Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளது உண்மை அதை நிரப்பவே வந்துள்ளேன்: ரஜினிகாந்த் வேலப்பன்சாவடி எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆரின் சிலையை திறந்து வைத்தார் நடிகர் ரஜினிகாந்த் வேலப்பன்சாவடி எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆரின் சிலையை திறந்து வைத்தார் நடிகர் ரஜினிகாந்த் சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள ஏசிஎஸ் கல்லூரியில் நடந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர் பல்கலைக்கழக விழா, கட்சி மாநாடு போல மாறிவிட்டது. அரசியல் பாதை பூ பாதை அல்ல. முள், கல், பாம்புகள் உள்ள பாதை எனக்கும் தெரியும். …

  2. கொடுமை.. அவசரமாக ஆஸ்பத்திரிக்கு சென்ற ஆம்புலன்சை ஜெ. பாதுகாப்புக்காக நிறுத்திய பெங்களூர் போலீஸ் பெங்களூர்: சிறையில் இருந்து வி.வி.ஐ.பி மரியாதையுடன் ஜெயலலிதா பெங்களூர் ஏர்போர்ட்டுக்கு சென்றபோது அனைத்து வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டன. ஜெயலலிதா காரின் முன்னுக்கும் பின்னுக்கும், பல வாகனங்களில் பாதுகாப்பு வீரர்கள் இருந்த நிலையில் மிதமான வேகத்தில் ஜெயலலிதா கார் சென்றது. சாலையின் இருபுறமும் நின்றிருந்த தொண்டர்கள் தன்னை பார்க்கவும், பூக்களை வீசவும் வசதியாக ஜெயலலிதா கார் மித வேகத்தில் பயணப்பட்டது. ஜீரோ டிராபிக், அதாவது, அனைத்து சிக்னல்களிலும் சிவப்பு சிக்னல்களை எரியவிட்டு ஜெயலலிதா பாதையில் மட்டும் பச்சை சிக்னல்கள் எரியவிடப்பட்டிருந்தன. கொடுமை.. அவசரமாக ஆஸ்பத்திரிக்கு…

  3. போதை மறுவாழ்வு மையத்தில் சிறுவன் உயிரிழந்தது எப்படி? - வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சென்னை புறநகர் சோழவரம் பகுதியில் இயங்கி வந்த போதை மறுவாழ்வு மையத்தில் சிறுவன்(13) ஒருவன் தாக்கப்பட்டு இறந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மறுவாழ்வு மையத்தை நடத்திய நான்கு நபர்கள் சிறுவனை அடித்துக் காயப்படுத்தியது உடற்கூராய்வில் தெரிய வந்ததால் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். …

  4. தொண்டர்களுடன் ஜி.கே.வாசன் | படம்: கே.பிச்சுமணி தமிழக காங்கிரஸ் கட்சி உடைந்தது. ஜி.கே.வாசன் தலைமையில் புதிய கட்சி உருவானது. தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், புது இயக்கம் தொடங்கியதாக அறிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். அவருடன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஞானதேசிகன், காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்ஃபோன்ஸ் ஆகியோர் உடனிருந்தனர். புதிய இயக்கத்தின் பெயரும், கொடியும் திருச்சி மாநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்படும். திருச்சி பொதுக் கூட்டம் தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என வாசன் தெரிவித்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் …

  5. திருச்சியில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்த 20 இலங்கை அகதிகள் இன்று தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். திருச்சியில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் பல்வேறு குற்றங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஏராளமான இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த நிலையில், தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் விரக்தி அடைந்து 20 பேர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://tamil.webdunia.com/article/regional-tamil-news/refugees-suicide-attempt-trichy-srilankan-refugees-protest-114111800037_1.html

  6. சென்னையின் வளர்ச்சி வேகத்திற்கு இணையாக, மதுரையிலும் சாலை மற்றும் போக்குவரத்து கட்டமைப்புகளில் முன்னேற்றம் ஏற்படுமென மக்கள் நினைத்தாலும், மதுரை மாநகராட்சி மந்தை 'மாக்கள்' நினைக்கிறார்களில்லையே? So sad ! source: Thinakaran.

  7. Published By: RAJEEBAN 28 JUN, 2023 | 06:47 AM 2009 ம் ஆண்டு ஈழத்தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதியை ஒருபோதும் மறக்கமாட்டேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 2009 இல் இந்தியா நடந்துகொண்டவிதத்தை நானும் தமிழ்நாட்டின் தமிழர்களும் ஒருபோதும் மன்னிக்கமாட்டோம் என குறிப்பிட்டள்ள அவர் இந்தியா தலையிட்டு யுத்தத்தை தடுத்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். 2009 மே மாதம் பத்தாம் திகதி குஜராத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இலங்கையில் எனது சகோதர சகோதரிகள் படுகொலை செய்யப்படும்போது இந்திய அரசாங்கம் என்ன செய்கின்றது என …

  8. இலங்கை தமிழர்பால் தனக்குள்ள காழ்ப்புணர்ச்சி இன்னமும் தணியாத நிலையில் இங்கே உள்ள இலங்கை அகதிகளை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்று கருணாநிதி விரும்புவதாக தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழகத்தில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்பும் விவகாரம் தொடர்பாக தமிழக அரசைக் குற்றம்சாட்டி தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை பல முரண்பாடுகளைக் கொண்டதாக உள்ளது என கூறியுள்ளார். இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்பும் விவகாரம் தொடர்பாக, இந்தியத் தலைநகர் தில்லியில் நடந்த கூட்டத்தில் தமிழக அரசு கலந்து கொள்ளாதது சரியான நிலைப்பாடு என்பதை கருணாநிதி ஒப்புக்கொண்டிருப்பதாக…

  9. கட்டுரை தகவல் எழுதியவர், சுஜாதா பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டை வளப்படுத்தும் முக்கிய ஆறுகளுள் ஒன்றான பாலாறு, கழிவுகள் கலந்து முற்றிலும் காணாமல் போகும் அபாயத்தில் இருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்? கர்நாடக மாநிலம் நந்திதுர்கம் என்ற இடத்தில் தொடங்கும் பாலாறு, அம்மாநிலத்தில் இருந்து 93 கி.மீ பயணித்து, ஆந்திராவில் 33 கி.மீ கடந்து தமிழகத்தை வந்தடைகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 222 கி.மீ தூரம் ஓடும் பாலாற்றின் மொத்த நீளம் 348 கி.மீ. தமிழ்நாட்டில் பாலாறு, காஞ்சிபுரம் மாவட்டம் வயலூர் அருகே முகத்துவாரத்தை அடைந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. …

  10. தயாநிதி மாறனின் முன் ஜாமீன் ரத்து- 3 நாட்களுக்குள் சி.பி.ஐயிடம் சரணடைய வேண்டும்: ஹைகோர்ட் அதிரடி!! சென்னை: பிஎஸ்என்எல் சட்ட விரோத இணைப்பக வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ரத்து செய்துள்ளது. அத்துடன் 3 நாட்களுக்குள் சி.பி.ஐயிடம் தயாநிதி மாறன் சரணடையவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தயாநிதி மாறன் சி.பி.ஐ.யால் கைது செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. சட்டவிரோதமாக தொலைபேசி இணைப்பகம் (700 இணைப்புகள்) வைத்திருந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீது கூறப்பட்ட புகார் குறித்து மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு டெல்லியில் உள்ள…

  11. இலங்கையைச் சேர்ந்த ஒப்பந்தத் தோட்டத் தொழிலாளர்கள் வம்சாவளியைச் சேர்ந்த 65 தமிழர்கள் இந்தியக் குடியுரிமை கேட்டு செய்திருந்த மனு மீதான விசாரணையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மாவட்ட ஆட்சியரிடம் புதிதாக குடியுரிமைக்காக விண்ணப்பம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது. மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக உடனடியாகத் தாமதிக்காமல் மத்திய அரசுக்கு குடியுரிமை விண்ணப்பத்தை அனுப்பி வைக்க நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அறிவுறுத்தினார். மத்திய அரசு இதன் மீது 16 வாரங்களில் முறையான உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம். அதாவது மனுதாரர்கள் இருக்கும் ஒரு தனிப்பட்ட சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று நீதிபதி கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறும்போத…

  12. ரூ. 700-க்கு வழங்கப்படும் மெட்ரோ தண்ணீரை தனியார் டேங்கர் லாரிகளிடம் சுமார் ரூ. 5 ஆயிரம் அளவுக்கு கொடுத்து மக்கள் வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சென்னை மக்கள் தனியர் டேங்க் லாரி தண்ணீரை ரூ. 4 ஆயிரம் வரை கொடுத்து வாங்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். கடந்த ஏப்ரலில் ரூ. 2 ஆயிரமாக இருந்த டேங்கர் லாரி தண்ணீர் விலை தற்போது ரூ. 4 ஆயிரமாக உயர்ந்துள்ளது. சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் சில இடங்களில் வற்றி விட்ட நிலையில் சில பகுதிகளில் மக்கள் தனியார் டேங்கர் லாரி தண்ணீரை நம்பியுள்ளனர். சென்னையின் தென் பகுயில் இருக்கும் ராம் நகரை சேர்ந்தவர் ஷாஜி மேத்யூஸ் என்பவர் ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை பணியாளராக உள்ளார். அவரது வீட்…

  13. பேரறிவாளன் உள்ளிட்ட 67 கைதிகளுக்கு ஓட்டுநர் உரிமம்! கைதிகளான பேரறிவாளன் உள்ளிட்ட 67 பேருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்து வெளியே வந்த பின்பு, வேலைக்காக யாரும் திண்டாடக்கூடாது என்பதற்காக கைதிகளுக்கு ஓட்டுநர் உரிமம் பயற்சி வழங்க முடிவு செய்யப்பட்டது. இரண்டு வருடத்திற்கு முன்பு சிறைத்துறை டி.ஐ.ஜியாக இருந்த சைலேந்திர பாபுவால் இந்த திட்டம் புழல் சிறையில் கொண்டுவரப்பட்டது. அதன்படி கைதிகளுக்கு ஓட்டுநர் பயிற்சி கொடுக்கப்பட்டது. அவ்வாறு வாகனம் ஓட்ட கற்றுக்கொண்ட பேரறிவாளன் உள்ளிட்ட 67 கைதிகளுக்கு தற்போது ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வருபவர் பேரறிவாளன் என்பது குற…

  14. படக்குறிப்பு,ஜகார்த்தா, இந்தோனீசியா கட்டுரை தகவல் எழுதியவர், அக்னியா அட்ஸ்கியா, அன்ட்ரோ சய்னி, அர்வின் சுப்ரியாடி, அயு இட்ஜஜா பதவி, பிபிசி உலக சேவை 5 மணி நேரங்களுக்கு முன்னர் சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (என்.டி.யூ) மேற்கொண்ட ஆய்வில், உலகம் முழுவதிலும் கவலைப்படத்தக்க வகையில் வேகமாக மூழ்கி வரும் கடலோர நகரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள சுமார் 48 நகரங்கள் எந்தளவுக்கு மூழ்கி வருகின்றன என்பது குறித்து ஆய்வுக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். காலநிலை மாற்றத்தால் உந்தப்பட்ட கடல் மட்ட உயர்வால் நிலப்பகுதிகள் மூழ்கும் அபாயம் கொண்ட நகரங்கள் இவை. ஆய்வுகள் மற்றும் ஐ.நாவின் மக்கள்தொகை தரவுகள் வாயிலாக இந்த பக…

  15. விஜயகாந்த் கனவு மட்டுமல்ல, கட்சியும் கலையப் போகுது: திண்டுக்கல் லியோனியின் 'கட்சிக்கு ஒரு பாட்டு' பொதுக்கூட்டங்கள் மூலம் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட திமுக பேச்சாளரும் பட்டிமன்ற நடுவருமான திண்டுக்கல் ஐ.லியோனியிடம், ‘களத்தில் நிற்கும் ஒவ்வொரு அணிக்கும் ஒரு சினிமா பாட் டைப் பாடி ‘நச்’சுன்னு நாலு வார்த்தை சொல்ல முடியுமா? என்று கேட்டோம்.. ‘அதுக்கென்ன சொல்றேன், எழுதிக்குங்க..’ என்று ஆரம்பித்துவிட்டார். அதிமுக ‘யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்.. அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்.. உறவெல்லாம் முள்ளாகும்.. நினைவெல்லாம் கல்லாகும்..’ இந்தப் பாட்டுதான் இப்ப அதிமுகவுக்கு பொருத்தமான பாட்டு. போன தேர்தல்ல அதிம…

  16. கிருஷ்ணசாமி (பு.த.) தொகுதி : ஓட்டப்பிடாரம் (தனி) தோல்வி கோகுல இந்திரா (அ.தி.மு.க.) தொகுதி : அண்ணா நகர் தோல்வி வைத்திலிங்கம் (அ.தி.மு.க.) தொகுதி : ஒரத்தநாடு தோல்வி சுந்தரராஜ் (அ.தி.மு.க.) தொகுதி : ஓட்டப்பிடாரம் (தனி) தோல்வி கராத்தே தியாகராஜன் (காங்.,) தொகுதி : மயிலாப்பூர் தோல்வி விஜயகாந்த் (தே.மு.தி.க.,) தொகுதி : உளுந்தூர்பேட்டை தோல்வி திருமாவளவன் (விசி) தொகுதி : காட்டுமன்னார் கோயில் (தனி) தோல்வி தமிழிசை சவுந்திரராஜன் (பா.ஜ.,) தொகுதி : விருகம்பாக்கம் தோல்வி வானதி சீனிவாசன் (பா.ஜ.,) தொகுதி : கோயம்புத்தூர் (தெற்கு) தோல்வி …

    • 0 replies
    • 741 views
  17. 'சுவாதி கொலையில் எனக்கு எந்த தொடர்புமில்லை...!'- ராம்குமார் பரபரப்பு தகவல்! சென்னை: சுவாதி கொலையில் தனக்கு எந்த தொடர்பும் கிடையாது என்று கூறியுள்ள ராம்குமார், தான் தற்கொலை முயற்சி எதிலும் ஈடுபடவில்லை என்றும், காவல்துறையினர்தான் தன் கழுத்தை அறுத்ததாகவும் பரபரப்பு கிளப்பியுள்ளார். சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கடந்த 24 ம் தேதி சூளைமேட்டை சேர்ந்த மென்பொறியாளர் சுவாதி என்பவர், மர்ம நபரால் கழுத்தில் வெட்டப்பட்டு கொலையானார். இந்த வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டம், செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்ற பொறியியல் பட்டதாரி, கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு, அவரது சொந்த ஊரான மீனாட்சிபுரத்தில் கைதுசெய்யப்பட்டார். கைது முயற்சியின்போது, அவர் பிளேடால் தனது…

    • 1 reply
    • 668 views
  18. திருப்பதி சர்ச்சை பேச்சு: சிவக்குமார் மீது வழக்கு! மின்னம்பலம் திருப்பதி ஏழுமலையான் கோயில் குறித்து அவதூறாகப் பேசியதாக நடிகர் சிவக்குமார் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 'இலக்கியம், ஆரோக்கியம், இல்லறம்' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சிவக்குமார் 'இன்றுவரை கோயில்களில் தீண்டாமை தொடர்கிறது' என்று குறிப்பிட்டு சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் உரையாற்றும் போது, "கோயில்களில் இன்னும் தீண்டாமை இருக்கிறது. ஏழை பணக்காரன் பாகுபாடு இருக்கிறது. தஞ்சாவூர் கோயிலைக் கட்ட ஆயிரக்கணக்கான சிற்பிகளும், கொத்தனார்களும், சித்தாள்களும் வேலை பார்த்து இருப்பார்கள். இரவு பகலாக கோயிலைக் கட்டிக் கொண்ட…

  19. இலங்கை விவகாரத்தில், ஐ.நா., சபையில் கொண்டு வரவுள்ள தீர்மான அம்சங்களை பரிசீலித்த பிறகே, தீர்மானத்திற்கு எதிராக ஓட்டு போடுவதா, ஆதரித்து ஓட்டு போடுவதா என்பதை, முடிவு செய்ய முடியும் என, மத்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது. அதே சமயம், இலங்கையில் நடந்த சம்பவங்கள் அனைத்திற்கும், பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் அந்நாட்டுக்கு உள்ளது என, வெளியுறவு துறை அமைச்சர், சல்மான் குர்ஷித் கூறினார். இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை மையமாக வைத்து, அந்நாட்டுக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் கொண்டு வர, அமெரிக்கா தீவிர நடவடிக்கைகளில் உள்ளது. அந்த தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க வேண்டுமென, தமிழக அரசியல் கட்சிகள், கோரிக்கை விடுத்தபடி உள்ளன. இந்நிலையில்,…

    • 1 reply
    • 827 views
  20. தமிழக மாணவர்கள் போராட்டங்கள் : நாம் என்ன செய்யலாம்? இந்த கேள்வி எம்மில் எல்லோருக்கும் உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை ஒரு அரசியல் வெற்றியாக, குறிப்பாக டெல்லியின் இலங்கை அணுகுமுறையில் நிலையான மாற்றத்தை கொண்டுவர உதவவேண்டும் என்பது, மாற்றவேண்டும். உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள். நன்றிகள்!

    • 49 replies
    • 6.8k views
  21. ”என் ஆசை நிறைவேறியது” கமல் பேச்சு: நடிகர்சங்க பொதுக்குழு கூட்ட அப்டேட்ஸ் நடிகர் சங்க 63வது பொதுக்குழு, சென்னை தி-நகரில் இருக்கும் நடிகர் சங்கத்திற்கான வளாகத்தில் இன்று நடைபெற்றுவருகிறது. சங்கத்தைச் சேர்ந்த இறந்த மூத்த நடிகர்களுக்கு முதலாவதாக இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, தியாகராஜ பாகவதர் உள்ளிட்ட மூத்த நடிகர்கள் நினைவு கூரப்பட்டு கெளரவிக்கப்பட்டனர். பொதுக்குழுவிற்கு அனுமதி அட்டை உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதனால் பழைய உறுப்பினர் அட்டை வைத்திருந்தவர்கள் பொதுக்குழுவிற்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்களுக்கும் நடிகர் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே அவ்வளாகத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பொதுக…

  22. ரஜினி காந்தின் கட்சி பெயர் இன்று பதிவு செய்யப்படவுள்ளதாக தகவல்.! நடிகர் ரஜினி காந்தின் கட்சியின் பெயர் இன்று (வெள்ளிக்கிழமை) பதிவு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக வழக்கறிஞர்களுடன், மன்ற நிர்வாகிகள் சிலர் டெல்லி சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. நடிகர் ரஜினி காந்தின் அரசியல் பிரவேசம் தற்போது சூடு பிடித்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக தலைமை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதன் விளைவாக கட்சிக்கு சில பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஒன்றை ரஜினி காந்த் தெரிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. குறித்த பெயர் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையகத்தில் இன்று பதிவு செய்யப்படவுள்ளதாக தெர…

  23. ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா புஷ்பா எம்.பி. மனு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். புதுடெல்லி: மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் சசிகலா புஷ்பா எம்.பி கூறியிருப்பதாவது: ‘ஜெயலலிதா மருத…

  24. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் 3 பேர் கைது - அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம் 6 ஜனவரி 2021, 04:17 GMT படக்குறிப்பு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் புதிதாக கைது செய்யப்பட்டவரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவருமான அருளானந்தம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ போலீசார் இந்த வழக்கு தொடர்பாக பொள்ளாசியை சேர்ந்த மேலும் 3 பேரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில், இவர்கள் மூவரையும் ஜனவரி 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உட்பட பல…

  25. சசிகலாவுக்கு ஆதரவு பேனர்: தொண்டர்கள் வேதனை தஞ்சாவூர் : 'மேலிடத்தில் இருந்து வரும் உத்தரவிற்கு பயந்து தான், விருப்பம் இல்லாமல், சசிகலாவுக்கு ஆதரவாக பிளக்ஸ் வைத்து வருகிறோம்' என, அடிமட்ட தொண்டர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சசிகலா பொதுச் செயலராக பதவி ஏற்றதிலிருந்து, வாழ்த்துகள் தெரிவித்து, தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிளக்ஸ்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பெயரில் தான், அதிகளவில் பிளக்ஸ் பேனர்கள் முளைத்துள்ளன. இருப்பினும், பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ்களில் உள்ள, சசிகலாவின் படத்தின் மீது, அதிருப்தியாளர்கள் சாணம் வீசியும், கிழித்தும் வர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.