தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10260 topics in this forum
-
பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: இன்று ஆரம்பம். பழனியில் கண்காட்சி-கலைநிகழ்ச்சிகளுடன் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், இம்மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்பதாக தெரிவக்கப்பட்டுள்ளது.பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் இன்று ஆரம்பித்து வைத்துள்ளார். இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து சுமார் 1 இலட்சம் முருக பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, பழனியில், உலக அளவில் முருகன் மாநாடு நடப்பதால் பழனியே விழாக்கோலம் பூண்டு…
-
-
- 6 replies
- 549 views
- 1 follower
-
-
பழைய பலத்தை இழந்து வருகிறதா தி.மு.க ? | Socio Talk | Current Status of DMK கலைஞர் கருணாநிதி உடல்நிலை குறைவால் கட்சியை அவரால் பெரும் அளவு கவனிக்க முடியாமல் ஸ்டாலினை செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். ஸ்டாலின் இயக்கும் தி.மு.க இப்போது தனது பலத்தை இழந்து வருகிறது என கூறப்படுகிறது. கருணாநிதி நலமாக இருந்தால் இப்போது நடக்கும் அ.தி.மு.க ஆட்சியை களைத்து இருப்பாரோ? இப்போது உள்ள தி.மு.கவின் நிலை என்ன தெரியுமா? அழகிரி முதலமைச்சரானால் என்ன ஆகும் தமிழகம். மேலும் பல கேள்விகளும், விடைகளும்.
-
- 1 reply
- 502 views
-
-
கோப்புப் படம்: நாகர கோபால். ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது அறிவிப்பை அடுத்து பொதுமக்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க உதவி மையம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது மத்திய ரிசர்வ் வங்கி. பழைய ரூ 500 மற்றும் ரூ 1000 நோட்டுகள் செல்லாது என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதையொட்டி, இந்திய ரிசர்வ் வங்கி தனது www.rbi.org.in இணையதளத்தில் இது குறித்து பொதுவாக எழுப்பப்படும் வினாக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் சந்தேங்களுக்கு / கேள்விகளுக்கு விளக்கும் அளிக்க, இந்திய ரிசர்வ் வங்கி, சென்னை அலுவகலத்தில் ஒரு உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக பொது மக்கள் பின்வரும் தொடர்பு எண்களை அணுகலாம்: 044 25381390/ 25381392 என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவி…
-
- 11 replies
- 1k views
-
-
பவரியா கொள்ளையர்களைப் பிடித்தது எப்படி? 2005ல் தமிழ்நாட்டில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்த பவரியா கொள்ளைக் கும்பலை தமிழக காவல்துறையினர் பல மாத முயற்சிக்குப் பிறகு கைதுசெய்தனர். சமீபத்தில் வெளியான தீரன் திரைப்படத்தின் கதை இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது. மிகவும் அஞ்சப்பட்ட இந்த பவரியா கொள்ளையர்களை காவல்துறை கைதுசெய்தது எப்படி? 2005ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனக்குளம். உள்ளடங்கி அமைந்திருந்தது அ.தி.மு.கவின் கும்மிடிப்பூண்டித் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சருமான சுதர்சனத்தின் வீடு. தமிழகத்தை அச்சத்துக்குள்ளாக்கிய கொள்ளை சம்பவம் …
-
- 0 replies
- 1.3k views
-
-
மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனின் வங்கிக் கணக்கு, சொத்துக்களை முடக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பவரின் புகழ் மாநிலம் கடந்தும் பரவி உள்ளதால், தமிழ்நாடு மட்டுமல்லாமல், ஆந்திரா, கேரளாவைச் சேர்ந்தவர்களும் அவர் மீது புகார் அளித்த வண்ணம் உள்ளனர். இது தொடர்பாக போலீஸ் தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பவர் ஸ்டார் பற்றிய வாழ்க்கைக் குறிப்பே உள்ளது. “மதுரை சிம்மக்கல்லை சேர்ந்த பவர்ஸ்டார் சீனிவாசன், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. படித்து, பின்னர் சைனா யூனிவர்சிட்டியில் தபால் முறையில் அக்குபஞ்சர் டாக்டருக்கு படித்துள்ளார். இவர் மதுரையை சேர்ந்த விஜியாவை திருமணம் செய்து தற்போது பிரிந்துள்ளார். 2-வது மனைவி ஜுலியுடன் அண்ணாநகரில…
-
- 0 replies
- 340 views
-
-
சென்னை: நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மீது தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் நில மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடி புகார்கள் உள்ளது. குறிப்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் 6க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. சில மாதங்களுக்கு முன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். இந்நிலையில், டெல்லியில் கட்டுமான நிறுவன தொழிலதிபரான திலிப் என்பவரிடம் பல கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக கூறி முன்பணமாக ரூ.10 கோடியை பவர் ஸ்டார் சீனிவாசன் வாங்கி உள்ளார். ஆனால் சொன்னபடி தொழிலதிபருக்கு கடன் பெற்று தரவில்லை ஆனால் கடன் பெற்று தருவதற்கான கமிஷனை மட்டும் பெற்று கொண்டு மோசடி செய்துள்ளார். இதுகுறித்து திலிப் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தார். …
-
- 1 reply
- 521 views
-
-
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங் நீக்கப்பட்டதை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறித்து நான் கருத்து தெரிவிக்க மாட்டேன். நீதிமன்றத் தீர்ப்பு குறித்து நான் எப்போதுமே கருத்து தெரிவிப்பதில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதில்கள்... கேள்வி - ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த நீதிபதிக்கு பதவி நீடிப்பு வழங்க வேண்டுமென்று, ஜெயலலிதா தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் மீது உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு பற்றி தங்கள் கருத்து என்ன? கருணாநிதி - உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றியோ, உயர்நீதிமன்றத் தீ…
-
- 0 replies
- 415 views
-
-
தமிழகத்தில் செயற்பட்டு வரும் தமிழ்நாடு விடுதலை இயக்கத்தின் 6 உறுப்பினர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 6 பேரும் முன்னாள் மத்திய அமைச்சர்களான பா.சிதம்பரம் மற்றும் வி.நாராயணசாமி ஆகியோரை, குண்டுத்தாக்குதல் மூலம் கொலை செய்ய முயன்றனர் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய புலனாய்வு நிறுவனம் இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. சுதந்திரமான தமிழ்நாட்டை நோக்காக கொண்டு தமிழர் விடுதலைப்படை என்ற பெயரில் இயங்கிவரும் இந்த இயக்கம் நக்ஸலைட் இயக்கமாக செயற்பட்டு வருகிறது. குறித்த இரண்டு அமைச்சர்களும் கூடங்குளம் அணுமின்சார திட்டத்துக்கு ஆதரவளித்து வருகின்றமைக்கு எதிர்ப்பை காட்டும் முகமாகவே …
-
- 0 replies
- 381 views
-
-
அண்ணா பிறந்த நாளை ஒட்டி, அடுத்த மாதம், 15ம் தேதி, திருவள்ளூரில் ம.தி.மு.க.,வின் மாநில மாநாடு நடக்கிறது. ம.தி.மு.க.,வினரைப் பொறுத்த வரையில், இந்த மாநாட்டு முடிவுகளை ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர். ஏனென்றால், இம்மாநாட்டில் தான், 2016 சட்டசபைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து, வைகோ அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எதிரான முழக்கம் : தமிழகத்தில், பா.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள, ம.தி.மு.க., தடம் மாறுகிறதோ என்ற சந்தேகத்தை, அக்கட்சித் தலைவர் வைகோவின் தொடர் அறிக்கைகள் ஏற்படுத்துகின்றன. பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா அன்று துவங்கிய, மத்திய அரசுக்கு எதிரான அவரது முழக்கம், தொடர்ந்து கொண்டே போகிறது. இதுகுறித்து, ம.தி.மு.க., வட்டாரம் மேலும் கூறியதாவது: இந்தி மொழிக்கு மு…
-
- 0 replies
- 563 views
-
-
பா.ஜ., மீது சசி அணி பாய்வது ஏன்? அ.தி.மு.க., சசிகலா அணிக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., பொதுச் செயலரான சசிகலா, முதல்வராக முயற்சித்த போது, அவரை பதவியேற்க அழைக்காமல், கவர்னர் தாமதம் செய்தார். அதன் பின்னணியில், பா.ஜ., இருப்பதாக, சசிகலா குடும்பத்தினர் சந்தேகித்தனர். சசிகலா பதவியேற்புக்கு முன், சொத்து குவிப்பு வழக் கில், உச்ச நீதிமன்றம், சிறை தண்டனையை உறுதி செய்ததால், அவர் சிறை சென்றார். பின், அவர் ஆதரவாளரான பழனிசாமி முதல்வரானார். அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என, அறிவிக்கும் படி, அ.தி.மு.க., பன்னீர…
-
- 0 replies
- 358 views
-
-
14/12/2013 சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு, அனைத்திந்திய முஸ்லீம் முன்னேற்றக் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பதற்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. இந்நிலையில், பா.ஜ.க.வின் தேர்தல் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதில் இருந்து, அவர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என ஒவ்வொரு கட்சி தலைமையும் ஆலோசித்து வருகிறது. இதேபோன்று தமிழ்நாட்டில் பா.ஜ.க. தலைமையில் பல்வேறு கட்சிகளை சேர்த்து கூட்டணி அமைக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. பா.ஜ.க. கூட்டணியில் ம.தி.மு.க. சேர்வது உ…
-
- 1 reply
- 609 views
-
-
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வைகோ விலகப் போவதாகவும், இது தொடர்பாக 8ஆம் தேதி இதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அப்போதைய பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரை சந்தித்து, முதன்முதலாக பா.ஜ.க. கூட்டணியில் வைகோ இணைந்தார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், கடந்த வாரம் சார்க் மாநாட்டின்போது, இலங்கை அதிபர் ராஜபக்சவை சந்தித்து பேசிய மோடி, இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெறவும் வாழ்த்து தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வைகோ, ''ப…
-
- 0 replies
- 512 views
-
-
11, ஜனவரி 2014 திருச்சியில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஆர்.சி.பாபு தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், கட்சியில் வட்டார மற்றும் வட்ட கமிட்டியை அமைக்க வேண்டும். கட்சிப் பற்றுள்ள இளைஞர்களுக்கு பிரதிநிதித்துவம் தர வேண்டும். இளைஞர்களை நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் 23 லட்சம் புதிய வாக்காளர்கள் உள்ளனர். ஒவ்வொரு தொகுதிக்கும் சராசரியாக 70,000 வாக்காளர்கள் புதியவர்கள். அவர்கள் 18 முதல் 22 வயதுக்குள்பட்டவர்கள். காங்கிரஸ் கட்சிக்கு நீண்ட வரலாறும், பாரம்பரியமும் உண்டு. ஆனால் இதை இளைஞர்கள் தெரிந்திருக்…
-
- 0 replies
- 424 views
-
-
சென்னை: ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவை, பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஒருமையில் பேசியதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடுமையான வார்த்தை பிரகடனம் செய்வது நல்லதல்ல என்பதை இனியாவது புரிந்து கொண்டு, பிரதமரின் செயலுக்கு தமிழகத்திலே எப்படிப்பட்ட எதிர்ப்பு இந்த ஒரு விஷயத்தினால் ஏற்பட்டுள்ளது என்பதை அவரிடமே தெரிவித்து, மேலும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடக்காமல் பார்த்துக் கொள்வதுதான் அந்தக் கட்சிக்கே நலன் பயக்குமே தவிர, கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவது அந்தக் கட்சிக்கும், அந்தக் கட்சியின் தலைமையிலே நடைபெறும் மத்திய ஆட்சிக்கும் நன்மை பயக்காது. கடந்த வாரம் நேபாள நாட்டில் சார்க் மாநாடு ந…
-
- 3 replies
- 712 views
-
-
பா.ஜ.க.வின் தலைவர்கள் கிங் மாஸ்டர்கள்: தமிழிசை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா ஆகிய இருவரும், கிங் மாஸ்டர்கள் என, மாநிலங்களவை தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். இருவரும் ரிங் மாஸ்டர்கள் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை ஆகியோர் தெரிவித்த கருத்திற்கு நேற்று (புதன்கிழமை) பதில் கருத்து வழங்கிய அவர் மேற்படி கூறியுள்ளார். பா.ஜ.க.வின் தலைவராக அமித்ஷா பொறுப்பேற்பதற்கு முன்னாள், நான்கு மாநிலங்களில் ஆட்சி செய்து கொண்டிருந்த பாரதிய ஜனதா கட்சியை தாம் பொறுப்பேற்ற பின்னர் 22 மாநிலங்களுக்கு விரிவுபடுத்திய கிங் மாஸ்டர்கள் குறித்த தலைவர்கள் எனக் கூறியுள்ளார். அதேபோன்று இன்று காங்கி…
-
- 1 reply
- 683 views
-
-
மதுரையில்..... அமித்ஷா முன்னிலையில், பா.ஜ.க.வில் இணைகிறார் மு.க. அழகிரி? சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி பாரதிய ஜனதா கட்சியில் இணையப்போவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரையில் வரும் 15-ந் தேதி பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா முன்னிலையில் தமது ஆதரவாளர்களுடன் அழகிரி ஐக்கியமாவார் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. காமராஜரின் பிறந்தநாள் ஜூலை 15-ந் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடார் மகாஜனம் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்த விழாவில் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா பங்கேற்று, காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். இதன்பின் பகல் 12 மணிக்கு நடக்கும் பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகிறார். மதுரை ராஜா முத்தையா மன்றத்த…
-
- 3 replies
- 410 views
-
-
பா.ஜ.கவின் வருகை இலங்கை மக்களுக்கு மறுவாழ்வை தந்துள்ளது – தமிழிசை! பாரதிய ஜனதா கட்சி ஆட்ச்சிக்கு வந்த பின்னர் தமக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது என இலங்கை மக்கள் கூறுவதாக, பா.ஜ.க வின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “பா.ஜ.க தமிழகத்திற்கு தேவையான நல்ல திட்டங்கள் பலவற்றை அளித்துக்கொண்டிருக்கிறது. பா.ஜ.க எதைக் கொண்டுவந்தாலும் தி.மு.க அதனை எதிர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் பிரதமரின் வருகை எங்களுக்கு மறுவாழ்வை தந்துள்ளது என இலங்கை மக்கள் கூறுகிறார்கள் தற்போது வேலூர் தேர்தல் நடைபெறுவதற்கு காரணமே தி.மு.கதான். ஆனால…
-
- 1 reply
- 506 views
-
-
பா.ஜ.கவில் இணைந்தார் பவர் ஸ்டார் நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துகொண்டுள்ளார். அக்குபன்ஞ்சர் வைத்தியரான சீனிவாசன் சொந்த திரைப்படம் மூலம் பவர் ஸ்டார் சீனிவாசனாக சினிமாவுக்கு வந்தார். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகராக இருந்த அவர், நடிகர் ஆன பிறகு அரசியலுக்குள் நுழைய முயன்றார். தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ் கட்சியில் சேர முயன்ற சீனிவாசன் மீது பல்வேறு பண மோசடி வழக்குகள் இருப்பதால் அந்த கட்சிகள் அவரை சேர்த்துக் கொள்ளவில்லை. இறுதியாக பாரதிய ஜனதா கட்சியில் சேர விருப்பம் தெரிவித்தார். அந்தக் கட்சியும் பச்சைக்கொடி காட்ட நேற்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன…
-
- 1 reply
- 536 views
-
-
பா.ஜ.கவுக்கு எதிராக அணி திரட்டும் கார்டன்! டெல்லியை கலக்குமா ஜனவரி? மத்திய அரசுக்கு அ.தி.மு.க.வின் எதிர்ப்பை தெரிவிக்க பா.ஜ.க.வின் எதிரணியிலிருக்கும் அரசியல் தலைவர்களுடன் கூட்டு சேர கார்டன் வட்டாரங்கள் முடிவு செய்திருப்பதாக ரகசிய தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கார்டனில் சில நாட்களுக்கு முன்பு ரகசிய கூட்டமும் நடந்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மத்திய அரசின் கெடுபிடி தமிழகத்தில் அதிகமாக இருப்பதை உணர முடிகிறது. வருமான வரித்துறை சோதனையால் அ.தி.மு.க.வினர் கதிகலங்கி நிற்கின்றனர். தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ் தலையிலேயே வருமான வரித்துறை 'கை' வைத்து விட்டது. அடுத்து யார் என்ற பதற்றம், அ.தி.…
-
- 0 replies
- 426 views
-
-
பா.ஜ.கவுடனான கூட்டணி நீடிக்குமா – ஜெயக்குமார் விளக்கம்! உள்ளுராட்சி தேர்தலிலும் பா.ஜ.கவுடனான கூட்டணி நீடிக்குமா என்பது குறித்து அதிமுக தலைமை தான் தீர்மானிக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி குறித்து விளக்கம் அளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘உள்ளுராட்சி தேர்தல் அறிவிப்புகளுக்குப் பிறகே மற்ற கட்சிகளுடனான கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். சட்டப்பேரவை தேர்தல் தோல்வி தொடர்பாக கட்சி தலைமை உரிய நடவடிக்கை எடுக்கும்’ எனத் தெரிவித்தார். https://athavannews.com/2021/1227208
-
- 0 replies
- 424 views
-
-
பா.ம.க. கட்சி நிறுவனத் தலைவர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து அக் கட்சியினர் வட மாவட்டங்களில் பஸ் உடைப்பு, பஸ்ஸூக்கு தீ வைப்பு போன்ற வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டனர். இதில் புதன்கிழமை மாலை வரை 120 பஸ்கள் உடைக்கப்பட்டிருப்பதாகவும், 4 பஸ்கள் எரிக்கப் பட்டிருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர். அனுமதியின்றி போராட்டம் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக 2,137 பேர் கைது செய்யப்பட்டனர். மரக்காணத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பா.ம.க.சார்பில் விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி வழங்காததால், போராட்டத்தில் கலந்துகொள்வோர்க…
-
- 0 replies
- 454 views
-
-
2011-ம் ஆண்டின் சட்டசபை தேர்தலில், தி.மு.க. தலைமையில் அமைந்த கூட்டணியில் இடம் பெற்றிருந்த, பா.ம.க. படுதோல்வி அடைந்தது. சட்டசபை தேர்தலில் வன்னியர், ஆதிதிராவிடர் ஆகிய இரு சமுதாயத்திலிருந்தும், சுமார் 50 சதவீதம் ஓட்டுகள் அ.தி.மு.க.வுக்கு கிடைத்தன. அதையடுத்து நடந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., தனித்துப் போட்டியிட்டது. வட மாவட்டங்களில் பெருவாரியான வெற்றியை பெற்றது. தனித்துப் போட்டியிட்ட பா.ம.க. 3.5 சதவீதம் வோட்டுகளை தான் பெற முடிந்தது. இந்தக் கணக்கை பார்த்த அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளுமே பா.ம.க.வின் செல்வாக்கு சரிந்துள்ளதை உறுதி செய்து கொண்டன. அக்கட்சியுடன் இனிமேல் கூட்டணி அமைக்க தேவையில்லை என, இரு கட்சிகளும் முடிவெடுத்து உள்ளன. இந்த மெசேஜ் ராமதாஸூக்கு போக அவர், ஏதோ…
-
- 0 replies
- 372 views
-
-
சென்னை : பாமக சார்பில் 117 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் ஏற்கனவே 2 கட்டங்களாக வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று 3ம் கட்டமாக 90 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் பென்னாகரம் தொகுதியில் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி போட்டியிடுகிறார். இவர் தற்போது தர்மபுரி எம்.பி.,யாக இருந்து வருகிறார். அன்புமணி சட்டசபை தேர்தலில் முதல் முறையாக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. இக்கட்சியின் ஜி.கே.மணி மேட்டூர் தொகுதியில் போட்டியிட உள்ளார். பாமக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் விபரம் : 1. பென்னாகரம் - அன்புமணி 2. மேட்டூர் - ஜி.கே.மணி 3. சீர்காழி - பொன்.முத்துக்குமார் 4. தஞ்சாவூர் - குஞ்சிதபாதம் 5. பாபநாசம் - ஆலயமணி 6. பேராவூரமணி - கலைவே…
-
- 0 replies
- 445 views
-
-
சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணியை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள தி.மு.க தலைவர் கருணாநிதி, பா.ம.க.வினர் நாவடக்கத்துடன் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ம.க தலைவர் ராமதாஸை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் நாவடக்கம் இல்லாமல் பேசுவது இயல்புதான் என்றும் கூறினார். பா.ம.க.வினருக்கு நாடவடக்கம் வேண்டும் மனிதாபிமான அடிப்படையில் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய கருணாநிதி, பா.ம.க.வினர் நாவடக்கத்துடன் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். ஓராண்டுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்கில் அன்புமணியை கைது செய்தது சரியென்று தோன்றவில்லை என்று கருணாநிதி கூறினார். …
-
- 0 replies
- 318 views
-
-
சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை கண்டித்து அக்கட்சியினர் இன்றும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள் எரிப்பு, கண்ணாடிகள் உடைப்பு, சாலைகளில் மரங்களை வெட்டி போட்டு பா.ம.க.வினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் வட மாவட்டங்களில் பதற்றம் நிலவி வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த 25ஆம் தேதி மாமல்லபுரத்தில் சித்திரை நிலவு பெருவிழா நடந்தது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து விழாவிற்கு சென்ற ஆயிரக்கணக்கானோரில் சிலர் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் பேருந்துகள், கார்கள் எரிக்கப்பட்டன. தலித் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதனிடையே, மரக்காணம…
-
- 1 reply
- 932 views
-