Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பட மூலாதாரம்,RESCUE 1122 30 ஜூலை 2023, 14:29 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பாகிஸ்தானில் இஸ்லாமியக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் மர்மப் பொருள் வெடித்ததில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டனர். இருநூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் வடமேற்கு பஜௌர் மாவட்டத்தில் ஜாமியத்-உலெமா-இ-இஸ்லாம்-ஃபாஸ்ல்(JUI-F) என்ற கட்சி இந்தப் பொதுக் கூட்டத்தை நடத்தியது. அந்த இடத்தை பாதுகாப்புப் படையினர் சூழ்ந்துள்ளனர். அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வெடிப்பு எதனால் நிகழ்ந்தது என்று பாதுகாப்புப் படைகளால் உறுதிப்படுத்த முடியவில்லை. அங்கே மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. காயமட…

  2. சவூதி அரேபியாவில் பேருந்தும் டேங்கர் லொறியும் மோதி விபத்து; 42 இந்திய யாத்ரீகர்கள் உயிரிழப்பு! சவூதி அரேபியாவின் முஃப்ரிஹாத் அருகே திங்கட்கிழமை (17) அதிகாலை மெக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்ற பேருந்து டீசல் டேங்கர் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறைந்தது 42 இந்திய உம்ரா யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பலர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்தின் தாக்கம் கடுமையாக இருந்ததால், பல பயணிகள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று ஆரம்ப அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள அவசரகால குழுக்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதிகாரிக…

  3. 10,000 வீரர்கள்.. பல போர் விமானங்கள்.. இந்திய எல்லையில் ராணுவம் குவிப்பு.. போர் பதற்றம்! இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் எல்லைப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதை அடுத்து கடுமையான போர் பதற்றம் உருவாகி உள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானின் எல்லைக்குள் புகுந்து இந்த தாக்குதலை நடத்தி உள்ளது.அதிகாலை 3.30 மணிக்கு பாகிஸ்தானுக்குள் புகுந்த இந்திய விமானப்படை இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. 12 விமானங்களோடு உள்ளே புகுந்த இந்திய விமானப்படை சரமாரி தாக்குதல்களை நடத்தி இருக்கிறது. இந்த அதிரடி தாக்குதலில் மொத்தம் 4 ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத…

  4. இந்தியா, ரஷ்யாவுடன்... கொண்டுள்ள நிலைப்பாட்டை, மதிக்கின்றோம் – ஜேர்மனி உக்ரைன் போர் தொடர்பாக இந்தியா, ரஷ்யாவுடன் கொண்டுள்ள நிலைப்பாட்டை மதிப்பதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது. ஜேர்மனியின் இந்தியாவுக்கான தூதர் வால்டர் லிண்டர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு நாடும் தனது சொந்த நலன் சார்ந்து செயல்படும் உரிமை உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் ஐநா.சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டபோது, ரஷ்யாவின் படையெடுப்பை இந்தியா கண்டிக்கும் என எதிர்பார்க்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நடுநிலை வகித்ததால் இந்தியா, ஜேர்மனி இடையே உறவில் பாதிப்பு எதுவும் இல்லை எனவும் அவர் விளக்கமளித்தார். https://athavannews.com/2022/1284296

    • 3 replies
    • 639 views
  5. அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய-சீன வீரர்கள் மோதல் - பலர் படுகாயம் - என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் 12 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் செக்டாரில் இந்திய - சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. 2022ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி இந்த மோதல் நடந்ததாக இந்திய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். டிசம்பர் 9ஆம் தேதி அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டரில் சீன ராணுவ துருப்புக்கள் நுழைந்ததாகவும், அதற்கு இந்தியா பதிலடி கொடுத்ததாகவும் இந்திய இராணுவம் பிபிசியிடம் தெரிவித்தது. இந்த மோதலில் …

  6. இந்திய பெருங்கடல் பகுதியில் வாலாட்டினால் தக்க பதிலடி - சீனாவுக்கு கடற்படை தளபதி மறைமுக எச்சரிக்கை புதுடெல்லி, இந்திய, பாகிஸ்தான்போரின்போது, 1971-ம் ஆண்டு டிசம்பர் 4-ந்தேதி, பாகிஸ்தானின் 4 போர்க்கப்பல்களை இந்திய கடற்படை மூழ்கடித்தது. இதில், நூற்றுக்கணக்கான பாகிஸ்தான் கடற்படையினர் கொல்லப்பட்டனர். இந்திய கடற்படையின் இந்த சாதனையை, பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் நேற்று இந்திய கடற்படை தளபதி கரம்பீர்சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனாவின் தொடர் அத்துமீறல்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.…

  7. போரிஸ் ஜான்சன் - நரேந்திர மோதி சந்திப்பு: பிரிட்டன் பிரதமரின் இந்திய வருகை உலகத்துக்கு ஏன் முக்கியம்? ககன் சபர்வால் தெற்காசிய செய்தியாளர், பிபிசி நியூஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PA MEDIA பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் 21-ஆம் தேதி இந்தியாவுக்கு வருகிறார். இந்த இரு நாள் பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையே உறவை வலுப்படுத்த இரு தரப்பினரும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலையடுத்து, ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை பிரிட்டன் எடுத்துள்ள நிலையில் பிரிட்டன் பிரதமரின் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. யுக்ரேன் போர் தொடங்கியதி…

  8. மீண்டும் ஒரு மும்பை தாக்குதலுக்கு இடமில்லை – ராஜ்நாத் சிங் by : Krushnamoorthy Dushanthini http://athavannews.com/wp-content/uploads/2019/07/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D.jpg மும்பையில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலைப் போல் மீண்டும் தாக்குதல் நிகழ வாய்ப்பில்லை எனப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்து கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ நாட்டின் தன்மானம், இறையாண்மை, மண்டல ஒருமைப்பாடு ஆகியவற்றில் அரசு எந்த இணக்கமும…

  9. அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பல இடங்களின் பெயர்களை சீனா மாற்றுவது ஏன்? 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 15 இடங்களின் பெயர்களை சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வியாழக்கிழமையன்று (டிசம்பர் 30) மாற்றியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தை 'தெற்கு திபெத்' என்று கருதும் சீனா, இப்போது இந்த பெயர்களை தனது அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும், வரைபடங்களிலும் பயன்படுத்துகிறது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், 'பெயர் மாற்றுவது' கள நிலவரத்தின் உண்மைகளை மாற்றாது என்றும், 'அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்…

  10. AK 203 வகையைச் சேர்ந்த துப்பாக்கிகளை விநியோகித்தது ரஷ்யா! AK 203 வகையைச் சேர்ந்த துப்பாக்கிகளை கொள்வனவு செய்ய இந்தியா, ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், குறித்த ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக 70 ஆயிரம் துப்பாகிகளை ரஷ்யா விநியோகம் செய்துள்ளன. ஆறு இலட்சத்து 70 ஆயிரம் இராணுவ துப்பாக்கிகளை கொள்வனவு செய்ய இந்தியா ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், முதல் கட்டமாக 70 ஆயிரம் துப்பாக்கிகளை ரஷ்யா விநியோகம் செய்துள்ளது. இந்திய இராணுவத்தில் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் INSAS துப்பாக்கிகளுக்கு பதிலாக இந்த துப்பாக்கிகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிகள் 300 மீற்றர் தூரத்தில் உள்ள இலக்கை துல்லி…

  11. பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, சுராசந்த் பூரில் குகிகளைச் சந்தித்த பிறகு ஹெலிகாப்டரில் இம்பால் திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் குழு, பிஷ்ணுபூர் என்ற மாவட்டத்தில் உள்ள மொய்ராங் என்ற கிராமத்தில் மெய்தெய்கள் தங்கியிருந்த முகாமுக்குச் சென்றது. கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மணிப்பூர் கலவரத்திற்குப் பிறகு மெய்தெய், குகி ஆகிய இரு இனங்களைச் சேர்ந்தவர்களுமே அரசின் மீது நம்பிக்கை இழந்திருப்பதாக அங்கு சென்றுவந்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். அங்கே நிலவரம் எப்படி இருக்…

  12. மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் மீது,சிறுநீர் கழித்த அரசியல்வாதி மனநலம் பாதிக்கப்பட்ட பழங்குடியினச் சிறுவன் மீது பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் மதுபோதையில், சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், சித்தி தொகுதியின் பா.ஜ.க எம்எல்ஏ கேதார் நாத் சுக்லாவின் பிரதிநிதியான பிரவேஷ் சுக்லா என்பவரே குறித்த சிறுவனின் மீது சிறுநீர் கழித்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இச்சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர், குறித்த நபர் அரசியல் பிரமுகர் என்பதால் அச்சத்தில் பொலிஸ் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்காமல் இருந்துள்ளனர். இந்நிலையில் இது குறித்த வீடியோவ…

  13. 24 APR, 2025 | 05:17 PM இந்திய விமானங்களிற்கு தனது வான் எல்லையை மூடியுள்ள பாக்கிஸ்தான் இந்தியாவுடனான அனைத்து வர்த்தகநடவடிக்கைகளையும் இடைநிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவிற்கு சொந்தமான இந்தியாவிலிருந்து இந்தியாவிலிருந்து இயங்கும் அனைத்து விமானங்களிற்கும் தனது வான் எல்லையை மூடுவதாக பாக்கிஸ்தான் அறிவித்துள்ளது என ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. பாக்கிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு செல்லும் அல்லது மூன்றாவது நாட்டிலிருந்து பாக்கிஸ்தான் ஊடாக இந்தியாவிற்கு செல்லும் பொருட்கள் உட்பட வர்த்தக நடவடிக்கைகளை இடைநிறுத்துவதாகவும் பாக்கிஸ்தான் அறிவித்துள்ளது. பாக்கிஸ்தானிற்கு என ஒதுக்கப்பட்ட நீரோட்டத்தை தடை செய்யவோ அல்லது திருப்பிவிடவோ மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கையையும் போர…

  14. உக்ரைன்-ரஷ்யா போர்ப் பதற்றம் : எவ்வகை நடவடிக்கைகளுக்கும் ஆதரவளிக்க தயார் என இந்தியா அறிவிப்பு! உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர்ப் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் எடுக்கப்படும் எந்த வகை நடவடிக்கைகளுக்கும் ஆதரவளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த இந்தியாவின் பிரதிநிதி திருமூர்த்தி இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், இந்தியாவை சேர்ந்த சுமார் 20 ஆயிரம் மாணவர்கள் உக்ரைனின் பல பகுதிகளில் வசித்து கல்வி பயின்று வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பு தான் இந்தியாவுக்கு முக்கியம். அனைத்து தரப்பினரும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும் எனக் கோரிக்கை வ…

    • 3 replies
    • 336 views
  15. இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக ஜேர்மனி அதிபர் இந்தியா வருகை! ஜேர்மனி அதிபர் ஒலப் ஸ்கோல்ஸ், இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக இந்த வார இறுதியில் இந்தியா வருகை தரவுள்ளார். எதிர்வரும் 25ஆம் திகதி இந்தியா வரும் ஒலப் ஸ்கோல்ஸ் இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு தலைவர்களும் வர்த்தகம், இருநாட்டு உறவு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளனர். மேலும், ஜேர்மனி அதிபர் ஒலப் ஸ்கோல்ஸ், எதிர்வரும் 26ஆம் திகதி பெங்களூருவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்தப் பயணத்தின் போது ஜேர்மனி – இந்திய தொழில்துறையினர் இடையே ஆலோசனைகளும் நடைபெறவுள்ளது. இதன்பிறகு…

  16. குன்னூர் ஹெலிகொப்டர் விபத்துக்கான காரணம் வெளியானது! குன்னூர் அருகே இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்திற்கு விமானிகளின் கவனக்குறைவு மற்றும் மோசமான வானிலையே காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குன்னூர் அருகே இடம்பெற்ற குறித்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இது குறித்த விசாரணைகளை ஏர் மார்ஷல் மகேந்திர சிங் தலைமையிலான குழு மேற்கொண்டு வருகிறது. இந்த குழு சம்பவ இடத்திற்கு சென்று ஹெலிகொப்டரின் கருப்பு பெட்டியை கண்டுப்பிடித்து விசாரணைகள் மேற்கொண்டது. தற்போது விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், விபத்துக்கான காரணம் குறித்த உண்மை தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இது குறித்த அறிக்கையை சட்டரீதியா…

  17. ஆந்திரா விபத்து - அணில் ஏறினால் உயர் அழுத்த மின் கம்பிகள் அறுந்து விடுமா? ஷங்கர் வடிசேட்டி பிபிசி தெலுங்கு சேவைக்காக 33 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆந்திராவில் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர். மின் கம்பத்தில் அணில் ஏறியதால் மின் கம்பத்தில் மின் கசிவு ஏற்பட்டு உயர் அழுத்த கம்பிகள் அறுந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். விலங்குகள், பறவைகள் உண்மையாகவே மின் கம்பிகளை சேதப்படுத்துகின்றனவா? ஏதேனும் காரணத்தால் மின்சார கம்பி அறுபட்டால், மின்சாரம் தடைபடுவதற்கான வாய்ப்பு உள்ள நிலையில், சத்தியசாயி…

  18. Published By: SETHU 05 MAR, 2024 | 01:37 PM மாலைதீவும் சீனாவும் பாதுகாப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன. மாலைதீவின் பாதுகாப்பு அமைச்சு இது தொடர்பாக தெரிவிக்கையில், சீனாவின் இராணுவ உதவிகள் தொடர்பாக திங்கட்கிழமை ஒப்பந்தமொன்று கையெழுத்திடப்பட்டதாக தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை இந்த ஒப்பந்தம் பலப்படுத்தும் என மாலைதீவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மாலைதீவில் உள்ள 89 இந்தியப் படையினரம் மே 10 ஆம் திகதிக்கு முன்னர் வெளியேற வேண்டும் என மாலைதீவின் புதிய ஜனாதிபதி மொஹம்மட் முய்ஸுவின் அரசாங்கம் உத்தரவிட்டு சில வாரங்கில் சீன- மாலைதீவு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. மாலை…

  19. விடுதலை புலிகள் இயக்கம் மீதான தடை நீட்டிக்கப்பட்டது குறித்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ பங்கேற்றார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பின் இந்தியாவில் விடுதலை புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த மே 14-ம் தேதி அந்த அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.விடுதலை புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் அதிகம் இருப்பதாகவும், அவர்கள் தடை செய்யப்பட்ட அந்த இயக்கத்திற்கு ஆதரவை பெருக்க முயற்சிப்பதாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் அவர்கள் செயல்படலாம் என்ற யூகத்தின் அடி…

    • 3 replies
    • 792 views
  20. இந்தியாவிடம் இருந்து கொள்ளை அடித்த சொத்துக்களை திருப்பித் தர வேண்டும் ! இங்கிலாந்து , ஃபிரான்சுக்கு ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. வேண்டுகோள் !! இந்தியாவை ஆட்சி செய்த இங்கிலாந்து மற்றும் ஃபிரான்ஸ் போன்ற நாடுகள் இங்கிருந்து அள்ளிச் சென்ற சொத்துக்களை அந்நாடுகள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று பாஜக மாநிலங்களவை எம்.பி. ராஜீவ் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார். கிழக்கிந்திய கம்பெனி மூலம் வியாபாரம் செய்வதற்காக இந்தியாவுக்குள் நுழைந்த இங்கிலாந்து கொஞ்சம், கொஞ்சமாக தனது ஆக்டோபஸ் கரங்களால் நாடு முழுவதையும் வளைத்துப் பிடித்தது. வியாபாரம் என்ற பெயரில் இந்தியாவில் உள்ள பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை இங்கிலாந்து , ஃபிரான்ஸ் போன்ற நாடுகள் கொள்ளையடித்துச் ச…

    • 3 replies
    • 1k views
  21. அரபிக் கடலில் இன்று உருவாகிறது நிசர்கா புயல் – மும்பைக்கு சிவப்பு எச்சரிக்கை அரபிக் கடலில் இன்று உருவாகும் நிசர்கா புயல் காரணமாக மகாராஷ்டிரா, குஜராத், கோவாவில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அரபிக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகலுக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாகி பின்னர், புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று உருவாகவுள்ள புயலுக்கு நிசர்கா என பெயரிடப்பட்டுள்ளது. நிசர்கா புயல் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை பிற்பகல் மகாராஷ்டிராவின் ஹரிஹரேஸ்வர்-டாமன் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூ…

  22. 5 மாநில தேர்தல்: வாக்குக் கணிப்பு முடிவுகள்! ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு இன்று (டிசம்பர்7) மாலையோடு வாக்குப் பதிவு முடிந்த நிலையில்... பிரபல செய்தி நிறுவனங்களின் தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்பு முடிவுகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. டைம்ஸ் நவ் -சி.என்.எக்ஸ் டைம்ஸ் நவ் செய்தி நிறுவனம், சி.என்.எக்ஸ் இணைந்து நடத்திய வாக்குக் கணிப்புகளில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்றும், ராஜஸ்தானில் காங்கிரஸ், தெலங்கானாவில் டி.ஆர்.எஸ். ஆட்சியைப் பிடிக்கும் என்று கணிப்பு வெளியிட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜக - 126, காங்கிரஸ் - 89, பகுஜன் சமாஜ் - 6 இடங்களைப் பிடி…

  23. NDTV சேகரித்த விவரங்களின்படி கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து 111 கும்பல் தாக்குதல் (Lynching) நடந்துள்ளது. இதில் 44 பேர் உயிரிழந்துள்ளளனர். இந்த விவகாரத்தில் இந்துத்துவ அமைப்புகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. Nagpur: கும்பல் தாக்குதல் (Lynching) என்பது மேற்கத்திய கலாசாரம் என்றும், அதனை இங்கு செய்து இந்தியாவின் பெயரைக் கெடுக்க வேண்டாம் என்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கண்டித்துள்ளார். நாக்பூரில் நடைபெற்ற தசரா விழாவில் பங்கேற்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியதாவது- இந்திய அரசியலமைப்பு சட்டம் வகுத்த எல்லைக்குள் மக்கள் கட்டுப்பட்டு நடக்க வேண…

    • 3 replies
    • 926 views
  24. கொரோனா ஊரடங்கால், இந்தியாவில், கிட்டத்தட்ட 4 கோடி குழந்தைகள் பசியில் தூங்க செல்வதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. பதிவு: ஏப்ரல் 12, 2020 10:49 AM புதுடெல்லி இந்தியாவில், கிட்டதட்ட 47.2 கோடி குழந்தைகள் உள்ளன. இந்தியா உலக அளவில், அதிக குழந்தைகள் கொண்ட நாடாகும்.இதில், கிட்டத்தட்ட 4 கோடி குழந்தைகள் தினக்கூலி வேலைகள் செய்து பசியாற்றி கொள்கின்றனர். அவர்கள், விவசாயம் தொடர்பான வேலைகள், சாலைகளில் பொருட்கள் விற்கும் வேலைகள் ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர். இந்த குழந்தைகளின் வாழ்க்கை ஊரடங்கால், பல இன்னல்களை சந்தித்து வருகிறது. அவர்கள் என்ன உண்பது எப்படி நாட்களை கழிப்பது போன்றவற்றில் மிக குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. …

    • 3 replies
    • 442 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.