Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் - அரசு ஊழியர் சங்கங்கள் நடத்திவரும் வேலை நிறுத்தப் போராட்டம் ஒரு வாரத்தைக் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அரசு தன் நிலையிலிருந்து பின்வாங்குவதாக இல்லை. போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டுமென்கிறது நீதிமன்றம். தமிழ்நாடு முழுவதும் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ என்ற ஒருங்கிணைப்புக் குழுக்களின் கீழ் இயங்கிவரும் ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்கள் ஜனவரி 22 ஆம் தேதி முதல் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பவர…

  2. மு. நியாஸ் அகமது பிபிசி தமிழ் மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 50 சதவீத இடஒதுக்கீட்டை பெண்களுக்கு அளித்துள்ளது. இந்திய அளவில் ஒரு கட்சி சரி பாதி அளவில் பெண்களுக்கு வாய்ப்பு அளிப்பது இதுவே முதல் முறை. தேர்தலில் பெண்களின் பங்களிப்பு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகையில் பெண்களின் பங்கு 49.7 கோடி. அதாவது 48 சதவீதம். ஆனால், மக்களவையில் அவர்களின் பங்கு 11.8 சதவீதம் (64/543) என்ற அளவிலும், மாநிலங்களவையில் அவர்கள் பங்கு 11 சதவீதம். அதாவது, 27 பெண் உறுப்பினர்கள் …

  3. 15 AUG, 2024 | 05:13 PM இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 17 பேர் நாடு திரும்பினர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஜஸ்டின் ரெய்மெண்ட் ஹெரின் ஆகியோருக்குச் சொந்தமான 3 விசைப் படகுகளை ஜூலை 23ம் தேதி அன்று நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டிய குற்றச்சாட்டின்பேரில் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். 3 படகுகளிலிருந்த காளீஸ்வரன் 22 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். ஆகஸ்ட் 6-ம் தேதியன்று ஊர்க…

  4. தாதியர் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வு! தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் தாதியர் கல்வி பயிலும் மாணவி ஒருவர், அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி திண்டுக்கல் ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக தமிழகப் பொலிஸார் திங்கட்கிழமை (23) தெரிவித்தனர். நடந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் ரயில் நிலையப் பொலிஸாரிடம் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். அந்த முறைப்பாட்டில், தன்னை நான்கு இளைஞர்கள் பாலியல் வன்புணர்வு செய்ததாக குறிப்பிட்டார். இதனையடுத்து பொலிஸார் அந்த மாணவியை, திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். …

      • Like
    • 7 replies
    • 969 views
  5. ஆகஸ்ட் 15 நடக்க உள்ள தேர்தல் எவ்வாறு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் ஏன் நாங்கள் அமெரிக்கா போன்று வரமுடியாது ? 12000 கிராமங்களையும் எவ்வாறு மாற்ற வேண்டும் ? எவ்வாறு மக்கள் தங்கள் தேவைகள் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு பேச்சு

    • 0 replies
    • 468 views
  6. பட மூலாதாரம்,@PKSEKARBABU படக்குறிப்பு, சென்னையில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் நடைபெற்ற பள்ளி, கல்லூரி மாணவிகள் கந்த சஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை நடத்தும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் உள்ள மாணவிகளை வைத்து கோவில்களில் கந்த சஷ்டி பாராயணம் செய்ய வைக்கும் நிகழ்ச்சிகளுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளே இதற்கு கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. நவம்பர் இரண்டாம் தேதியன்று சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவிகள் கந…

  7. கூடங்குளத்தில் அணுக் கசிவுக்கு வாய்ப்பில்லை: எம்.ஆர்.ஸ்ரீனிவாசன் கூடங்குளம் அணுவுலை பாதுகாப்பு கமிட்டி உறுப்பினரும், இந்திய அணுசக்தி கமிஷன் முன்னாள் தலைவருமான இன்று உதகையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், கூடங்குளம் அணுவுலையில் கசிவு ஏற்பட்டுள்ளதாகப் பரப்பப்பட்டுள்ளது தவறான தகவல். அணுவுலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்ற காலத்தில் அணுவுலைக்கான பணிகள் மேற்கொள்ளப்படாததாலும், உள்ளே நிபுணர்கள் அனுமதிக்கப்படாததாலும், மேலும் உலைக்குத் தேவையான இயந்திரங்கள் சரியாகப் பொருத்தப்படாததாலும், சோதனை ஓட்டத்தின்போது சில தவறுகள் கண்டறியப்பட்டன. அவை ஒவ்வொன்றான சரிசெய்யப்பட்டுவிட்டன.அணுவுலை இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. அணுவுலையே செயல்படாதபோது, உலையில் அணுக்கசிவு என்பது சாத்…

  8. தண்ணீரின்றி கருகிய பயிர்கள்.. காவிரி டெல்டாவில் இதுவரை 5 விவசாயிகள் மரணம்.. தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் மரணம் தொடர்கதையாகி வருகிறது. அடுத்தடுத்து அதிர்ச்சியில் விவசாயிகள் மரணமடைந்து வருகின்றனர் கருகிய நெற்பயிரைக் கண்டு மரணமடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஜீவாதாரமே விவசாயம்தான். ஜூன் மாதம் வரவேண்டிய காவிரி நீர் வராத காரணத்தால் கடந்த சில மாதங்களாக குறுவை பொய்த்துப் போக, காலம் தாழ்ந்து வந்த காவிரி நதிநீரை நம்பி சம்பா பயிரிட்டனர். வடகிழக்குப் பருவமழை கை கொடுக்கும் என்று நம்பிய நிலையில் மழையும் இன்னும் சரிவர பெய்யவில்லை. கடன்வாங்கி பயிரிட்ட நெற்பயிர்கள் கருகியதுதான் மிச…

  9. சசிகலா முதல்வராக பொறுப்பேற்க ஜெயலலிதா பேரவை தீர்மானம்: அமைச்சர் உதயகுமார் தகவல் ஜெயலலிதா பேரவை கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மான நகலை சசிகலாவிடம் வழங்கினார் அமைச்சர் உதயகுமார். தமிழக முதல்வராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுகவின் ஜெயலலிதா பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச்செயலராகவும் சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுகவின் ஜெயலலிதா பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானங்கள் இடம்பெற்ற தாளை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் வைத்து, அவரிடம் ஆசி பெறுவதற்…

  10. தீபாவுக்கு குவியும் பொங்கல் வாழ்த்து, அதிர்ச்சியில் சசிகலா... தலைமைப் பொறுப்பை ஏற்கச் சொல்லி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு அழைப்பு விடுக்கும் அ.தி.மு.க நிர்வாகிகளின் எண்ணிக்கை தொடர்ந்து கூடிக்கொண்டே போகிறது. வாசலில் தோரணம் கட்டியும், வீட்டில் எம்.ஜி.ஆர் படப்பாடல்களை ஸ்பீக்கரில் ஒலிக்க வைத்தும் பொங்கல் நாளில் களை கட்டியது தீபாவின் வீடு. தீபாவுக்கு பொங்கல் வாழ்த்து சொல்ல ஜனவரி 14-ஆம் தேதி மாலை அவர் வீட்டுமுன் தொண்டர்கள் திரண்டதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப் பட்டது. 'தீபாம்மா பொட்டு வைப்பதில்லை என்ற கருத்தை இனி யாரும் சொல்ல முடியாது... அதோ பாருங்க பொட்டு வைத்து தீபாம்மா, அம்மா மாதிரியே கையைக் காட்டிக்கிட்டு வர…

  11. காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்துக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் சீமான் அறிவிப்பு திருவொற்றியூர்: திருவொற்றியூர், சாத்துமா நகரில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது:- எண்ணூர் காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்கப்பணிகளை கண்டித்து டெல்லியில் நடைபெறும் போராட்டம் போல் எத்தனை மாதங்கள் ஆனாலும் போராட்டம் நடத்துவேன். அனைத்தையும் தனியாருக்கு விற்றுவிட்டு எதையும் காணோம் என்று தேடும்போது இதுதான் கிளீன் இந்தியா திட்டம் என்று கூறுகிறார்கள். ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்வதற்கு எதற்காக எட்டு வழிசாலை? வேகமாக சென்று என்ன செய்ய போகிறீர்கள். இவ்வாறு …

  12. புதன், 22 மே 2013 மரக்காணம் கலவரம் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராக செயல்பட்டதாக நாங்கள் நினைக்கவில்லை, உணரவில்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். வன்முறையில் ஈடுபடும் அரசியல் கட்சிகளை தடை செய்யவும், ஒடுக்கவும் இந்த அரசு தயங்காது என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி பா.ம.க. நிறுவனர் ராமதாசை விடுதலை செய்ய வேண்டும் என்று அப்போது கூறினார். மேலும் மரக்காணம் கலவரம் தொடர்பாக கருணாநிதி கண்டன அறிக்கை எதுவும் விடாதது விடுதலை சிறுத்தைகள் தரப்பில் அதிருப்தி ஏற்பட்டது. இது குறித்து திருமாவளவன் கூறுகையில்: ஆளுங்கட்சியை விமர்சிப்பது எதிர்கட்சியின் கடமை. அந்த அடிப்படையில…

  13. பன்னீருக்கு ஆதரவா?: உரிய நேரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும்: ஸ்டாலின் ''யாருக்கும் ஆதரவு கொடுக்க போவதில்லை; உரிய நேரத்தில், நல்ல முடிவு எடுக்கப்படும்,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார். தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம், செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில், நேற்று, அறிவாலயத்தில் நடந்தது.இதில், 'அரசியல் சட்ட விதிகள் மற்றும் மரபுகளுக்கு உட்பட்டு, தமிழகத்தில், நிலையான ஆட்சியை அமைக்க, கவர்னர் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பது உட்பட, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வழிகாட்டுதல்படி கூட்டத்தில், 'முதல்வர் பன்னீர்செல்வம் நம்ப…

  14. பன்னீர்செல்வம் Vs சசிகலா... 134 தொகுதி எம்.எல்.ஏக்கள் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும்? மலைக்க வைக்கும் மக்கள் தீர்ப்பு...! #SurveyResults #OpsVsSasikala தமிழக அரசியல் நொடிக்கு நொடி பரபரப்பை பற்றவைத்துக் கொண்டிருக்கிறது. எம்.எல்.ஏ-க்களின் சொகுசு ரிசார்ட் அப்டேட்டுகள், ஓ.பன்னீர்செல்வத்தின் பத்திரிகையாளர் சந்திப்புகள், சசிகலாவின் திடீர் பேட்டிகள்... என தமிழக அரசியல் களம் அதகளப்பட்டுக் கொண்டிருக்கிறது. அடுத்த நொடி என்ன நடக்கும்? எந்த எம்.எல்.ஏ அணி மாறுவார்? என்கிற பரபரப்புகளுக்கு இடையே, அ.தி.மு.க தேர்தலில் வென்ற 134 தொகுதிகளில் 'பன்னீர்செல்வம் Vs சசிகலா... 134 தொகுதிகளில் மக்கள் ஆதரவு யாருக்கு?' என்ற தலைப்பில் சர்வே நடத்தினோம். மக்கள் தங்கள் கருத்துகளை தொகுதி…

  15. சசிகலாவுக்கு பக்கத்து அறை 'சயனைடு' மல்லிகா, வேறு சிறைக்கு ஏன் மாற்றப்பட்டார்? சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். இதே சிறையில்தான் 'சயனைடு ' மல்லிகா என்ற பெண் கொலையாளியும் அடைக்கப்பட்டிருந்தார். பரப்பன அக்ரஹாரா சிறையில் முதல் நாள் சசிகலா அடைக்கப்பட்டபோது, அடுத்த அறையில் சயனைடு மல்லிகா இருந்தார். சயனைடு கலந்த தண்ணீரைக் கொடுத்து பெண்களைக் கொலை செய்து நகைகளை அபேஸ் செய்வது மல்லிகாவின் ஸ்டைல். இதனால் மல்லிகா என்ற பெயருடன் 'சயனைடு' ஒட்டிக் கொண்டது. கடந்த 1999-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை 6 பெண்களை 'சயனைடு' மல்லிகா கொன்றுள்ளா…

  16. ‘மோடியின் கோபத்தைப் புரிந்து கொள்ளுங்கள்!' - சசிகலா தூதுவரிடம் கொந்தளித்த அமைச்சர் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சரிபார்த்து வருகின்றனர். 'சேகர் ரெட்டி விவகாரத்தில் லஞ்சம் பெற்ற சிலரது பெயரை மட்டுமே, தலைமைச் செயலாளரின் பார்வைக்கு அனுப்பினோம். இன்னும் சில முக்கிய ஆவணங்கள் உள்ளன. அது கடைசி ஆயுதமாக இருக்கும்' என அதிர வைக்கின்றனர் வருமான வரித்துறை அதிகாரிகள். அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும், ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்துவதிலேயே காலத்தைக் கடத்தி வருகின்றனர். 'கே.பி.முனுசாமி என்ற ஒருவர் இருக்கும் வரையில் அணிகள் இணைப்பு சாத்தியமில்லை' என எடப்பாடி பழனிசாமி அணியினர் பேசி…

  17. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தமது இலங்கை விஜயம் தொடர்பான அறிக்கையை மனித உரிமைகள் மாநாட்டில் சமர்ப்பித்ததன் பின்னர், இலங்கையில் கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தப்படும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் நடத்தப்படுகின்ற இந்த கருத்துக் கணிப்பு, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஆறுதலாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகளுக்கு கருத்துக் கணிப்பின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்பதைய சர்வதேச ரீதியாக வாழ்கிற தமிழ் மக்கள் விரும்புகின்றனர். இந்த நிலையில் குறித்த கருத்துக்கணிப்பு நடத்தப்படுவது மிகவும் அவசியமானது என்றும் கருணாநிதி சுட்டிக்காட்டி…

  18. கோயில்கள் தனியார் மயம்: சீமான் கண்டனம்! மின்னம்பலம்2021-08-27 நாட்டில் நிலவும் அதிகப்படியான பொருளாதார முடக்கத்தினால் விளைந்த நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி, பணமாக்கல் திட்டம் (National Monetisation Pipeline ) எனும் பெயரில் நாட்டின் உட்கட்டமைப்பு சார்ந்த நிறுவனங்களைத் தனியார் நிறுவனங்களுக்குக் கொடுக்கும் திட்டத்தை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார். இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழகத்தில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வன்மையாக எதிர்த்து கருத்து வெளியிட்டுள்ளார். இன்று (ஆகஸ்டு 27) சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல கோடிக்கணக்கான நாட்டு மக்களின் வியர்வையையும், இரத…

  19. சிவகாசியில் 3 வயது குழந்தையை கிணற்றில் தள்ளி கொன்ற சிறுவர்கள்: என்ன நடந்தது? பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் சிவகாசியில் விளையாட்டால் ஏற்பட்ட சண்டையில் 3 வயது குழந்தையை பக்கத்து வீட்டு சிறுவர்கள் இருவர் கிணற்றில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு சிறுவர்களையும் கைது செய்த போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியை அடுத்த விஸ்வநத்தம் ஊராட்சி திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவர் பட்டாசு ஆலையில் வேன் ஓட்டுநராக உள்ளார். இவரது மனைவி கவியரசி. இவர்களுக்கு பிரியதர்ஷன், தீனதயாளன் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளன. …

  20. சேலம்: இசைப்பிரியா 2008ஆம் ஆண்டே படுகொலை செய்யப்பட்டதற்கு தற்போது கண்டனம் தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், இவ்வளவு நாளும் கோமாவில் இருந்தாரா? என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியை, இன்று காலை ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் வைகோ செய்தியாளர்களிடம் பேசியதாவது: இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான அமைப்புகள் மீது இதுபோன்ற அடக்கு முறைகள் தொடருமானால் ஒட்டு மொத்த தமிழர்களின் ஆதரவை இழக்க நேரிடும். காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக…

  21. சசிக்கு சலுகைகள் உண்மைதான்: புதிய சிறைத்துறை அதிகாரிகள் ஒப்புதல் பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறயைில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் உண்மைதான் என சிறைத்துறை உயர் அதிகாரிகள் இன்று ஒத்துக்கொண்டனர். சசிக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்படுவதாக டி.ஐ.ஜி., ரூபா பரபரப்பு தகவலை வெளியிட்டார். இதற்கென ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து சிறைதுறை டி.ஜி.பி., சத்தியநாராயணன், ரூபா ஆகியோர் இட மாற்றம் செய்யப்பட்டனர்.இந்நிலையில் கர்நாடக சட்டசபை வளாகத்தில் சட்டசபை பொதுக்கணக்கு குழு கூட்டம் நடந்தது. குழு தலைவர் ஆர். அசோக் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., என்.எஸ் மேக்ரட், டி.ஐ.ஜி., ரேவண்ணா ஆகிய…

  22. சூட்கேஸ் பெட்டி ஸ்கூட்டர் ஒன்றை சீனாவைச் சேர்ந்த ஒரு விவசாயி கண்டுபிடித்துள்ளார். பயணிகளின் போக்குவரத்தில் இது ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்றும், மாசடைதல் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை இது குறைக்கும் என்றும் ஹேர்ல் யாங் சாய் என்னும் அந்த விவசாயி கூறியுள்ளார். தனது சூட்கேஸை அமெரிக்க விமானம் ஒன்றில் தொலைத்த பின்னர் 10 வருடங்கள் முயற்சி செய்து இவர் இதனை கண்டுபிடித்துள்ளார். இதற்கு ''சிட்டி கப்'' என்று அவர் பெயரும் வைத்துள்ளார். விமான நிலையத்தில் பார்க்கிங் பிரச்சினை, தள்ளுவண்டி பிரச்சின எதுவும் கூட இதலால் இல்லாது போய்விடுகிறது. மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில்தான் இது பயணிக்கும். பட்டரியில் இயங்கும் இதில் வழிகாட்டும் கருவியான ஜிபிஎஸ் நவிகேசன் கூட இருக்கி…

  23. ஜெயலலிதா மரணம்: இப்போதும் சூழ்ந்திருக்கும் ஆறு சர்ச்சை கேள்விகள் 27 ஆகஸ்ட் 2022, 03:43 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணம் அடைந்தபோது அது இயற்கை மரணம் அல்ல என்றும் அவர் கொல்லப்பட்டார் என்றும் அப்போது ஆளும் அதிமுகவில் இருந்த பலரும் சந்தேகம் எழுப்பினார்கள். இதையடுத்து அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்தார். அந்த ஆணையத்தின் பதவிக்காலம் பல முறை நீட்டிக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தனது இறுதி அறிக்கையை தமிழ்நாடு ம…

  24. மருத்துவ சிகிச்சைக்காக இலங்கையில் அடைக்கலம் வழங்குமாறு நித்தியானந்தா கடிதம் ஊடாக கோரிக்கை http://www.samakalam.com/wp-content/uploads/2022/09/34-e1662191877178.png தனது உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் இருப்பதாகவும் உதவிசெய்யும் பட்சத்தில் எங்கள் நன்றியின் வெளிப்படாக லட்சக்கணக்கான டொலர் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை உங்கள் நாட்டுக்கே, மக்களின் நலனுக்காகவே தந்து விடுகிறோம் என இந்தியாவின் பிரபல சாமியார் நித்தியானந்தா இலங்கையில் அடைக்கலம் கோரி, அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளா…

  25. மிஸ்டர் கழுகு: சந்தோஷ ஓ.பி.எஸ்... சரண்டர் எடப்பாடி... சமாதான மோடி! உள்ளே வந்த கழுகார், ‘‘பிரதமர் மோடியின் விழாக்களுக்குப் போய்விட்டு வந்தேன்’’ என்றபடி பேச ஆரம்பித்தார். அமைதியாகக் கேட்டோம். ‘‘பெண்களுக்கு மானிய விலை டூவீலர் வழங்குவது மாநில அரசின் விழா. ‘இதில் பிரதமர் கலந்துகொண்டது சரியா?’ எனச் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். சென்னையில் மெட்ரோ ரயில் தொடக்க விழாவுக்குக்கூட பிரதமர் மோடி வரவில்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தமிழக அரசின் விழாக்களுக்கு பிரதமர் மோடி வந்ததில்லை. ஜெயலலிதாவுக்குப் பிறகும் அதே நிலைதான் தொடர்ந்தது. தமிழக அரசு சார்பில் பலமுறை அழைத்தும், அவர் வரவில்லை. இந்த முறை பிரதமரே வருவதாகச் சொன்ன பிறகுதான், விழா ஏற்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.