Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 'ராஜீவ் காந்தி கருப்பா சிவப்பா என்றே தெரியாது... !'- பரோலில் வெளியே வந்த நளினி உருக்கம்! ( படங்கள்) வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நளினி, 25 ஆண்டுக்கு பின் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள இன்று பரோலில் வெளியே வந்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 25 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவர் நளினி. இவரது தந்தை சங்கர நாராயணன். ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரான இவர், நெல்லை மாவட்டம் வி.கே.புரத்தில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று (23-ம் தேதி) மாலை உடல் நலக்குறைவு காரணமாக 91 வயதான சங்கர நாராயணன் காலமானார். அவரி…

  2. 'ராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை!' பகீர் கிளப்பும் டெல்லி பத்திரிகையாளர் 24ஆண்டுகளான பிறகும் இன்னும் விலகாத மர்மக் கதையாகத் தொடர்கிறது ராஜீவ் காந்தியின் கொலைச் சம்பவம்! குற்றம்சாட்டப்பட்டு தண்டனை பெற்றவர்களும் இந்தக் குற்றத்தை விசாரித்தவர்களும் இப்போது அளித்துவரும் வாக்குமூலங்கள் மூல வழக்கையே மொத்தமாக மாற்றிவிடக் கூடியவை. ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வழங்கிய மரண தண்டனை தீர்ப்பு, இப்போது உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் முன்பாக இருக்கிறது. கொலைச் சதி சம்பந்தமாக விசாரிக்க அமைக்கப்பட்ட பல்நோக்கு ஆணையம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தன்னுடைய விசாரணை காலக்கட்டத்தை நீட்டித்துக்கொண்டே போகிறது. ஜெயின் கமிஷன் குற்றம்சாட்டிய நபர்கள் இன்னம…

    • 18 replies
    • 11.6k views
  3. 'ராஜீவ் வழக்கின் சாந்தனை நான்தான் சுட்டுக் கொன்றேன்!' - சிபிஐ அதிகாரியின் பதற வைக்கும் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்! ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் அவ்வப்போது வெளியாகும் மர்மங்கள் அரசியல் களத்தை அதிர வைத்துக் கொண்டிருக்கிறன. அதில் லேட்டஸ்ட் வரவு, ' ராஜீவ் படுகொலைக்குக் காரணமான சாந்தனை நான்தான் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றேன்' என விசாரணை அதிகாரியாக இருந்தவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கும் ஸ்டேட்டஸ். அப்படியானால், 25 ஆண்டுகளாக சின்ன சாந்தன் என்பவர் எதற்காக சிறையில் இருக்கிறார்? என கொந்தளிக்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, கடந்த 1991ம் ஆண்டு, மே மாதம் 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை வழக்கில் …

  4. 'ராஜீவ்காந்தி கொலையின் நேரடி சாட்சி 'போட்டோகிராபர் ஹரிபாபு உயிரோடு இருக்கிறார்!' -ஆவணப்பட அதிர்ச்சி இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. 'படுகொலைக்குக் காரணமானவர்கள்' என சி.பி.ஐயால் சொல்லப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர், தங்களது விடுதலையை எதிர்நோக்கிக் காத்துக் கிடக்கிறார்கள். ராஜீவ்காந்தி படுகொலையின் மிக முக்கிய ஆவணம் என ஜெயின், வர்மா கமிஷன் விசாரணைகளில் குறிப்பிடப்பட்டது சம்பவ இடத்தில் போட்டோகிராபர் ஹரிபாபு எடுத்த புகைப்படங்களைத்தான். சர்வதேச அரங்கையும் இந்தப் புகைப்படங்கள் உலுக்கியது. " ஸ்ரீபெரும்புதூர் குண்டுவெடிப்பில் ஹரிபாபு இறந்துவிட்டால…

  5. 'ராம்ஜி நகர் திருடர்கள்': கொண்டை ஊசி, ஹேர்பின் மூலம் திருடும் கொள்ளை கும்பல் - அதிர்ச்சி தரும் கைவரிசை மற்றும் பின்னணி பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை நகரில் கடந்த சில வாரங்களாக கொண்டை ஊசி, ஹேர்பின் உள்ளிட்ட பெண்கள் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு கார் கண்ணாடிகளை உடைத்து, பொருட்களை திருடிச்செல்லும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சாமார்த்தியமாக பொது மக்களின் கவனத்தை திசைதிருப்பி, பலமான பொருட்களை கொண்டு தாக்காமல், அன்றாட பொருட்களை வைத்து கொள்ளையடிக்கும் முறைக்கு பெயர்போன …

  6. படக்குறிப்பு,ஆந்திராவைச் சேர்ந்த பழங்குடி பெண்ணான அங்கம்மாள் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 29 மே 2025 "என் மகனைக் கொன்றதற்கான தண்டனை அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். நான் பட்ட துன்பத்தை இன்னொரு தாய் படக்கூடாது. என் மகன் எங்கே எனத் தெரியாமல் ரொம்பவே பாதிக்கப்பட்டேன். அந்த வலி இன்னொருவருக்கு வந்துவிடக்கூடாது" எனக் கலங்கியவாறு பேசுகிறார், ஆந்திர மாநிலம், கூடூரைச் சேர்ந்த அங்கம்மாள். மே 19ஆம் தேதியன்று சத்தியவேடு காவல் நிலைத்தில் 9 வயதான தனது மகனை மீட்டுத் தருமாறு அங்கம்மாள் புகார் கொடுத்திருந்தார். அடுத்த 3 நாள்களில் காஞ்சிபுரத்தில் உள்ள பாலாறு படுகையில் அவரது மகன் சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில், சிறுவனை குழந்தைத் தொழிலாளராகப் பணிய…

  7. சென்னை: 'கத்தி' பட விளம்பரங்களில் இருந்து தயாரிப்பாளர் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள நடிகர் விஜய், ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "என்னை நேசிக்கும் அன்பான தமிழக மக்களுக்கும், அன்பு ரசிகர்களுக்கும் வணக்கம். சில நாட்களாக சில தமிழ் அமைப்புகள் 'கத்தி' திரைப்படத்தின் தயாரிப்பாளர் லைக்கா நிறுவனத்தின் பெயரை விளம்பரங்களில் நீக்க கோரிக்கை வைத்திருந்தனர். அவர்களின் வேண்டுகோளை மதித்து படத்தின் விளம்பரங்களில் லைக்கா பெயரை நீக்க தயாரிப்பாளர்கள் ஒத்துக் கொண்டனர். எனவே இந்த பிரச்னை சுமூகமாக முடிந்துவிட்டது. எனவே, எதிர்பார்ப்போடு காத்திருந்த ரசிகர்களும், மக்களும் 'கத்தி' திரைப்படத்தை சந்தோஷமாக கண்டுகளிக்குமாறு…

    • 4 replies
    • 947 views
  8. பட மூலாதாரம்,A.R. VENKATACHALAPATHY/ FACEBOOK படக்குறிப்பு, "திருநெல்வேலி எழுச்சியும் வ.உ .சி.யும் 1908" என்ற நூலுக்காக ஆ.ரா. வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் தமிழ்நாட்டை சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் ஆ.ரா. வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. "திருநெல்வேலி எழுச்சியும் வ.உ .சி.யும் 1908" என்று தமிழில் 2022-ஆம் ஆண்டு வெளிவந்த அவரது நூலுக்காக, ஆய்வுப் பிரிவின் கீழ் 2024-ஆம் ஆண்டுக்கான விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக இலக்கிய நூல்களுக்கே வழங்கப்படும் சாகித்ய அகாடமி விருது இந்த முறை வரலாற்று நிகழ்வு ஒ…

  9. 'வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது' - அண்ணா சொன்னது இன்றும் பொருந்துகிறதா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வரிப்பணத்தில் வரும் நிதியை மத்திய அரசு வட மாநிலங்களுக்கே அதிகம் பயன்படுத்துகிறது என்று ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். படத்தின் காப்புரிமைARUNKUMARSUBASUNDARAM Image captionபெரியாருடன் அண்ணா "மத்திய அரசால் பாரபட்சம் காட்டப்பட…

  10. உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் தீவிரமாக இருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் சீமான். ' தமிழர் அல்லாதவர்கள் குறித்துப் பேசும்போது எச்சரிக்கையாக இருங்கள். பெரியார் குறித்தும் மாற்று மொழி பேசுபவர்கள் குறித்தும் அனுமதியில்லாமல் யாரும் பேச வேண்டாம்' என எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார். சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 1 சதவீத வாக்குகளை வாங்கியது நாம் தமிழர் கட்சி. அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், கடலூரில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார். இதன்பிறகு, கடந்த அறுபது நாட்களாக அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றே யாருக்கும் தெரியவில்லை. காஷ்மீர் பிரச்னையையொட்டி நாளை மறுநாள் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறா…

  11. 'வர்தா' புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு நாளை (திங்கள்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் தீவிரம் கொண்டுள்ள வர்தா புயல் மேலும் இந்த 3 மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க அல்லது ஊழியர்களை வீட்டிலிருந்த படியே பணிபுரிய வைக்க கூறி தமிழக அரசு அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளது. இந்த அறிவிப்புகள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடலோர தாலுக்கா பகுதிகளுக்கும் பொருந்தும் என தமிழக அரசு கூறியுள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் அதி தீவிர புயலான வர்தா, நாளை (திங்கள்கிழமை) சென்னைக்கு மிக அருகே கரையை கடக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெ…

  12. ஸ்டாலின் பதிலளிக்க மறுப்பு சசிகலா தரப்பு செம கடுப்பு சென்னை:'வளைந்து, குனிந்து, தவழ்ந்து, தரையில் உருண்டு, கால் நோக்கி கும்பிடு போடுபவர்களால், தமிழகம் பாழ்பட்டு கிடக்கி து. எனவே, காலில் விழுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது அறிக்கை: தி.மு.க., செயல் தலைவராக பொறுப்பேற்றுள்ள என்னை சந்திக்க வரும் கட்சியினர் சிலர், ஆர்வம் மிகுதியால் சற்றும் எதிர்பாராத நிலையில், காலில் விழுந்து வணங்க முயற்சிக்கின்றனர். இதை, நான் சிறிதும் விரும்புவதில்லை. யார் காலிலும் விழ வேண்டிய அடிமை நிலை, எந்த மனிதருக்கும் எப்போதும் ஏற்படக் கூ…

  13. 'வாசன் காத்திருப்பது யாருக்காக?'- கார்டன் vs அறிவாலயம்! மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக ஐக்கியமான அடுத்தடுத்த நாட்களில் திமுகவின் தேர்தல் பணிகள் வேகமாகி உள்ளன. மாவட்ட வாரியாகவும், தொகுதி, ஒன்றியம், வார்டு வாரியாகயும் 'கட்சி வாக்காளர்' களின் வீடுகளுக்கு நேரில் சென்று வாக்குகளை சரி பார்க்கும் வேலையில் உ.பி.க்கள் இறங்கி விட்டனர். அதிமுக சைடில் 'இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை' என்ற கெக்கலிப்புக்குரல் பலமாய்க் கேட்கிறது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரில் தொடங்கி உள்ளூர் வட்டச் செயலாளர் வரையில் ம.ந.கூ. அணிக்கு கொடுக்கப் பட்டுள்ள 110 சீட்டுகளை குறிப்பிட்டு நக்கலடிக்கின்றனர். 'இது அம்மாவோட ஸ்கீம்க... அம்மா பேச்சை அண்ணன் வைகோ தட்டினதே கிடையாது. அவர் கூட்டணியில் இருந…

  14. 'வாரிசாக யாரை அறிவித்தார் ஜெயலலிதா?!' -தகிக்கும் ஜெ,.அண்ணன் மகள் தீபா அ.தி.மு.கவுக்குத் தலைமை ஏற்க வருமாறு சசிகலாவிடம் வேண்டுகோள் வைத்துள்ளனர் கட்சியின் சீனியர்கள். ' கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் இக்கட்டான சூழலை உங்களால்தான் நிவர்த்தி செய்ய முடியும்' என கட்சி நிர்வாகிகள் அவரிடம் வலியுறுத்தி வருகின்றனர். விரைவில் அ.தி.மு.கவின் பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதற்கான ஆலோசனைகளில் தீவிரமாக இருக்கிறார் சசிகலா. அதேநேரம், ' முதலமைச்சர் மரணமடைந்த மூன்றே நாட்களில் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது குறித்தும் சொத்துக்கள் குறித்தும் பேசுவது சரிதானா?' என வேதனையோடு பேசுகிறார் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபா. அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெ…

  15. 'வார்தா' விளைவு: கும்மிடிப்பூண்டி முகாமில் அடிப்படை உதவிகளுக்கு ஏங்கும் இலங்கைத் தமிழ் அகதிகள் கும்மிடிபூண்டி இலங்கை அகதிகள் முகாமில் சேதமடைந்துள்ள வீடு | படம்: இரா.நாகராஜன். "எங்களுக்கு பாய், போர்வை, மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, தீப்பெட்டிகள் கிடைத்தால் உதவியாக இருக்கும். வீடுகளை சீரமைக்க வழியின்றி தவிக்கிறோம்." 200 மரங்கள் விழுந்தன | 7 பேர் படுகாயம் | 200 வீடுகள் சேதம் வார்தா புயலினால், கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் சுமார் 200 மரங்கள் விழுந்தன. இதனால், 7 பேர் படுகாயமடைந்தது மட்டுமல்லாமல், 200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. அடிப்படை உதவிகளுக்காக முகாமில் வாழும் மக்கள் க…

  16. 'விஜயகாந்தை வளைத்தது இப்படித்தான்...!' கடைசி நிமிட காட்சிகள் தேர்தல் காலங்களில் அரசியல் கட்சித் தலைவர்களை பாடாய்ப்படுத்தும் சென்டிமெண்ட்டுக்கு மக்கள் நலக் கூட்டணியும் தப்பவில்லை. பங்குனி உத்திரத்தின் நல்லநேரத்தில் கூட்டணியை உறுதி செய்திருக்கிறார் விஜயகாந்த். இதனால், தி.மு.கவின் கடைசி நிமிட நம்பிக்கை பொய்த்துப் போய்விட்டது. 'மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் சேருவார்' என வைகோ பகிரங்கமாக மேடையில் பேசினாலும், தே.மு.தி.க தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வராததால் தி.மு.க, பா.ஜ.க தரப்பில் கொஞ்சம் நம்பிக்கையோடு காத்திருந்தார்கள். ' நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்' என கருணாநிதி அழுத்தமாக தனது வார்த்தைகளை முன்வைத்தார். பா.ஜ.கவின் கடைசிநிமிட முயற்சிகள் பலனிக்காமல் …

  17. 'விஜயகாந்த், ஜி.கே.வாசனை யார் சேர்த்துக் கொள்வார்கள்?!' -கூட்டத்தில் கொந்தளித்த வைகோ சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தே.மு.தி.கவும், த.மா.காவும் திசைக்கொன்றாகப் பறக்கும் முடிவுக்கு வந்துவிட்டன. இந்நிலையில் 'அவர்கள் போவதால் எந்த நஷ்டமும் இல்லை. யாரும் அவர்களை சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்' எனக் கொந்தளித்திருக்கிறார் வைகோ. ம.தி.மு.க நிர்வாகிகள் பங்கேற்ற உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம், தாயகத்தில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், ' மக்கள் நலக் கூட்டணியோடு தேர்தலை சந்தித்ததால் வந்த விளைவுகள், உள்ளாட்சி தேர்தலில் செய்ய வேண்டிய பணிகள், கட்சியை விட்டுப் போன முக்கிய நிர்வாகிகள்' என பலவற்றைப் பற்றியும் விரிவாகப் பேசியிருக்கிறார் வைகோ. கூ…

  18. தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில மாநாட்டுக்குப் பிறகு விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்துவந்த சீமான், இனி விஜய் மீதான விமர்சனங்களை குறைத்துக் கொள்ள முடிவெடுத்திருப்பதாக கூறுகிறார்கள் உட்கட்சி விவரம் அறிந்த சிலர். இந்த முடிவின் பின்னணி என்ன? 2024 பிப்ரவரியில் த.வெ.க-வை தொடங்கினார் விஜய். அப்போது ஆரத்தழுவி வரவேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய்யுடன் கூட்டணி வைக்க விருப்பம் தெரிவித்து விஜய்யின் நடவடிக்கைகளை வரவேற்று பேசிவந்தார். 2024 அக்டோபரில் நடந்த த.வெ.க-வின் முதல் மாநாட்டில் `நா.த.க-வை நட்பு சக்தியாக விஜய் முன்நிறுத்துவார்’ என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சீமானை மறைமுகமாக விமர்சித்து அதிர்ச்சி கொடுத்தார் விஜய். சீமான், விஜய் 2024 நவம்பர் மாதத்தில…

  19. சென்னை: தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்த சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்ததற்காக ஜெயலலிதாவுக்கு வைகோ பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஈழத்தமிழருக்கு விடியல் ஏற்பட, சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று, தமிழ்நாடு சட்டப் பேரவையில், தமிழக முதல் அமைச்சர் கொண்டு வந்து நிறைவேற்றி உள்ள தீர்மானம், வரலாற்றுப் புகழ்மிக்க சிறப்புக்கு உரியது ஆகும். துன்ப இருளில் துயரத்தில் பரிதவிக்கும் ஈழத்தமிழருக்கு, சுதந்திரத் தமிழ் ஈழம் ஒன்றுதான் ஒரே தீர்வு ஆகும் என்பதால், 1976 மே 14 இல், வட்டுக்கோட்டையில், தந்தை செல்வா தலைமையில், ஈழத்தமிழர…

  20. 'விடியல் இன்னும் வரல' - கல்பனா சாவ்லா விருது பெற்ற வீராங்கனையின் வேதனை கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீராங்கனை தீபா(40) வறுமையின் பிடியில் சிக்கியுள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் விளையாட்டுத் துறையில் இந்தியாவை முன்னிறுத்தி சர்வதேச விளையாட்டு போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என பல பதக்கங்களை வென்ற தடகள வீராங்கனையான இவர், தற்போது சென்னையில் ஒரு விடுதியில் சமையல் பணியாளராக வேலை செய்கிறார். தமிழ்நாடு அரசின் கல்பனா சாவ்லா விருதைப் பெற்ற முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது…

  21. படக்குறிப்பு,அமைச்சர் சக்கரபாணி 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து நெல் மூட்டைகளைக் கொண்டு செல்வதற்கு போக்குவரத்து ஒப்பந்தம் வழங்கியதில் 300 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாக ஒப்பந்த விதிகளை வளைத்து முறைகேடு நடைபெற்றதாகக் கூறுகிறார், அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராம் வெங்கடேசன். இந்திய அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டே விலைப் பட்டியல் இறுதி செய்யப்பட்டதாகக் கூறுகிறார், தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி. நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களுக்கு நெல் மூட்டைகளை அனுப்புவதில் முறைகேடு நடந்ததா? அமைச்சர் சக்கரபாணி சொல்வது என்ன? தமிழ்நாட்டில் விவசாயிகளிடம் இருந்து …

  22. 'விரைந்து முடிவெடுங்க கேப்டன்...!'- நெருக்கும் மக்கள் நலக் கூட்டணி! தேமுதிக, தங்களுடன் இணைந்து சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று விரும்பும் மக்கள் நலக் கூட்டணிதலைவர்கள், விரைந்து முடிவெடுக்க விஜயகாந்த்தை நெருக்கி வருகின்றனர். கடந்த 10-ம் தேதி சென்னையில் நடந்த தேமுதிக மகளிரணி மாநாட்டில், "தேமுதிக தனித்தே களம் இறங்கும், எங்கள் தலைமையை விரும்புவர்கள் எங்களுடன் சேரலாம்" என்று விஜயகாந்த் கூறியதையடுத்து தமிழக அரசியல் போக்கு மாறியது. கூட்டணிக்கு வருவார் விஜயகாந்த் என்று கடைசி வரை நம்பிய திமுகவுக்கு கற்பனையில் கூட 'பழம்' கிடைக்காமல் போனது. பெரிதும் நம்பிய பாஜகவிற்கு, விஜயகாந்தின் முடிவு பெரும் அதிர்ச்சியை அளித்தது. இதனால், ஆரம்பத்திலிருந்து தங…

  23. 'வீரத்தின் உச்சகட்டம் அஹிம்சை... அதன் விதை பயமிலாக் கேள்வி' - கமல் ட்வீட் பிக் பாஸ் நிகழ்ச்சி, அ.தி.மு.க அமைச்சர்களுடன் மோதல், ட்விட்டர் கருத்துகள் என்று கமல் தற்போது செம ஆக்டிவாக இருக்கிறார். சமூக பிரச்னைகள் குறித்து தொடர்ந்து ட்விட்டர் மூலமாக கருத்து தெரிவித்து வருகிறார். இதனிடையே, கடந்த சில நாள்களுக்கு முன்பு கேரள முதல்வர் பினராயி விஜயனை கமல் சந்தித்தார். தமிழகத்தையே சோகத்தில் மூழ்கடித்துள்ள அனிதாவின் மரணம் குறித்தும் அவர் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து, “இந்த சட்டதை உருவாக்கியது நாம்தான். அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தவறென்றால் மாற்றிக்கொள்ளுங்கள். ஆனால், அதை அவமானம் செய்வதும், தவறாகப் பேசுவதும் கூடாது. விவாதங்கள் மூலம் மாற்ற…

  24. பட மூலாதாரம், TVK படக்குறிப்பு, கரூர் பரப்புரையை வேண்டுமென்றே காலதாமதம் செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. 29 செப்டெம்பர் 2025, 09:50 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் வேண்டுமென்றே காலதாமதம் செய்ததாகவும் அனுமதியின்றி ரோட் ஷோ நடத்தியதாகவும் தவெக நிர்வாகிகள் மீது காவல்துறை தரப்பில் குற்றம்சாட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளின் அறிவுரையையும் மீறி தவெக நிர்வாகிகள் அசாதாரண செயல்களில் ஈடுபட்டதாகவும் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தவெக பரப்புரைக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட தற்போது வரை 41 பேர் உயிரிழந்துள்ளனர…

  25. 'வைகோவை இப்போதுதான் புரிந்து கொண்டேன்!' - வீரலட்சுமியின் ஆதங்கம் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகும் முடிவை அறிவித்திருக்கிறார் தமிழர் முன்னேற்றப்படையின் தலைவர் வீரலட்சுமி. ' வைகோவிடம் கொள்கை முரண்பாடு ஏற்பட்டதால் விலகுகிறோம். அவரைப் பற்றி இப்போதுதான் புரிந்து கொண்டோம்' என்கிறார் வீரலட்சுமி. ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவின் முயற்சியால், தமிழர் முன்னேற்றப்படையும் மக்கள் நலக் கூட்டணிக்குள் அங்கம் வகித்தது. ஒரே ஒரு சட்டமன்றத் தொகுதியை ஒதுக்கினார் வைகோ. பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்ட வீரலட்சுமி, 20 ஆயிரம் ஓட்டுக்களைப் பெற்று தோல்வியைத் தழுவினார். இந்நிலையில், இன்று தன்னுடைய முகநூல் பக்கத்தில், ' மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகுகிறோம்' எ…

    • 1 reply
    • 917 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.