Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சசிகலா இன்று விடுதலை: இன்னும் எத்தனை நாட்கள் பெங்களூருவில்? மின்னம்பலம் சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சசிகலாவின் தண்டனைக் காலம் இன்றோடு (ஜனவரி 27) முடிவடைகிறது. இன்று காலை 9.30 முதல் 10 மணிக்குள் அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட இருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக ஜனவரி 20 ஆம் தேதி சசிகலா உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று பாதிப்பும் ஏற்பட்டு தற்போது பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நலம் தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், இன்று (ஜனவரி 27) சசிகலா …

  2. மெரினா கடற்கரையில் இன்று ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு! சென்னை மெரினா கடற்கரையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைக்கிறார். சென்னையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் திகதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல், மெரினா கடற்கரை ஓரத்தில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இவ்விடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான நிதியை ஒதுக்கி கட்டுமானப்பணியை கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் திகதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கிவைத்தனர். இந தநிலையில் தற்போது நினைவிடப் பண…

    • 1 reply
    • 408 views
  3. எஸ்பிபிக்கு பத்ம விபூஷண் விருது! மின்னம்பலம் இந்தியாவின் மிகவும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகளை (பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ) மத்திய அரசு நேற்று (ஜனவரி 25) அறிவித்துள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் - தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 119 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது இதில் பத்ம விபூஷண் விருது, முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின் சோ அபே, மறைந்த பின்னணிப்பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட ஏழு பேருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏழு பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 10 பேருக்கு பத்ம பூஷணும், 102 பேருக்க…

  4. இந்தியாவின் 72ஆவது குடியரசு தின விழா இன்று! இந்தியாவின் 72ஆவது குடியரசு தின விழா மக்கள் அனைவராலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் 72ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தேசியக்கொடி ஏற்றி ஆரம்பித்து வைத்ததுடன் அணிவகுப்பையும் ஏற்றுக்கொண்டார். தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா காமராஜர் சாலை காந்தி சிலை அருகே குடியரசு தின விழா நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் முப்படை வீரர்கள், பொலிஸார் மற்றும் பல்வேறு பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதன்போது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றார். …

  5. இயேசு அழைக்கிறார்- நிறுவனத்தில் வருமான வரி சோதனை! மின்னம்பலம் இயேசு அழைக்கிறார் கிறிஸ்துவ மதப் பிரச்சார நிறுவனத்துக்கு சொந்தமான 28 இடங்களில் இன்று (ஜனவரி 20) வருமானவரித்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது. மறைந்த டி.ஜி.எஸ் தினகரனால் நிறுவப்பட்ட உலகளாவிய கிறிஸ்தவ பிரச்சார அமைப்பான, ‘ ஜீசஸ் கால்ஸ்’ நிறுவனத்தை இப்போது அவரது மகன் பால் தினகரன் நடத்தி வருகிறார். இதன் மூலம் கிறிஸ்துவ மதப் பிரச்சாரம் செய்து வருகிறார். இ ‘இயேசு அழைக்கிறார்’நிறுவனத்தின் சக நிறுவனங்களாக காருண்யா கிறிஸ்டியன் பள்ளி மற்றும் கோயம்புத்தூரில் உள்ள கருண்யா பல்கலைக்கழகம் ஆகியவை இயங்கி வருகின்றன. இந்நிலையில்... வரி ஏய்ப்பு தவிர, ‘ஜீசஸ் கால்ஸ்’ தனக்கு கிடைத்த அனைத்து வெளிநாட…

  6. ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் உடல்கள் மீட்பு - இலங்கை கடற்படையை கண்டித்து போராட்டம் கடந்த 2011-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்திய-இலங்கை அணிகள் மோதின. அதில் இந்திய அணி வெற்றி பெற்று உலகக்கோப்பையை கைப்பற்றியது. இது இலங்கை கடற்படையினர் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியதாகவும், அதன் காரணமாக ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு படகு மற்றும் அதில் இருந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் மூழ்கடித்து கொன்றதும் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவம் நடந்து சரியாக 10 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் அதே போன்ற ஒரு கொடூர சம்பவத்தை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் …

  7. நாளை மறுநாள் விடுதலையாகிறார் சசிகலா! சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் சசிகலா, விரைவில் விடுதலை ஆவார் என கூறப்பட்ட நிலையில், டி.டி.வி. தினகரன் அது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். அதில், ``நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி சசிகலா நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார். கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாகக் குறைந்து, அவர்கள் உடல்நிலை தேறிவருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையிலிருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என ட்வீட் செய்திருக்கிறார். `சசிகலாவுக்கு கொரோனா தொற்று குறைந்திருக்கிறது!’ சிறையிலிருக்கும் …

  8. தமிழகத் தேர்தல் எப்போது? பிப்.20, 21இல் தேர்தல் ஆணையம் முடிவு! மின்னம்பலம் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதியை முடிவு செய்ய பிப்ரவரி 20ஆம் தேதி, 21ஆம் தேதி தேர்தல் ஆணையக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத் தலைமைச் செயலாளர், டிஜிபி, தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் டெல்லியில் நடந்த கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஆலோசனை நடத்தினார். அதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களை எப்போது நடத்தலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தேர்தலின்ப…

  9. தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021: தனிச் சின்னத்தில் போட்டியிடுமா வி.சி.க.?: திருமாவளவன் பிரத்யேகப் பேட்டி பட மூலாதாரம், FACEBOOK படக்குறிப்பு, திருமாவளவன் தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இரவிலும் பரபரப்பாக இருக்கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகம். அரசியல் பிரமுகர்களுடன் சந்திப்பு, திருமணம் போன்ற விழாக்களுக்கு அழைக்க காத்திருக்கும் தொண்டர்கள், கட்சி நிகழ்ச்சிகளுக்கு தேதி கேட்கும் நிர்வாகிகள் என ஒவ்வொருவராக சந்தித்து அனுப்புகிறார் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன். பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனுக்கு அளித்த இந்தப் பிரத்யேகப் பேட்டியில், வரவிருக்கும்…

  10. சசிகலாவிற்கு மீண்டும் மூச்சு திணறல் : அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்! சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவிற்கு மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் 7ஆம் திகதி சசிகலா விடுதலையாக இருப்பதாக கூறப்படும் நிலையில், அவருக்கு மூச்சுத்திணறல் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பெங்களூர் சிவாஜி நகர் போரிங் அரச மருத்துவமனையில் சிகிச்சைக்காக சசிகலா அனுமதிக்கப்பட உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். http://athavannews.com/சசிகலாவிற்கு-மீண்டும்-மூ/

    • 25 replies
    • 2.3k views
  11. சசிகலா உடல்நிலை: `அரசியல் உள்நோக்கம் இருக்கலாம்!’ - தஞ்சையில் சீமான் பேச்சு கே.குணசீலன்ம.அரவிந்த் சீமான் ( ம.அரவிந்த் ) `நாங்கள் காசு கொடுத்து வாக்குக் கேட்பவர்கள் அல்லர். சிறந்த ஆட்சியைக் கொடுப்போம் என மக்களிடம் கூறி வாக்குகளைப் பெறுவோம்’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். ``சசிகலா நான்கு ஆண்டுகளில் ஒரு முறைகூட மருத்துவமனைக்குச் செல்லவில்லை. சிறையிலிருந்து வெளியே வரவிருக்கும் நிலையில், திடீரென அவருக்கு கொரோனா, நிமோனியா காய்ச்சல் எனக் கூறப்படுவதில் அரசியல் நோக்கம் இருக்கலாம் என நான் கருதுகிறேன்'' என்று தஞ்சாவூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். …

  12. சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடிகர் கமல்ஹாசன்! Digital News Team 2021-01-22T16:00:19 நடிகர் கமல்ஹாசன் கடந்த 18ஆம் திகதி தனியார் வைத்தியசாலையொன்றில் வலது காலில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந் நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து இன்று வைத்தியசாலையிலிருந்து வெளியே வந்த கமல், தொண்டர்களுக்கு காரில் இருந்தபடியே நன்றி தெரிவித்து விட்டு சென்றார். சில வாரங்கள் ஓய்வுக்குப் பின் தேர்தல் பிரச்சாரத்தின் இரண்டாவது சுற்று பயணத்தை கமல் ஆரம்பிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. Thinakkural.lk

  13. கூடியம் குகைகள்... 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்த குகைக்குள் ஒரு திக் திக் பயணம்! வெ.நீலகண்டன் கூடியம் குகைகள் "இவ்வளவு பழைமையான இடம் இருக்குன்னு இந்தப் பகுதியில இருக்கிற பலபேருக்குத் தெரியாது. அப்பப்போ வேண்டுதல் வச்சு கிடாவெட்டு நடத்துறதுக்காக குகைக்குப் போறதோட சரி. எப்பவாவது ஒன்னு ரெண்டு பேரு, 'குகை எங்கேயிருக்கு'னு கேட்டு வருவாங்க." இதுநாள்வரை நாம் படித்துக்கொண்டிருந்த மானுட வரலாறு என்பது, ஆப்பிரிக்காவில் இருந்துதான் தொடங்குகிறது. 60 லட்சம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த ஒரு குரங்கு இனத்தின் தொடர்ச்சிதான் மனிதர்கள். படிப்படியாக பரிணாமம் அடைந்து, நிமிர்நிலை மனிதர்கள் உருவானார்கள். வாலற்று, நிமிர்ந்து நின்ற உலகி…

    • 4 replies
    • 1.4k views
  14. தமிழக மீனவர்கள் படகை, இலங்கைக் கடற்படை தாக்கி மூழ்கடித்தது; 4 மீனவர்களைக் காணவில்லை வைகோ கடும் கண்டனம் தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை மூழ்கடித்துள்ளது என குற்றம்சாட்டியுள்ள மதிமுக பொதுசெயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ இந்திய மீனவர்களின் நிலை என்ன என்பதை இந்திய அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார் வேண்டுகோள் விடுத்துள்ளார் அவர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளதாவது புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் கடற்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் இருந்து 18 .01.2021 அன்று, 214 விசைப்படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றன. …

  15. "நடராஜனை வரவேற்று விழா நடத்தக்கூடாது!"- ஏன் தடை போடுகிறது தமிழக அரசு?! எம்.விஜயகுமார் நடராஜன் | #AUSvIND ( Tertius Pickard ) ஒரே தொடரில் மிகப்பெரிய உயரத்தைத் தொட்டிருக்கும் நடராஜன் இன்று மாலை தனது சொந்த ஊரான சேலம், சின்னப்பம்பட்டிக்கு வருகிறார். நடராஜனை வரவேற்க நண்பர்கள் பலரும் சிறப்பு ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியில் முதன்முறையாகக் களமிறங்கிய நடராஜன், இத்தொடரில் முதல்முறையாக பவர்ப்ளே ஓவரில் விக்கெட் எடுத்த பெளலர் என்கிற பெருமையைப் பெற்றார். லாபுசேன், அஷ்டன் அகார் என இரண்டு முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார். டி…

  16. சமீபத்தில் நடத்தப்பட்ட ஏபிபி சி-வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சியாக உள்ள தி.மு.க வரும் சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றிபெறும் என்பதுதான் கருத்துக் கணிப்பின் இறுதி முடிவாக வெளியிடப்பட்டுள்ளது. தி.மு.க கூட்டணி! தி.மு.க கூட்டணி இந்தத் தேர்தலில் 158 முதல் 166 இடங்கள் வரை வெற்றிபெற வாய்ப்புள்ளதாகக் கருத்துக் கணிப்பு முடிவில் சொல்லப்பட்டுள்ளது. அதேபோல கடந்த தேர்தலைவிட, இந்தத் தேர்தலில் தி.மு.க-வின் வாக்கு வங்கி 1.7 சதவிகிதம் அதிகரிக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. *(ஏபிபி சி-வோட்டர் கருத்துக் கணிப்பின்படி) அ…

  17. நன்கொடை வேண்டாம்! 3,000 மாடுகளைப் பராமரிக்கும் வெள்ளியங்கிரி கோசாலை! குருபிரசாத்தி.விஜய் கோசாலையின் வெளிப்புறத் தோற்றம் பசுமடம் பிரீமியம் ஸ்டோரி ’இவ்விடம் வெள்ளியங்கிரி ஆண்டவருடைய கருணையால், எந்தவித நிதிப் பற்றாக்குறையும் இல்லாமல் நன்றாகச் செயல் படுகிறது. அதனால் பார்வையாளர்கள் யாரும் எந்தவித நன்கொடையும் அளிக்க வேண்டாம். நாங்கள் நன்கொடையை வாங்குவதும் இல்லை. யாராவது நன்கொடை அளிக்க விரும்பினால், அடிமாட்டுக்குச் செல்லும் எந்தவித உபயோகம் இல்லாத ஒரு மாட்டைக் கசாப்புக் கடையிலிருந்து வாங்கி இங்கு அளிக்கலாம். இறுதி மூச்சுவரை அந்த மாட்டை நாங்கள் நன்றாகப் பராமரிப்போம்.’ கோசாலையின் வெளிப…

  18. ஜெயலலிதாவின் நினைவிடம் 27 இல் திறப்பு சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை எதிர்வரும் 27 ஆம் திகதி திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வினை முதலமைச்சர் தலைமையேற்று திறந்து வைக்க இருப்பதாகவும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிப்பார் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சபாநாயகர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.எல்.ஏக்.கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. http://athavannews.com/ஜெயலலிதாவின்-நினைவிடம்-27/

  19. `சசிகலாவை அதிமுகவில் இணைக்க 100% வாய்ப்பில்லை!’ -அமித் ஷா, மோடி உடனான சந்திப்புக்குப்பின் முதல்வர் பிரேம் குமார் எஸ்.கே. எடப்பாடி பழனிசாமி `முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை சசிகலா கட்சியிலே இல்லை. சசிகலாவுடன் இருந்தவர்கள் பலர் அ.தி.மு.க வில் இணைந்து விட்டனர்’ - முதல்வர் பழனிசாமி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார் சென்றுள்ளார். டெல்லியில் அ.தி.மு.க எம்.பிக்கள் முதல்வரை வரவேற்றனர். இந்நிலையில் நேற்று இரவு 7.30 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. …

  20. சிறப்புக் கட்டுரை: குருமூர்த்தியின் பேச்சைப் புரிந்துகொள்வது எப்படி? மின்னம்பலம் ராஜன் குறை கடந்த வாரம் துக்ளக் ஆண்டு விழாவில் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேசிய சில கருத்துகள் சர்ச்சைக்குள்ளாகியிருக்கின்றன. நீதிபதிகள் யார் காலையோ பிடித்து பதவிகளைப் பெறுகிறார்கள் என்று பேசியது ஒரு சர்ச்சை. வீடு பற்றி எரியும்போது சாக்கடை நீரையும் பயன்படுத்தி தீயை அணைக்கலாம் என்று ஒரு உவமையைச் சொல்லி, சிறையிலிருந்து விடுதலையாகும் சசிகலாவையும் அ.இ.அ.தி.மு.க-வில் இணைத்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருப்பது சசிகலா மற்றும் அ.இ.அ.தி.மு.க-வை சாக்கடை நீரென்று குறிப்பிட்டதாகக் கருதி இன்னொரு சர்ச்சை. இந்தச் சர்ச்சைகளைக் குறித்து அ…

  21. ராணிப்பேட்டை: எம்.எல்.ஏ குடும்பத்தில் மல்லுக்கட்டு - வாரிசு அரசியலால் தடுமாறும் தி.மு.க! லோகேஸ்வரன்.கோச.வெங்கடேசன் ஸ்டாலினுடன் காந்தி, வினோத் `காந்தியின் இரு மகன்களும் ராணிப்பேட்டை தி.மு.க-வில் அதிகாரம் செலுத்த ஆரம்பித்துவிட்டனர். வாரிசு அரசியலால் ஒதுங்கி நிற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது' என்கிறார்கள், தி.மு.க நிர்வாகிகள். ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க செயலாளரும் அத்தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வுமான ஆர்.காந்தியும், அவரின் மூத்த மகன் வினோத்தும் பதவிக்காக மல்லுக்கட்டுகிறார்கள். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், துரைமுருகனுக்கு அடுத்த நிலையில் பவர்ஃபுல்லானவர் காந்தி. தி.மு.க ஆட்சிக்கட்டிலில் இருந்த சமயத்தில், காந்திக்கு அமைச்சர்…

  22. புதுச்சேரி: `அடம்பிடிக்கும் கிரண் பேடி; அசராத அமைச்சர்!’ - போராட்டக்களமான கவர்னர் மாளிகை ஜெ.முருகன்அ.குரூஸ்தனம் புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி கவர்னர் கிரண் பேடியின் அழைப்புக்காக சட்டப்பேரவை வளாகத்தில் கடந்த 9 நாள்களாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய அமைச்சர் கந்தசாமி, இன்று கவர்னர் மாளிகை முன்பு தரையில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு ஆதரவாக முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்களும் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர். புதுச்சேரி 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றதும் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கிரண் பேடி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி புதுச்சேரியின் முதல்வராகப் பத…

  23. ரஜினி மக்கள் மன்றத்தினர் எந்தக் கட்சியிலும் இணையலாம் – அறிவிப்பு ரஜினி மக்கள் மன்றத்தினர் அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியிலும் இணைந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம். சுதாகர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் “ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயற்பட விரும்பினால், ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ராஜினாமா செய்து விட்டு அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். அவர்கள் வேறு கட்சிகளில் இணைந்தாலும், அவர்கள் எப்போதும் நம் அன்புத் தலைவரின் ரசிகர்கள்தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் …

  24. மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தன்னை அரசியலுக்கு வரவேண்டுமென வலியுறுத்தி நிகழ்வுகளை நடத்தி தன்னை மேலும் மேலும் வேதனைக்குள்ளாக்க வேண்டாம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்வைத்து, புதிய கட்சி ஒன்றைத் துவங்கி அரசியலில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்துவந்த ரஜனிகாந்த், சில நாட்களுக்கு முன்பாக அந்த முடிவிலிருந்து பின்வாங்கினார். தன்னுடைய உடல்நிலையின் காரணமாக தான் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என அறிக்கை ஒன்றின் மூலமாக ரஜினிகாந்த் தெரிவித்தார். இந்த நிலையில், அவரை அரசியலுக்கு வர வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்…

  25. 54 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (இன்றைய நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகள் சிலவற்றின் சுருக்கத்தை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.) எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலின்போது 234 தொகுதிகளிலும் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருப்பதாக அக்கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், "ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாளில் இது நிகழ்ந்திருக்கிறது," என்று கூறியுளளார். இந்த விவகாரத்தில் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.