Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அமெரிக்காவின் புகழ் பெற்ற விருதுக்கு தமிழ்ப் பெண் ராஜலட்சுமி நந்தகுமார் தேர்வு பகிர்க இன்றைய நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகின்றோம். டெக்கான் குரோனிக்கல்: அமெரிக்காவின் புகழ் பெற்ற விருதுக்கு தமிழ்ப் பெண் தேர்வு Image captionமாணவி ராஜலட்சுமி நந்தகுமார் அமெரிக்காவில் வாழும் தமிழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவி ராஜலட்சுமி நந்தகுமார் அமெரிக்காவின் புகழ் பெற்ற 'மார்கோனி சொசைட்டி பால் இளையோர்' விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக டெக்கான் குரோனிக்கல் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. திறன்பேசிகளை பயன்படுத்துவதால் உயிருக்கு ஆபத்துக்களை ஏற்படுத்தும் உடல்…

  2. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, டெல்லியை நோக்கி பேரணியாக வந்த விவசாயிகள் மீது பஞ்சாப் - ஹரியானா ஷாம்பு எல்லை அருகே பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். கட்டுரை தகவல் எழுதியவர், தீபக் மண்டல் பதவி, பிபிசி செய்தியாளர் 12 பிப்ரவரி 2024 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஓராண்டு காலம் தொடர்ந்து போராடி, நரேந்திர மோதி அரசு விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய வைப்பதில் வெற்றி பெற்ற விவசாயிகள், தங்களது கோரிக்கைகளுக்காக மீண்டும் களத்தில் இறங்கத் தயாராகிவிட்டனர். ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக வந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் ட…

  3. பாகிஸ்தானில் 126 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் திறப்பு! பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சிறுபான்மையினராக கருதப்படும் இந்து மக்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். இந் நிலையில் இங்குள்ள ஐதராபாத் நகரத்தில் அமைந்துள்ள, 126 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலொன்று புனரமைக்கப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்காக கடந்த வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டுள்ளது. மேலும், புனரமைக்கப்பட்ட இந்த கோயிலை நிர்வகிக்கும் பொறுப்பு உள்ளூர் இந்து அமைப்பிடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகையில் 90% சதவிகிதம் பேர் இஸ்லாமியர்களாக இருந்தாலும் பாகிஸ்தானில் மிகப்பெரிய சிறுபான்மையினராக இந்துக்களே கருதப்படுகின்றனர். இ நாட்டில் சுமார் 75 லட்சம் இந்துக்கள் வாழ்ந்து வருவதாக அர…

  4. தனியார் துறையினருக்கு ஏவுகணை தளம் அமைக்க அனுமதி – சிவன் விண்வெளித்துறையில் ஈடுபடும் தனியார் துறையினருக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுகணை தளம் அமைக்க அனுமதி வழங்கப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், “ விண்வெளித்துறையில் தனியார் துறையை ஈடுபடுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் ஸ்ரீஹரி கோட்டாவில் தங்களது சொந்த ஏவுதள வசதிகளை அமைக்க அனுமதிக்கப்படும். ரொக்கட் ஏவுதல்களுக்கு நாங்கள் கட்டணம் எதுவும் வசூலிக்க மாட்டோம். அதே நேரத்தில் அவர்களுக்கு தேவையான ஆலோசனைகைள் வழங்கப்படும். ஏற்கனவே இஸ்ரோவிற்கு ஸ்ரீஹரி கோட்டாவில் இரண்டு ஏவுகணை…

  5. இந்திய அரசின் துரோகத்துக்கு முகங்கொடுத்திருக்கும் காஷ்மீர் அரசியல்வாதிகள் எதிர்காலத்தைப் பொறுத்தவரையில் இந்தியாவுடன் இணைந்திருப்பதே நன்மை பயக்கக்கூடியது என்று காஷ்மீர் மக்களுக்கு நம்பிக்கை அளித்து வந்தவர் சக்கீனா இற்றூ (Sakina Itoo). முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற இப்பிரதேசத்தின் தன்னாட்சியை பறித்தெடுக்கின்ற முடிவை கடந்த ஆகஸ்ட் மாதம் புதுடெல்லி எடுத்த பின்னர், மக்கள் முன்னே தன்னால் செல்ல முடியாதிருப்பதாகவும் தனக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் 48 வயது நிரம்பிய இந்திய சார்பு நிலையைக் கொண்டிருக்கும் அரசியல்வாதியான சக்கீனா இற்றூ தெரிவித்தார். “மக்கள் நடுவில் மீண்டும் என்ன முகத்தோடு செல்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. எங்களிடமே எந்தவிதமான பதில்களுமில்லா…

  6. மலபார் கடற்படை கூட்டுப்பயிற்சி இன்று ஆரம்பமாகியது! இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளின் கடற்படைகள் இணைந்து மேற்கொள்ளும் மலபார் கடற்படை கூட்டுப் பயிற்சி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. நான்கு நாட்கள் நடைபெறும் பயிற்சியின் முதல் கட்டம் விசாகப்பட்டினத்தில் ஆரம்பமாகி வங்கக்கடல் கடற்கரைப் பகுதியில் நடைபெறுகிறது. நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிப்பது, வான் வழியில் நடத்தப்படும் தாக்குதல்களை கப்பலில் இருந்து எதிர்கொள்வது உள்ளிட்ட நவீன பயிற்சிகள் இதன்போது மேற்கொள்ளப்படவுள்ளன. சீனாவிற்கு எதிராக ஒற்றைக் கருத்துக்களை கொண்ட க்வாட் அமைப்பைச் சேர்ந்த நான்கு நாடுகளும் இந்த கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது. http:/…

  7. எல்லையில் ஊடுருவும் பயங்கரவாதிகளை ராணுவம் சொர்கத்திற்கு அனுப்பும்...!! இந்தியா காட்டம்...!! பயங்கரவாதிகளை இந்தியாவில் ஊடுருவச் செய்வது பாகிஸ்தானின் வேலை, அவர்களை சொர்கத்திற்கு அனுப்புவது இந்தியாவின் வேலை என்று இந்திய இராணுவத்தின் முன்னாள் படைத்தளபதியும் தற்போதைய மத்திய அமைச்சருமான வி.கே சிங் தெரிவித்துள்ளார். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்தியாவிற்கு எதிராக போர்கொடி தூக்கிவருகிறது பாகிஸ்தான் , இந்தியாவிற்கு எதிராக பாக் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ள நிலையில். அந்நாட்டின் பிரதமர் உட்பட இராணுவத் தளபதிவரை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இந்தியாவிற்கெதிராக போர் குரல் எழுப்பி வருகின்றனர். பாகிஸ்தான் இராணுவ தலைமை ஜ…

    • 2 replies
    • 532 views
  8. இந்தியாவில் ஒரே நாளில் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலி இந்தியாவில் கொரோனா வரைஸ் தொற்றால் ஒரேநாளில் 4,529 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 2,83,248 ஆக உயர்ந்துள்ளது. இதுவே கொரோனாவால் அதிகமாக உயிரிழப்பு பதிவான முதல் நாளாகும். இந்நிலையில், ஒரே நாளில் 2,67,334 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை மூன்றாவது நாளாகவும் 3 இலட்சத்தையும் விட குறைவாக பதிவாகியுள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2,54,96,330 ஆகும். இந்தியாவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை வரும் நிலையில், உயிரிழப்பு அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா (5,433,506),…

  9. ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் நர்கோடிக்ஸ் கன்ட்ரோல் பீரோவால் கைது : மும்பை சொகுசுக் கப்பலில் போதை விருந்து? 3 அக்டோபர் 2021, 11:23 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,INSTAGRAM படக்குறிப்பு, தன் மகன் ஆர்யன் கானுடன் ஷாருக் கான் (வலது) பிரபல இந்தி நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கானிடம் அரசின் போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பான நர்கோடிக்ஸ் கன்ட்ரோல் பீரோவால் ( என்.சி.பி.) கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு முதல் அவர் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டிருந்தார். போதையூட்டும் பொருட்களின் கட்டுப்பாடு மற்றும் வரைமுறை தொடர்பான என்.டி.பி.எஸ் (Narcotic Dr…

  10. மியான்மரை ஒட்டியுள்ள வங்கதேச பகுதியில் அமைந்திருக்கும் ரோஹிங்கியா அகதி முகாம்களிலிருந்து சுமார் 1 லட்சம் அகதிகள், வங்கதேசத்தின் கடல் பகுதியில் அமைந்திருக்கும் பாஷன் சர் என்ற தீவுப்பகுதிக்கு மாற்றப்பட இருக்கின்றனர். வங்காள விரிகுடா கடல் பகுதியில் 2006 ஆண்டு முதல் தென்படும் இத்தீவு, இதுவரை மனிதர்கள் வாழ்ந்திராத தீவுப்பகுதியாகும். இது புயல் மற்றும் மழைக்காலங்களில் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் பகுதியாகவும் இருந்து வருகின்றது. தற்போது, இத்தீவுப்பகுதியில் அகதிகளுக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா வரும் அக்டோபர் 3 அன்று திறந்து வைக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதைத்தொடர்ந்து, மழைக்காலம் தொடங்கும் முன்னர் படிப்படியாக ரோஹிங்கியா அகதிகள் …

  11. 2019 ஓகஸ்ட் 20 செவ்வாய்க்கிழமை, பி.ப. 10:00 இந்தியாவின் எல்லையத் தாண்டி பாகிஸ்தானுக்குள் வெள்ளத்தை ஏற்படுத்தும் அணையொன்றிலிருந்து நீரைத் திறந்து விடுவது குறித்து இந்தியா அறிவிக்கத் தவறிவிட்டது என நேற்று முன்தினம் தெரிவித்து, ஐந்தாவது தலைமுறை போர்முறையை இந்தியா பயன்படுத்துவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்நிலையில், குறித்த குற்றச்சாட்டை மறுத்துள்ள இந்தியா, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்குமிடையிலான நீர் ஒப்பந்தத்தின் சரத்துக்களின் கீழ், குறிப்பிட்ட மட்டத்தை தாண்டியவுடன் மேலதிக தண்ணீர் வெளியேற்றத்தை நேற்று முன்தினமிரவு பாகிஸ்தானுக்கு அறிவித்ததாகக் கூறியுள்ளது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு பாயும் சுட்லெய் ஆற்றிலிருந்து எதிர்பாரதவிதமாக நீரை விடு…

    • 2 replies
    • 532 views
  12. குமாரசாமி இரவு தூங்கமாட்டார்; வெள்ளிக்கிழமைக்குப் பிறகு பதவியில் இருக்க முடியாது: சதானந்த கவுடா இந்து தமிழ் திசைபெங்களூரு கர்நாடக முதல்வராக குமாரசாமி வெள்ளிக்கிழமை காலை வரை தான் பதவியில் இருப்பார் என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 -ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளன. வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கடந்த 19-ம் தேதி வெளியாகின. இதில் அதிக இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கூறியதாவது: கர்நாடக முதல்வராக இருக்கும் குமாரசாமி…

  13. பழங்குடி இளைஞரை வண்டியில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரம் - மருத்துவமனையில் இறந்தார் சுரை நியாஜி பிபிசி இந்திக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, காவல் நிலையம் மத்தியப் பிரதேசத்தில் ஒரு சிறிய பிரச்சனைக்காக பழங்குடி இளைஞர் ஒருவர் மிகக் கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டு, வாகனத்தோடு கட்டி இழுத்துச் செல்லப்பட்டார். இதனால் ஏற்பட்ட பலத்த காயங்களோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இது சம்பந்தப்பட்ட காணொளி ஆகஸ்ட் 28ஆம் தேதி பரவத் தொடங்கியது. இது…

  14. சீன ராணுவம் நடத்தும் இணைய தாக்குதல்: மத்திய உள்துறை எச்சரிக்கை இந்தியாவில் உள்ள பெரு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தனி நபர்களை குறிவைத்து தகவலை திருடும் ஃபிஷிங் தாக்குதல் நடத்தவும், இலவச கோவிட் 19 சோதனை பெயரில் வலை விரிக்கும் சீன இணையதளங்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்தின் அவசர கால பணிக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய சீன உறவு லடாக் தாக்குதல் மூலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சீன பொருட்களை புறக்கணிப்போம், சீன இணையதளங்கள், செயலிகளை புறக்கணிப்போம் என்கிற கோஷம் வலுத்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள பெரு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களை முடக்கும் வகையிலும், பொதுமக்களை கவர்ந்திழுக்க…

  15. 15 AUG, 2023 | 10:02 AM புதுடெல்லி: தமிழர்கள் தம் தாய்மொழியான தமிழுடன் சேர்த்து இந்தியையும் கற்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தி உள்ளார். குஜராத்தின் அகமதாபாத்திலுள்ள இந்திய ஆசிரியர்கள் கல்வி நிறுவனத்தின் (ஐஐடிஇ) பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த 2010-ல் குஜராத்தின் முதல்வராக இருந்த நரேந்திரமோடி, காந்திநகரில் சிறப்பு பல்கலைகழகமாக ஐஐடிஇயை நிறுவினார். இதன் பட்டமளிப்பு விழாவில் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா கலந்து கொண்டார்.மொத்தம் 2,927 மாணவர்கள் இந்த விழாவில் பட்டம் பெற்றனர். இந்த விழாவில் உள்துறை அமைச்சர் பேசியது: நான் ஆங்கிலத்துக்கு எதிரானவன் அல்ல. ஏனெனில், எந்தவகையிலான…

  16. மிஸ் இந்தியா 2020ன் ரன்னர்-அப் பட்டம் வென்ற ரிக்சா ஓட்டுனரின் மகள் லக்னோ, உத்தர பிரதேசத்தின் குஷிநகரை சேர்ந்த இளம்பெண் மான்யா சிங். பெமினா மிஸ் கிராண்ட் இந்தியா 2020ம் ஆண்டுக்கான அழகி போட்டியில் ரன்னர்-அப் பட்டம் வென்றுள்ளார். ரிக்சா ஓட்டுனரின் மகளான இவர் கடந்த கால தனது அனுபவங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார். அவர் உணவு, தூக்கம் இல்லாமல் பல இரவுகளை கழித்துள்ளார். சில ரூபாய் பணம் சேமிப்புக்காக பல மைல்கள் நடந்து சென்றுள்ளார். அவர் விரும்பிய புத்தகங்கள் மற்றும் உடைகள் அவருக்கு கிடைக்கவில்லை. அவருடைய பெற்றோர் சிறிய நகையையும் மகளின் கல்வி கட்டணத்திற்காக அடகு வைத்துள்ளனர். கல்வி வலிமையான ஆயுதம் என்று நம்புகிறே…

  17. ரஷ்யா தயாரித்துள்ள தடுப்பு மருந்தை பெரும் எண்ணிக்கையிலான நபர்களுக்குச் செலுத்த அனுமதி மறுப்பு by : Dhackshala http://athavannews.com/wp-content/uploads/2020/09/923645-russian-coronavirus-vaccine-sputnik-v-720x450.jpg கொரோனாவைக் குணப்படுத்த ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக் தடுப்பு மருந்தைப் பெரும் எண்ணிக்கையிலான நபர்களுக்குச் செலுத்திச் சோதிக்க இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அனுமதி மறுத்துள்ளது. இந்தியாவில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்டச் சோதனையை நடத்தவும் மருந்தை விநியோகிக்கவும் டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் நிறுவனம் உடன்பாடு செய்துள்ளது. இதையடுத்துப் பெரும் எண்ணிக்கையிலான நபர்களுக்கு மருந்தைச் …

  18. https://www.facebook.com/100079744693894/videos/710579476817197 பிரதமர் மோடியை... கண்டு கொள்ளாத , அமெரிக்க ஜனாதிபதி.

  19. திடீரென பெரும் செல்வந்தர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி அயல்நாடுகளுக்கு செல்வது ஏன்?

  20. இந்தியாவுக்கு வான்வெளியை தடை விதிக்க பாகிஸ்தான் முடிவு!! அமைச்சர் தகவலால் பரபரப்பு! காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கிய நிலையில், பாகிஸ்தான் முக்கிய முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா | Edited by Musthak (with inputs from PTI) | Updated: August 27, 2019 20:30 IST ஐ.நா. சபையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. N…

    • 0 replies
    • 530 views
  21. பாகிஸ்தானில் வெளியுறவுத்துறை அவசர ஆலோசனை.. ராணுவ அதிகாரிகள் பங்கேற்பு.. பதற்றம்! பாகிஸ்தானில் வெளியுறவுத்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை நடத்தி வருகிறது. இதில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளும் பங்கேற்று இருக்கிறார்கள். பாகிஸ்தானில் இன்று அதிகாலை இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது. அதிகாலை 3.30 மணிக்கு பாகிஸ்தானுக்குள் புகுந்த இந்திய விமானப்படை இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இதில் மொத்தம் 4 ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய ராணுவம் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் - இந்தியா எல்லையில் கடுமையான பதற்றம் நிலவி வருகிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையில் போர் ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள…

  22. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு தொழிலதிபர் ஒருவர் 26 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கனமழை பொழிந்து வருகிறது. ரயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து, பேருந்து சேவை, வாகனங்கள் செல்லும் வழித்தடம் என்று அனைத்தும் முடப்பட்டுள்ளது. மக்கள் பலர் தங்கள் வீடு, உடமை அனைத்தையும் இழந்துள்ளனர். சில இடங்களில் மக்கள் தங்கள் உறவுகளையும் இழந்து தவித்து வருகின்றனர். நிலச்சரிவால் மேலும் பல உயிர்கள் மாய்கின்றன. மழை, வெள்ளத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது. 2,000-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் 3,15,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்…

    • 0 replies
    • 529 views
  23. கடந்த வெள்ளிக்கிழமை, இரானால் பிடிக்கப்பட்டுள்ள, ஸ்டெனா இம்பெரோ என்ற பிரிட்டனை சேர்ந்த எண்ணெய் சரக்கு கப்பலில், 18 இந்தியர்கள் பிடிபட்டுள்ளது உறுதியாகியுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. 23 பேர் கொண்ட குழுவுடன் பயணித்த இந்த கப்பல், சர்வதேச கடல்விதிகளை மீறியதாகவும், உள்ளூர் மீன்பிடிப்படகு மீது மோதியதாகவும் கூறி, அதனை இரான் பிடித்துவைத்துள்ளது. இந்நிலையில், அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை விரைவில் விடுவித்து, தாய் நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார், "இந்த சம்பவம் குறித்த மேலதிக தகவல்களை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இரான் அரசுடன் தொடர்ந்து தொட…

    • 0 replies
    • 529 views
  24. இந்தியாவுடன் போர் மூண்டால், மிகவும் கொடூரமாக இருக்கும் : பாகிஸ்தான் மந்திரி சொல்கிறார் புலவாமா பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதற்கு பிந்தைய இந்திய விமானப்படையின் பதிலடி போன்ற நடவடிக்கைகளால் இந்தியா-பாகிஸ்தான் இடையே உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது. எல்லையில் போர் மேகம் சூழ்ந்திருப்பதால் அங்கு பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்குமாறு இரு நாடுகளையும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த பரபரப்பான சூழலில், இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டால் அது மிகவும் பயங்கரமானதாக இருக்கும் என பாகிஸ்தான் ரெயில்வே மந்திரி ஷேக் ரஷித் அகமது கூறியுள்ளார். இந்தியாவுக்கு எதிராக ஆத்திரமூட்டும் கருத்துகளை அடிக்கடி கூறி வரும் அவர் இது தொடர்பாக மேலும் கூறுகையில், ‘பாகி…

  25. நாடு தழுவிய மத்திய தொழிற்சங்கங்களின் 48 மணிநேர வேலை நிறுத்தம் ஆரம்பம் January 8, 2019 நாடு தழுவிய அளவில் மத்திய தொழிற்சங்கங்கள் நடத்திவரும் 48 மணி நேர வேலை நிறுத்தத்தால் வட மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் சில இடங்களில் வன்முறைகளும் வெடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பொதுத்துறை மற்றும் அரசு நிறுவனங்களை தனியார் துறையிடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம், தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசுக்கு இன்றும் நாளையும் நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடத்தப்படுகின்றது. இந்த தொழிற்சங்கங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள் வங்கி ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.