Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எனக்கு இன்னும் சம்பள பாக்கி உள்ளது: கமல்ஹாசன் மீது நடிகை கவுதமி புகார்! சென்னை: திரைப்படங்களில் பணியாற்றிய வகையில் கமலஹாசனிடம் இருந்து எனக்கு இன்னும் சம்பள பாக்கி உள்ளது என்று நடிகை கவுதமி புகார் தெரிவித்துள்ளார். தனது கணவரைப் பிரிந்தவுடன் நடிகை கவுதமி நடிகர் கமலுடன் கடந்த 10 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 2016 அக்டோபர் மாதம் அவர் கமலை விட்டு பிரிந்து விட்டார். இப்போது கமலும் கவுதமியும் மீண்டும் சேர்ந்து வாழ இருப்பதாக தகவல்கள் சில ஊடங்கங்களில் வெளியாகின. இதனை நடிகை கவுதமி மறுத்துள்ளார். இது தொடர்பாக அ…

  2. ராஜபக்சேவின் நிறுவனத்துடன் தொடர்பு வைத்துள்ள லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் 'கத்தி' திரைப்படம் வெளிவருவதை எதிர்த்து மாணவர்கள் மற்றும் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு பல போராட்டங்களை நடத்தி வருன்கிறனர். இந்த நிலையில் தீபாவளி அன்று கத்தி திரைப்படம் வெளிவர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கத்தி படத்தை லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியிடக்கூடாது என்று நேற்று தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் திரையரங்கு உரிமையாளர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் போன்றவற்றிக்கு எச்சரிக்கை விடுத்து. இந்த நிலையில் இன்று அதிகாலை சென்னையில் உள்ள முன்னணி திரையரங்குகள் சத்தியம் மற்றும் வூட்லண்ட்ஸ் திரையரங்குகள் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டு…

  3. 17 டிசம்பர் 2023, 14:43 GMT புதுப்பிக்கப்பட்டது 33 நிமிடங்களுக்கு முன்னர் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி ஆகிய தென் மாவட்டங்களில் நேற்று முதல் தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம். இந்நிலையில் தென் மாவட்டங்கள் பலவற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. சமீபத்தில் தான் மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட…

  4. நலந்தானா ஜெயலலிதா ? அரசியல்வாதிகளுக்கு முதுமையும் முதலீடுதான்! உடலின் வலிமையைத் தாங்கும் சக்தி, தன் கால்களுக்கு இல்லை என உணர்ந்ததுமே வீல் சேரில் கூச்சப்படாமல் உட்கார்ந்தார் கருணாநிதி. 'வீல் சேரில் வலம்வரும் வில் பவரே...’ என்ற பட்டம் கிடைத்தது. இதை இயல்பான மாற்றமாக மாற்றிக்கொண்டார் கருணாநிதி. ஒரு சினிமாவின் ப்ரிவ்யூ அது... இயக்குநர் மணிவண்ணன் அங்கு வந்திருப்பதை அறிந்தார் கருணாநிதி. அவரை அழைத்து வரச் சொன்னார். காலைச் சாய்த்துச் சாய்த்து மணிவண்ணன் நடந்து வந்தார். 'இந்த மாதிரி ஒரு வீல் சேர் வாங்கிக்கோய்யா... நிம்மதியா உட்கார்ந்துட்டுப் போகலாம். வசதியா இருக்கு; சோர்வும் இருக்காது’ எனச் சொன்னார் கருணாநிதி. அதாவது தன் உடல்நிலையைக்கூட சாதாரணமானதாக நினைத்து, அதை உள்வாங்கி விழ…

  5. தமிழகத்தை உலுக்கிய வழக்குகளில் பேராசிரியை நிர்மலா தேவி வழக்கும் ஒன்று. கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் அரசியலாளர்கள் மற்றும் ஆளுநர் மாளிகையும் இணைத்து பேசப்பட்டதால் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்பிறகு சூடுப்பிடித்த வழக்கின் விசாரணையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். மேலும் பலரின்மீது சந்தேகங்கள், விசாரண…

  6. திருச்செந்தூர் கடல் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குட்டித் திமிங்கலங்கள் நேற்று ஒரே நேரத்தில் கரை ஒதுங்கியது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கரை ஒதுங்கிய திமிங்கலங்களை பார்ப்பதற்கு நள்ளிரவிலும் பொதுமக்கள் கடற்கரைகளில் திரண்டனர்.6 அடி முதல் 18 அடி வரை நீளம் கொண்ட அந்த திமிங்கலங்களின் எடை 100 முதல் 200 கிலோ வரை இருந்தன. ஆலந்தலை முதல் கல்லாமொழி வரையிலான கடல் பகுதியின் கடற்கரைகள் இவ்வாறு சுமார் 100 திமிங்கலங்கள் வரை பரவிக் கிடந்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடலில் காயம்பட்ட நிலையில் காணப்பட்ட அந்த திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் அனுப்பும் பணிகளில் காவல்துறையினர், ஊர்காவல்படையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். திமிங்கலங்கள் கரை ஒது…

  7. ஆறு மாதத்திற்குள் மெரினா கடற்கரையை உலக தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டுமென சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரை பகுதியில் மீன் வியாபாரிகளை ஒழுங்குப்படுத்துவது, நடைப்பாதை வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மெரினா கடற்கரையில் ஆயிரத்து 486 கடைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும், லூப் சாலையில் இரண்டு ஏக்கரில் மீன் சந்தை கட்ட இருப்பதாகவும், அதன்பின்னர் கடற்கரை பகுதியில் உள்ள மீன் கடைகள் ஒழங்குபடுத்தப்பட்டு மீன்சந்தைக்கு மாற்றப்படும் என்றும் அரசு தரப்பு கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார…

    • 0 replies
    • 573 views
  8. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் பெ.சிவசுப்ரமணியம் பிபிசி தமிழுக்காக 27 ஜூன் 2025 தமிழ்நாடு – கர்நாடக மாநிலங்களின் எல்லை பெரும்பாலும் காடுகள் சூழ்ந்த பகுதி. தமிழ்நாட்டின் 18வது, காட்டுயிர் சரணாலயமான தந்தை பெரியார் காட்டுயிர் காப்பகத்தை ஒட்டி, கர்நாடக மாநிலம், மலை மாதேஸ்வரா காட்டுயிர் சரணாலயம் அமைந்துள்ளது. இது பாலாறு, மாதேஸ்வரன் மலை, ஹூக்கியம், ராமாபுரம், பி.ஜி.பாளையம், அனூர், கொள்ளேகால் என ஏழு வனச் சரகங்களை உள்ளடக்கியது. தமிழ்நாட்டின் பர்கூர் வனச்சரக எல்லையை ஒட்டி அமைந்துள்ளது ஹூக்கியம் வனச்சரகம். இங்குள்ள மின்னியம் காட்டுப் பகுதியில், மாரி அணை கேம்ப் என்ற இடம் உள்ளது. இந்த இடத்திலுள்ள ஒரு மாட்டுப் பட்டியின் அருகில் இன்று காலை நான்க…

  9. தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உத்தியோகபூர்வ பயணமாக ஜெர்மனிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி” எனக் குறிப்பிட்டார். தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ஜெர்மனிக்கு சென்றுள்ள அவர், TNRising ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார். இதன்போது, தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாகவும், அதிகளவிலான தொழிற்சாலைகள், திறமையான மனிதவளங்கள் மற்றும் உயர் நகர்மயமடைந்த மாநிலமாகவும் இருப்பதை விளக்கினார். இந்த மாநாட்டில், 3,819 கோடிஇந்திய ரூபாய் மதிப்பிலான 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் 9,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் …

  10. கொரோனா யுத்தம்: தலைமையின்றி தடுமாறும் தமிழக அரசு! மின்னம்பலம் ராஜன் குறை உலகையே அச்சுறுத்தி நிலைகுலைய வைத்திருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதலின்போது துரதிர்ஷ்டவசமாக தமிழகம் தலைமைப்பண்பற்ற பலவீனமான மனிதரால் ஆளப்படுவது பெரும் வருத்தத்திற்குரியது, விபரீதமானது. கடந்த சில தினங்களாக தமிழக அரசின் அறிக்கைகளும், நடவடிக்கைகளும் எந்த வித தெளிவும், தொலைநோக்கும் தலைமைப்பண்புமற்ற தடுமாற்றங்களையே காட்டுகின்றது. பிரச்சினைகளை சற்றே விரிவாகக் காண்போம். அதற்குமுன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்த சில அடிப்படைத் தகவல்களை நாம் கவனிக்க வேண்டும். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு தமிழக அரசியல் எந்த வித தலைமைப் பண்புமின்றி, அதற்கான ஒரு ஆற்றலோ அல்லது அருகதையோ இர…

  11. மத்திய அரசில் இணைகிறாரா ஜெயலலிதா? - டெல்லியை அதிர வைக்கப்போகும் ஜூன் 14! டெல்லியில் வருகிற 14-ம் தேதி, பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. 'பா.ஜ.க அரசில் அங்கம் வகிக்க வேண்டிய நிர்பந்தத்தில் அ.தி.மு.க உள்ளது' என்கின்றனர் பா.ஜ.க தலைவர்கள். சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிப் பெற்ற அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, அன்று காலை 10 மணிக்கே தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி. 'இவ்வளவு முன்கூட்டியே வாழ்த்து தெரிவிக்க வேண்டிய கட்டாயம் என்ன?' என்ற கேள்வியை நேற்று எழுப்பியிருந்தார் தி.மு.க தலைவர் கருணாநிதி. இதற்கு அ.தி.மு.க தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இந்நிலையில் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக …

  12. இன்று இறந்துவிட்ட நான் இன்னும் சில நாள் காட்சி ஊடகத்தில் உங்களுடன் வாழத்தான் போகிறேன். அதற்கு முன் உங்களுடன் சிலவற்றை பேசிவிட்டு போய்விட ஆசைபடுகிறேன். எல்லோரையும் போல கனவுகளுடன் வாழ்க்கையை ஆரம்பித்த சமகால சமுதயத்தில் நானும் ஒருத்தி தான். எனக்கான கனவுகள் அதிகம் இல்லை. எல்லோரையும் போன்ற நானும் ஒரு சக மனுஷி தான். இன்று நானும் வழக்கம் போல என் அன்றாட வேலைக்கு கிளம்பினேன். வார இறுதிநாட்களை மகிழ்ச்சியுடன் செலவழிக்க நினைக்கும் சராசரி கனவுகளுடன். என் அப்பாவும் அப்படித்தான் நினைத்து என்னை அந்த இரயில் நிலையத்தில் இறக்கிவிட்டுச் சென்றார். உங்களில் எத்தனை பேர் இன்று அந்த காட்சியை நேரில் பார்த்தவர்கள் என்று எனக்குத் தெரியவில்லை ஆனால் உங்களின் மனதிற்க்குத் தெரிய…

    • 7 replies
    • 1.3k views
  13. ‘ ஜெயலலிதாவை பின்பற்றுவதில் என்ன தவறு?!’ -கருணாநிதியிடம் ஆதங்கப்பட்ட கனிமொழி #Vikatan Exclusive உள்ளாட்சித் தேர்தலுக்கான வேலைகளில் அரசியல் கட்சிகள் இறங்கிவிட்டன. ' அனைத்து உள்ளாட்சி இடங்களிலும் தனித்துக் களமிறங்க வேண்டும். கூட்டணிகளை நம்புவதால் பலவீனப்பட்டே வந்திருக்கிறோம்' என கருணாநிதியிடம் ஆதங்கப்பட்டிருக்கிறார் கனிமொழி. சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, உள்கட்சி விவகாரங்களை கவனித்துக் கொண்டு வருகிறார் தி.மு.க பொருளாளர் ஸ்டாலின். தேர்தல் நேரத்தில் உள்ளடி வேலைகளில் ஈடுபட்ட மாவட்டச் செயலாளர்களை ஒதுக்கி வைக்கும் பணிகளும் ஒருபுறம் நடந்து வருகின்றன. அதேநேரம், அக்டோபரில் நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து, கட்சியின் சீனியர…

  14. கட்டுப்பாடுகள் தளர்வு சென்னையில் இன்று முதல் டாக்சி, ஆட்டோக்கள் ஓடும் மீன், இறைச்சி கடைகளும் திறக்கப்படுகின்றன சென்னையில் இன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால் டாக்சி, ஆட்டோக்கள் ஓடும். மீன், இறைச்சி கடைகளும் திறக்கப்படுகின்றன. பதிவு: ஜூலை 06, 2020 05:30 AM சென்னை, தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தற்போது 6-வது கட்டமாக வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், சென்னைக்கு மட்டும் இன்று (திங்கட்கிழமை) முதல் தனியாக சில தளர்வுகளும், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தனியாக சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் சம்பந்தப்பட்ட 4 மாவட்ட…

  15. ஈழப் பிரச்னையில் முதல்வர் ஜெயலலிதா நாடகமாடுவதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.நா.வின் மனித உரிமைக் குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. அப்போது அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக, மத்திய அரசு வாக்களிக்க வேண்டுமென்று பிரதமரிடம்தான்( முதல்வர் ஜெயலலிதா) வலியுறுத்தியதாகவும், முதலில் அதை ஆதரிப்பது பற்றி எதுவும் தெரிவிக்காத இந்திய அரசாங்கம், தனது தொடர் வலியுறுத்தலால் ஆதரித்தது என்று பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். ஆனால் இதே முதல்வர்தான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் எ…

  16. ஜெய­ல­லிதா எதிர்ப்பு தெரிவித்த திட்டங்களுக்கு அமைச்சரவை அனுமதி மத்திய அரசு கொண்டுவரும் அனைத்துத் திட்டங்களுக்கும் 'தலையாட்டாத' மாநில முதல்வர்களென தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் மேற்கு வங்கமுதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட சிலரைக் குறிப்பிட்டுச் சொல்வார்கள். அந்த வகையில் ஜெயலலிதா எதிர்த்து வந்த திட்டங்களுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டிருப்பது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா எதிர்ப்புத் தெரிவித்து வந்த மத்திய அரசின் மின்சார சீர்திருத்தத் திட்டம், தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம், புதிய கல்விக்கொள்கை உள்ளிட்ட திட்டங்களுக்கு ஜெயலலிதா இல்லாத அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதையே இது சுட்டிக்காட்டுக…

  17. கூடங்குளத்தில் 144 தடை உத்தரவு: 4 ஆயிரம் போலீசார் குவிப்பு . கூடங்குளம் அணு உலை முற்றுகை போராட்டம் அறிவித்துள்ளதை அடுத்து, அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வந்ததால், கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி முதல், ஜனவரி 22-ம் தேதி வரை அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. கால அவகாசம் முடிந்த பின்பு, அந்த தடை உத்தரவு நீட்டிக்கப்படவில்லை. இந்நிலையில், உதயகுமார் தலைமையிலான கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள், அணுமின் நிலையத்தை முற்றுகையிடப் போவதாக தற்போது அறிவித்துள்ளனர். இதையடுத்து, மீண்டும் இந்த பகுதியில் தடை உத்தரவு பிறப்பித்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். …

    • 0 replies
    • 709 views
  18. நீங்கள் தமிழ் ஆர்வலரா ? கணினித் தமிழின் பயன்பாடு குறித்து அறிய விருப்பமா ? தமிழில் மென் பொருட்கள் உருவாக்க உங்களுக்கு ஆர்வம் உள்ளதா ? அதிவேகமாக வளர்ந்து வரும் தமிழ் கணினித் துறையில் உங்களுக்கு பயிற்சி பெற விருப்பமா ? எஸ்.ஆர். எம் பல்கலைக்கழகம் தமிழ் கணிப்பொறி பயன்பாடு மற்றும் மென்பொருள் குறித்து கோடை கால பயிற்சி வகுப்பு நடத்த இருக்கிறது. இது ஒரு மாத கால சான்றிதழ் படிப்பு. தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் இதில் சேர்ந்து பயன்பெறலாம். வயது வரம்பு இல்லை. தமிழ் கணித்துறை வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். தமிழ் தேசிய அரசியலின் மிக முக்கியமான கூறுகளில் ஓன்று கணிப்பொறியில் தமிழின் பயன்பாட்டை அதிகரிப்பது. தமிழின் வளர்ச்சிக்கு இது மிக இன்றியமையாதது. பணம் கட்டி படிக்க இயலாத மாணவர்களுக்…

  19. அன்று சசிகலா... இன்று ஓ.பன்னீர்செல்வம்! அ.தி.மு.க.வுக்கு திருமாவின் கிரீன் சிக்னல்? அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தொடர்ந்து சந்தித்து வருவதால் வரும் தேர்தல்களில் இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைக்கும் என்ற பேச்சு எழுந்துள்ளது. ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை, நேற்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு கிருஷ்ணா நதி நீரை திறந்து விட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை ஏற்ற சந்திரபாபு நாயுடு, 2.5 டி.எம்.சி தண்ணீரை திறப்பதாக உறுதி அளித்தார். இந்நிலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சித…

  20. தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: அரசு கொடுத்த வலி... அரசியல் பிரவேசம் - சகாயம் ஐ.ஏ.எஸ் சிறப்புப் பேட்டி 4 பிப்ரவரி 2021, 11:48 GMT புதுப்பிக்கப்பட்டது 54 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SAHAYAM FB தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக 7 ஆண்டுகளாகப் பதவி வகித்து வந்த சகாயம் ஐ.ஏ.எஸ், இந்திய ஆட்சிப் பணியில் இருந்து கடந்த ஜனவரி 6ம் தேதி விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார். 2020ஆம் ஆண்டு அக்டோபர் 2 காந்தி பிறந்த நாளன்று விருப்ப ஓய்வு கேட்டு தமிழக அரசிடம் விண்ணப்பித்த சகாயத்தை, நூறு நாள்களுக்குப் பிறகு பணியில் இருந்து விடுவித்துள்ளது, தமிழக அரசு. அரசுப் பணியில் கிடைத்த அனுபவங்கள், ஓய்வுக்குப் பிறகான நடவடிக்கைகள் குறித்…

  21. 16th May 2013 சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தி.மு.க. சார்பில் நேற்று தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டம் நடந்தது. சென்னை தங்கசாலை அருகில் நடந்த கூட்டத்துக்கு தி.மு.க. வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியதாவது:- சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெறுகிற இந்த எழுச்சி நாள் பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கிலே குழுமி உள்ள உங்களை காண்பதிலும், நீங்கள் அளிக்கின்ற உற்சாகமான ஆதரவை காண்பதிலும் நான் மிகுந்த மகிழ்ச்சியும் நம்பிக்கையும் பெறுகின்றேன். சேது சமுத்திர திட்டம் வருவதால் யாருக்கு என்ன பயன், திட்டத்தின் பலன் என்ன? பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை கிடைக்கும். இப்படி நடந்தால…

  22. ஐநாவின் வழியில் தீர்வினை நோக்கி..! மின்னம்பலம் " ஐநாவின் வழியில் தீர்வினை நோக்கி!" என்ற தலைப்பில் "வி சப்போர்ட்" என்ற அமைப்பு சார்பில், இலங்கை தமிழர்களின் உரிமைகள் மற்றும் கோரிக்கைகள் இந்தியாவின் பார்வையும் புரிதலும் என்ற கருப்பொருளில் டெல்லியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று (பிப்,11) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், வி.சி.க தலைவரும் எம்.பி.யுமான தொல்.திருமாவளவன், ரவிக்குமார், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், ம.தி.மு.க எம்.பி கணேசமூர்த்தி , காங்கிரஸ் எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், செல்லகுமார், மாணிக்கம் தாக்கூர், ஜோதிமணி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். தொல் திருமாவளவன் பேச்சு : குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தண்ட…

  23. திருச்சியில் நடந்த ம.தி.மு.க. பிரமுகர் இல்லத்திருமண விழாவில் கலந்துகொண்டு வைகோ பேசியதாவது:- திருச்சி தீரர்களின் கோட்டையாக விளங்கி வருகிறது. அண்ணாதுரை முதல் பல தலைவர்களும் கட்சி சார்ந்த முக்கிய முடிவுகளை திருச்சியில் தான் அறிவித்துள்ளனர். அந்த வகையில் ம.தி.மு.க. வும் முக்கிய முடிவுகளை திருச்சியில் இருந்து அறிவித்துள்ளது. மது அருந்துவோரின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலை நீடித்தால் வளமான தமிழகம் என்பது கேள்விக்குறியாகி விடும். இதுபோன்ற தொலை நோக்கு சிந்தனையில்தான் தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று ம.தி.மு.க. பல்வேறு போராட்டங்கள், நடை பயணம் போன்றவற்றை நடத்தி வருகிறது. இதை சிலர் கேலி செய்து வருகின்றனர். இலங்கையில் பொத…

    • 0 replies
    • 520 views
  24. சசிகலா தமிழக முதல்வர் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா? அதிர்ச்சி முடிவு! #SurveyResults அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து, சமுக வலைதளங்களிலும், மக்கள் மத்தியிலும் பல்வேறு கருத்துகளும், விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன. விரைவில் அவர் முதல்வராக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சசிகலாவை, மக்கள் முதல்வராக ஏற்றுக் கொள்கிறார்களா என நேற்று சர்வே நடத்தினோம். இந்த சர்வேயில் பலரும் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். 'தமிழக முதல்வராக சசிகலா பதவி ஏற்க இருப்பதை... 'என்ற கேள்விக்கு, 97.13 சதவிகிதம் பேர் 'ஏற்றுக்கொள்ளவில்லை' என தெரிவித்து வாக்களித்துள்ளனர். வெறும் 2.03 சதவிகிதம் பேர் ம…

  25. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சந்திக்க மீண்டும் கூவத்தூர் செல்கிறார் சசிகலா அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சந்திக்க அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா மீண்டும் கூவத்தூர் செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. சசிகலா, பன்னீர் செல்வம் இடையே ஆட்சியமைக்க கடும் போட்டி நிலவுகிறது. சசிகலாவிற்கு ஆதரவான எம்.எல்.ஏ.க்கள் காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை சசிகலா நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. அதன்பின் சென்னை திரும்பினார். இந்நிலையில் …

    • 5 replies
    • 1.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.