Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அதிமுகவிலிருந்து கலைராஜன், நாஞ்சில் சம்பத், புகழேந்தி, சி.ஆர்.சரஸ்வதி நீக்கம் கலைராஜன், நாஞ்சில் சம்பத், புகழேந்தி, சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதிமுக அவசர ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் தேர்தல் தோல்விக்கு பின்னர் அதிமுகவின் அவசர ஆலோசனைக்குழு கூட்டம் சென்னை ராயபேட்டை கட்சி அலுவலகத்தில் கூட்டப்பட்டது. இதில் அதிமுக முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கலந்துக்கொண்டனர். கூட்டத்தின் முடிவில் கட்சியிலிருந்து சிலரையும், மாவட்டச்செயலாளர் பொறுப்பிலிருந்து சிலரையும் விடுவித்துள்ளனர். அதிமுக தல…

  2. சென்னை: பிரதமர் கனவில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் கனவைத் தகர்க்கும் வகையில் படு தீவிரமாக செயல்பட்டு வருகிறார் சோ என்று பரபரப்புப் பேட்டியளித்துள்ளார் ம.நடராஜன். இதுகுறித்து விகடனுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் சோ மீது பயங்கரமாக பாய்ந்துள்ளார். நடராஜன் அளித்துள்ள பேட்டியிலிருந்து சில பகுதிகள்... பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், சர்வதேச வாழ்வியல் சமூகத்தின் மாநாடு வருடத்துக்கு ஒருமுறை நடைபெறும். இந்த வருடம் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடந்தது. 52 நாடுகளைச் சேர்ந்த பல்துறை வல்லுநர்களுடன் இந்தியா சார்பில் நான் கலந்துகொண்டு மனித உரிமைகள் பற்றி பேசினேன். கனடாவில் உள்ள டொரொன்டோ நகரில், உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் நடைபெற்ற கரும்புலிகள் தினத்தில் பங்கெடுத்த…

  3. 7 தமிழர் விடுதலை தொடர்பாக விரைவில் முதல்வர் நல்ல முடிவை அறிவிப்பார் – அமைச்சர் ரகுபதி 5 Views ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 29 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்து வரும் 7 தமிழர் விடுதலை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் ஆலோசனை நடத்தி நல்ல முடிவை அறிவிப்பார் என்று தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 29 ஆண்டுகளுக்கும் மேலாக சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள். இவர்கள் 7 பேரையும் தமிழக அரசே சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றி விடுதலை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து முந்தைய அ…

  4. கன்னியாகுமரி: திருமணத்திற்கு நிச்சயதார்த்தம் நடத்தி வைத்த பாதிரியாருடன் மணப்பெண் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காணாமல் போன இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். கேரள மாநிலம் வயநாடு மானந்தாவடி பகுதியை சேர்ந்தவர் பீட்டர். இவர் வயலாங்கரையில் உள்ள தேவாலயத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பாதிரியாராக பணியாற்றி வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் பிலோமினா. இவர் முதுகலை பட்டதாரி. வறுதட்டுவிளை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இவர் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவர் பாதிரியார் வேலை பார்க்கும் சர்ச்சுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது பாதிரியார் பீட்டருக்கும், பிலோமினாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் செல்போனிலு்ம் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது. இது காலபோக்கில் காதலாக மல…

    • 6 replies
    • 823 views
  5. உட்கார வச்சேன், சாப்பாடு கொடுத்தேன், 15 நிமிஷம் டைம் கொடுத்தேன்.. இதுதான் பொன் மாணிக்கவேல் ஸ்ரைல் ! சென்னை: இளைஞர்களை நம்பி என் பணியை விட்டுச் செல்கிறேன் என்று ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தனது பிரிவு உபசார விழாவில் உருக்கமாக கூறியுள்ளார்.தமக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்து முடித்து விட்டார் பொன்.மாணிக்கவேல். எத்தனை எத்தனை சிலைகளை மீட்டெடுத்தார் இவர்!! குறிப்பாக 50 வருஷத்துக்கு முன்னாடி காணாமல் போன ராஜராஜ சோழன், உலகமாதேவியின் ஐம்பொன் சிலைகளை குஜராத்திலிருந்து மீட்டு கொண்டு வந்ததற்கு தஞ்சாவூர் மக்களே விழாவாக எடுத்து கொண்டாடினார்களே.. இதைவிட வேறு என்ன சிறப்பு ஐஜி-க்கு இருக்க முடியும் ?பொன் மாணிக்கவேல் என்றால் அதிரடி.. நாளை முதல் அது மிஸ்ஸாக போகுது ! …

  6. கைநாட்டு தான் வைத்தார் ஜெயலலிதா...தேர்தல் கமிஷனின் ஆதாரம்... கடந்த சட்டசபை தேர்தலில், பணப்பட்டுவாடா புகாரில் அரவக்குறிச்சி,தஞ்சாவூர் தொகுதிகளின் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் கமிஷன். திருப்பரங்குன்றம் தொகுதியில் வென்ற திமுக எம்.ல்.ஏ சீனிவேல் மரணமடைந்தார். தஞ்சாவூர், அரவக்குறிச்சி,திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளின் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. நவம்பர் 19-ம் தேதி இந்த மூன்று தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த மூன்று தொகுதிகளுக்கான வேட்புமனு தொடங்கியது.திமுக, அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்ட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு தேர்தலில் ப…

  7. இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு, 30 ஆண்டுகளுக்கும் மேலான கொடுஞ்சிறைவாசத்துக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட தம்பி ராபர்ட் பயஸ், அண்ணன் ஜெயக்குமார், தம்பி முருகன், தம்பி சாந்தன் ஆகிய நால்வரும் திருச்சி சிறப்பு முகாமில் அடிப்படை வசதிகள்கூட இல்லாது, அவதிப்பட்டு வரும் செய்தி பெரும் வேதனையளிக்கிறது. சிறைக்கொட்டடியிலிருந்து விடுதலைபெற்ற அவர்கள், அதனைவிடக் கொடுமையான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு, வதைக்கப்படுவது எதன்பொருட்டும் ஏற்புடையதல்ல. தம்பி ராபர்ட் பயசும், அண்ணன் ஜெயக்குமாரும் புழல் நடுவண் சிறையிலிருந்து திருச்சியிலுள்ள சிறப்பு முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு, 60 நாள்களுக்கு மேலாகியும் அங்கிரு…

    • 2 replies
    • 822 views
  8. நளினியை விடுதலை செய்ய முடியாது- சென்னை உயர்நீதிமன்றில் மத்திய அரசு தகவல் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினியை விடுதலை செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றில் இந்திய மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் நளினி, சென்னை உயர்நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள், நன்னடத்தை விதியின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், என்னை இதுபோல முன்கூட்டியே விடுதலை செய்யவில்லை. இதற்கிடையில், ராஜீவ…

    • 3 replies
    • 821 views
  9. அமைச்சர்களை சென்னை திரும்ப ஜெயலலிதா உத்தரவு! [Thursday 2014-10-02 08:00] பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வாசலில் காத்திருந்த தமிழக அமைச்சர்களை சென்னை திரும்பும்படி, ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதையடுத்து எல்லா அமைச்சர்களும் நேற்று இரவே சென்னை திரும்பினர். கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று, ஜெயலலிதா ஜாமின் மனு விசாரணைக்கு வந்ததை அடுத்து எல்லா அமைச்சர்களும் பெங்களூரு விரைந்தனர். சிறை வாசலில், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, எம்.சி.சம்பத், விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர்கள் செ.ம.வேலுச்சாமி, பச்சைமால் உள்ளிட்ட ஏராளமானோர் காத்திருந்தனர். மாலை, 3:00 மணியளவில், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை மட்டும் சந்திக்க ஜெயலலி…

  10. ஐநா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்றாலும், ஆட்சி மாற்றத்துக்கு பிறகு இந்தியாவின் இலங்கை கொள்கையில் மாற்றம் வரும் என்கிறார் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் பி சஹாதேவன். இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் முன் மொழியப்பட்டிருக்கும் தீர்மானம் அடுத்தவாரம் ஐநா மன்றத்தின் மனித உரிமை அவையில் கொண்டுவரப்பட இருக்கும் சூழலில், இலங்கை தொடர்பான சர்வதேச நாடுகள், குறிப்பாக இந்தியாவின் நிலைப்பாடுகள் குறித்த விவாதம் சூடுபிடிக்கத்துவங்கியிருக்கிறது.முன்பு சியாரோலியோன் விவகாரத்தில் கடைபிடிக்கப்பட்ட அதே அணுகுமுறை இலங்கையிலும் கடைபிடிக்க வேண்டுமென பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இவரது இ…

  11. ஜெய்ஹோ… ஜெயா ஹோ! தமிழீழம் முதல் கூடங்குளம் வரை பிரிவு: அரசியல் அண்ணாவின் ஞாபகம் அதிகமாக அம்மாவுக்கு வந்துள்ளது. ‘நமது அரசியல் சட்டம் நிலையானது அல்ல. ஏனென்றால், ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் சட்டத்தைத் திருத்த அந்த மக்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு’ என்ற அண்ணாவின் வாசகத்தை ‘கெயில்’ விவகாரத்தில் உதாரணம் காட்டினார். ‘தமிழன் யாருக்கும் தாழாமல் – யாரையும் தாழ்த்தாமல், எவரையும் சுரண்டாமல் – எவராலும் சுரண்டப்படாமல், எவருக்கும் எஜமானனாக இருக்காமல் – உலகில் எவருக்கும் அடிமையாக இல்லாமல் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே எங்களது தலையாய கொள்கை’ என்று ‘ஈழத் தமிழர்’ தீர்மானத்தில் சொன்னார். இது வரை தன் வழி யில் போய்க்கொண்டு இருந்த ஜெயலலிதா, இப்போதுதான் அண்ணா வழிக்கு வந்துள்ளார். …

    • 0 replies
    • 821 views
  12. பதிவு செய்த நாள் : மார்ச் 26,2013,23:37 IST கருத்துகள் (12) கருத்தை பதிவு செய்ய சென்னை: ""மெஜாரிட்டி அரசில், மின்வெட்டு, 16 மணி நேரமாக இருக்கிறது. இந்த விஷயத்தில் வெட்கம் இல்லையா?'' என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். சட்டசபையில், பட்ஜெட் மீதான பொது விவாதம் நடந்தது. அப்போது, தி.மு.க., உறுப்பினர் எ.வ.வேலு பேசுகையில், ""தமிழக அரசின் பட்ஜெட், உப்பு சப்பு இல்லாதது. தேர்தல் அறிவிப்பில், "அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் நிலவும் மின் பிரச்னை தீர்க்கப்படும்; தமிழகம் மின் மிகை மாநிலமாகும்' என்றனர். ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இன்னும் மின் பிரச்னை நீடிக்கிறது,'' என்றார். இதற்கு, அ.தி.மு.க., உறுப்பினர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. இதற்கு பதிலளித…

    • 0 replies
    • 821 views
  13. வதந்தியைப் பரப்புவது வாட்ஸ்அப் அல்ல... அரசாங்கம்தான்! ‘‘அண்ணே... மெட்ராஸ்ல இருந்து பெரியண்ணன் குடும்பத்தோட கிராமத்துக்கு வந்திருந்தாங்க. இப்ப தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷன்ல இருக்காங்க. நைட் ஒண்ணும் பிரச்னை இருக்காதே பத்திரமா போய் சேர்ந்துடுவாங்கதானே! ஏன்னா, கண்டபடி தகவல் வருது. அதான் சந்தேகமா இருக்கு. நீங்க மெட்ராஸ்லதானே இருக்கீங்க. கொஞ்சம் செக் பண்ணி சொல்ல முடியுமா? ''அங்கிள், நான் அரசன் பேசுறேன். ஈ.சி.ஆர்ல இருக்கிற எங்க ஐடி ஆபீஸ்ல இருந்து வெளியில போன ரெண்டு கேப் (வாடகைக் கார்கள்) திரும்பி வந்துடுச்சு. வெளியில நிலைமை சரியில்ல. போரூர்ல வேற ரெண்டு பஸ்ஸை எரிச்சுட்டாங்களாம். என்ன நடந்திட்டிருக்குனு கொஞ்சம் சொல்ல முடியுமா? நைட் ஷிப்டுன…

  14. விடுதலை புலிகள் என்று சொல்லி உள்ளே தள்ளிடுவோம்-மாணவர்களை மிரட்டிய காவல்துறை. 'இலங்கையில் நடந்தது இன படுகொலையே....ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் சுதந்திரமான சர்வதேச நீதி விசாரணை வேண்டும்' என்ற கோரிக்கையோடு சேலம் அரசு கலை கல்லூரி மாணவர்கள் காலையிலேயே வகுப்பு புறக்கணிப்பு செய்து உள்ளிரிப்பு போராட்டத்தை தொடங்கினர். ஆனால் கல்லூரி முதல்வர் ராஜாமணி 'எவனோ எங்கயோ செத்தான்னா இங்க எதுக்கு போராடுறீங்க 'என இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் மாணவர்களோ 'இது எங்கள் உணர்வு நாங்கள் மானமும் ஈரமும் வீரமும் உள்ள தமிழச்சிக்கு பிறந்தோம். அதனால் இந்த போராட்டம் செய்கிறோம். மானம் உள்ளவர்கள் இந்த போராட்டத்தை ஆதரிப்பார்கள்' என பதிலடி தந்து கல்லூரி உள்ளேயே பாய் படுக்கை…

    • 10 replies
    • 820 views
  15. “சின்னம்மா அப்ரூவர் ஆகியிருந்தால்... அம்மா இருந்திருக்க மாட்டார்!” ‘‘சசிபாரதம் ஆரம்பம்!” அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்ற சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இருந்து கழுகார் அனுப்பிய தலைப்பு இதுதான். அடுத்த சில மணி நேரத்தில் அலுவலகத்தில் லேண்ட் ஆனார் கழுகார். ‘‘இதுவரை அம்மா தி.மு.க-வாக இருந்தது. இனி, அது சின்னம்மா தி.மு.க. ‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை புரட்சித் தலைவி அம்மா வடிவில் கண்டோம். புரட்சித் தலைவி அம்மாவை மதிப்புக்குரிய சின்னம்மா வடிவில் கண்டு, கழகப் பணிகளைத் தொடர்ந்து ஆற்றுவோம்’ என்று சூளுரைத்துள்ளார்கள். ‘அம்மாவின் வழிகாட்டுதல்களை நினைவில்கொண்டு சின்னம்மா தலைமையின் கீழ் விசுவாசத்துடன் பணியாற்றுவோம்’ என்று தீர்மானம் நிறைவேற்…

  16. தமிழினத்தின் ஏழு மண்டேலாக்கள் ஒரு நாளைக்கு 10 பத்திரிகைகள் படிக்கலாம்; மணிக்கொரு முறை இணையத்தில் முக்கியச் செய்தித்தளங்களைச் சுற்றி வரலாம்; 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சிகளை ஓட விட்டு வேலைக்கு நடுவே நிமிஷத்துக்கு நிமிஷம் எட்டிப் பார்க்கலாம்… ஆனால் தமிழ்நாட்டின் அரிய செய்திகளை அளிப்பதில் சுவரொட்டிகளுக்கு ஈடுஇணை இல்லை. தமிழ்நாட்டுக்கு ஏழு மண்டேலாக்கள் கிடைத்த செய்தியும் சுவரொட்டிகள் மூலம்தான் கிடைத்தது. சென்னை, ராஜாஅண்ணாமலைபுரத்தின் நீண்ட சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள் மூலம். யார் இந்த ஏழு மண்டேலாக்கள்? வேறு யாராக இருக்க முடியும்? ராஜீவ் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு, மரண தண்டனையிலிருந்து தப்பி, 23 வருஷ சிறைவாசத்திலிருந்து விடுபட ஏங்கிக்கொண்டிருக்கும…

    • 2 replies
    • 819 views
  17. 2,000 கோடி ரூபாய் சொத்து விவகாரம்:`சசிகலாவுக்கு செக்!’- உற்சாகத்தில் எடப்பாடி, ஓ.பி.எஸ் கோஷ்டிகள்! ``மறைந்த ஜெயலலிதாவை அட்டாக் பண்ணும் நோக்கில், அவருடைய வாரிசுதாரர்கள் என்கிற அடிப்படையில் நோட்டீஸின் பிரதிகளை அனுப்பியிருக்கிறார்கள்.’’ சசிகலாவின் வருகை விவகாரம் தமிழக அரசியலில் கிராஃப் ஏறி, இறங்கி வருகிறது. அக்டோபர் 8-ம் தேதி நிலவரப்படி அவருக்கு இறங்குமுகம் என்றுதான் சொல்ல வேண்டும். ``மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு ஏராளமான ரெய்டுகளை நடத்தி, நிறைய ஆவணங்களைக் கைவசம் வைத்திருக்கிறது. அதையெல்லாம் அரசியல்ரீதியாக எப்போது, எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தெளிவாக ஸ்கெட்ச் போட்டு வைத்திருக்கிறார்கள். `சசிகலா விடுதலை’, `பி.ஜே.பி-யுடன் டீல்…

  18. "கட்டிங் பிளேடு வைத்து பல்லை பிடுங்கினார்" - விசாரணை கைதிகளை ஏஎஸ்பி தாக்கிய குற்றச்சாட்டின் பின்னணி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளை அந்த மாவட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங், கொடூரமாகத் தாக்கி, பற்களைப் பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சேரன் மாதேவி உதவி ஆட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் சரக காவல் நிலையத்திற்கு வரும் விசாரணைக் கைதிகளை அந்த மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளராக உள்ள பல்வீர் சிங், கொடூரமாகத் தாக்கி, அவர்களது பற்களைப் பிடுங்கியதாக விச…

  19. தமிழகத்தில் வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டதை அடுத்து, தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அரசாணைக்கு முன்னர், கடைகள் பெரும்பாலும் இரவு 11 மணிவரை மட்டுமே இயங்கமுடியும் என்ற கட்டுப்பாடு இருந்ததால், சிறிய மற்றும் பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இரவு 11 மணிக்கு மூடப்பட்டன. மத்திய அரசின் தொழில்துறை அமைச்சகம் நாடு முழுவதும் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், வணிகத்தை மேம்படுத்தவும் வணிக நிறுவனங்கள் 365 நாட்கள், 24 மணி நேரமும் கடைகள் இயங்கலாம் என்ற விதியை பரிந்த…

  20. சென்னை: லோக்சபா தேர்தல் தற்போது நடைபெற்றால் தமிழகத்தில் அதிமுக 28. திமுக 5, காங்கிரஸ் 1 தொகுதியையும் கைப்பற்றும் என்று டைம்ஸ் நவ்- சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலையொட்டி ஏராளமான கருத்துக் கணிப்புகள் கடந்த சில மாதங்களாக வெளியாகி வருகின்றன. கடந்த ஜூலை மாதம் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும் சி வோட்டரும் இணைந்து இந்தியா முழுவதும் கருத்துக் கணிப்பை நடத்தியிருந்தன. அதில் பாரதிய ஜனதா கட்சி 131 இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவித்திருந்தது. தற்போது பாஜக மட்டும் 162 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய மாநிலங்களில் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு தொகுதிகளைக் கைப்பற்றக் கூடும் என்ற விவரமும் வெளியிடப்பட்டுள…

  21. அருந்ததி ராயுடன் சமஸ் அருந்ததி ராயுடன் பேசுவது மனசாட்சியுடன் உரையாடுவதுபோல. உரையாடல் மிக நெருக்கமானதாக இருக்கும். ஆனால், உண்மையை எதிர்கொள்ளும் திராணி உங்களுக்கு வேண்டும். பொதுவாக தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைபற்றிப் பேசுவதைத் தவிர்க்கும் அருந்ததி அன்றைக்கு எந்தக் கேள்வியையும் ஒதுக்காமல் பதில் அளித்தார். ‘‘இன்றைய அருந்ததி ராய் உருவாக, சின்ன வயது வாழ்க்கை எந்த அளவுக்கு அடிப்படையாக இருந்தது என்று சொல்ல முடியுமா?’’ ‘‘எனக்கு ஒரு வயதானபோது என் பெற்றோருக்கு விவாகரத்து ஆனது. கலப்புத் திருமணம் செய்துகொண்டு, கணவனைப் பிரிந்த ஒரு பெண் ஊர் திரும்பும்போது நம் சமூகம் எப்படி வரவேற்கும் என்று நான் சொல்ல …

  22. சென்னையில் டிராஃபிக் ரோபோ – குறையுமா போக்குவரத்து நெரிசல் ? சென்னையில் அதிகமாகி வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக புதிய வகை ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. சென்னையில் எத்தனை மேம்பாலங்கள் கட்டினாலும் சாலைகளை விரிவாக்கினாலும் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. அதுவும் பீக் ஹவர்ஸ் எனப்படும் காலை 8 முதல் 10 மணி மற்றும் மாலை 5 முதல் 7 மணி வரை அலுவலகம் செல்வோர் மற்றும் பள்ளிக் கல்லூரி செல்வோருக்குப் பெரும் இடைஞ்சலாக போக்குவரத்து நெரிசல்கள் இருந்து வருகின்றன. இதற்காக இப்போது சென்னையில் புதிதாக டிராபிக் ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ROADEO என்று பெயரிடப்பட்டுள்ள இந்த டிராஃபிக் ரோபோவை நேற்று சென்னை மாநகர காவல் ஆணையர் அறிமுகப்படுத்தினா…

  23. சென்னையில் இருவருக்கு கொரோனா அறிகுறி சென்னை வந்த கப்பலில் சீனர்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கத்திற்கான அறிகுறி இருந்ததால் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை துறைமுக கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 18ஆம் திகதி வந்த எம்.வி. மேக்னட் கப்பலில் 19 சீனர்கள் இருந்ததாகவும் அவர்களிடம் துறைமுக மருத்துவ குழுவினர் நடத்திய சோதனையில் 2 பேருக்கு லேசான காய்ச்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் கப்பலிலேயே 2 பேரும் தனிமைபடுத்தப்பட்டு, கடற்பகுதியில் இருந்து சிறிது தொலைவில் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை குறித்த இருவரிடமும் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு கிண…

  24. ஆளுநருடன் சந்திப்பு: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்! தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேருக்கு, சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இணைந்த உடன், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரைச் சந்தித்தனர். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் வாங்குவதாக கடிதம் வழங்கிய அவர்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றவும் ஆளுநரிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேரையும் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் தனபாலுக்கு, அரசு கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்திருந்தார். இ இந்நிலையில், ர…

  25. தேய்பிறை செவ்வாய்கிழமையில் கடலூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த சீமான். சென்னை: சட்டசபைத் தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இன்று கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் உமா மகேஸ்வரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தமிழக தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மே 16ம் தேதி நடைபெறும் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை 22ம் தேதி தொடங்கியது. சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பின்னர் முகூர்த்த தினமான நேற்று முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, பாமகவின் அன்புமணி ஆகிய மூன்று முதல்வர் வேட்பாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். சட்டசபைத் தேர்தலில் நாம் த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.