தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10262 topics in this forum
-
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரம் வாக்காளர்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறது. ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகள், அதிமுகவிற்கு முழுமையாகச் செல்லாமல், நாம் தமிழர் கட்சிக்கும் பிரிந்து செல்வதை திமுக கூட்டணிக்கு சாதகமாகவே பார்க்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் - அதிமுக வேட்பாளர்களுக்கு அடுத்ததாக, வாக்காளர்களின் கவனம் பெற்ற வேட்பாளராக மாறி இருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன். ஒவ்வொரு தேர்தலிலும், பிரதான கட்சிகள் சாதி அடிப்படையில் வேட்பாளர்களை நிர்ணயம் செய்யும் நடைமுறை நீண்ட நாட்களாக தொடர்ந்து வருகிறது. இந்த நடைமுறையை மேடைதோறும் சாடும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈரோடு கிழக்கில் பெரும்ப…
-
- 12 replies
- 1.2k views
- 2 followers
-
-
மேலூர்:மதுரை மாவட்டம் மேலூரில் 48 கி.மீ., நீளத்தில் கிரானைட் கற்களை அடுக்கி 'கிரானைட் கோட்டை' அமைத்தது ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் விசாரணையில் நேற்று அம்பலமானது. கிரானைட் முறைகேடு குறித்து ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் நேற்று மதுரை மாவட்டம் இடையபட்டியில் விசாரணை நடத்தினார். 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியசூரியனேந்தல் கண்மாயில் 2009 முதல் 2011 வரை மீன் பிடிக்க பி.கே.மூர்த்தி என்பவர் ரூ.30 ஆயிரத்துக்கு டெண்டர் எடுத்தார். மீன் குஞ்சுகள் விடப்பட்ட நிலையில், கண்மாயையொட்டி கிரானைட் குவாரி தனியாரால் துவக்கப்பட்டது. கண்மாயில் கிரானைட் கற்கள் வெட்டி எடுத்து கண்மாயை மூடிவிட்டனர். இடையபட்டி கல்லாங்குத்து கண்மாய் அருகே ஒருவர் இரண்டு ஏக்கர் பட்டா நிலத்தில் கிரானைட் கற்கள் அறுக்க 1995ல் அனுமத…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஆண் குழந்தைக்கு, ஜெயலலிதா என பெயர் சூட்டினார் செங்கோட்டையன் கோபிச்செட்டிப்பாளையம் அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த தமிழக அமைச்சர் செங்கோட்டையன், ஒரு ஆண் குழந்தைக்கு ஜெயலலிதா என பெயர் சூட்டி கூட்டத்தில் கலகலப்பு ஏற்படுத்தினார். லோக்சபா மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலையொட்டி, அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று புதன்கிழமை திருப்பூர் லோக்சபா தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கு ஆதரவாக, கோபிச்செட்டிப்பாளையம் அருகே அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைச்சர் செங்கோட்டையன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் – பிரியா எ…
-
- 1 reply
- 524 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மே 2024, 05:00 GMT புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர் சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி கிராமத்தில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில், வழிபாடு நடத்துவது தொடர்பாக பட்டியலின மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் இடையே நடந்த கலவரத்தில் கடைகளுக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்தியது. கலவரத்திற்கான உண்மை காரணம் என்ன? பிபிசி தமிழ் அங்கு கள ஆய்வு மேற்கொண்டபோது தெரிய வந்தது என்ன? கலவரத்தில் நடந்தது என்ன? சேலம் மாவட்டம் காடையம்பட்டி தாலுகா அருகே தீவட்டிப்பட்டி கிராமம் அம…
-
- 0 replies
- 473 views
- 1 follower
-
-
21 MAY, 2024 | 04:59 PM ஈழ விடுதலைக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்என நாம் தமிழர் கட்சியின் ஏற்பட்டாளர் சீமான் தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ஈழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு விரைவில் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி ஐக்கிய அமெரிக்கப் பேரவை உறுப்பினர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்மானத்தை அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது வரவேற்கத்தக்கது. காலங்காலமாக அநீதி மட்டுமே இழைக்கப்பட்டு கடைசி சொட்டு கண்ணீரும் கானல் நீரான இனத்திற்குஇ தூரத்தில் தெரியும் ஒரு சிறு வெளிச்சமும் புதிய நம்பிக்கையையும் மகிழ்வினையும் அளிக்…
-
- 0 replies
- 355 views
-
-
க.சே.ரமணி பிரபா தேவி கோப்புப்படங்கள் தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் வேலூர் தவிர்த்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தேனி தொகுதியில் மட்டும் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுகவில் இருந்து பிரிந்த டிடிவி தினகரனின் அமமுக, திராவிடக் கட்சிகளின் வாக்குகளைக் கணிசமாகப் பிரிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கணித்தனர். குறிப்பாக தினகரனின் வசீகரத் தலைமை, பணபலம் மற்றும் அதிமுக தலைமை மீதான அதிருப்தி ஆகியவற்றால், அமமுக கணிசமான எம்.பி. தொகுதிகளைக் கைப்பற்றும் என்று கூறப்பட்டது. அதே நேரத்தில் கடந்த தேர்த…
-
- 0 replies
- 812 views
-
-
அடுத்தகட்ட அகழாய்வு பணிக்கு அனுமதிக்க வேண்டும் – மத்திய அமைச்சரிடம் பாண்டியராஜன் கோரிக்கை தமிழகத்தில் அடுத்தகட்ட அகழாய்வு பணிக்கு அனுமதிக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் கே.பாண்டியராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். புதுடெல்லியில் உள்ள யுனெஸ்கோ அரங்கில் நடைபெற்று வரும் 3-வது பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கிவைத்தார். இதன்பின்னர், மத்திய கலாசாரத்துறை மந்திரி பிரகலாத்சிங் படேலை அவருடைய அலுவலகத்தில் நேரில் சந்தித்தார். அப்போது கீழடி அகழாய்வின் 4-ம் கட்ட அறிக்கையினை மத்திய அமைச்சரிடம், அமைச்சர் கே.பாண்டியராஜன் வழங்கினார். மேலும், கீழடியின் தமிழர் பெருமைகளை உலகிற்கு எடுத்துச்சொல்லும் வகை…
-
- 0 replies
- 389 views
-
-
ஸ்டாலின் தலையீடு… ஏலத்துக்கு வந்த சிவாஜி வீடு… பரபர பஞ்சாயத்து! 3 Mar 2025, 11:19 PM நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்ந்த வீடான, அவரது நினைவுச் சின்னமாக இருக்கும் சென்னை. தி.நகர் அன்னை இல்லத்தை ஜப்தி செய்திட நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது, சிவாஜி ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்தின் ஈசன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ‘ஜகஜால கில்லாடி’ படத் தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் ரூ. 3.74 கோடி கடன் பெற்றிருந்தார். கடன் திருப்பி செலுத்தவில்லை. இது வழக்கு விவகாரமானதையடுத்து, மத்தியஸ்தராக உயர் நீதிமன்ற நீதிபதி டி.ரவீந்திரன் நியமிக்கப்பட்டார். வட்டியுடன் சேர்த்து ரூ.9.39 கோடியை வசூலிக்கும் வகையில் ‘ஜகஜால கில்லாடி’ படத்தின் அ…
-
- 1 reply
- 461 views
-
-
திருவண்ணாமலை தீப திருவிழா - துணிப்பை, சணல் பை கொண்டு வந்தால் தங்கம் பரிசு.! திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான 10-ம் தேதி காலை 4 மணிக்கு பரணி தீபம் தரிசனம் மற்றும் அன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் தரிசனம் ஆகியவை நடைபெறவுள்ளது பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தீபத் திருவிழாவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருவண்ணாமலை தீப திருவிழாவுக்கு துணிப்பை மற்றும் சணல் பைகளை கொண்டு வரும் பக்தர்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்படும் எ…
-
- 1 reply
- 469 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப்படம் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் "இந்த தவறு எப்படி நடந்திருக்கும் எனக் கண்டறிய முடியவில்லை. ஆனால், எதையோ செய்து எங்கள் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டார்கள் என்று மட்டும் புரிகிறது. நான் இப்போது உயிருடன் இருப்பதே பெரிய விஷயம்..." எனக் கூறி கண்கலங்கினார் சிவநேசன். தேனி மாவட்டம் தேவாரத்தில் மளிகைக்கடை நடத்தி வரும் சிவநேசன், சைபர் குற்றங்களில் ஈடுபடும் கும்பலிடம் 24 லட்ச ரூபாயை இழந்திருக்கிறார். குழந்தைகளிடம் செல்போனை கொடுத்ததன் விளைவாக இந்த மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார், தேனி சைபர் குற்றப் பிரிவு ஆய்வாளர். மளிகைக் கடைக்காரரிடம் மோசடி நடந்தது எப்படி…
-
- 0 replies
- 279 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,Getty Images and UGC கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 7 செப்டெம்பர் 2025, 08:06 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் 'வீட்டு மின்சார கட்டணமாக 1.61 கோடி ரூபாய் செலுத்த வேண்டும்' என்று செப்டம்பர் 3-ஆம் தேதி வந்த குறுந்தகவலால் திருநெல்வேலியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் குடும்பமே அதிர்ச்சிக்குள்ளானது. 'மனித தவறு காரணமாகவே அதீத மின் கட்டணம் பதிவாகிவிட்டது. தற்போது பிரச்னை சரிசெய்யப்பட்டுவிட்டது' என, நெல்லை மாவட்ட மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். நெல்லை கூலித் தொழிலாளி வீட்டில் மின்சாரத்தை அளவிடுகையில் தவறு எவ்வாறு நடந்தது? இதுபோன்ற சிக்கல் வரும் போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்? உங்கள் வீட்டுக்கு வரும் மின்சார கட்டணம் அசாதாரணமா…
-
- 0 replies
- 226 views
- 1 follower
-
-
ஊரடங்கு உத்தரவு மீறல்: ஒரே நாளில் ஒரு கோடியே 20 லட்சம் அளவுக்கு அபராதம் வியாழக்கிழமை வரை தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய காரணத்திற்காக 2 லட்சத்து 85 ஆயிரத்து 150 பேர் கைதாகி, விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக 2 லட்சத்து 68 ஆயிரத்து 537 வழக்குகள் இதுவரை பதிவாகியுள்ளன. மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறி வலம்வந்த 2 லட்சத்து 39 ஆயிரத்து 770 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவை மீறியது தொடர்பாக இதுவரை ரூ.2 கோடியே 68 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. நேற்றுவரை ரூ.1 கோடியே 46 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், ஒரே நாளில் ஒரு கோடியே 20 லட்ச ரூபாய் அளவுக்கு கூடுதலாக அபராதம் விதிக்க…
-
- 0 replies
- 799 views
-
-
தமிழீழத்துக்கு பொது வாக்கெடுப்பு: தமிழக அரசியல் கட்சிகள் கூட்டறிக்கை 24 December 2025 இனப்படுகொலைக்கான நீதிவிசாரணையை நடத்தி தமிழீழத்துக்கு ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ எனப்படும் வை.கோபால்சாமி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி பேராசிரியர் ஜவாஹிருல்லா, திராவிட தமிழர் பேரவையின் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிட கழகத்தின் கோவை இராமகிருஷ்ணன், மே-17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்த…
-
- 4 replies
- 545 views
- 1 follower
-
-
பற்றி எரியும் கர்நாடகா...! பதற்றத்தில் தமிழர்கள் "உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. இது சட்டத்தின் வழிப்பட்ட தீர்ப்பல்ல. காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளின் அடிப்படையில் தீர்ப்பு சொல்லாமல், குத்துமதிப்பாக, பஞ்சாயத்து செய்வது போல் இத்தீர்ப்பை உச்சநீதி மன்றம் வழங்கியுள்ளது. கர்நாடகாவின் நீலிக்கண்ணீரை கண்டு மனம் உருகி, தமிழ்நாட்டிற்கு தினமும் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் தந்தால் போதும் என்ற ரீதியில் உச்சநீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாத தீர்ப்பு," என தமிழக விவசாயிகள் கவலைப்பட்டுக்கொண்டிருக்க... அந்த தண்ணீரை கூட திறந்து விடக்கூடாது என அடம்பிடிக்கிறது கர…
-
- 49 replies
- 4.9k views
-
-
முதல்வர் உடல்நிலை... சி.பி.ஐ விசாரணை தேவை! -சசிகலா புஷ்பா 'திடீர்' சர்ச்சை தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அதிரடியாக பேசி இருக்கிறார் சசிகலா புஷ்பா. ' முதல்வரின் உடல்நிலை குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்' என சர்ச்சை கிளப்பியிருக்கிறார். டெல்லியில் இன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய சசிகலா புஷ்பா எம்.பி, " முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து, நான் பேசிய பிறகே அப்போலோ மருத்துவனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிடுகிறது. குறிப்பாக, 'ஹேபியஸ் கார்பஸ் பெட்டிஷன் போடுவேன்' என பேட்டி கொடுத்த பிறகுதான் அறிக்கை வெளிவருகிறது. என்னைப் போல, சசிகலா நடராஜனால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் மீது பாய்வதற்கு தயாராக இருக்கிறார்கள். கட்சியின் சீனி…
-
- 0 replies
- 361 views
-
-
லண்டன் டாக்டர் ரிச்சர்ட் புறப்பட்டார்: முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை தமிழக முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம் முதல்வருக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்த ஆலோசனைகளை வழங்கிவிட்டு டாக்டர் ரிச்சர்ட் பீலே நேற்று லண்டன் புறப்பட்டுச் சென்றார். முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் கடந்த மாதம் 22-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு மாதத்துக்கும் மேலாக அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சை நிபுணர் ஜி.கிலானி, மயக்க மருத்துவ நிபுணர் அஞ்சன் த்ரிக்கா, இதய சிகிச்சை நிபுணர் நிதிஷ் நாயக் ஆகியோர் அப்போலோ ம…
-
- 0 replies
- 550 views
-
-
கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் தமிழ்நாட்டில் அனைவருக்கும் அந்த மருந்து இலவசமாக வழங்கப்படும் என்று மாநில முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் அரசு நலத்திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அதிக விளைச்சல் காரணமாக இந்த ஆண்டு அனைத்து நெல் மூட்டைகளையும் அரசால் கொள்முதல் செய்ய முடியவில்லை என்று கூறினார். 2019ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 211 தொழில்களுக்கு ரூ. 303 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும் அவற்றில் ரூ. 184 கோடி மதிப்பிலான திட்டங்கள், ரூ. 197 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். …
-
- 0 replies
- 496 views
-
-
பெங்களூரு அத்தியாயங்களுக்குப் பிறகே ஜெயலலிதா உடல்நிலை பாதிப்பு தீவிரமானது! சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட பின்னரே தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமானதாக கூறப்படுகிறது. தமிழகத்தை பொறுத்த வரை முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கடந்த 2014-ம் ஆண்டு வரை அச்சுறுத்தும் அளவுக்கு செய்திகள் வெளியானது இல்லை. வருமானத்துக்கு மீறிய சொத்து சேர்த்த வழக்கில் இரண்டாவது முறையாக தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. அதுபோல், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் தண்டனை விதிக்க…
-
- 0 replies
- 501 views
-
-
ஜெயலலிதாவுக்கு வழங்கிய சிகிச்சை விவரங்களை வெளியிடுமாறு மத்திய அரசு, தமிழக அரசுக்கு நெருக்கடி தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை விவரங்களை வெளியிட வேண்டும் என மத்திய அரசு, தமிழக அரசுக்கு நெருக்கடியளிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், 75 நாட்கள் கழித்து, டிசம்பர் 5ம் தேதி, இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. குறித்த கால கட்டத்தில் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை வழங்கும் போது எடுத்த புகைப்படம், ஒலி, ஒளிப்பதிவுகள் என எதுவுமே வெளியிடப்படாத நிலையில் இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. …
-
- 1 reply
- 698 views
-
-
சந்தேகத்தைத் தீர்ப்பீர்களா சசிகலா?' கேள்வி எழுப்பும் அப்துல் கலாமின் உதவியாளர் அதிமுகவின் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் சசிகலாவை வாழ்த்தியும் தனக்கு இருக்கும் சில சந்தேகங்கள் பற்றியும் அப்துல் கலாம் லட்சிய இந்தியா கட்சியின் நிறுவனரான பொன்ராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், முதற்கண், தனது 33 ஆண்டு கனவை நனவாக்கி, அஇஅதிமுக பொதுசெயலாளாராக பொறுப்பு ஏற்றிருக்கும் திருமதி V.K. சசிகலா அவர்களுக்கு வாழ்த்துக்கள். இன்றைய அதிமுகவில் உங்களை விட்டால் வேறு எவரும் சிந்தாமல், சிதறாமல் கட்டிக்காத்து ஒற்றுமையாக வழி நடத்தக்கூடிய தலைவர்களை செல்வி ஜெயலலிதா அவர்கள் உருவாக்கவில்லை என்பது கண்கூடாக நீரூப…
-
- 0 replies
- 301 views
-
-
30th May 2013 இரு மாநில விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், தமிழகமும் கர்நாடகமும் காவிரி நீரை சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சருமான எச்.டி.குமாரசாமி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு கூறியுள்ளார். காவிரி நீர் பிரச்னையால் இரு மாநில விவசாயிகளும் பாதிக்கப்படக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில், பண பலம் காரணமாகவே, காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதாகவும் குமாரசாமி குற்றம் சாட்டினார். புதிய அரசின் செயல்பாடுகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், ஆறு மாதங்…
-
- 2 replies
- 560 views
-
-
முதல்வரை துரோகியாக்கிய துணை சபாநாயகர் ''பன்னீர்செல்வம் ஒரு துரோகி; கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவரைப் பற்றி, இனி பேசி பயனில்லை,'' என, கூறியிருப்பதன் மூலம், அனைத்து, எம்.பி.,க்களும் முகாம் மாறினாலும், தம்பிதுரை மட்டும் மாறமாட்டார் என, தெரிய வந்துள்ளது. சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என, தீவிரமாகவும், வெளிப்படையாகவும் கூறி வந்தவர், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை. முதல்வர் பன்னீர்செல்வத்துடன் பிரச்னை ஏற்பட்ட பின், தனக்கு முக்கிய பதவி கிடைக்குமென, தம்பிதுரை நம்பினார். ஆனால், கட்சி நிர்வாகிகளை சசிகலா மாற்றியமைத்த போதும், தம்பிதுரையை கண்டு கொள்ளவில்லை. பொருளாளர், அவைத் தலைவர் என, முக்கிய பதவிகளில…
-
- 0 replies
- 649 views
-
-
தோல்வி பயத்தில் மம்தா – மோடி குற்றச்சாட்டு! ந்தியா மேற்கு வங்கத்தில் தோல்வி பயத்தில் இருக்கும் முதல்வா் மம்தா பானா்ஜி, வாக்குப்பதிவு இயந்திரம் மீது சந்தேகம் எழுப்பத் தொடங்கியுள்ளாா் என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றம்சாட்டினாா். மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, பாங்குரா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பிரதமா் மோடி கலந்துகொண்டு பேசியதாவது: சுவா் ஓவியங்களுக்கும் அரசியல் விளம்பரங்களுக்கும் பெயா் பெற்ற மாநிலம் இது. ஆனால், இங்கு என்னை பந்தாடுவது போன்ற சுவா் ஓவியங்களை திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் சுவா்களில் வரைந்திருக்கிறாா்கள். இதன்மூலம், இந்த மாநிலத்தின் பாரம்பரியத்தை அவா்கள் அவமதித்திருக்கிறாா்க…
-
- 0 replies
- 491 views
-
-
அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் சுப்பிரமணியன் மர்ம மரணம்! அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரும், நாமக்கல் ஒப்பந்தக்காரருமான சுப்பிரமணியன் இன்று அவரது தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஏப்ரல் 7-ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர். மேலும், அ.தி.மு.கவை சேர்ந்த சிட்லபாக்கம் ராஜேந்திரன் மற்றும் சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதிகளிலும் சோதனை நடைபெற்றது. சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், நாமக்கல்லில் அரசு மருத்துவக்கல்லூ…
-
- 1 reply
- 701 views
-
-
சென்னை: தனியார் தொலைக்காட்சி ஒன்றில் மெட்ரிக் பள்ளிகள் சங்கத் தலைவர் இந்தி வெறியை புகுத்தும் அளவு பேசியுள்ளதற்கு தமிழ் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்து பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் நம்மிடம் கூறியதாவது, தமிழகத்தில் 4000 பள்ளிகளை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் மெட்ரிக் பள்ளிகள் சங்கத் தலைவர் நந்தகுமார் தமிழக மக்களை பிளவு படுத்தும்படி கருத்துக்களை கூறியுள்ளார். சன் செய்திகள் தொலைக்காட்சியில் 17/09/13 அன்று நடந்த விவாத நிகழ்ச்சியில் மும்மொழி பாடத் திட்டம் தமிழகத்தில் தேவையா என்ற கேள்விக்கு அவர் ஒரு இந்தி வெறியர் போலவே பதில் அளித்துள்ளார். அவரின் இந்தி வெறிப் பேச்சுக்கு தமிழர் பண்பாட்டு நடுவத்தின் செயலாளர் இராஜ்கு…
-
- 1 reply
- 432 views
-