Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ராஜீவ் கொலை குற்றவாளிகளின் விடுதலையை வலியுறுத்தி அ.தி.மு.க மீண்டும் கடிதம் ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி தமிழக ஆளுநருக்கு அ.தி.மு.க அரசு மீண்டும் கடிதமொன்றை அனுப்பி வைக்கவுள்ளது. ஏற்கனவே, எழுவரையும் விடுதலை செய்யுமாறு தீர்மானம் ஒன்றை வலியுறுத்தி தமிழக அரசு ஆளுநருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தது. ஆனால், அதற்கு இன்னும் உரிய பதிலை ஆளுநர் வழங்காதமையால், தமிழக அரசு சாபில் மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன் உட்பட 7 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், 7 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்…

  2. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது எந்த முடிவும் மேற்கொள்ளாமலிருக்கும் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த கண்ணதாசன் என்பவர் இந்த வழக்கினை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய, 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் …

  3. ராஜீவ் கொலை தொடர்பில் சிறையில் வாடும் பேரறிவாளன் வைத்தியசாலையில் அனுமதி! வேலூர் சிறையில் இருக்கும் ராஜீவ் கொலை குற்றவாளியான பேரறிவாளன்,சிறுநீரகம், எலும்பு தேய்மான கோளாறு காரணமாக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரஜீவ்காந்தி கொலை வழக்கில்,கைது செய்யப்பட்டு பல வருடங்களாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறையில் இருக்கும் பேரறிவாளன், உடல்நலக் குறைவு காரணமாக அவ்வப்போது அவதிப்பட்டு வருகிறார். இந்நிலையில் சிறுநீரகம் மற்றும் எலும்பு தேய்மான பிரச்சனை காரணமாக அடுக்கபாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்து…

  4. ராஜீவ் கொலை பின்னணியில் உள்ள 'உண்மையான சதிகாரர்கள்' யார்?- உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் கேள்வி பேரறிவாளன் | கோப்புப் படம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் பின்னணியில் மிகப்பெரிய சதி உள்ளதா? உண்மையான சதிகாரர்கள் யார்? என்று பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் கேள்வி எழுப்ப, சிபிஐ இதற்கு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகய் மற்றும் எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இந்த மனு விசாரணைக்கு புதனன்று வந்த போது, சென்னை தடா கோர்ட்டின் உத்தரவு இருந்தும் ராஜீவ் கொலை பின்னணியில் பெரிய அளவில் சதி நிகழ்ந்துள்ளதா என்பதை ஏன் விசாரிக்கவில்லை என்று சிபிஐ-க்கு வ…

  5. ராஜீவ் கொலை மர்மம் உடைக்கும் ‘தடா’ ரவி! தனு... அனுஜா - பொய் சொன்ன சி.பி.ஐ - சிவராசனுக்கு உத்தரவிட்டது சி.ஐ.ஏ ‘இந்திய உளவுத்துறைகளின் கண்கள் அந்தப் ‘பொருளின்’ மீது விழுந்துவிட்டிருந்தது. ஆமாம், தமிழகத்துக்குள் இயங்கிக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் மூன்று வயர்லெஸ் கருவிகளில் இரண்டு செயலிழந்து போய்விட்டன. மிஞ்சியிருப்பது ஒன்றுதான். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உளவுப்பிரிவுத் தலைவரான பொட்டம்மானுடன் நான் நேரடியாகப் பேசிக்கொள்ள கொடுக்கப்பட்டிருந்த கருவி அது. அதன் வழியாகத்தான் இருவரும் தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருந்தோம். பேசி முடித்தவுடன் தொடர்புகளை அறுத்துக்கொண்டு வேறு இடத்துக்குக் கொண்டுபோய் பதுக்கிவிடுவேன். அவ்வப்போது வெளிப்படும் ‘சமிக்ஞை…

  6. டெல்லி: ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுவிக்கலாம் என உச்சநீதிமன்றமே கூறியுள்ளது. எனவே மாநில அரசுக்கு 7 பேரையும் விடுவிக்க அதிகாரம் உள்ளது என்று தமிழக அரசு வழக்கறிஞர், உச்சநீதிமன்றத்தில் வாதிட்டார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி மரணதண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்தது. அத்துடன், மாநில அரசு விரும்பினால் அவர்களை விடுதலை செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இதையடுத்து, மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதனை எதிர்த்து மத்திய அரசு சார்பி…

  7. ராஜீவ் கொலை வழக்கில் 7பேர் விடுதலை முடிவை எடுக்க அரசு கால தாமதம் – அற்புதம்மாள் குற்றச்சாட்டு ஏழுபேர் விடுதலை தொடர்பாக மாநில அரசே முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றமே உறுதி செய்து 2 ஆண்டுகள் கடந்தும், தமிழக அரசு முடிவெடுக்காமல் தாமதிப்பதாக பேரறிவாளனின் தாயாரான அற்புதம்மாள் குற்றம் சாட்டியுள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரின் விடுதலை தொடர்பாக அரசியலமைப்புச் சட்டம் 161இன்படி ஆளுநரே முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு நேற்று இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனாலும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் குற்றம் சாட்டியுள்ளார். இவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் முதல்வர் ஜ…

  8. ஆளுநர் ஒப்புதல் இல்லாமலேயே 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள நளினி புதிய மனுத்தாக்கல் செய்துள்ளார். தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது அரசியலமைப்பு சட்ட விரோதம் என்று நளினி மனு தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்புகளை ஆளுநர் மீறி செயல்படுவதாக நளினி மனுவில் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் அடைக்கப்பட்டுள்ள அறையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போன் இருந்ததாக சிறையில் ரோந்து சென்ற போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் கோர்ட்டில் ந…

    • 0 replies
    • 350 views
  9. தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன், பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மனிதநேயம் கொண்டு அனைத்து பணிகளையும் தாயுள்ளத்தோடு தமிழகத்திற்கு செய்து வரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்களின் அன்பான வேண்டுகோள். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 25 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயகுமார், ராபர்ட் பயாஸ் ஆகியோரை மனிதநேய அடிப்படையில் கருணையோடு விடுதலை செய்ய வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள். பேரறிவாளன் உள்ளிட்டோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் 2014 ஆம் ஆண்ட…

  10. ராஜீவ் கொலை வழக்கில் நளினி, ரவிச்சந்திரன் விடுதலை மனு: நிராகரித்த உயர் நீதிமன்றம் 17 ஜூன் 2022, 05:17 GMT புதுப்பிக்கப்பட்டது 45 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நளினி ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்த 7 பேரையும் அரசமைப்புச் சட்டத்தின் 161வது பிரிவின் கீழ் விடுதலை செய்வது என 2018ம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு அமைச்சரவை முடிவு செய்து அந்த முடிவை ஆளுநர் …

  11. ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு தொடர்பு இல்லை என்பதை எப்படி ஏற்க முடியும்? நீதிபதிகள் கேள்வி ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு தொடர்பு இல்லை என்பதை எப்படி ஏற்க முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். #Perarivalan #Rajivmurdercase புதுடெல்லி: ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், தண்டனை தொடர்பான தீர்ப்பை திரும்ப பெறக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், சி.பி.ஐ. அதிகாரி தவறான தகவல் அளித்ததால் தனக்கு தண்டனை வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். பேரறிவாளனின் மனுவை நிராகர…

  12. ராஜீவ் கொலை வழக்கில்... சிறையில் இருக்கும், 7 பேர் விடுதலையில் தலையிட முடியாது- மத்திய அரசு. ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலையில் மத்திய அரசு தலையிட முடியாது என்று உள்துறை அமைச்சகம் ஆர்டிஐ மூலம் பதில் அளித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் வந்த போது படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முருகன், நளினி, சாந்தன், ஜெயக்குமார், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். தண்டனை காலம் முடிந்தும் சிறையில் இருக்கும் இவர்களை விடுவிக்க வேண்டும் என அவரது உறவினர்களும் ,தமிழ் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. …

  13. ராஜீவ் கொலை வழக்கு : எழுவர் விடுதலை குறித்து, விளக்கமளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு! முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழுபேரின் விடுதலைக் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கு தொடர்பில் சிறையில் இருக்கும் நளினி, ஆளுநரின் முடிவுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். குறித்த வழக்க இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டுள்ளது. இதன்போது இது குறித்து ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்காத நிலையில், நளினியை விடுதலை செய்வது குறித்து எவ்வாறு உத்தரவுப்பிறப்பிக்க முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்த…

  14. ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுவிக்க முடியாது! மத்திய அரசு திட்டவட்டம் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளை விடுவிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராஜீவ் கொலைவழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தங்களை விடுவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2012ல் மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுவில், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வருவதாக அவர்கள் கூறியிருந்தனர். ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள் 14 ஆண்டுகளிலேயே விடுதலை செய்யப்படுவதால் தங்களை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீ…

  15. பேரறிவாளன் வாக்கு மூலத்தை முழுமையாக பதிவுசெய்யவில்லை: முன்னாள் சிபிஐ அதிகாரி. ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அறிவு என்கிற ஏ.ஜி.பேரறிவாளனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பேரறிவாளன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது வி.தியாகராஜன் என்கிற ஐ.பி.எஸ். அதிகாரி சி.பி.ஐ. கேரள பிரிவின் எஸ்.பி.யாக இருந்தார். குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனின் வாக்கு மூலத்தை பதிவு செய்யும் பொறுப்பு சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜனுக்கு வழங்கப்பட்டது. தற்போது சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன் அளித்துள்ள பேட்டியொன்றில் பேரறிவாளனின் வாக்கு மூலத்தை தான் முழுமையாக பதிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார். பேரறிவாளளின் வாக்கு மூலத்தில் தான் மாற்றம் செய்ததால் அவர…

  16. ராஜீவ் கொலை வழக்கு மர்மம் - வெளிப்படுத்தும் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி மோகன்ராஜ் -

  17. ராஜீவ் கொலை வழக்கு-சில நியாயங்கள்! சில தர்மங்கள்! ராஜீவ் கொலை வழக்கில் கொலைக்கு உடந்தையாகவும் திட்டத்திற்கு உடந்தையாகவும் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்தவர்களில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவர்,23 ஆண்டுகள் சிறையிலிருந்ததாலும் கருணைமனு மீது முடிவெடுக்க மத்திய அரசு காலம் தாழ்த்தியதாலும் அவர்களின் மரணதண்டனையை உச்சநீதி மன்றம் ரத்து செய்தது. கூடுதலாக தண்டனை அனுபவித்ததால் அவர்களை விடுதலை செய்வது குறித்து மாநில அரசு முடிவெடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.தமிழக முதல்வர் அமைச்சரவைக் கூட்டத்தில் அவர்களுடன் ஏற்கெனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 23 ஆண்டுகள் சிறையிலிருப்பவர்களையும் சேர்த்து விடுவிக்க வேண்டும் என்று முடிவெடுத்ததையும் அதன்…

    • 0 replies
    • 644 views
  18. ராஜீவ் கொலை வழக்கு: 25 வருட சோகம்! மனம் நொந்த தாயின் கண்ணீர்! vikatan tv

  19. ராஜீவ் கொலை வழக்கு: 32 ஆண்டு சிறை வாழ்க்கை எப்படி இருந்தது ? - நளினி பேட்டி 30 நிமிடங்களுக்கு முன்னர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட ஆறு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் சிறப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தனது சிறை வாழ்க்கை, சட்டப் போராட்டம், ராஜீவ் காந்தி உள்பட 17 பேர் கொல்லப்பட்டது போன்றவை குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார் நளினி ஸ்ரீகரன். பேட்டியிலிருந்து. கே. 30 ஆண்டுகளுக்கும் …

  20. ராஜீவ் கொலை வழக்கு: 6 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனு பட மூலாதாரம்,GETTY IMAGES 29 நிமிடங்களுக்கு முன்னர் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நளினி உள்ளிட்ட 6 பேர் விடுவிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து இந்திய உச்ச நீதிமன்றம் கடந்த 11-ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தது. இதன்படி, நளினி, ஜெயக்குமார், ஆர்.பி.ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், சுதேந்திரராஜா, ஸ்ரீஹரன் ஆகியோர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். …

  21. பஞ்சாப்பிற்கும் தமிழகத்திற்கும் வைக்கும் இரட்டை நிலைப்பாடு அந்தப் பிரிவினையை வளர்க்காதா? ரவிச்சந்திரன் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக தற்போது சிறையில் இருக்கிறார்கள் ஏழு பேர். பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய இவர்களில், மதுரை சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன், அவர்களின் விடுதலை குறித்து பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். இதேபோன்று, மே மாதம் அவர் ஆளுநருக்கு தன்னுடைய விடுதலை குறித்துக் கடிதம் எழுதியதும் குறிப்பிடத்தக்கது. ரவிச்சந்திரன் அவர் எழுதிய கடிதத்தில், 8 சீக்கிய பிரிவினைவா…

    • 2 replies
    • 709 views
  22. ராஜீவ் கொலை- இன்னமும் தீர்க்கப்படாத சந்தேகங்கள் இருப்பதாக கூறிவந்த சிபிஐ அதிகாரி ரகோத்தமனும் மரணம்! May 12, 2021 முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கை விசாரித்த முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன்இ கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி தனது 72 ஆவது வயதில் சென்னையில் காலமானார். ரகோத்தமன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்தபோதுஇ அண்ணாமலை நியூஸ் என்ற வார இதழில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். சிபிஐயில் சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்த அவர் தேசிய காவற்துறை அகாடமியில் ஒரு வருடம் பயிற்சி பெற்றார். இந்தியாவின் பல்வேறு இடங்களில் பணியாற்றினார் மற்றும் ஊழல் தடுப்புஇ பொருள…

  23. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது என்ற தமிழக அரசின் முடிவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்ப்பு ஏப்ரல் 25 ஆம் திகதிக்குள் வெளியாகும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தகவல் தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்று வரும் மேற்கு மண்டல நீதிபதிகள் மாநாட்டில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கலந்துகொண்டார். அந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் மீதான வழக்கில் 25 ஆம் திகதிக்குள் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். …

    • 0 replies
    • 470 views
  24. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையில் வாதத்தை முன்வைக்க தமிழக அரசுக்கு ஒரு வாரம் அவகாசத்தை உச்ச நீதிமன்றம் வழங்கியது.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய ஏழு பேரும் ஆயுள் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களை விடுவிப்பது தொடர்பாக அனுமதி கேட்டு, அண்மையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. இந்நிலையில், ராஜீவ் கொலைக் கைதிகள் விடுதலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், பிரஃபுல்லா சி.பண்ட், ஏ.எ…

  25. ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ததில் காங்கிரசுக்கு உடன்பாடு இல்லை- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ததில் காங்கிரசுக்கு உடன்பாடு இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு கிண்டி கத்திப்பாராவில் உள்ள நேருவின் சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்கள். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , “ராஜீவ் கொலை வழக்கில் கைதானவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்கள். அவர்கள் நிரபராதிகள் இல்லை. நீதிமன்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.