தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
2019ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு அரியலூரில் தொடங்கியது... பார்வையாளர்கள் ஆரவாரம் 2019- ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு அரியலூர் மாவட்டத்தில் தொடங்கி உள்ளது. ஏராளமானோர் ஆரவாரம் செய்து ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்து வருகின்றனர். அரியலூர் மாவட்டம் மலத்தான்குளம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.அரியலூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அலங்கரிக்கப்பட்ட 500 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க 300 மாடுபிடி வீரர்கள் களத்தில் அனுமதிக்கப்பட்டனர். வாடிவாசலிலிருந்து சீறிபாய்ந்து வந்த காளைகளை, காளையர்கள் அடக்க முயன்றனர். பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு வெள்ளிகாசுகள், கட்டில், ச…
-
- 0 replies
- 466 views
-
-
2019ல் கட்சி! - விஷால் அதிரடி! கல்யாணத்துக்கு ரெடி... பொண்ணு இன்னும் முடிவாகலை!கமலைப் பார்த்தாச்சு, ரஜினியையும் சந்திப்பேன்நடிகர்களுக்குச் சம்பளத்தைத் தூக்கிக் கொடுக்காதீங்க!ம.கா.செந்தில்குமார், படங்கள்: கே.ராஜசேகரன் ‘‘நூறு ரூபாய் செலவுல விவசாயி விதைக்கிறான். அதைவிட நூறு மடங்கு விலையில் அந்த விளைபொருளை நுகர்வோர் வாங்குறான். ஆனா, விவசாயிக்கு அசல்கூட மிஞ்சுறது இல்லை. இன்னைக்கு உள்ள தயாரிப்பாளர்களுக்கும் அந்த விவசாயிகளோட நிலைமைதான். தயாரிப்பாளர்கள் தயாரிக்கிற சினிமா, அவங்களைத்தவிர இன்னைக்கு மற்ற எல்லாருக்கும் பயன்தருது. அந்தப் பலன் தயாரிப்பாளருக்கும் கிடைக்க வழிவகை செய்றதுக்காக நாங்க எடுத்துவைக்கிற கடைசி அடிதான் இந்த வேலைநிறுத்தம்” - விஷா…
-
- 0 replies
- 809 views
-
-
202 வாக்குறுதிகள் நிறைவேற்றம்: முதல்வர் ஸ்டாலின் மின்னம்பலம்2021-09-25 4 மாதங்களில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். திமுக தனது தேர்தல் அறிக்கையில், 505 வாக்குறுதிகளை அளித்தது. ஆனால், திமுக பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்தது. நீட் தேர்வு விலக்கு, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. திமுக மக்களை ஏமாற்றுகிறது என எதிர்க்கட்சிக் தலைவர் எடப்பாடி பழனிசாமி புகார் கூறி வருகிறார். இதற்கு பதிலளிக்கும் வகையில் இன்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில், “மக்களாகிய நீங்கள் அளித்த ஒவ்வொரு வாக்கும் இன்றைக்கு நான் கோட்டையில் உட்காருவதற்கு அடித்த…
-
- 0 replies
- 446 views
-
-
2021-ல் தமிழக மந்திரிசபையில் பாஜக இடம்பெறுவது உறுதி... எல்.முருகன் திட்டவட்டம்.! சென்னை: வரும் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு தமிழக மந்திரி சபையில் பாஜக இடம்பெறுவது உறுதி என அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக சட்டமன்றத்திற்குள் பாஜக எம்.எல்.ஏ.க்களை இரட்டை இலக்கத்தில் அனுப்பி வைக்கும் வரை தனக்கு ஓய்வும் இல்லை உறக்கமும் இல்லை எனக் கூறியுள்ளார். கூட்டணி விவகாரத்தை பொறுத்தவரை தற்போதைய நிலை தொடரும் என அவர் தெரிவித்திருக்கிறார். எல்.முருகன் தமிழக பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டது முதல் அக்கட்சியை பரபரப்பாகவே வைத்து வருகிறார் எல்.முருகன். கந்தசஷ்டி கவசத்தில் தொடங்கி கோயில் திறப்பு வரை கிடைத்த வாய்ப்புகளையெல்லாம…
-
- 0 replies
- 551 views
-
-
தமிழ்நாடு பட்ஜெட்: கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் உள்பட 10 முக்கிய அம்சங்கள் பட மூலாதாரம்,TN GOVT கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 19 பிப்ரவரி 2024, 09:46 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாடு அரசின் 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவால் தாக்கல் செய்யப்பட்டது. தி.மு.க. அரசின் இதற்கு முந்தைய 3 நிதி நிலை அறிக்கைகளை பிடி…
-
- 2 replies
- 818 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,X 11 ஏப்ரல் 2025, 10:31 GMT 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக இடையிலான கூட்டணியை சென்னையில் அமித் ஷா அறிவித்துள்ளர். கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் வெள்ளிக்கிழமையன்று மாலை அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பிறகு அமித் ஷா நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பேசிய அமித் ஷா, " பா.ஜ.க தலைவர்களும் அ.தி.மு.க தலைவர்களும் இணைந்து இந்தக் கூட்டணியை உருவாக்கியுள்ளோம். வரப்போகும் தேர்தலில் தேசிய ஜனநாய கூட்டணி பெரும்பான்மையான இடங்களைப் பிடித்து ஆட்சியமைக்கப் போகிறது" எனவும் தெரிவித்தார். பட மூலாதாரம்,X எடப்பாடி ப…
-
- 2 replies
- 336 views
- 1 follower
-
-
2026 தான் இலக்கு” – தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேட்டி! by Web EditorJune 9, 20240 தவெகவிற்கு 2026 தான் இலக்கு எனவும், ஜூன் 18-ம் தேதி சென்னையில் தவெகவின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுவதாக வெளியான செய்தி உண்மையல்ல எனவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “விஜய்யின் கட்டளையை நிறைவேற்ற தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும். முதலில் தொழில் நடத்தி சம்பாதிக்க வேண்டும். அதன் பின்னர் குடும்பத்தை கவனிக்க வேண்டும். அதற்கு அடுத்தபடியாக சம்பாதித்த காசில் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் …
-
- 0 replies
- 222 views
-
-
2026 தேர்தலில் பிராமணர்களுக்கு 5 இடங்களில் போட்டியிட வாய்ப்பு: நாம் தமிழர் கட்சி முக்கிய முடிவு சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தனித் தொகுதிகளிலும் பெண் வேட்பாளர்களை களமிறக்கவும், பிராமணர்களுக்கு 5 இடங்களில் வாய்ப்பளிக்கவும் நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. இதையொட்டி ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான வியூகம் அமைத்தல், கூட்டணி பேச்சுவார்த்தை, தங்களது கட்சிகளின் வேட்பாளர்களை தேர்வு செய்தல், பூத் கமிட்டிகளை வலுப்படுத்துதல் போன்ற தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்திவருகின்றன. அதற்கேற்ப கட்சிகளின் தலைமை, மாவட்ட அளவில் கலந்தாய்வு கூட்டங்கள், பரப்புரை கூட்டங்கள், பொதுக்…
-
- 2 replies
- 391 views
-
-
2026 தேர்தல்; முதலமைச்சர் வேட்பாளராக விஜயின் பெயர் உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பு! 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளராக நடிகரும், அரசியல்வாதியுமான விஜய்யை தமிழக வெற்றிக் கழகம் (TVK) இன்று (04) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பின் மூலமாக அதிமுக – பாஜகவின் கூட்டணி அழைப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது. TVK இன் செயற்குழு கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தலைமைக் கழ கத்தில் கட்சி தலைவர் விஜய் தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமைக் கழக சிறப்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கொள்கை உறுதிமொழி ஏற்கப்பட்டு கொள்கை பாடல்க…
-
- 1 reply
- 263 views
- 1 follower
-
-
2031க்குள் குடிசையில்லா தமிழகம்! மின்னம்பலம்2021-12-13 ரியல் எஸ்டேட் டெவலப்பர்களின் கூட்டமைப்பான CREDAI சார்பில், சென்னையில் இன்று (டிசம்பர் 13) மாநாடு நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின், வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “வேளாண் துறைக்கு அடுத்தபடியாக மிக அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பு தருகிற தொழிலாக இந்த கட்டுமான தொழில் உள்ளது” என்று குறிப்பிட்டார். ஒரு உதாரணத்தைச் சொல்ல வேண்டும் என்று சொன்னால் கீழடியில் கிடைத்துள்ள கட்டடங்களின் இடிபாடுகளின் மூலமாக மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நகர்ப்புற நாகரீகம் கொண்டதாகத் தமிழ்ச் சமூகம் வளர்ந்து இ…
-
- 0 replies
- 296 views
-
-
2050-ல் சென்னை நகரை விழுங்க போகும் கடல் உலக வெப்பமயமாதலால் 2050-ம் ஆண்டில் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் கடற்பகுதிக்குள் சென்றுவிடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. சென்னை: தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறையின் கீழ் பருவநிலை மாற்றம் தமிழக செயல்திட்டம் என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் ஒரு பிரிவாக உள்ள தமிழ்நாடு மாநில நிலம் பயன்படுத்துதல் ஆராய்ச்சி வாரியம் தமிழக இயற்கை சூழ்நிலைகள் குறித்து ஆய்வு நடத்தி உள்ளது. பருவநிலை மற்றும் உலக வெப்பமயமாதல் காரணமாக தமிழ்நாட்டில் ஏற்படும் விளைவுகள் குறித்து நடத்திய ஆய்வில் உலக வெ…
-
- 0 replies
- 1.1k views
-
-
21 வயதுக்கு குறைவானவர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க முடியாது – புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு வயது 21 ஆக இருக்க வேண்டும் என்றும் அதற்கு குறைவான வயதுடையவர்கள் மாடுபிடிக்க அனுமதி இல்லை என்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் அறிவித்துள்ளார். மேலும் பாலமேடு, அங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு உடல் பரிசோதனை நடத்தப்படவுள்ளதாகவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் அறிக்கையில், “அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்களுக்கு நாளை 10ஆம் திகதி அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியிலும், பாலமேடு போட்டியில் பங்கேற்க விரும்புபவர்களுக்கு நாளை மற…
-
- 0 replies
- 447 views
-
-
22 மாடுகள்... மாதம் ஒரு லட்சம்! பழுதில்லாமல் லாபம் கொடுக்கும் பால் பண்ணை! பரம்பரையாக மாடு வளர்ப்பவர்களே பால் பண்ணையில் போதிய வருமானம் இல்லை என வேறு தொழில்களை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில்... “சரியாகத் திட்டமிட்டு செய்தால் பசுக்களில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களையும் விற்பனை செய்து நல்ல லாபம் எடுக்க முடியும்” என்று விரல் உயர்த்துகிறார், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகிலுள்ள தம்மனூர் கிராமத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத். பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்த ஹரிபிரசாத்தைச் சந்தித்து நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார். ‘‘நான் சென்னை, பல்லாவரத்துல குடியிருக்கேன். பால் பண்ணை வைக்கணுங்கிற ஆர்வத்துல ஒரு…
-
- 1 reply
- 1.5k views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் திருவண்ணாமலையை அடுத்த ஜவ்வாதுமலையை சேர்ந்த 23 வயதான ஸ்ரீபதி என்ற பழங்குடி பெண் சிவில் நீதிமன்ற நீதிபதிக்கான தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். பிரசவித்த மறுநாள் தேர்வு, வறுமை என பல தடைகளை தகர்த்து அவர் சாதித்தது எப்படி? தடைகளை தகர்த்து சாதனை! தமிழகத்தில் சமீபகாலமாக பழங்குடி மக்கள் பல துறைகளில் சாதித்து தடம் பதித்துவருகின்றனர். அந்த வகையில் அடிப்படை வசதிகளற்ற பழங்குடி கிராமத்தில், வறுமையான குடும்பத்தில் பிறந்து, பல போராட்டங்களை கடந்து உரிமையியல் நீதிபதி தேர்வில் வென்று சாதனை படைத்துள்ளார் 23 வயதான ஸ்…
-
- 0 replies
- 299 views
- 1 follower
-
-
தே.மு.தி.கவின் கொடி அறிமுக நாளை ஒட்டி இன்று காலையில் அக்கட்சியின் கொடியை தனது இல்லத்தில் பொருளாளர் பிரமலதா விஜயகாந்த் ஏற்றினார். அதற்குப் பிறகு, கட்சி அலுவகத்திற்கு தனது பிரசார வாகனத்தில் பிரேமலதாவுடன் புறப்பட்ட விஜயகாந்த், செல்லும் வழியில் வாகனத்தில் இருந்தபடியே கட்சிக் கொடியை ஏற்றினார். பிறகு கட்சி அலுவலகத்திலும் வாகனத்தில் இருந்தபடியே விஜயகாந்த் கட்சிக் கொடியை ஏற்றினார். இதற்குப் பிறகு கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரமலதா, கூட்டணி குறித்து இனிமேல் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அ.தி.மு.கவிடம்தான் கேட்க வேண்டுமென்று தெரிவித்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பொதுக்குழு, செயற்குழு கூடி நல்ல செய்தி அறிவிக்குமென்றும் கூறினார். தே.மு.தி…
-
- 1 reply
- 794 views
-
-
234 தொகுதிகளிலும் பாமக போட்டியிடும்: ராமதாஸ் அறிவிப்பு ராமதாஸ். | கோப்புப் படம். தமிழகத்தில் உள்ள 234 தொகுதி களிலும் பாமக சார்பில் வேட்பாளர் கள் நிறுத்தப்படுவர் என்று அக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். சென்னை மாவட்ட பாமக இளை ஞர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தி.நகரில் நேற்று நடந்தது. ராமதாஸ் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, சென்னை மாவட்ட அமைப்புச் செயலாளர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நாங்கள் மாறவில்லை பின்னர் நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது: பாமகவைவிட கொள்கையில் சிறந்த கட்சி ஏதாவது இருந்தால் அதில் சேர தயாராக இருக்கிறே…
-
- 0 replies
- 653 views
-
-
234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தது நாம் தமிழர் கட்சி- சென்னை திருவொற்றியூரில் சீமான் போட்டி!! எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் நாம் தமிழர் கட்சி அறிமுகம் செய்துள்ளது. சென்னை ராயப்பேட்டை வை.எம்.சி.ஏ. திடலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் அறிமுகம் செய்யப்பட்டனர். தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இதற்காக 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ள வேட்பாளர்களை அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவு செய்துள்ளார். பெண்களுக்கு ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் சரிசமமாகத் தொகுதிகள…
-
- 179 replies
- 15.3k views
- 1 follower
-
-
234-ல் 117 தொகுதிகள் பெண்களுக்கு... சீமானின் `சீர்திருத்தம்’ எடுபடுமா?#TNElection2021 இரா.செந்தில் கரிகாலன் நாம் தமிழர் கட்சி சரிபாதி பெண் வேட்பாளர்களை நிறுத்தும் சீமானின் இந்த முடிவு, தொடர்ச்சியாக கமல்ஹாசனின் கருத்து ஒருபுறம் வரவேற்பைப் பெற்றாலும் பெரிய கட்சிகளை இவர்களுடன் ஒப்பிட்டு விமர்சனம் செய்வது சரியல்ல என்கிற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன. கடந்த 2019-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள நாற்பது தொகுதிகளில், 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை நிறுத்தினார் சீமான். ஒரு தொகுதியில் மட்டும் வேட்புமனு நிராகரிக்கப்பட, 19 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வட சென்னை தொகுதியில் போட்டியிட்ட காளி…
-
- 0 replies
- 755 views
-
-
24 ஆயிரம் ரேபிட் கருவிகளும் திருப்பி அனுப்பப்படுகின்றன – அமைச்சர் விஜயபாஸ்கர் ஐ.சி.எம்.ஆரின் ஆணைப்படி 24 ஆயிரம் ரேபிட் கருவிகளும் திருப்பி அனுப்பப்படுவதால், அரசுக்கு எவ்வித செலவும் ஏற்படவில்லை என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு ரேபிட் பரிசோதனை கருவிகளை வாங்கியது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், உலகமே போட்டி போட்டு ரேபிட் பரிசோதனை கருவிகளை அதிகளவில் வாங்க முயற்சித்த நேரத்தில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் (ஐசிஎம்ஆர்) ரேபிட் பரிசோதனைக்கு அனுமதியளித்தது. அந்த கருவிகளை எங்கு, யாரிடம் வாங்கலாம் என்பதை ஐ.ச…
-
- 4 replies
- 641 views
-
-
24 இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்! இந்தியாவின் கிழக்கு கடற்பகுதியில் வைத்து, 24 இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து நாகப்பட்டினம் மீனவர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இலங்கையை சேர்ந்த சிலர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக இந்திய மீனவர்கள் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்திய கடல் எல்லைப்பகுதியில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தாக்குதலில் காயமடைந்த மீனவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர். காயமடைந்த 17 மீனவர்கள் நாகை ஒரத்தூர் அரச மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில் படுகாயமடைந்த மீனவர்கள் தாக்குதல் ந…
-
-
- 2 replies
- 527 views
- 1 follower
-
-
தமிழகத்தில் வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டதை அடுத்து, தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அரசாணைக்கு முன்னர், கடைகள் பெரும்பாலும் இரவு 11 மணிவரை மட்டுமே இயங்கமுடியும் என்ற கட்டுப்பாடு இருந்ததால், சிறிய மற்றும் பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இரவு 11 மணிக்கு மூடப்பட்டன. மத்திய அரசின் தொழில்துறை அமைச்சகம் நாடு முழுவதும் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், வணிகத்தை மேம்படுத்தவும் வணிக நிறுவனங்கள் 365 நாட்கள், 24 மணி நேரமும் கடைகள் இயங்கலாம் என்ற விதியை பரிந்த…
-
- 0 replies
- 824 views
-
-
25 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் நாளை ஆதரவை வாபஸ் பெற்றால்.. ? சென்னை: தினகரன் ஆதரவு 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் நாளை ஆளுநரை சந்திக்க உள்ளனர். இச்சந்திப்பின் போது ஆதரவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு கவிழும் அபாயம் உள்ளது. அதிமுகவின் ஓபிஎஸ் அணி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியும் இணைந்துவிட்டன. இதற்கு தினகரன் ஆதரவு 25 எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த 25 எம்.எல்.ஏக்களும் இன்று ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று தியானம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவை நாளை சந்திக்க உள்ளதாக தெரிவித்தனர். ஆதரவு வாபஸ்? ஆளுநருடனான இச்சந்திப்பின் போது எடப்பாடி அரசுக்கான ஆதரவை தாங்கள் …
-
- 2 replies
- 567 views
-
-
புழல் ஏரி அருகே 25 மூட்டைகளில் வீசப்பட்ட பழைய ரூபாய் நோட்டுக்கள். சென்னை புழல் ஏரி அருகே 25 மூட்டைகளில் பழைய செல்லாத ரூபாய் நோட்டுக்களை கத்தை கத்தையாக வெட்டி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்புநீக்க நடவடிக்கையை அறிவித்தார். நாட்டில் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு விடப்பட்டன. பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு, அதற்கான காலக்கெடு விதிக்கப்பட்டது. பழைய நோட்டுக்களை வங்கிகளில் மாற்றுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக…
-
- 1 reply
- 746 views
-
-
25-க்கு 15 என்கிற பார்முலாவில் அதிமுக பாஜக இடையே கூட்டணி உடன்பாடு |
-
- 0 replies
- 505 views
-
-
பா.ஜனதா தேசியத்தலைவர் ராஜ்நாத் சிங்கை டெல்லியில் சந்தித்து பேசிய வைகோ, பாராளுமன்ற தேர்தலில் 250–க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜனதா கட்சி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெறும் என்று கூறினார். பா.ஜனதாவுடன் கூட்டணி வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து ம.தி.மு.க. போட்டியிடுகிறது. இதற்காக டெல்லி சென்று பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த வைகோ, கூட்டணிக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையே நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில், கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில் நேற்று டெல்லி சென்ற வைகோ, மீண்டும் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பாராளுமன்ற தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாள…
-
- 0 replies
- 485 views
-