தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10258 topics in this forum
-
இலங்கை மீனவர்கள் 10 பேர் கைது! தமிழக மீனவரை, இலங்கைக் கடற்படை சுட்டுக் கொன்றதையடுத்து, இருநாட்டு கடற்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், நாகப்பட்டினம் அருகே கோடியக்கரையிலிருந்து 50 நாட்டிக்கல் மைல் தொலைவில் இரண்டு படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இலங்கையை சேர்ந்த 10 மீனவர்களை, இந்திய கடலோர காவல்படை கைது செய்துள்ளது. இந்திய எல்லையில் அத்துமீறி மீன் பிடித்ததாகக் கூறி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள 10 பேரும் காரைக்கால் கொண்டு செல்லப்படுகின்றனர். http://www.vikatan.com/news/tamilnadu/82991-ten-srilankan-fishermen-arrested.html
-
- 0 replies
- 298 views
-
-
இலங்கை மீனவர்கள் 7 பேர் இந்தியாவில் கைது.! இந்திய எல்லையில் அத்துமீறி மீன் பிடித்ததாகக் கூறி, 5 ஆயிரம் கிலோ கிராம் மீனுடன் 7 இலங்கை மீனவர்களை, இந்திய கரையோர பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களின் ஒரு படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது ஆழ்கடல் மீன்பிடிக்காக சென்ற மீனவர்களே இந்திய கரையோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். http://www.virakesari.lk/article/18734
-
- 0 replies
- 218 views
-
-
இலங்கை யுவதி தீக்குளிப்பு! தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் இருந்த யுவதி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். யாழ்பாணம் - குருநகரில் உள்ள ஓடக்கரை வீதியைச் சேர்ந்த ஜேம்ஸ் என்பவரது மகள் சரோன் கருண்சி (வயது 27). இவருக்கும், இலங்கையை சேர்ந்த டாக்டர் நவனீதராஜ் (31) என்பவருக்கும் திருமணமாகி ஒன்றரை வயதில் அஸ்வின் என்ற மகன் உள்ளார். சரோன் கருண்சி, தற்போது குடும்பத்தோடு கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை வீட்டின் வரண்டாவில் சரோன் கருண்சி திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் கீழ்ப்பாக்கம் அரச வைத்தியசாலையில் அ…
-
- 2 replies
- 697 views
-
-
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ மையத்தில் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்பட தமிழ்ஈழ ஆதரவு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வெலிங்டன் ராணுவ முகாமை முற்றுகையிட்டு பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் இலங்கை ராணுவ அதிகாரிகளை வெலிங்டன் முகாமில் இருந்து வெளியேற்றக்கோரியும் அவர்களுக்கு ராணுவ பயிற்சி அளித்து வரும் மத்திய அரசை கண்டித்தும் கூடலூர்-பந்தலூர் தாலுகாக்களில் நாளை (திங்கட்கிழமை) வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, ம.தி…
-
- 0 replies
- 567 views
-
-
இலங்கை தமிழர் பிரச்னை ஓர் உணர்வுப்பூர்வ பிரச்னை. எனவே தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து இலங்கை ராணுவத்தினருக்கு தமிழ் மண்ணில் எந்த ராணுவப் பயிற்சியையும் இந்திய ராணுவம் அளிக்காது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி உறுதி அளித்தார். தஞ்சையில், புதுக் கோட்டை சாலையில் உள்ள விமானப்படை தளம் ரூ.150 கோடியில் நவீனமயமாக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி டெல்லியில் இருந்து ராணுவ சிறப்பு விமானம் மூலம் தஞ்சை விமானப்படைத் தளத்திற்கு வந்தார். அவரை இந்திய விமானப்படை தலைமை தளபதி என்.ஏ.கே.ப்ரவுனி, தென்னக வான்படை தலைமை கட்டளை அலுவலர் ஏர்மார்ஷல் ஆர்.கே .ஜோலி, எஸ்பி தர்மராஜ், டிஆர்ஓ சுரேஷ்குமார் ஆகியோர…
-
- 1 reply
- 494 views
-
-
மத்திய மந்திரி சுதர்சன நாச்சியப்பன் இன்று கோவை வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஊட்டியில் உள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இலங்கையில் 49 லட்சம் தமிழ் குடும்பங்கள் உள்ளன. அவர்களை காப்பாற்றும் பொறுப்பு இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் உள்ளது. எனவே இலங்கை தமிழர் பிரச்சினையில் நாம் சமரசமாகத்தான் செல்ல வேண்டும். இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு நாம் பயிற்சி அளிக்க மறுத்தால் அவர்கள் சீனா சென்று விடுவார்கள். இலங்கை மற்றொரு பாகிஸ்தானாக உருவெடுக்கும் நிலை உருவாகும். இதை தடுக்…
-
- 5 replies
- 925 views
-
-
இலங்கை வந்த தமிழக கரப்பந்து வீரர்கள் கவலையுடன் திரும்பினர் ஆசிய இளையோர் கரப்பந்து (volleyball) போட்டிக்காக இலங்கை சென்றிருந்த தமிழக வீரர்கள் திரும்ப அழைக்கப்பட்டதும், பயிற்சியாளர் ஆண்டனி, விடுதி மேலாளர் நாகராஜன் ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதும் தமிழக விளையாட்டு வீரர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. தமிழக விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வீரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கொழும்பில் வெள்ளிக்கிழமை (05) தொடங்கிய 10-வது ஆசிய இளையோர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி பங்கேற்றுள்ளது. அதில் தமிழக அரசின் சிறப்பு விளையாட்டு விடுதியைச்…
-
- 0 replies
- 375 views
-
-
ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணியின் போராட்ட அறிவிப்பு! சென்னையிலுள்ள பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து இலங்கை செல்லும் விமானங்களை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளோம். எங்களுடைய இந்த அமைப்பின் உடனடி செயல்திட்டமாக சென்னையிலுள்ள பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து இலங்கை செல்லும் விமானங்களை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளோம். ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி சார்பில் ஈழத் தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ராஜபக்சேவின் கூட்டாளி டெல்லிக்கும், பங்காளி ஐ.நா.வுக்கும் காவடி தூக்குவதை நிராகரிப்போம்! நூரம்பர்க் போன்ற போர்க்குற்ற விசாரணைக்குக் குறைவான எதையும் ஏற்க மறுப்போம்! ஈழத்தமிழின மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக …
-
- 0 replies
- 852 views
-
-
சென்னை பாரிமுனையில் பணத் தகராறில் இலங்கை வியாபாரியை கடத்திய சந்தேகத்தின் பேரில் 4 பேரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்தனா். இலங்கையைச் சோ்ந்தவா் வியாபாரியான முகம்மது ஷியாம் என்பவர், தொழில் நிமித்தமாக அண்மையில் சென்னை சென்றிருந்தார். பாரிமுனையில் உள்ள விடுதியில் தங்கியிருந்த அவரை, ஒரு கும்பல் கடத்தியது. மேலும், அந்தக் கும்பல் இலங்கையில் இருக்கும் அவரது மகளை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு முகம்மது ஷியாமை விடுவிக்க 15 லட்சம் ரூபாய் தருமாறு மிரட்டியுள்ளது. இது குறித்து அவா், வடக்கு கடற்கரை பொலிஸ் நிலையத்தில் இணையம் மூலமாக முறைப்பாடளித்தாா். அதன்பேரில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்தனா். அதில், சம்பவத்தில் ஈடுபட்டது அண்ணா நகா் 10-ஆவது பிரதான சாலை பகு…
-
- 0 replies
- 298 views
-
-
இலங்கை விவகாரங்கள் குறித்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பிரச்சினையை எழுப்ப தமிழக அரசியல் கட்சிகள் திட்டமிட்டிருக்கின்றன. இலங்கைத் தமிழர் விவகாரம், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்படும் நடவடிக்கை, பொதுநலவாய நாடுகள் கூட்டத்தில் இந்தியா பங்கேற்றது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தீவிரமாக எழுப்ப தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தவிர்த்த அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளன. டி.ஆர். பாலு இது தொடர்பாக திராவிட முன்னேற்ற கழகத்தைச்சேர்ந்த டி.ஆர். பாலு கூறுகையில், இலங்கை படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது, இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் கூட்டத்தில் தமிழகக் கட்சிகளின் எதிர்ப்பை மீறி இந்தியா பங்கேற்றது தொடர்பாக விளக்கம் கேட்டும் நோட்டீ…
-
- 0 replies
- 521 views
-
-
இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு மெளனம் காப்பது ஏன்?: ஜெயலலிதா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் , இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை, மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு மௌனம் காப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில், நடத்தப்பட்ட இனப் படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, தமிழகம் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் வலிய…
-
- 0 replies
- 703 views
-
-
இலங்கை விவகாரத்தை வைத்து காங்கிரஸ் உறவை முறிக்குமா திமுக? Published: Friday, March 1, 2013, 9:27 [iST மா.ச.மதிவாணன் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசை பகிரங்கமாக திமுக விமர்சிக்கத் தொடங்கியிருப்பதால் அனேகமாக ஆளும் கூட்டணி அரசிலிருந்து அந்த கட்சி வெளியேறக் கூடும் என்று கூறப்படுகிறது. இலங்கை போர்க் குற்றம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக அண்மைக்காலமாக திமுக கருத்துகளைத் தெரிவித்து வருகிறது. மகிந்த ராஜபக்சேவை இந்தியாவுக்குள் அனுமதிக்க எதிர்ப்புத் தெரிவித்து அண்மையில் திமுக மிகப் பிரம்மாண்ட போராட்டத்தை நடத்தியது. பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் படுகொலையைக் கண்டித்து அறிக்கை வெளியிட்ட போதும் மத்திய அரசை விமர்சிக்க கருணாநிதி தயங்கவில்லை. இதைவிட பெரிய போர்க் …
-
- 6 replies
- 1.1k views
-
-
இலங்கை விவகாரம் : இந்திய ஜனாதிபதியின் உரை தமிழர் உணர்வை பிரதிபலிக்கவில்லை :திமுக தலைவர் கருணாநிதி இலங்கைப் பிரச்சனை தொடர்பாக இந்திய ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் கூறிய விடயங்கள் தமிழர்களின் இதய வேதனையை எதிரொலிப்பதாக இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.உலக நாடுகள் “ராஜபக்ஷ ஒரு சர்வதேசப் போர்க் குற்றவாளி” என்று கடுமையாகக் கண்டிக்கவும் தண்டிக்கவும் முற்படுகின்ற வேளையில், இந்திய அரசு மட்டும் அவரைப் பற்றிய உண்மை விகாரங்களை இன்னமும் புரிந்து கொள்ளாமல், “இலங்கையுடனான உறவு மேம்பட்டு வருகிறது” என்று குடியரசுத் தலைவரின் உரையிலே குறிப்பிட்டிருப்பது ஏன் என்று புரியவில்லை என்று கேட்டுள்ளார் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி. இலங்கை அதிபர் ராஜபக்ஷ அவர்கள் …
-
- 0 replies
- 467 views
-
-
ராஜபட்சேவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோரி, கண்டனப் பேரணியும் பொதுக்கூட்டமும் வேதாரண்யத்தில் நடைபெற்றது. இன்று காலை பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய சாலைகளில் சென்ற பேரணி, பின்னர் மீண்டும் பேருந்து நிலையத்துக்கே வந்தது. அங்கு உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. இந்தப் பேரணையில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டுவருகின்றனர். http://dinamani.com/latest_news/article1495821.ece
-
- 0 replies
- 643 views
-
-
இன்று காலை வட இந்திய தொலைக்காட்சியான என்.டி.டி.விக்கு பேட்டியளித்த குஷ்பு, இலங்கை வீரர்களுக்கு தடை விதிப்பது விளையாட்டுத்தனமானது. விளையாட்டை விளையாட்டாகத்தான் பார்க்க வேண்டும். தமிழக அரசின் முடிவு தனக்கு வருத்தமளிப்பதாக பேட்டியளித்துள்ளார். இதனால் குஷ்புவுக்கு எதிராக கடும் கண்டனம் எழுந்துள்ளது. இலங்கை தமிழர்களுக்காக போராடுவதற்கு டெசோ போன்ற அமைப்புகளை நடத்திவரும் திமுகவில் இருந்து கொண்டு, இம்மாதிரியான கருத்தை கூறியது குஷ்புவின் அரைவேக்காட்டுத்தனத்தை காட்டுவதாக திமுகவின் பெயர் கூற விரும்பாத முக்கிய தலைவர் ஒருவர் கூறியுள்ளார். தமிழில் நடித்து கோடிகோடியாக சம்பாதித்தும், சுந்தர்சியை திருமணம் செய்து தமிழகத்தின் மருமகளாகிவிட்டும் இலங்கையில் கொல்லப்பட்ட த…
-
- 20 replies
- 1.9k views
-
-
சென்னை: இலங்கை நாட்டு வீரர்கள் பங்கேற்பதால் 20-வது ஆசிய தடகளப் போட்டிகளை தமிழக அரசால் நடத்த முடியாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் 20-வது ஆசிய தடகளப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் மாதம் தமிழக அரசின் ஒத்துழைப்புடன் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போட்டிகளில் 44 நாடுகளின் வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ரூ40 கோடியை தமிழக அரசு ஒதுக்கியிருந்தது. இந்நிலையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் 12 வயதே ஆன சிறுவன் பாலச்சந்திரனை கைது செய்து இலங்கை அரசு கோரமாகப் படுகொலை செய்திருக்கிற புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. இது இலங்கையின் அப்பட்டமான போர்க் குற்றம் என்று நேற்று தமிழக முதல்வர் ஜெய…
-
- 16 replies
- 1.3k views
-
-
25 JAN, 2024 | 11:03 AM இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவித்திடவிரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் மீன்பிடிப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் 22-1-2024 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சமீப காலமாக தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது கவலையளிப்பதாக உள்ளது என்றும் இத்தகைய போக்கு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கும் என்பதால் இதில் ஒன்றிய அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டிய அ…
-
- 0 replies
- 403 views
- 1 follower
-
-
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது: பிரதமருக்கு முதல்வர் கடிதம் Published By: RAJEEBAN 23 MAR, 2023 | 03:36 PM பாக் ஜலசந்தி பகுதியில் தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி உரிமையைப் பறிக்கும் வகையிலான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இலங்கைக் கடற்படையினரால் இன்று (23-3-2023) 12 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது இரண்டு விசைப்படகுகளுடன் (IND-TN-08-MM-1802 மற்றும் IND-TN-08-MM-65) கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தினை இந்தி…
-
- 0 replies
- 447 views
- 1 follower
-
-
இலங்கைக் கடற்படையினர்... தாக்குதல் நடத்துவதை நிறுத்த, நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலின் வலியுறுத்து! தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி கோடியக்கரை கடற்பகுதியில் பதிவு செய்யப்பட்ட படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாகி சூடு நடத்தினர். இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் குறிப்பாக கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டு மீனவர்களின் …
-
- 0 replies
- 372 views
-
-
காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கடந்த சில தினங்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், இலங்கைக்கு சொந்தமான சரக்கு கப்பல் காரைக்கால் துறைமுகத்திற்கு வந்துள்ளது. அந்த கப்பலை காரைக்கால் மார்க் துறைமுகத்திற்குள் அனுமதித்த இந்திய அரசையும், துறைமுக நிர்வாகத்தையும் கண்டித்து துறைமுக வாயிலில் காரைக்கால் மாவட்ட மனிதநேய மக்கள்கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். மாவட்ட செயலாளர் எம்.நைனாமுஹம்மது தலைமை யேற்க, மாவட்ட தலைவர் ஐ.அப்துல்ரஹீம், மாவட்ட த.மு.மு.க செயலாளர் எம்.முஹம்மது நஜிமுதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராகவும், தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்ப…
-
- 0 replies
- 560 views
-
-
அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படுகின்றது என்று தெரிவித்து சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை நேற்று முற்றுகையிட முயன்ற 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகின்றது என்றும், போர்க் குற்றச்சாட்டு தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபை மேற்கொண்ட விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்கும் கால வரையறை நீடிக்கப்பட்டமைக்கு அமெரிக்காதான் முற்றுமுழுதாக காரணம் என்றும் வலியுறுத்தியே இந்த முற்றுகை நடவடிக்கை இடம் பெற்றுள்ளது. மேலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி, மற்றும் மே 17 இயக்கம் உள்ளிட்ட அமைப்புக்களே இம்முற்றுகை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன. http://onlineuthayan.com/News_More.php?id=390603919215147987#
-
- 1 reply
- 428 views
-
-
இலங்கைக்கு இந்தியா இந்த ஆண்டு ரூ. 500 கோடியை இலவசமாக வழங்குகிறது. இது முந்தைய ஆண்டை காட்டிலும் ரூ. 210 கோடி கூடுதலாகும். இந்தியா அதன் அண்டை நாடுகளுக்கு உதவி செய்கிறது. அதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ரூ. 5,550 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் இலங்கைக்கு ரூ. 500 கோடி மானியமாக வழங்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில் ரூ. 290 கோடி வழங்கப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டில் ரூ. 181.84 கோடியே வழங்கப்பட்டது. ஆகவே கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக ரூ. 210 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர்களை மறுகுடியமர்வு செய்ய இலங்கை அரசு பயன்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு தமிழக கட்…
-
- 2 replies
- 697 views
-
-
"இலங்கைக்கு எதிரா எதுவும் செய்ய முடியாது!' ""இலங்கைக்கு பொருளாதார தடையெல்லாம் விதிக்க முடியாதுன்னு, மனசுல பட்டதை பட்டுன்னு சொல்லிட்டார் பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அன்வர்பாய். ""யாருங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.""காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் தான்... பார்லிமென்ட் கூட்டத் தொடரின் போது, தமிழகத்தை சேர்ந்த எம்.பி., க்கள் சிலரோட, ராகுல், இலங்கை தமிழர்கள் பிரச்னை தொடர்பா ஆலோசனை நடத்தினாரு... அப்ப, "இலங்கை தமிழர்களுக்கு தேவையான உதவிகளை, காங்கிரஸ் ஆட்சி தான் செய்துருக்கு... இலங்கை தமிழர்களுக்கு, நேரு, இந்திரா, ராஜிவ் ஆட்சிக் காலத்துல இத்தனை உதவிகளை செஞ்சிருக்காங்க'ன்னு, எல்லா உதவிகளையும், அப்படியே பட்டியலிட்டு சொன்னாரு... கூடவே, "தனி ஈழம் கோரிக்கையை ஆதரிக்க…
-
- 2 replies
- 699 views
-
-
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று டி.ராஜேந்தர் கண்டன ஆர்ப்பாட்டம் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் வலியுறுத்தினார். இலங்கை அரசை கண்டித்து லட்சிய திமுக தலைவர்டி.ராஜேந்தர் தலைமையில் வள்ளுவர் கோட்டம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ‘‘பாலசந்திரனை கொன்னீங்களடா பாவி, உங்க பாவங்களை மன்னிக்காதுடா ஆவி!, ராஜபக்ச நீ செய்த பாவமெல்லாம் நிக்குதய்யா லைனா, உன்ன தண்டிக்காம விடாது ஐநா! இந்திய அரசே இலங்கைக்கு வால் பிடிக்காதே!, நம்மளவன் நடிக்கிறான், அதான் சிங்களவன் அடிக்கிறான்! தமிழினமே தூங்காதே, ஈழத்தமிழர் இதயம் தாங்காதே! இரக்கமில்லா காங்கிரஸ் …
-
- 0 replies
- 553 views
-
-
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி ஒரு வீடியோவை சனல் 4 என்ற தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது. இதனை தற்போது ஆரம்பமாகியுள்ள ஐ.நா வின் மனித உரிமைகள் மாநாட்டில் திரையிடுவதற்கும் குறிப்பிட்ட தொலைக்காட்சி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்ஷயை எதிர்த்து தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்கும் போது மனித நேயத்தைப் பரப்பும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாத்திரம் இதற்காக குரல் கொடுக்காதது ஏன்? என்று உணர்வு வார இதழின் வாசகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைப்பின் மாநிலத் தலைவரும் பிரபல பேச்சாளருமான பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் எக்காரணம் கொண்டும் ஐ.நாவில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க முடியாது என்…
-
- 0 replies
- 685 views
-