Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கருணாசின் கார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் செருப்பு வீசியுள்ளனர். நடிகரும் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான கருணாசின் கார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் செருப்பை வீசியுள்ளனர். இன்று கருணாஸ் தனது தொகுதியான திருவாடனைக்கு சென்றுவிட்டு அங்கிருந்து திரும்பிய போது மறைந்திருந்த சில நபர்கள் அவரது கார் மீது செருப்புகளை வீசி எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் கருணாஸ் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். http://globaltamilnews.net/archives/19078

  2. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், திமுக தலைவர் கருணாநிதியை, வியாழக்கிழமை திடீரென சந்தித்தார். சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக கருணாநிதியிடம் ஆசாத் விவாதித்ததாகத் தெரிகிறது. சென்னை, சிஐடி காலனி இல்லத்தில் இரவு 8.25 மணிக்கு நடைபெற்ற இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் சார்பில் தங்கபாலுவும், திமுக சார்பில் துரைமுருகன், டி.கே.எஸ்.இளங்கோவன், கனிமொழி ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் குலாம்நபி ஆசாத் கூறியதாவது: வேலூர் சி.எம்.சி கல்லூரியின் பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. அதில் பங்கேற்க வந்தேன். நான் சென்னைக்கு வரும்போதெல்லாம், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரான க…

  3. 95-ஆவது பிறந்தநாள்: தொண்டர்களை சந்தித்தார் கருணாநிதி... விண்ணதிர உற்சாக முழக்கங்கள்! 95ஆவது பிறந்தநாளையொட்டி தொண்டர்களை தனது கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி சந்தித்தார். கருணாநிதி இன்று 95-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஓராண்டுக்கு மேல் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த கருணாநிதியின் அடுத்தடுத்த உடல் முன்னேற்றங்கள் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இன்று பிறந்த தினத்தையொட்டி தமிழகமெங்கும் சாலைகளில் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் திமுகவினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோபாலபுரம் இல்லத்தில் தங்களை நிச்சயம் கருணாநிதி தங்களை சந்திப்பார் என்ற நம்பிக்கையின் பேரில் அவரது இல்லத்தில் நூற்றுக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.Read more at: ht…

  4. கருணாநிதி vs ஜெயலலிதா = ஊழல்! (வீடியோ) 'விஞ்ஞானப்பூர்வ ஊழல்' என்ற புது வார்த்தையை தமிழிற்கு அறிமுகம் செய்தவர் என தி.மு.க தலைவர் கருணாநிதியை வசை பாடுகிறது அ.தி.மு.க. 'சொத்துக்குவிப்பு ராணி' என்ற அடைமொழியோடு ஜெயலலிதாவை வறுத்தெடுக்கிறது தி.மு.க. திராவிட கட்சிகளின் (?!) கடந்த 50 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு பழகிப்போன வார்த்தை ஊழல் என்பதுதான். 'பெரிய ஊழல்', 'சிறிய ஊழல்' என்று நாம் அதிர்ச்சியடைவதற்காகவோ அல்லது சர்வசாதாரணமாக கடந்து செல்வதற்காகவோ வசதியாக ஊழலை இரண்டு பிரிவாக பிரித்ததுதான் இவ்விரு கட்சிகளின் அளப்பரிய சாதனை... நம் விரலாலேயே நம் கண்ணை குத்தவைப்பது போல நம்முடைய விரல்களால் அடையாளம் காணப்பட்ட இந்த இரு கட்சிகளின் தலைவ…

  5. கருணாநிதி அஞ்சலி நிகழ்வு; ஒரு பாதுகாப்பு அதிகாரி கூட இல்லாமல் தொண்டர்கள்-பொதுமக்கள் மத்தியில் சிக்கிய ராகுல்: பிரதமர் வருகைக்குப் பின் பாதுகாப்பு தளர்ந்ததா? பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் சிக்கிய ராகுல் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி அரங்குக்கு வந்தபோது, தனி பாதுகாப்பு அதிகாரிகள் இன்றி, தொண்டர்களின் கூட்டத்தில் சிக்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ராகுல் காந்திக்கு தமிழக போலீஸார் யாரும் பாதுகாப்பு வழங்கவில்லை என்று ஏற்கெனவே எழுந்துள்ள குற்றச்சாட்டை இந்த வீடியோ நிரூபிப்பது போன்று உள்ளது. வயது மூப்பின் காரணமாக, கல்லீரல் பிரச்சினை, மூச்…

  6. கருணாநிதி அன்று முதல் இன்று வரை நா கூசவில்லையா 18.11.2009 அன்று கருணாநிதி வெளியிட்டுள்ள உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில் “சகோதர இப்படி காரணமாக நம்மை நாமே கொன்று குவித்துக் கொண்டது மாத்திரமல்ல, முறையாக திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ளத் தவறிய காரணத்தால் நம்முடைய பலத்தையும், மாற்றார் பலத்தையும் துல்லியமாக கணிக்காத காரணத்தால், நம்முடைய தமிழ் மக்கள் எத்தனை பேர் மாற்றாரின் தாக்குதலுக்கு உள்ளாகி தங்கள் உயிரை இழக்க நேரிட்டது ?“ என்று எழுதியுள்ளார். வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல் என்ற வள்ளுவன் வாக்கு கருணாநிதிக்கு மட்டும் தான் தெரியுமா என்ன ? புலிகள் தம்முடைய பலத்தையும், மாற்றான் பலத்தையும் துல்லியமாக கணிக்கத் தெரியாதவர்களா என்ன …

    • 0 replies
    • 1.8k views
  7. திமுக தலைவர் கருணாநிதி மத்திய அரசில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்திருப்பது ஒரு கபட நாடகம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா சாடியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில், இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, "அமெரிக்காவின் வரைவு தீர்மானத்தை பெருமளவிற்கு நீர்த்துப் போக விட்டதோடு, தி.மு.க. முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனையும் செய்யவில்லை. எனவே, ஈழத் தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலைகளே உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதற்குப் பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் தி.மு.க. நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால் தி.மு.க. மத்திய அமைச்சரவையிலிருந்தும், ஐக்கிய முற்போ…

  8. கருணாநிதி ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டார்: துரைமுருகன் காவேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் தி.மு.க.தலைவர் கருணாநிதி, ஆபத்தான காலக்கட்டத்தை கடந்து விட்டாரென தி.மு.க.முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில் கருணாநிதியின் உடல்நிலையில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் நாம் கூறுவதை அவரால் கேட்க முடிகிறது. இந்தவகையில் அவர் ஆபத்தான காலகட்டத்தை தற்போது கடந்து விட்டார் . இதனால் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் நிச்சயம் வீடு திரும்புவார…

  9. கருணாநிதி இன்று..? ப.திருமாவேலன் - ஓவியம்: கார்த்திகேயன் மேடி ‘`சார்... தலைவரே!” என்று அழைக்கிறார் ரஜினிகாந்த். அவரை அடையாளம் காண முடியவில்லை கருணாநிதியால். ‘`ஐயா, வைரமுத்து வந்திருக்கிறேன். உங்கள் கவிஞர் வந்திருக்கிறேன்’’ என்று உரக்கக் குரல்கொடுக்கிறார் வைரமுத்து. குரலோசை, காதுகளுக்குள் போகவில்லை கருணாநிதிக்கு. “அப்பா, திருவாரூர் போயிட்டு வர்றேன்” - உத்தரவுக்காகக் காத்திருக்கிறார் ஸ்டாலின். உரக்கச் சொல்லியும் உணர்வு இல்லை கருணாநிதியிடம். “அண்ணே, அறிவாலயம் போகலாமா?” இது துரைமுருகனின் வெடிக்குரலில் வெளிப்படும் வேதனைக் கேள்வி. சிக்கலான எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லும் கருணாநிதியிடம் இருந்து வரவில்லை எதிர்க்குரல். நாளிதழை வாசிக்கிறார் சண்மு…

    • 10 replies
    • 3.1k views
  10. கருணாநிதி இல்லத் திருமண விழாவில் கொள்ளையடித்த பலே திருடர்கள் திமுக தலைவர் கருணாநிதி இல்லத் திருமண நிகழ்ச்சியில் பணத்தை கொள்ளையடித்த இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். திங்கள்கிழமை அன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில், திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், தமிழரசுவின் மகனுமான நடிகர் அருள்நிதியின் திருமணம், நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் வேலை செய்வதற்காக ஏராளமான பணியாளர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், அங்கு வந்த இரு நபர்கள், சுப்புராயன் என்பவரது பணப்பையை திருடிக் கொண்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த சுப்புராயனும், பிற தொழிலாளர்களும் சேர்ந்து இரு நபர்களையும் விரட்டிப் பிடித்துள்ளனர். பின…

  11. கருணாநிதி எனும் சாமான்யன் சாணக்யன் ஆன வரலாறு! "ஆளும் திறமை இடது மூளை... அவரின் காவியமும், கற்பனையும் வலது மூளை. பரவலாக மனிதனுக்கு இரண்டில் ஒன்றுதான் மேன்மையாக இருக்கும். இரண்டும் மேன்மையாகச் செயல்படுவது கலைஞருக்குத்தான்" உலகம் வியந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பற்றி ஒரு சுவாரசியமானத் தகவல் உண்டு. அவரது மூளையை ஆய்வு செய்த தாமஸ் ஹார்வி என்ற மருத்துவர் உலகில் வேறு எவருக்கும் இல்லாத அளவிலான தொடர்பு நரம்புகள் அவரது மூளையில் அடர்த்தியாக இருந்தன என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர் கணிதம் மற்றும் இயற்பியலில் எவராலும் போட்டிபோட முடியாதவர் என்பதால் ஐன்ஸ்டீனின் இடது மூளையின் செயல்பாடுகள் அதிவேகமானதாகவும்…

  12. சென்னை: மழைக்கால நிவாரண நடவடிக்கை குறித்து எத்தனை பொய்க்குற்றச்சாட்டுகள் கூறினாலும் கருணாநிதி என்றும் ஜீரோதான் என முதல்வர் பன்னீர் செல்வம் பதிலடி கொடுத்துள்ளார். மழைக்கால நிவாரண நடவடிக்கைகளை தமிழக அரசு சரிவர மேற்கொள்ளவில்லை என விமர்சித்து, 'பதவி நிலைத்திடவாவது; பதறி எழுவீர்!' என்ற தலைப்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்து, 'மக்களை ஏமாற்றியாவது பதவியை அடைந்திட இயலுமா?' என்ற பதற்றத்தில் கருணாநிதியின் அறிக்கை உள்ளதாக குறிப்பிட்டு, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முதல்வர் பன்னீர் செல்வம், “தமிழ்நாடு அரசு வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை துவங்கிய பின் எடுத்த ம…

  13. நாங்கள் வெளியே வந்ததால், இலங்கை தமிழர்களுக்கு என்ன நடந்து விட்டது? கருணாநிதி கேள்வி சென்னை: இலங்கை விவகாரத்தில், மத்திய அரசிலிருந்து தி.மு.க., வெளியே வந்துள்ளதால், இலங்கை தமிழர்களின் நிலையில், எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மத்திய அரசிலிருந்து தி.மு.க., வெளியே வந்ததற்காக கட்சியினர் கவலைப்படவேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார். தி.மு.க., தலைவர் கருணாநிதி தனது கட்சியினருக்கு எழுதியுள்ள கடிதத்தில், முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட சிலரின் ஆசைப்படி நாங்கள் மத்திய அரசிலிருந்து வெளியே வந்து விட்டோம். இப்போது என்ன நடந்து விட்டது? ஈழத்தமிழர்களின் பிரச்னைகள் தீர்ந்து விட்டதா? அல்லது அமெரிக்க தீர்மானத்தின் மீது ஐ.நா., மனித உரிமை கவு…

    • 49 replies
    • 3.8k views
  14. நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும் கலைஞர் கருணாநிதியின் கொள்ளுபேரனும், கெவின் நிறுவன இயக்குனர் சி.கே.ரங்கநாதன்-தேன்மொழி தம்பதிகள் மகனுமான மனு ரஞ்சித்துக்கும் பெரியவர்கள் திருமணம் பேசி முடித்திருந்தனர். இந்த திருமண நிச்சயதார்த்த விழா, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள 7 நட்சத்திர ஓட்டலில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட விக்ரமுக்கு மிக நெருக்கமான நண்பர்களும், மற்றும் இரு குடும்பத்தைச் சேர்ந்த நெருக்கமான உறவினர்களும், மணமகள் அக்ஷிதாவின் தோழிகளும், மணமகன் மனு ரஞ்சித்தின் நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டனர். திருமண திகதி பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. என்றாலும் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடக்கும் என்று தெரிகிறது. திருமணத்தை தி.மு.கழக தலைவர் கருணா…

  15. மக்கள் நலக் கூட்டணியின் செய்தியாளர் சந்திப்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதி குறித்து வைகோ தெரிவித்த கருத்துக்களுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அவர் தன் கருத்து குறித்து மன்னிப்புக் கோரியுள்ளார். I வைகோவின் பேச்சு குறித்து சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் ம.தி.மு.க. பொதுச் செயலாளருமான வைகோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தே.மு.தி.கவின் கூட்டணி குறித்து அதிருப்தி வெளியிட்ட அக்கட்சியின் முன்னாள் கொள்கைபரப்புச் செயலாளர் சந்திரகுமார் குறித்து கண்டனங்களை வெளியிட்டார். தொடர்ந்து பேசிய அவர், சந்திரகுமார் இதுபோல செய்வதற்குப் பதிலாக, வேறு தொழிலைச் செய்யலாம் என்று பாலியல் தொழிலைக…

  16. கருணாநிதி சிலை திறக்க சென்னை வருகிறார் சோனியா காந்தி : November 29, 2018 1 Min Read அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சென்னை வருகைதரவுள்ளதாக திராவிட முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் காலமான கருணாநிதிக்கு தி.மு.க. தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் உருவ சிலை அமைக்கப்பட உள்ளது. அத்துடன் தி.மு.க. நிறுவனர் அண்ணாவுக்கும் புதிய சிலை அமைக்கப்பட உள்ளது. அண்ணா-கருணாநிதி ஆகியோரின் சிலைகள் திறப்பு விழா எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி நடைபெற உள்ளது. இந்த விழாவை தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் விழாவாக மாற்ற ஏற்பா…

  17. கருணாநிதி சிலை திறப்பு விழா: ரஜினி-கமல்ஹாசனுக்கு தி.மு.க அழைப்பு! மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முழு உருவச்சிலை திறப்பு விழாவில் பங்கேற்குமாறு ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முழு உருவச்சிலை அறிவாலய வளாகத்தில் திறக்கபபடவுள்ளது. அண்ணா, கருணாநிதி ஆகியோரது சிலைகள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டு, சிலைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறும் விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, கருணாநிதி சிலையை திறந்து வைக்கவுள்ளார். இந்நிலையில், விழாவுக்கு அகில இந்திய அளவில் தலைவர்கள் அழைக்கப்படுகின்றார்கள். மேலும் நாளைமறு நாள் மு.க.ஸ்டாலின் டெல்…

  18. கருணாநிதி தற்போது என்ன செய்துக்கொண்டு இருக்கிறார் ? தமிழ் என்றாலே உயிர் நாம் கருணாநிதிக்கு, அவர் தொடாத தமிழ் பக்கமே கிடையாது. வழக்கையில் பிரச்னை இல்லை என்றால் நமக்கு ஏதோ ஒரு பிரச்சனை என்று சொன்னவர். பொதுக்கூட்டம், மேடைப்பேச்சு, மக்களை சந்திப்பது, அண்ணா அறிவாலயம் செல்வது என ரெக்கைக்கட்டி பறந்தவர் இப்போது வீட்டில் அமைதியாய் இருக்கிறார். உடல்நிலை குறைவால் யாரிடமும் அவ்வளவு பேசுவதில்லை, சிலரை பார்த்தால் சிரிக்கிறார், சிலரை பார்த்தால் அழுகிறார் கலைஞர்.

  19. கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி அமைந்தே தீரும்: உறுதி முழக்கப் பேரணியில் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை நினைவுப் பரிசாக கொடுக்கப்பட்ட வீரவாளுடன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின். அருகில் துரைமுருகன், பொன்முடி, தா.மோ.அன்பரசன், எ.வ.வேலு, ஜெகத்ரட்சகன், க.சுந்தர். தமிழகத்தில் கருணாநிதி தலைமை யில் திமுக ஆட்சி அமைந்தே தீரும் என்று காஞ்சிபுரத்தில் நடந்த உறுதி முழக்கப் பேரணி பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் உறுதி தெரிவித்தார். நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்ட ஸ்டாலின் அதைச் சில தினங்களுக்கு முன்பு நிறைவு செய்தார். இதன் நிறைவு நிகழ்ச்சியாக…

  20. சென்னை: நவம்பர் 17ஆம் தேதி சென்னையில் டெசோ அமைப்பின் கூட்டம், கருணாநிதி தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டொசோ அமைப்பு சார்பில் விடுத்துள்ள அறிவிப்பில், ''தமிழ் ஈழம் அதரவாளர் அமைப்பின் (டெசோ) கூட்டம் வரும் 17ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டம் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெறும்'' எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த கூட்டத்தில் டெசோஅமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. http://news.vikatan.com/article.php?module=news&aid=21288

  21. கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா: எடப்பாடி,அண்ணாமலைக்கு அழைப்பு. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியிடும் நிகழ்ச்சி தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத்சிங் பங்கேற்று கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகினறது. இந்த விழாவில் கூட்டணி கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோரும் பங்கேற்க முதலமைச்சர் விரும்புகிறார். அதன் அடிப்படையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர…

  22. கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்துக்கு அமித் ஷா அழைப்பு: பா.ஜ.கவை நெருங்குகிறதா தி.மு.க.? முரளிதரன் காசி விஸ்வநாதன்பிபிசி தமிழ் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கான நினைவேந்தல் கூட்டம் ஒன்றில் பா.ஜ.கவின் தலைவர் அமித் ஷாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது அக்கட்சி தொண்டர்களிடத்திலும் தமிழக அரசியல் களத்திலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியு…

  23. கருணாநிதி போட்ட தடை : திமுகவினர் கடும் அதிர்ச்சி திமுக முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு திமுக தலைவர் கருணாநிதி தடை போட்டுள்ளார். திமுக முன்னாள் அமைச்சரை தனது கோபாலபுரம் இல்லத்திற்கு எக்காரணம் கொண்டு வரக் கூடாது என திமுக தலைவர் கருணாநிதி தடை போட்டுள்ளார். அவர், மு.க.ஸ்டாலினுக்கு துாபம் போட்டு அரசியல் ரீதியிலான பிரச்சனைகளை ஏற்படுவதாக வந்த தகவலை அடுத்தே, இந்த உத்தரவு போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், திமுக முக்கிய நிர்வாகிகளே கடும் அதிர்ச்சியில் உறைந்துபோய் இருக்கிறார்கள். http://www.virakesari.lk/article/8128

  24. கருணாநிதி மனைவி தயாளு அம்மாள் திடீர் சுகவீனம்.. மருத்துவமனையில் அனுமதி. சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு நேற்று மாலையில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். நேற்று மாலையில் தயாளு அம்மாளுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்ரனர். அவரது உடல் நல பாதிப்பு குறித்த விவரம் தெரியவில்லை. அவருக்கு டாக்டர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது. -தற்ஸ் தமிழ்-

  25. கருணாநிதி மறைவுக்கு பின் ஸ்டாலின் முன்பு உள்ள சவால்கள் என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைFACEBOOK/MK STALIN கடந்த புதன்கிழமையன்று, மறைந்த கருணாநிதியின் உடலை சென்னை மெரினாவில் நல்லடக்கம் செய்ய அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு வந்தவுடன், ராஜாஜி அரங்கில் கருணாநிதியின் உடலுக்கு அருகே இருந்த மு. க. ஸ்டாலின் கண்கலங்கி உணர்ச்சிவசப்பட்ட காட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.