தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10260 topics in this forum
-
மத்திய அரசின் அழுங்குப் பிடியை ஆட்டம் காணவைத்த தமிழ்நாடு [ ஞாயிற்றுக்கிழமை, 10 ஓகஸ்ட் 2014, 08:59.14 AM GMT ] தமிழ்நாட்டுக்கும், இலங்கைப் பாதுகாப்பு அமைச்சுக்கும் எந்தளவுக்கு எட்டாப் பொருத்தம் என்பதை இங்கு விபரித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. இலங்கை அரசாங்கத்தை, தமிழ்நாடும், தமிழ்நாட்டை இலங்கை அரசும் எந்தளவுக்கு மோசமாக விமர்சிக்க முடியுமோ, அந்தளவுக்கு மோசமாக விமர்சித்து வந்த வரலாற்றை எவராலும் இலகுவில் மறக்க முடியாது. இங்குள்ள தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் இருந்து கொடுக்கப்படும் குரலை, இலங்கை அரசாங்கத்தினால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதுபோலவே, இலங்கையில் தமிழர்கள் நடத்தப்படும் விதத்தை தமிழ்நாட்டினால் சகித்து…
-
- 0 replies
- 490 views
-
-
"மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நகை, ஆவணங்கள் முறையாக தணிக்கை ஆகவில்லை" - ஆர்டிஐ பதில் பிரசன்னா வெங்கடேஷ் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நகை, குத்தகை நிலம் மறுமதிப்பீடுக்கான ஆவணங்கள் முறையாக தணிக்கை ஆகவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள விலை உயர்ந்த நகைகள் மற்றும் அசையா சொத்துகள், கோவில் நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் மூலம் மறுமதிப்பீடு செய்யப்பட்டு, அது தொடர்பான அறிக்கை தணிக்கையின்போது சமர்ப்பிக்கப்படுவது வழக்கம். இதற்கு முன்பு, 1997ஆம் ஆண்டு, மீனாட்சி அ…
-
- 0 replies
- 263 views
- 1 follower
-
-
2 லட்சம் அப்பாவி தமிழர்களின் இரத்தம் குடித்த கொடூரன் ராஜபக்சேயின் LYCA திரைப்பட நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட கத்தி மற்றும் புலிப்பார்வை திரைப்படத்தை தடை செய் என இனம் காக்கும் வீரத்தமிழர்கள் , அண்ணன் பிரபாகரன் தம்பிகள் என்ற பெயரில் தமிழ்நாட்டில் சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news/33488/57//d,article_full.aspx
-
- 0 replies
- 473 views
-
-
எஸ்.வி.சேகருக்காக 89 எம்.எல்.ஏ-க்களும் வெளிநடப்பு செய்கிறார்கள் என்றால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நிச்சயமாக அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அது அரசாங்கத்தின் கடமை" என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார். சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நீட்டினால் தமிழகத்தில் ஏற்படும் தற்கொலைகளை அரசியலாக்கி அரசியல்கட்சிகள் அதன்மூலம் லாபம் காண்கின்றன. இந்தத் தற்கொலைகள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும். தற்கொலைகள் நடக்காமல் அவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்ட வேண்டும். ஆனால், தற்கொலை நடந்தால், தங்கள் அரசியல் லாபத்துக்காக …
-
- 0 replies
- 692 views
-
-
`ரகசிய’ மொழியில் ஓலைச்சுவடிகள்: நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கும் சென்னை நூலகம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க உலகறிந்த மொழிகளில் உள்ள நூல்களை எல்லாம் தன்னகத்தே கொண்டு பெருமைப்படும் நூலகங்களுக்கு மத்தியில், உலகம் அறிந்திராத மொழியின் பிரதிகளை, சுவடிகள் வடிவில் கொண்டு சிறப்புப் பெருமை பெறுகிறது சென்னை நூலகம். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள தமிழக அரசினர் கீழ்த…
-
- 3 replies
- 1.7k views
-
-
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா மரணத்தின் பின்னணியில் ஐ.பி.எல். முறைகேடுகள் காரணமாக இருக்கலாம் என்று திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது டெல்லி பொலிசார் சுனந்தா கொலை செய்யப்பட்டார் என்று அறிவித்த நிலையில், ஐ.பி.எல். முறைகேடுகளை பத்திரிகையாளர்களிட அம்பலப்படுத்த இருந்ததால் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு ஜனவரி 14-ந் திகதியன்று சுனந்தாவும் சசி தரூரும் கேரளாவில் இருந்து டெல்லி திரும்பியுள்ளனர். டெல்லி விமான நிலையத்தில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சுனந்தாவை இழுத்து காரில் தள்ள சசி தரூர் முயற்சிக்க அப்போது சுனந்தா அறைந்ததை பலர் பார்த்துள்ளனர். பின்னர் சசி தரூர் மட்டு…
-
- 0 replies
- 498 views
-
-
`சட்டப்படி வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்வேன்' - சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது! சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் சென்னையில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான கருணாஸ் கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தமிழக முதல்வர் தன்னைக் கண்டு அஞ்சுவதாகத் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, `சட்டையை கழற்றிவிட்டு வந்து நேருக்கு நேர் என்னுடன் மோதத் தயாரா?' எனப் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு, கருணாஸ் சவால் விடுத்தார். மேலும் சாதி ரீதியாகவும் கூவத்தூரை அடையாளம் காட்டியது நான்தான் எனவும் அவர் பல்வேறு சர்ச்சை கருத்துக்களைத் தெரிவித்தார். …
-
- 6 replies
- 1k views
-
-
கஜா புயலால் வீட்டை இழந்த விவசாயி 2 மாதங்களாக சுடுகாட்டில் வசிக்கும் அவலம் பட்டுக்கோட்டை அருகே, கஜா புயலால் வீட்டை இழந்த விவசாயி கடந்த 2 மாதங்களாக குடும்பத்துடன் சுடுகாட்டில் வசித்து வருகிறார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த கொண்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி செல்லத்துரை (50). இவரது மனைவி செல்வமணி. இவர்களுக்கு முரளி, மூர்த்தி என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களும் விவசாய வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த நொவம்பர் மாதம் 16ம் திகதி 110 கிமீ வேகத்தில் வீசிய கஜா புயலின் கோர தாண்டவத்தில், செல்லத்துரையின் வீடு முற்றிலுமாக சேதமடைந்தது. புதிய வீடு கட்டுவதற்கு பொருளாதார வசதியில்லாத செல்லத்துரையின் குடும்பத்தினர், தங்குவதற்கு வேறு இடமின்றி அர…
-
- 0 replies
- 568 views
-
-
சாந்தனின் தாயாரின் கடிதத்தை மேற்கோள்காட்டி தமிழக முதல்வருக்கு சிறீதரன் கடிதம் - சாந்தன் உள்ளிட்ட நால்வரையும் இலங்கைக்கு அனுப்பிவைக்க வேண்டுகோள் Published By: RAJEEBAN 29 JAN, 2024 | 08:55 PM ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை விடுவிக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, சாந்தனின் தாயாரின் கோரிக்கைக் கடிதத்தை மேற்கோள்காட்டி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது மறைந்த பாரதப்பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு 32 வருடங்கள் சிறைத்தண்டனையின் பி…
-
- 0 replies
- 502 views
- 1 follower
-
-
ஓய்வு பெற்றார் நீதிபதி குமாரசாமி: அரை மணி நேரத்தில் முடிந்தது பிரிவு உபச்சார விழா நீதிபதி சி.ஆர்.குமாரசாமி| கோப்புப் படம் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர். குமாரசாமி இன்று (திங்கள்கிழமை) ஓய்வு பெற்றார். இதனையொட்டி பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் உள்ள 1-ம் எண் அரங்கில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. விழாவுக்கு கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுப்ரோ கமல் முகர்ஜி தலைமை வகித்தார். உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் விழாவில் கலந்து கொண்டனர். 'அரை மணி நேரத்தில் முடிந்தது' நீதிபதி சி.ஆர். குமாரசாமியின் பிரிவு உபச்சார விழா அரை மணி நேரத்திலேயே முடிவுற்றது. மதியம் 2 மணிக்கு நிகழ்ச்சி தொடங…
-
- 0 replies
- 335 views
-
-
28 ஜூலை 2024, 03:34 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால், ஒருவரே பல தனியார் கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றியதாகக் காட்டப்பட்டு மோசடி நடந்திருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது எப்படி நடந்தது? தமிழ்நாட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் போதுமான பேராசிரியர்கள் பணியாற்றாத நிலையில், ஒரு சிலரே பல கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றுவதாகக் காட்டி தகுதியற்ற நூற்றுக்கணக்கான கல்லூரிகள் அனுமதி பெற்றிருப்பதாக தமிழ்நாட்டில் இருந்து செயல்படும் தன்னார்வ அமைப்பான 'அறப்போர் இயக்கம்' குற்றம் சாட்டியிருக்கிறது. இந்த விவகாரம் ப…
-
- 0 replies
- 437 views
- 1 follower
-
-
"பால் பாக்கெட்" கவரை.. திரும்ப கொடுத்தால் காசு.. ஆவின் அறிவிப்பு.. குப்பையில் வீசுவதை தடுக்க திட்டம். ஆவின் பால் பாக்கெட் கவர்களை திரும்ப ஒப்படைத்தால் அதற்கு பணம் தருவோம் என ஆவின் அறிவித்துள்ளது. குப்பையில் பால் பாக்கெட் கவர்களை வீசுவதை தடுக்க இத்திட்டத்தை ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும், மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால், பால் உள்ளிட்ட குறிப்பிட்ட சில அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு விலக்கு அளித்தது.இந்நிலையில் சுற்றுப்புற சூழலை பாதுக…
-
- 0 replies
- 585 views
-
-
பட மூலாதாரம்,DOORDARSHAN படக்குறிப்பு, பிரசார் பாரதி அலுவலகத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆன்.என்.ரவி கலந்துகொண்ட விழா 18 அக்டோபர் 2024, 13:23 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சென்னை பிரசார் பாரதி அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை, அக்டோபர் 18) நடந்த ஒரு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். இந்த விழாவில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில் 'திராவிட நல் திருநாடும்' என்ற வரி விடுபட்டது. இது அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்வினையாற்றியிருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் ‘திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட…
-
-
- 15 replies
- 1.5k views
- 2 followers
-
-
பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, கணேசன் பெண் பயணியிடம் 10 பவுன் நகையை வழிப்பறி செய்ததாகக் கூறி தனது தந்தையை மகனே காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம், புதன் கிழமையன்று (டிசம்பர் 11) சென்னையில் நடந்துள்ளது. "நம்மை நம்பி வாகனத்தில் வந்தவரிடம் வழிப்பறி செய்வதை எந்த வகையிலும் ஏற்க முடியாது" என்கிறார் குற்றம் சுமத்தப்பட்ட நபரின் மகன். பெண்ணிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவத்தில் என்ன நடந்தது? காவல்துறை சொல்வது என்ன? ஆட்டோவில் திரையை வைத்து மறைத்து வேறு இடத்துக்கு கொண்டு சென்ற ஓட்டுநர் திருச்சி மாவட்டம் குண்டூரில் வசித்து வரும் 80 வயதான வசந்தா மாரிக்கண்ணு, தமிழ் ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் அமெரிக்காவில்…
-
- 0 replies
- 654 views
- 1 follower
-
-
தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் – ஸ்டாலின் அழைப்பு February 25, 2025 1:05 pm அரசியலை கடந்த தமிழ்நாட்டு நலனுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று கூட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். சென்னையில் அமைச்சரவைக் கூட்டத்தை தலைமை தாங்கி நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்தவர், “தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் செயல்கள் மொழிப்போருக்கு வித்திடும் வகையில் உள்ளது. அதற்கு தமிழ்நாடு அரசு தயாரக உள்ளது. நீட், நிதிகுறைப்பு தொடர்பாக ஒன்றிய அரசிடம் பலமுறை வலியுறுத்தியும் பதில் இல்லை. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்கும் முயற்சியில் மத்திய பாஜக அரசு இறங்கி…
-
- 2 replies
- 360 views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ் தேசிய சித்தாந்தத்தின் அடிப்படையில் போர் நடத்தியதாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பும், இன்று தங்களை தமிழ் தேசியவாதிகள் என்றே கூறிக்கொள்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று சிங்கள ஆட்சியாளர்களுடனும், பேரினவாதிகளுடனும் கைகோர்த்து நிற்கின்றனர். இந்நிலையில், சர்வதேசத்தையும், தமிழ் மக்களையும் அவர்கள் காட்டிக்கொடுகின்றனர்” எனவும் அவர் கூறியுள்ளார். https://www.tamilwin.com/special…
-
- 0 replies
- 432 views
-
-
ரஜினி, சகாயம் அரசியலுக்கு வர வேண்டும் : பழ. கருப்பையா... நடிகர் ரஜினி மற்றும் கலெக்டர் சகாயாம் போன்றவர்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும் என்று பழ. கருப்பையா கருத்து தெரிவித்துள்ளார். திருப்பூரில் நடைபெற்ற ஒரு புத்தக விழாவில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. பழ.கருப்பையா கலந்து கொண்டு ‘அரசியல் அறம்’ என்ற தலைப்பில் பேசினார் . அவர் பேசும் போது “இன்றைக்கு அறம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. மனிதனை அறம் உடையவனாக மாற்றியிருந்தால் அவன் ஒழுங்குபட்டிருப்பான். ஆனால் அவனை சட்டத்துக்கு பயப்படுகிறவர்களாகவே உருவாக்கி இருக்கிறோம். இன்றைக்கு அரசியல் என்பது தொழிலாகிவிட்டது. பதவியை பிடிக்க வேண்டும் என்றுதான் அரசியலுக்கு வர…
-
- 1 reply
- 675 views
-
-
'ராஜீவ் காந்தி கருப்பா சிவப்பா என்றே தெரியாது... !'- பரோலில் வெளியே வந்த நளினி உருக்கம்! ( படங்கள்) வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நளினி, 25 ஆண்டுக்கு பின் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள இன்று பரோலில் வெளியே வந்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 25 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவர் நளினி. இவரது தந்தை சங்கர நாராயணன். ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரான இவர், நெல்லை மாவட்டம் வி.கே.புரத்தில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று (23-ம் தேதி) மாலை உடல் நலக்குறைவு காரணமாக 91 வயதான சங்கர நாராயணன் காலமானார். அவரி…
-
- 5 replies
- 1.2k views
-
-
விஜயகாந்த் பேசுவது ஏன் புரியவில்லை தெரியுமா..? விளக்கிய பிரேமலதா! சென்னை: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசுவது புரியவில்லை ஏன் தெரியுமா..? என்று தே.மு.தி.க.வின் மகளிர் அணிக் கூட்டத்தில் விளக்கினார் பிரேமலதா. சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மகளிர் தினத்தை ஒட்டி, தே.மு.தி.க.வின் மகளிர் அணிக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாலை 3 மணிக்கு தொடங்கவிருந்த கூட்டம், மாலை 5 மணி வரை தள்ளிப் போனது. அதுவரை, விஜயகாந்த் நடித்த படங்களின் பாடல்களுக்கு மேடையில் நடனக் கலைஞர்கள் ஆட்டம்போட்டனர். தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளில் இருந்து வந்திருந்த மகளிர் அணி உறுப்பினர்கள், நிகழ்ச்சி தொடங்கியவுடன் அனைத்துக் கட்சிகளையும் விளாசத் தொடங்கினர். ''அன்புமணிக்கு என்ன…
-
- 0 replies
- 662 views
-
-
ஒருசில குறிப்பிட்ட கடைகளில் தயாராகும் பிரியாணியில் கருத்தடை மாத்திரைகள் கலப்படம் செய்வதாகவும் இதனால் ஒரு குறிப்பிட்ட மதத்தினர்களின் மக்கள் தொகையை குறைக்க சதி செய்திருப்பதாகவும் வாட்ஸ்அப்களில் வதந்தி பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வதந்திக்கு என்றுமே பஞ்சம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது இந்த வதந்திகள் உண்மையா பொய்யா என்பதை கூட அறியாமல் பலர் இதனை ஃபார்வேர்டு செய்வதால் சில சமயம் கலவரம் உள்ளிட்ட அசம்பாவிதமும் நடைபெற்று வருகிறது சமீபத்தில் கூட சிஏஏ போராட்டத்தின்போது இயற்கையாக மரணம் அடைந்த ஒருவரை போராட்டத்தின் காரணமாக மரணமடைந்ததாக வாட்ஸ் அப்பில் செய்தி பரவியது. அதேபோல் திமுக எம்பி செந்தில்கு…
-
- 0 replies
- 501 views
-
-
Posted Date : 07:44 (16/05/2016) ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த், ரஜினி, கமல் உள்பட பிரபலங்கள் வாக்களிப்பு! முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித்குமார் ஆகியோர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். 234 சட்டசபை தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு இன்று, அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய இரு தொகுதிகளை தவிர ஏனைய 232 தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. மாலை 6 மணி வரை இந்த வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியதும், மக்கள் ஆர்வமுடன் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரம் சாரதா நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவ…
-
- 0 replies
- 574 views
-
-
அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றம்... -மாஜிக்களின் கட்சி பதவியை பறித்த ஜெயலலிதா! சென்னை: அ.தி.மு.க.வில் இன்று ஒரே நாளில் பல அதிரடி மாற்றங்களை செய்தும், பல மாஜி அமைச்சர்களின் கட்சி பதவிகளை பறித்தும் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார் முதல்வரும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா. இது குறித்து அ.தி.மு.க. கட்சி தலைமை இன்று காலை வெளியிட்டுள்ள அறிவிப்பில் புதிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மாற்றம், புதிய செய்தி தொடர்பாளர்கள் நியமனம் ஆகியன இடம்பெற்றுள்ளன. அதன்படி, புதிய நிர்வாகிகள்... அ.தி.மு.க. அவைத்தலைவர் - மதுசூதனன் பொருளாளர் - ஓ.பன்னீர்செல்வம் கொள்கை பரப்புச் செயலாளர் - தம்பிதுரை அமைப்பு செயலாளர்கள் - வைத்திலிங்கம், விசாலாட்சி நெடுஞ்செ…
-
- 0 replies
- 364 views
-
-
சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது – நடிகர் ஜெயராம் விசாரனை வளையத்துள்? written by admin November 23, 2025 கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள துவார பாலகர் சிலை தங்கத் தகடுகள் மாயமான விவகாரம் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பிரபல நடிகர் ஜெயராமை சாட்சியாக சேர்க்க சிறப்பு புலனாய்வு குழு முடிவு செய்துள்ளது. விரைவில் விசாரணை நடத்தவும் எஸ்ஐடி திட்டமிட்டுள்ளது. உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறையின் வாயிலில் இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க நகை கவசங்கள் 2019ஆம் ஆண்டு கழற்றப்பட்டு செப்பனிடும் பணிக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட…
-
-
- 2 replies
- 321 views
-
-
கனடிய பிரமரின் ஆதரவு குரல் முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கில் தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு தமிழ்நாடு அரசு அஞ்சலி செலுத்தாது ஏன் ❓
-
- 2 replies
- 872 views
-
-
சென்னையில் வேகமாகப் பரவும் அரேபிய உணவு கலாசாரம் (காணொளி) அரபு உணவுக்கூடங்கள் என்பது இந்தியாவில், அதிலும் தமிழகத்தில் சுமார் அரை நூற்றாண்டுக்கும் முன்னதாகவே அறிமுகமான ஒன்றுதான். நூற்றுக்கணக்கான பிரத்யேக அரேபிய உணவுக்கூடங்கள் மாநிலம் முழுவதும் இயங்கி வந்திருக்கின்றன. ஆனாலும், தமிழகத் தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை, கடந்த 10 ஆண்டு காலகட்டத்தில் அவற்றின் வளர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக, ஷவர்மா என அழைக்கப்படும் உணவு வகைகள் விற்கப்படும் துரித உணவு கூடங்கள் சென்னையில் பெருகி வருகின்றன. துரித உணவு கலாச்சாரத்திற்கு மாறி வரும் இளைய தலைமுறையினர் பலர் தற்போது இந்த உணவை அதிகம…
-
- 1 reply
- 845 views
-