Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: பா.ஜ.க. வேட்பாளராக கங்கை அமரன் அறிவிப்பு சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. சார்பில் இசையமைப்பாளர் கங்கை அமரன் போட்டியிடுவார் என கட்சி தலைமை அறிவித்துள்ளது. புதுடெல்லி: தேசிய கட்சியான பா.ஜனதா தமிழகத்தின் ஒவ்வொரு இடைத்தேர்தலிலும் வேட்பாளரை நிறுத்த தவறுவது இல்லை. அவ்வகையில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம்? என்று கடந்த சில தினங்களாக தீவிர பரிசீலனை நடந்தது. ஆர்.கே. நகர் தொகுதிக்கு தமிழக பா.ஜனதா தலைவ…

  2. தாலியறுத்து; ஒப்பாரி வைத்து தமிழக விவசாயிகள் நூதனப் போராட்டம் டெல்லி ஜந்தர் மந்தரில் 33-வது நாளாக போராடி வரும் தமிழக விவசாயிகள் இன்று தாலியறுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும், பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி ஜந்தர்மந்தரில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் வித்தியாசமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மண்டை ஓடு, மண் சட்டி, தூக்குக் கயிறு, எலிக் கறி, பாம்புக் கறி உள்ளிட்டவற்றை வைத்து போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள், திடீரென்ற…

  3. பெங்களூர் சிறையில் ஆங்கிலம் கற்க விரும்புகிறாராம் சசிகலா? பெங்களூர்: அடுத்த 4 ஆண்டுகளுக்கு பெங்களூர் சிறையில் நேரத்தை வீணடிக்காமல் ஆங்கிலம் கற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளாராம் வி.கே. சசிகலா. மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழ் - ஆங்கிலம் இரண்டிலுமே புலமைப் பெற்றவர். அவருடன் பல ஆண்டு காலம் தங்கி இருந்து அரசியல் கற்றுக் கொண்ட சசிகலா, ஆங்கிலம் கற்கத் தவறிவிட்டார். கான்வென்ட்டில் படித்த ஜெயலலிதாவுக்கு ஆங்கிலம் அத்துப்படி. அவரது அரசியல் வாழ்க்கைக்கு ஆங்கிலமும் மிகப் பெரிய பலமாக இருந்தது. அவருக்கு உற்றத் தோழியாக இருந்த சசிகலா, பெங்களூர் சிறையில் தனது மொழித் திறனை பட்டைத் தீட்டிக் …

  4. எடப்பாடி பழனிசாமி அரசைக் காக்கும் ஜூலை 19? - சசிகலா குடும்பத்தின் சீக்ரெட் பிளான் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை 25-ம் தேதியுடன் நிறைவடைகிறது. 'பா.ஜ.கவுக்கு எதிராக பொது வேட்பாளரை முன்னிறுத்தும் வேலைகளில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி அரசு நீண்டு கொண்டிருப்பது குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக மட்டும்தான். அதன்பிறகு பா.ஜ.கவின் நடவடிக்கைகள் வேகம் பெறும்' என்கின்றனர் தமிழக பா.ஜ.க நிர்வாகிகள். ‘பணம் சம்பாதிக்கும் எண்ணம் உடையவர்களை என் பக்கத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டேன்' என நேற்று ரசிகர்களிடம் மனம் திறந்தார் ரஜினிகாந்த். ‘இது அவருடைய வழக்கமான உரைதான்' என அரசியல் மட்டத்தில் பேச…

  5. தமிழகத்தில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டம்- 58 பேருக்கு ஆணை வழங்கினார் முதல்வர் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தின் கீழ் 5 தலித்துகள் உள்பட 58 பேரை வெவ்வேறு கோயில்களில் அரச்சகராக நியமித்து பணி நியமன ஆணை வழங்கினார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். இவர்களில் 24 பேர் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்கள். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் கடந்த 2006-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி, கோயில் அர்ச்சகராக விரும்பும் அனைத்து சாதியினருக்கும் பயிற்சி அளிப்பதற்காக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பாடசாலைகள் தொடங்கப்பட்டன. கடந்த…

  6. சென்னை: கோவில்களுக்கு சொந்தமான திருமண மண்டபங்களையோ, கடைகளையோ நாத்திகர்கள் உபயோகப்படுத்த முடியாது என்று என்று இந்து அறநிலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் இந்து அறநிலைத்துறை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில் நிர்வாகங்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பப்பட்டுள்ளது அதில் கோவில் சொத்துகளை நாத்திகர்கள் பயன்படுத்தவோ, வாடகைக்கு உபயோகிக்கவோ கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கோவில்களுக்கு சொந்தமான திருமண மண்டபங்களையோ, கடைகளையோ நாத்திகர்கள் உபயோகத்திற்கு விடப்படாது என்றும், இறைச்சி, மதுபானம் போன்றைவை பரிமாறப்படும் விருந்துகளும் அந்த மண்டபங்களில் தடை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்னால், திருவாரூர் மாவட்டத்தில…

  7. தூத்துக்குடி: தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 13 ஆயிரம் டன் கனிம மணல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தமிழக கடற்கரையோரங்களில் தாது மணல் அள்ளப்படுவதாகவும் அது வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் புகார் எழுந்தது. தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக இருந்த ஆஸிஸ்குமார் எடுத்த நடவடிக்கையை தொடர்ந்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அதைத்தொடர்ந்து பல்வேறு எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றதை தொடர்ந்து, "தமிழகம், கேரளம் மாநில கடலோரங்களில் தாது மணல் அள்ளுவதற்கு தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. தனியாக ஒரு குழுவை அமைத்து விசாரணை அறிக்கையை பெற்று அதன் அடிப்படையில் அதே போல் தடையை விதித்தது தமிழக அரசு. இப்போது தாது மணல் …

  8. சென்னை: தாம் கடிதம் கொடுத்ததால் 400 பேருக்கு பிரான்ஸ், டென்மார்க் மற்றும் சுவிஸ் ஆகிய நாடுகள் குடியுரிமை வழங்குகின்றன என்கிற அதிர்ச்சி தகவலை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பல்வேறு சர்ச்சைகளின் மையமாக இருப்பவர் சீமான். பெரியாரின் மேடைகளில் அரசியல் பயணத்தை தொடங்கிய சீமான், பாஜகவின் குரலாக தமிழகத்தில் பெரியார் சிலைகள் எதற்கு என கேள்வி எழுப்பி அதிர வைத்தார். அதன்பின்னர் பாஜகவின் கே.டி.ராகவன், பாலியல் விவகாரத்தில் சிக்கினார். இது தொடர்பான வீடியோவும் வெளியானது. ஆனால் சீமானோ, யாரும் செய்யாததையா கே.டி.ராகவன் செய்துவிட்டார் என ஆதரவு கொடுத்தார். அப்போதும் சீமான் கடுமையான விமர்சனத்துக்குள்ளானார். ராஜீவ் படுகொலை பேச்சு இதனையடுத…

  9. கள்ளக்குறிச்சியில் குறவர் இனத்தவர் மூவர் கைதாகி துன்புறுத்தப்படுவதாக புகார் 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ள ஓம் பிரகாஷின் மனைவி புவனேஸ்வரி கள்ளக்குறிச்சியில் குறவர் சமுதாயத்தை சேர்ந்த மூன்று பேர் வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்கில் கைதுசெய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. 1990களின் துவக்கத்தில் கடலூர் மாவட்டத்தில் குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக கைதுசெய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட ஜெய் பீம் திரைப்படம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், ம…

  10. ஸ்டாலினின் ’ஜனவரி 26’ திட்டம்!: தேதி கொடுத்த அமித் ஷா மின்னம்பலம்2022-01-11 நீட் விவகாரம் தொடர்பாக தமிழக எம்பிக்கள் குழுவை சந்திப்பதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இசைவு தெரிவித்துவிட்டார். வரும் ஜனவரி 17 ஆம் தேதியன்று தமிழக எம்பிக்கள் குழுவை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்திக்கிறார். கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட நீட் விலக்கு சட்ட மசோதா உடனடியாக தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இன்றுவரை அந்த மசோதா ஆளுநர் மாளிகையில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்பப்படவில்லை. இதுகுறித்து மாநில மூத்த அமைச்சர் துரைமுருகன் ஆளுநரை கடந்த டிசம்பர் 17 ஆம் தேதியன்று நேரிலேயே சந்தித்து வலியுறுத்தினார்.…

  11. கலவரத்தை தூண்ட சசி சொந்தங்கள் சதி? மாநிலம் முழுவதும் போலீசார் உஷார் முதல்வர் பழனிசாமி அரசை கவிழ்க்க சதி திட்டம் தீட்டி வரும், சசிகலாவின் மன்னார்குடி சொந்தங்கள், கலவரத்தை துாண்ட திட்டமிட்டு இருப்பதால், போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., பன்னீர் அணி, சசிகலா அணி என, பிளவு பட்டது. தற்போது, இரு அணிகளும் இணைந்து விட்டன. எதிர்ப்பு முதல்வராக பழனிசாமியும், துணை முதல்வ ராக பன்னீர்செல்வமும், அரசை வழிநடத்தி வருகின்றனர். அதே நேரத்தில், சசிகலாவால், துணை பொதுச் செயலராக அறிவிக்கப்பட்ட தினகரன் ஆதரவாளர்கள், தனி அணியாக செயல்பட்டு வருகின…

  12. மதுரைக்கு வந்த சோதனை ஓர் உறைக்குள் இரண்டு கத்திகள் இருக்கக்கூடாது என்பதைக் கருணாநிதி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். ஸ்டாலினா,அழகிரியா முக்கியம் என்று முடிவெடுக்க முடியாமல் தவித்த கருணாநிதி காலம் கடந்து உறுதியான முடிவை எடுத்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து எம்.ஜி.ஆர். வெளியேறியபோது மதுரைக்கு எம்.ஜி.ஆரை வரவிடமாட்டேன் எனச் சபதம் செய்த மதுரை முத்து பின்னர் எம்.ஜி.ஆரிடம் சரணடைந்தார். திராவிட முன்னேற்றக்கழகத்தில் இருந்து வைகோ விரட்டியடிக்கப்பட்ட போது தமிழகத்தில் தென்பகுதியில் கழகத்தின் செல்வாக்கை உயர்த்துவதற்காக களம் இறக்கப்பட்ட அழகிரி மதுரையில் தன்னை வளர்த்துக்கொண்டார். அழகிரியின் செயற்பாடுகளினால் துவண்டுபோன கருணாநிதி மீண்டும் சென்னைக்கு வரும்படி அ…

  13. ரகசிய இடத்தில் நடராசன்... 2 மாதங்களுக்கு 'நோ' அரசியல் #VikatanExclusive உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்காகக் குளோபல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ‘புதிய பார்வை’ இதழின் ஆசிரியர் ம.நடராசன், நேற்று இரவு வீடு திரும்பினார். கடந்த செப்டம்பர் மாதம் 10-ம் தேதி மாலை, நடராசனுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மயக்கமடைந்தார். இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அவருக்குக் கல்லீரல் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஆரம்பத்தில், அவர் உடல்நிலை மோசமாக இருந்தது. அதையடுத்து, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நடராசனுக்கு டிரைக்கியோடாமி பொருத்தப்பட்டது. அதன்பிறகு நடந்த சோதனைகளில், அவர…

  14. சென்னை: சென்ட்ரல் ரயில் குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள கருணாநிதி, தமிழகத்தில் செயல்படும் அரசு இருக்கிறதா? முதலமைச்சர் இருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், குண்டு வெடித்து, சிலர் இறந்து விட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்திருப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த விபத்தில் மறைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தோர் விரைவில் நலம் பெற என்னுடைய விழைவினையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்திலே சட்டம், ஒழுங்கு கேட்பாரற்ற நிலையிலே இருப்பதாகவும், அதுபற்றி அக்கறையோடு முறையாக நடவடிக்கைகள் எதுவும் எடுப்பதில்லை என்றும் நான் ப…

  15. தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு! christopherJan 25, 2023 22:59PM கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம் மற்றும் சமூகப் பணி போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். கடந்த மே 1 முதல் பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பரிசீலனை முடிவடைந்த நிலையில், 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. அதன்படி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மொத்தம் 106 பேருக்கு பத்ம விருதுகளை வழங்க குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். பத்ம…

  16. 2ஜி ஸ்பெக்ட்ரம்' முறைகேடு தொடர்பாக, 200 கோடி ரூபாய் அளவுக்கு, பணம் பரிவர்த்தனை நடந்த விவகாரத்தில், அமலாக்கப் பிரிவு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கிலிருந்து, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளுவை விடுவிக்க வேண்டும் என, அவரது மகள் செல்வி தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம், நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது. இதனால், கருணாநிதி மற்றும் குடும்பத்தினர் 'அப்செட்' அடைந்து உள்ளனர். 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், பல்வேறு தொலை தொடர்பு நிறுவனங்களிடமிருந்து, கலைஞர் 'டிவி' நிறுவனத்திற்கு, 200 கோடி ரூபாய் அளவுக்கு பணம் வழங்கப்பட்டதில், முறைகேடு இருப்பதாக சொல்லி, டில்லியில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது. 10 பேர் குற…

  17. $ அமெரிக்காவின் வாசிங்டன் டி.சி. நகரில் வரும் செப்டம்பர் 1, 2 ஆகிய நாட்களில் “அமெரிக்க கொங்கு குடும்ப விழா - 2018” என்ற பெயரில் ஒரு ஜாதிச்சங்க மாநாடு நடைபெற உள்ளது. அதில் தமிழ்நாட்டிலிருந்து பல கொங்கு வேளாளக் கவுண்டர் ஜாதியின் முக்கியமானவர்கள் பங்கேற்கின்றனர். இந்தக் குடும்ப விழாவை நடத்துபவர்கள் அவர்களது இணையதளத்தின் வழியாக அழைப்பு விடுத்துள்ளனர். கொங்கு வேளாளர்கள் மட்டுமல்ல; அமெரிக்காவில் வாழும் பல பிற்படுத்தப்பட்ட ஜாதியினரும் இதைப் போல குடும்ப விழாக்களை நடத்தி தங்களுக்குள் ஜாதிய உறவுகளைப் புதுப்பித்துக் கொண்டு, ஜாதியச் சொந்தங்களை வளர்த்துக் கொண்டும் தான் வருகின்றனர். அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, ஃப்ரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற பல …

    • 0 replies
    • 1.5k views
  18. சென்னை, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 130-வது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் பூந்தமல்லியில் நடந்தது.கூட்டத்தில் கலந்து கொண்டு நடிகை குஷ்பு பேசும் போது தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் என்னை பற்றி மிகவும் மோசமாக விமர்சனம் செய்து இருக்கிறார். காமராஜர் கட்சி நடிகை குஷ்பு பின்னால் போகிறது என்று கூறியுள்ளார். யாரும் என் பின்னால் வரவில்லை. நான்தான் பெருந்தலைவர் காமராஜரின் கட்சிக்கு சென்று இருக் கிறேன். நடிகை-நடிகர் என்றால் மோசமானவர்கள் என்பதுபோல் விமர்சிக் கிறார்கள். பாரதீய ஜனதா ஆளும் மத்திய அரசில் கேபினட் மந்திரியாக இருக்கும் ஸ்மிருதி இரானி நடிகை இல்லையா? மோடி தமிழ்நாட்டுக்கு வந்தபோது ரஜினியை சந்திக்க வில்லையா? அவரை கட்சிக்கு இழுக்க தமிழக பாரத…

  19. ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை, தூக்கிலடக் கோரி சட்டத்தரணி உண்ணாவிரதப் போராட்டம் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை, தூக்கிலடக் கோரி காங்கிரஸ் சட்டத்தரணி ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறைதண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதில், தமிழக அரசு தீவிரம் காட்டி வருகின்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமென வலியுறுத்தியும், காங்கிரஸ் கட்சி சட்டத்தரணி பிரிவினை சேர்ந்த வழக்கறிஞர் அய்யலுச்சாமி, காந்தி மண்டப வளாகத்தில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று (செ…

  20. சிறுநீரக தொற்று: சென்னையில் பேரறிவாளனுக்கு சிகிச்சை சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள, பேரறிவாளன் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பேரறிவாளன் சிறுநீர் தொற்று, முதுகுவலி, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களால் அவதிப்பட்டுள்ளார். அவர் கடந்த 5 மாதத் துக்கு முன்னர் வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனையில் அவருக்கு சிறுநீரக தொற்றுக்கு சிகிச்சை அளிக் கப்பட்டது. இந்நிலையில் சிறுநீர் தொற்று பிரச்சினைக்கு சிகிச்சை அளிக்க வேலூரில் போதிய வசதிகள் இல்லை என்றும் எனவே சென்னை அரசு பொது மருத்துவ மன…

  21. தமிழகத்தில், நகரங்களில் வசிக்கும் மக்கள் எண்ணிகை அதிகரித்து உள்ளது. மேலும், அவர்களின் வாழ்க்கை நிலை பற்றிய சுவாரசிய தகவல், நேற்று வெளியிடப்பட்ட, சமூக பொருளாதார ஜாதி கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. நாடு சுதந்திரம் அடையும் முன், 1931ல், சமூக, பொருளாதார, ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்பின், இதுபோன்ற கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இந்நிலையில், 2011ல், இந்தக் கணக்கெடுப்பை, மத்திய அரசு, நாடு முழுவதும் நடத்தியது. காகிதம் பயன்படுத்தாமல், கையடக்க எலக்ட்ரானிக் கருவி மூலம், வீடு, வீடாகச் சென்று, தகவல்கள் சேகரிக்கப்பட்டன. ஒவ்வொரு குடும்பத்தின் கல்வி அறிவு, வருவாய், வேலை வாய்ப்பு, குடியிருப்பு வசதி, வீடுகளில் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் ஜாதி போன்ற விவரங்கள் சேகரிக்…

    • 0 replies
    • 323 views
  22. 4 ஜூன் 2024, 10:50 GMT புதுப்பிக்கப்பட்டது 50 நிமிடங்களுக்கு முன்னர் பகுதியளவு மற்றும் முழுமையாக அறிவிக்கப்பட்ட முடிவுகள்இந்திய தேர்தல் 2024 பகுதியளவு மற்றும் முழுமையாக அறிவிக்கப்பட்ட முடிவுகள் ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவை …

  23. ராஜீவ்காந்தி நினைவு தினத்தில் தமிழகத்தில் அமைதி ஊர்வலம் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 28வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை காங்கிரஸ் கட்சி சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெறவுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 28வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நாளை தமிழகம் முழுவதும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெறுகின்றது. இந்த அமைதி ஊர்வலத்தின் இறுதியில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழ…

  24. நீர் மேலாண்மை தொடர்பாக தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தமிழகத்தில் நீர் மேலாண்மை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில், வேலூர் மாவட்டம், வாணியம்பாடி இயற்கை மற்றும் நீர்வளப் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்த மனுவில், பாலாற்றில் இருந்து உதயேந்திரம் ஏரிக்கு வரும் தண்ணீர் வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் இந்தக் கால்வாயின் வழியாக தண்ணீர் எளிதாகச் செல்ல வழிவகை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், சென்னையில் நிலவும் கடுமையான தண்ணீர் பஞ்சத்தைப் போக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக…

    • 1 reply
    • 580 views
  25. கரூர் மாவட்டம் குளித்தலையில் குளம் ஆக்கிரமிப்புக்கு எதிராக வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்த சமூக ஆர்வலரும் அவரது மகனும் படுகொலை செய்யப்பட்டது பற்றி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் அடிப்படையில் தாமாக முன்வந்து ஐகோர்ட் மதுரை கிளை விசாரித்து, தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளுக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததே காரணம் என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்பி அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கரூர் மாவட்டம், குளித்தலை முதலைப்பட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராமர் (எ) வீரமலை (70), இவரது மகன் நல்லதம்பி (எ) பாண்டு (35). அங்குள்ள குளத்தில் சிலர் ஆக்கிரமித்து, விவசாயம் செய்து வந்தது தொடர்பாக இவர்கள் தொடர்ந்த வழக்கில் ஆக்கிரம…

    • 0 replies
    • 643 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.