அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3269 topics in this forum
-
ராஜபக்சவுக்கு ‘பாரத ரத்னா’ வழங்க வேண்டும்: சுப்பிரமணிய சுவாமி கோரிக்கை இலங்கையில் மகிந்த ராஜபக்சவை கடந்த வாரம் சந்தித்த சுப்பிரமணிய சுவாமி. இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் விராத் இந்துஸ்தான் சங்கம் சார்பில் அடுத்த வாரம் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்ச கலந்துகொள்ள உள்ளார். கடந்த வாரம் இலங்கை சென்ற சுப்பிரமணிய சுவாமி ராஜபக்சவை நேரில் சந்தித்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். இதற்கிடையே பாஜக மூத்த த…
-
- 4 replies
- 676 views
-
-
இந்திய பிரதமருக்கு கொலை மிரட்டல்! தேசிய புலனாய்பு முகமை அலுவலகத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பை ஏற்படுத்திய மர்ம நபரொருவர், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேடப்படும் குற்றவாளிகளை பிடிப்பதற்காக, சென்னை புரசைவாக்கத்திலுள்ள தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணொன்றை வெளியிட்டிருந்தது. குறித்த தொலைபேசி எண்ணுக்கு, இன்று காலை அழைப்பை ஏற்படுத்திய மர்ம நபர், பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்யப் போவதாக ஹிந்தியில் பேசிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார். இவ்வாறான மிரட்டல் அழைப்புக்கள்கள் வழமையாக சென்னை பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கே வரும். ஆனால், NIA அலுவலகத்துக்கே தொடர்பு கொண்டு மிரட…
-
-
- 4 replies
- 340 views
-
-
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் சாலையே இல்லாத நட்ட நடு வயலில் பாலம் ஒன்றைக் கட்டியுள்ளனர்! நிலம் கையகப்படுத்தும் பிரச்சனை காரணமாக சாலைகளை கட்ட முடியாமல் போய்விட்டது. போனால் போகட்டும் என்று கிடைத்த கொஞ்ச நிலத்தில் ஒரு பாலத்தை கட்டி விட்டனர் அம் மாநில நெடுஞ்சாலைத்துறையினர் ..........🫣. https://minnambalam.com/india-news/35-ft-bridge-built-in-open-field-in-araria-bihar-without-road-access-dm-seeks-report/
-
- 4 replies
- 315 views
-
-
இலங்கைக்கு இந்தியா 10 பில்லியன் டொலரை கடனாக வழங்க வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தல் Colombo (News 1st) இலங்கைக்கு இந்தியா 10 பில்லியன் டொலரை கடனாக வழங்க வேண்டும் என பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்கள் அவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இந்து சமுத்திரத்தில் நட்பு நாடாக இந்தியா நீண்ட காலமாக தொடர வேண்டுமாக இருந்தால், தவணை அடிப்படையிலான 10 பில்லியன் டொலரை ராஜபக்ஸ அரசாங்கத்திற்கு இந்தியா வழங்க வேண்டும் என அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இல்லாவிட்டால், சீனாவிற்கு மற்றுமொரு இளைய பங்காளர் கிடைக்கும் நிலை ஏற்படும் என சுப்பிரமணியன் சுவாமி இந்திய பிரதமருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். பல்வேறு சர்வதேச கொள்கைகளில் மோடி அரச…
-
- 4 replies
- 305 views
-
-
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக சீன கருத்து தெரிவித்துள்ளது. சீன வெளியுறவுத் துறையின் செய்தி தொடர்பாளர் ஹுவா சூன்யிங், "காஷ்மீர் பகுதியின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை காக்க வேண்டும்," என்று கூறி உள்ளார். மேலும், "சீன நிலப்பகுதியின் இறையாண்மையை அண்மைக்காலமாக இந்தியா குறைத்து மதிப்பிட்டு ஒருதலைப்பட்சமாக உள்ளூர் சட்டங்களை மாற்றி வருகிறது," என்றும் கூறி உள்ளார். கேள்வி: லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக மாற்றுவதாக இந்திய அரசு அறிவித்துள்ளதே. அந்தப் பகுதியில்தான் சீனாவின் மேற்கு எல்லை வருகிறது. இது குறித்த உங்கள் கருத்து என்ன? பதில்: சீன - இந்திய எல்லையின் சீனாவின் மேற்கு பகுதியை, இந்தியா தனது நிர்வாக ஆளுகைக்குள் கொண்டி…
-
- 4 replies
- 1k views
- 1 follower
-
-
பொதுவாக இந்திய குடிவரவு அதிகாரிகளுக்கு, திமிர், அராஜகம் அதிகம். 27 வயதான தமிழக மாணவர் ஆபிரகாம், அமெரிக்காவில் தனது Phd கல்வியினை முடித்துக் கொண்டு நியூயோர்க்கில் இருந்து மும்பை ஊடாக சென்னை செல்ல, மும்பையில் வந்து இறங்கி இருக்கிறார். 33ம் இலக்க கவுண்டரில், லைனில் நின்று இருக்கிறார். அவருக்கு முன்னால் நின்றிருந்த வெள்ளையர் ஒருவருடன் ஆங்கிலத்தில் பேசி கிளியர் பண்ணிய அதிகாரி இவருடன் இந்தியில் பேசினார். இந்தி தெரியாது என்று சொல்லி ஆங்கிலத்தில் பேசமுயன்ற போது, இந்தியாவில் இருந்து கொண்டு இந்தி தெரியாதா. அப்படீன்னா தமிழ்நாட்டுக்குப் போயிரு என்று திமிராக பேசிய மும்பை விமான நிலைய குடியுரிமைப் பிரிவு அதிகாரி கிளியர் பண்ண மறுத்தார். நிலைமை எல்லை மீறுவதை உணர்ந்த ப…
-
- 4 replies
- 1.3k views
-
-
விடுதலைப் புலிகளை... புத்துயிர் பெற முயற்சி செய்த, இந்தியர்களின்... சொத்துக்கள் பறிமுதல் விடுதலைப் புலிகளை மீண்டும் புத்துயிர் பெறச்செய்யும் ஒரு பகுதியாக, போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நான்கு இந்தியர்களின் 359 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை இந்திய அமலாக்க பிரிவு பறிமுதல் செய்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 18 ஆம் திகதி இந்திய கடற்பரப்பில் கடலோர காவல்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட இலங்கை படகில் இருந்து 300 கிலோ போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்ட நிலையில் வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஆறு வீடுகள், வாகனங்கள், சுரேஷ் ராஜ் ஏ,…
-
- 4 replies
- 437 views
-
-
6 அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிகள் உள்ளிட்ட 24 நீர்மூழ்கி கப்பல்களை கட்டுவதற்கு இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான நிலைக்குழு, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், இந்திய கடற்படையிடம் தற்போது 15 மரபுரீதியிலான ((conventional submarines)) நீர்மூழ்கிகள் இருப்பதாகவும், மேலும் ஒரு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் குத்தகை அடிப்படையில் ((lease)) பயன்படுத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் நீர்மூழ்கிகளில் 13, பதினேழு ((17)) முதல் 31 ஆண்டுகள் வரை பழைமையானவை என்று சுட்டிக்காட்டியுள்ள நிலைக்குழு, ஏற்கெனவே கட்டப்பட்டு வரும் ஏவுகணை தாங்கும் அரிஹந்த் ரக நீர்மூழ்கிகளுடன் சேர்த்து, 18 மரபுரீதியிலான…
-
- 4 replies
- 613 views
-
-
Published By: Digital Desk 3 10 Oct, 2025 | 03:49 PM இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை ஆப்கானிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் அமீர் கான் முத்தாகி சந்தித்துள்ளார். அமீர் கான் முத்தாகி ஒரு வார கால உத்தியோகபூர்வ பயணமாக இந்தியா சென்றடைந்துள்ளார். இந்தியாவில் 16 ஆம் திகதி வரை தங்கி இருப்பார். 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், தாலிபான் பிரதிநிதி ஒருவர் இந்தியாவுக்கு செல்வது இதுவே முதல் தடவை ஆகும். டெல்லியில் இரு நாட்டு உறவுகள், புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்துவது குறித்து அவர் பேச்சுவார்த்தையை அவர் ஆரம்பித்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் ஆப்கன் அமைச்சர் முத்தாகி இன்று வெள்ளிக்கிழமை (10) கூட்டத்தில் பங்கேற்று…
-
- 4 replies
- 246 views
- 1 follower
-
-
பங்களாதேஷுக்கு 4.7 பில்லியன் டொலர் கடன் வழங்க IMF நிறைவேற்றுச் சபை அனுமதி By SETHU 31 JAN, 2023 | 05:26 PM பங்களாதேஷுக்கு 4.7 பில்லியன் கடன் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்றுச் சபை அனுமதி வழங்கியுள்ளது. எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கு இது உதவும் என நம்பப்படுகிறது. கடந்த வருடம் பங்களாதேஷில் ஒரு நாளில் 13 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டமை குறிபபிடத்தக்கது. சர்வதேச நாணய நிதியதின் கடனுதவியின் கீழ் பங்களாதேஷ் அரசுக்கு உடனடியாக 476 மில்லியன் டொலர்கள் கிடைக்கவுள்ளது. எனினும், இது வரி அதிகரிப்பு மற்றும் வங்கித்துறையில் மீட்கப்பட முடியாத கடன்…
-
- 4 replies
- 356 views
- 1 follower
-
-
தமிழகம், கேரளாவில் வவ்வால்களில் கொரோனா வைரஸ்; ஐ.சி.எம்.ஆர். ஆய்வறிக்கை உலக நாடுகளில் பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவிலும் தீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,076 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 377 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இதுபற்றி ஆய்வு மேற்கொண்டு ஆய்வறிக்கை ஒன்றை சமர்ப்பித்து உள்ளது. இதனடிப்படையில் 10 மாநிலங்களில் உள்ள 2 வகையான வவ்வால் இனங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. …
-
- 4 replies
- 462 views
-
-
30 JAN, 2024 | 01:25 PM அரச இரகசியங்களை பகிரங்கப்படுத்திய குற்றச்சாட்டில் பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானிற்கு நீதிமன்றம் பத்து வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. சிபெர்வழக்கு என அழைக்கப்படும் விவகாரம் தொடர்பிலேயே பாக்கிஸ்தான் நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது. பாக்கிஸ்தானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஷா மஹ்மூட் குரேசியும் குற்றவாளியாக கருதப்பட்டு அவருக்கும் நீதிமன்றம் பத்துவருட சிறைத்தண்டனையை விதித்துள்ளது. அரசஇரகசியங்களை அம்பலப்படுத்திய குற்றச்சாட்டு - இம்ரானிற்கு பத்து வருட சிறை | Virakesari.lk
-
- 4 replies
- 673 views
- 1 follower
-
-
தமிழகம் முழுவதும் நடப்பாண்டில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாட புத்தகங்களில் பிழைகள் மற்றும் தேசிய கீதத்தை தவறாக அச்சிடப்பட்டது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. தமிழை விட சமஸ்கிருதமே தொன்மையான மொழி என பாடப்புத்தகத்தில் அறிவிக்கப்பட்டதால் மீண்டும் சர்ச்சையானது. 12ம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கருத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பக்கம் எண் 142ல் மொழிகளின் தொன்மை வரலாற்றை குறித்து படமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதில், கி.மு.300 ஆண்டுகள் பழமையான மொழி தமிழ் என்றும், கி.மு.2000 ஆண்டுகள் பழமையானது சமஸ்கிருதம் என்றும் அச்சடிக்கப்பட்டுள்ளது. அதே பக்கத்தில் சீன மொழி 1,250 ஆண்டுகள் பழைமையா…
-
- 4 replies
- 852 views
-
-
பட மூலாதாரம்,RSS(RASHTRIYA SAMACHAR SAMITI/NEWS AGENCY) ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நேபாளத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 128 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தின் மையம் நேபாளத்தில் உள்ள ஜாஜர்கோட் ஆகும். அதன் தாக்கம் டெல்லி உள்ளிட்ட வட இந்தியவில் உள்ள மாநிலங்களிலும் உணரப்பட்டது. பிபிசி நேபாளி சேவையின்படி, வெள்ளிக்கிழமை இரவு 11.47 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.4-ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில், கர்னாலி மாகாணத்தின் ஜாஜர்கோட் மற்றும் ருக்கும் மேற்குப் பகுதியில் அதிகபட்ச சேதம் ஏற்பட்டுள்ளது. நேபாள க…
-
- 4 replies
- 564 views
- 1 follower
-
-
விஞ்ஞானிகளின் சாதனையில் புகழ் தேடுகின்றார் பிரதமர் மோடி! ”சந்திரயான்-3 திட்டம்‘ வெற்றியடைந்துள்ள நிலையில், விஞ்ஞானிகளின் சாதனையில் பிரதமர் மோடி புகழ் தேடுகின்றார்” என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ” சந்திரயான்-3, நிலவில் தரையிறங்கிய பெருமையும், உற்சாகமும் இன்னும் நீண்ட காலத்துக்கு நம்முடன் இருக்கும். இஸ்ரோ தலைவர் சோம்நாத்தின் தலைமை, உண்மையிலேயே வரலாறு படைத்து விட்டது. அவருக்கும், அவருடைய குழுவினருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அதே சமயத்தில், போலி வேடம் போடும் பிரதமர் மோடி, சில கேள்விகளுக்கு பதில் அளிக்க வ…
-
- 4 replies
- 277 views
-
-
ரஷ்யப் படையெடுப்புக்கு எதிராக.... இந்தியாவை, தெளிவான தீர்மானத்தினை எடுக்குமாறு அமெரிக்கா வலியுறுத்து! ரஷ்யப் படையெடுப்புக்கு எதிராக தெளிவான தீர்மானம் ஒன்றை எடுக்குமாறு அமெரிக்கா இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யாவிற்கு எதிராக ஐ.நா சபையில் மூன்று முறை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் இந்தியா நடுநிலையாக செயற்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கை அமெரிக்காவின் செனட் சபை உறுப்பினர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்தியா மீது பொருளாதார தடையை அறிவிக்கவும் ஜோபைடன் அரசுக்கு நெருக்குதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், ரஷ்யாவுக்கு எதிரான தெளிவான தீர்மானத்தினை எடுக்குமாறு அமெரிக்கா…
-
- 4 replies
- 405 views
-
-
இந்திய அரசின் துரோகத்துக்கு முகங்கொடுத்திருக்கும் காஷ்மீர் அரசியல்வாதிகள் எதிர்காலத்தைப் பொறுத்தவரையில் இந்தியாவுடன் இணைந்திருப்பதே நன்மை பயக்கக்கூடியது என்று காஷ்மீர் மக்களுக்கு நம்பிக்கை அளித்து வந்தவர் சக்கீனா இற்றூ (Sakina Itoo). முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற இப்பிரதேசத்தின் தன்னாட்சியை பறித்தெடுக்கின்ற முடிவை கடந்த ஆகஸ்ட் மாதம் புதுடெல்லி எடுத்த பின்னர், மக்கள் முன்னே தன்னால் செல்ல முடியாதிருப்பதாகவும் தனக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் 48 வயது நிரம்பிய இந்திய சார்பு நிலையைக் கொண்டிருக்கும் அரசியல்வாதியான சக்கீனா இற்றூ தெரிவித்தார். “மக்கள் நடுவில் மீண்டும் என்ன முகத்தோடு செல்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. எங்களிடமே எந்தவிதமான பதில்களுமில்லா…
-
- 4 replies
- 529 views
-
-
கொரோனாவும் பரவிவரும் வெறுப்பு மனநிலையும்- டாக்டர் சிவபாலன் இளங்கோவன் April 4, 2020 - சிவபாலன் இளங்கோவன் · சமூகம் இந்தியா கொரோனோ பிப்ரவரி 19 ஆம் தேதி, வடக்கு இத்தாலியில் உள்ள மிலன் நகரம் அத்தனை கோலாகலமாய் இருக்கிறது. நகரத்தின் அத்தனை சாலைகளிலும் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. சாலைகள் மட்டுமல்ல உணவகங்கள், மதுக்கூடங்கள் எங்கும் மக்கள் நிறைந்திருக்கிறார்கள். மிலன் நகரமே திருவிழா கோலத்தில் இருக்கிறது. காரணம், அன்று நடக்கும் ஐரோப்பிய லீக்கின் ஸ்பெயினின் வெலான்சியாவிற்கும், அட்லாண்டிக் அணிக்கும் இடையேயான கால்பந்தாட்ட போட்டி. அந்த கால்பந்தாட்ட போட்டியை பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் ஸ்பெயினில் இருந்து வந்து குழுமியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது இத்தாலியின் பல்வேற…
-
- 4 replies
- 625 views
-
-
300 ஆண்டுகால சாதிப் பாகுபாடு முடிவுக்கு வந்தது : முதல் முறையாக கோயிலுக்குள் நுழைந்த தலித்துகள் March 13, 2025 2:45 pm மேற்கு வங்காளத்தின் கிராமப்புறப் பகுதியில் சுமார் மூன்று நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்த சாதி அடிப்படையிலான பாகுபாட்டின் தளைகளை உடைத்து, 130 தலித் குடும்பங்களின் பிரதிநிதிகள் புதன்கிழமை முதல் முறையாக பூர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள கிதேஷ்வர் சிவன் கோயிலுக்குள் காலடி எடுத்து வைத்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். கட்வா துணைப்பிரிவில் உள்ள கித்கிராம் கிராமத்தின் தஸ்பாரா பகுதியைச் சேர்ந்த தாஸ் குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குழு (நான்கு பெண்கள் மற்றும் ஒரு ஆண்) காலை 10 மணியளவில் கோவில் படிகளில் ஏறி, சிவலிங்கத்தின் மீது பால் மற்றும் தண்ணீரை ஊற்றி…
-
-
- 4 replies
- 239 views
-
-
இந்தியாவின் ஹைதராபாத்தில் உணவு விநியோகம் செய்யும் ஓட்டுநர் ஒருவர், எரிபொருள் பற்றாக்குறையால், பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் மற்றும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டதால் குதிரையில் டெலிவரி செய்ய முயன்றார்.
-
-
- 4 replies
- 348 views
- 1 follower
-
-
உலகை வலம் வந்த ஸ்பெயின் பெண் இந்தியாவில் கூட்டு பாலியல் வன்கொடுமை - கணவர் கண்ணெதிரே பயங்கரம் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ரவி பிரகாஷ் பதவி, ராஞ்சியிலிருந்து, பிபிசி ஹிந்திக்காக 3 மார்ச் 2024, 08:37 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஸ்பெயினைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் கணவர் கண்ணெதிரே கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தின் தீவிரம் கருதி, மாநில முதல்வர் சம்பாய் சோரன் இந்த முழு விவகாரம் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தர…
-
-
- 4 replies
- 499 views
- 1 follower
-
-
உக்ரைனில்... உள்ள இந்தியர்களை, மீட்பதற்காக சென்ற விமானம் திருப்பிவிடப்பட்டது! உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக பயணித்த ஏர் இந்தியா விமானம் திருப்பிவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தலைநகர் டெல்லியில் இருந்து, உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு சென்ற இந்திய விமானமே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. கீவ் நகரை நெருங்கிய வேளையில் ஏர் இந்தியா விமானத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், NOTAM எனப்படும் வான் தாக்குதல் எச்சரிக்கையை குறிப்பிட்டு ஏர் இந்தியா விமானம் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://athavannews.com/2022/1268809
-
- 3 replies
- 327 views
-
-
உக்ரைன் விவகாரம் : இந்தியாவின் நிலைப்பாட்டை வரவேற்கும் ரஷ்யா! உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து டெல்லியில் உள்ள ரஷ்ய தூதர் ரோமன் பாபுஷ்கின் தெரிவிக்கையில், ‘சர்வதேச அளவில் பொறுப்பு மிக்க நாடாக இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது. உலக விவகாரங்களில் சுதந்திரமான, நடுநிலையான அணுகுமுறையை இந்தியா கொண்டுள்ளது. இந்தியாவும், ரஷ்யா ராணுவம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் கொண்டிருக்கும் நட்புறவை உக்ரைன் விவகாரம் பாதிக்காது. குஜராத்தில் அடுத்த மாதம் நடைபெறும் இராணுவ கண்காட்சியல் ரஷ்யாவின் பங்களிப்பு அதிகமாக இருக்கும். உக்ரைன் பிரச்சினையில் இந்தியாவின் சுதந்திரமான அணுகுமுறை வரவேற்கத்தக்கது’ எனத்…
-
- 3 replies
- 321 views
-
-
-
- 3 replies
- 607 views
-
-
கொரோனா வைரஸ் ‘இந்தியத் திரிபு’ என்பதை உடனே நீக்குங்கள்: சமூக ஊடகங்களுக்கு இந்திய அரசு உத்தரவு 16 Views இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் திரிபை ‘இந்தியத் திரிபு’ (Indian variant) என்று குறிப்பிடும் பதிவுகளை நீக்குமாறு சமூக ஊடக நிறுவனங்களுக்கு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பால் இந்த திரிபுக்கு ‘B.1.617’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதை ‘இந்தியத் திரிபு’ என்று குறிப்பிடுவது தவறானது என்றும் இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவிக்கிறது. பிரிட்டன் மற்றும் பிரேசில் ஆகியவற்றில் கண்டறியப்பட்ட திரிபுகளுக்கு அந்தந்த நாடுகளின் பெயர்களே வைக்கப்பட்டு அவை பிரிட்ட…
-
- 3 replies
- 395 views
-