தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10332 topics in this forum
-
அடையாளமே இல்லாதவர்களிடம் அடையாள அட்டை கேட்கிறது அரசு! - திருநபர் கிரேஸ் பானு பேட்டி முகம்மது ரியாஸ் நம் சமூகத்தில் திருநபர்களில் பெரும்பாலானோர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள். தனியே அலைந்துதிரிந்து, தன் போன்றவர்களைக் கண்டடைந்து, சிறு குழுவாக உருப்பெற்றவர்கள். மக்கள் புழக்கம்தான் அவர்களுக்கான மூலதனம். ஊரடங்குச் சூழலில் அவர்கள் என்ன ஆனார்கள்? திருநபர் சமூகச் செயல்பாட்டாளரும், எழுத்தாளரும், திருநபர் கூட்டியக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான கிரேஸ் பானுவிடம் பேசினேன் இந்த ஊரடங்குக் காலகட்டத்தில் திருநபர்கள் எத்தகைய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்? தமிழ்நாட்டில் உத்தேசமாக 5 லட்சம் திருநபர்கள் இருக்கிறார்கள். பெருந…
-
- 0 replies
- 386 views
-
-
ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய அதிக அக்கறை காட்டுவது ஏன்? - உயர் நீதிமன்றம் கேள்வி ஆர்.எஸ்.பாரதி: கோப்புப்படம் சென்னை வன்கொடுமைத் தடுப்பு வழக்கில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய அதிக ஆர்வம் காட்டுவது ஏன் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில், பட்டியல் இனத்தவர்கள் குறித்து கருத்து தெரிவித்ததாகக் கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, மத்திய குற்றப்பிரிவுக்கு மா…
-
- 0 replies
- 382 views
-
-
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு – தமிழக அரசு அறிவிப்பு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஜூன் 19ஆம் திகதி முதல் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பாதிப்பு அதிகளவில் உள்ளது. இந்நிலையில், இது குறித்து இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து, குறித்த 4 மாவட்டங்களிலும் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை மையங்க…
-
- 0 replies
- 328 views
-
-
`வேலூரில் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர்களால், பள்ளி மாணவிக்கு நடந்த விபரீதம் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது இளம் பெண் அவர். 11ஆம் வகுப்பு படிக்கிறார். இவர் வீட்டுக்குப் பின்புறம் உள்ள குளியலறையில் குளிப்பதை அப்பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்கள் வீடியோ எடுத்து மிரட்டியதால் அப்பெண் தற்கொலை செய்துகொள்ள முயன்றார். குளிக்கும் வீடியோவை அனுப்பி பணம் கேட்டும், தனியே வருமாறு வலியுறுத்தியும் அவர்கள் தொந்தரவு செய்த நிலையில் சனிக்கிழமை இந்த விபரீத முடிவை சிறுமி எடுத்ததாக காவல் துறை கூறுகிறது. குற்றம்சாட்டப்பட்ட மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மாணவி கொடுத்த வாக்குமூலத்தில், "எனக்குத் தெரியாமல் நான் குளிப்பதை வ…
-
- 1 reply
- 587 views
-
-
நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10% உள் ஒதுக்கீடு: அவசரச் சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் சென்னை நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில் சேர தனி இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டார். இதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. குழு உறுப்பினர்…
-
- 0 replies
- 288 views
-
-
திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் காலமானார் Web Team Published : 10,Jun 2020 08:38 AM கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் இன்று காலமானார். Advertisement திமுக எம் எல்ஏ ஜெ அன்பழகன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த இரண்டாம் ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அண்மையில் அன்பழகனின் உடலை பரிசோதித்…
-
- 25 replies
- 3.5k views
- 1 follower
-
-
`மாறுபட்ட உடல்நிறம், குட்டை வால்!' - குன்னூரில் உலவும் விசித்திர காட்டுமாடு; அதிர்ச்சியில் வனத்துறை காட்டுமாடுகளின் முழங்கால் வரை வெள்ளையாகவும் உடல் கறுப்பு நிறத்திலும் இருப்பதுதான் இயல்பு. ஆனால், இந்தக் காட்டுமாடு மாறுபட்ட நிறத்தில் காணப்படுகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள ஒரு தனியார் தேயிலைத் தோட்ட சாலையைக் காட்டுமாடு கூட்டம் ஒன்று கடந்துள்ளது. 20-க்கும் அதிகமான காட்டுமாடுகள் இருந்த அந்தக் கூட்டத்தில் ஒரு காட்டுமாடு மட்டும் மாறுபட்ட நிறத்தில் காணப்பட்டுள்ளது. இதைப்பார்த்த குன்னூர் கரன்சி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். இயல்பற்ற நிறத்துடன் காணப்படும் இந்தக் காட்…
-
- 1 reply
- 905 views
-
-
புதுக்கோட்டையில் கல்லூரி மாணவி ஆணவக்கொலை?- காதலன் கண்ணீருடன் எஸ்.பியிடம் புகார் இருவருக்கும் திருமண வயது பூர்த்தியடையாததால், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று போலீஸார் கூறியுள்ளனர். புதுக்கோட்டை அருகே தோப்புக்கொல்லையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் விவேக் (20). பெயின்டர் வேலை செய்து வருகிறார். திருவரங்குளத்தைச் சேர்ந்தவர் நாகேஸ்வரன் என்பவரது மகள் சாவித்திரி (19). இவர் புதுக்கோட்டை அரசுக்கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார். விவேக்கும், சாவித்திரியும் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் சாவித்திரியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்குத் தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சம…
-
- 1 reply
- 692 views
-
-
கடலூரில் அசத்தும் இளைஞர்கள்: மருத்துவ குணம் கொண்ட வெட்டிவேரில் முகக்கவசம் தயாரிப்பு வெட்டிவேரில் தயாரிக்கப்படும் முகக்கவசம் கடலூர் ஊரடங்கு காரணமாக தேக்கம் அடைந்துள்ள மருத்துவ குணம் கொண்ட வெட்டிவேரில் முகக்கவசம் தயாரித்து விற்பனை செய்து கடலூர் இளைஞர்கள் அசத்தி வருகின்றனர். வெட்டிவேர் நறுமணமிக்கது மட்டுமல்லாமல் பல மருத்துவ குணங்களையும் கொண்டது. வெட்டிவேரில் இருந்து பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட வாசனைத் திரவியங்கள், அழகு சாதனப் பொருட்கள் என பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வெளி மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல் வெளி நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது கடலூர் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வெட்டிவேர் சாகுபடி…
-
- 0 replies
- 466 views
-
-
சென்னையில் கொரோனாவில் இருந்து மீண்ட 97 வயது முதியவர் சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து மக்களை தொடர்ந்து அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. குறிப்பாக சென்னையில் தொற்று எண்ணிக்கை உச்சத்தில் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், முதியவர்களுக்கு இந்த நோய் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த 97 வயது முதியவர் கிருஷ்ணமூர்த்தி, பூரண குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார். இது அனைவரிடமும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணமூர்த்திக்கு கடந்த மாதம் 30ம் தேதி கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, காவேரி மருத்துவமனையில் சேர்க்…
-
- 3 replies
- 597 views
-
-
81 நாட்களுக்குப் பிறகு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தஞ்சாவூர் மாவட்ட மீனவர்கள் மல்லிப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகுகள். தஞ்சாவூர் மீன்பிடித் தடைக்காலம், கரோனா ஊரடங்கு ஆகியவற்றால் 81 நாட்கள் கடந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் இன்று காலை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில், மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய இடங்களில் சுமார் 150 விசைப்படகுகள் உள்ளன. விசைப்படகு மீனவர்கள் திங்கள், புதன், சனிக்கிழமை என வாரத்தில் 3 நாட்களும், மற்ற நாட்களில் நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வது வழக்கம். இந்நிலையில், கரோனா காரணமாக…
-
- 0 replies
- 405 views
-
-
மாநில அரசு எனக்கு உதவ வேண்டும்; தடைசெய்த மருந்தை எடுத்துக் கொள்ளவில்லை: 4 ஆண்டு தடையை எதிர்த்து கோமதி மாரிமுத்து மேல்முறையீடு செய்ய முடிவு 2019 ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளின் 800மீ பிரிவில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவின் மாதிரிகளில் தடைசெய்யப்பட்ட அனபாலிக் ஸ்டெராய்ட் நான்ட்ரோலன் இருந்தது பி சாம்பிளிலும் உறுதி செய்யப்பட்டதால் அவர் 4 ஆண்டுகள் தடை செய்யப்பட்டார், அவரது தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டது. மார்ச் 18 முதல் மே 17, 2019 வரையிலான இவரது சாதனைகள் அனைத்தும் சாதனைப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டு விட்டன. தமிழ்நாடு தடகள பதக்கங்கள், சான்றிதழ்கள், தரவரிசைப்புள்ளிகள், பணம் ஆகியவை திரும்பப் பெற்றுள்ளன இவரது ஏ சாம…
-
- 1 reply
- 392 views
-
-
2 ரூபாய்க்கு கொரோனா மருந்து- தமிழக டாக்டர் கண்டுபிடிப்பை பரிசீலிக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் வசந்தகுமார். இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளேன். இதுகுறித்த ஆராய்ச்சி கட்டுரைகளுடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு மனு அனுப்பி உள்ளேன். ஆனால் இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. எனது மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி, மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ் குமார் ஆகியோர் நேற்று காணொலிக்க…
-
- 1 reply
- 704 views
-
-
எழுவர் விடுதலை; 30 ஆண்டு சிறைக்கொடுமை போதாதா? 1,007 நாட்கள் ஆகியும் ஆளுநர் காலதாமதம் செய்வது நியாயமல்ல: ராமதாஸ் ராமதாஸ்: கோப்புப்படம் சென்னை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜூன் 11) வெளியிட்ட அறிக்கை: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளன், அந்த வழக்கில் விசாரணை என்ற பெயரில் கைது செய்யப்பட்டு இன்றுடன் 29 ஆண்டுகள் நிறைவடைந்து 30-வது ஆண்டு தொடங்குகிறது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றமே ஆணையிட்டும், அந்த விஷயத்தில் தமிழக ஆளுநர் முடிவ…
-
- 0 replies
- 475 views
-
-
கரோனாவை தடுக்க ‘நானோ’ தொழில்நுட்பத்தில் நவீன முகக்கவசம்: காமராசர் பல்கலை பேராசிரியர்கள் கண்டுபிடிப்பு மதுரை கரோரனாவைத் தடுக்க, நானோ தொழில்நுட்பத்தில் நவீன முகக்கவசத்தை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர். மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆரோக்கிய தாஸ், அசோக்குமார் ஆகியோர் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையிலான ‘நானோ ’ தொழில்நுட்பத்தில் நவீன, புதிய சுவாசக் கருவி(முகக்கவசம்) ஒன்றை தயாரித்துள்ளனர். பல்கலை துணைவேந்தர் எம். கிருஷ்ணன் முன்னிலையில் இக்கருவி குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். வளிமண்டலத்திலுள்ள ஆக்சிஜனை நானோ மெட்டீரியல், மின்காந்தவியல் மூலம் தனியாக பிரித்தெடுத்து, சுவாச …
-
- 0 replies
- 410 views
-
-
கரோனா விழிப்புணர்வுப் பணி: விரைவில் ஈடுபட உள்ள 10,000 சென்னை பள்ளி ஆசிரியர்கள் பிரதிநிதித்துவப் படம் சென்னை கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி 10 ஆயிரம் சென்னை பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுவிட்டதாலும் பள்ளிக்கூடங்கள் இதுவரை திறக்கப்படாததாலும் சென்னையைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்களை கரோனா காலத்தில் மனநல ஆலோசகராக செயல்பட வைக்க தமிழக பள்ளிக் கல்வித் துறை முடிவெடுத்துள்ளது. சென்னையைச் சேர்ந்த தமிழக அரசு மற்றும் அரசு உதவி பள்ளி ஆசிரியர்களுக்கு இந்தப் பணியைப் பள்ளி கல்வித் துறை வழங்கவிருக்கிறது. மண்டலத்துக்கு 30 ஆசிரியர்கள் வீதம் 10 ஆயிரம் ஆசிரியர்கள் இந்தப் …
-
- 0 replies
- 412 views
-
-
ராயபுரம் அரசு குழந்தைகள் இல்லத்தில் சிறுவர்களுக்கு கரோனா: உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு: சுகாதாரத்துறைக்கு நோட்டீஸ் சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள அரசு குழந்தைகள் இல்லத்தில் சிறுவர்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, அது தொடர்பான செய்திகளை வைத்து, கரோனா தொற்று தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்குப் பதிவு செய்து அறிக்கை அளிக்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்று உச்சத்தில் உள்ளது. 36,000 எண்ணிக்கையைக் கடந்து கரோனா தொற்று உள்ளது. சென்னை 26,000 என்கிற எண்ணிக்கையைக் கடந்து தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டமாக உள்ளது. அதிலும் சென்னையில் குறிப்பிட்ட 5 மண்டலங்களில் கரோனா தொற்று 2,000 என்கிற…
-
- 0 replies
- 330 views
-
-
I/A3i என்ற புதிய வைரஸ் பரவுகிறதா? By kisukisu On Thursday, June 11 th, 2020 · புதிய வகை கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவுவதாகவும் அதன் பாதிப்பு அதிகமென்றும் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் செய்திகள் தொடர்ந்து வெளிவருகின்றன. இந்தத் தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை? தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுவருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஜுன் 8ஆம் தேதி திங்கட்கிழமை, தமிழ்நாட்டில் I/A3i என புதிய வகை கொரோனா வைரஸ் பரவியிருப்பதாகவும் அதன் காரணமாகவே பாதிப்பு அதிகம் இருப்பதாகவும் செய்திகள் பரவின. இந்தச் செய்தி பெரும் …
-
- 2 replies
- 487 views
-
-
ராஜலட்சுமி தொழில்நுட்பக் கல்லூரி நாட்டிலேயே முதல்முறையாக மெய்நிகர் முறையில் பட்டமளிப்பு விழா நடத்தியது கோவிட் 19 அச்சுறுத்தல் சூழலில் நாட்டிலேயே முதன்முறையாக ராஜலட்சுமி கல்விக் குழுமத்தின் ராஜலட்சுமி பொறியியற் கல்லூரி மெய்நிகர் முறையில் பட்டமளிப்பு விழாவை நடத்தி பிற உயர் கல்வி நிறுவனங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது. மாண்புமிகு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தரவரிசையில் இடம்பிடித்து கல்லூரியை பெருமை பெறச் செய்த மாணவர்களை கவுரவித்தார். அஷ்ரிதா கே(ஐடி-12வது இடம்), முத்துவேல் சி(மெக்கானிக்கல்-15வது இடம்), அஷ்வதி எம்(சிஎஸ்இ-19வது இடம்) ஆகியோர் சான்றிதழையும் பட்டத்தையும் பெற்றனர். இந்நிகழ்வில் ராஜலட்சுமி கல்விக் குழுமத்தின் தலைவர் டா…
-
- 0 replies
- 550 views
-
-
கொரோனா வைரஸ்: I/A3i என்ற புதிய வைரஸ் இந்தியாவில் பரவுகிறதா? புதிய வகை கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவுவதாகவும் அதன் பாதிப்பு அதிகமென்றும் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் செய்திகள் தொடர்ந்து வெளிவருகின்றன. இந்தத் தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை? தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுவருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஜுன் 8ஆம் தேதி திங்கட்கிழமை, தமிழ்நாட்டில் I/A3i என புதிய வகை கொரோனா வைரஸ் பரவியிருப்பதாகவும் அதன் காரணமாகவே பாதிப்பு அதிகம் இருப்பதாகவும் செய்திகள் பரவின. இந்தச் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "இது…
-
- 0 replies
- 529 views
-
-
தமிழ்நாட்டில் ஆன்- லைன் வகுப்புகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலின் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்கள் திறப்பது தாமதமாகிவரும் நிலையில், ஆன்லைன் வகுப்புகளை பல்வேறு தனியார் பள்ளிக்கூடங்கள் நடத்திவருகின்றன. இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர் ஆன் லைன் வகுப்புகளைத் தடைசெய்ய வேண்டுமெனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், "ஆன்-லைனில் மாணவர்கள் கல்வி கற்கும்போது ஆபாச இணையதளங்களும் குறுக்கிடுகின்றன. இதனால் கவனச்சிதறல் ஏற்படுகிறது. மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இது போன்ற இணையதளங்கள் குறுக்கிடாத வகையில் சட்டங்களை வகுக்…
-
- 0 replies
- 359 views
-
-
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கன்னியாகுமரி சிறுமி: முதியவர்கள், சிறார்கள் கைது ஒரு 12 வயது சிறுமியின் வறுமையைப் பயன்படுத்தி அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேர், கன்னியாகுமரி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியின் தந்தை ஓட்டல் தொழிலாளி. தாய் மன நலம் பாதிக்கப்பட்டவர். கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த சிறுமியின் தந்தை வெளியூரில் தாம் வேலை செய்துவந்த ஓட்டலிலேயே தங்கிவிட்டார். வறுமையின் காரணமாக உதவி தேடிய சிறுமி இந்நிலையில், அச்சிறுமி அக்கம்பக்கம் உள்ள வீடுகளுக்கு சென்று அவர்கள் கொடுக்கும் சிறு, சிறு வேலைகளை செய்து அதற்கு அவர்கள் தரும் பணம் மற்றும் உணவு பொருட்களைக் கொண்டு தாயையும் காப்பற்றியதோடு, தாமும் உயிர் …
-
- 0 replies
- 486 views
-
-
கொரோனா தொற்றில் இருந்து மாணவர்களை காக்கும் வகையில்; எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரத்து அனைவரும் தேர்ச்சி - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு சென்னை, கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. தமிழகத்தில், ஏற்கனவே நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்த பிளஸ்-1 பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் மட்டும் மார்ச் 24-ந் தேதி வரை நடைபெற்றன. மார்ச் 26-ந் தேதி நடைபெறுவதாக இருந்த பிளஸ்-1 பொதுத்தேர்வின் இறுதிநாள் தேர்வும், மார்ச் 27-ந் தேதி தொடங்கி நடைபெறுவதாக இருந்த எஸ்.எஸ்.எல்.சி. (10-ம் வகுப்பு) பொதுத்தேர்வும் மாணவர்கள் நலன்கருதி தள்ளிவைக்கப்படுவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி …
-
- 0 replies
- 311 views
-
-
சென்னையில் உள்ள கல்லூரிகளை கொரோனா மையங்களாக மாற்ற தீர்மானம்! சென்னையில் உள்ள கல்லூரிகளை கொரோனா மையங்களாக மாற்ற சுகாதாரத்துறை தீர்மானித்துள்ளது. இதன்படி சென்னையில் உள்ள 19 கல்லூரிகள் கொரோனா மையங்களாக மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதன்காரணமாக வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை நிலவுதாக கூறப்படுகிறது. இந்நிலையிலேயே மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள், சளி மற்றும் காய்ச்சல் என அறிகுறி உள்ளவர்களை இங்கு தங்க வைத்து சிகிச்சை அளிக்கவும், தீவிர …
-
- 0 replies
- 307 views
-
-
மருத்துவமனைக்குள் புகுந்து சிகிச்சை பெற்று வந்த நபரை கொலை செய்த மர்ம நபர்கள்..! மதுரை மதுரை கரும்பாலை பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் கடந்த 5-ம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட விபத்து காரணமாக கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் முருகனுக்கு துணையாக இருந்த அவரது மனைவி தேநீர் வாங்க வெளியே சென்றிருந்தார். அப்போது, முருகன் சிகிச்சை பெறும் சிகிச்சை அறைக்குள் புகுந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தி அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு முருகனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். இதனைத்தொடர்…
-
- 0 replies
- 444 views
-