தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10249 topics in this forum
-
கள்ளக்குறிச்சியில் குறவர் இனத்தவர் மூவர் கைதாகி துன்புறுத்தப்படுவதாக புகார் 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ள ஓம் பிரகாஷின் மனைவி புவனேஸ்வரி கள்ளக்குறிச்சியில் குறவர் சமுதாயத்தை சேர்ந்த மூன்று பேர் வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்கில் கைதுசெய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. 1990களின் துவக்கத்தில் கடலூர் மாவட்டத்தில் குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக கைதுசெய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட ஜெய் பீம் திரைப்படம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், ம…
-
- 1 reply
- 468 views
- 1 follower
-
-
கலவரத்தை தூண்ட சசி சொந்தங்கள் சதி? மாநிலம் முழுவதும் போலீசார் உஷார் முதல்வர் பழனிசாமி அரசை கவிழ்க்க சதி திட்டம் தீட்டி வரும், சசிகலாவின் மன்னார்குடி சொந்தங்கள், கலவரத்தை துாண்ட திட்டமிட்டு இருப்பதால், போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., பன்னீர் அணி, சசிகலா அணி என, பிளவு பட்டது. தற்போது, இரு அணிகளும் இணைந்து விட்டன. எதிர்ப்பு முதல்வராக பழனிசாமியும், துணை முதல்வ ராக பன்னீர்செல்வமும், அரசை வழிநடத்தி வருகின்றனர். அதே நேரத்தில், சசிகலாவால், துணை பொதுச் செயலராக அறிவிக்கப்பட்ட தினகரன் ஆதரவாளர்கள், தனி அணியாக செயல்பட்டு வருகின…
-
- 1 reply
- 481 views
-
-
நீர் மேலாண்மை தொடர்பாக தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தமிழகத்தில் நீர் மேலாண்மை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில், வேலூர் மாவட்டம், வாணியம்பாடி இயற்கை மற்றும் நீர்வளப் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்த மனுவில், பாலாற்றில் இருந்து உதயேந்திரம் ஏரிக்கு வரும் தண்ணீர் வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் இந்தக் கால்வாயின் வழியாக தண்ணீர் எளிதாகச் செல்ல வழிவகை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், சென்னையில் நிலவும் கடுமையான தண்ணீர் பஞ்சத்தைப் போக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக…
-
- 1 reply
- 580 views
-
-
தமிழக காவல் நிலையங்களில், பதிவேடுகள் மற்றும் குறிப்பாணைகள் தமிழில் இடம்பெறவேண்டும் என தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இருக்கைகளில் உள்ள தன் பதிவேடு, முன்கொணர்வு பதிவேடு உள்ளிட்ட அனைத்து பதிவேடுகளும் தமிழில் பராமரிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகை பதிவேட்டில் தமிழில் கையொப்பம் இடுவதுடன், அனைத்துவிதமான வரைவு கடித தொடர்புகள் மற்றும் குறிப்பாணைகள் தமிழில் எழுதப்படவேண்டும் என கூறப்பட்டுள்ளது. அனைத்து காவல் வாகனங்களிலும் “காவல்” என தமிழில் எழுதுவதுடன் அலுவலக முத்திரைகள் மற்றும் பெயர்ப்பலகைகள் தமிழில் மாற்றப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து காவல்துறை அலுவலர்களுக்கும் …
-
- 1 reply
- 871 views
- 1 follower
-
-
படுகொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் சுவாதி பயன்படுத்திய 14 சிம் கார்டுகள் மற்றும் மடிக்கணணி குறித்த தகவல்களை வெளியிட வேண்டும் என கைது செய்யப்பட்ட ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜ் வலியுறுத்தியுள்ளார்.சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ராம்குமார் கைது செய்யப்பட்டார்.இந்த நிலையில், ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜ் இன்று சென்னையில் நிருபர்களுடன் பேசினார். அப்போது, சுவாதி கொலை வழக்கை விரைந்து முடிக்க நீதித் துறையையும் காவல்துறை துணைக்கு அழைப்பதாக ராமராஜ் குற்றம்சாட்டினார். மேலும், ராம்குமார் தரப்பு ஆதாரங்களை தாக்கல் செய்ய தான் தேவையான தகவல்களை திரட்டி வருவதாகவும் வழக்கறிஞர் ராமராஜ் தெ…
-
- 1 reply
- 603 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிப்பு- சென்னையில் வைகோ தலைமையில் இலங்கை தூதரகம் முற்றுகை Digital News Team முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். வைகோ தலைமையில் சென்னையில் இலங்கை துணை தூதரகம் முற்றுகையிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன. இதையடுத்து இன்று காலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரக…
-
- 1 reply
- 546 views
-
-
பட மூலாதாரம்,TNDGP OFFICE படக்குறிப்பு, சென்னையில் ஆளுநர் மாளிகை மீது கருக்கா வினோத் என்ற நபர் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசினார் 27 அக்டோபர் 2023, 12:05 GMT புதுப்பிக்கப்பட்டது 40 நிமிடங்களுக்கு முன்னர் ஆளுநர் மாளிகை முன்பாக பெட்ரோல் குண்டை வீசிய கருக்கா வினோத் என்பவரை ஜாமீனில் எடுத்தது பாஜக.வைச் சேர்ந்த வழக்கறிஞர் என தி.மு.க. குற்றம்சாட்டியிருக்கிறது. ஆனால், அந்த மனுவைத் தாக்கல் செய்த பிற வழக்கறிஞர்கள் திமுக.வினர் எனக் குற்றம்சாட்டுகிறது பாஜக. என்ன நடந்தது? புதன் கிழமையன்று சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையின் மீது கருக்கா வினோத் என்ற நபர் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசினார். இது ஆளுநர் மாளிகை முன்புறத்தில் உள்ள சால…
-
- 1 reply
- 650 views
- 1 follower
-
-
ஜெயலலிதா-சோ சந்திப்பு வீடியோ...உரையாடலுடன் வாட்ஸ் அப்பில் கசிய விட்ட ஜெயா டிவி விஷுவல் எடிட்டர் கைது. சென்னை : துக்ளக்' பத்திரிகை ஆசிரியர் சோ எஸ். ராமசாமியை, முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சந்தித்த வீடியோ காட்சிகளை இருவரது உரையாடலுடன் வாட்ஸ் அப்பில் உலவ விட்ட ஜெயா டி.வி. விஷுவல் எடிட்டர் புலி என்று ஊழியர்களால் அழைக்கப்படும் சக்திவேல் என்பவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் 15 நாட்கள் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். சோ ராமசாமி, மூச்சுத் திணறல் காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 27 ஆம் தேதி மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த காட்சிகள் ஆடியோ இல்லாமலும், புகைப்படமா…
-
- 1 reply
- 1.1k views
-
-
லேப்டாப் எங்கே? தாக்கியது யார்? ‘‘கமிஷனர் ஆபீஸ் வட்டாரத்தில் இருக்கிறேன்” என்று கழுகாரிடம் இருந்து வாட்ஸ் அப் தகவல் வந்தது. எதற்காக இருக்கும் என்ற குழப்பம் தீருவதற்கு முன்பே கழுகார் வந்து சேர்ந்தார். ‘‘சுவாதி கொலை வழக்கில் உண்மையான விசாரணையே இப்போதுதான் தொடங்கி உள்ளது என்று விவரம் அறிந்தவர்கள் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். அதனால்தான் கமிஷனர் ஆபீஸ் வட்டாரத்துக்குப் போனேன். சுவாதி கொலை வழக்கை முதலில் ரயில்வே போலீஸ் விசாரித்தது. அதன்பிறகு, அது சென்னை மாநகர போலீஸ் வசம் வந்தது. இப்போது அது என்.ஐ.ஏ என்று சொல்லப்படும் தேசியப் புலனாய்வு ஏஜென்சியின் வசம் ஒப்படைக்கப்படலாமோ என்ற நிலைமை எழுந்துள்ளது. அந்த ஏஜென்சியைச் சேர்ந்த அதிகாரிகள் சத்தமில்லாமல் இங்கு வந்து விசாரணையை ஆரம…
-
- 1 reply
- 1.3k views
-
-
வானே இடிந்ததம்மா.....வாழ்வே முடிந்ததம்மா’ : ஜெயலலிதாவிற்காக ஈழத்தமிழர் எழுதிய இரங்கல் பாடல் சென்னை முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் திரையுலகத்தினரையும் வெகுவாக பாதித்துள்ளது. இவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ‘வானே இடிந்ததம்மா.....வாழ்வே முடிந்ததம்மா’ என்ற பாடல் ஒன்று பாடல் சமர்ப்பணமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை இசைஞானி இளையராஜா இசையமைத்ததாக சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால் இந்த பாடலை இசையமைத்து பாடியது புறம்போக்கு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான வர்சன் என்பவர் தான். மேலும் இப்பாடலை எழுதியது ஈழத்தமிழரான பொத்துவில் அஸ்மின். இவர் விஜய் ஆண்டனியின் நான் படத்தில் இடம் பெற்ற…
-
- 1 reply
- 1.6k views
-
-
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பொருட்களை பரிசோதிக்க ரூ.86 லட்சம் செலவில் மலேசியாவில் இருந்து லக்கேஜ் ஸ்கேனர் கருவிகள் வரவழைக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலகப் புகழ்பெற்ற கோவில் ஆகும். இந்த கோவிலுக்கு நாள்தோறும் தமிழகம், மற்றும் பிற மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். கோவிலுக்கு தினமும் 75,000 முதல் 1 லட்சம் பக்தர்கள் வரை வருகின்றனர். இந்நிலையில் கோவிலுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் வேறு இருந்து வருகிறது. இதனால் கோவிலின் 4 கோபுர வாசல்களிலும் மெட்டல் டிடெக்டர் மூலம் பக்தர்கள் சோதனை செய்யப்பட்ட பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பொருட்கள…
-
- 1 reply
- 613 views
-
-
டிடிவி. தினகரன் ஜாமீன் மனு மீதான உத்தரவு வியாழக்கிழமையன்று அறிவிக்கப்படும்: டெல்லி நீதிமன்றம் டிடிவி தினகரன் | கோப்புப் படம். தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள அதிமுக (அம்மா) அணியைச் சேர்ந்த டிடிவி தினகரன் ஜாமீன் மனு மீதான உத்தரவை டெல்லி நீதிமன்றம் நாளை (வியாழன்) வெளியிடுகிறது. சிறப்பு நீதிபதி பூனம் சவுத்ரி இன்று தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனா ஆகியோரது ஜாமீன் மனு மீதான உத்தரவை பிறப்பிக்கவிருந்தார். ஆனால் ஸ்டெனோகிராபர்கள் விடுப்பில் சென்றுள்ளதால் உத்தரவை இன்று பூர்த்தி செய்ய முடியாமல் போனது, எனவே உத்தரவு வியாழக்கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டது. டெல்லி போலீஸாரால் ஏப…
-
- 1 reply
- 439 views
-
-
எனக்கென்று எந்த குடும்பமும் இல்லை - எனக்குள்ள ஒரே சொத்து தமிழக மக்கள் தான்: நீதிமன்றில் ஜெயலலிதா ஆவேசம்! [Wednesday 2014-10-01 12:00] சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூர் தனி நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளது. இதையடுத்து ஜெயலலிதா மற்றும் இதே வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இது பற்றிய தீர்ப்பை நீதிபதி ஜான்மைக்கேல் டி.குன்கா அறிவித்ததும், அது குறித்து பெங்களூர் தனி கோர்ட்டில் ஜெயலலிதா கூறியதாவது:– நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னரே வசதியாக இருந்தவர். செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில…
-
- 1 reply
- 912 views
-
-
அண்ணா நினைவு தினம்: மரியாதை செலுத்திய ஸ்டாலின் Feb 03, 2023 10:16AM மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (பிப்ரவரி 3) திமுக சார்பில் அமைதி பேரணி சென்று மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது. பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அருகே அமைதி பேரணியை துவங்கி வாலாஜா சாலை வழியாக மெரினா கடற்கரைக்கு திமுக நிர்வாகிகள் சென்றனர். பின்னர் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் ஸ்டாலின் மற்றும் கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தின…
-
- 1 reply
- 787 views
- 1 follower
-
-
நாடாளுமன்றத்தில் தற்போது நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரில், வக்பு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்திருந்தார். இது பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் செயல், மத சுதந்திரத்தில் தலையிடும் செயல் என எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. அதைத் தொடர்ந்து, இந்த திருத்த மசோதா மீது ஆய்வு மேற்கொள்ள 31 எம்.பி-க்கள் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. மசூதி இந்த நிலையில், வக்பு திருத்த சட்ட மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால், நாடு தழுவிய மிகப்பெரிய புரட்சியை பாஜக அரசு எதிர்கொள்ள நேரிடும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்ப…
-
- 1 reply
- 285 views
-
-
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையின்போது தமிழக எம்.பி.க்கள் இலங்கைத் தமிழர் பிரச்னையை எழுப்பினர். மைய மண்டபத்தில் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி தமது உரையை தொடங்கிய சிறிது நேரத்தில், திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று முழக்கமிட்டனர். இலங்கை அரசின் கொடூரச் செயல்களுக்கு மேலும் பல ஆதாரங்கள் கிடைத்திருப்பதை சுட்டிக்காட்டிய தமிழக எம்.பி.க்கள், இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். மேலும் ஐ.நா. மனித உரிமை அவையில் கொண்டுவரப்படும் தீர்மானத்தின்போது, இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்றும் திமுக மற்றும் அதிமுக எம்.பி.க்கள் உரத்த குரலில் கூறினர். இலங்கைத் தமிழர் பிரச்னையை தமிழக எம்.பி.க்கள் கிளப்பியதால் குடியர…
-
- 1 reply
- 862 views
-
-
முருகன் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி உண்ணாவிரதம் மேற்கொள்ளும் முருகன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முருகன் வேலூர் சிறையில் உள்ளார். இவர் செல்போன் ‘வாட்ஸ் அப்’பில் தனது உறவினர்களுடன் பேச அனுமதி அளிக்க வேண்டும் என கடந்த மாதம் 23-ந் திகதியில் இருந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் அவரது உடல் மிகவும் சோர்வடைந்திருந்ததால் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. எனினும் அவருக்கு உணவு வழங்க வேண்டும் என வதை்தியர்கள் சிறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து சிறையில் அதிகாரிகள் முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தி கஞ்சி மட்டுமாவது குடிக்க வேண்டும் என கூறினர். அவர் மறுத்ததால் வலுக்கட்டாயமாக கஞ்சி குடிக்க வைத்ததாக கூறப்படு…
-
- 1 reply
- 741 views
-
-
15 நாள் நீதிமன்றக் காவல்! திகார் சிறையில் டி.டி.வி.தினகரன் அடைப்பு தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட டி.டி.வி.தினகரனுக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல் விதித்து தீர்ப்பளித்துள்ளது டெல்லி மாவட்ட நீதிமன்றம். தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக இடைத்தரகர் சுகேஷ் சந்தரை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து டெல்லி குற்றப்பிரிவு போலீஸாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனிடையே 5 நாள் விசாரணை முடிந்த பின்பு இன்று டெல்லி நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்படுத்தபட்டார். இதையடுத்து அவ…
-
- 1 reply
- 459 views
-
-
சென்னை: தமிழகத்தில் நெருக்கடி நிலை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றும் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு, பா.ம.க தலைவர் ஜி.கே.மணி கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி, தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு இன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்றும், அதனை எதிர்த்து தமிழகத்திலே ஜனநாயகத்திலே அக்கறை உள்ள அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இத்தகவலை தி.மு.க தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. http://tamil.oneindia.in/news/2013/08/29/tamilnadu-pmk-writes-dmk-on…
-
- 1 reply
- 2k views
-
-
யாரையும் சந்திக்க விரும்பாத ஜெ! கடந்த சனிக்கிழமை சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதா இதுவரை யாரையும் சிறை வளாகத்தில் சந்திக்கவில்லை என்று சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து சிறை வளாக வட்டாரம் மேலும் தெரிவித்த தகவல் வருமாறு:- தமிழகத்தின் புதிய முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் தமிழக உயர் அதிகாரிகள் என பலரும் சிறையில் ஜெயலலிதாவைச் சந்திக்க முயற்சி செய்தனர். ஆனால் பொதுவாக கைதிகளை பார்க்க சிறைக்கு யார் வந்தாலும், வெளியில் இருந்து இன்னார் வந்திருக்கிறார். நீங்கள் சந்திக்க விருப்பமா? என்று கேட்கப்படும். கைதிகள் விரும்பினால் மட்டுமே கைதி அறையில் இருந்து அழைத்து வரப்படுவர். இதுபோல் சட்டமுறைகள் ஜெயலலிதாவ…
-
- 1 reply
- 1.7k views
-
-
டெல்லி ஜே.என்.யூ மோதலில் தமிழக மாணவர் மீது தாக்குதல் - என்ன நடந்தது? 20 பிப்ரவரி 2023, 08:35 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ஞாயிற்றுக்கிழமை நடந்த மோதலில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் காயமடைந்தார். 100 மலர்கள் (100 Flowers) என்ற மாணவர் குழுவிற்கும், வலதுசாரி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் சங்கமான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்திற்கும் (ஏ.பி.வி.பி) இடையில் நேற்று மோதல் ஏற்பட்டது. இச்சம்பவத்தில் காயமடைந்த மாணவர், சேதப்படுத்தப்பட்ட மாணவர் சங்க அலுவகலம், சுவற்றில் எழுதப்பட்ட வலதுசாரி அரசியல் வாசகங்கள் ஆகிய படங்களும் காணொளிப் பதிவுகளும்…
-
- 1 reply
- 457 views
- 1 follower
-
-
தமிழினத்தின் ஈடிணையற்ற வீரம் மீண்டும் ஒரு முறை பறைசாற்றப்படும், அதன் விளைவாய் மீண்டும் தமிழீழம் பிறக்கும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- ஈழத் தமிழினத்தை அழித்தொழித்து, அதன் மூலம் சிங்கள பௌத்த இனவாத மேலாதிக்கத்தை வலிமையாக நிலைநிறுத்தும் நோக்குடன்இ இலங்கை அரசும் அதன் முப்படைகளும் தமிழர்கள் மீது ஏவிய பயங்கரவாதத்தை எதிர்த்து நின்று களமாடி தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களை நன்றியுடனும்இ பெருமையுடனும் நினைவுகூரும் தினம் இன்று. இந்திய அரசு இவர்களை பயங்கரவாதிகள் என்றும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்றும் கூறி தடை செய்திருக…
-
- 1 reply
- 1.3k views
-
-
எள்ளி நகையாடினாலும் சரி நான் சொன்னது நடக்கும் ... மீண்டும் பரபரப்பை கிளப்பிய செல்லூர் ராஜூ சென்னை: என்னை எள்ளி நகையாடினாலும் சரி நான் சொன்னது நடக்கும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.அமைச்சர் செல்லூர் ராஜூ என்றாலே அங்கு ஒரு பஞ்சாயத்து ரெடியாக இருக்கும். அது போல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் மதுரை மாவட்டம் சிட்னி நகரம் போல் மாற்றப்படும் என கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.அவ்வளவுதான் நெட்டிசன்கள் இரவு பகல் பாராது கருத்துகளை பதிவு செய்தனர். அதில் மதுரை கிட்னிக்கு மட்டுமா பேமஸ், இனிமே #சிட்னி க்கும் பேமஸ் என அமைச்சரை கலாய்த்து வந்தனர். அமைச்சர்கள் இந்நிலையில் மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி தொடக்க விழா நேற்று நடந்…
-
- 1 reply
- 1k views
-
-
தமிழகத்தின் வேலூரில் முதன்முறையாக கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே 110.7 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. அக்னி நட்சத்திர காலத்தில் வேலூரில் 110 டிகிரி வெப்பம் பதிவாகும். முதன் முறையாக அக்னிக்கு முன்பே ஏப்ரல் மாதத்திலேயே 110.7 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இது 108 ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத பதிவாகும். இவ்வருடம் பெப்ரவரி மாதம் முதலே வெப்பம் சுட்டெரிக்க தொடங்கியுள்ளதுடன் மார்ச் மாதத்திலிருந்து தொடர்ந்து 100 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. ஒவ்வொரு நாளும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் அனல் காற்றில் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்னரே இப்படி வெய்யில் ருத்ர தாண்டவம் ஆடுவதால் அக்னி நட்சத்திர காலத்தில் என்ன ச…
-
- 1 reply
- 360 views
-
-
600 சிம்கார்டுகள், 25 மேன்சன்கள், தென்காசி அரிவாள்..!' -ஆந்திரா வரை நீளும் சுவாதி கொலை வழக்கு சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், மூன்று நாட்கள் போலீஸ் விசாரணைக்குப் பிறகு, இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். ' ராம்குமார்தான் கொலையில் ஈடுபட்டார் என்பதற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன' என்கின்றனர் போலீஸ் அதிகாரிகள். சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி காலையில் படுகொலை செய்யப்பட்டார் மென்பொறியாளர் சுவாதி. இந்த வழக்கில் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் ராம்குமாரை, நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள டி.மீனாட்சிபுரத்தில் கழுத்து அறுபட்ட நிலையில் கைது செய்தது போலீஸ். நெல்லை மருத்துவமனையில் சி…
-
- 1 reply
- 644 views
-