Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நரேந்திர மோடி தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின் அரசு அமைந்த பிறகு இந்தி மொழித் திணிப்பை தீவிரப்படுத்துவதுபோல, மத்திய அரசின் நடவடிக்கைகள் இருக்கின்றன. சமூக வலைதளங்களில் இந்தி மொழியில் பதிவுகள் இட வேண்டும் என்ற உத்தரவு, ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் என்று கொண்டாட வேண்டும் என்ற அறிவிப்பு, சமசுகிருத வாரம் கடைபிடிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல் ஆகியவை மொழிப் பிரச்சினையில் மத்திய அரசின் அணுகுமுறை எப்படி இருக்கிறது என்பதை தெளிவாக உணர்த்தியது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் ஆட்சிமொழி அலுவல் துறை எல்லா வகையிலும் இந்தி மொழியைத் திணிப்பதற்கு மூர்க்கத்தனமாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களிலும், பட்டப் படிப்புகளில் ஆங்கிலத்துடன் இந்தி மொ…

  2. கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை ஜாமீன் மனு தாக்கல். | கோப்புப் படம்: எம்.பிரபு கர்நாடகா சிறையில் அடைக்கப்பட்ட அதிமுக தலைவர் ஜெயலலிதாவை ஜாமீனில் விடுவிக்க நாளை (திங்கட் கிழமை) கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு செய்யவுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும், ஜெயலலிதா வழக்கறிஞர்கள் குழு, தண்டனையை தடை செய்யக் கோரும் உத்திகளை பரிசீலித்து வருகின்றனர். ”நாங்கள் நாளை கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்கிறோம்” என்று ஜெயலலிதாவின் மூத்த வழக்கறிஞர் பி.குமார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். திங்களன்று மனு செய்தாலும் உயர் நீதிமன்றத்தின் விடுப்பு அமர்வு செவ்வாயன்றே மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என்று தெரிகிறது. ஏனெனில் உயர் நீதிமன…

  3. "கட்டிங் பிளேடு வைத்து பல்லை பிடுங்கினார்" - விசாரணை கைதிகளை ஏஎஸ்பி தாக்கிய குற்றச்சாட்டின் பின்னணி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளை அந்த மாவட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங், கொடூரமாகத் தாக்கி, பற்களைப் பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சேரன் மாதேவி உதவி ஆட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் சரக காவல் நிலையத்திற்கு வரும் விசாரணைக் கைதிகளை அந்த மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளராக உள்ள பல்வீர் சிங், கொடூரமாகத் தாக்கி, அவர்களது பற்களைப் பிடுங்கியதாக விச…

  4. தலைமைச் செயலக ஊழியர்கள் இன்று போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை January 30, 2019 தலைமைச் செயலக ஊழியர்கள் இன்று போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை விடுத:துள்ளார். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஜனவரி 22ஆம் திகதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் இறங்கியுள்ள ஆசிரியர்கள் நேற்றைய தினத்துக்குள் பணிக்குத் திரும்ப இறுதியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும் தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர்ந்து போரா…

  5. 2026 தேர்தல்; முதலமைச்சர் வேட்பாளராக விஜயின் பெயர் உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பு! 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளராக நடிகரும், அரசியல்வாதியுமான விஜய்யை தமிழக வெற்றிக் கழகம் (TVK) இன்று (04) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பின் மூலமாக அதிமுக – பாஜகவின் கூட்டணி அழைப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது. TVK இன் செயற்குழு கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தலைமைக் கழ கத்தில் கட்சி தலைவர் விஜய் தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமைக் கழக சிறப்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கொள்கை உறுதிமொழி ஏற்கப்பட்டு கொள்கை பாடல்க…

  6. திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாநிலங்களவைத் தேர்தலில் கனிமொழிக்கு காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆதரவு கேட்டுப் பெறப்பட்டதால், இலங்கைப் பிரச்சினையை தி.மு.க. மறந்து விட்டதாக சிலர் சொல்கின்றனர். கம்யூனிஸ்ட் கட்சிகளிடமும், தே.மு.தி.க., மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளிடமும், பின்னர் காங்கிரஸ் கட்சியிடமும் ஆதரவு கேட்டது உண்மைதான். இதில் எந்தக் கட்சியிடமும் எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் மாநிலங்களவைத் தேர்தலையொட்டி மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், ஒரு சிலர் காங்கிரஸ் கட்சியோடு திமுக உறவு கொண்டுவிட்டது. இலங்கைப் பிரச்னையைக் கைகழுவிட்டது என்றெல்லாம் வெறுப்பு அரசியல் செய்கின்றனர் என்று கூறுகின்றனர். இலங்க…

    • 1 reply
    • 435 views
  7. கூவத்தூர் கூத்துக்களா? ஜெ. மருத்துவ அறிக்கையா? ஓ.பன்னீர்செல்வம் இன்று போடப்போகும் குண்டு என்ன? தமிழகமே திரும்பி பார்க்கும் வகையிலான முடிவை பன்னீர் செல்வம் இன்று எடுப்பார் என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி அளித்துள்ள நிலையில் அவரது அறிவிப்பு என்னவாகும் இருக்கும் சென்னை: ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் எந்த மாதிரியான அறிவிப்புகளை வெளியிடுவார் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு, அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது. இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு தமிழகத்தில் பல்வேறு அரசியல் மாற்…

  8. கோயில் நகைகள்: மோடி வழியில் ஸ்டாலின் மின்னம்பலம்2021-10-03 தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “தமிழகத்தில் இருக்கும் அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் இருக்கும் நகைகளை உருக்கி அவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்து அந்த வட்டிப் பணத்தை கோயில்கள் திருப்பணிக்கு செலவு செய்யும் திட்டத்தை அறிவித்தார். இதை பாஜக கடுமையாக எதிர்த்து வருகிறது. இதில் ஊழல் நடக்கும் என்றும் பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறி வருகிறார். இதுகுறித்து இந்து சமய அறநிலைய அமைச்சர் சேகர்பாபு மீண்டும் மீண்டும் விளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறார். “சமயபுரம் கோயிலில் நாங்கள் ஆய்வு நடத்தியபோது பெருமதிப்பிலான தங்க நகைகள் அப்படியே கட்டி வைக்கப்பட்டி…

  9. ஜெய்பீம் பட சர்ச்சை: புண்பட்டவர்களுக்கு வருத்தம் தெரிவித்த இயக்குநர் ஞானவேல் 21 நவம்பர் 2021, 09:35 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@2D_ENTPVTLTD ஜெய்பீம் படத்தில் வில்லனாக வரும் எஸ்.ஐ. வீட்டில் வன்னியர் சங்கத்தைக் குறிக்கும் அக்கினி கலச காலண்டர் இடம் பெற்றக் காட்சிக்கும், உண்மைக் கதைக்கு மாறாக அந்த எஸ்.ஐ. பெயர் குருமூர்த்தி என்று இருந்ததற்கும் பாமக தரப்பில் எதிர்ப்புக் காட்டப்பட்டுவரும் சூழ்நிலையில், இந்தப் படத்தால் மன வருத்தம் அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் வருத்தம் தெரிவிப்பதாக ஜெய்பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் அறிக்கை வெளியிட்டுள்ளார். டிவிட்டரில் வெ…

  10. சிறையில் பிறந்த நாள்... சசிகலாவை வாழ்த்தச் செல்லும் தினகரன்! “ஜெயலலிதா பரிசாகத் தரும் புடவை, உறவுகளின் வாழ்த்து, நெருக்கமானவர்களின் பூங்கொத்து என்று பிறந்த நாளை கொண்டாடியவர் சசிகலா. இந்தப் பிறந்த நாள் அவருக்கு மறக்க முடியாததாக அமைந்துவிட்டது” என்று உருக்கமாக சொல்கிறார் சசிகலாவுக்கு நெருக்கமான ஒருவர். ஆகஸ்ட் 18-ம் தேதி சசிகலாவின் பிறந்த நாள். அ.தி.மு.க-வின் அதிகார சத்தியாக இருந்தபோதுகூட அவருடைய பிறந்த நாள் குறித்து பெரும்பாலனவர்களுக்கு தெரியாது. சசிகலாவின் பிறந்த நாளை அவருடைய உறவுகள் கூட வெளிப்படுத்த மாட்டார்கள். காரணம் ஜெயலலிதா மீதான பயம். அதனால் சசிகலா தனது பிறந்த நாளை வேதா இல்லத்தில் நான்கு சுவற்றுக்குள்ளே கொண்டாடுவார். ஜெ…

  11. மௌன விரதம்... சீக்ரெட் சந்திப்புகள்... சிறப்புச் சலுகைகள்... - சசிகலாவின் ஓராண்டு சிறைவாசம் #Sasikala ஜெயலலிதா மரணம், ஓ.பி.எஸ் ராஜினாமா, தர்ம யுத்தம், கூவத்தூர் கலாட்டா எனப் பரபரப்பாகத் தமிழகத்தை வைத்திருந்த சசிகலாவை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி எனக் கூறி தீர்ப்பளித்தது. சசிகலா சென்ற வருடம் இதே நாளில் சிறை சென்றது துவங்கி இன்று வரை ஒரு வருடத்தில் சசிகலாவின் டைம்லைன் இதோ... சசி சரணடைதலும், தாக்குதலும் `உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி நான் சரணடைய பெங்களூர் வரும்போது ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் என்னைத் தாக்க சதித்திட்டம் தீட்டியுள்ளனர்' என்று …

  12. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் வீடுகளில் நடிகர் விஜய் நள்ளிரவில் ஆறுதல்! தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நள்ளிரவில் நேரில் சென்று நடிகர் விஜய் ஆறுதல் கூறினார். தூத்துக்குடியில் கடந்த 22 -ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டின்போது 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களையும் வைகோ, ஸ்டாலின், டி.டி.வி.தினகரன், ஜி.கே.வாச…

  13. அரசியலுக்கு மு.க. அழகிரி "முழுக்கு"? சென்னையில் பரபரப்பு பேட்டி. சென்னை: தாம் அரசியலிலே இல்லை; என்னிடம் அரசியல் கேள்விகளை கேட்கவே வேண்டாம் என முக அழகிரி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலராக இருந்தவர் முக அழகிரி. கருணாநிதி, ஸ்டாலினுக்கு சமமாக திமுகவில் கோலோச்சினார் அழகிரி.கருணாநிதிக்கு பிறகு தமக்குதான் திமுகவின் தலைமை பதவி கிடைக்க வேண்டும் எனவும் வியூகம் வகுத்து செயல்பட்டார் அழகிரி. ஆனால் அவரது அத்தனை வியூகங்களையும் ஸ்டாலின் வீழ்த்தினார். தற்போது திமுகவை விட்டே நீக்கப்பட்டு ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கிறார் அழகிரி. இந்த நிலையில் கருணாநிதியின் உடல்நிலையை முன்வைத்து அழகிரி தொடர்ந்து கோபாலபுரம் சென்று சந்தித்து வருகிறார். இதனால…

  14. ஒரு கோடி ரூபாய் நிதியளித்த விஜய் சேதுபதி மின்னம்பலம்2021-10-03 திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் சென்னையில் எழுப்பப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினார். இதற்காக நேற்று மாலை (2.10.2021) சென்னையில் நடைபெற்ற விழாவில் பெஃப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, செயலாளர் சபரீகீரிசன் மற்றும் 23 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இவர்களுடன் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, விஜய் சேதுபதி ஆகியோரும் கலந்து கொண்டனர். விழாவில் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை விஜய் சேதுபதி, பெஃப்ஸியின் தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பெஃப்ஸி நிர்வாகிகளிடம் வழங்கினார். முன…

  15. சசிகலாவை முதல்வராக்க அழைக்காதது ஏன்? - முன்னாள் ஆளுநர் விளக்கம் சட்டப்பேரவை தலைவராக எம்எல்ஏக்களால் சசிகலா தேர்வு செய்யப்பட்டு கடிதம் கொடுத்தபோதும், சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்பு வெளியாக இருந்ததால், முதல்வர் பதவியேற்க அவரை அழைக்கவில்லை என்று முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தன் நூலில் விளக்கியுள்ளார். தமிழக பொறுப்பு ஆளுநராக சி.எச்.வித்யாசாகர் ராவ் கடந்தாண்டு ஆகஸ்ட் முதல், ஓராண்டு பணியாற்றினார். ஜெயலலிதா கடந்தாண்டு டிசம்பர் 5-ம் தேதி மறைந்த பிறகு, தமிழக அரசியலில் ஏற்பட்ட ஸ்திரமற்ற தன்மையை சமயோஜிதமாக கையாண்டார். அவர் இதுதொடர்பாக எழுதிய புத்தகத்தை நேற்று முன்தினம் வெளியிட்டார். இதில், தமிழகத்தி…

  16. படக்குறிப்பு, கோலார் தங்க வயல் தொகுதியில் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் வசித்தாலும் 2004க்குப் பிறகு இந்தத் தொகுதியில் தமிழர்கள் யாரும் வெல்ல முடியவில்லை. கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலத்தில் தமிழர்களை அதிக எண்ணிக்கையில் கொண்டுள்ள கோலார் தங்க வயல் தொகுதியில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. மீண்டும் தமிழர் சட்டமன்ற உறுப்பினராக முடியுமா என்ற கேள்விக்கும் இந்த சட்டமன்றத் தேர்தல் விடையளிக்கவிருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளிலேயே, மிகவும் வித்தியாசமான தொகுதி, கோலார் தங்க வயல் (கே.ஜி.எஃப்) த…

  17. இப்படியும் ஒரு மனிதர்... சென்னையில் சாக்கடையில் இறங்கி குப்பையை அகற்றும் பெல்ஜியம் நாட்டுக்காரர்! சென்னை வெள்ளத்தில் சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்டவர்களை பத்திரமாக மீட்ட பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பீட்டர் வெய்ன் கெய்ட் தலைமையிலான குழுவினர், தற்போது சென்னை நகரை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 17 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்த பீட்டர், பாலவாக்கத்தில் தற்போது வசித்து வருகிறார். ‘சிஸ்கோ’ நிறுவனத்தில் திட்ட இயக்குனராக பணியாற்றி வரும் பீட்டருக்கு, இந்தியாவில் உள்ள மலை பிரதேசங்கள் மீது அதிக ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. அதன் பிரதிபலிப்பாக கடந்த 2008-ம் ஆண்டு ‘சென்னை டிரெக்கிங் கிளப்பை (மலையேறும் குழு) உருவாக்கினார். தற்போது இந்த குழுவில் தமிழ்நாடு…

  18. சிறீலங்கா தமிழர்களின் நலன்களை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம் – இந்திய பிரதமர் கருத்து 18 Views சிறீலங்கா தமிழர்கள் மீது என் அரசு தொடர்ந்து அக்கறை காட்டி வந்திருக்கிறது. யாழ்ப்பாணத்திற்கு சென்ற ஒரே இந்தியப் பிரதமர் நான்தான்.”என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நரேந்திரமோடி அங்கு உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ளார். தமிழர்கள் உரிமை தொடர்பில் நாங்கள் சிறீலங்கா அரசாங்கத்துடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம் என இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார். அவர்கள் சமத்துவம் நீதி அமைதி கௌரவத்துடன் வாழ்வதை உறுதி செய்வது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளோம் எனவும் அவர் தெரி…

  19. இன்று 23.04.2021 வெள்ளிக்கிழமை இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.) தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு ஊர்வலம் தொடர்பாக ஆவணங்களோ, ஆதாரங்களோ தன்னிடம் இல்லை என நடிகர் ரஜினிகாந்த், ஒருநபர் ஆணையத்திடம் எழுத்துபூர்வமாக தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது. தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடந்த போலீஸ் துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் அதனைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக, விசாரணை நடத்துவதற்காக, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரச…

  20. கீழடியின் அகழாய்வு நடைபெறும் இடம் | கோப்புப் படம் சிவகங்கை கீழடியில் அகழாய்வு பணி மேற்கொண்ட தொல்லியல் கண்காணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டது, அகழாய்வு நடைபெற்ற இடம் மூடப்பட்டது போன்றவை தமிழர்களின் வரலாற்றை மறைக்க முயற்சி செய்வது போல் உள்ளது என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த கனிமொழி மதி உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனு: "மதுரையில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் 2000 ஆண்டு பழமையான 5300 பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இங்கு 110 ஏக்கர் அளவில் பழங்கால பொருட்கள், ஆவணங்கள் புதைந்துள்ளன. அதே நேரத்தில் சுமார் ஒரு ஏக்கர் அளவிலேயே ஆய்வுகள் நடத்தப…

  21. இரட்டை இலைச் சின்னம் யாருக்கு? - இறுதி விசாரணைத் தொடங்கியது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில், இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்ற விசாரணை சற்றுமுன் தொடங்கியது. பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள் குழு தேர்தல் ஆணைய அலுவலகத்தில் காத்திருக்கிறார்கள். இந்த வழக்கறிஞர்கள் குழுவோடு எம்.பி மைத்ரேயன் மற்றும் கே.பி முனுசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருக்கிறார்கள். இச்சூழலில் விசாரணையை எதிர்த்தும், நான்கு மாதங்கள் கழித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியும் தினகரன் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவைக் காலையில் மூன்று நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது மட்டுமல்லாமல், விசாரணை நடத்த தடையில்லை எனவும் உத்த…

  22. போதைப் பொருள் கடத்தில் வழக்கில் தொடர்புடைய இருவர் கைது - இலங்கையில் இருந்து அகதிகள் போல் வந்தவர்கள் BBCCopyright: BBC இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் இருவர் அகதிகள் போல் தமிழ்நாட்டுக்கு வந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக உயிர் வாழ முடியாமல் தமிழ்நாட்டில் அகதியாக வந்ததாக இன்று காலை தொண்டி புதுக்குடி கடற்கரை பகுதிக்கு இருவர் வந்தனர். அவர்களிடம் மத்திய, மாநில உளவுத்துறையினர் மற்றும் கடலோர காவல் படை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், இலங்கையில் போதைப் பொருள் வழக்கு நிலுவையில் உள்ளதால் யாழ்ப்பாணத்தில் இரு…

  23. பேரறிவாளன் வழக்கில் திடீர் திருப்பம்: 2 வாரங்களில் முடிவை தெரிவிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு 1991-ல் நடந்த ராஜீவ் படுகொலை சம்பவம். ‘‘எதற்காக 2 பேட்டரிகளை வாங்கி கொடுத்தேன் என்பது எனக்கு தெரியாது’’ - இந்த ஒற்றை வரிகளை திட்டமிட்டே மறைத்த சிபிஐ அதிகாரியின் தவறால், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் அடைபட்டு அநியாயமாக இளமையை பறிகொடுத்துள்ளார் பேரறிவாளன். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக அந்த சிபிஐ அதிகாரியின் ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்றுள்ள உச்ச நீதிமன்றம், பேரறிவாளனை தண்டனையில் இருந்து விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசு 2 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவ…

  24. யாழ்ப்பாணத்தில் உள்ள பொதுத் திடலுக்கு துரோகியின் பெயர் பலகையைக் காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், யாழ்ப்பாணத்தில் உள்ள பொதுத் திடலுக்கு ஆல்பர்ட் துரையப்பா என்பவரின் பெயரை சிங்கள அரசு சூட்டி, இந்தியப் பிரதமர் மோடி அவர்களைக் கொண்டு அந்தப் பெயர் பலகையைக் காணொளிக் காட்சியின் மூலம் திறக்க வைத்துள்ளது. சிங்கள அரசின் சூழ்ச்சிக்கு இந்தியப் பிரதமர் இரையானது வருந்தத்தக்கதாகும். 1975-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் இதே திடலில் நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றபோது, அதைத் தடுக்க யாழ்ப்பாண மேயராக இருந்த ஆல்பர்ட் துரையப்பா தீவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.