தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10248 topics in this forum
-
தினமலரில் வந்த செய்தி லத்தி கையாள உரிமை கிடைக்குமா?: போலீசார் எதிர்பார்ப்பு இலங்கைக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க கோரி, தமிழகத்தில் மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என, கூறிக் கொள்வோர், போராட்டம் நடத்தி வரும் நிலையில், தடுப்பு ஆயுதம் ஏதும் இன்றி, நிராயுத பாணிகளாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். "லத்தி உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும்' என, போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையிலும், மாணவர்களும், சில அமைப்புகளும் ரயில் மறியல், மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களில், ஈடுபட்டு வருகின்றனர்.போராட்டத்தில் ஈடுபட…
-
- 5 replies
- 1.3k views
-
-
தனிஈழம் அமைத்திட ஐ.நா மேற்பார்வையில் ஈழதமிழ் மக்கள் மற்றும் புலபெயர்ந்த ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு உட்பட, கடந்த 60 வருடங்களாக ஈழ தமிழ் மக்கள் மீதும்,மலையகத் தமிழர்கள் மீதும் சிங்களப் பேரினவாத அரசு நடத்திய மனிதஉரிமை மீறல்கள்,போர் விதிமுறை மீறல்கள் அனைத்தும் இனஒழிப்பு நடவடிக்கைகளே.மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளை விசாரிக்க அனைத்துலக சுதந்திரமான விசாரணை ஒன்றை மேற்கொள்ளப்பட வேண்டும். இக் கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது ஐ.நா-வில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் கடந்த ஆண்டைப் போலவே! நீர்த்துப் போய்விட்டது. இதே சரத்துக்களுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் ஈழ தமிழ் மக…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கை அரசை பாதுகாப்பதிலேயே மத்திய அரசு கண்ணும் கருத்துமாக இருக்கிறது! March 20, 2013 11:48 am இலங்கை அரசை பாதுகாப்பதிலேயே மத்திய அரசு கண்ணும், கருத்துமாக இருக்கிறது என்று விஜயகாந்த் கூறினார். இது குறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஐ.நா. மன்றத்தின் சார்பில் ஜெனீவாவில் மனித உரிமைக் குழுவின் கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் மனித உரிமை மீறல் பற்றி மட்டுமே பேசப்படுகிறது. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முதலாவதாக கொண்டு வந்த தீர்மானத்தில், சுதந்திரமான, நம்பத்தகுந்த சர்வதேச விசாரணையும், ஐ.நா.மன்ற அதிகாரிகள் இலங்கை அரசின் சம்மதம் இல்லாமலேயே சென்று விசாரிக்கவும் வழிவகை செய்யப்பட்டிருந்தது. ஆனால் வரும் 21ஆம் திகதி வா…
-
- 1 reply
- 772 views
-
-
http://youtu.be/NUZ2KMvBD8M நன்றி நக்கீரன்.
-
- 1 reply
- 477 views
-
-
இலங்கை அதிபர் போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரி புதுச்சேரியில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் இன்று போராட்டம் நடந்தது. புதுச்சேரியில் உள்ள அண்ணா சாலையில் சோனியா காந்தி உருவபொம்மையை எரித்தனர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது, அங்கிருந்த மத்திய அமைச்சர் நாராயணசாமி அலுவலகம் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அலுவலக கண்ணாடி உடைந்தது. இதையடுத்து, அவர்களை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மத்திய அமைச்சர் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் இங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. http://www.vikatan.com/new/article.php?module=news&aid=13077
-
- 0 replies
- 507 views
-
-
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான மாணவர் போராட்டம், தமிழ்த் திரையுலகினைரையும் ஒருநாள் உண்ணாவிரதம் என்று கட்டாயப்படுத்தியிருக்கிறது. விஸ்வரூப விவகாரத்தில், தலிபான் உதாரணங்கைள காட்டி, தமிழக இஸ்லாமியர்களுக்கு அறிவுரையும் எதிர்ப்பும்; கமலுக்கு ஆதரவுமாக கருத்து சொன்ன பாடலாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் இருக்கிற எழுத்தாளர்களை, அமெரிக்க சார்ப்பு கொண்ட முதலாளித்துவ நாத்திகர்களை, தனது ரசிகர்களை, முதலாளித்துவ ஜனநாயகம் பேசிய கம்யுனிஸ்டுகளை இப்படி பலரை ஒன்று சேர்த்து தனக்காக போராட வைத்த வைத்த; காதல் மன்னன், சகலகலாவல்லவன், வைணவ பகுத்தறிவாளன், கதாநாயகிகள் எதிர்பாராத நேரங்களில் வாயோடு வாய் வைத்து ஹாலிவுட் தரத்தில் முத்தம் தரும் உலகநாயகன், திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதத்தில…
-
- 0 replies
- 683 views
-
-
10வது நாளில் : ஒரு கோடி மாணவர்கள் போராட்டம்! 20 மார்ச் 2013 தமிழகத்தில் மாணவர் எழுச்சி ஏற்பட்டு இன்று பத்தாவது நாளாகவும் தொடர்க்கிறது. இந்நிலையில் மாணவர்கள் ஒரு கோடி மாணவர்கள் திரளும் போராட்டத்தை நடத்துகின்றனர். சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள காந்தி சிலையில் இப்போராட்டம் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி மாணவர்போராட்டத்திற்கு அனைத்துக் கல்லூரி மாணவர்களும் திரண்டு வருகின்றனர். இந்நிலiயில் காவல்துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுகின்றனர். அதேவேளை நாளைய தினம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களிலும்இ சென்னையில் கல்லூரி சாலையிலும் மாணவர்கள் அமைதியான வழியில் பேரணி நடத்தவும் மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர். மாணவர் போராட்டத்தால் ஸ்தம்பித்த திருப்பூர் அத…
-
- 0 replies
- 531 views
-
-
நாகப்பட்டினம் மீனவர்கள் அரிவாளால் வெட்டி இலங்கைக் கடற்படை அட்டூழியம் செய்துள்ளது. கோடியக்கரை அருகே மீன்பிடித்தபோது இன்று அதிகாலையில் சுற்றிவளைத்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளது இலங்கை கடற்படை. இலங்கை கடற்படையினர் தாக்கியதில் படகின் உரிமையாளர் கண்ணையா, மீனவர்கள் சக்திகுமார், செல்வகுமார், பொன்னுசாமி ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் சிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படை சிறைப்பிடித்ததை எதிர்த்து கடலில் 4 மீனவர்களும் வாக்குவாதம் செய்துள்ளனர். மிரட்டலுக்கு பணிய மறுத்ததால் அரிவாளால் வெட்டியதாக இலங்கை கடற்படை மீது தமிழக மீனவர்கள் புகார் கூறியுள்ளனர்.http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13469:nagapattinam&catid=36:tamil…
-
- 1 reply
- 450 views
-
-
-
தமிழக மாணவர்களின் போராட்டமும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் ஈழத்திலிருந்து எஸ்.மயூரன் ஈழத்தமிழர்களின் 35 வருடகால அகிம்சைப் போராட்டமும் 26 வருட கால ஆயுதப் போராட்டமும் சிங்கள பௌத்த இனவாத அரசாங்கங்களினால் தோற்கடிக்கப்பட்டு ஈழத்தமிழ் மக்கள் சின்னாபின்னமாக ஆக்கப்பட்டு, 'எங்களைக் காப்பாற்ற யாருமே இல்லையா' என அவர்கள் ஆதங்கப்பட்டு தாங்கொணா உளச் சோர்வுகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் வேளையில்தான், எங்கள் இரத்த உறவுகளான தமிழக மாணவர்கள் 'நீங்கள் வேதனையில் துவள வேண்டாம் நாங்கள் இருக்கின்றோம்' என வீறுகொண்டு எழுந்தமை ஒவ்வொரு ஈழத்தமிழனின் நெஞ்சத்திலும் பால் வார்த்ததைப்போல் உள்ளது. இப்போது எங்களது நெஞ்சத்தில் இருந்து வழியும் இரத்தத்தினை உங்கள் இனப்பற்று என்னும் பால் கழுவத் தொடங்…
-
- 0 replies
- 552 views
-
-
ஈழப் பிரச்சினையும் விமர்சன மேதாவிகளும் - யமுனா ராஜேந்திரன் கிரிக்கெட் விளையாட்டு அதனது ரசிகர்களுக்கு 'குதூகலம்' தருவது. திரைப்படம் காட்சி 'இன்பத்துக்கு' ஆனது. நாடகம் மேடைச்சட்டகத்தில் பாத்திரங்களால் 'நடிக்கப்படுவது'. கடந்த முப்பதாண்டுகளில் இலங்கையில் நடைபெற்று வந்தது ஆயுத மோதல். முள்ளிவாய்க்காலுக்குப் பின்பு நடைபெற்று வருவது கருத்துக் களத்திலான, பிரச்சாரக் களத்திலான யுத்தம். ஜெனீவா என்பது இதனது களம். இலங்கைத் தமிழர்களின் போராட்டம் என்பதன் களம் மாறியிருக்கிறதேயொழிய யுத்தம் தொடர்கிறது. இந்த யுத்தத்தில் இலட்சக் கணக்கிலான மக்கள் இறந்திருக்கிறார்கள். தமிழகத்தில் போராடிக் கொண்டிருக்கிறவர்களை ஒரு விமர்சன மேதை 'முட்டாள்கள்' என்று வர்ணித்திருக்கிறார். சில விமர்சன மேதாவிகள்…
-
- 0 replies
- 588 views
-
-
http://youtu.be/mnAC5oUPv-I
-
- 0 replies
- 419 views
-
-
புத்தகயாவில் இருந்து சென்னைக்கு திடீரென வந்த 160 புத்த பிக்குகள்...! - தமிழக பொலிஸார் பலத்த பாதுகாப்பு..! [Tuesday, 2013-03-19 19:19:10] News Service இந்தியாவின் பீகார் மாநிலம், புத்தகயாவில் இருந்து சென்னைக்கு வந்த புத்த பிக்குகள் 160 பேரை தமிழக பொலிஸார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. சென்னை மத்திய ரயில் நிலையத்தில் வந்திறங்கிய அனைத்து புத்தபிக்குகளையும் பாதுகாப்பாக வானில் ஏற்றி, எழும்பூரில் பொலிஸ் ஆணையாளர் அலுவலகம் எதிரில் கென்னத் லேனில் உள்ள புத்த மடத்தில் கொண்டு தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்த புத்தபிக்குகள் மீது கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இந்த பரபர…
-
- 5 replies
- 746 views
-
-
மத்திய அரசிலிருந்து விலகும் கருணாநிதியின் நடவடிக்கையானது கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் போன்றது - ஜெயலலிதா அறிக்கை! [Tuesday, 2013-03-19 15:40:49] தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தன்னலத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதில் தனக்கு நிகர் யாருமில்லை என்பதை தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, "அமெரிக்காவின் வரைவு தீர்மானத்தை பெருமளவிற்கு நீர்த்துப் போக விட்டதோடு, தி.மு.க. முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனையும் செய்யவில்லை. எனவே,…
-
- 4 replies
- 536 views
-
-
இலங்கையில் நடந்த போர்க்குற்றத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை கண்டித்தும், இலங்கைக்கு எதிராக பன்னாட்டு விசாரணை அமைக்க வ-யுறுத்தியும், ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்தியா இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவும் தமிழ்நாடு ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் அதன் மாநில தலைவர் புரசை மோகன் யாதவ் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=94637
-
- 0 replies
- 482 views
-
-
திராவிட முன்னேற்ற கழகம் மத்திய அரசில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள போதிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பாக தி.மு.கவின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்கவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்திருந்தார். இந்நிலையில் மத்திய அரசில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் திமுக விலகுவதாக இன்று காலை அவர் அறிவித்தார். இது குறித்து மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், தி.மு.க தலைவர் கருணாநிதி ஒரு மூத்த தலைவர். அவரது அறிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. தி.மு.க.வின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது குறித்து நல்ல முடிவு எட…
-
- 2 replies
- 671 views
-
-
திமுக தலைவர் கருணாநிதி மத்திய அரசில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்திருப்பது ஒரு கபட நாடகம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா சாடியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில், இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, "அமெரிக்காவின் வரைவு தீர்மானத்தை பெருமளவிற்கு நீர்த்துப் போக விட்டதோடு, தி.மு.க. முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனையும் செய்யவில்லை. எனவே, ஈழத் தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலைகளே உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதற்குப் பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் தி.மு.க. நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால் தி.மு.க. மத்திய அமைச்சரவையிலிருந்தும், ஐக்கிய முற்போ…
-
- 1 reply
- 659 views
-
-
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் விலகுவதாக திமுக அறிவித்துள்ளது குறித்து இப்போதைக்கு சொல்ல ஏதுமில்லை என்று காங்கிரஸ் கட்சித் ஹலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும், மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாக திமுக தலைவர் கருணாநிதி இன்று காலை அறிவித்தார். இந்நிலையில் டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் முடிந்த பிறகு, இது குறித்த தகவல் சோனியா காந்தியிடம் தெரிவிக்கப்பட்டது,. காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் முடிந்த பிறகு வெளியில் வந்த சோனியாவிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேட்டபோது, திமுக விலகல் பற்றி இப்போதைக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று பதிலளித்தார்,. http://news.vikatan.com/?nid=13030#cmt241
-
- 3 replies
- 2.3k views
-
-
மத்திய அரசில் இருந்து விலகுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாளவளவன் இன்று அறிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ஈழத் தமிழர் விவகாரத்தை முன்னிறுத்தி, மத்திய அரசில் இருந்து விலகும் முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். ஐ.மு. கூட்டணியில் இருந்து திமுக விலகியதை அடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியும் விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது. http://dinamani.com/latest_news/article1508084.ece
-
- 1 reply
- 709 views
-
-
இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. ஆனால், இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக ஐ.மு., கூட்டணியில் இருந்து தி.மு.க., விலகியதன் எதிரொளியாக பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. மும்பை பங்குச்சந்தையின் சென்செகஸ் குறியீட்டு எண் 201.13 புள்ளிகள் சரிந்து 19092.07 புள்ளிகளோடும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 64.90 புள்ளிகள் சரிந்து 5770.35 புள்ளிகளோடும் காணப்பட்டன. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் (09.07 மணியளவின்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 13.77 புள்ளிகள் அதிகரித்து 19279.43 புள்ளிகளோடு காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 15.70 புள்ளிகள் அதிகரித்து 5850.95 புள்ளிகளோடு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.…
-
- 0 replies
- 628 views
-
-
இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக பார்லிமென்டில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., உறுப்பினர்களின் அமளி காரணமாக பார்லிமென்டின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலை அவை கூடியதும், தி.மு.க., அ.தி.மு.க., மற்றும் பிஜேபி., உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பினர். அ.தி,மு.க., தி.மு.க.,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அவையின் மையத்திற்கு சென்று, ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். ஐ.நா., மனித உரிமை சபையில்இந்தியா நடந்து கொண்ட விதம் கண்டனத்திற்க்குரியது எனக்கூறி கோஷங்கள் எழுப்பினர்.சபாநாயகர் சமாதானப்படுத்தும் முயற்சி தோல்வியடைந்ததால், அவையை நண்பகல் வரை ஒத்திவைத்தார். நண்பகல் 12 மணிக்கு லோக்சபா கூடியபோது, இலங்கை தமிழர் பிரசனை தொ…
-
- 1 reply
- 686 views
-
-
ஈழத்தமிழர்களுக்காக சின்னத்திரை தயாரிப்பாளர்களும் உண்ணாவிரதம் செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013 11:54 ஐ.நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கமும் பங்கேற்றுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ஆர்.ராதிகா சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 'இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக, அவர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க ஐ.நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய அரசு நிச்சயமாக ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி,…
-
- 0 replies
- 474 views
-
-
எழும்பூரில் தங்கியிருந்த புத்ததுறவிகள் அனைவரும் வெளியேறினர்! [Tuesday, 2013-03-19 08:49:38] எழும்பூரில் உள்ள புத்தமடாலயத்தில் தங்கியிருந்த புத்த துறவிகள் அனைவரும், நேற்று இரவு, டெல்லி புறப்பட்டுச் சென்றனர். ராஜபக்ச மீது நடவடிக்கை எடுக்க கோரி, தமிழகத்தில், பல்வேறு அமைப்பினர்கள் போராட்டங்களை நடத்தி வந்த சூழலில், ஆன்மிக சுற்றுலா சென்று வந்த இலங்கையைச் சேர்ந்த, 19 புத்த துறவிகள், நேற்று, காலையில் சென்னை, சென்ட்ரலுக்கு வந்தனர். இந்நிலையில், தமிழர்களால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இதையடுத்து, அந்த 19பேரும் எழும்பூர் புத்தமடாலயத்தில் தங்க வைத்தனர். மேலும், தமிழர்களால் தங்களுக்கு பிரச்னைகள் வரக்கூடும் என்பதால், நேற்று வந்தவர்கள், ஏற்கனவே அங்கு தங்கியிருந்தவர்கள் என…
-
- 1 reply
- 571 views
-
-
ஐ.மு.கூட்டணியில் இருந்து திமுக விலகல்: மத்திய அமைச்சரவையில் இருந்தும் விலகல்: கலைஞர் அறிவிப்பு. மேலதிக செய்திகள் விரைவில்...... -நக்கீரன்-
-
- 41 replies
- 2.9k views
-
-
வணக்கம் ! லயோலா திரி ஏற்றி தொடங்கி வைத்து, இப்போது தமிழகம் முழுதும் காட்டுத்தீயாய்ப் பரவிக்கொண்டிருக்கும் மாணவர்களின் ஈழப் போராட்டத்தைப் பற்றின முன்னுரை எவருக்கும் தேவையில்லை. அதனால் நான் நேரடியாக விடயத்திற்கு வருகிறேன். தொலைகாட்சியின் வாயிலாக நேற்று ஹைதராபாத்தில் நடந்த ஈழப் போராட்டத்தைப் பற்றி சிலர் அறிந்திருப்பீர்கள். அந்தப்போரட்டத்தை ஆரம்பித்து ஒருங்கிணைத்தவன் என்ற முறையில் எனது அனுபவத்தை இங்கு பகிர்கிறேன். வெள்ளிகிழமை (15/3/13) காலை 11 மணியளவில், அலுவலகம் கிளம்பும் முன்பாக சற்றென்று ஒரு விடயம் எனக்குப்பட்டது. ஞாயிறன்று மே - 17 இயக்கம் ,மற்றும் மாணவர் அமைப்பு மெரினா கடற்கரையில் நடத்தவிருக்கும் மிகப்பெரும் போராட்டத்திற்கு வலு…
-
- 1 reply
- 628 views
-