கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
647 topics in this forum
-
சிங்கள அரசின் இனவழிப்பின் போது காணாமல் போனவர்களை மீள் கொணர்தல் என்று உறவுகள் நடாத்தும் போராட்டம் தீர்வுகள் கிடைக்காமல் நீண்டு கொண்டே போகிறது. சிறீலங்கா அரசாங்கம் நீதியைப் புறம் தள்ளி தனது அதிகாரத்தை முன்னெடுத்துத் தொடர்ந்தும் போக்குக் காட்டிக் கொண்டே இருக்கிறது. பிள்ளைகளுக்காகப் போராட்டம் நடத்தும் பெற்றோர்களில் பலர் இறந்தும் விட்டார்கள். சமீபத்தில் நான் வாசித்த யேர்மன் நாட்டுச் செய்தி ஒரு தந்தை நடத்திய போராடத்தைப் பற்றியதாக இருந்தது. யேர்மனியச் சட்டம் இப்படி இருக்கிறதா என என்னை ஆச்சரியப்பட வைத்தது. இறுதியாக ஒரு நல்ல முடிவு வரும் என்று நம்பிக்கையுடன் நாற்பது வருடங்களாக மோல்மன் காத்துக் கொண்டிருந்தார். 79 வயதான மோல்மனின் மகள் பிரடெரிக் அவளது 17வது …
-
- 1 reply
- 666 views
-
-
"காதல் வேண்டாம் போ" மாலை நேரம் மகாவலி ஆறு, பேராதனை வளாகத்தினூடாக, இன்று ஏனோ மெதுவாக ஓடுகிறது. தனது மனதை யாரிடமோ பறி கொடுத்தது போல தட்டுத் தடுமாறி ஓடிக்கொண்டு இருக்கிறது. சூரியன் தனது கதிர்களை மடக்கிக் கொண்டு ஆற்றில் குளிக்க போய் கொண்டு இருக்கிறான். பறவைகள் மரக் கிளைகளை நோக்கி ஆரவாரமாக பறந்து கொண்டு இருக்கிறது. வண்டுகள் மலர்களை சுற்றி ரிங்காரம் இடுகின்றன. காதலர்களை வரவேற்பது போல சந்திரன் பிரகாசமாக ஒளி பரப்பிய படி மேகத்தினுடாக எட்டிப் பார்க்கின்றான். ஒவ்வொரு நாளும் இந்த நேரம் தனது காதலனுடன் ஆற்றங்கரையில் உலா வரும் மூன்றாம் ஆண்டு கலைப் பீட மாணவி தமிழ்செல்வியை இன்று அங்கு காணவில்லை? அவள் கற்பாறைகளுக்கிடையில், தன்னை மேல் அங்கியால் இ…
-
- 2 replies
- 393 views
-
-
அவனுக்கு வயது 44. ஜனவரி 26 மாலை 6:15 மணியளவில் Ulm நகரத்தில் Muensterplatz இல் உள்ள ஸ்டார்பக்ஸ் கோப்பிக் (Starbucks Coffee) கடைக்குள் நுளைந்த போது அவனிடம் துப்பாக்கி ( HK416) ஒன்றும், கைத்துப்பாக்கி ஒன்றும் இரண்டு கத்திகளும் இருந்தன. கோப்பியை ருசித்தவனுக்கு இப்பொழுது சிகரெட் தேவைப்பட்டது. கோப்பிக் கடைக்குள் புகைக்க அனுமதி இல்லை. கடைக்கு வெளியே போனால்தான் சிகரெட் பிடிக்க முடியும். எழுந்து கொண்டான். தனது மேசைக்குப் பக்கத்தில் இருந்த ஒரு தம்பதியிடம், “நான் புகைக்க விரும்புகிறேன். எனது பையைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கனிவுடன் கேட்டுக் கொண்டான். வாயில் இருந்து புகை தானாகவே வரும் அளவுக்கு வெளியே குளிர் இருந்தது. சிகரெட் புகையையும் அதனுடன் கலந்து விட்டான். கோப்ப…
-
-
- 11 replies
- 803 views
- 1 follower
-
-
முந்தைய இரவின் மெல்லிய பனித் தூறலிலும் சில்லென்று வீசும் காற்றிலும் மெல்லிதாக அவனுக்கு குளிரத் தொடங்கியது. ஆனாலும் அவனது நோக்கம், எண்ணம் எல்லாம் அந்த வீடு பற்றியதாக இருந்தமையால் அவன் எதையும் பொருட்படுத்தாதவனாக நடக்கிறான். இன்னும் அந்த வீட்டில் யாரோ இருக்கிறார்கள் என்பதற்கான அடையாளமாக மெழுகுவர்த்தியோ அல்லது ஏதோ ஒன்றின் வெளிச்சத்தில் இரண்டு உருவங்கள் அங்கும் இங்குமாக அசையும் விம்பம் மட்டும் யன்னலூடாகத் தெரிந்தது. *** பனிக்காலம் முடிந்து வசந்த காலம் வந்துவிட்டது. இன்னும் அந்த வீட்டில் வசந்த காலத்துக்குரிய எந்த விதமான அறிகுறியும் தெரியவில்லை. பனிப்பொழிவு தொடங்கிய இந்த ஆறு மாத காலத்தில் ஒரு தடவை கூட அவளைக் காணவில்லை என்பதும் இதற்கான காரணங்களில் ஒன்றாகியது. அவ…
-
- 5 replies
- 2.3k views
-
-
வாழ்க்கை எவ்வளவு சுவாரசியமானது . ஒவ்வொரு முயற்சியும் வெற்றி பெற நாம் படும் பாடு இருக்கிறதே, ஐயகோ, அவற்றை நாம் வெறுமனியே வார்த்தைகளால் கூறி முடிக்க முடியாது . அது சிறு செயலாகவும் இருக்கலாம் அல்லது ஒரு பெரிய பொறுப்பை ஏற்று அப்பணியை செவ்வனவே செய்து முடிக்க வேண்டியும் இருக்கலாம் . ஒவ்வொரு முயற்சிக்கும் முதல்படி நாம் அப்பணியை நாம் எப்படி செய்து முடிக்க வேண்டும் என்று எம்முள்ளேயே ஒரு திட்டம் இயல்பாகவே தோன்றிவிடும் . அப்பணியை செய்து முடிக்கும் வரை எமது உள்ளமும் அமைதியின்றி அல்லலுறும் . நிம்மதியின்றி அடிக்கடி செய்து முடிக்க வேண்டிய அப்பணியை நினைவு கூர்ந்து பார்க்க வேண்டியும் இருக்கும் . ஆனால் எத்தனையோ இடர்பாடுகளின் பின் தீவிர முயற்சி தோல்வி பெற்றால் அது தரும் ஏமாற்றம் ம…
-
- 11 replies
- 1.7k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
கொஞ்ச நாட்களாக நான் நின்மதியாக இருக்கிறேன். முன்பென்றால் எந்த நாள் என்றாலும் என் மனம் பதைபதைக்கத் தொடங்கிவிடும். கதைக்க ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டாது தொடர்ந்து இரண்டு மூன்று மணி நேரம் என்னை அப்படியே விட்டுவிடுவாள். எப்போதடா இவள் கதைப்பதை நிறுத்துவாள் என ஒவ்வொரு நொடியும் எதிர்பார்த்தபடி நான் வேறொன்றும் செய்ய முடியாது பார்த்துக்கொண்டே இருப்பேன். ஆரம்பத்தில் எல்லாம் அவள் பேசுவது எனக்கு சந்தோசமாகத்தான் இருந்தது. போகப் போக எனக்கே சலித்துப்போய் விட்டது. யார் தான் தொலைபேசியை அதுவும் கைத் தொலைபேசியைக் கண்டு பிடித்தானோ என்று அவன் மேல் எரிச்சல் எரிச்சலாக வரும். அவன் கண்டு பிடித்தது நல்ல நோக்கத்துக்குத்தான். ஆனால் இவளைப் போன்ற பலர் அதை பயன்படுத்தத் தெரியாமல் துர்ப்பிரயோகம் செய்…
-
- 16 replies
- 1.8k views
-
-
இளையராஜாவின் தரை தப்பட்டை இசை போல கூவி செல்லும் மல்ரி பெரல் செல்லின் ஒலி,ரகுமானின் இசைபோல காதுகளை கிழித்து போகும் சன்னங்களின் சத்தம்,திரும்பும் இடம் எல்லாம் பழைய தும்பு தடிகள் போல தும்பு எழும்பி இருக்கும் மரங்களும் கிளைகளும் ஐன்பது கலிபரின் துப்பல்கள் செய்த மாய வேலை இவ்வாறு ஒரு பெரும் சமர் ஜெயசுக்குறு களமுனையில் பப்பா லையினில் அரங்கேறிய படி இருந்தது .... நாலு நிலைகளு உடைத்து எதிரி மூர்க்கமாக ஒரு நகர்வை முன்னேடுக்கிறான் கடல்புலிகளின் மகளிர் படையணி லெப்டினன் கேணல் காதம்பரி தலைமையில் அதை எதிர்கொண்டு இருந்தது,நிலைகள் உடைத்து கட்டுக்குள் போகமுன்னம் உதவிகள் அழைப்புக்கள் என ,வோக்கிடோக்கி சங்கேத மொழிகளை பேசிக்கொண்டு இருந்தது ... பப்பா லையினில் அடிவிளுகுதாம் எக்கோ பக்கம்…
-
- 6 replies
- 2.6k views
-
-
"மழைக்காலம்" ஒரு காலத்தில், பசுமையான மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள ஒரு அழகிய சிறிய நகரத்தில், ஒரு இளம் பெண் வசித்து வந்தாள். அவள் எப்பொழுதும் இயற்கையின் அழகில் தன்னை இழந்து, அதில் இன்பம் காண்பவள். அதிலும் அவளுக்கு பிடித்தமான காலம் மழைக்காலம். ஆவணி புரட்டாசி மாதம் என்றால் அவளின் மகிழ்வை சொல்லவே முடியாது. மழைத்துளிகள் மலையில் நடனமாடி ஓடும் விதம், தன் பாதையில் உள்ள அனைத்தையும் புரட்டிக்கொண்டு நெளிந்து வளைந்து துள்ளி செடிகள் மரங்களுக்கிடையே, பெரிய பாம்புபோல ஊர்ந்து போவது, அவள் இதயத்தை நிரப்பி ஒரு மகிழ்ச்சி உணர்வை, ஒரு மயக்கத்தை தானாகவே ஏற்படுத்தும். அதை பார்த்து ரசிக்கத்தான் அவள் கார்காலத்தை விரும்பினாள். ஏன் பெயர்கூட ஈரநிலா, ஆமாம் மழையில் நனைந்த …
-
- 0 replies
- 388 views
-
-
அழகான அலங்காரத்துடன், உதட்டோரம் புன்னகை மாறாமல், அமைதியாக தூங்கும் தேவதையாக அவள். அவனைப் பார்க்கின்றாள். அவளையே பார்த்தபடி நின்றவனின் இறுகிய முகத்தில் ஏதோ தேடுகிறாள். இறுதி நிமிடங்கள், இப்போதாவது ஒரு வார்த்தை கணவனாக வாய்விட்டுச்சொல்வாயா? இத்தனை வருடங்கள் நீ எனக்குச் காட்ட மறந்த காதலை, நட்பை, சொல்லமறந்த நன்றிகளை, கேட்க மறுத்த மன்னிப்புகளை..... கடைசித் துளிகள், கைகள் நடுங்க, இதயம் கனக்க, அவன் அந்தப் பொத்தானை அழுத்துகிறான். காதலின்றி, நட்பின்றி, வாழாத வாழ்கையை வாழ்ந்த வலியுடன் அவள் காற்றில் கரைந்து காணாமல்ப் போய்விட்டாள். இதோ மனசுக்குள் மட்டும் அவன் நேசித்த(?) அவளை, ஒரு பிடியாக்கி மின்சாரம் கைகளில் தர, முதல் முறைய…
-
- 15 replies
- 2.1k views
-
-
கண்ணாடிக் கட்டிடத்தின் படிகளில் ஏறிக்கொண்டிருக்கையில் எதேச்சையாய்க் கண்ணாடி வழி வெளியே பார்க்கிறேன். காக்கி நிறத்தில் பாவாடை, நீல நிறத்தில் மேலங்கி. கரிய கேசம் சிற்றருவியாய் வழிய, லூயி விற்ரான் பை கையில் தொங்க அந்தத் தமிழ் அழகி வெளியே நடந்துகொண்டிருக்கிறாள். நான் தற்போது காதலில் கட்டுண்டு கிடக்கவில்லையேல் அவசியம் வெளியே சென்று அவளுடன் பேசி இருப்பேன். தவிர்க்க முடியாத அழகி. முறுவலோடு என் நடை கண்ணாடிக் கட்டிடத்திற்குள் தொடர்கிறது. நகரத்தின் கட்டிடங்களைத் தொடுக்கும் நடைபாதையாதலால் என்னை ஒத்தவர்கள் அதிகம்பேர் நடந்துகொண்டிருந்தார்கள். அனைவரது கைகளிலும் அலுவலக அலைபேசி. மின்காந்த அலைகள் எங்கும் நிறைந்திருந்தும் கண்ணில் படவில்லை. மனிதர்கள் தாம் தொழில்நுட்பத்தால் மட்டுமே இணைக…
-
- 6 replies
- 2.2k views
-
-
கோயிலில் தோரணம் கட்டுதல் ,அன்னதானம் வழங்குதல்,சாமி காவுதல் போன்றவற்றிக்கு நானும் என்னுடைய நண்பர்களும் முன்னுக்கு நிற்போம்.இவற்றை செய்யும் பொழுது சில சுயநலங்களை எதிர்பார்த்துதான் செய்வோம் ஆனால் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு பொது நலம் போல இருக்கும்,இது தான் அன்றைய காலகட்டத்தில் பொதுசேவை என்று கூட சொல்லலாம்..அம்மாவின் அல்லது சகோதரிமாரின் தங்க செயினை வாங்கி போட்டு கொண்டு மேலாடையின்றி சாமி காவுவோம் அதிலும் முன்னுக்கு நின்று காவ வேணும் என்ற போட்டியும் எங்களுக்கிடையே நடக்கும்.சாமியை இருப்பிடத்தில் வைத்த பின்பு பிரசாதத்தை பெற்று கோவில் வெளிமண்டபத்திலிருந்து அன்றைய தரிசனங்களை இரைமீட்பது எங்களது வழமை. சின்ன பெடியள் அடிபட்டால் அவங்களை விளத்தி சமாதானப்படுத்தி அனுப்புதல்,பக…
-
- 7 replies
- 2.7k views
-
-
நீல நிற விழிகளை அசைத்து அந்த மனிதன் உணர்த்திய கணத்தில் ஆரம்பிக்கத் தொடங்கியது அவனது எஞ்சிய நாட்கள். நாக்கு உலர்ந்து வார்த்தைகள் வறண்டுவிட்ட அந்தக் காலத்தை மெல்லியதாகக் கிழித்து வெளியேற முயன்றான். அன்றையின் பின், எப்போதும் அந்த நீலக் கண்கள் பிடரிப் பக்கத்தில் படர்ந்திருப்பதைப் போல ஒரு கனம் அவனது மனதினில் இறுகத்தொடங்கியது. அவனால், எஞ்சியிருப்பது எவ்வகையான வாழ்வென்றே தஅனுமானிக்க முடியாதிருந்தது. பிடரியில் ஒட்டியிருப்பதான நீலநிற விழிகள் இரவுகளில், மரங்களில், சுவர்களில் அசைந்து கொண்டிருப்பது போலவும் பாம்பின் நாக்குப் போல அவ்வப்போது இடைவெட்டிக் கொள்வதாகவும் கண்டுகொண்டான். காற்பெருவிரல் நகத்திற்கும் தசைக்கும் இடையினாலான, இடைவெளியினூடாக ஊடுருவும் மெல்லிய குளிர் போ…
-
- 1 reply
- 1.6k views
-
-
சம்மருக்கு பீச்சுக்கு போகவேணும் என்பது எங்கன்ட சனத்தின்ட அட்டவணையில் ஒன்று அதற்கு அவனும் விதிவிலக்கல்ல. "அப்பா வீக்கென்ட சரியான நெருப்பு வெய்யிலாம்" "ஏசி யை போட்டு வீட்டுக்குள்ள இருக்கவேண்டியதுதான்,ஒரு இடமும் போகதேவையில்லை" "அது எங்களுக்கு தெரியும் அப்பா, வி வோன்ட் டு கொ டு பீச்" " அங்க சரியான சனமாயிருக்கும் அதுக்குள்ள போய் கார் பார்க் பன்ணுறதெல்லாம் கஸ்ரம்" "கொஞ்சம் எர்லியாக போனால் கார்பார்க் கிடைக்கும்" "உந்த கொழுத்திறவெய்யிலுக்குள்ள போய் கறுத்து போவியளடி" "அதற்கு சன்கீறிம் பூசிக்கொண்டுபோகலாம் ,அப்பா உங்களுக்கு சுவிம் பண்ணதெரியாதபடியால் சும்மா லெம் எஸ்கியுஸ்களை சொல்லாதையுங்கோ" "எனக்கு சுவிம் பண்ணதெரியாதோ! நிலாவரையில் டைவ் அடிச்சனெ…
-
- 15 replies
- 3.9k views
-
-
மீண்டும் சிறுகதை எழுத ஆர்வம் வந்துள்ளது. இக் கதை எனது 20வது வயதில் எழுதப்பட்டது. கருத்தியல்ரீதியில் பிழைகள் இருக்கலாம். சரி பிழைகளை சுட்டிக்காட்டடினால் புதிதாக மீண்டும் எழுத முயற்சிக்கும் எனக்கு உந்துசக்தியாக இருக்கும். நன்றி உறவுகளே. மறுபக்கம் காலை 5.00 மணி துயிலெழுப்பி தனது கடமையைச் சரிவரச் செய்தது. துடித்தெழுந்த காயத்திரி மேலும் 10 நிமிடங்களுக்குத் துயிலெழுப்பியின் நேரத்தை அதிகரித்து வைத்து விட்டு இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்தாள். நாம் வேகமாக இயங்குகிறோமோ இல்லையோ சுவிஸ் நாட்டுக் கடிகாரங்கள் வேகமாகத்தான் தமது கடமையைச் செய்து கொண்டிருக்கின்றன. அடுத்து 10 நிமிடமும் 10 வினாடிகளாகக் கரைய, துயிலெழுப்பி மீண்டும் அலறியது. காயத்திரிக்கு இன்றைக்கு வேலைக்குப் போகாமல் …
-
- 9 replies
- 2.4k views
-
-
மனவலி யாத்திரை.....! (ஒரு போராளியின் பிரிவின் நினைவு) இக்கதை 19.03.03 எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 11 வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்) அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும். அவனது குரல் அழைக்கிறது. விழிப்புலனில் சிக்காத முகம் ஆனால் அந்தக்குரல் …
-
- 4 replies
- 915 views
-
-
"கந்தையா கனகம்மா" [உண்மைக் கதை] அத்தியடி, யாழ்ப்பாணத்தில் கந்தையா & கனகம்மா குடும்பம் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வந்தாலும், 1971 ஆம் ஆண்டுகளுக்குப் பின் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தாலும், சிறுபான்மையினருக்கு எதிராக எடுக்கப்பட்ட முறையற்ற நடவடிக்கைகளாலும், அதைத்தொடர்ந்து 1983 தமிழருக்கு எதிரான ஜூலை கலவரத்தாலும் அவர்களின் ஒவ்வொரு உறுப்பினரும் பாதுகாப்புக்காகவும், அமைதியான சூழலுக்காகவும், பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகவும் மெல்ல மெல்ல இலங்கை நாட்டை விட்டு வெளிக்கிடத் தொடங்கினர். அப்படியான ஒரு கால கட்டத்தில் தான், குடும்பத் தலைவன் கந்தையாவும் திடீரென ஒரு நாள், 18/02/2000 இல் மாரடைப்பால் காலமாகிவிட்டார். இனக்கலவரம் பெரும் போராக வெடித்த காலம் அது…
-
- 2 replies
- 352 views
-
-
"விடியல் உன் கையில்" "இரவின் மடியில் விடியலுக்கு காத்திராதே விழிகள் திறந்தால் விடியல் உன் கையில்!" நான் என் வீட்டின் மாடத்தில் தூணை பிடித்துக்கொண்டு நிற்கிறேன். என்னைச் சுற்றி என்ன நடக்குது என்று ஒன்றுமே புரியவில்லை. உள்ளத்தில் கொதிக்கும் வெப்பம் தாங்கமுடியாமல் இருக்கிறது. நான் இதுவரை சென்ற பாதை இப்ப குழப்பத்தை தருகிறது. நான் கீழே பார்க்கிறேன். வீதியின் ஓரத்தில் ஒரு சிவத்த மோட்டார் வாகனம் விடாமல் சத்தம் போட்டுக் கொண்டு இருக்கிறது. என் உள்ளமும் அதற்கு ஈடாக சிவந்து அலறிக் கொண்டு இருந்தது. இப்ப மாலை ஆறு மணி, இருட்ட ஆரம்பித்துக் கொண்டு இருந்தது. எனக்கு எரிச்சல் எரிச்சலாக இருந்தது. என் கண்கள் வீதியால் போகும் வாகனங்களை அங்கும்…
-
- 0 replies
- 180 views
-
-
"அம்மா, நான் மிருதங்கம் பழகட்டே" "நீ என்ன மேளக்காரனின் பிள்ளையே ,போய் படிக்கிற அலுவலை பார்" "அது மேளம் இல்லை அம்மா ,மிருதங்கம்...நேற்று சரஸ்வதி பூஜைக்கு பள்ளிக்கூடத்தில் ஒருத்தர் வந்து ,வடிவா தலை எல்லாம் ஆட்டி அடிச்சவர், " "எனக்கு மேளத்திற்கும் மிருதங்கத்திற்கும் வித்தியாசம் தெரியும் ,நீ சொல்லித்தரத்தேவையில்லை" அம்மா மிருதங்கம் படிக்க வேண்டாம் என்று சொன்னபின்பு சுரேஸ் மிருதங்க கச்சேரி,மேளக்கச்சேரி போன்றவற்றின் ரசிகனாக மட்டும் இருந்தான். ஊர் கோவிலில் சுரேஸ் குடும்பத்திற்கும் ஒரு திருவிழா ஒதுகப்பட்டிருந்தது. சுரேஸின் உறவினர்கள் எல்லோரும் அந்த திருவிழாவின் உபயகாரர்கள். கோவில் மேளத்துடன் இன்னும் இரண்டு கூட்ட மேளம் அவர்களின் திருவிழா அன்று நடை பெறும் …
-
- 15 replies
- 2.5k views
-
-
2010 ஜனவரியோடு அவனும் அஞ்சலியும் பிரிந்து மூன்று வருடங்கள் ஆகிவிடும். இந்த நிலையில்தான், அஞ்சலி அவனுடன் பேசும்போதெல்லாம்.... அடிக்கடி அவனிடம் ஒரு விடயத்தைப் பற்றிக் கேட்க ஆரம்பித்தாள். "எப்பயடா உன்னை பாக்கிறது?" என அவள் அடிக்கடி கேட்க ஆரம்பித்ததிலிருந்தே, அஞ்சலி அவனை ரொம்பவே மிஸ் பண்ணுறாள் என்பதனை இவனால் உணரமுடிந்தது. ஆனால் இவனது அப்போதைய சூழ்நிலை அவளது விருப்பத்தை உடனடியாக நிறைவேற்றக்கூடியதாக அமைந்திருக்கவில்லை 'அஞ்சலியை பார்க்கவேணும்... அவளோடையே இருக்கவேணும்....ரொம்ப சந்தோசமாக.... மனம் நிறைந்த காதலோடு வாழவேணும்..... !' இதைத்தவிர அவனுக்கு அதிகபட்ச ஆசைகள் என்று எதுவும் இருந்ததில்லை. அவனது எண்ணமும் சிந்தனையும் அதுமட்டுந்தான். அவனது மனம் பூராவும் அஞ்சலியும் அவ…
-
- 4 replies
- 1.7k views
-
-
அமெரிக்காவுக்கு வந்து பத்து வருடங்கள் ஆகின்றன. புதுசா வீடு வாங்கின போது அவனுக்கு இருந்த ஒரே எதிர்பார்ப்பு வீட்டுக்குப் பின்னுக்கு நிறையக் காணி வேணும். அந்தக் காணி நிறைய அப்பிள் நட வேணும் என்பதுதான். அப்பிள் நடுறதெண்டால் ஒரு மரம் நடக் கூடாதாம் ரண்டு மரம் நட்டால் தான் அதுக்குள்ளே மகரந்தச் செயற்கை நடந்து கலப்படம் இல்லாத பழம் வரும் எண்டு தெரிந்த ஒருவர் சொன்னதைக் கேட்டு, மங்களகரமாய் இருக்கட்டுமேன் எண்டு ரண்டு வருசத்துக்கு முதல் வந்த கலியான நாளுக்கு ரெண்டு அப்பிள் மரங்களை வாங்கி வந்து வீட்டின் பின் பக்கம் இருந்த காணியில் நட்டபோது அவனுக்குச் சொல்ல முடியாத மகிழ்ச்சி. சின்ன வயசில இருந்து உந்த அப்பிள் பழம் எண்டால் அவனுக்கு கொள்ளை ஆசை. ஒருக்கா தொட்டுப் பார்…
-
- 3 replies
- 1.3k views
-
-
புதிதாக வந்தவர்கள் -------------------------------- அந்த வீட்டின் முன்னால் அவ்வளவு ஆட்கள் இதுவரை கூடினதே இல்லை. இருபது வருடங்களுக்கு மேலாக இதே தெருவிலேயே, ஒரே வீட்டிலேயே நான் இருக்கின்றேன். அந்த வீடும், அங்கு இருப்பவர்களும் அதைவிட இன்னும் அதிக காலமாக அங்கே இருக்கின்றார்கள். அங்கு இருப்பவர்கள் இருவரும் வயதான கணவன் மனைவி. நாங்கள் இங்கு குடிவரும் போதே அவர்கள் வயதானவர்களாக இருந்தார்கள். சில வருடங்களில், வருடம் முழுவதும் கூட, அவர்களின் வீட்டிற்கு எவரும் வருவதில்லை. ஆட்கள் வந்த வருடங்களில் கூட ஓரிருவரே இதுவரை வந்து போயிருக்கின்றனர். ஆரம்பத்தில் அவர் என்னுடன் அவ்வளவாகப் பழகவில்லை. பிள்ளைகளும், நானும் ஒருநாள் தெருவில் பந்து விளையாடிக் கொண்டிருந்தோம். ப…
-
-
- 9 replies
- 486 views
- 1 follower
-
-
'ரி-56 ஆல் 'ரச்' அடிச்சுப் பாத்தபோது, ற்றிகரை விரல் அமுக்கியதற்கும், குண்டு வெளிக்கிட்டு இலக்கை அடைந்ததற்குமிடையேயான நேரம் எத்தனை சிறியது என்பது என் மூளை கிரகிக்க முடியாத சிறியதாய் இருந்தது.... படங்களிலும் கதைகளிலும் துப்பாக்கி சுடுதலைப் பார்த்ததற்கும் சுட்டபோது உணரப்பட்டதற்குமிடையேயான வித்தியாசம் வர்ணனைக்கு அப்பாற்பட்டது. சுடுதலின் ஒலி எத்தனை பெரியது! அது செவிப்பறையில் எத்தனை கடினமாய் உதைத்தது என்பதும், துப்பாக்கியின் எனது தோளின் மீதான உதைப்பின் பரிமாணமும் நான் நினைத்திருந்ததைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு பெரிதாய் இருந்தது. சண்டைகளைத் திரைப்படத்தில் பார்ப்பதற்கும் ஒரு குண்டு சுடுவதில் உள்ள உடல் வருத்தத்திற்குமிடையேயான வேறுபாடு அப்போது தான் என்னால் உணரப்பட்டது. அந்த சுடுக…
-
- 9 replies
- 1.2k views
-
-
பேருந்து தரிப்பிடம் மெலிய குளிர் இரண்டு ஜோடிகள் அவள் இருக்கையில் இருதபடி வெறித்து பார்க்கிறாள் வேறு திசையில் ,அவன் நின்றுகொண்டு மறுதிசையில் ஒரு சிகரெட்டை பற்றி ஆழமா இழுத்து புகையை குளிரின் புகாருடன் சேர்த்து வெளியேறுகிறான் .. சட்டென்று திரும்பியவன் அவளை நோக்க அவளே கண்டுக்காதவளா மறுக்க எழுந்து, தன பையில் இருந்து உருவி ஒரு சிகரெட்டை பற்றிக்கொண்டு பேருந்தை எதிர்பார்க்கிறாள் .. வந்து நிக்கிறது பேருந்து அவள் கையில் இருந்த சிகரெட்டை காலில் போட்டு மிதித்து விட்டு ஏறுவதுக்கு தயாராக ,அவனோ அங்கயே நிக்கிறான் திரும்பி பார்த்தவள் தானும் நின்றுவிடுகிறாள் .. திரும்பி வந்து அவளின் காதோரம் எதோ சொன்னவன் அவளின் கைகளை இறுக்கி பிடித்து, மறுகையால் இடையை வளைந்தபடி கொஞ்சலா அவளிடம் ப…
-
- 7 replies
- 1.3k views
-
-
கோட்பாட்டின் சதி ----------------------------- வார இறுதி நாட்களில் ஏதாவது ஒன்றின் பெயரால் ஒன்றாகக் கூடுவதும், அன்றைய அரசியலை, சினிமாவை, விளையாட்டுகளை அலசி ஆராய்வதும் புலம்பெயர் சமூகத்தின் ஒரு அடையாளம் ஆகிவிட்டது. சமூக ஊடகங்களை விட நேரில் ஒன்றாகக் கூடி விடயங்களைப் பகிர்வது மிக இலகுவான, சுமூகமான ஒரு செயல். இன்டெர்நெட்டில் அவர்களுக்குள் ஆவிகள் புகுந்தது போல சுற்றிச் சுழன்று அடிக்கும் பலர் நேரில் ஒரு வார்த்தை கூட கதைக்கமாட்டார்கள். ஒரு கருத்துமே அவர்களிடம் இருக்காது. அவர்களா இவர்கள் என்றும் தோன்றும். நிதானமான நிலையில், நேரிலும், இன்டெர்நெட்டிலும் தீ மிதிப்பின் போது வருவது போல கடும் உருக் கொண்டு உலாவுகின்றவர்கள் மிகச் சிலரே. எங்களின் வகுப்பு படித்…
-
-
- 16 replies
- 648 views
-