Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டில் பரவலாக மாடுகளுக்கு பெரியம்மை நோய் தாக்கம் ஏற்பட்டு வருகிறது. இதில் குறிப்பாகக் கன்றுகள் அதிகம் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவது விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாடுகளுக்கு பெரியம்மை நோய் பரவக் காரணம் என்ன? பெரியம்மை பாதித்த மாடுகளைப் பராமரிப்பது எப்படி? மத்திய அரசின் கால்நடை பராமரிப்புத்துறை கணக்கீட்டின்படி, தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான மாடுகள் இருக்கின்றன. கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் மாடுகளின் தோல் முழுவதிலும் கொப்புளம் கொப்புளமாக பெரியம்மை பாதிப்பு (LSD-Lumpy Skin Di…

  2. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் ஓரிரு நாட்களில் இறுதியாகும். எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தெரிவித்தார். புதன்கிழமை மதியம் 2.50 மணிக்கு தேமுதிக துணை செயலாளர் சுதீஷுடன், பியூஷ் கோயல் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுதீஷ், மத்திய அமைச்சர்பியூஷ் கோயல் நேற்று இரவு தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அதன் பேரில் இன்று அவரை நேரில் சந்தித்து பேசியதாகவும் கூறினார். …

  3. கருணாநிதியின் வழியிலேயே ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்தேன் – மு.க.ஸ்டாலின் கருணாநிதி கற்றுத்தந்த வழியிலேயே ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்தேன் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தஞ்சையில் தி.மு.க. வேட்பாளர்களை இன்று (புதன்கிழமை) அறிமுகம் செய்து வைத்து, அங்கு இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “எனக்கு எவ்வளவு பொறுப்புகள், பதவிகள் கிடைத்தாலும் கருணாநிதியின் மகன் என்பதற்கு எதுவுமே ஈடாகாது. கருணாநிதி கற்றுத்தந்த வழியில் நின்றே ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்தேன். தஞ்சை மண் என்பது கருணாநிதியின் மண். அதனால் தான் இங்கு வந்து நான் வா…

  4. சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு! May 04, 2024 10:35AM IST ஷேர் செய்ய : தேனியில் இன்று (மே 4) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர், சமீபத்தில் காவல் துறை அதிகாரிகள், குறிப்பாக பெண் காவலர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில் தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த அவரை இன்று அதிகாலை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கோவைக்கு வேனில் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். இந்த நிலையில் கோவை மாநகரக் காவல்துறை சவுக்கு சங்கர…

  5. 06 JUL, 2024 | 09:16 AM ராமேசுவரம்: இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு சென்ற 2 குழந்தைகள் மற்றும் அவரது தாய் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை மன்னார் மாவட்டம் தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த யோகவள்ளி (34) அவரது குழந்தைகள் அனுஜா (08) மிஷால் (05) ஆகிய மூவர் இலங்கையில் உள்ள தலைமன்னாரிலிருந்து பைபர் படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடற்பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை சென்றுள்ளனர் இறங்கி உள்ளனர். தகவலறிந்து அங்கு வந்த மெரைன் போலீஸார் தனுஷ்கோடி கடற்கரை பகுதியிலிருந்து விசாரணைக்காக மூன்று பேரையும் மண்டபம் மெரைன் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். விசாரணையில்இ யோகாவள்ளி விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோ…

  6. 21 வயதுக்கு குறைவானவர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க முடியாது – புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு வயது 21 ஆக இருக்க வேண்டும் என்றும் அதற்கு குறைவான வயதுடையவர்கள் மாடுபிடிக்க அனுமதி இல்லை என்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் அறிவித்துள்ளார். மேலும் பாலமேடு, அங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு உடல் பரிசோதனை நடத்தப்படவுள்ளதாகவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் அறிக்கையில், “அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்களுக்கு நாளை 10ஆம் திகதி அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியிலும், பாலமேடு போட்டியில் பங்கேற்க விரும்புபவர்களுக்கு நாளை மற…

  7. நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேருக்கு 'குட் சர்டிபிகேட்'! சென்னை: நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேருக்கும் வேலூர் சிறை நிர்வாகம் நன்னடத்தை சான்று வழங்கி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று நீண்ட நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி, பேரறிவாளன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட இருப்பதாகவும், முருகன் உள்ளிட்ட மீதமுள்ள 4 பேர் அகதிகள் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட இருப்பதாகவும் நேற்று தகவல் வெளியானது. மேலும், நளினி, பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞரான புகழேந்திக்கு இது தொடர்பாக சிறை நிர்வாகத்திடம் இருந்து, ''நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன் ஆகியோரின் விடுதலை தொடர்பான ஃபார்மாலிட்டி ( சம்பிரதாய) நடவடிக்கைகளுக…

  8. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையில் சரிவு 2019ஆம் ஆண்டைக் காட்டிலும் 2020இல் நடக்கும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 17 சதவீதம் சரிந்துள்ளது. இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து 1,17,502 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 17 சதவீதம் குறைவாகும். 2016ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழகத்திலிருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை தற்போதுதான் குறைந்துள்ளது. தேசிய அளவில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக ஆசிரியர்கள் கூறுகையில், பலமுறை தேர்வு எழுதும் மாணவர்களே அதிகளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதாலும்…

  9. அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு -------------------------------------------------------------------------- தமிழ்நாட்டில் வரும் 16ஆம் தேதி, திங்கட்கிழமை சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தலை ஒத்திவைத்து இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மே 16ஆம் தேதிக்குப் பதிலாக, மே 23ஆம் தேதி வாக்குப் பதிவு நடக்குமென தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் நடவடிக்கைகளின் துவக்க நாட்களிலிருந்தே, அரவக்குறிச்சி தொகுதியில் பெருமளவில் பணவிநியோகமும் பரிசுப்பொருட்களின் விநியோகமும் நடந்ததாக தேர்தல் ஆணையம் தேர்தல் ஆணையம் தனது செய்திக் குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் 22ஆம் த…

  10. பட மூலாதாரம், Chilukuri Paramathama படக்குறிப்பு, கடந்த ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலத்தில் மருத்துவர் ஒருவர் எழுதிய படிக்க முடியாத மருந்துச் சீட்டு வைரலானது. கட்டுரை தகவல் கீதா பாண்டே பிபிசி 6 மணி நேரங்களுக்கு முன்னர் பெரும்பாலானவர்கள் கீபோர்டை பயன்படுத்தி எழுதி வரும் தற்கால சூழலில், கையெழுத்து தெளிவாக இருப்பது முக்கியமா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், மருத்துவர் ஒருவர் எழுதுகிறார் என்றால், அவரது கையெழுத்து தெளிவாக இருப்பது அவசியம் என்று இந்திய நீதிமன்றங்கள் கூறுகின்றன. மருத்துவர்களின் மோசமான கையெழுத்தை, மருந்தாளர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் போன்ற நகைச்சுவைகள் உலகமெங்கும் பகிரப்படுகின்றன. ஆனால், பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம் சமீபத்தில் ஓர் உத்தரவு வெளியிட்ட…

  11. தூத்துக்குடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு தூத்துக்குடியில் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பதிவு: ஜூலை 02, 2020 15:36 PM தூத்துக்குடி, தூத்துக்குடி செக்காரக்குடி பகுதியில் இன்று கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். கழிவுகளை அகற்றிக்கொண்டிருந்தபோது தொட்டிக்குள் இருந்து விஷ வாயு வெளிப்பட்டது. இதனை சுவாசித்த தொழிலாளர்கள் 4 பேர் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்த…

  12. "அம்மா கொவிட் -19" வீட்டு பராமரிப்பு திட்டம், நாளை ஆரம்பித்து வைக்கப்படுகின்றது இந்தியாவில் முதல் முறையாக வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில், அம்மா கொவிட் – 19 வீட்டு பராமரிப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை(வெள்ளிக்கிழமை) ஆரம்பித்து வைக்கின்றார். இத்திட்டத்தின் கீழ் வீட்டுத்தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்க 20 பேர் கொண்ட மருத்துவ குழு சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருப்பவர்களுக்கு, பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவி, வெப்பமானி, வைட்டமின் மாத்திரைகள், 14 முககவசங்கள், கிருமிநாசினி அடங்கிய தொகுப்பு வழங்கப்படும். தமிழக அரசு சார்பில் தொடங்கப்பட்டும் இத்திட்…

  13. குஷ்பு விவகாரம்: திமுகவினர் 200 பேர் கைது நிலவழகன் | 18. 02. 2013, திங்கட்கிழமை, தமிழீழ நேரம் 21:16 நடிகை குஷ்பு விவகாரம் தொடர்பில் குறித்த பத்திரிக்கை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய திமுகவினர் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் இதன் தொடர்ச்சியாக திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் பக்கமே எட்டிப்பார்க்காமல் இருந்திருக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. நாள்தோறும் அறிவாலயம் வந்துவிடுவது கருணாநிதியின் வழக்கம். சென்னையில் இருந்தால் அவரது மகன் மு.க.ஸ்டாலினும் அறிவாலயம் வந்துவிடுவார். அண்மையில் குஷ்பு, ஸ்டாலினுக்கு எதிராக பேட்டி கொடுத்திருந்ததைத் தொடர்ந்து திருச்சியில் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது திருச்சியில் இருந்த கருணாநிதி, குஷ்பு மீது…

  14. தமிழீழம் கோரியும் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை கோரியும் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் பற்ற வைத்த போராட்டத் தீ தமிழகமெங்கும் கொழுந்துவிட்டு எரிகிறது. லயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டம் திட்டமிட்டு முடக்கப்பட்டாலும் தமிழகம் மற்றும் புதுவையில் சுமார் 92 மாணவர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 8 பேர் திருநெல்வேலி சட்டக் கல்லூரி மாணவர்கள் 13 பேர் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் உளவியல் தொடர்பியல் பொருளாதாரம் வரலாறு ஆகிய துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் நிர்மல்ராஜன் ராமன் முகமதுகான் சிவா வள்ளிகண்ணு பிரசாத் பிரபாகரன் செந்தமிழ்ராஜ் என்ற மதன்ராஜ் நவீன் முத்துக்குமார் மாரியப்பன் ஆகிய 1…

  15. ஐ.மு.கூட்டணியில் இருந்து திமுக விலகல்: மத்திய அமைச்சரவையில் இருந்தும் விலகல்: கலைஞர் அறிவிப்பு. மேலதிக செய்திகள் விரைவில்...... -நக்கீரன்-

  16. ஜெயலலிதா உயில் இருக்கிறதா, இல்லையா? மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான சொத்துக்கள் யாருக்குச் சொந்தம் என்று கேள்விகள் எழுப்பப்படும் நிலையில், அவர் உயில் எழுதியிருந்தால், சட்டப்படி அது நடைமுறைப்படுத்தப்படும் என்று அதிமுக செய்தித் தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்னையன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பிபிசி தமிழுக்கு பேட்டியளித்தபோது இத் தகவலை அவர் தெரிவித்தார். ஜெயலலிதா வாழ்ந்து வந்த போயஸ் கார்டன் இல்லம், கொடநாடு எஸ்டேட், ஹைதராபாத்தில் உள்ள தோட்டம் உள்ளிட்ட பல சொத்துக்கள் அவருக்குச் சொந்தமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. உயில் இருக்கிறதா? இந்த நிலையில், ஜெயலலிதாவின் சொத்துக்கள் ய…

  17. ராணிப்பேட்டை: எம்.எல்.ஏ குடும்பத்தில் மல்லுக்கட்டு - வாரிசு அரசியலால் தடுமாறும் தி.மு.க! லோகேஸ்வரன்.கோச.வெங்கடேசன் ஸ்டாலினுடன் காந்தி, வினோத் `காந்தியின் இரு மகன்களும் ராணிப்பேட்டை தி.மு.க-வில் அதிகாரம் செலுத்த ஆரம்பித்துவிட்டனர். வாரிசு அரசியலால் ஒதுங்கி நிற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது' என்கிறார்கள், தி.மு.க நிர்வாகிகள். ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க செயலாளரும் அத்தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வுமான ஆர்.காந்தியும், அவரின் மூத்த மகன் வினோத்தும் பதவிக்காக மல்லுக்கட்டுகிறார்கள். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், துரைமுருகனுக்கு அடுத்த நிலையில் பவர்ஃபுல்லானவர் காந்தி. தி.மு.க ஆட்சிக்கட்டிலில் இருந்த சமயத்தில், காந்திக்கு அமைச்சர்…

  18. ' தீபா வருகையால் என்ன நடக்கும்?' -உளவுத்துறை அறிக்கையைக் கேட்ட ஓ.பி.எஸ். எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் அரசியல் பிரவேசத்தை அறிவிக்க இருக்கிறார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. ' உளவுத்துறை அதிகாரிகள் மூலம் தீபாவின் செயல்பாடுகள் பற்றியும் அவரது வருகையால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா என்பதைப் பற்றியும் அறிக்கை கேட்டு வாங்கியிருக்கிறார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்" என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில். அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்ற பிறகு, அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியானது. ஆனால், கடந்த சில நாட்களாக தீபாவை முன்னிலைப்படுத்துகின்றன ஊடகங்கள். அ.தி.மு.கவில் உள்ள நிர்வாகிகள் சசிகலா பின்னால் அணிவகுத்தாலும், தொண்டர்களின் மனநிலை வேறு …

  19. ஆ. விஜயானந்த் பிபிசி தமிழுக்காக சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை முடித்துவிட்டு தமிழ்நாடு திரும்பிய சசிகலா, அடுத்தடுத்து மேற்கொள்ளவிருக்கும் திட்டங்கள் தயாராக இருப்பதாகவும், அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அந்த திட்டங்களில் ஒன்றுதான், தமிழகம் முழுவதும் சசிகலாவின் சுற்றுப்பயணம். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி வி.கே.சசிகலா விடுதலையானார். அதற்கு முன்னதாக கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படவே, பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு கடந்த ஜனவரி 31 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இருப்பினும், அவ…

  20. திமுக- காங்கிரஸ் ஒப்பந்தம்: தனி விமானத்தில் புறப்பட்ட ஸ்டாலின் மின்னம்பலம் திமுக காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே இன்று (மார்ச் 7) திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் , காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட உடன்பாடு கையெழுத்தானது. நேற்று இரவு ஸ்டாலின் வீட்டுக்குச் சென்று மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், கே.எஸ். அழகிரி ஆகியோர் ஸ்டாலினுடன் நடத்திய ஆலோசனையின்படியே இன்று காலை 10 மணிக்கு உடன்பாடு ஏற்பட்டது. காலை 9.50 மணியளவில் அறிவாலயம் வந்த காங்கிரஸ் கட்சியின் குழுவினரை கனிமொழி எம்பி வரவேற்று அழைத்துச் சென்றார். திமுக தலைவர் ஸ்டாலினும், காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ஆகியோரும் 25 இடங்களில் காங்…

  21. ரிசார்ட்டில் இருந்து மாயமான எம்.எல்.ஏ.க்கள்! வெலவெலத்த சசிகலா #VikatanExclusive #OPSvsSasikala ரிசார்ட்டில் தங்கி உள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் சசிகலா மற்றும் அவரது தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களை ரிசார்ட் முழுவதும் சசிகலாவின் ஆதரவாளர்கள் தேடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பூசலால் பொதுச் செயலாளர் சசிகலா, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருஅதிகார மையங்கள் உருவாகின. இதனால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இதன்பிறகு கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.க்கள், கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களிடம் சசிகலா, ஆலோசனையில் ஈடுபட்ட…

  22. ஸ்டெர்லைட் ஆலை திறப்பு : சிறப்பு அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு! தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஒக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது. இதில் மாவட்ட கண்காணிப்பாளர்கள், மாவட்ட சுற்று சூழல் பொறியாளர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள ஒக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஸ்டெர்லைட் ஆலை தற்காலிகமாக திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1213624

  23. விஸ்வரூபம் - விஜயபாஸ்கர் வளர்ந்த கதை ஜூ.வி லென்ஸ் ‘‘டேய், மனுஷனா பொறந்தா லட்சியம் இருக்கணும்.’’ ‘‘குனிஞ்சு தேங்காய் பொறுக்கிறதால லட்சியம் இல்லைனு நினைச்சுடாதீங்க. பின்னால தெரியுதுல அரண்மனை...’’ ‘‘அதுல வேலைக்குச் சேர்த்துவிடவா?’’ ‘‘இல்லீங்க, அந்த அரண்மனையை ஒரு நாள் எனக்கு சொந்தமாக்கிடணும்.’’ ‘‘அடேங்கப்பா!” ‘‘காலையில ஒருவர் தேங்காய் உடைச்சாரு. அதை பொறுக்கிறதுல எனக்கும் நாய்க்கும் சரியான போட்டி.’’ ‘‘நாய் ஜெயிச்சுடுச்சா?’’ ‘‘இல்லை... நான்தான் ஜெயிச்சேன். நாயைக் கொன்னுட்டேன்!’’ ‘‘அடப்பாவி... நாயை பலி போட்டிருக்கான்.’’ ‘‘நாம முன்னுக்கு வரணும்னா நாய் என்ன... மனுஷன் என்ன... ஏறி மிதிச்சுட்டுப் போயிட்டே இருக்கணும்.’’ -‘…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.