Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கிரிமினல் ஒருவர் கட்சிக்கு தலைவராகக் கூடாது; சசிகலாவுக்கு அடுத்த அடிக்கு ஏற்பாடு கிரிமினல் வழக்கில் தண்டனைப் பெற்றவர்கள், வாழ்நாள் முழுவதும், தேர்தலில் போட்டியிட முடியாது என்றும், அவர் சாகும் வரை வாக்காளராக இருக்கவே தகுதி அற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டு, உச்ச நீதிமன்றத்தில்,டில்லி, பா.ஜ., நிர்வாகியும், வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா சார்பில் பொது நல வழக்கு தாக்கல் செய்யபப்பட்டுள்ளது. அந்த வழக்கு, இந்திய அரசியல்வாதிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், அந்த வழக்கில், தன்னையும் ஒரு தரப்பாக இணைத்துக் கொண்டு, என்னுடைய தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என, தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.,யான பழனிச்சாமி, உச்ச நீதிமன்றத்தில் மனு …

  2. சென்னை: திருத்தணி தேமுதிக எம்.எல்.ஏ அருண் சுப்ரமணியத்தின் மகளை காதலித்து மணந்த தனது மகனை கடந்த 2 நாட்களாக காணவில்லை என்று போலீசில் புகார் தெரிவித்துள்ளார் சென்னையைத் சேர்ந்த ஒரு பெண். சென்னை வடபழனியில் வசித்து வரும் ராஜகுமாரி என்பவர் வடபழனி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:- திருத்தணி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. அருண்சுப்பிரமணியன் மகளை காதலித்து திருமணம் செய்த எனது மகன் ரமேசுக்கு, அருண் சுப்பிரமணியன் குடும்பத்தினரிடம் இருந்து மிரட்டல் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் எனது மகன் ரமேசை 2 நாட்களாக காணவில்லை. அவரை கண்டுபிடித்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த புகார் மனுவில் ரமேசின் தாயார் ராஜகுமாரி கூறியுள்ளார். அருண் சுப்பிரமணியனின் …

  3. நேற்று சனிக்கிழமை மாலை 20 க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் சென்னையில் ஒன்று கூடி பாராளுமன்ற தேர்தலில் தமிழர்கள் எவ்வாறு போட்டியிடுவது என்று விவாதித்தனர். திராவிடக் கட்சிகள், இந்திய தேசியக் கட்சிகளுக்கு மாற்றாக தமிழ்த் தேசிய கூட்டணி ஒன்றை உருவாக்கி தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த கூட்டணியில் தற்போது பெரிய கட்சிகள் இணையவில்லை என்றாலும் தமிழ் உணர்வாளர்கள் ஒன்று கூடி தங்கள் பலத்தை நாற்பது தொகுதிகளிலும் காட்டவுள்ளனர் என்பது மற்றும் உறுதி செய்யப்பட்டது. தமிழர் நாடு தமிழர் வசம் வருவதற்கு நூறாண்டு திட்டம் வகுக்கப்பட்டு அதில் முதல் கட்டமாக இந்த முன்னெடுப்பு நடக்க உள்ளது. தமிழர் அரசியல் 70 ஆண்டு காலம் பின்தங்கியுள்ள நிலையில் இனியாவது துணிந்து இன நலம் சார்ந…

  4. அரியலூர்: வன்னியர் சமூகத்தை சேர்ந்த பெண்ணும், தலித் வாலிபரின் காதல் விவகாரத்தால் வீடு தீவைக்கப்பட்டுள்ளது இரு சமூகத்தினர் இடையே மோதல் போக்காக மாற தொடங்கியுள்ளது. தர்மபுரி சம்பவம் போலவே மீண்டும் அரியலூர் மாவட்டத்திலும் தலை எடுக்க தொடங்கியுள்ளது காவல்துறையினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பிலாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ரத்தினம் என்பவரின் மகன் பாலமுருகன். இவர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். சோழன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் மகள் தமிழரசி. இவர் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர். பாலமுருகனும், தமிழரசியும் அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வருகின்றனர். இந்நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர…

  5. அச்சுப்பிரதி சென்னையிலும் சிவப்பு விளக்கு பகுதி வேண்டும் எனக் கோரிக்கை சென்னையிலுள்ள பாலியல் தொழிலாளர்கள் தமது தொழிலை நடத்த தனியான பகுதி ஒன்றை அரசாங்கம் ஒதுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். சுமார் 2,300 பாலியல் தொழிலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட பாலியல் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் கலைவாணி தமது கோரிக்கையை வலியுறுத்தி பிபிசிக்கு அளித்த பேட்டியில் இந்த கோரிக்கைக்கான நியாயங்களை விளக்கினார். இந்த கோரிக்கையை முன்வைத்து தமிழக முதல்வருக்கும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கும் ஏற்கனவே மனுக்களை அனுப்பியுள்ளதாக அவர் கூறினார். பாலியல் தொழிலாளர்கள் தொழில் நடத்தவென தனியாக சிகப்பு விளக்குப் பகுதி ஒன்றை ஏற்படுத்தாமல் இருக்கும் ஒரே இந்தியப் பெருநகரம் சென்னைதான். மும…

    • 2 replies
    • 4.9k views
  6. புதுடெல்லி: திமுக தலைவர் கருணாநிதிக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என அக்கட்சியின் எம்.பி. தாமரை செல்வன் மக்களவையில் கோரிக்கை விடுத்தார். மக்களவையில் இன்று திமுக எம்.பி.யான ஆர்.தாமரை செல்வன், இது தொடர்பாக விடுத்த கோரிக்கையில்,"கருணாநிதிக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என்பது உலகம் முழுவதும் இருக்கும் பத்து கோடி தமிழர்களின் கோரிக்கை. கருணாநிதி தம் 14 வயதில் பொதுமக்களுக்கு தொண்டு செய்ய அரசியலுக்கு வந்தவர். திராவிட இயக்கத்தின் சாம்பியனான இவர், கீழ்மட்டத்தில் இருந்து அனைத்து தரப்பிலான மக்களுக்காக சேவை செய்தவர். 1957 முதல் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் இடையில் ஒருமுறை கூட தோல்வி கண்டதில்லை. தீவிர அரசியலுடன் தமிழ் இலக்கியத்திற்காகவும் முக்கியத்துவம் அளித்தவர்…

  7. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அண்ணாமலையா? புறக்கணிக்கும் பிரமுகர்கள்! மின்னம்பலம்2022-05-10 2009 மே 17 18 தேதிகள் உலக மனித உரிமை வரலாற்றில் ரத்தத்தால் நனைக்கப்பட்ட பக்கங்கள். விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டுப் போரில் இலங்கை ராணுவம் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ராணுவ உதவிகளோடு விடுதலைப் புலிகளை அழித்து, தமிழ் மக்களையும் பெருமளவில் கொன்று குவித்த நாள். இதை ஒட்டி ஒவ்வொரு வருடமும் மே மாதம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம் தமிழ் உணர்வாளர்களால் நடத்தப்படும். அந்தவகையில் இந்த வருடம் தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பாக வரும் மே 14 ஆம் தேதி சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில் 'முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை' நினைவேந்தல…

  8. கருணாநிதி மனைவி தயாளு அம்மாள் திடீர் சுகவீனம்.. மருத்துவமனையில் அனுமதி. சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு நேற்று மாலையில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். நேற்று மாலையில் தயாளு அம்மாளுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்ரனர். அவரது உடல் நல பாதிப்பு குறித்த விவரம் தெரியவில்லை. அவருக்கு டாக்டர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது. -தற்ஸ் தமிழ்-

  9. ராமேஸ்வரம் – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து: அமைச்சர் எ.வ.வேலு Jul 16, 2022 06:17AM ராமேஸ்வரம் – இலங்கை தலைமன்னார் இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, “ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பாலம் பகுதியில் 10 மீட்டர் அளவுக்கு கடல் பகுதியை தூர்வாரி ஆழப்படுத்தினால் சிறிய, வர்த்தக கப்பல்கள் கடந்து செல்ல வசதியாக இருக்கும். இதுதொடர்பாக மத்திய அரசிடம் சாகர்மாலா திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்கி தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளதால் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. ராமேஸ்வரம் கோதண்டராமர் …

  10. மதுரை: மதுரை அருகே டாஸ்மாக்கில் விற்ற மதுவை குடித்து இரண்டு பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை அடுத்துள்ள காரியாப்பட்டி பேரூராட்சியில் வேலை பார்த்து வந்தவர்கள் மலைச்சாமி மற்றும் குருசாமி. இவர்கள் இருவரும் இன்று (23ஆம் தேதி) அங்குள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் 'குவார்ட்டர்' ஒன்று வாங்கியிருக்கிறார்கள். பின்னர் அருகில் இருந்து ஓய்வுக் கூடத்திற்கு சென்று ஆளுக்கு பாதியாக குடித்து இருக்கிறார்கள். இந்நிலையில், பாதி குவார்ட்டரை குடித்து முடிப்பதற்குள் குருசாமி சம்பவ இடத்திலேயே தொண்டையை பிடித்துக் கொண்டு இறந்து விட்டார். இதையடுத்து, உயிருக்கு போராடிய மலைச்சாமியை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, வழியிலேயே அவரு…

  11. `நடராசன் மருத்துவமனையில் அனுமதி' - பரோலில் வருகிறார் சசிகலா! சசிகலாவின் கணவர் ம.நடராசனுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சசிகலாவின் கணவர் நடராசன் கல்லீரல் மற்றும் சீறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு சமீபத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அறுவைசிகிச்சை செய்யப்பட்ட பின்பு, அவரை பார்ப்பதற்காகச் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா 5 நாள்கள் பரோலில் வந்தார். தொடர்ந்து, வீட்டில் இருந்தவாறு அவருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் அவர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாள்களாக நடராசனு…

  12. மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் புது வியூகம்... மூன்றாவது அணியா? ‘‘செம வெயிட்டு’’ எனக் ‘காலா’ பாடலை உற்சாகமாகப் பாடிக்கொண்டு உள்ளே நுழைந்தார் கழுகார். ‘‘வெயிட்டான தகவல்களுடன் வந்திருக்கிறீர் போல... அந்தத் தகவல்களைக் கொட்டும்’’ என்றோம். ‘‘முதலில் டெல்லியிலிருந்து ஆரம்பிக்கிறேன். மே 1-ம் தேதி டெல்லி சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைத் திடீரென சந்தித்தார். கொஞ்ச நாள்களாக தேசியச் செய்திகளில் முக்கிய இடம் பிடித்துள்ள மூன்றாவது அணி குறித்த குழப்பங்களை இந்தச் சந்திப்பு மேலும் அதிகமாக்கிவிட்டது.’’ ‘‘என்ன புதுக்குழப்பம்?’’ ‘‘திருமாவளவன் - ராகுல் காந்தி சந்திப்புக்கு இரண்டு நாள்கள் முன்னதாகத…

  13. புதுடெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, தமிழக சிறைக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஜாமீன் கேட்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே, பெங்களூரு சிறையில் இருந்து ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இந்த மனு திடீரென வா…

  14. பிரபல ரவுடி ஆனந்தன், போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொலை.. சென்னையில் பரபரப்பு.சென்னையில் போலீசார் நடத்திய என்கவுண்டரில், ரவுடி ஆனந்தன் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (22). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி என 12 வழக்குகள் நிலுவையில் இருந்தன. நேற்று, ராயப்பேட்டை பகுதியில் கூட்டாளிகளுடன் பெண்களை கேலி செய்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் சிலர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது, காவலர் ராஜவேலுவை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டார் ஆனந்தன். இதில் ராஜவேலுக்கு உடலின் பல இடங்களில் வெட்டு காயங்கள் ஏற்பட்டன. ஆனால் சக கூட்டாளிகள் அரவிந்தன், வேல்முருகன், மகேஷ் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்…

  15. விருத்தாசலம், விருத்தாசலம் அருகே, சென்னையைச் சேர்ந்த வங்கி காவலாளி துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடல் பாகங்கள் 3 சூட்கேஸ் பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டு கிடந்தது. சூட்கேஸ் பெட்டிகள் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ளது பாசிக்குளம் கிராமம். இந்த கிராமத்தில் வெள்ளை பாறை என்றழைக்கப்படும் ஒரு ஓடை உள்ளது. இங¢கு நேற்று மதியம் வழக்கம் போல் அக்கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள பாறையின் மீது செல்போன் ஒன்று கிடந்ததை பார்த்தனர். அந்த செல்போனை அவர்கள் ஆவலுடன் எடுக்க சென்ற போது, அங்கு 3 சூட்கேஸ் பெட்டிகள் கேட்பாரற்று கிடந்தன. அவற்றின் அருகில் சென்று பார்த்த அவர்களுக்கு அந்த சூட்கேசுகளில் ஏதேனும் வெடிக…

  16. சென்னை விமான நிலையத்தில் மேற்கூரை மற்றும் கண்ணாடி விழுந்து நொறுங்குவது என்பது ஒரு வழக்கமான நிகழ்வாக மாறிவிட்டது. கண்ணாடி விழுந்து நொறுங்குவதில் சதம் அடிக்க சென்னை விமான நிலையம் காத்திருக்கும் நிலையில் தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிலையத்திலும் இதே அவலம் ஏற்பட்டுள்ளது. சென்னை ஷெனாய்நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூரையில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ் ஒன்று பயணி மீது விழுந்ததில் கைக்குழந்தையுடன் வந்த பெண் ஒருவர் காயம் அடைந்தார். காயமடைந்த பெண் பயணி உடனடியாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல்முறையாக மெட்ரோ ரயில் நிலையத்தில் இதுமாதிரியான விபத்து நடந்துள்ளது. இதனால் சென்னை விமானம் நிலையம் போல் தொடர்கதை ஆகாமல் உடனடியாக இதுமாதிரி இன்ன…

  17. தினகரன்: சென்னையில் 80 பெண்களை வன்புணர்வு செய்ததாகஐ.டி இளைஞர் கைது சென்னையில் இரவு நேரத்தில் திருப்புளி மூலம் வீடுகளின் கதவைத் திறந்து பெண்களை பாலியல் வல்லுறவு செய்து அதைப் காணொளியாக பதிவு செய்து மிரட்டி நகைகளை கொள்ளையடித்த இளைஞரை காவல்துறை கைது செய்துள்ளது என்று தினகரன் செய்தி வெளியிட்டுள்ளது. விசாரணையில் 80 பெண்களை பாலியல் வல்லுறவு செய்ததை அவர் ஒப்புக்கொண்டார் என்கிறது இந்த செய்தி. அம்பத்தூர் உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் வீடு புகுந்து பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவதாகவும் நகைகள் திருடப்படுவதாகவும் காவல்துறைக்கு தொடர்ந்து தகவல்கள் வந்தன. ஆனால…

  18. பயணியர் விமானமா..? மாட்டு வண்டியா..? தூத்துக்குடி விமான நிலையத்தில் பயணிகளின் திக்.. திக்.. அனுபவம்..! பழுதான தனியார் விமானத்தை பயணிகளுடன் ஓட்ட முயன்று ரன்வேயில் குதி குதியென குதிக்க விட்டு மாட்டு வண்டி போல் ஓட்டி பயணிகளை அலறச் செய்த பகீர் சம்பவம் தூத்துக்குடியில் அரங்கேறியுள்ளது. கடந்த புதன்கிழமை மாலை 4.50 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு 70 பயணிகளுடன் புறப்படத் தயாரானது. அப்போது விமானத்தில் ஏதோ கோளாறு. கம்ப்யூட்டரில் சிறு கோளாறு தான் என்று கூறி விமானத்தை ரன்வேயில் ஓட்டியபோது மாட்டு வண்டி போல் குதித்து, குதித்து ஓடி பாதி ரன்வேயில் நின்று விட்டது. இதனால் பயணிகள் அச்சத்தில் அலறியுள்ளனர். தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று விமானத்தை மீண்டும் …

  19. 26 பிப்ரவரி 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திமுக,வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளர் உட்பட கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு வரை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஜாபர் சாதிக் நீக்கப்பட்டார். சமீபத்தில் டெல்லியில் போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள், தமிழகத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளரின் தலைமையில் இயங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக, மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு அவர் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். இதனால், சென்னையில் உள்ள அவரது வீ…

  20. கடலில் 28 கிலோ மீற்றர் தூரத்தை 10மணி நேரத்தில் நீந்தி சிறுவன் சாதனை March 29, 2019 தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே கடலில் 28 கிலோ மீற்றர் தூரத்தை 10 மணி நேரத்தில் நீந்தி கடந்து சிறுவன் ஒருவர் புதிய சாதனை படைத்துள்ளார். தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்த 4ம் வகுப்பில் கல்வி கற்று வரும் 10 வயதான ஜெய் ஜஸ்வந்த் என்பவரே இவ்வாறு சாதனை புரிந்துள்ளார் இலங்கை தலைமன்னாரில் இருந்து ராமேசுவரம் தனுஷ்கோடி வரை 28 கிலோ மீற்றர் தூரத்தை கடலில் நீச்சல் அடித்து கடக்கும் சாதனையை இவர் நிகழ்த்தி உள்ளார். ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை சிறுவன் ஜெய் ஜஸ்வந்த், பயிற்சியாளர் உள்பட 14 பேர் கொண்ட குழுவினர் ஒரு மீன்பிடி விசைப்படகு மூலமாக தல…

  21. பிளாஸ்டிக்கிற்கு பதிலாக டாஸ்மாக்கை ஒழித்திருக்கலாம்" - பூ விற்கும் பெண்ணின் கோபம் அபர்ணா ராமமூர்த்திபிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைARUN SANKAR K "500 ரூபாய் தாள்கள் எல்லாம் இனி செல்லாது என்று அறிவித்த பிறகு, எங்கள் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள். அப்போது உணவுக்கு கூட வழியில்லாமல் …

  22. ஹைட்ரோ கார்பன் கிணறு அமைப்பதற்கான ஆய்வு செய்ய அனுமதி – தலைவர்கள் கண்டனம் April 23, 2019 ஹைட்ரோ கார்பன் கிணறு அமைப்பதற்கான ஆய்வு செய்ய அனுமதியளித்ததற்குத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்கும் திட்டத்தின் ஒருகட்டமாக இதுவரை நான்கு ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் இரு திட்டங்களுக்கான உரிமம் வேதாந்தா நிறுவனத்துக்கும், ஒரு திட்டத்துக்கான உரிமம் ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட உரிமத்தின்படி மொத்தம் 67 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்படவுள்ளன. அவற்றில் 27 இடங்களில் ஆய்வு நடத்துவதற்கான அனுமதி கடந்த 14ஆம் திகதி அளிக்கப்பட்ட…

  23. பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு இழப்பீடு வழங்க தமிழ்நாடு தௌஹீத் ஜமா அத் கோரிக்கை! May 17, 2019 இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து முஸ்லிம் மக்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர்கள் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளைச் சந்தித்து இலங்கையில் நிகழ்ந்த அனர்த்தம் குறித்து, தமது கவலையை வெளிப்படுத்தியதுடன், அத்தாக்குதல்களுக்கு பின்னர் முஸ்லிம் சமூகத்தை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும…

    • 3 replies
    • 1k views
  24. சற்றும் மனம் தளராத டாக்டர் கிருஷ்ணசாமி: தென்காசியில் 6-வது முறையாக தோல்வி Published : 24 May 2019 17:55 IST Updated : 24 May 2019 17:55 IST மு.அப்துல் முத்தலீஃப் சென்னை கோப்புப் படம் தன் முயற்சியில் சற்றும் மன தளராதவராக தொடர் தோல்விக்குப் பின்னரும் 6-வது முறையாக தென்காசி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியுள்ளார் டாக்டர் கிருஷ்ணசாமி. புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி திமுக அதிமுகவுடன் மாறி மாறி கூட்டணி வைத்து எம்.எல்.ஏவாக இருந்தவர். ஆரம்பத்தில் திமுகவில் இருந்த அவர், பின்னர் பிரிந்து தனிக்கட்சி தொடங்கி 1996-ல் மிகப்பெரிய அதிமுக எதிர்ப்பலையி…

  25. முடிஞ்சா ரஜினிகிட்ட மோதிப்பாருங்க... ஸ்டாலினுக்கு கராத்தே காட்டும் தியாகராஜன்..! அடுத்த சட்டசபை தேர்தலுக்குள் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி விடுவார் என காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என கராத்தே தியாகராஜன் கருத்து தெரிவித்திருந்த நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை, கராத்தே தியாகராஜன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கராத்தே தியாகராஜன், ’’நான் பேசிய நாளில் மாவட்ட செயலாளர்கள் பலரும் க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.