நிற்கின்றது உணவுக்கடை உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள மிஞ்சிய உணவுகளை கொடுக்கின்றனர் ...குதிரைக்கு பிரியமான உணவு கொள்ளு என்பது சின்ன வயசில எங்களுக்கு சொல்லி தந்தவையள் .ஆனால் இந்த குதிரை பசி காரணமாக எதையும் திண்ணும் .புலம் பெயர்ந்த டமிழனை போல..எங்களை தான் சொல்லுறன் ,புட்டு இடியப்பம் என்று காலை மாலை ஊரில் சாப்பிட்டு ஏப்பம் விட்டு கொண்டு திரிந்த நாங்கள் இப்ப பேர்கர்,நூடிள்ஸ்,ஸ்பகட்டி.பாஸ்டா என்று சாப்பிட்டு ஏப்பம் விடுற மாதிரி அந்த குதிரையும் கொள்ளு சாப்பிட்டுறதை மறந்து யாழ்ப்பாணத்தானின்ட பேக்கரியில் இருக்கும் பணீஸ்,கொத்து ரொட்டி,தோசை ,இட்லி எல்லாம் சாப்பிட்டு கொழுத்து சுப்பர் சரக்கு போல ஊரை சுற்றி கொண்டு தனக்கு ஏற்ற ஜோடியை தேடிக்கொண்டு இருந்தது.…
-
- 6 replies
- 973 views
- 1 follower
-
-
காலை வேலையை முடிச்சிட்டு மெட்ரோவில் பப்பரக்கா என்று முன்சீட்டு வரை காலை நீட்டி இருந்தது வந்தேன் ஒரு இடத்தில ஒரு அண்ணை ஏறினாறு அப்படியே வந்து என் முன்னாடி இருந்தாரு நானு காலை மடிச்சு மரியாதையா இருந்தேன் .. காரணம் ஏறினவர் நல்ல அழகா உடை அணித்து ஒரு உயர்தர வேலைக்கான மிடுக்குடன் அவ்வளவு அழகா இருந்தார் சிறிய புன்னைகையை தவழவிட்டபடி .. ஒரு சிறிய அமைதியின் பின் பேச்சு கொடுத்தார் தம்பி நீங்க தமிழா நான் மனதில் (படிச்சபயல் நம்மகூட பேசுது )நினைத்தபடி ஆமா அண்ணே என்று சொல்லிட்டு இருக்க சொன...்னாரு உலகத்தில வன்முறை ;பயங்கரவாதம் தலை தூக்கி ஆடுது (ஒருவேளை இவன் ரகசிய போலீஸோ) இதில இருந்து மீள ஒருவழிதான் இருக்கு .. நான் ஆவலா என்ன வழி அண்ணே நீங்கள்எல்லோரும் ஆண்டவரிடம் சரண் அடையவேணும் (இத…
-
- 5 replies
- 971 views
-
-
மணிக்கூட்டினைப் பார்த்தான் குமார். ஆறுமணி காட்டியது. "ஐயா உதில ஒருக்கா காசு கொடுக்கணும் . இப்ப உடன வந்திடுவன்".| என்றபடி, படியைநோக்கி வந்தவனுக்கு முன்னால், மிக வேகத்தோடு வந்து முன் பின் பிரேக்குகளை ஒரே சமயத்தில் அழுத்திப்பிடித்து ஆடிவிட்டு நின்றது பல்சர். அதில் இருந்தது ஒரு பதினாறு வயது மதிக்கத்தக்க சிறுவன். "அண்ண சீக்கரெட் இருக்கோ" மோட்டர்சைக்கிளில் இருந்தபடி கேட்டான். " உமக்கு தரேலாது நீர் சின்னப்பொடியன்." என்றான் குமார். அப்போதுதான் கடைக்குள் இருந்து குமாருக்கு உதவியாக வேலைசெய்யும் ஐயா எட்டிப்பார்த்தார். "அண்ண எனக்கில்ல அப்பாதான் வேண்டிவரச்சொன்னவர் அதுதான் நான் வந்தனான்" என்றான். இப்போது மோட்டர்சைக்கிளை விட்டு இறங்கி கடையின் சாமான் வேண்டும் பகுதியை அ…
-
- 6 replies
- 964 views
-
-
70வதுக்கு முந்திய இலங்கை தமிழர்களின் ஆதிக்கம் நிறைத்து இருத்தது சிங்களவனை எவரும் மதிப்பது இல்லையாம் கேட்டால் மோட்டு சிங்களவன் எண்டு சொல்லுவார்கள் எதுக்கும் அவன் தமிழ் வர்த்தகர்கள் முதலாளிகளிடம் கைகட்டி நின்று ஊதியம் வாங்குவது இவர்கள் சொல்வதை செய்வது ஆக தென்னிலங்கையில் நாங்கள் தான் ராஜாக்கள் என்கிற நினைப்பில் எம்மவர் இருத்தனர் என்பது உண்மை ஒரு உதாரணம் கொழும்பு செக்கட்டி தெருவில ஒருமுறை கோயில் திருவிழா நடத்து கொண்டு இருந்தது தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதி என்பதால் மக்கள் கூட்டம் மிக அதிகம் அரோகரா ஒலிகள வானை பிளக்க நடந்த திருவிழாவில் தேர் அசைந்து வர தேரின் சில்லுக்கு கட்டை வைத்து திருப்பிய படி ஒருவர் வர அதை கவனித்த படி இருத்த சிங்கள போலிஸ்காரன் கட்டை வைத்தவரை பிடித்து …
-
- 4 replies
- 950 views
-
-
தாயகத்தின் மீது பெரிதாக பற்றில்லை சாதாரண தமிழருக்கள்ள விருப்பம் மட்டுமே. ஊருக்கு போகணும் வன்னியில் தங்கணும் என்றதமே எச்சரித்தேன். ஏன் இந்த விபரீத விளையாட்டு அங்கு நடப்பவைகளை கேள்விப்படவில்லையா? என்னவும் நடக்கலாம் எதையும் செய்யக்கூடிய நிலை. அப்படியெல்லாம் கிடையாது இது உங்களைப்போன்றவர்கள் பரப்பும் கதை. நான் போய் ஒரு மாதம் நின்று வந்து சொல்கின்றேனே..... நேற்று வந்து சேர்ந்தார் எப்படி இருக்கு வன்னி? இது நான். நீங்கள் சொன்னதைவிட பயங்கரம் மாலை 5 மணிக்கே கதவைப்பூட்டிவிட்டு படுத்து விடுகிறார்கள் நன்றாக விடிந்து குரல்கள் கேட்கும்வரை வெளியில் வருவதில்லை....... அவசர தேவைகளுக்குமா??? ஒரு சட்டியை வீட்டுக்குள் வைத்துக்கொள்கிறார்கள் அவசரமா…
-
- 2 replies
- 937 views
-
-
அடிப்படை அனுபவம் ---------------------------------- பல வருடங்களின் முன் மகனுக்கு எட்டு வயதாக இருந்தது. அன்று ஒரு பிள்ளை எட்டு வயதில் எட்டு வித்தைகளையாவது கற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று இந்தச் சூழலில் ஒரு நிர்ப்பந்தம் இருந்தது. எட்டு வயதில் ஒரு அஷ்டாவதானி போல. இன்று சூழலின் நிர்ப்பந்தம் இன்னும் அதிகமாகிவிட்டது. ஒவ்வொரு பிள்ளைகளையும் சதாவதானிகளாக மாற்றாமல் இது ஓயாது போல. எனக்கு இதில் துளியளவும் நம்பிக்கையும் இல்லை, கூட்டத்துடன் சேர்ந்து ஓடுவதற்கான பொறுமையும் அன்று இருந்திருக்கவில்லை. ஊரில் நீச்சலை நானாகவே தான் சிறு வயதில் கற்றுக் கொண்டேன். கடலில் தான். சேர்ந்து போயிருக்கின்றோம், ஆனாலும் அவரவரே நீந்திப் பழகினோம். ஒரு நாள் இரண்டு பாகம் கடலில் கீ…
-
-
- 8 replies
- 918 views
-
-
மனவலி யாத்திரை.....! (ஒரு போராளியின் பிரிவின் நினைவு) இக்கதை 19.03.03 எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 11 வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்) அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும். அவனது குரல் அழைக்கிறது. விழிப்புலனில் சிக்காத முகம் ஆனால் அந்தக்குரல் …
-
- 4 replies
- 915 views
-
-
அவனுக்கு வயது ஒரு பூக்கும் காலத்துடன் சேர்த்து இருந்தது இளமை வசீகரமும் அவனை நன்றாக வளப்படுத்தி இருக்க தன்னை இன்னும் மெருகேற்ற அடிக்கடி ஜிம்மிலும் போய் இருக்க தவறுவது இல்லை. என்ன ஆளும் வடிவு கெட்டிக்காரனும் வேற. முதல் பார்க்கும் எந்தப்பெண்ணும் ஒருமுறை இருமுறை திரும்பி பார்க்கும் அழகன். பழைய இதிகாச கதாநாயகன் போல வர்ணிக்கும் அளவு அழகு இருத்தும் என்ன பண்ணுறது. பிறக்கும் போது அவனுடன் கூடி பிறந்தது வெட்கம். எவரையும் திரும்பி பார்க்க அவன் கண்கள் தயங்கும். அவனுடன் போவது அவனை பார்க்கும் பெண் நம்மளையும் பார்ப்பாள் என்கிற நட்பாசை. சரி விசயத்துக்கு வருவம். ஆலை இல்லாத ஊரில் இலுப்பம் பூ சக்கரை என்பதைபோல நம்ம ஏரியாக்கு நாம்தான் கீரோ. லுமாலா சைக்கிள மடக்கி வெட்டுற வெட்டில நாலு பெட்ட…
-
- 3 replies
- 908 views
-
-
திருவள்ளுவர் மிகவும் அழகாக சொன்ன குரளை நான் எனது கிறுக்கல் மூலம் சொல்ல முயற்சிக்கிரேன் ..தப்பாக இருந்தால் தம்ஸ் டவுன் (அதுதான் கட்டை விரலை கீழே காட்டுங்கோ) பண்ணுங்கோ .. வள்ளுவர் இந்த குரளை எப்படி எழுதியிருப்பார்?...எப்படி ஐடியா வந்திருக்கும்? என்ற சந்தேகம் எனக்கு வர எனது கற்பனை ....வாழ்க்கையின் தத்துவத்தை அனுபவ ரீதியாக இரு வரிகளில் எழு சொற்களில் சிறப்பாக சொல்லி சென்றுள்ளார்... ஐயன் திரு... இற்றைக்கு ஏரத்தாள இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் காதலர் தினத்திற்காக வாசுகி மல்லிகை பூ ,மற்றும் ஏனைய வாசனை திரவியங்கள் யாவும் பூசி கொண்டு வள்ளுவரை எதிர் பார்த்து காத்திருந்தாள்.அன்று காலை திரு வெளியே செல்லும் பொழுது "நாதா இன்று மாலை சீக்கிரம் வீடு வந்து சேருங்கள் வ…
-
-
- 9 replies
- 898 views
-
-
கலப்புத் திருமணம் ------------------------------- சினிமாவில் வருகின்ற அமெரிக்க மாப்பிள்ளைக்கும், உண்மையான நிலவரத்திற்கும் இடையில் இருக்கும் இடைவெளி சைபீரியா பாலைவனம் போல நீண்டதும், கொடியதும், பொதுவில் மற்றவர்களுக்கு தெரியாததும். அமெரிக்க மாப்பிள்ளை என்றவுடன் அடித்து பிடித்து பெண்ணைக் கொடுப்பார்கள் என்ற காலம் தமிழ்நாட்டில் எப்பவோ வழக்கொழிந்துவிட்டது. பெண் பார்க்கப் போகும் இடத்தில், பெண் வீட்டாரிடம் இருந்து 'மாப்பிள்ளை அமெரிக்காவில் என்ன விசாவில் இருக்கின்றார்....' என்ற முதலாவது கேள்வி வரும். என்ன விசா என்று பதில் சொல்ல ஆரம்பித்தாலே, கிரீன் கார்ட் இல்லையா, இன்னும் சிட்டிஷன் ஆகவில்லையா என்று அடுத்தடுத்த கேள்விகள் வரும். அவை வந்திடும் என்று சும்மா சொல்லித் தப்பவும் …
-
-
- 7 replies
- 896 views
-
-
கிணற்றடியில் குளித்து கொண்டு நின்றவனுக்கு ,தம்பி குளிக்கும் பொழுது அந்த தேசிக்காய் மரத்துக்கு வாய்க்கால் தண்ணியை வெட்டிவிடு என தந்தை சொன்ன ஞாபகம் வரவே ஒடிப்போய் மண்வெட்டியை கொண்டு வந்து தண்ணியை திருப்பிவிட்டான். காலில் சேறு அதிகமாக படிந்துவிடவே கிணற்று படியில் தேய்த்து கழுவிவிட்டு மீண்டும் குளிக்க தொடங்கினான்.. "நீ உன்னை அறிந்தால் நீ உன்னை " என்ற பாடலை பாடியபடி வாளியை கிணற்றினுள் இறக்கினான் ,தொம் என கீழே விழுந்தது வாளியினுள் தண்ணீர் நிறைந்தவுடன் " உன்னிடம் மயங்குகிறேன்" என்ற அடுத்த பாடலை பாடியபடி இழுக்க தொடங்கினான் ,பக்கத்து வீட்டு வளவில் இருந்த கிணற்றடியிலிருந்து கண்ணா ஆரிடம் மயங்கிறாய் என்ற குரல் கேட்க வெட்கத்தில் "இல்லை அண்ரி சும்மா ரேடியோவில் போகின்றது அதை …
-
-
- 11 replies
- 886 views
-
-
ஒரு ராத்திரி ------------------- பகலுக்கும் இரவிற்கும் இடையில் இருக்கும் இடைவெளி நடுச்சாமத்தில் வெளியே போகும் போது தெரியும். இரவின் இருட்டில் உயிர்களுக்கு சுதந்திரம் அதிகமாகக் கிடைக்கும். இருட்டு கட்டுப்பாடுகளை அவிழ்த்து தளர்த்தி விடுகின்றது. ஆறு போல வாகனங்கள் நில்லாமல் ஓடிக் கொண்டிருந்த பெரும் தெருக்கள் நிலத்தில் கீறப்பட்ட கறுப்புக் கோடுகள் போல அரவமற்ற இரவில் நீண்டு தெரியும். சிறு தெருக்கள் அசைவில்லாமல் நெளிந்து படுத்திருக்கும் பாம்புகள் போல அப்படியே கிடக்கும். வீடுகள், வீடுகளுக்குள் மனிதர்கள், நகரங்கள் என்று எல்லாமே எல்லாம் மறந்த ஒரு தூக்கத்தில் கிடக்கும். 'மோனத் திருக்குதடீ இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே........' என்ற வரிகள…
-
-
- 10 replies
- 883 views
- 1 follower
-