Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. ஆனால், இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக ஐ.மு., கூட்டணியில் இருந்து தி.மு.க., விலகியதன் எதிரொளியாக பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. மும்பை பங்குச்சந்தையின் சென்செகஸ் குறியீட்டு எண் 201.13 புள்ளிகள் சரிந்து 19092.07 புள்ளிகளோடும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 64.90 புள்ளிகள் சரிந்து 5770.35 புள்ளிகளோடும் காணப்பட்டன. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் (09.07 மணியளவின்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 13.77 புள்ளிகள் அதிகரித்து 19279.43 புள்ளிகளோடு காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 15.70 புள்ளிகள் அதிகரித்து 5850.95 புள்ளிகளோடு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.…

    • 0 replies
    • 631 views
  2. திராவிட இயக்கங்களின் வரலாற்றுத் தேவை முடியவில்லை' அகத்தியலிங்கம் சு.பொஎழுத்தாளர் படத்தின் காப்புரிமைGNANAM Image captionசட்டமன்றத்தில் அண்ணா ( அருகில் நெடுஞ்செழியன், கருணாநிதி , பின்னால் எம்.ஜி.ஆர்) "ஐம்பதாண்டு திராவிட ஆட்சி" என்ற சொற்றொடரே சரியா ? திராவிட இயக்கம்' தமிழ்ச் சமூகத்தின் நியாயமான தேவையிலிருந்து முகிழ்த்தது . வைதீக எதிர்ப்பு என்பது இரண்டாயிரமாண்டு தமிழ்சமூகப் பாரம்பரியம். வைதீக எதிர்ப்பு ,சுயமரியாதை ,பகுத்தறிவு ,தமிழ்பற்று ,சாதி மறுப்பு ,மாநில உரிமை ,ஏழ்மையை ஒழித்தல் போன்றவற்றோடு 'காங்கிரஸ் எதிர்ப்பும்' அதன் உள்ளுறை . ஆர் எஸ் எஸ்சின் அரசியல் பிரிவான 'ஜனசங்கம்' /'பாரதிய…

  3. ஜெயலலிதா உடல் நிலை : உயர் நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து உரிய விவரங்களை, தமிழக அரசு 6 ஆம் திகதிக்குள் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்த உண்மையான அறிக்கையை வெளியிடக்கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் “முதலமைச்சர் ஜெயலலிதா திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, கடந்த 22 ஆம் திகதி சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்க இலண்டனில் இருந்து வைத்தியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவருக்கு என்ன நோய்? என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டு…

  4. மக்கள் புரட்சியால் வென்று முடிப்போம் ; வெல்லப்போகிறான் விவசாயி - சீமான் அனைவரும் புரிதலோடு வாக்களிக்க வரவேண்டும். களப்பணி ஆற்றவேண்டும். எங்களை கைவிட்டு விடாமல், மதிப்புமிக்க உங்கள் வாக்கை எங்களுக்கு தந்து வெற்றிபெறச் செய்வீர்கள் என்ற உறுதியான நம்பிக்கையோடு, புதியதொரு தேசம் படைப்போம்; அதை மக்கள் புரட்சியால் வென்று முடிப்போம்; வெல்லப்போகிறான் விவசாயி” என்று அடையாறில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் சீமான் தெரிவித்தார். இதேவேளை, "சுவையாக சாப்பாடு தயாரித்து, அதை நீங்களும் சாப்பிடாமல், மற்றவருக்கும் கொடுக்காமல் குப்பையில் கொட்டுவது எப்படிப்பட்ட செயலோ, அப்படிப்பட்ட செயல்தான் நோட்டாவுக்கு போடும் வாக்கு” என்றும் சீமான் பேசினார். சென்னை அடையாறில் நேற்று (14 ஆம் த…

  5. டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிகவும் போட்டியிட உள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை வரும் 27-ந் தேதி விஜயகாந்த் டெல்லியில் அறிவிக்கிறார். இதுகுறித்து டெல்லி தே.மு.தி.க. மாநில செயலாளர் வி.என்.தட்சிணாமூர்த்தி கூறியதாவது: டெல்லியில் 12 லட்சம் தமிழர்கள் வசிக்கிறோம். பெரும்பாலும் கூலித் தொழிலாளர்கள்தான். அவர்கள் தங்களது அடிப்படை வசதிகளுக்காக போராடி வருகின்றனர். ஆனால் எவரும் தமிழர்களின் குறைகளை கேட்பது இல்லை. டெல்லி மாநில அரசில் தமிழர்களின் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டிய அவசியம் இருக்கிறது. அதனால் டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். டெல்லி ஐந்தர்மந்தர் பகுதியில் வரும் 27-ந்தேதி நடைபெறும் தே.மு.தி.க. பொதுக்கூட்டத்தில் கட்சி …

  6. மக்கள் மனது வைத்தால் முதல்வராக முடியும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். லிங்கா பட ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்க டேஷுடன் நடிகர் ரஜினிகாந்த் கடந்த புதன்கிழமை மங்களூர் பாஜ்பே சர்வதேச விமான நிலை யத்துக்கு வந்தார். விமான நிலைய நிர்வாகம் சார்பாக அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. அப்போது அவர் கன்னடத் தில் அளித்த பேட்டி வருமாறு: ‘‘ஷிமோகாவில் நடைபெறும் ‘லிங்கா' ஷூட்டிங்கிற்காக மங்களூர் வந்துள்ளேன். 22 வருடங்களுக் குப் பிறகு மங்களூர் விமான நிலையத்துக்கு வந்தது மகிழ்ச்சி யளிக்கிறது. ‘லிங்கா' ஷூட்டிங் ஏற்கெனவே மைசூர், மாண்டியா, மத்தூர், மேல் கோட்டை என பல இடங்களில் நடந்தது. இப்போது ஷிமோகாவில் ஜோக் அருவி அருகில் 21 நாட்கள் ஷூ…

  7. நீண்ட இடைவேளைக்குப் பிறகு அறிவாலயம் வந்தார் கருணாநிதி! சென்னை: உடல் நலக்குறைவின் காரணமாக ஓய்வில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதி நீண்ட இடைவேளைக்குப் பிறகு வெள்ளி இரவு 9 மணியளவில் அறிவாலயத்திற்கு வருகை தந்தார். திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவின் காரணமாக தொடர் ஓய்வில் இருக்கிறார். நடுவில் முரசொலி பவழ விழா சமயத்தில் அவர் முரசொலி அலுவலகத்திற்கு வருகை தந்தார். அதன்பிறகு வெள்ளி இரவு 9 மணியளவில் அறிவாலயத்திற்கு வருகை தந்தார்.அவருடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், துணை பொதுச் செயலாளர் துரைமுருகன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். …

  8. ஜெ., மரணத்தில் நீதிபதிக்கு சந்தேகம் சென்னை: முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் தனக்கு சந்தேகம் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வழக்கை, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு மாற்றியும் அவர் பரிந்துரை செய்துள்ளார். சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், செப்., 22ம் தேதி அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, டிச., 5ம் தேதி இரவு,11:30 மணிக்கு மரணமடைந்தார். அவர் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இன்று காலை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், இது தொடர்பான வ…

  9. ஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில்.. ஜெயலலிதா நினைவு மண்டப மாதிரி தோற்றம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு மண்டபம் அமைக்கும் நிகழ்ச்சிக்கான யாக பூஜை இன்று காலை 6.30 மணிக்கு துவங்கி நடைபெற்றது. யாகசாலை பூஜையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் மெரினாவில் எம்ஜிஆர் சமாதி அருகேயுள்ளது. ஜெ. நினைவிடத்தை நினைவு மண்டபமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.50.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஃபினிக்ஸ் பறவை போல அரசியலில் அதிரடியாக எழுந்து வந்தவர் ஜெயலலிதா என்று பறைசாற்ற வேண்டும் என்பது அதிமுக தலைமை விருப்பம். அதற்கேற்ப நினைவு மண்டபமும் ஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில் அ…

  10. சிறப்புக் கட்டுரை: எம்.ஜி.ஆர் முதல் எடப்பாடி வரை! எதிர் புரட்சியின் வரலாறு! மின்னம்பலம் ராஜன் குறை புரட்சி நடிகர் என்றும் பின்னால் அரசியல் கட்சி துவங்கி தலைவரான பிறகு புரட்சித் தலைவர் என்றும் அறியப்பட்டவர் எம்.ஜி.ஆர். இந்த புரட்சி என்ற வார்த்தையின் பொருள் நெகிழ்வானது. உள்ள நிலையினை மாற்றி அமைப்பது, அப்படி அமைக்க துணிகரமாக முயல்வது போன்றவை புரட்சிகர செயல்பாடுகள். பொதுவாக ஜாதிய ஏற்றத்தாழ்வு, பொருளாதார ஏற்றத்தாழ்வு, பாலியல் சமமின்மை இவற்றை சமன் செய்ய முயல்வதும், அரசியல் ரீதியாக இந்த பாகுபாடுகளை கடந்து எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் சம உரிமை பெற்றவர்கள் என்று கருதுவதுமே புரட்சிகர முன்னேற்றங்கள்தான். எம்.ஜி.ஆர் துவக்க காலத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் …

  11. தமிழக அரசு வழங்கும் நிவாரண பொருட்கள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படும்.! தமிழக அரசு வழங்கும் நிவாரண பொருட்கள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கை மக்களுக்கு உதவிப்பொருள் அனுப்ப அனுமதி கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுக்குறித்த அவரது கடிதத்தில், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, இலட்சக்கணக்கான மக்கள் துன்பத்திற்கும், துயரத்திற்கும் ஆளாகியுள்ளனர். ஒவ்வொரு நாளும் அங்கு நிலைமை மோசமடைந்து வருகிறது. அங்குள்ள மக்களுக்கு உருவாகி வரும் தீவிர நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும். இந்த இக்கட்டான சூழ்ந…

    • 9 replies
    • 630 views
  12. தமிழ்நாட்டில் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த 6 எம்.பிக் களின் பதவிக்காலம் முடிந்தை தொடர்ந்து.6 எம்.பிக்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. மாநிலங்களஅவை தேர்தலில் 231 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். தேர்தலில் பதிவான ஓட்டுகள் மாலையில் எண்ணப்பட்டது. இதில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 4 வேட்பாளர்களும், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட டி.ராஜா மற்றும் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்றுள்ளனர். பதிவான ஓட்டுகளில் ஒரு ஓட்டு செல்லாதது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்யசபா தேர்தல் முடிவுகள் : அர்ஜுனன் - 36 லட்சுமணன் - 35 இளங்கோவன் - 22 கனிமொழி - 31 மைத்ரேயன் - 36 ரத்தினவேல் - 36 டி.ராஜா - 34http://dinaithal.com/tamilnadu/16517-the-upp…

    • 3 replies
    • 630 views
  13. சசி சொகுசுக்காக ஹவாலா மூலம் ரூ.2 கோடி கைமாறியது...அம்பலம்! பெங்களூரு:அ.தி.மு.க., சசிகலா, பெங்களூரு சிறையில் சொகுசு வசதிகளை அனுபவிக்க, ஹவாலா முறையில், இரண்டு கோடி ரூபாய் லஞ்சமாக தந்தது அம்பலமாகி உள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், கூடுதல் தண்டனை கிடைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் அளிக்கப்பட்டதை, டி.ஐ.ஜி., ரூபா, மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார். சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா, கர்நாடகா தலைநகர் பெங்களூரில், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்தாலும், தனி அறை, பார்வையாளர்களை சந்திக்க வரவேற்பு அறை, பிடித்த உணவுகளை சமைத்து வழங்க கைதிகளிலே உதவியாளர்…

  14. உதயமானது மக்கள் தேமுதிக. | அதிருப்தி எம்.எல்.ஏ. சந்திரகுமார் அறிவிப்பு. | படம்: ம.பிரபு. தேமுதிக-விலிருந்து வெளியேறிய அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளனர். சென்னை தி.நகரில் உள்ள ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் சந்திரகுமார் தலைமையில் இன்று போட்டி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. விஜயகாந்த் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், சந்திரகுமார் போட்டிப் பொதுக்குழு கூட்டம் நடத்தினார். இந்த பொதுக்குழு கூட்டத்தில்தான் சந்திரகுமார் மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சி தொடங்கியதாக அறிவித்தார். மேலும் அவர் பேசும்போது, தேமுதிக-வை உடைக்கும் எண்ணமில்லை என்றார். “தேமுதிக-வை உடைக்கும் எண்ணம் எங…

    • 0 replies
    • 630 views
  15. ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம் – ஸ்டாலின் ‘தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்’ என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கடந்த 2016 டிசம்பர் 5ல் ஜெயலலிதா மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 2021 ஜனவரி 27ல் ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் திறக்கப்படுகிறது. இந்த நான்காண்டு காலமும் ஜெயலலிதாவிற்கு உண்மையாக இல்லாத இரண்டு நபர்களால் அவரின் நினைவகம் திறக்கப்படுவது அவருக்கு செய்யும் துரோகம் ஆகும். இந்தத் துரோகத்தை உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள், விசுவாசிகள் உணர்வர் என்ற நம்பிக்கை எனக்…

  16. ரஜினி, கமல் அரசியல் செய்யட்டும் – நான் கடைசி வரைக்கும் கலைஞனாகவே இருப்பேன் – பாரதிராஜா ரஜினி, கமல் இருவரும் கடைசி காலத்தில் நாட்டுக்கு நல்லது செய்யலாம் என அரசியலுக்கு வரட்டும்;. ஆனால் நான் கடைசி வரைக்கும் கலைஞனாகவே இருப்பேன் என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ள பாரதிராஜா அதற்காக நேற்று புதுச்சேரிக்கு சென்று சில இடங்களை பார்வையிட்ட பின்னர் முதல்வர் நாராயணசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். ரஜினி, கமல் இருவருக்கும் கடைசி காலத்தில் நாட்டுக்கு ஏதாவது செய்யலாம் என்ற எண்ணம் வந்திருக்கலாம்.…

  17. "நான் எப்போது வருவேன், எப்படி வருவேன் யாருக்கும் தெரியாது.ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வந்துடுவேன்.1995 ஆம் ஆண்டு மாபெரும் வசூல் சாதனை படைத்த முத்து திரைப்படத்தில் ரஜினிகாந்தின் பாத்திரம் பேசிய பிரபல்யமான வசனம் இது. சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களைப் பொறுத்தவரை, அவர்கள் அவரின் அரசியல் வருகைக்காக மேலும் காத்திருக்கவேண்டியிருக்கிறது போலத்தெரிகிறது.இன்னும் இரு மாதங்களில் மூன்று மாதங்களில் நடைபெறவிருக்கும் லோக்சபா தேர்தல்களில் இருந்து ஒதுங்கியிருக்க ரஜினிகாந்த் இப்போது தீர்மானித்திருக்கிறார்.சரியான நேரம் இன்னமும் வரவில்லை எனாறு அவர் நம்புதகிறார் போலும்.லோக்சபா தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்றும் அவர் பிரகடனம் செய்திருக்கிறார்.…

  18. உத்தமபாளையம் மலை சூழ்த்த ஓர் அழகிய ஊர், இங்கு மக்கள் தொகை 22,104. 10%, 600 வருடம் பழமை கொண்ட இங்கு முஸ்லிம், ஹிந்து மற்றும் கிறிஸ்துவரும் வாழ்ந்துவருகின்றனர். தென்னகத்திலேயே தஞ்சாவுருக்கு அடுத்தபடியாக இங்குதான் நெல் அதிகம் விளைகின்றது. இதற்கு காரணம் இங்கு ஓடும் பெரியார் ஆறு, பெரியார் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் இங்கு வந்து அணைத்து ஊர்களையும் செளிபடைய வைக்கிறது என்றால் அது மிகையாகாது! இங்குள்ள மக்கள் அனைவரும் விவசாயம் செய்து வருகிறனர், இந்தபகுதியில் நெல் மற்றும் இன்றி முக்கனியும் மா,பாழ,வாழை, திராட்சை, கொய்யா போன்ற பழங்களும் விளைகின்றன. இதுவே இங்கு வாழலும் மக்களுக்கு வருவாய் ஈட்டுவதற்கு ஆதாரமாகவுள்ளது. இங்கு பள்ளி, கல்லுரி, தாலுகா அலுவலகம், மற்றும் …

    • 0 replies
    • 629 views
  19. பாராளுமன்ற தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் வேலைகளில் பிஸியாகியுள்ளன. அதிமுக, திமுக ஆகிய இரண்டு முக்கிய கட்சிகளும் தங்களது கூட்டணியை பிரிந்து தனித்து நிற்கின்றன. எந்த எந்த கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்று உறுதியாகவில்லை என்றாலும், சில கட்சிகளில் நடவடிக்கைகளைப் பார்த்தால் திமுக, தேமுதிக-வுடன் கூட்டணி அமைப்பதற்காக வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் இருந்து பிரிந்த திமுக, இனி காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டது. அதேபோல தேமுதிக-அதிமுக கூட்டணி பிரிந்து விட்டதாலும், இவர்களும் இனி கூட்டண் அமைக்க வாய்ப்பில்லை. இந்த நிலையில் தேமுதிக-வுடன் கூட்டணி அமைத்தால் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறலாம் என்று கருதும்…

  20. சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தியதை பிரச்னையாக்க விரும்பவில்லை என்றும், காங்கிரசில் தமக்கு நண்பர்கள் அதிகம் இருப்பதாகவும், அவர்களுடன் உள்ள உறவை துண்டிக்க முடியாது என்றும் , இதனை யாராலும் தடுக்க முடியாது என்றும் தி.மு.க,. தென் மண்டல அமைப்பு செயலாளரும், மாஜி மத்தியஅமைச்சருமான மு.க., அழகிரி கூறியுள்ளார். இலங்கை மீதான அமெரிக்க தீர்மானம் தொடர்பான பிரச்னையில் காங்., கூட்டணியில் இருந் தி.மு.க., வெளியேறியது. இதிலிருந்து 2 நாட்களில் , தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மகன், உதயநிதி ஸ்டாலின், சொகுசு கார் வாங்கியது தொடர்பாக, அவரது வீட்டில் சி.பி.ஐ., சோதனை நடத்தியது. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் பண்ணை வீட்டிலும், கொகுசு கார் இருக்கிறதா என, சி.பி…

    • 1 reply
    • 629 views
  21. தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது: திருமாவளவன் தமிழ்நாட்டில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று (சனிக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் அங்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார். மேலும் தேசிய அளவில் உருவாகி உள்ள இந்த கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இணைந்துள்ளது என தெரிவித்தார். அத்துடன் எங்கள் கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது என உறுதிபட கூறிய திருமாவளவன், வேண்டுமானால், கமல் ஹாசன் தங்களுடன் இணைந்தால் வரவேற்க தயார் என்றும் தெரிவித்தார். http://athavannews.com/தி-மு-க-காங்கிரஸ்-கூட்டணி/

  22. புது கட்சி துவங்காவிட்டால்... தீபாவுக்கு ஆதரவாளர்கள் கெடு வேலுார்:'உடனடியாக தனிக் கட்சியை துவங்கா விட்டால், வேறு அணிக்கு சென்று விடுவோம்' என, தீபாவுக்கு, அவரின் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். ஜெ., அண்ணன் மகள் தீபாவுக்கு, வேலுார் மாவட்டத்தில், அதிகளவு ஆதரவு உள்ளது. ஆம்பூரில் துவங்கப்பட்டுள்ள தீபா பேரவையில், இதுவரை, இரண்டு லட்சம் பேர் உறுப்பினர் களாக சேர்ந்துள்ளனர். கடந்த, 17ல் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், தீபா தனிக் கட்சி துவங்குவார் என, அவரது தொண்டர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், தனிக் கட்சி துவங்காத தால் ஏமாற்றம் அடைந்தனர். தீபா பேனர் வைத்தவிவகாரத்தி…

  23. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி – ஸ்டாலின் தமிழகத்தில் அ.தி.மு.கவின் ஆட்சி கவிழப்போவது உறுதி எனவும் விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் எனவும், தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “அ.தி.மு.கவின் ஆட்சிக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகாலம் மட்டுமே ஆயுள் இருக்கிறது. ஆயுள் முடிந்து ஆட்சி மாற்றமா? அல்லது ஆயுள் முடிவதற்கு முன்பே ஆட்சி மாற்றமா? என்ற கேள்வி தொடர்ந்து நிலவிவருகின்றது. இருப்பினும் விரைவில் இந்த ஆட்சி கவிழப்போகிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது” என குறிப்பிட்டுள்ளார…

  24. நவிப்பிள்ளையிடம் கருணாநிதி கோரிக்கை! இலங்கையில் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ள நவநீதம்பிள்ளை, ஈழத் தமிழர்களின் துயரம் தொடர்பாக ஐ.நா.வில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம் பிள்ளை இந்த மாத இறுதியில் இலங்கை செல்லயிருப்பதாகச் செய்திகள் வருகின்றன.டெசோ சார்பில் ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு 2012 ஆகஸ்ட் 12-ல் சென்னையில் நடைபெற்றது.இதில் ஈழ விவகாரம் தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை ஜெனீவாவுக்கு நேரில் சென்று நவநீதம்பிள்ளையிடம் திமுகவின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற திமுக குழு தல…

  25. திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் இலங்கை அரசுக்கும், இந்திய அரசின் நட்பிற்கும் தகுந்த பதிலடி தரும் வகையில் நடத்திய போராட்டத்திற்கான வ்ழக்கு நிதியை தோழர்கள் திரட்ட பெரும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நண்பர்களே போராட்டங்களில் நாம் நேரடியாக பங்கெடுக்க முடியாவிட்டாலும், தங்களது சுய நலம் பாராது, குடும்பம், வேலை, என அனைத்து நெருக்கடிகளையும் மீறி இனத்தின் விடுதலைக்காக போராடும் இந்த தோழர்களை பாதுகாக்க நடைபெரும் சட்ட போராட்டத்திற்கு நிதி அளித்து பங்காற்றுங்கள் .. நீங்கள் அளிக்கும் சிறு சிறு நிதியும் வழக்கு நிதியினை சந்திக்க உதவும். தோழர்கள் விடுதலை பெறுவதும் நிகழும். அடுத்த போராட்டங்களை அமைப்புகள் முன்னெடுக்க பேருதவியாக அமையும். செய்தியை பகிர்வது மட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.