தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10260 topics in this forum
-
58% ஜிஎஸ்டி.. நாளை முதல் எல்லா திரையரங்களும் வேலை நிறுத்தம். தீர்வை எட்டுமா? தமிழகம் முழுவதும் நாளை முதல் அனைத்து திரையரங்குகளும் மூடப்படும். 58 சதவீத ஜிஎஸ்டியை எதிர்த்து திரையரங்க உரிமையாளர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். இந்தியா முழுவதும் நேற்று முதல் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடுமையான விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், 58 சதவீதி ஜிஎஸ்டியை எதிர்த்து நாளை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்படும் என்று திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்தனர். அது திட்டமிட்டப்படி நாளை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கு உரி…
-
- 2 replies
- 585 views
-
-
“நீங்கள் காவி, நாங்கள் கருப்பு..உங்களுக்கு அயோத்தி, எங்களுக்கு ஈரோடு, உங்களுக்கு ராமன், எங்களுக்கு ராமசாமி” உங்களுக்கு தஞ்சாவூர் என்றால் பெரிய கோயில் நினைவுக்கு வருவதைப் போல, தஞ்சை மக்களுக்கு விளார் என்றால் நினைவுக்கு வருவது நடராஜன்தான். அவரது சொந்த ஊர் என்பதைத் தவிர விளாருக்கு வேறு வரலாறும் கிடையாது. அந்த விளார் சாலைக்கு ஒரு அடையாளம் தரவும் நடராஜனுக்கு ஒரு நிரந்தர பட்டத்துக்கு ஏற்பாட்டை செய்யவும் நடந்த ஏற்பாட்டுக்கான ஒரு விழா நேற்று 8.11.2013 அன்று நடந்திருக்கிறது. ஒருவேளை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ராஜராஜன் என்றொருவன் பிறக்காதிருந்தால் இன்றைக்கு தஞ்சையின் அடையாளமாக சசிகலாவும் நடராஜனும்தான் இருந்திருப்பார்கள். ராஜராஜன் கொஞ்சம் முந்திக்கொண்டு பிறந்து ஒரு பெரிய கோய…
-
- 4 replies
- 863 views
-
-
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பதற்குப் பதிலாக, காங்கிரஸ் அமைச்சர்கள் முச்சந்திகளில் நின்று பேசுவது ஏமாற்று வேலை என்று உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளை தலைவரான பழ.நெடுமாறன் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது, இலங்கையில் மீதமுள்ள தமிழர்களையும் ஒழிப்பதற்காக அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டுவரும் நிலையில், பிரிட்டிஷ் பிரதமர் தைரியமாகச் சென்று தமிழர்களைச் சந்தித்துப் பேசியதுடன் அதுகுறித்து பொதுநலவாய மாநாட்டிலும் கண்டனம் தெரிவித்தார். இத்தனையும் நடைபெற்ற பிறகும் இலங்கைக்கு அருகில் உள்ள இந்திய அரசோ, தொடர்ந்து மெளனம் சாதித்து வருகி…
-
- 0 replies
- 541 views
-
-
புதுடில்லி: ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகி யோகேந்திரா யாதவ் ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு பேட்டியில்: ஆம் ஆத்மியின் டில்லி வெற்றிக்கு பின்னர் கட்சிக்கு நாடு முழுவதும் ஆதரவு வளர்ந்து வருகிறது. பலரும் சேர ஆர்வம் காட்டுகின்றனர். லோக்சபா தேர்தலுக்கான முழு விவர தேர்தல் அறிக்கை இன்னும் 2 மாதத்திற்குள் வெளியிடுவோம். பா.ஜ., மற்றும் காங்., போன்று பெரும் கட்டமைப்பு ஆம்ஆத்மிக்கு இல்லை. கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் கட்சியின் நிலை என்ன ? அணு சக்தியை எதிர்க்கிறீர்களா ? என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், இந்த ஜனநாயக நாட்டில் மக்களின் எதிர்ப்பு குரலுக்கு அரசு பதில் சொல்ல வேண்டும். அப்பகுதி மக்களின் அச்சம் முக்கியமாக கவனத்தில கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார். htt…
-
- 0 replies
- 421 views
-
-
சேகரிப்பு..! சசிகலாவால் மிரட்டி வாங்கப்பட்ட சொத்து விவரம்... ஆட்சியை கலைக்க முயல்வதால் பழனிசாமி முடிவு பழனிசாமி ஆட்சியைக் கலைக்க முயலும், சசி கும்பலின் ஆட்டத்தை அடக்கும் வகையில், ஜெ., உயிருடன் இருந்தபோது சசிகலா, மற்றவர்களை மிரட்டி வாங்கிய சொத்துக் களின் விவரங்கள் திரட்டப்படுகின்றன. ஆதாரங்கள் முழுமையாக கிடைத்தவுடன், அவற்றை வைத்து, சசிகலா மீது வழக்கு போடலாம் என, முதல்வர் பழனிசாமி முடிவு செய்துள்ளார். முதல்வராக இருந்த, ஜெ., இறந்த பின், அப் பதவியில் அமர முயன்றார் சசிகலா; ஆனால், அ.தி.மு.க.,வின் மற்ற உறுப்பினர்கள், பன்னீர்செல்வத்தை முதல்வராக அமர்த்த விரும்பினர். வேறு வழியில்லாமல்…
-
- 0 replies
- 884 views
-
-
பரோலுக்கு துணைநின்ற ஸ்டாலினுக்கு நன்றி: நெகிழும் அற்புதம்மாள் பேரறிவாளனுக்குப் பரோல் கிடைக்க துணை நின்ற தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அவரை பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சந்தித்தார். ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, பேரறிவாளன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையைக் காண பரோல் கோரியிருந்தார். இதையடுத்து, 26 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு ஒரு மாத காலம் பரோலில் விடுவிக்க கடந்த மாதம் 24-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தனது தந்தை மற்றும் தாயாருடன் நேரத்தை கழித்து வரும் பேரறிவாளனை, ஸ்ட…
-
- 0 replies
- 446 views
-
-
'கவலைப்பட வேண்டாம்... அடுத்து விடுதலைதான்!' - பேரறிவாளன் நம்பிக்கை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்ற பேரறிவாளன் 26 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு, கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி முதல் ஒரு மாத காலத்துக்கு பரோலில் வெளியே விட தமிழக அரசு உத்தரவிட்டது. பரோலில் வெளியே வந்த பேரறிவாளன், ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் தங்கி உடல்நலம் சரியில்லாத அவர் தந்தை ஞானசேகரனை (குயில்தாசன்) கவனித்து வந்தார். ஆனால், அவருக்கு உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால், தந்தையைக் கவனித்துக்கொள்ள மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டிக்க வேண்டும் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து மனு அளித்தார். அதுமட்டுமின்ற…
-
- 2 replies
- 816 views
-
-
பன்னீர் பதவி தப்புமா? ஐகோர்ட் முடிவு செய்யும் புதுடில்லி : 'தமிழக துணை முதல்வர், பன்னீர்செல்வம் உட்பட, 11 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பான வழக்கில், என்ன முடிவு எடுப்பது என்பதை, சென்னை உயர் நீதிமன்றம் முடிவு செய்யும்' என, உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்தது. பிப்., 18ல், தமிழக முதல்வர், பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பில், பன்னீர்செல்வம் உட்பட, 11 எம்.எல்.ஏ.,க்கள் எதிர்த்து ஓட்டளித்தனர். பழனிசாமி அரசு, 122 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றது. இதையடுத்து, பழனிசாமிக்கு எதிராக ஓட்டளித்த, 11 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய, சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி, செ…
-
- 0 replies
- 388 views
-
-
சீமான் மீதான வழக்குக்கு முகாந்திரம் இல்லை.. ஜாமீனில் விடுவித்தார் நீதிபதி! மதுரை: நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீதான வழக்கில் முகாந்திரம் இல்லை என்று மதுரை மாஜிஸ்திரேட் கூறி விட்டார். மேலும், சீமான் மீது புகார் கொடுத்தவரும், தன்னிடம் போலீஸார் 2 தாள்களில் எதையோ எழுதி கையெழுத்து வாங்கியதாக கூறவே, சீமானை ஜாமீனில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சீமான் விடுவிக்கப்பட்டார். அதிமுக அரசுக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும் இருந்து வரும் சீமான் மீது ஏன் போலீஸார் பொய் வழக்குப் போட முனைந்தனர் என்பது புதிராக உள்ளது. சோதனைச் சாவடி கலாட்டா. கடந்த 17ம் தேதி காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சீமான் பங்கேற்றார். அங்கிருந்து இரவு மதுரை …
-
- 3 replies
- 812 views
-
-
சென்னை: அமைச்சர்கள் தங்கள் துறை சார்பில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் தூண்டி வருவதாக குற்றம்சாட்டியுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி, தமிழ்நாட்டில் தான் வாழ்கிறோமா அல்லது கடும்புலி வாழும் காட்டில் வாழ்கிறோமா என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "அ.தி.மு.க. வின் பொதுச் செயலாளர், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதைத் தொடர்ந்து தமிழகத்தில் அன்றாடம் ஒவ்வொரு பகுதியிலும் உண்ணாவிரதப் போராட்டம் என்றும், ஆர்ப்பாட்டம் என்றும், மனிதச் சங்கிலி என்றும் போட்டிப் போட்டுக் கொண்டு, மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கக் கூடிய அளவில் முறைப்படி காவல் துறையினரின் அனுமதியைக் கூடப் பெறாமல் நடத்தி வருகிறார்கள். அந்த வரிசையில…
-
- 3 replies
- 663 views
-
-
'இன்று கர்நாடகம்... நாளை தமிழகம்...' பா.ஜ.கவின் கோஷம் வெற்றிபெறுமா? நல்லதம்பி நெடுஞ்செழியன் “இன்று கர்நாடகா…. நாளை தமிழகம்” என்ற கோஷத்துடன், தமிழக பா.ஜ.க.(பாரதிய ஜனதா கட்சி)வினர் கர்நாடக மாநிலத் தேர்தல் வெற்றியைக் கொண்டாடுகின்றனர். கர்நாடகா சட்டப் பேரவைத் தேர்தலில் 104 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க.விடம் ஆட்சியை ஒப்படைத்துள்ளதுடன், அதன் மாநிலத் தலைவர் எடியூரப்பாவை முதலமைச்சராகவும் நியமித்து, சத்தியப் பிரமாணம் செய்து வைத்திருக்கின்றார் மாநில ஆளுநர் வாஜுபாய் வாலா. கர்நாடகா மாநில ஆளுநரின் இந்த நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிக தொகுதிகளில் வெற்றிபெற்ற க…
-
- 1 reply
- 749 views
-
-
ஸ்டெர்லைட்: இந்தியாவில் வேதாந்தாவின் சர்ச்சைக்குரிய 4 திட்டங்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழ்நாடு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிரான போராட்டங்களும், அதனை தொடர்ந்து போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதற்கு பிறகு வேதாந்தா நிறுவனம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES பிரிட்டன் நிறுவனமான வேதாந்தா சர்ச்சையில்…
-
- 0 replies
- 685 views
-
-
தமிழ்நாட்டு திருவிழாவில் பிரபாகரன் படம் தமிழ்நாடு தேனி மாவட்டத்தில் ஜெயமங்கலம் கோயில் திருவிழா மின் காணொளி பதாகையில் தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்தை காண்பித்து மக்கள் திருவிழாவை கொண்டாடியுள்ளனர். தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை கண்டு வணங்கி மக்கள் தமது அன்பையும் ஆதரவையும் வெளிபடுத்திய நிகழ்வு அங்கு நெகிழ்வை ஏற்படுத்தியது. https://vanakkamlondon.com/world/india/2023/02/185753/
-
- 0 replies
- 447 views
-
-
நெஞ்சு வலி: ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி! KaviMar 16, 2023 07:06AM நெஞ்சு வலி காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்காக திமுக அமைச்சர்கள் பட்டாளமே ஈரோடு கிழக்கில் முகாமிட்டு ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தது. இந்நிலையில் ஈவிகேஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கடந்த வாரம் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் எம்எல்ஏவாக பதவி ஏற்றார். இந்த சூழலில் நேற்று அவருக்கு…
-
-
- 27 replies
- 2.3k views
-
-
சமூக வலைத்தள போராட்டத்தை மறக்க வைத்துள்ள சின்மயி – வைரமுத்து விவகாரம்! October 10, 2018 1 Min Read தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்துமீது பிரபல பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். சர்வதேச ரீதியாக பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் தமது சாட்சியங்களை பகிரும் மீடூ( MeToo) என்ற கவன ஈர்ப்பை சமூக வலைத்தளத்தில் முன்னெடுத்துள்ளனர். இந்த விடயம் தொடர்பிலேயே கவிஞர் வைரமுத்து, சுவிசிலாந்து நாட்டுக்கு தனக்கு 18 வயதில் இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்றிருந்தபோது, தன்னை தவறாக அணுக முயற்சித்ததாக பாடகி சின்மயி தெரிவித்துள்ளார். இதேவேளை இந்த வியடத்தை வைரமுத்து மறுத்துள்ளார். அறியப்பட்டவர்கள் மீது வழமையாக முன் …
-
- 30 replies
- 3.5k views
-
-
24 FEB, 2024 | 09:43 AM தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் நிலையில், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர் ஒருவருக்கு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகளும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வங்கக்கடலில் மீன்பிடித்த போது கடந்த 8-ஆம் நாள் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரில் 18 பேரை விடுதலை செய்திருக்கும் இலங்கை நீதிமன்றம், ஜான்சன் என்ற படகு ஓட்டுநருக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறது. மீனவர் ஜான்சன் ஏற்கெனவே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைதாகி விடுதலை ஆனவர் என்றும், இப…
-
- 3 replies
- 378 views
- 1 follower
-
-
சென்னையில் 2025 ஜூனில் 2-ம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு 16 MAR, 2024 | 12:34 PM தமிழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, சென்னையில் வரும் 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஐந்து நாட்கள் சீரோடும் சிறப்போடும் சிந்தனைச் செயல்திறத்தோடும் மாபெரும் அளவில் நடத்தப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற முத்தமிழுடன் இன்று கணித் தமிழும் இணைந்து நற்றமிழாக நானிலமெங்கும் சிறப்புடன் திகழ்கின்றது. தமிழ் மொழி; தொன்மை – தனித்தன்மை …
-
-
- 3 replies
- 556 views
- 1 follower
-
-
மதுரையில்..... அமித்ஷா முன்னிலையில், பா.ஜ.க.வில் இணைகிறார் மு.க. அழகிரி? சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி பாரதிய ஜனதா கட்சியில் இணையப்போவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரையில் வரும் 15-ந் தேதி பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா முன்னிலையில் தமது ஆதரவாளர்களுடன் அழகிரி ஐக்கியமாவார் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. காமராஜரின் பிறந்தநாள் ஜூலை 15-ந் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடார் மகாஜனம் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்த விழாவில் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா பங்கேற்று, காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். இதன்பின் பகல் 12 மணிக்கு நடக்கும் பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகிறார். மதுரை ராஜா முத்தையா மன்றத்த…
-
- 3 replies
- 410 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய வரலாற்றில் மாலிக்காபூர் என்ற பெயர் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். குஜராத்தை சேர்ந்த ஓர் இந்துவான மாலிக்காபூர் சிறந்த போர் வீரர். கில்ஜி வம்சம் தென்னிந்தியாவில் கால் பதிக்க உதவிய படைத் தளபதியான மாலிக்காபூர், தமிழ்நாட்டில் குறிப்பாக நடுநாடு என்று அழைக்கப்படக்கூடிய விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட பகுதிகளுக்கும் படையெடுத்து வந்துள்ளதை உறுதி செய்யும் புதிய ஆதாரம் கிடைத்துள்ளது. கள்ளக்குறிச்சி அருகே சில நாட்களுக்கு முன்பாக கிடைத்த நடுகல்லுடன் கூடிய சதிக்கல் மிக முக்கிய ஆதாரமாக வரலாற்று ஆசிரியர்களால் பார்க்…
-
- 0 replies
- 360 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, தொழிற்சாலையில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள தனியார் இடத்தில் தொழிலாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 13 செப்டெம்பர் 2024 காஞ்சிபுரத்தில் சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிராகக் காலவரையற்ற போராட்டத்தை அங்கு பணிபுரியும் சுமார் 1500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். தொழிற்சங்கம் தொடங்குவதற்கு நிர்வாகம் அனுமதி மறுப்பதாகவும், சம்பள உயர்வு, பணிநேரம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தபோது, நிர்வாகத்தின் அச்சுறுத்தலுக்கு ஆளானதாகவும் தொழிலாளர்கள் கூறுகின்றனர். சட்டத்துக்கு உட்பட்டு தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை ந…
-
- 6 replies
- 831 views
- 1 follower
-
-
மீடியாவை சாடும் சித்தார்த்தின் துணிச்சல்! சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வெகுவாக மழைபெய்துவருகிறது. இம்மழையால் மக்கள் அதிக சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். இதுகுறித்து சித்தார்த் கருத்து தெரிவித்துள்ளார். சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “ தேசிய உடகங்களே, மழை வெள்ளத்தால் சென்னையும் தமிழகப் பகுதிகளும் பாதிப்படைந்துள்ளது. சென்னையும் இந்தியாவின் ஒரு பகுதிதான். அமீர்கான், ஷீனா விவகாரத்தை விட இது முக்கியானது. எங்களையும் கவனியுங்கள், எங்களைப் பற்றியும் பேசுங்கள்” என்று கூறியுள்ளார். சென்னை தவிர மற்ற தேசிய ஊடகங்களில் சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை குறித்த எந்த செய்தியும் அதிகமாக இடம்பெறவில்லை…
-
- 0 replies
- 358 views
-
-
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தற்சமயம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மீனவர்களை சுட்டிக்காட்டி இந்த கடிதத்தை அவர் எழுதியுள்ளார். மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு மீன்பிடித் தொழிலை மட்டுமே பெரிதும் நம்பியுள்ளதாகவும் அவர்களை, இலங்கைக் கடற்படையினர் சிறைபிடிப்பதால், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் குறித்த கடிதத்தில் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். உரிய இராஜதந்திர வழிமுறைகளை முன்னெடுத்து, அனைத…
-
- 2 replies
- 255 views
- 1 follower
-
-
சென்னை ராயப்பேட்டையில் காவல் துறையின் அடக்குமுறையையும் மீறி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரால் தமிழீழ தேசியத்தலைவரின் 65 அகவை நாள் கொண்டாடப்பட்டது, இதில் ஈழ உணரவாளர்கள் கலந்து கொண்டதோடு திரைப்பட இயக்குனர் கோபி நைனார் கலந்துகொண்டார். https://www.pathivu.com/2019/11/Thalaivar65_2.html?m=1&fbclid=IwAR0d2EJe6bpZbUBU_6uG9PnMMw1_4Lkc8mUxsBl49bzzyzanYs7oH-ZI890 #மேதகு65 தமிழின தலைவரின் அகவை தினத்தை உலகறிய செய்வோம் இன்று மாலை 6:00 மணிக்கு Twitter பரப்புரை
-
- 0 replies
- 559 views
-
-
தமிழகத்தில், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவர் திருவள்ளுவர் வேடத்தில் அரசு மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு சென்று மாணவர்களுக்கு திருக்குறள் சொல்லிக் கொடுக்கிறார். தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ‘திருக்குறள்’ சுப்புராயன். இவர், சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பிரிவு அலுவலக ஊழியராக 31 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். திருக்குறள் மீது அதிக ஆர்வம் கொண்ட சுப்புராயன், திண்டிவனத்தில் திருவள்ளுவர் இறையானார் கோயில் அமைத்து, அங்கு வரும் மாணவ- மாணவிகளுக்கு திருக்குறளை கற்பித்து வருகிறார். அதேபோல், புட்லூர் பகுதியில் திருக்குறள் பயிற்சி மையம் அமைத்து உள்ளார். மேலும் அவர் திருவள்ளுவர் வேடம் அணிந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்குச் ச…
-
- 1 reply
- 530 views
-
-
http://www.nakkheeran.in/Users/frmGalleryList.aspx?GV=3403&GSS=8
-
- 0 replies
- 338 views
-