Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பொருட்களை பரிசோதிக்க ரூ.86 லட்சம் செலவில் மலேசியாவில் இருந்து லக்கேஜ் ஸ்கேனர் கருவிகள் வரவழைக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலகப் புகழ்பெற்ற கோவில் ஆகும். இந்த கோவிலுக்கு நாள்தோறும் தமிழகம், மற்றும் பிற மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். கோவிலுக்கு தினமும் 75,000 முதல் 1 லட்சம் பக்தர்கள் வரை வருகின்றனர். இந்நிலையில் கோவிலுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் வேறு இருந்து வருகிறது. இதனால் கோவிலின் 4 கோபுர வாசல்களிலும் மெட்டல் டிடெக்டர் மூலம் பக்தர்கள் சோதனை செய்யப்பட்ட பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பொருட்கள…

  2. பத்து நாட்களாக அப்போலோ அறிக்கை ஏன் இல்லை? #ApolloUpdates அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த மருத்துவமனை அறிக்கை வெளிவந்து 10 நாட்கள் ஆகிவிட்டது. அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டதும், சாதாரண காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவு என்று மருத்துவமனை சார்பில் முதல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதோடு ஓரிரு நாளில் முதல்வர் வீடு திரும்புவார் என்றும் அதில் சொல்லப்பட்டு இருந்தது. அவர்கள் சொல்லி இருந்த இரண்டு நாட்கள் கடந்த நிலையில், முதல்வர் வீட்டிற்கு சென்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த நிலையில் மீண்டும் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், இன்னும் இரண்டு நாட்கள் முதல்வருக்கு ஓய்வு தேவை என்று கு…

  3. புதிய அரசாங்கம் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும்: - தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு [saturday, 2014-03-29 14:02:01] புதிய அரசாங்கம் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இந்தியாவின் புதிய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ஆட்சி அமைக்கப்பட்டதன் பின்னர் தமிழக மீனவர்கள் எந்தவிதமான பிரச்சினையும் இன்றி தமது வாழ்வாதாரத்தை முன்னெடுக்க முடியும் என அவர் …

    • 1 reply
    • 614 views
  4. தமிழகத்தின் மூவாயிரம் ஊர்களின் பெயர்களை தமிழில் மாற்றம் செய்ய நடவடிக்கை தமிழகத்தில் பிற மொழிகளிலுள்ள மூவாயிரம் ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றம் செய்யப்படுமென அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார் சென்னையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறியதாவது, “தமிழகத்தில் பிற மொழிகளிலுள்ள ஊர்களின் பெயர்களை தமிழில் மாற்றம் செய்ய உலக தமிழாராய்ச்சி நிறுவனம் தற்போது முயற்சி மேற்கொண்டு வருகின்றது. அதன்படி ஆங்கிலத்திலுள்ள ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றம் செய்யப்படும். இதற்காக வருவாய்த்துறை, செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம…

  5. திமுக - 141, அதிமுக - 87, பாமக - 2, மநகூ -1, பாஜக - 1 வெல்லும்: நியூஸ் 7 கருத்துக்கணிப்பு முடிவுகள் சென்னை: நியூஸ் 7 மற்றும் தினமலர் நாளிதழ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் திமுக - 141, அதிமுக - 87, பாமக - 2, மநகூ -1, பாஜக - 1 தொகுதிகளில் வெல்லும் வாய்ப்புள்ளதாகவும், இரண்டு தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு சம வாய்ப்புள்ளதாக நியூஸ் 7 கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றது. நியூஸ் 7 தொலைக்காட்சியும், தினமலர் நாளிதழும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்புகளை மண்டலவாரியாக வெளியிட்டு வருகின்றனர். முதலில் மேற்கு மண்டல கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டனர். இதையடுத்து தெற்கு மண்டல முடிவுகள் வெளியாகின…

  6. இலங்கையில் பிப்ரவரி 28ஆம் தேதி கொழும்பில் ஜவுளி நிறுவன கண்காட்சி நடக்க உள்ளது. ஜவுளித் தொழில் கண்காட்சியில் தமிழ்நாட்டு நிறுவனங்கள் பங்கேற்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கண்காட்சியில் பங்கேற்கும் நிறுவனங்களை எதிர்த்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தது. இதையடுத்து கண்காட்சியில் பங்கேற்கவில்லை என்று தமிழ்நாட்டு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளனன. நிறுவனங்களின் முடிவை அடுத்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டது தந்தை பெரியார் திராவிடர் கழகம். http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=92998

    • 0 replies
    • 614 views
  7. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் லட்டில் கலப்படமா ? உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். கோவில் நிர்வாகம் சார்பில் 2019-ம் ஆண்டில் இருந்து பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக லட்டு தயாரிக்கும் எந்திரங்கள் வாங்கி அதன் மூலம் ஆயிரக்கணக்கான லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர வடை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பிரசாதமாக தயார் செய்து விற்கப்பட்டும் வருகிறது. திருப்பதி கோவில் லட்டு விவகாரத்தை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவில் பிரசாதம் குறித்தும் கேள்வி எழுந்தது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர் அழகர்கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். …

  8. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 13 பேரில் 12 பேரின் தலையிலும் மார்பிலும் குண்டுகள் பாய்ந்துள்ளன December 24, 2018 தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 13 பேரில் 12 பேரின் தலையிலும் மார்பிலும் குண்டுகள் பாய்ந்திருப்பதாகவும், பின்னால் இருந்து அவர்கள் சுடப்பட்டிருப்பதாகவும் அவர்களது பிரேதப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என ரொய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த மே 22ஆம் திகதியன்று தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி நடத்தப்பட்ட பேரணியின் போது வன்முறையை தூண்டியதாக கூறி காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் பிரேதப் ப…

  9. தமிழ்நாடு தொல்லியல் துறை வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் அகழாய்வு செய்ய விரும்புவது ஏன்? முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 19 செப்டெம்பர் 2021, 03:03 GMT பட மூலாதாரம்,TN ARCHAEOLOGY படக்குறிப்பு, கொடுமணல் அகழ்வுப்பணி தமிழ்நாடு தொல்லியல் துறை வேறு மாநிலங்களில் உள்ள பாலூர், வேங்கி, தலக்காடு போன்ற இடங்களிலும் தொல்லியல் ஆய்வுகளை நடத்தப்போவதாக தெரிவித்துள்ளது. இந்த இடங்களின் பின்னணி என்ன என்பதை இரு பாகங்களாகப் பார்க்கலாம். அதன் முதல் பாகம் இது. தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை தமிழ்நாட்டின் பல இடங்களில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் முடிவுக…

  10. ஜெ.,வுக்கு ஏன் ஜாமின் தரப்பட்டது? மறுபரிசீலனை செய்ய கோரிக்கை சொத்துக்குவிப்பு வழக்கில், தண்டனை பெற்ற, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சுப்ரீம் கோர்ட் வழங்கிய ஜாமினை, மறுபரிசீலனை செய்திடக் கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த, சொத்துக்குவிப்பு வழக்கின் முடிவில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கும், சிறை தண்டனை வழங்கப்பட்டது. தங்களை, ஜாமினில் விடக்கோரி, நான்கு பேரும் தாக்கல் செய்த மனுவை, கர்நாடகா ஐகோர்ட் நிராகரித்து விட்டது. பின்னர், சுப்ரீம் கோர்ட்டில், நான்கு பேருக்கும் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தத்து, நீதிபதி லோக்கூர், சிக்ரி ஆகியோர், கட…

  11. 2 ஜி தீர்ப்பு தேதி நாளை வெளியாகும் நிலையில், கருணாநிதியுடன் மோடி சந்திப்பால் பரபரப்பு! 2ஜி வழக்கு விசாரணையில் தீர்ப்பு தேதி நாளை வெளியாக உள்ள நிலையில் சென்னையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கப்போவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவினருக்கு ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு எப்படி கழுத்திற்கு மேல் கத்தியாக தொங்கியதோ அதே போன்று திமுகவினரின் கழுத்திற்கு மேல் தொங்கும் கத்தி 2ஜி வழக்கின் தீர்ப்பு. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான அரசு 2004-2009 மற்றும் 2009 முதல் 2014-ஆம் ஆண்டுகள் வரை ஆட்சியில் இருந்தது. அதில் முதலாவது ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார்கள் …

  12. கோவை: தினமும் ரூ. 100 மட்டுமே சம்பளம் வழங்கும் நிலையில், சம்பளத்தை உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூய்மைக் காவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2014 -15 ஆம் நிதியாண்டு திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்கீழ் ஊராட்சிகளில் வீடுதோறும் கழிவுகளைச் சேகரித்து அதனை மக்கும், மக்காத குப்பைகளாகத் தரம் பிரித்து, அதிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வீடுகளில் இருந்து குப்பைகளை சேகரிக்க தூய்மைக் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 150 குடியிருப்புகளுக்கு ஒரு தூய்மைக் காவலர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, கோவை மாவட்டத்தில் 228 ஊராட்சிகளிலும் சேர்த்து 1,608 தூய்மைக் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளன…

  13. அரசியலில் குள்ளத்தனமாக சிந்திக்கும் நான்கு பிரபலங்கள் இந்திய அரசியலில் குள்ளத்தனமான இராஜதந்திரத்தை பயன்படுத்துவதில் நான்கு பேர் பிரபல்யம் பெற்று விளங்குகிறார்கள். அவர்களில் முதன்மை இடத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த திராவிட முன் னேற்றக்கழகத்தின் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் பெற்றுள்ளார். அவருக்கு அடுத்த படியாக குள்ளத்தன மாக காய்நகர்த்தல் களை மேற்கொள்வ தில் முன்னிலை வகிப் பவர் இந்திய காங்கி ரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி இர ண்டாவது இடத்தையும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நீருக்கு அடியில் நெருப்பை அணையாமல் கொண்டு செல்லக்கூடியவர். இவர் மூன்றாவது இடத்தையும் எப்போதும் அமைதியாக வார்த்தைகளை அளந்து பேசினாலும் கண் சிமிட்டாமல் தான் …

  14. இரட்டை இலை முடக்கத்தில்... ரஜினிக்கு மீண்டும் துளிர்விடுகிறதா அரசியல் ஆசை...?! 'ரஜினி அரசியலுக்கு வரவேண்டும்' என்ற கோஷம் மீண்டும் அவரது ரசிகர்கள் மத்தியில் வலுக்க ஆரம்பித்துள்ளது. அரசியல் அனுபவம் என்ற வார்த்தையைத்தான் இதுவரை தமிழ்கூறும் நல்லுலகம் தெரிந்துவைத்திருக்கிறது. ஆனால் 'அரசியல் ஆசை அனுபவம்' என்ற புதிய வார்த்தையை கண்டுபிடிக்கப்பட்டது ரஜினிக்குப்பிறகுதான். 1995 ம் ஆண்டு தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி நடந்த சமயம், 'பாட்ஷா' படத்தின் வெற்றிவிழா கொண்டாடப்பட்டது. ரஜினியின் திரைவாழ்க்கையில் முக்கிய இடம்பெற்ற இந்த படத்தின் தயாரிப்பாளர் அன்றைக்கு அமைச்சராக இருந்த ஆர்.எம். வீரப்பன். உணர்ச்சிப் பூர்வமான மனிதரான ரஜினி மேடையில் ஆர்.எம் வீ…

  15. அதிமுகவுடன் உறவை முறித்துக்கொண்ட விஜயகாந்த், அடுத்த பாராளுமன்ற தேர்தலை சந்திக்க திமுக கூட்டணி அமைப்பது குறித்து தீவிரமாக ஆலோசனை செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இன்று திடீரென கருணாநிதியை விஜயகாந்த் சந்தித்து நலம் விசாரித்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு திமுக தலைவர் கருணாநிதி இன்று காலை சென்றார். அஞ்சலி செலுத்திவிட்டு காரில் புறப்பட்டார். அப்போது தேமுதிக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் வந்தார். கருணாநிதி வந்திருப்பது தெரிந்ததும், அவரது கார் அருகே சென்ற விஜயகாந்த், அவருக்கு வணக்கம் தெரிவித்தார்.இருவரும் ஒருவருக்கொருவர் நலம் வி…

    • 0 replies
    • 613 views
  16. தமிழகத்தில் நடைபெறும் மாணவர் போராட்டங்களால் செல்வாக்கிழந்துள்ள காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வியூகத்தில் தமிழகத்தை வளைத்துப்போட புதிதாக யோசிப்பதாக அமெரிக்க பத்திரிகையான ரைம் எழுதியுள்ளது. எப்படி பஞ்சாப்பில் இந்திய நடுவண் அரசுக்கு எதிராக எழுந்த அலையை அடக்க, அன்று ஒரு சீக்கியரை காங்கிரஸ் பிரதமராக அறிவித்ததோ அதுபோல தற்போது தமிழகத்தில் காங்கிரசை நோக்கி பெருக்கெடுத்துள்ள சுனாமியை தடுக்க ப.சிதம்பரத்தை பிரதமர் வேட்பாளராக்கும் துரும்புச் சீட்டை காங்கிரஸ் பாவிக்க யோசித்துள்ளது. மும்பை குண்டு வெடிப்பை சிறப்பாக கையாண்டமை, இதுவரை இந்திய பொருளாதாரத்தை ஸ்திரத் தன்மையுடன் வைத்திருத்தல் போன்ற திறமைகள் இவரிடம் இருக்கிறதாக ரைம் சுட்டிக்காட்டியுள்ளது. இதே கருத்தை பிரிட்டனில் இருந்…

    • 2 replies
    • 613 views
  17. ஜல்லிக்கட்டு தடைக்கு தீர்வு என்ன? #YoutubeLive ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அலங்காநல்லூர் மற்றும் சென்னை மெரினாவில் ஆரம்பித்த போராட்டம் சங்கிலித் தொடர்போல... கோவை, சேலம், கடலூர், திருச்சி, சேலம், டெல்லி என எங்கும் பரவியுள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்க தமிழர்கள் வசிக்கும் பகுதிகளிலும் ஜல்லிக்கட்டுக்கான போரட்டம் தீவிரம் அடைந்துள்ளது. மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் என மூன்று மாவட்டங்களில் மட்டும் நடந்துவந்த ஜல்லிக்கட்டு, இளைஞர்களின் எழுச்சியால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டு நடக்கும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. ஜல்லிக்கட்டு பற்றி இளைஞர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில், யூடியூப் லைவ்வில் அவற்றுக்கு விளக்கம் அளிக்கிறார்…

  18. சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது குறித்து மாணவர்கள் தெரிவிக்கையில் : இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் எந்த மாநிலத்திலும் சிங்களவர்கள் வந்து விளையாடக் கூடாது. இதனை அடிப்படையாக வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மேலும், பூந்தமல்லி சிறப்பு முகாமை உடனே இழுத்து மூட வேண்டும். உடனடியாக முகாமில் உள்ள மக்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். திருச்சியில் மாணவர்களை தாக்கிய காங்கிரஸ் குண்டர்களை கைது செய்ய வேண்டும். மாணவர்களை தாக்குமாறு ஏவிவிட்ட காங்கிரஸ் தலைவர்களையும் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து…

    • 0 replies
    • 613 views
  19. புதுடெல்லி, மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் புதிய மந்திரிசபை கடந்த மாதம் 26–ந் தேதி பதவியேற்றது. புதிய மந்திரி சபையில் 3–ல் ஒருவர் சட்டம் பயின்றவர் (வக்கீல்கள்) என்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில் கேபினட் மந்திரிகளான சுஷ்மா சுவராஜ் (வெளியுறவு), அருண் ஜெட்லி (நிதி), வெங்கையா நாயுடு (ஊரக மேம்பாடு), நிதின் கட்காரி (நெடுஞ்சாலை, போக்குவரத்து), சதானந்த கவுடா (ரெயில்வே), ராம்விலாஸ் பஸ்வான் (நுகர்வோர் நலன்) உள்ளிட்ட 15 பேர் சட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளனர். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஹர்சவர்தன் மற்றும் பிரதமர் அலுவலக விவகாரம், பென்சன் துறைக்கான இணை மந்திரி ஜிதேந்திர சிங் ஆகியோர் மருத்துவப்படிப்பை நிறைவு செய்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங் …

    • 2 replies
    • 613 views
  20. “ஆம்... எங்கள் சொத்தை சசிகலாதான் அபகரித்தார்!” - கொந்தளிக்கும் கங்கை அமரன் "WHO IS THE BENAMI QUEEN OF TAMILNADU" என்ற பெயரில் ஆய்வுப்படத்தின் அடுத்த பகுதியை 'அறப்போர் இயக்கம்' வெளியிட்டுள்ளது. 43 நிறுவனங்களுக்கு சசிகலா மற்றும் அவருடைய உறவினர்கள் பினாமியாக இருப்பதாக ஏற்கெனவே வெளியிடப்பட்ட முதல் வீடியோவில் அமைப்பு சொல்லி இருந்தது. மேலும் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பில் இருந்தும், அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஆடிட்டர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலமும் கூடுதல் தகவல்களை சேர்த்து வீடியோவை வெளியிட்டனர். அறப்போர் இயக்கத்தின் இரண்டாவது பகுதி வீடியோ டிசம்பர் 26-ம் தேதி வெளியிடப்பட்டது. ச…

  21. திமுகவில் இருந்து மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டார் : கலைஞர் அதிரடி அறிவிப்பு. திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கிவைக்கப்பட்டிருந்த மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்படுகிறார் என்று அக்கட்சியின் தலைவர் கலைஞர் அதிரடியாக அறிவித்தார். ’’விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு உரிய பதில் அளிக்காததால் அழகிரியை திமுகவில் இருந்து அறவே நீக்கும் முடுவு எடுக்கப்பட்டுள்ளது. நானும், பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனும் கலந்து பேசி அழகிரியை நீக்குவது என்று முடிவு எடுத்தோம்’’என்று கூறினார் கலைஞர். திமுகவுக்கு எதிராக செயல்பட்ட அழகிரி ஆதரவாளர்கள் மீது கட்சி தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. இதை அழகிரி கடுமையாக சாடினார். இதனால், அவர் மீது கட்சி தலைமை ஒழுங்கு நடவடிக்கை…

  22. வீரப்பனின் வாழ்கை வரலாற்று படம் என்று எடுக்கப்பட்டுள்ள வில்லாதி வில்லன் திரைப்படத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, அப்படத்தின் இயக்குனார் ராம் கோபால் வர்மா, வீரப்பனின் உண்மையான வாழ்கை வரலாற்றை இந்தி மொழியில் படமாக எடுக்க தன்னிடம் உரிமைகேட்டு கையெழுத்து வங்கியதாகவும். ஆனால், அதில் தமிழ் மொழிக்கான உரிமமும் அவருக்கு அளிப்பதாக குறிப்பிட்டிருந்தது எனக்கு தெரியாது. அவர் என்னை ஏமாற்றி உரிமத்தை பெற்றுக் கொண்டார். மேலும், இந்தியில் கில்லிங் வீரப்பன் என்ற தலைப்பில் படம் வெளியானது, நான் படத்தை…

  23. சசிகலா-நடராஜனின்-கதை

  24. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கலைவாணி பன்னீர்செல்வம் பதவி, பிபிசி தமிழுக்காக 2 அக்டோபர் 2023 அன்று 1942 ஆகஸ் 26ஆம் தேதி. நள்ளிரவில் கோவையை அடுத்த சூலூரில் உள்ள தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார் சிறுமி கருப்பாத்தாள். திடீர் வெளிச்சமும், கூச்சல் சத்தமும் கேட்டு திடுக்கிட்டுக் கண்விழித்த கருப்பாத்தாள் என்ன நடக்கிறது என அறிய ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார். அப்போது, அவரது கருவிழிகளில் நெருப்புப் பிழம்பு கொளுந்துவிட்டு எரியும் காட்சி பிரதிபலித்தது. மிரண்டு போனார். அவரது வீட்டுக்கு அருகே உள்ள சூலூர் ராணுவ விமான நிலையம்தான் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அச்சத்தில் அம்மாவுக்க…

  25. தமிழீழ விடுதலைக்கான மருத்துவர் கூட்டமைப்பு சார்பில் தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த கோரி இன்று காலை வள்ளுவர் கோட்டத்தில் 9 மணி முதல் மாலை 5 மணிவரை அடையாள உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி உள்ளனர். இதில் 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர் பல தமிழ் ஆவலர்கள் மாணவர்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுத்தனர். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13717:doctor-tamileelam&catid=36:tamilnadu&Itemid=102

    • 1 reply
    • 613 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.