Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஐஐடி சென்னையில் படித்துவந்த கேரளாவை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, ஐஐடி பேராசிரியர்கள் பலரும் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளதாக சென்னை கோட்டூர்புரம் காவல்நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மானுடவியல் முதுகலை படிப்பில் முதலாமாண்டு மாணவியான பாத்திமா லத்தீப் கடந்த சனிக்கிழமையன்று தற்கொலை செய்துகொண்டதாக வெளியான தகவலை அடுத்து, அவருக்கு பாடம் கற்பித்த பேராசிரியர்கள், மாணவர்கள் என எல்லோரும் விசாரணை செய்யப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் ஊடகத்தினரிடம் பேசுகையில் தற்கொலைச் செய்து…

  2. வழங்குகின்றோம். Image caption கோப்புப்படம் தினமணி - வந்தவாசியில் 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த தேசூரில் 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நடுகற்கள் கண்டறியப்பட்டதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது. வந்தவாசியை அடுத்த தேசூரில் கோட்டைப் பகுதி இருப்பதாகவும், அதுகுறித்த தகவல்களைச் சேகரிக்குமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சு.ஜானகி கூறியதன் பேரிலும், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலர் ச.பாலமுருகன், முனை…

  3. காவிரி மேலாண்மை ஆணையகத்துக்கு புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி ஆரம்பம்! காவிரி மேலாண்மை ஆணையகத்துக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காவிரியின் இறுதித் தீர்ப்பை நிறைவேற்ற காவிரி மேலாண்மை ஆணையகம் அமைக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் இடைக்கால தலைவராக மத்திய நீர்வள ஆணையரான மசூத் ஹுசைன் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், சுதந்திரமாக செயற்படக்கூடிய நிரந்தரத் தலைவரை நியமிக்க வேண்டுமென தமிழக அரசு வழக்குத் தொடர்ந்திருந்தது. மசூத் ஹுசைன் ஓய்வுபெற்ற பின் அப்பதவிக்கு நியமிக்கப்பட்ட ஏ.கே.சின்ஹா, காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் பதவியை கூடுதலாக கவனித்து வருவார் எனக் கூறப்பட்டது. …

  4. சென்னையில் இடமாற்றம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஒருவருக்கு ஆதரவாக பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். தமிழ் சினிமாக்களில் எப்போதும், ரவுடிகளை ஆதரிப்போர் போலவே சித்தரிக்கப்படும், காசிமேடு மக்களின் அன்பை வெளிப்படுத்திய நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.... இங்கே பெண்கள் சாலையில் அமர்ந்து மறியல் செய்வது, குடிநீர் கேட்டோ, அல்லது நிவாரண நிதி கேட்டோ அல்ல- நியாயமான காவல் ஆய்வாளர் ஒருவரை, தங்கள் பகுதியில் இருந்து பணியிட மாற்றம் செய்யக் கூடாது என்பதற்காகத் தான் இந்த போராட்டம்..! தாயைக் கண்ட பிள்ளைகள் போல சாலையில் இருந்து எழுந்து சென்று அங்கு வந்த காவல் ஆய்வாளரின் காலில் விழவும், அவர்களை அந்த காவல் ஆய்வாளர் கைதூக்கிவி…

  5. சென்னைக்கு இரண்டுநாள் விஜயம் மேற்கொண்டுள்ள வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.கே.ஸ்ராலின் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று முற்பகல் சென்னையில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது ஆளுநர் இலங்கைக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையிலும், வடமாகாணத்திற்கும் தமிழ் நாட்டுக்கும் இடையிலும் புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு வடமாகாண ஆளுநர் என்ற ரீதியில் தனக்கு இருப்பதாக குறிப்பிட்டார். இதற்கான ஒரு படியாகவே தி.மு.கவின் தலைவரும் தமிழ்நாட்டு சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்ராலினை சந்தித்ததாக மேலும் தெரிவித்தார். இதேவேளை 41 வருடங்களுக்கு பின்னர் யாழ்ப…

  6. இன்று சிறையிலிருந்து வெளியே வருகிறார், பேரறிவாளன்.. 1 மாதம் பரோல்! மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு இன்று ஒரு மாத பரோலில் வெளியே வருகிறார். பேரறிவாளனின் அப்பாவின் உடல்நிலை கடந்த சில நாட்களாக மோசமாக இருக்கிறது. அவர்கள் கடந்த சில நாட்களாக தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவரை காண வேண்டும் என்பதற்காக பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.அவர் தனது தண்டனை காலத்தில் பெறும் இரண்டாவது பரோல் இது. இதற்கு முன் கடந்த 2017-ம் ஆண்டு பேரறிவாளனுக்கு இரண்டு மாத பரோல் வழங்கப்பட்டிருந்தது. மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார், பேரறிவாளன். சிறு வயதிலேயே கைது செய்யப்பட்ட…

  7. ஏழு தமிழர்களை விடுதலை செய்ய நடவடிக்கை : தி.மு.க தீர்மானம்! ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுவிக்க தி.மு.கவின் பொதுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த கூட்டத்தின்போது, உள்ளுராட்சித் தேர்தல் நடைபெறும் வரை தற்போதைய நிர்வாகிகள் அதே பொறுப்பில் நீடிக்க வேண்டும் எனவும் தி.மு.க பொதுக் குழுவில் திருநங்கைகளை சேர்ப்பதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் வெளிநாடுவாழ் இந்தியர்களை தி.மு.கவில் உறுப்பினர்களாக சேர்க்க கட்சி விதிகளில் திருத்தம் செய்வது, வாக்குச்சாவடிக்கு 10 பேர் கொண்ட…

  8. துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ‘தங்க தமிழ் மகன்’ விருது! அமெரிக்காவின் சிக்காகோ நகரில் உலக தமிழ் சங்கம் சார்பில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு ‘தங்க தமிழ் மகன்’ விருது வழங்கப்பட்டது. தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நவம்பர் 8ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை அரச முறை சுற்றுப்பயணமாக அமெரிக்காவின் சிக்காகோ, ஹூஸ்டன், வொஷிங்றன் டி.சி. மற்றும் நியூயோர்க் உள்ளிட்ட நகரங்களுக்கு விஜயம் மேற்கொள்கிறார். அங்கு, தமிழ்நாட்டுக்கான புதிய திட்டங்களுக்குத் தேவையான நிதி பெறுவது குறித்து உலக வங்கியின் தெற்காசிய பிரிவின் உயர் அலுவலர்களுடன் விவாதிக்கவும், தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகள் திரட்டுவது குறித்து இன்ரநஷனல் பினான்ஸ் கோர்பிரேஷன் மற்றும் முக்கிய நிதி ந…

    • 2 replies
    • 631 views
  9. கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணு உலைகள் – அகழ்வுப் பணி நிறைவு கூடங்குளத்தில் 5 மற்றும் 6ஆவது அணு உலைகள் அமைப்பதற்கான நிலம் அகழ்வுப் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அணுஉலை கட்டுமானத்துக்கான பணிகள் தொடங்கும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கூடங்குளத்தில் தற்போது தலா 1,000 மெகாவொற்ஸ் மின் உற்பத்தி திறனுள்ள இரு அணுஉலைகள் மின் உற்பத்தி செய்து வருகின்றன. இங்கு மேலும் 4 அணு உலைகள் அமைத்து, அணு உலை பூங்காவாக மாற்றும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, 3 மற்றும் 4ஆவது அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் ரூ.39,747 கோடி செலவில், 2016ஆம் ஆண்டு பெப்ரவரியில் தொடங்கியது. 2017ஆம் ஆண்டு …

  10. தமிழ்நாட்டின் திருச்சி மத்திய சிறையில் இலங்கை தமிழர்கள் உட்பட உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட வெளிநாட்டு கைதிகள் 40 விசம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்;ளது. திருச்சி மத்திய சிறையில் வெளிநாட்டவர்களிற்கான சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் உட்பட வெளிநாட்டு கைதிகளே தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இந்த முகாமில் உள்ள 46 கைதிகள் தங்களிற்கு தண்டனை காலம் முடிவடைந்ததால் தங்கள் தங்கள் நாடுகளிற்கு அனுப்பிவைக்குமாறு அதிகாரிகளை கோரிவருகின்றனர். எனினும் அவர்களை சொந்த நாடுகளிற்கு அனுப்பிவைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இவர்கள் தங்களை விடுதலை செய்யக்கோரி நேற்று திடீர் உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்தனர். …

    • 0 replies
    • 593 views
  11. சென்னை: சென்னையில் காற்றுமாசு அளவு தொடர்ந்து மிகவும் அதிகரித்து இருப்பது மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் அமபலமாகியுள்ளது. டெல்லியை விட சென்னையில் காலை 9.30 மணி அளவில் காற்றுமாசு அதிகரித்து இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது. காலையில் டெல்லியில் காற்றுமாசு குறியீட்டு எண் 254 ஆக இருந்தபோது சென்னையில் 264 வரை அதிகரித்திருந்தது. வேளச்சேரி, ராமாபுரம், மணலி, கொடுங்கையூர், அண்ணாநகரில் சராசரி காற்றுமாசு 341 புள்ளிகளாக இருந்தது. கடந்த 24 மணி நேர சராசரி மாசு அளவு 272 ஆக உள்ளது. மேலும் சென்னையில் வெள்ளிக்கிழமை வரை காற்றுமாசு அதிகரித்தே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை மீண்டும் மழை பெய்யத் தொடங்கினால் சென்னையில் காற்றுமாசு குறையும் என தகவல் வெளியாகியுள்ளது. சுவாசிக்க தக…

  12. சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு தமிழக அரசு மீண்டும் பரோல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், கடந்த 26 ஆண்டுகளில் பரோல் மூலம் ஒரு நாள்கூட வெளியே வரவில்லை. இதற்கிடையே, கடந்த 2017-ம் ஆண்டு தந்தை மற்றும் சகோதரி உடல்நலம் சரியில்லாத காரணத்தால், அதைக் கணக்கில்கொண்டு அவருக்கு இரண்டு மாத பரோல் வழங்கப்பட்டது. இந்நிலையில், தந்தை குயில்தாசனின் உடல்நலம் குறித்து கவனிக்க பேரறிவாளன் ஒரு மாதம் பரோல் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து, தந்தை குயில்தாசனின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்…

    • 0 replies
    • 385 views
  13. நெல்லை பாளையங்கோட்டையில் நடுசாலையில் சண்டையிட்டுக் கொண்ட மாணவர்களை, திருக்குறளின் 1330 குறள்களையும் எழுதச் சொல்லி போலீசார் தண்டனை வழங்கினர். பாளையங்கோட்டையில் உள்ள இரு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், வ.உ.சி. மைதானம் மற்றும் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் அண்மையில் மோதிக் கொண்டனர். பிறந்தநாள் கேக் வெட்டிய போது ஏற்பட்ட சண்டை மற்றும் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதத்தை வைத்து அவர்கள் சண்டையிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. காதல் விவகாரத்தில் ஒரு மாணவனை பலர் சேர்ந்து கொண்டு தாக்கியதை டிக் டாக் வீடியோவாகவும் வெளியிட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இச்சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் மூலம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. …

    • 3 replies
    • 754 views
  14. திருவள்ளுவருக்கு சிலுவைய போடு, இல்ல குல்லா போடு, எனக்கு என்ன..?? அசால்டா பேசி அதிரவிட்ட கலாச்சாரம் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர்..!! திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர். என்னைப் பொருத்தவரையில் அவருக்கு குல்லா போட்டாலும் சிலுவை போட்டாலும் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். பாஜகவின் இணையதள பக்கத்தில் திருவள்ளுவருக்கு காவி நிற ஆடை அணிந்து நெற்றியில் பட்டை கழுத்தில் ருத்ராட்சம் அணிந்திருப்பது போல புகைப்படம் வெளியாகி அது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாஜகவுக்கு எதிராக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து ஏற்கனவே தன் சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து பதிவிட்…

  15. ஜெயலலிதாவின் 71 ஆவது பிறந்த நாள் விழா: 71 இலட்சம் மரக்கன்றுகளை நட அரசாணை வெளியீடு தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 71 இலட்சம் மரக்கன்றுகளை நட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஜெயலலிதாவின் ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் அவரது வயதுக்கு ஏற்ப, மரக்கன்றுகள் நடும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்படி எதிர்வரும் வருடம் பெப்ரவரி 24ஆம் திகதி, ஜெயலலிதாவின் 71ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெற இருக்கின்றது. இந்நிலையிலேயே அவரது பிறந்தநாளை முன்னிட்டு 71 இலட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து 10.40 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட…

  16. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவரால், தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட பகுதி பெல்ஜியம் என நீண்ட காலமாக அழைக்கப்படுகிறது. அந்த ஊரை பெல்ஜியம் என மக்கள் அழைத்தது ஏன்? அப்பகுதி மக்களுக்கு என்ன செய்தார் என விவரிக்கிறது இந்த செய்தி... திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் களக்காடு அருகே அமைந்துள்ள அந்த ஊரின் பெயர் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. ஐரோப்பா நாடுகளில் ஒன்றான பெல்ஜியம் நாட்டின் பெயரை கொண்டுள்ளது அவ்வூர்.இந்த பகுதிக்கு ஏன் பெல்ஜியம் என்ற பெயர் வந்தது என விசாரித்தால், அப்பகுதியினர் சொல்லும் தகவல் நம்மை வியக்க வைக்கிறது... பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த டொம்னிக் பியர், இரண்டாம் உலகப் போரினால் ஊனமுற்ற, …

  17. அமுதா IAS அவர்களின் மிக சிறப்பான எளிமையான உரை

    • 0 replies
    • 1.2k views
  18. தமிழ்நாடு எப்படி உருவானது? மின்னம்பலம் விவேக் கணநாதன் இந்தியாவில் மொழிவாரி மாநிலங்களின் கோரிக்கைகளின் வரலாறு 19-ம் நூற்றாண்டின் இறுதியிலேயே தொடங்கிவிட்டது. பிரிட்டிஷ் இந்தியாவின் மத்திய மாகாணத்திலிருந்த ஒரிசாவில் 1895ம் ஆண்டு இந்தி திணிக்கப்பட்டபோது, தங்களை தனி மாகாணமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி ஒரிய மக்கள் போராட்டத்தை துவங்கினார்கள். தொடர்ச்சியான போராட்டங்களுக்கு மத்தியில் 1935-ல் ஒரிசா தனி மாகாணமாக ஆனது. இந்தியாவை பல்வேறு மொழி தேசிய இனங்கள் அடங்கிய கூட்டுநாடாக பார்க்கும் அறிவியல் பார்வை 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே வலுவடைந்தது. மொழிவழி தேசிய இனங்களின் அரசியல் உரிமையை அங்கீகரிக்கும் வகையில், தேசிய இயக்கமாக இருந்த காங்கிரஸ் 1921ம் ஆண்ட…

  19. சிறையில் உணவு கொடுக்காமல் கொடுமைப்படுத்துகின்றனர் – முருகன் குற்றச்சாட்டு! சிறையில் உணவு கொடுக்காமல் கொடுமைப்படுத்துவதாக ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் முருகன் குற்றம்சாட்டியுள்ளார். சிறைவளாகத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த முருகன் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது குறித்து தொடர்ந்து தெரிவித்த அவர், முதலமைச்சருக்கு தான் அனுப்பிய மனுவை, நான்கு நாட்களாக அனுப்பாமல் சிறை நிர்வாகமே வைத்துள்ளதாகவும், கைப்பேசி பயன்படுத்தியதாக திட்டமிட்டு தன் மீது பழி சுமத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் விடுதலையும் செய்யாமல், ஆன்மிகவாதியாகவும் வாழ விடாமல் கொடுமைப்படுத்துவதாகவும் முருகன் வேதனை தெரிவித்தார். வேலூர் மத்தி…

  20. ஒக்கி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்பதில் ஏற்பட்ட தாமதத்தைப்போல, தற்போது லட்சத்தீவு மற்றும் மகாராஷ்டிரா பகுதியில் ஆழ்கடலில் மீன்பிடிக்கச்சென்று காணாமல்போயுள்ள 120 கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை மீட்பதில் தாமதம் இருக்கக்கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வள்ளவில்லை, தூத்தூர்பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 15 நாட்களுக்கு முன்னர் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றிருந்தனர். அவர்களில் பலர் இன்னும் திரும்பாததால், அவர்களை மீட்கக் கோரி உறவினர் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 2017 ஒக்கி புயல் பாதிப்பால் ஏற்பட்ட வலியிலிருந்து தாங்கள் இன்னும் மீளாதநிலையில், தற்போது காணாமல் போனவர்களை கண்டறிய தாமதம் செய்யக்கூடாது என வேதனையோடு பேசுகின்றனர் மீனவர்…

    • 0 replies
    • 427 views
  21. சுர்ஜித்துடன் இணைந்து இவ்வுலகைவிட்டுப் பிரிந்த மற்றுமொரு குழந்தை! திருச்சியில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிரிழந்த சிறுவன் சுர்ஜித்தின் மீட்புப் பணிகளை தொலைக்காட்சியில் குடும்பத்துடன் பார்த்துக்கொண்டிருந்தபோது, 2 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரன் நிஷா தம்பதிகளின் மகள் ரேவதி சஞ்சனா (2 வயது ) எனும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. தந்தை லிங்கேஷ்வரன், தாய் நிஷாவுடன் சிறுவன் சுர்ஜித்தின் மீட்புப் பணிகளை தொலைக்காட்சிப் பார்த்து கொண்டிருந்தனர். இதன்போது குழந்தையை காணவில்லை என உணர்ந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார். …

  22. ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்கும் கருவியை கண்டுப்பிடித்தால் பரிசு! ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்கும் கருவியை கண்டுப்பிடிப்பவர்களுக்கு 5 இலட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசின் தகவல் தொழிநுட்பத் துறை முதன்மை செயலாளர் சந்தோஷ் பாபு அறிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்த தீபாவளி, இந்தியாவில் உள்ள அனைவருக்கும் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு சோகமாக அமைந்துவிட்டது. அலட்சியத்தால் மீண்டும் விலைமதிப்பற்ற ஒரு உயிரை இழந்துவிட்டோம். இதுவே இந்தியாவில் உயிரிழந்த கடைசி குழந்தையாக இருக்கவேண்டும். இதனை தடுப்பதற்கு அவசரமாக நமக்கு தீர்வு தேவைப்படுகிறது. தகவல் தொழில்நுட்பத்துறை இதற்கு தீர்வு காண த…

  23. சுஜித் இரத்தத்தால் எழுதிய சேதி- வ.ஐ.ச.ஜெயபாலன், தமிழகத்தில் இன்னும் வெற்றிபெறாது தொடரும் குழந்தைகள் பாதுகாப்பு அலட்சியத்துக்கு எதிரான போராட்டத்தில் கழபலியான தமிழ்த் திருமகன் சுஜித்துக்கு பணியாத என் தலை பணிந்து அஞ்சலிக்கிறேன். சிறுவர் பாதுகாருங்கள் என சிந்திய கண்ணீராலும் இரத்தத்தாலும் சுஜித் எழுதிய செய்தி வெறுமனவே ”ஆழ்துழைக் குழியை மூடு” என்பது மட்டுமல்ல என்பதை தமிழ்நாடும் இந்தியாவும் முழுமையாக உணரவேண்டும். உலகில் சிறுவர் பாதுகாக்கபடாத நாடுகளில் இன்றுவரை இந்தியாவும் தமிழ்நாடும் அடங்கும் என்பது துயரமான உண்மையாகும். நாளை பாதுகாக்கபட்ட சிறுவர்களதாகும். . ஆழ்துழைக் கிணறுகளை மூடாமல் விடுதல், தெருவில் இரு சக்கர வாகனங்களில் குழந்தைகளை எடுத்துச் செல்லல், உரிய பாதுகாப்பின்றி கா…

    • 0 replies
    • 554 views
  24. கூடங்குளம் அணுமின் நிலையம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக வந்த தகவல் பொய்யானது என அந்த அணுமின் நிலையம் மறுத்துள்ளது. அங்குள்ள கணிப்பொறிகள் இணையத்தோடு இணைக்கப்படவில்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் உற்பத்தித் திறனுள்ள இரண்டு அணு உலைகள் இயங்கிவருகின்றன. இந்த நிலையில், இந்த அணு மின் நிலையத்தின் கணிப்பொறிகள் மீது DTRACK என்ற வைரஸ் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக கணிப்பொறி மீதான தாக்குதல்களில் கவனம் செலுத்தும் சில ட்விட்டர் பயனாளிகள் சிலர் கூறினர். இந்த DTRACK வைரஸ் மூலம் கூடங்குளம் அணுமின் நிலைய கணினியில் இருந்து சில தகவல்கள், அதனை உருவாக்கியவருக்கு அனுப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. …

    • 0 replies
    • 383 views
  25. புதுடெல்லி: உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க அடுத்த ஆண்டு ஜனவரியில் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் நரேந்திர மோடியும் இணைந்து ஜல்லிக்கட்டை பார்வையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் வருகை குறித்து டிசம்பர் மாதத்தில் அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது. சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும், பிரதமர் நரேந்திர மோடியும் கடந்த 11-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் முறைசாரா உச்சிமாநாட்டை நடத்தினர். இதனால் மாமல்லபுரம் சுற்றுலா பயணிகளிடையே மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்றது. இந்த நிலையில் சீன அதிபரை தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் தமிழகத்துக்கு வருகை தருகிற…

    • 0 replies
    • 432 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.