தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
முல்லைப் பெரியாறு அணை வழக்கின் இறுதி விசாரணை ஜூலை 23ஆம் தேதி நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 136ல் இருந்து, 142 அடிகளாக உயர்த்த வேண்டும் என்று 2006ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இதனை ஏற்றுக் கொள்ளாத கேரள அரசு, அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக, இரு மாநில அரசுகளும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் பல மாதங்களாக விசாரணை நடந்து வந்தது. இதனிடையே, முல்லைப் பெரியாறு அணை வலுவுடன் உள்ளது என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் குழு 50 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கை தாக்கல் செய்தது. இந்த ஆய்வறிக்கை மீது தமிழகம், கேரளா அரசு வ…
-
- 0 replies
- 362 views
-
-
தேக்கடி: மது பாட்டில்களுடன் வந்ததாகக் கூறி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஐந்து பேரை கேரள போலீஸார் அடாவடியாக கைது செய்து சில மணி நேரங்களுக்குப் பிறகு விடுவித்துள்ளனர். கேரளாக்காரர்களின் அட்டகாசத்திற்கும், அநியாயத்திற்கும் அளவே இல்லை. குறிப்பாக முல்லைப் பெரியாறு அணை பொறுப்பில் உள்ள தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளை அவர்கள் ரொம்பவே அவமானப்படுத்தும் வகையில் நடத்துவது வழக்கம். இதை உறுதியுடன் எதிர்க்க இதுவரை தமிழக அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இதனால் தமிழக அதிகாரிகள், கேரளத்தினரிடம் தொடர்ந்து அவமரியாதைகளைச் சந்தித்து வருகின்றனர். முல்லைப் பெரியாறு அணை பகுதி மற்றும் தேக்கடியில் அதேபோல், பொதுப்பணித் துறை உதவி செயற் பொறியாளர் அலுவலகம், பொறியா…
-
- 0 replies
- 339 views
-
-
வேலைப் பளுவினிடையே இந்த செய்தியை தற்பொழுது பார்த்தேன்.. தமிழர் பிரச்சனையாயிற்றே என்ற வகையில் இங்கே பதிவிடுகிறேன்.. ஈழத்தில் நடந்த துயரங்களுக்கு தமிழகத்தில் யாரும் கண்டுகொள்ளவில்லையென "குய்யோ..முறையோ" என குரலெழுப்புபவர்கள், தமிழகத்தில் அண்டை, மத்திய அரசுகளால் வஞ்சிக்கபட்டுவரும் செய்திகளை யாரேனும் அறிவீர்களா? குரலெழுப்பியுள்ளீர்களா? முல்லைப் பெரியாறு அணை: கேரளாவின் மனு சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி! முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து, கேரள அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உ…
-
- 38 replies
- 1.9k views
-
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image caption தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணையும் புதிதாக கட்டத் திட்டமிடப்பட்டுள்ள இடமும் தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணைக்கு கீழே புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கான வரையறைகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்திருப்பது தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களின் பாசனத்திற்கும் குடிநீருக்கும் ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை, கேரள மாநில எல…
-
- 0 replies
- 396 views
-
-
தேனி: முல்லைப் பெரியாறு அணையின் மதகு பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த கேரள எம்.எல்.ஏ., தமிழக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவிலுள்ள பீர்மேடு தொகுதி எம்.எல்.ஏ. பிஜிமோள், தனது ஆதரவாளர்கள் சுமார் 30 பேருடன், அதிவிரைவு படகு மூலம் முல்லைப் பெரியாறு அணைக்கு இன்று சென்றார். அப்போது அங்கு அத்துமீறி அணை பகுதியில் நுழைந்த அவர்கள், வேகமாக மதகு பகுதிக்கு சென்றிருக்கின்றனர். மேலும், அங்குள்ள சில இடங்களை இடித்து சேதப்படுத்தினார்களாம். இதையடுத்து, தமிழக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மாதவன் அங்கு செல்லக்கூடாது எனவும், சில இடங்களை இடித்ததையும் தட்டிக்கேட்டாராம். இதனால், ஆத்திரமடைந்த பிஜிமோள் மற்றும் அவரது ஆதரவாளர்கள…
-
- 0 replies
- 449 views
-
-
தீய நோக்கோடு உள்ளவன், ஒற்றுமையாய், திட்டமிட்டு, தான் பலமுறை தோற்றாலும் முட்டி மோதுகிறான், "ஏன் ஈழத்தமிழர்களில் தங்கள் இலக்கை அடைவதில் சோர்வுற வேண்டும்?" என்ற நினைவே இன்று இச்செய்தியை படிக்கையில் மனதில் தோன்றியது. முல்லைப் பெரியாறு: புதிய அணை ஆய்வுக்கு அனுமதி: மத்திய அரசுக்கு முதல்வர் கண்டனம். முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த, கேரளத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள தமிழக அரசு, இது நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிரானது எனக் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சனிக்கிழமை எழுதிய கடித விவரம்: முல்லைப் பெரியாறு பகுதியில…
-
- 1 reply
- 427 views
-
-
முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறந்து 125-வது ஆண்டு நிறைவு: விவசாயிகள் பொங்கல் வைத்து மரியாதை கூடலூர், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு 125 ஆண்டு நிறைவடைகிறது. இதை நினைவுகூரும் வகையில் விவசாயிகள் பொங்கல் வைத்தும், பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செய்தனர். தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் நீர்ப்பாசன ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையை இங்கிலாந்து பொறியாளர் பென்னிகுவிக் கட்டினார். அவரை போற்றும் வகையில் அவருக்கு தமிழக அரசு கூடலூர் லோயர்கேம்பில் நினைவு மணிமண்டபமும், முழு உருவ வெண்கலசிலையும் அமைத்துள்ளது. கடந்த 1895-ம் ஆண்டு பென…
-
- 3 replies
- 810 views
-
-
முள்ளம்பன்றி தாக்கிய புலிக்குட்டி சிகிச்சைக்குப் பின் பாதுகாக்கப்பட்ட உறைவிடத்தில் விடுவிப்பு மோகன் பிபிசி தமிழுக்காக 5 ஜூன் 2022, 14:57 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TN FOREST DEPARTMENT படக்குறிப்பு, புலிக்குப் பிறந்தது... முள்ளம்பன்றியால் தாக்கப்பட்டு வனத் துறையால் மீட்கப்பட்ட புலிக்குட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு காட்டில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட உறைவிடத்தில் விடுவிக்கப்பட்டுள்ளது. சொந்தமாக வேட்டையாட புலிக்குப் பயிற்சி அளிப்பதே தங்கள் இலக்கு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் ஆனைமல…
-
- 1 reply
- 272 views
- 1 follower
-
-
முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்திற்கு எதிரான தமிழக அரசின் மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளது. முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்திற்கு அனுமதி தரக்கூடாது என்று கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் கிரி தாக்கல் செய்த இந்த மனுவை நீதிபதிகள் சந்திர மௌலி, குரியன் ஜோசப் அடங்கிய குழு விசாரணை செய்தது. தமிழக அரசின் இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்திற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். - See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=565022492306289846#sthash.OppsIsdJ.dpuf
-
- 2 replies
- 488 views
-
-
கனடிய பிரமரின் ஆதரவு குரல் முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கில் தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு தமிழ்நாடு அரசு அஞ்சலி செலுத்தாது ஏன் ❓
-
- 2 replies
- 872 views
-
-
உலகத் தமிழர் ஒற்றுமையை வலிமைப்படுத்துவோம்- திருமாவளவன் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாளில் உலகத் தமிழர்களுக்கு இடையிலான ஒற்றுமைக் கூறுகளை வலிமைப்படுத்த உறுதியேற்போம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை எம்.பி.யுமான தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் சிங்கள இனவெறிப் படையினர் நடத்திய அரசப் பயங்கரவாத ஒடுக்குமுறையில் இலட்சக் கணக்கான அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக சிங்கள இனவெறிக் கும்பலாட்சியினர் நடத்திய இறுதிப்போர், முள்ளிவாய்க்கால் என்னுமிடத்தில் பொதுமக்களின் மரண ஓலங்களுக்கிடையில் குருதிச் சேற்றில் ஓய்ந்தது. புலிகளுக்க…
-
- 34 replies
- 2.6k views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிப்பு- சென்னையில் வைகோ தலைமையில் இலங்கை தூதரகம் முற்றுகை Digital News Team முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். வைகோ தலைமையில் சென்னையில் இலங்கை துணை தூதரகம் முற்றுகையிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன. இதையடுத்து இன்று காலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரக…
-
- 1 reply
- 546 views
-
-
Published By: VISHNU 18 MAY, 2025 | 07:55 PM உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று (மே 18) இல் உறுதி ஏற்போம் என த.வெ.க. தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். மேலும் குறித்த எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது; மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும் என தனது வணக்கத்தை பதிவில் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/215098
-
-
- 9 replies
- 649 views
- 2 followers
-
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வு மற்றும் தமிழீழ விடுதலை போரில் தங்கள் இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு 26 மற்றும் 27 ஆகிய திகதிகளில் நடை பெறுகிறது. இதில் தொடக்க நிகழ்வாக 26 காலை 9.30 மணிக்கு 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடுதலுடன் நிகழ்வு ஆரம்பமாகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் அங்கு தொடர்சியாக நடை பெற உள்ளது. http://www.pathivu.com/news/35448/57//d,article_full.aspx
-
- 0 replies
- 525 views
-
-
சென்னை: முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாவுக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து அரசு தரப்பில் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தஞ்சாவூர் அருகே விளார் கிராமத்தில், உலகத்தமிழர் பேரமைப்பு சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவுக்கு காவல்துறை அனுமதி கோரி பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த தனி நீதிபதி, திறப்பு விழாவுக்கு அனுமதி அளிக்குமாறு தஞ்சை மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டு இருந்தார். இதை எதிர்த்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தஞசை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் மேல்முறையீடு செய்திருந்தார். அதில், விழா நடத்தப்பட உள்ள இடம் தொடர்ப…
-
- 0 replies
- 586 views
-
-
இலங்கை இறுதிக்கட்ட போரில் கொல்லப்பட்ட அப்பாவி தமிழர்களின் நினைவாக தஞ்சாவூர் விளார் பகுதியில் முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது. உலக தமிழர் பேரமைப்பு சார்பில் கடந்த 8-ந்தேதி இந்த நினைவு முற்றம் திறக்கப்பட்டது. இந்த நிலையில் முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்ட பகுதி நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது என கூறப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமித்து நினைவு முற்றம் கட்டப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு அதனை இடித்து அகற்றினர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதற்கிடையில் போலீஸ் விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் அங்கு ஒலி பெருக்கி பயன்படுத்தியதாக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் உள்பட 85 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக…
-
- 0 replies
- 406 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அண்ணாமலையா? புறக்கணிக்கும் பிரமுகர்கள்! மின்னம்பலம்2022-05-10 2009 மே 17 18 தேதிகள் உலக மனித உரிமை வரலாற்றில் ரத்தத்தால் நனைக்கப்பட்ட பக்கங்கள். விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டுப் போரில் இலங்கை ராணுவம் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ராணுவ உதவிகளோடு விடுதலைப் புலிகளை அழித்து, தமிழ் மக்களையும் பெருமளவில் கொன்று குவித்த நாள். இதை ஒட்டி ஒவ்வொரு வருடமும் மே மாதம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம் தமிழ் உணர்வாளர்களால் நடத்தப்படும். அந்தவகையில் இந்த வருடம் தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பாக வரும் மே 14 ஆம் தேதி சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில் 'முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை' நினைவேந்தல…
-
- 4 replies
- 812 views
-
-
நவம்பர் 27 மாவீரர் தினம். இந்த நாளை உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்கள் தமிழின உணர்வாளர்கள் அனுசரித்து வருவது வழக்கம். பொது இடங்களில் இந்த நிகழ்ச்சிக்கு தடைகள் இருந்த போதிலும் கடந்த ஆண்டில் சென்னை கடற்கரை போன்ற இடங்களில் குழந்தைகள், மாணவர்கள் ஏராளம் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்கள். இந்த ஆண்டு துயிலகம் போல தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் தின வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழகம் முழுவதிலும் இருந்து உணர்வாளர்கள் கலந்த கொண்டனர்.மேலும் வெளிநாடுகளில் இருந்தும் உணர்வாளர்கள் வந்து கலந்து கொண்டனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=438512473527673286#sthash.rRmszMKE.dpuf
-
- 0 replies
- 842 views
-
-
சென்னை: முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்க மாட்டோம் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. இலங்கையில் நடந்த உள்ளாட்டு போரில் பலியான ஈழ தமிழர்களின் நினைவாக தஞ்சாவூர் மாவட்டம், விளார் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற நினைவு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இது விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக விளார் பஞ்சாயத்து நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீசை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பழ.நெடுமாறன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் அக்னிகோத்ரி, சசிதரன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் சோமயாஜி ஆஜராகி முள்ளிவாய்க்கால் முற்றம் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளதாக அனுப்ப…
-
- 0 replies
- 493 views
-
-
சென்னை: முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்க உத்தரவிட்டுள்ள ஜெயலலிதாவின் செயலுக்கு பாவ மன்னிப்பே கிடையாது. அவரைப் பார்த்து உலகத் தமிழர்கள் காரித் துப்புவார்கள். முள்ளிவாய்க்கால் முற்றம் என்ன அவரது போயஸ் தோட்ட வீடு என்று நினைத்துக் கொண்டாரா என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாகப் பேசியுள்ளார். இலங்கையில் நடந்த போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டப்பட்டது. உலக தமிழ் பேரமைப்பு சார்பில் கடந்த 8-ம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெற்ற விழா கடந்த 10-ம் தேதி முடிவடைந்த நிலையில் இன்று காலை 500க்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்புடன் நினைவு முற்றம் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது. இந்த முள்ளிவாய்க்கால் நினைவு…
-
- 1 reply
- 359 views
-
-
நெல்லை: இலங்கை முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலை சம்பவத்தை நினைவுப்படுத்தும் வகையில் தஞ்சையில் அமைய உள்ள நினைவேந்தல் முற்றத்துக்கான நினைவு சுடர் பயணத்தில் ஈடுபட்டவர்களை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது. ஈழ தமிழர் படுகொலை சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் தஞ்சையை அடுத்த விளார் என்ற இடத்தில் நினைவேந்தல் முற்றம் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இந்த பணிகள் முடிவடைந்து வரும் 8 ஆம் தேதி அதனை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு தமிழ் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் முயற்சியில் அமைக்கப் பெற்றுள்ள இந்த நினைவிடத்திற்கு நினைவுச் சுடரை கொண்டு செல்லும் பயணம் இன்று தொடங்கியது. இந்த சுடர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, நினைவிடம் அமைந்துள்ள இடத்…
-
- 0 replies
- 521 views
-
-
முழு அடைப்பு: ஈழத் தமிழர்கள் சிந்திய ரத்தத் துளிகளின் பெயரால் வைகோ வேண்டுகோள்! சென்னை: ஈழத் தமிழர்களை மயான பூமியாக்கிய இலங்கையை, காமன்வெல்த்திலிருந்து நீக்கக் கோரி வரும் 12 ஆம் தேதி, தமிழகத்தில் நடைபெற உள்ள முழு அடைப்புக்கு ஆதரவு அளிக்கும்படி, ஈழத் தமிழர்கள் சிந்திய ரத்தத் துளிகளின் பெயரால் வேண்டுகிறேன் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கைத் தீவில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று ஒரு கருத்து உண்மையான உணர்வாளர்களாலும், 2008-2009 இல் ஈழத் தமிழ் இனப்படுகொலைக்கு உடந்தையாக செயல்பட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அப்போது அங்கம் வகித்த தமிழகத்தைச் சேர…
-
- 1 reply
- 515 views
-
-
முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கிறார் மஹிந்த - ராமதாஸ் பேச்சு பாமக நிறுவனர் ராமதாஸ் (02)வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் புதல்வர் பாலச்சந்திரன் சிங்களப் படையினரால், கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதை அறிந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் துயரத்திலும், கொந்தளிப்பிலும் இருக்க, பாலச்சந்திரனை நாங்கள் படுகொலை செய்யவே இல்லை என்று கூறி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றிருக்கிறார் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அதுமட்டுமின்றி, இந்தியாவின் காஷ்மீரிலும் மிகப்பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நடத்தப்பட்டிருப்பதாகவும், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதை எதிர்த்து வாக்களிக்க வ…
-
- 0 replies
- 538 views
-
-
2019 மக்களவைத் தேர்தலையொட்டி பிபிசி தமிழ் சார்பில் சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றுவரும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் "தமிழர் குரல்" தேர்தல் சிறப்பு நிகழ்ச்சியில் மாணவர்களின் கேள்விகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பதிலளித்தார். இந்தத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள், குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இந்தத் தேர்தலில் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள், ஜனநாயகம் குறித்த அவர்களுடைய கருத்து என்ன என்பவற்றை வெளிப்படுத்தவும் புரிந்துகொள்ளவும் வாய்ப்பளிப்பதே தமிழர் குரல்: நிகழ்ச்சியின் நோக்கம். இந்த …
-
- 0 replies
- 428 views
-
-
முஸ்லிம் மக்களை அ.தி.மு.க அரசு ஏமாற்றுகிறது – ஸ்டாலின் குற்றச்சாட்டு! In இந்தியா August 2, 2019 5:39 am GMT 0 Comments 1135 by : Krushnamoorthy Dushanthini முத்தலாக் சட்டமூல விவகாரத்தில் அ.தி.மு.க முஸ்லிம் மக்களை ஏமாற்றிவிட்டதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து ஆம்புர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொகுதிகளில் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்ட அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “முத்தலாக் தடை சட்டமூலத்தை பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் எப்படி இரட்டை ஆட்சி நடைபெறுகிறதோ அதேபோல் இந்த…
-
- 0 replies
- 498 views
-