தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
``துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி கொடுத்தது யார்?’’ - கேள்வியைக் காதில் வாங்காமல் நழுவிச்சென்ற ஓ.பன்னீர்செல்வம் ``ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. ஆலையை நிரந்தமாக மூட அரசு நடவடிக்கை எடுக்கும். சட்ட ரீதியான பணிகளையும் அரசு செய்யும்" எனத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில், கடந்த 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தின்போது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில், 13 பேர் உயிரிழந்தனர். 105 பேர் காயமடைந்தனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருபவர்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம…
-
- 4 replies
- 1.2k views
-
-
தொண்டர்களுடன் 2–வது நாளாக ஆலோசனை நடத்தும் ஜி.கே.வாசன்: புதியகட்சி 16–ந்தேதி உதயம்? சென்னை, நவ. 4– காங்கிரசில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கி இருக்கும் முன்னாள் மத்திய மந்திரி ஜி.கே.வாசன், புதிய கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை திருச்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அறிவிப்பதாக தெரிவித்து இருந்தார். திருச்சியில் பொதுக்கூட்டம் நடக்கும் இடம், தேதி பற்றி கட்சி நிர்வாகிகளுடன் இன்று அவர் 2–வது நாளாக ஆலோசனை நடத்தினார். ஆழ்வார்பேட்டை அசோகா தெருவில் உள்ள அவரது அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. வருகிற 12 அல்லது 16 ஆகிய 2 தேதிகளில் ஒன்றில் பொதுக்கூட்டம் நடத்த இதில் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. தேர்தல் ஆணைய நடைமுறைகள் முடிவதில் காலதாமதம் ஆவதால் தே…
-
- 3 replies
- 1.2k views
-
-
மதுரையில் ரூ.100 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள தமிழ் தாய் சிலை நிறுவ இடம் தேடுதலில் குழப்பம் நீடிக்கிறது. வைகை நதிக்கரை ஓரம் துவரிமான் கண்மாயில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மதுரையில் ரூ.100 கோடியில் 160 அடி உயரமுள்ள தமிழ்த்தாய் சிலையும், அதை சுற்றிலும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களின் மாதிரி தோற்றம், தமிழ்த்தாய் பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா கடந்த மே மாதம் அறிவித்தார். தமிழ்த்தாய் சிலையும் தண்ணீருக்கு நடுவில் அழகிய இடத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடந்த 3 மாதங்களாக கலெக்டர் மற்றும் பொதுப்பணித் துறையினர் தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். முதலில் வண்டியூர் கண்மாய் ஏற்றதாக இருக்கும் என கருதப்பட்டத…
-
- 0 replies
- 1.2k views
-
-
மிஸ்டர் கழுகு: சசிகலா குடும்பத்தில் எத்தனை கட்சிகள்? கழுகார் உள்ளே நுழைந்ததும், ‘‘இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் தனது கட்சியின் தலைமை அலுவலகத்தைத் திறந்துவிட்டாரே தினகரன்?” என்றோம். ‘‘ஆமாம்... அவரது சபதம் ஆச்சே! ‘எதிரிகள் தடுத்தாலும், சொந்தக் குடும்பத்தினர் தடுத்தாலும், கட்சியைத் தொடங்கி என் போக்கில் பயமில்லாமல் செல்வேன்’ என்று சபதம் போட்டுள்ளார் தினகரன். அதன் முதற்கட்டமாகவே, தலைமை அலுவலகத்தை அவர் திறந்துவிட்டார்.” ‘‘இந்தத் திடீர் உற்சாகத்துக்கு என்ன காரணம்?” ‘‘திவாகரனின் திடீர் எதிர்ப்புதான் காரணம். ஜூன் 3-ம் தேதி திறப்பு விழா என்று தினகரன் அறிவித்ததும், ‘கருணாநிதியின் பிறந்தநாள் அன்று, கலைஞர் கருணாநிதி நகரில் தினகரனின் அலுவலகம…
-
- 0 replies
- 1.2k views
-
-
‘‘முதல்வரை ரகசியமாக வைத்திருக்கிறார்கள்!” - சசிகலா புஷ்பா பேட்டி ஒரு சசிகலா, ஜெயலலிதாவுக்குப் பக்கத்தில் பாதுகாப்பாக இருக்க... இன்னொரு சசிகலா, ஜெயலலிதாவுக்கு எதிராக கடுமையாக வாள் சுழற்றத் தொடங்கிவிட்டார். ‘அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் சசிகலா புஷ்பா அமைதியாகிவிடுவார்’ என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்னமும் மாறாமல் இருக்கிறார் சசிகலா புஷ்பா. அ.தி.மு.க-வில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்ய சபா எம்.பி-யான சசிகலா புஷ்பா, இப்போது நாடார் சமூக விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார். தூத்துக்குடியில் வெங்கடேஷ் பண்ணையார் நினைவு நாளில், அவரது நினை விடத்துக்குச் சென்று பரபரப்பை ஏற்படுத்தியவர், ‘ஜெயலலிதா சொன்னால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய…
-
- 0 replies
- 1.2k views
-
-
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இலங்கை காளைகள்! அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான் வருகை தந்துள்ளார். இதில் செந்தில் தொண்டைமானின் மூன்று காளைகள் பங்கு பெறுகின்றன. காலை முதல் ஜல்லிக்கட்டுப் போட்டியை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பார்வையிட்டு வருகின்றனர். தற்போது முதலாம் சுற்று முடிந்து இரண்டாம் சுற்று தொடங்கியுள்ளது. http://www.vikatan.com/news/tamilnadu/80331-srilankan-minister-visits-alanganallur-jallikattu.art ’ஜல்லிக்கட்டு பார்க்க வந்தேன்; அதிமுக மல்லுக்கட்டு பற்றி பேச விருப்பமில்லை’ : மு.க.ஸ்டாலின் அலங்காநல்லூரில் ஜல்லிக்…
-
- 5 replies
- 1.2k views
-
-
கதை கேளு.. கதை கேளு... 200 ரூபாய்க்காக கட்சி கூட்டத்துக்கு போகும் பெண்களின் கண்ணீர் கதையை கேளு..! சென்னை: முதல் நாள் இரவில் குடித்துவிட்டு வரும் கணவர்களால் அடுத்த நாள் காலையில் வீட்டில் உலை வைக்க காசு இல்லாத நிலையில் தான் பல வீட்டில் பெண்கள் தவிக்கிறார்கள். கிடைக்கும் அந்தக்கூலி வேலைக்கு செல்லும் பெண்கள், கட்சிகள் தரும் ரூ.200க்காக கோஷம் போட சென்று வருகிறார்கள். அவர்களை பற்றிய கதை தான் இது... இப்போது பெரும்பாலான வீடுகளில் ஆண்கள், மனைவி மற்றும் குழந்தைகளை விட, குடிதான் பெரிசு என்ற அளவுக்கு முழு நேரமும் மதுவுக்கு அடிமையாகி கிடக்கிறார்கள். முன்பெல்லாம் ஏதேனும் விஷேசம் என்றால் குடித்துவந்த ஆண்கள், தினசரி குடிகாரர்களாக மாறிவிட்டார்கள். அதிலும் பலர் பகல் நேரக் கு…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஜான் ஆபிரஹாம் தயாரித்து நடித்திருக்கும் மெட்ராஸ் கஃபே படத்துக்கு தமிழகத்தில் எதிர்ப்பு வலுக்கிறது. ஏற்கனவே நாம் தமிழர் கட்சி படத்தை தடை செய்ய வேண்டும் என கோரியிருந்த நிலையில், ராமதாஸும் படத்தை தடை செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளார். இதுபற்றி அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். ஹிந்தி திரைப்பட நடிகர் ஜான் ஆபிரகாம் 'மெட்ராஸ் கஃபே' என்ற பெயரில் ஹிந்தித் திரைப்படம் ஒன்றை தயாரித்து நடித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்திருப்பதாக செய்திகள் வெளியானதை அடுத்து அப்படத்தை தமிழகத்தில் வெளியிடுவதற்கு ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் கடும் எத…
-
- 10 replies
- 1.2k views
-
-
தண்டவாளத்தில் கிடந்த தர்மபுரி திவ்யாவின் காதல் கணவர் இளவரசன் உடல்- தற்கொலையா? தர்மபுரி: தர்மபுரி கலவரம் வெடிக்கக் காரணமான காதல் ஜோடியில் இளவரசனின் உடல் இன்று ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம், மாரவாடியைச் சேர்ந்த தேன்மொழி என்பவரின் மகள் திவ்யா. வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்த இளவரசன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஊரை விட்டு ஓடினார். இதையடுத்து தலித் மக்களுக்கு எதிராக பெரும் வன்முறை வெடித்தது. 3 தலித் கிராமங்கள் ஒட்டுமொத்தமாக சூறையாடப்பட்டன. இந்த விரக்தியில் திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். இந் நிலையில் தேன்மொழி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் தாக்கல் செய்தார். இதையடுத்து, நீதிமன்ற உத…
-
- 8 replies
- 1.2k views
-
-
வட இந்தியர்கள் உங்களை விரட்டிவிரட்டி அடிப்பார்கள் அப்போது என்னை தேடுவீர்கள்- சீமான் பேச்சு வட இந்தியர்கள் உங்களை விரட்டி விரட்டி அடிப்பார்கள் அப்போது சீமானை தேடுவீர்கள் எனவும், தமிழகத்தில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். மறைந்த புலவர் தமிழ்கூத்தன் நினைவேந்தல் கூட்டம் மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் மேடையில் பேசிய சீமான், உங்களின் குலதெய்வமான வேலு நாச்சியாருக்கு எந்தவித அடையாளமும் இல்லை. வேலுநாச்சியாரின் பேரன் நான் வந்தால் அவளுக்…
-
- 14 replies
- 1.2k views
- 1 follower
-
-
சிறுவன் ஜீவசமாதி.. சாமியார், உதவியாளர் அதிரடி கைது.. பிரேத பரிசோதனைக்கு கலெக்டர் உத்தரவு. உயிரோடு இருக்கும் சிறுவனை ஜீவ ஜல சமாதி செய்யணும் என்று ஐடியா கொடுத்த மகா புத்திசாலியான சாமியார் பழனியை போலீசார் கைது செய்து கொத்தோடு அள்ளி கொண்டு போனார்கள். மேலும் இச்சம்பவத்தில் சிறுவனின் சடலத்தை தோண்டி எடுக்குமாறும், உடனடியாக போஸ்ட் மார்ட்டம் செய்ய வேண்டும் என்றும் கலெக்டர் கந்தசாமி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த படவேடு அருகில் ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் என்பவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் பெயர் தனநாராயணன். வயது 16. நன்றாக படிக்க கூடியவனாம். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 465 மார்க் எடுத்த…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழக சட்டமன்ற தீர்மானத்தை புறக்கணித்த இந்திய அரசுக்கு தமிழர்கள் நாம் கொடுக்கும் கடைசி வாய்ப்பு . இரண்டு விருப்பத் தேர்வுகள் உள்ளது. ஒன்று தமிழக சட்டமன்ற தீர்மானம் முன்மொழிந்த தமிழீழம் குறித்த பொது வாக்கெடுப்புக்கு இந்தியா துணை செய்ய வேண்டும் அல்லது தமிழ் நாட்டை தனி நாடாக இந்தியா அறிவிக்க வேண்டும். இரண்டில் ஏதாவது ஒன்றை இந்தியா தேர்வு செய்தாக வேண்டும். இனி தமிழர்களின் (மாணவர்களின் ) கோரிக்கையாக இதுவாகவே இருக்க வேண்டும். https://www.facebook.com/photo.php?fbid=600446339967395&set=a.591654974179865.1073741826.591654024179960&type=1&theater
-
- 5 replies
- 1.2k views
-
-
அன்று மகிழ்ச்சி... இன்று அதிர்ச்சி...! தீபாவின் இந்த நிலைக்கு இதுதான் காரணம்? ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வீட்டில் சில நாட்களாக ஆதரவாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் அவரது தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு அ.தி.மு.க. பொதுச் செயலாளரான சசிகலாவின் தலைமையை ஏற்காதவர்கள் தீபாவின் பின்னால் அணிவகுத்தனர். தீபாவின் வீடு அமைந்துள்ள தி.நகருக்கு தமிழகம் முழுவதும் இருந்து அ.தி.மு.க.வினர் குவிந்தனர். தொடர்ந்து தீபா பேரவையும் தொடங்கப்பட்டு பேனர்களும் வைக்கப்பட்டன. தொண்டர்களைச் சந்தித்த தீபா, ஜெயலலிதாவின் பிறந்த தினமான பிப்ரவரி 24-ம் தேதி அரசியல் பயணம் குறித்து அறிவிப்பதாக தெரிவித்தார். இதற்கிடையில் சசிகலா, முத…
-
- 0 replies
- 1.2k views
-
-
நடிகர் ரஜினிகாந்த் கொரோனா குறித்து வெளியிட்டிருந்த வீடியோவை ட்விட்டர் நீக்கியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நேற்று சனிக்கிழமை கொரோனா குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "12-14 மணி நேரம்வரை கொரோனா பரவாமல் தடுத்துவிட்டால், இந்தியாவில் மூன்றாம் நிலை பரவலைத் தடுத்துவிடலாம்" என்ற கருத்தையும், வேறு சில கருத்துகளையும் தெரிவித்திருந்தார். அந்த வீடியோ அவரது ட்விட்டர் மற்றும் யு டியூப் பக்கங்களில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வீடியோ தங்களது விதிமுறைகளை மீறி இருப்பதாகக் கூறி ட்விட்டர் அந்த பதிவை நேற்று சனிக்கிழமை நீக்கியது. இருந்தபோதும், அந்த வீடியோ யு டியூபில் பார்க்கக் கிடைக்கிறது. ட்விட்டரில் ரஜினிகாந்தை 57 லட்சம் பேர் பின்தொடர்கின்ற…
-
- 11 replies
- 1.2k views
- 1 follower
-
-
இமானுவேல் சேகரன் கொலை- முத்துராமலிங்க தேவர் கைது..பெரியார்- புதிய சர்ச்சையில் சீமான்- விசிக கண்டனம்! Mathivanan MaranUpdated: Wednesday, January 29, 2025, 15:59 [IST] ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசியதாவது: முத்துராமலிங்க தேவரை ஒரு பஞ்சாயத்துக்கு கூப்பிடுகின்றனர். அவர் பஞ்சாயத்துக்கு வரவில்லை..வேறு வேலை இருக்கிறது என்கிறார். பின்னர் பஞ்சாயத்துக்கு சென்ற முத்துராமலிங்க தேவிரிடம் ராணுவத்தில் பணி செய்துவிட்டு வந்த இமானுவேல் சேகரன் எழுந்து கேள்வி கேட்கிறார். இதனால், தான் நான் வரமாட்டேன் என்றேன்.. சின்ன சின்ன பயலுக எல்லாம் கேள்வி கேட்கிறானுக என்று சொல்லிவிட்டு முத்துராமலிங்க தேவர் கிளம்பிவிடுகிறார். இமானுவேல் சேகரன் படுகொ…
-
-
- 14 replies
- 1.2k views
-
-
முதல்வர் ஜெயலலிதாவின் நிலை என்ன ? : தமிழச்சியின் கருத்தால் சர்ச்சை - ஒரு பார்வை (காணொளி இணைப்பு) தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றமேற்பட்டுள்ளதாக அப்போலோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக இந்திய இணையத்தளங்கள் செய்திவெளியிட்டுள்ளன. தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றோடு 11 நாட்கள் கடந்துவிட்டன. ‘லண்டனிலிருந்து மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிப்பதற்காக இந்தியா வந்துள்ளனர். இந்நிலையில் அப்போலோ மருத்துவர்களின் துணையோடு லண்டன் மருத்துவக் குழுவினர் அளித்த சிகிச்சையின் விளைவாக முதல்வரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றத…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழர்களுக்கு நேர்ந்துள்ள நெருக்கடி குறித்து இந்திய மத்திய அரசு பரிசீலனை செய்து ஈழத்தமிழர்கள் அமைதியாக வாழ்வதற்கு ஆவன செய்திட வேண்டும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பட்ட காலிலேயே படும் என்பதற்கொப்ப, படமுடியாது இனி துயரம் பட்டதெல்லாம் போதும் என்று, துன்ப துயரங்கள் அனைத்தையும் அனுபவித்துச் சோர்ந்து போயிருக்கும் ஈழத்தமிழர்களை மேலும் அச்சுறுத்திச் செயலிழக்கச் செய்திடும் எண்ணத்துடன், எடுத்த எடுப்பிலேயே, “இலங்கையில் தமிழர் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர் இனிமேல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவார்கள்" என்று அறிவித்துள்ளதற்கும்; தமிழர் பகுதிகளில் உள்ள தெருக்களின் தமிழ்ப் பெயர்களை அழிப்பதற்கும்; தி…
-
- 6 replies
- 1.2k views
-
-
படத்தின் காப்புரிமை THE INDIA TODAY GROUP தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த ஐந்து கொலைகளுக்கு பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக தெஹல்கா புலனாய்வு இணைய இதழின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் சுமத்திய குற்றச்சாட்டு, தமிழக அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. கொடநாடு கொலை - கொள்ளை குறித்து தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், எடப்பாடி பதவி விலகி முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசாவும் கூறியுள்ளனர். …
-
- 1 reply
- 1.2k views
-
-
மிஸ்டர் கழுகு: ஆட்சியைக் கலைக்க ரஜினி நிபந்தனை! - காய் நகர்த்தும் கவர்னர் குடியரசு தினத்தன்று காலையில், நெஞ்சில் தேசியக்கொடியைக் குத்திக்கொண்டு கம்பீரமாக வந்தார் கழுகார். எழுந்து நின்று சல்யூட் அடித்து, ‘‘ரஜினி தனது முதலாவது மக்கள் மன்றத்தைத் தைக் கிருத்திகை நாளன்று சென்னையில் ஆரம்பிக்கச் சொல்லியிருக்கிறாரே... ஏதாவது விசேஷம் உண்டா?’’ என்று கேட்டோம். ‘‘ரஜினி படு ஸ்பீடில் போகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ‘இது வழக்கமான குடியரசு தினம் என்று நினைக்கவேண்டாம். தமிழக மக்களைச் சுரண்டும் குறுநில மன்னர்களிடமிருந்து விடுதலை வாங்கித்தர சபதம் எடுக்கும் நாள்’ என்று ரஜினி மன்ற முக்கிய நிர்வாகி ஒருவர் சொன்னாராம். இப்போது, மன்றத்தில் உறுப்பினர் களைச்…
-
- 0 replies
- 1.2k views
-
-
மழை கொடுமையைவிட இவிங்க கொடுமை பெருங்கொடுமை! சென்னை: தமிழக தலைநகர் சென்னை தண்ணீரில் தத்தளித்து வரும் நிலையில், பல சடலங்கள் தண்ணீரில் மிதந்து கொண்டுள்ள நிலையில், அதிமுக நிர்வாகி ஒருவர் நெல்லையில் வைத்துள்ள கட்-அவுட் மக்களின் கடும் கோபத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது. நெல்லை மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.முத்துக்கருப்பன் என்பவர் வைத்துள்ளதாக கூறி ஒரு கட்-அவுட் போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த கட்-அவுட்டில், நீரில் மூழ்கியபடி ஜெயலலிதா ஒரு குழந்தையை தனது கையில் பிடித்து நீரில் மூழ்காமல் காப்பது போன்ற காட்சி இடம் பிடித்துள்ளது. அந்த குழந்தைதான் தமிழகம் என்ற அர்த்தத்தில், அந்த கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியாகி…
-
- 1 reply
- 1.2k views
-
-
தென்மாநிலங்களில் அதிகரிக்கும் வடமாநிலத்தவர் எண்ணிக்கை: பொருளாதாரத்துக்கு மேன்மையா, வீழ்ச்சியா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (தென்னிந்திய மாநிலங்களுக்கு வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வருவதற்கான காரணங்கள், தொழிலாளர்கள் உள்நாட்டுக்குள்ளேயே குடிபெயர்வதற்கான தேவை, அதனால் உண்டாகும் தாக்கம் உள்ளிட்டவை குறித்த கட்டுரைத் தொடரின் முதல் பாகம்.) படத்தின் காப்புரிம…
-
- 3 replies
- 1.2k views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்குக் குடிநீர் கொண்டுவரும் திட்டத்தின் கீழ் முதல் ரயில் இன்று சென்னை வந்தடைந்தது. இந்த ரயில் மூலம் ஒரு தடவைக்கு இரண்டரை லட்சம் தண்ணீர் கொண்டுவர முடியும். சென்னையில் கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவுவதால், வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்குக் குடிநீரை ரயில் மூலம் கொண்டுவர முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, ஜோலார்பேட்டை மேட்டு சக்கரக்குப்பம் நீரேற்று நிலையத்திலிருந்து ரயில்வே வேகன்களில் குடிநீர் நிரப்பப்பட்டு, அந்த ரயில் இன்று காலை ஜோலார்பேட்டையிலிருந்து 7.20 மணியளவில் புறப்பட்டது. இந்த ரயில்…
-
- 0 replies
- 1.2k views
-
-
மிஸ்டர் கழுகு: இடைத்தேர்தல் நடக்குமா? ‘‘டிசம்பர் 21-ம் தேதி 2ஜி வழக்கின் இறுதித்தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றுதான், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலும் நடக்கிறது. ஒரே நாளில் தி.மு.க-வுக்கு இரண்டு அக்னிப் பரீட்சைகள்’’ என்றபடி வேகமாக உள்ளே நுழைந்தார் கழுகார். ‘‘பரீட்சையின் ரிசல்ட் எப்படி இருக்குமாம்?’’ என்று கேட்டோம். தன் கையோடு கொண்டுவந்திருந்த துண்டுச்சீட்டு குறிப்புகளை நம்மிடம் தந்த கழுகார், ‘‘ஆர்.கே. நகர் தேர்தலில் 10 சதவிகித வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வெற்றி பெறலாம் என்று டெல்லிக்கு மத்திய உளவுத்துறை அறிக்கை கொடுத்துள்ளது’’ என்றார். ‘‘இன்னொரு பக்கம் ஏர்செல்-மேக்ஸிஸ் விவகாரத்தில், ப.சிதம்பரத்தை அமலாக்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
உணவும் உழவும் தமிழகத்தின் நிலத்தடி நீரை உறிஞ்சி தமிழகத்தை பாலைவனமாக மாற்றப்போகும் சீமைக் கருவேல மரங்களை கூண்டோடு வேரறுத்து தமிழகத்தை வளமான விவசாய பூமியாக மாற்ற போராடுகிறார் வேலூர் அணைக்கும் கரங்கள் ப. சரவணன்.இவரின் களப்பணிகள் குறித்து சமீபத்தில் வேலூர் சதுப்பேரி என்கின்ற ஒரு கிராமத்தில் 100 நாள் விவசாயப் பணியிலிருந்த அவரை ஒரு இனிய காலை வேளையில் சந்தித்துப் பேசினோம்.
-
- 0 replies
- 1.2k views
-
-
முதல் கட்டமாக 45 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பாமக! தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களில், 45 பேர் கொண்ட முதல் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுகிறது. இந்நிலையில் இத் தேர்தலில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களில் 45 பேர் கொண்ட முதல் பட்டியல், அக்கட்சியின். நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ஆகியோரின் ஒப்புதலுடன் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். பாமக…
-
- 2 replies
- 1.2k views
-