Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தேர்தலை அடிக்கடி புறக்கணிக்கும் மதிமுகவுக்கு தேர்தல் ஆணையத்தின் அதிரடி செக்! நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாத அரசியல் கட்சிகளை பதிவுப் பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி: நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாத அரசியல் கட்சிகளை ஆணையத்தின் பட்டியலில் இருந்து நீக்க இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் கடும் பீதி அடைந்துள்ளன. தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும், அதன்படி அந்தக் கட்சிகள் தேர்தலில் பெறும் வாக்கு சதவீதம் வெற்றி பெறும் இடங்கள் ஆகியவற்றை பொறுத்து மாநிலக் கட்சிகள் தேசியக் கட்சிகள…

  2. சீமானுக்கு எதிராக திமுக காழ்ப்புணர்வுடன் அவதூறைகளை பேசிக்கொண்டிருக்க இன்றைய திருமாவின் பேட்டி கருத்தியல் ரீதியான பேச்சாக மிகவும் கவனிக்ககூடியதாக நியாயமான கேள்விகளுடன் அமைந்தது.. பார்க்கலாம் நாளை சீமானின் பதிலை.. திருமா பேசியது 👇 சீமான் ரொம்ப குதர்க்கவாதம் பேசுறாரு.. ஒரு கருத்தியல் விவாதம்னா நம்ம வரவேற்கலாம்.. பெரியாரை வந்து விமர்சிக்க கூடாதுன்னு எல்லாம் கிடையாது.. பெரியாரே சொல்லி இருக்கிறாரு என் கருத்தை ஒருத்தன் வந்து மறுத்து பேசினான்னா அது முற்போக்கானதா இருந்தா அதை நான் வரவேற்கிறேன்னு சொல்லி இருக்கிறாரு..என்னுடைய கருத்தை நான் சொன்னேங்குறதுக்காக யாரும் ஏத்துக்க கூடாது அதுல எது சரின்னா ஏத்துக்கோ அப்படிங்கிறதுதான்… அது பெரியாரே ஒப்புக்கொண்ட ஒரு விஷயம் அது.. அதனால பெரியார் …

  3. தேர்தலையொட்டி 4 நாட்கள் தமிழகமெங்கும் மதுபானக்கடைகள் மூடப்படும்… April 5, 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தகளையொட்டி நான்கு நாட்கள் தமிழகமெங்கும் மதுபானக்கடைகள் மூடப்படும் என மதுபான மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள், வாக்குப் பதிவு நடைபெறும் நாள் மற்றும் அதற்கு முந்தைய 48 மணி நேரத்துக்கு மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் தேர்தல் ஆணையகம் அறிவித்திருந்தமைக்கேற்ப நேற்றையதினம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும், அதோடு இணைக்கப்பட்ட பார்களும் எதிர்வரும் வரும் ஏப்ரல் 16, 17, 18 ஆகிய நாட்களிலும், வா…

  4. தேர்தல் 2019 - "30 இடங்களில் தி.மு.க. கூட்டணியை வெற்றிபெறச் செய்வோம்" - வேல்முருகன்; மீதமுள்ள 10 தொகுதிகள்? முரளிதரன் காசிவிஸ்வநாதன்பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைFACEBOOK Image captionவேல்முருகன் 2019 மக்களவை தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தி.மு.கவுக்கு ஆதரவளிக்கப்போவதாக…

  5. தேர்தல் அரசியலில் முதல் வெற்றியைச் சுவைத்த நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் 11-ம் வார்டு உறுப்பினராக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சுனில் வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் அரசியலில் நாம் தமிழர் கட்சியின் முதல் வெற்றி இதுவாகும். தமிழகத்தில் சென்னை மற்றும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த டிச.27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 315 மையங்களில் வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கன்னியா…

  6. தேர்தல் ஆணையத்தில் 17-ம் தேதி விசாரணை: அதிமுக கட்சி, இரட்டை இலை சின்னம் யாருக்கு? - தொண்டர்கள் ஆதரவை திரட்டும் சசிகலா, ஓபிஎஸ் அணிகள் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இரட்டை இலை சின்னத்தை பெறு வதற்கான முயற்சியில் அதிமுக வின் இரு அணிகளும் தீவிரமாகி உள்ளன. அதிமுகவின் பொதுச்செய லாளராக சசிகலா தேர்வு செய் யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த னர். இதையடுத்து, சசிகலா, ஓபிஎஸ் தரப்பினரிடம் தேர்தல் ஆணையம் கடிதம் மூலமும் நேரிலும் விளக்கம் பெற்றது. இதற்கிடையே, ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், இரட்டை இலை சின்னத்…

  7. தேர்தல் ஆணையத்தில் கமல் மனு! மக்கள் நீதி மய்யம் கட்சியைப் பதிவு செய்வதற்காக, இன்று டெல்லியிலுள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்துக்குச் சென்றார் கமல்ஹாசன். கூடிய விரைவில் தங்கள் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்குமென்று, அவர் நம்பிக்கை தெரிவித்தார். கடந்த பிப்ரவரி 21ஆம் தேதியன்று மக்கள் நீதி மய்யம் என்ற கட்சிப் பெயரையும் கொடியையும் மதுரையில் தொண்டர்கள் மத்தியில் அறிமுகம் செய்தார் நடிகர் கமல்ஹாசன். கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாக, திமுக தலைவர் மு.கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் நல்லகண்ணு, நடிகர் ரஜினிகாந்த், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்பட பல தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து, புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும…

  8. தேர்தல் ஆணையத்துக்கு, சசிகலா அளித்த 70 பக்க அடடே விளக்கம் சசிகலாவை அ.தி.மு.க பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக்கோரி பன்னீர்செல்வம் அணியினர் கொடுத்த புகார் மனுவுக்கு, சசிகலா இன்று தேர்தல் ஆணையத்துக்கு பதில் அளித்துள்ளார். 70 பக்கத்தில் அவர் விளக்கம் அளித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க சட்டமன்ற தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். பின்னர், சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் மவுன தியானம் செய்தார். சுமார் 40 நிமிட தியானத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம…

  9. தேர்தல் ஆணையம், எங்களுக்கு சாதகமான தீர்ப்பையே வழங்கியுள்ளது! - முதல்வர் பளீச் Chennai: பெரும்பான்மை உறுப்பினர்கள் எங்கள் பக்கம் இருப்பதால், 'இரட்டை இலை' சின்னம் விவகாரத்தில், தேர்தல் ஆணையம் தங்களுக்கு சாதகமான தீர்ப்பையே அளித்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சென்னையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்ட ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ’பெரும்பான்மையான நிர்வாகிகளின் ஆதரவு அடிப்படையில…

  10. தேர்தல் என்பது, தனிப்பட்ட நபர்களுக்கு இடையே நடக்கும் அழகி போட்டியல்ல,'' என, மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.மத்திய, கிராமப்புற மேம்பாட்டு அமைச்சரும், காங்., மூத்த தலைவர்களில் ஒருவருமான, ஜெய்ராம் ரமேஷ், குஜராத் மாநிலம், ஆனந்தில் நடந்த விழாவில் பங்கேற்றார். அப்போது, செய்தியாளர்களிடம், அவர் கூறியதாவது: அடுத்த லோக்சபா தேர்தலில், காங்., சார்பில், ராகுலும், பா.ஜ., சார்பில், நரேந்திர மோடியும், பிரதமர் வேட்பாளர்களாக, முன் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதா என, கேட்கப்படுகிறது. தேர்தல் என்பது, தனிப்பட்ட நபர்களுக்கு இடையே நடக்கும், அழகி போட்டி அல்ல.அமெரிக்காவில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், இரு நபர்களுக்கு இடையேயானது. நம் நாட்டில் நடக்கும் தேர்தல், இதைப் போன்றதல்ல. அரசியல் க…

  11. தேர்தல் எப்போது வந்தாலும் தயார்... தர்பார் ரஜினியின் தாறுமாறு பேச்சு..! திரையுலகின் சூப்பர்ஸ்டார்களான ரஜினி, கமல் ஆகியோர் அரசியலுக்கு வருவதாக 2017ஆம் ஆண்டின் வெவ்வேறு தருணங்களில் அறிவித்தனர். இவர்களில் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கிய கமல், மக்களவைத் தேர்தலில் தனித்து களம் கண்டுள்ளார். ரஜினி மக்கள் மன்றத்தை துவங்கிய ரஜினி, வரும் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்றும் குடிநீர் பிரச்சினைகளை தீர்த்து வைப்பவர்களுக்கு வாக்களியுங்கள் என்றும் ரசிகர்களுக்கு அறிவுறுத்தி இருந்தார். அவர் பிஜேபியின் தேர்தல் அறிக்கையையும் வரவேற்றிருந்தார். இந்த சூழலில் தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல் வாக்குப் பதிவு நேற்று நடந்து முடிந்தது. வாக்குப் பதிவு நடந்த சமயத்திலேய…

  12. பெருமளவில் பணம் கைப்பற்றப்பட்ட காரணத்தால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட வேலூர் தொகுதியில் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. தி.மு.கவின் மூத்த தலைவரான துரைமுருகன், தன் மகன் கதிர் ஆனந்த் இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதே அவரது அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்பதால் மிகத் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கிறார். முத்தலாக் சட்டத்தின் காரணமாக பா.ஜ.க. மீதும் அ.தி.மு.க. மீதும் இஸ்லாமியர்கள் அதிருப்தி அடைந்திருப்பதால் அவர்களது வாக்குகளும் தங்களுக்கே கிடைக்குமென தி.மு.க. நம்புகிறது. தற்போது மக்களவையில் அ.தி.மு.கவின் சார்பில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் மட்டுமே இடம்பெற்றிருக்கிறார். ஏ.சி. சண்முகம் வெற்றிபெறும் பட்சத்தில் அந்த எண்ணி…

  13. தேர்தல் ஒத்திவைப்பு... உயர் நீதிமன்றத்தை நாடியது தி.மு.க.! சென்னை: தமிழகத்தில் தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து தி.மு.க. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாகவும், பணம் பறிமுதல் செய்யப்பட்டதாலும், தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளின் வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது. மேலும், இந்த இரண்டு தொகுதிகளிலும் மே 23-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், அதனை எதிர்த்து பல்வேறு மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்க…

  14. தேர்தல் கமிஷன் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என்ற நம்பிக்கையில், அ.தி.மு.க.,வை கைப்பற்ற, பன்னீர்செல்வம் அணியினர், சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றனர். சசிகலாவின் பொதுச்செயலர் பதவி பறிபோனால், பொதுக்குழுவை கூட்டவும் திட்டமிட்டுள்ளனர். பன்னீர்செல்வம், மார்ச் 1ல், புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என, அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர். அ.தி.மு.க.,வினர், சசிகலா அணி, பன்னீர் செல்வம் அணி என, இரண்டாக பிரிந்துள்ளனர். எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் ஆட்சியை தக்க வைக்க, பன்னீர்செல்வம் முடிவு செய்தார். ஆனால், சசிகலா தரப்பினர், எம்.எல்.ஏ.,க் களுக்கு ஆசை வார்த்தை கூறி, தங்கள் விசுவாசியான இடைப்பாடி பழனிசாமியை முதல்வராக்கி, ஆட்சியை தங்கள் வசமாக்கிவிட்டனர்.…

  15. தேர்தல் செலவினப் பட்டியல் விவகாரம்! எடப்பாடி பழனிசாமிடம் விசாரணை? சென்னை ஆர்.கே.நகரில் ஏப்ரல் 12-ம் தேதி நடப்பதாக இருந்த இடைத்தேர்தல் தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்தொகுதியில், வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம், பரிசுப் பொருட்கள் வழங்கியது, குறிப்பிட்ட கட்சி நிர்வாகிகள் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தியது என்று தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு பல காரணங்களை தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. அனைத்துக்கும் உச்சமாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம் முதல்வர் உள்பட அமைச்சர்களுக்கு ரூ.89 கோடி பணம் வழங்கியதற்கான ஆவணங்கள் சிக்கியதும் குறிப்பிடத்தக்கது. வருமான வர…

  16. தேர்தல் செலவு விவகாரம் தினகரன் பதவிக்கு சிக்கல் ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில், ஓட்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய் தருவதாகக் கூறி, 20 ரூபாய், 'டோக்கன்' வழங்கியதாக, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதால், தினகரன் எம்.எல்.ஏ., பதவிக்கு சிக்கல் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன், தேர்தல் பிரசாரத்தின் போது,பணத்தை வாரி இறைத்தார். தகுதி நீக்கம் அவர் பிரசாரத்திற்கு, எவ்வளவு பேர் வந்தனர்; அவர்களுக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்ற விபரங்களை, தேர்தல் பார்வையாளர்கள், ஆதாரத்துடன் சேகரித்துள்ளனர். அவற்…

  17. தேர்தல் திருவிழா இன்று நிறைவு: கடைசி நேரம் வரை தொடர்ந்த நாடகங்கள்! மின்னம்பலம் இவ்வளவு பரபரப்பான, கடுமையான, சவால்கள் நிறைந்த தேர்தலை என்று சொல்வதை விட, இவ்வளவு கேவலமான நாடகங்கள் நடந்த தேர்தலை தமிழகம் இதுவரை சந்தித்ததேயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அண்ணா–காமராசர், கருணாநிதி–எம்.ஜி.ஆர், கருணாநிதி–ஜெயலலிதா என்று துருவ அரசியலில் ஊறித்திளைத்த திராவிட பூமி தமிழகம். இந்தத் தேர்தலில் ஸ்டாலின்–எடப்பாடி பழனிசாமி என்ற இரண்டு புதுமுகங்களுக்கு எதிரான துருவ அரசியல் அறிமுகம் செய்யப்பட்டது. இருவருமே அரசியலிலும், அதிகாரத்திலும் அனுபவங்களைப் பெற்றவர்களாயினும், தனியாக தேர்தலை எதிர்கொண்டது முதல்முறையாக இப்போதுதான். இருவருக்குமான வேற்றுமைகளை விட பொது ஒற்றுமைகளும் பல உண்டு. …

  18. லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பின், வைகோ, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். லோக்சபா தேர்தலில், போட்டியிட்ட ம.தி.மு.க., கடும் தோல்வி அடைந்தது. இந்நிலையில், தோல்விக்கு பின், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, ஒவ்வொரு மாவட்டமாக சென்று, கட்சித் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சந்திக்கவிருக்கிறார். அப்போது, கட்சிக்கு லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்தும், கட்சியினர் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கிறார், வைகோ. கூடவே, நிறைய நிகழ்ச்சிகளிலும் வைகோ பங்கேற்கிறார்.இதன் முதல்கட்டமாக, ஜூலை 3ல், திருநெல்வேலியில் உள்ள கட்சி அலுவலகத்தில், தொண்டர்களை வைகோ சந்திக்கிறார். அதன்பின், விருதுநகர் உட்பட பல ஊர்களுக்கும் செல்கிறார…

  19. கோடீஸ்வரர்களிடம் இல்லை, உங்களிடம் நிதி கேட்டு நிற்கிறேன்: தொண்டர்களுக்கு, கருணாநிதி கடிதம். சென்னை: தேர்தல் பணிக்காக தாரளமாக நிதி வழங்குமாறு கட்சி தொண்டர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கட்சி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, 2016-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் தமிழக அரசின் பொதுத்தேர்தல் வரவுள்ளது. 5 ஆண்டு காலம் இந்த நாட்டு மக்கள் பட்ட துன்பங்களுக்கெல்லாம் விடிவு காலம் ஏற்படவிருக்கிறது. மக்கள் படும் வேதனைகளை எண்ணிப்பார்க்கும் போது, ஆளுங்கட்சிக்கு விடை கொடுத்து அனுப்பத் தயாராகி விட்டார்கள் என்ற போதிலும், "அவர்கள் இல்லாவிட்டால் நாம் தானே", என்ற மதமதப்போடு நாம் இருந்து விடக்கூடாது. எதிர்க்கட்சிகளிடம…

  20. தேர்தல் முடிவு: எடப்பாடிக்குக் கிடைத்த லேட்டஸ்ட் ரிப்போர்ட்! மின்னம்பலம் தேர்தல் முடிந்து சுமார் ஒரு மாத கால இடைவெளியில் வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் எக்சிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் வியூக வகுப்பாளராக இருக்கும் சுனில், அதிமுகவுக்காக எக்சிட் போல் ஆய்வுகளை நடத்தி வருகிறார். தேர்தல் முடிந்த ஏப்ரல் 6ஆம் தேதியன்று மேற்கொள்ளப்பட்ட கள விசாரணைகள் மூலம் முதற்கட்ட விவரங்களை அதிமுக தலைமைக்கு அனுப்பிய சுனில் குழுவினர்... வாக்குப் பதிவு சதவிகிதம், முதல் முறை வாக்கா…

  21. தேர்தல் முடிவுகளில் நான் செய்த தவறுகள்..! - மனம் திறந்த வைகோ எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்து விலகியபோது கூட அவருடன் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பெருமளவு விலகவில்லை. ஆனால் வைகோ தி.மு.க.வில் இருந்து விலகியபோது 8 மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகினர். தி.மு.க.வில் ஒரு செங்குத்தான பிளவை ஏற்படுத்தியவர் வைகோ. தி.மு.க.வின் கொடி, சின்னத்துக்கு உரிமை கோரி தி.மு.க.வை கிடுகிடுக்கச் செய்தவர். ஆனால், இப்போது அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக சற்று நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது ம.தி.மு.க. 1993ல் தி.மு.க.வில் இருந்து வெளியேறி பின்னர் ம.தி.மு.க.வை துவக்கிய வைகோ, இந்த 23 ஆண்டுகளில் 5 சட்டமன்ற தேர்தல், 5 நாடாளுமன்…

  22. லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன், அ.தி.மு.க.,- - தி.மு.க.,விடம், தே.மு.தி.க., வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பேரம் நடத்தி வருவதாக பரவியிருக்கும் செய்தி, அக்கட்சி தலைமையை, கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தே.மு.தி.க., தலைமையால் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது முதலே, சில தொகுதிகளில் பிரச்னை எழுந்தது. நாமக்கல் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அக்கட்சியின் மாநில மாணவரணி செயலர் மகேஸ்வரன், போட்டியில் இருந்து விலகி, பின், அ.தி.மு.க.,வில் இணைந்தார்.கடலூர் தொகுதிக்கு பேராசிரியர் ராமானுஜம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேர்தல் செலவுக்கு நிதி ஆதாரம் இல்லாததால், அவரை மாற்றி விட்டு ஜெயசங்கரை வேட்பாளராக விஜயகாந்த் அறிவித்தார். திருநெல்வேலி தொகுதிக்கு தமிழகத்தில் ஆள் கிடைக்காதத…

    • 0 replies
    • 600 views
  23. தேர்தல் விதி மீறல்கள் : 428 கோடி ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டன! தமிழக சட்டப்பேரவை தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இதுவரையான காலப்பகுதியில் 428 கோடி ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் விதிமீறல்கள் தொடர்பில் முறைப்பாடு அளிக்க 1950 என்ற இலக்கத்தை பயன்படுத்தி மாவட்ட அளவிலான தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் பொதுமக்கள் வாக்குச்சாவடிக்கு செல்லும் போது தொலைபேசிகளை கொண்டு செல்லக்கூடாது எனவும் அவர் அறிவுற…

  24. தேர்தல் விதிகளை மீறியதாக ஜெயலலிதாவுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா, தேர்தலின் போது பல வகையான இலவசங்களை வழங்குவதாக வாக்குறுதிகள் அளித்த நிலையில், அதற்கான நிதி ஆதாரங்களைத் தெரிவிக்காததற்கு தேர்தல் ஆணையம் தற்போது கண்டித்துள்ளது. மேலும் பல்வேறு இலவச பொருட்கள்-வாஷிங் மெஷின், இலவச மொபைல் போன்,கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன் முழுவதுமாக தள்ளுபடி என பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரங்கள் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்பதை ஆணையம் சுட்டிகாட்டியுள்ளது. இனி வரும் காலங்களில் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மே மாதத்தில் விளக்கம் க…

  25. தேர்தல் விதிமுறையை கூறி மகாத்மா காந்தி சிலை மூடல்! மதுரை மாவட்டம் யானைக்கல் பகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் எனக்கூறி மகாத்மா காந்தி சிலை மூடப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சாலையில் ஆங்காங்கே உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள் என கூறி மதுரை யானைக்கல் பகுதியில் உள்ள மகாத்மா காந்தியின் சிலையை தேர்தல் அலுவலர்கள் மூடியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேச தந்தை மகாத்மா காந்தியை இழிவுபடுத்தும் வகையில் இது போன்ற செயல்களில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.