Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை - உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசு முறையீடு Published By: RAJEEBAN 21 FEB, 2023 | 11:07 AM குஜராத்தில் கடந்த 2002-ல் கோத்ரா ரயில் நிலையத்தில் கரசேவகர்கள் சென்ற ரயில் பெட்டிக்கு ஒரு கும்பல் தீ வைத்தது. இதில் 59 பேர் கருகி உயிரிழந்தனர். குஜராத்தில் மதக் கலவரம் ஏற்பட இந்த சம்பவம் வழிகோலியது. ரயில் எரிப்பு வழக்கில் 11 பேருக்கு மரண தண்டனையும் 20 பேருக்கு ஆயுள் தண்டனை யும் விதிக்கப்பட்டது. மேல்முறை யீட்டு வழக்கில் 31 பேர் தண்டிக் கப்பட்டதை குஜராத் உயர் நீதி மன்றம் உறுதி செய்தது. எனினும் 11 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. …

  2. மோடியின் பட்டப்படிப்பு விபரம் அவசியம் இல்லை! கேட்டவருக்கு அபராதம்! இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு விபரங்களை வெளியிட குஜராத் பல்கலைக்கழகத்திற்கு விடுக்கப்பட்ட உத்தரவை அந்த மாநில மேல் நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது. அத்துடன் இந்த விபரங்களை கேட்டதற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத் உயர்நீதிமன்றம் 25ஆயிரம் ரூபாவை அபராதமாக விதித்துள்ளது. இந்த அபராத பணத்தை கெஜ்ரிவால் குஜராத் மாநில சட்ட சேவைகள் ஆணையத்தில் வைப்புச் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக 2016ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் முதுகலை பட்டம் குறித்த தகவல்களை அளிக்குமாறு குஜராத் பல்கலை…

  3. பட மூலாதாரம்,BANKIM PATEL கட்டுரை தகவல் எழுதியவர்,ஜெய் சுக்லா பதவி,பிபிசி குஜராத்தி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் குஜராத்தில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்கா செல்ல விரும்பும் நபர்கள் எப்படி அவதிக்குள்ளாகின்றனர் என்பதற்கு சமீபத்திய உதாரணமாக ஆமதாபாத்தைச் சேர்ந்த தம்பதி மாறியுள்ளனர். ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்கா செல்ல விரும்பிய ஆமதாபாத்தைச் சேர்ந்த தம்பதி ஈரானில் கடத்தப்பட்டதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. எனினும், குஜராத் அரசு, ஈரானில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் காவல்துறையின் முயற்சியின் உதவியுடன், தம்பதியினர் இறுதியாக விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த தம்பதியினர் ஈரானில் இருந்து துருக்க…

  4. ராஜபக்சேவை பெங்களூரு விழாவுக்கு அழைத்த 'தி இந்து’... சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு..! இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சேவை பெங்களூரு விழாவுக்கு தி இந்து நாளேடு அழைத்து உள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஈழத் தமிழர் இனப்படுகொலைக்கு காரணமான மகிந்த ராஜபக்சேவை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என தமிழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் சிங்களர் நுழைய இன்னமும் தடை இருக்கிறது. இந்நிலையில் தி இந்து ஆங்கில நாளேடு மகிந்த ராஜபக்சேவை பெங்களூரு விழாவுக்கு அழைத்துள்ளது. பெங்களூருவில் நாளை மறுநாள் இவ்விழா நடைபெற உள்ளது. இதற்கு எதிராக சமூக வலைதளங்களில் #StopGenociderRajaPakshe என்ற ஹேஷ்டேக்குடன் கடு…

  5. பட்டமளிப்பு விழாவிற்கு கருப்பு அங்கி தேவையில்லை – காலனி ஆதிக்க நடைமுறை மாற்றப்பட வேண்டும். மருத்துவ மாணவர்கள் பட்டமளிப்பு விழாவின்போது இனி கருப்பு நிற உடை அணிய தேவையில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் நடைபெறும் பட்டமளிப்பு விழாக்களில் மாணவர்கள் கருப்பு நிற அங்கியும், கருப்பு நிற தொப்பியும் அணிந்து பட்டங்களை பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில்,பட்டமளிப்பு விழாவின்போது கருப்பு நிற உடை அணிவது ஐரோப்பிய நாடுகளில் தொடங்கிய கலாசாரம் எனவும், இந்த நடைமுறையானது ஆங…

  6. மத்திய அரசை கண்டித்து 10 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் – சேவைகள் முடக்கம் மத்திய அரசை கண்டித்து 10 தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 12 அம்ச பொது கோரிக்கைகளை வலியுறுத்தி, 10 மத்திய தொழிற்சங்கங்கள் இன்று (புதன்கிழமை) நாடுதழுவிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. தொழிலாளர் துறை சீர்திருத்தங்கள், அந்நிய நேரடி முதலீடு, தனியார் மயமாக்கல் உள்ளிட்ட மத்திய அரசு கொள்கைகளை எதிர்த்து இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இதன் காரணமாக பல சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதற்கமைய தூத்துக்குடி துறைமுக பகுதியில் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்…

  7. இந்தியாவில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது சீனாவில் இருந்து கேரளா வந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் இருப்பது இதுவே முதல் தடவையாக கண்டறியப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் இந்த வைரஸால் 170 பேர் பலியாகி உள்ளனர். சீனாவின் வுஹான் பல்கலைகழகத்தில் இருந்து வந்த மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அவர் தனி கண்காணிப்பு பிரிவில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. http://tamil.adaderana.lk/news.php?nid=125166

  8. சர்வதேச விமான சேவைகளை தற்காலிகமாக குறைத்த ஏர் இந்தியா! ஏர் இந்தியா தனது சர்வதேச விமான சேவைகளை தற்காலிகமாகக் குறைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, ஜூலை நடுப்பகுதி வரை அகலமான உடல் வடிவங்கள் கொண்ட விமானங்களின் செயல்பாடுகளை 15% குறைப்பதாக அறிவித்துள்ளது. ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. பல கூட்டு சவால்களுக்கு மத்தியில் அதிக செயல்பாட்டு ஸ்திரத்தன்மை, சிறந்த செயல்திறன் மற்றும் பயணிகளின் சிரமத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள், ஐரோப்பா மற்றும் கிழக்கு ஆசியாவின் பல ந…

  9. புருலியா: சென்னையில் வேலைபார்த்துவிட்டு சொந்த ஊர் திரும்பிய மேற்கு வங்க மாநில இளைஞர்களை தனியாக வசிக்கும்படி டாக்டர்கள் அறிவுரை வழங்கினார். அவர்களது, வீட்டில் தனி அறை இல்லாததால், அவர்கள் மரத்தில் தனியாக வசித்து வருகின்றனர். மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டத்தில் வங்கிடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 7 இளைஞர்கள், சென்னையில் வேலைபார்த்துள்ளனர். பின்னர் சொந்த ஊர் திரும்பிய அவர்கள், டாக்டர்களை சந்தித்துள்ளனர். அப்போது டாக்டர், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இளைஞர்களை, தனிமைபடுத்தி கொள்ளும்படி அறிவுரை வழங்கினார். ஆனால், அவர்கள் ஏழ்மையில் உள்ளதால், வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தங்குவதற்கு ஏற்ற வகையில் துணியை கட்டி அதில் தங்கியுள்ளனர். இது தொடர்பாக…

  10. இந்தியாவின் குஜராத்தின் அஹமதாபாத்தின் மருத்துவமனையொன்றில் கொரோனா நோயாளிகள் மதஅடிப்படையில் தனித்தனியாக பிரிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலால் சர்ச்சை உருவாகியுள்ளது. கொரோனா வைரஸ் நோயாளிகளும் பாதிக்கப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களும் அஹமதாபாத் சிவில் மருத்துவமனையில் தனித்தனியாக பிரித்து அனுமதிக்கப்பட்டுள்ளனர் என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மாநில அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் இந்து நோயாளிகளிற்கு என ஒரு பகுதியும் முஸ்லீம்களிற்கு என தனியான ஒரு பகுதியும் உருவாக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரி குன்வந் ராத்தோட் தெரிவித்துள்ளார். வழமையாக ஆண்நோயாளிகளும் பெண் நோயாளிகளும் தனித்தனியாக பிரித்து அனுமதிக்கப்பட்டு கிசிச்சை வழங்க…

    • 1 reply
    • 395 views
  11. 'எப்ஸ்டீன் ஆவணங்களில் மோதி பெயர்' - காங்கிரசின் 3 கேள்விகளும் வெளியுறவுத்துறை பதிலும் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்திய பிரதமர் மோதி 2017 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு பயணம் செய்தார். 2 மணி நேரங்களுக்கு முன்னர் 'எப்ஸ்டீன் கோப்புகள்' (Epstein Files) தொடர்பான மின்னஞ்சல் செய்தியில் பிரதமர் மோதி ஜெஃப்ரி எப்ஸ்டீனைச் சந்தித்தார் என்று வெளியான கூற்றுகளை இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நிராகரித்துள்ளார். அமெரிக்க பாலியல் குற்றவாளியும் மனித கடத்தல்களில் ஈடுபட்டவருமான ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளில் பிரதமர் மோதியின் பெயர் இடம்பெற்றுள்ளதாக காங்கிரஸ் சனிக்கிழமை (ஜனவரி 31) குற்றம் சாட்டியது. காங்கிரஸ் தலைவர் பவன் கேரா சமூக ஊடகத் தளமான …

  12. மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images பெய்ஜிங்கை தலைமையிடமாக கொண்ட ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடமிருந்து நரேந்திர மோதி அரசு 9 ஆயிரம் கோடி மதிப்பிலான இரு கடன்களை பெற்றுள்ளது. கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்க இக்கடன் பெறப்பட்டதாக மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூர் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் குமார் சிங் மற்றும் பிபி செளத்ரி மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அனுராக் தாகூர் இவ்வாறு கூறி உள்ளார். பட மூலாதாரம், Getty Images …

  13. பிரமாண்டமான அணையை கட்ட சீனா முடிவு : இந்தியாவுக்கு பெரும் சிக்கல் திபெத்தின் மொசோ மாவட்டத்தில் உள்ள பள்ளத் தாக்கில் பிரமாண்ட மான அணை ஒன்றைக்கட்ட சீனா முடிவு செய்துள்ளது. இந்நிலையில், சீனா இந்த அணையை கட்டினால் இந்தியாவுக்கு பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். உலகிலேயே மிகவும் நீளமான மற்றும் ஆழமான பள்ளத்தாக்கில் இந்த அணையை சீனா கட்டுகின்றது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4 ஆயிரத்து 900 அடி உயரத்தில் இந்த அணையை கட்ட சீனா திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சேமிக்கும் நீரைக் கொண்டு 30 ஆயிரம் கோடி கிலோவாட்ஸ் மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சீனாவின் 14 ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்த அணை க…

    • 14 replies
    • 1.4k views
  14. பொதுத்துறை வங்கிகளின்... பங்குகளை விற்க அரசு திட்டம்! மூன்று பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த வரவு செலவு திட்டத்தில் பொதுத்துறை வங்களை தனியார் மயப்படுத்தல் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், இதன் முதற்கட்ட நடவடிக்கையாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி சென்ட்ரல் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாங்க்ஆப் இந்தியா (BANK OF INDIA) ஆகிய நிறுவனங்கள் விற்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் மதிப்பு சுமார் 44 ஆயிரம் கோடி ரூபாய் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1220917

  15. இந்தோனேசியாவில் கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானவர் மனைவியின் பாஸ்போர்ட்டில் பெயரை மாற்றி பெண் போல பர்தா போட்டு பயணிக்க முயன்றுள்ளார். அவரது முயற்சி தோல்வியடைந்தது மட்டுமல்லாமல், உள்ளூர் பொலிஸால் கைது செய்யப்பட்டுள்ளார். விமானப் பயணத்தின் போது, அந்த நபர் பாத்ரூம் சென்றுள்ளார். அப்போது வெளியே வந்தபோது பர்தா போட்டு வந்துள்ளார். பெண் உடையில் சென்ற நபர் எப்படி ஆண் உடையில் வெளிவருகிறார் என்று கவனித்த பணிப்பெண் ஒருவர் இதுபற்றி விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். பின் விமானத்தை விட்டு கீழிறங்கும் போது அவர், அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அந்த நபரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவருக்கு நோய் தொற்று உறுதியானது. இதை அடுத்து அ…

  16. உ.பியில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான வளர்ச்சி திட்டங்களை ஆரம்பித்து வைக்கிறார் மோடி! பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) உத்தர பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட வளர்ச்சி திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதன்போது குறித்த மாநிலத்தில் 9 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்கவுள்ளார். இதனையடுத்து தற்சார்ப்பு ஆரோக்கிய இந்திய திட்டத்தையும், 5200 கோடிக்கும் அதிக மதிப்புள்ள வளர்ச்சி திட்டங்களையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதேவேளை தற்சார்ப்பு ஆரோக்கிய இந்தியா திட்டம் என்பது நாடு முழுவதும் சுகாதார சேவைக்கான அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தும் மிகப் பெரிய திட்டங்களில் ஒன்றாகும். https://athavannews.co…

  17. ஆங்கில மொழிக்கு, பதிலாக.... ஹிந்தி மொழியை, பயன்படுத்த வேண்டும் – அமித்ஷா ஆங்கில மொழியை பயன்படுத்துவதற்கு மாற்றாகவே ஹிந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் எனவும், மாநில மொழிகளுக்கு மாற்றாக அல்ல எனவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் 37 ஆவது நாடாளுமன்ற அலுவல்கள் மொழிகள் தொடர்பான கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், அலுவல் மொழியான ஹிந்தியை நாட்டு ஒருமைப்பாட்டின் ஒரு அங்கமாகக் கருத வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும், இந்தியவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும்போது உள்நாட்டு பொது மொழிகளில் தான் பேச வேண்டும் எனக் கருதுவதாகவும் கூறியுள்ளார். இதேவேளை மத்திய அமைச்சரவையின் 70 சதவீத க…

    • 2 replies
    • 268 views
  18. மாயமான நேபாள விமானம்: மோசமான வானிலையால் திரும்பி வந்த தேடுதல் ஹெலிகாப்டர்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANI நேபாளத்தில் பயணிகள் விமானம் ஒன்று மாயமாகியுள்ளது. டாரா ஏர்லைன்ஸின் ட்வின் ஓட்டர் ரக இரட்டை இஞ்சின் விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை காற்று கட்டுப்பாட்டு அமைப்புடனான தொடர்பை இழந்தது. இந்த விமானத்தில் நான்கு இந்தியர்கள் உட்பட மொத்தம் 22 பேர் இருந்தனர். காத்மாண்டு போஸ்ட் செய்தியின்படி, இந்த விமானம் நேபாளத்தில் உள்ள பொக்காராவில் இருந்து ஜோம்சோம் நோக்கி சென்று கொண்டிருந்தது. விமான நிலைய அதிகாரிகளின் கூற்றுப்படி, உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 9:55 மணிக்கு விமானத்துடனான தொடர்…

  19. பாகிஸ்தான் சிறுமிக்கு இந்தியாவில் புதுவாழ்வு: இலவச சிகிச்சையால் திரும்பிய இயல்பு வாழ்க்கை ரியாஸ் சுஹைல் பிபிசி செய்தியாளர், கராச்சி 14 ஜூலை 2022 பட மூலாதாரம்,@AFSHEEN GUL "அவள் பிறந்தபோது நன்றாகத்தான் இருந்தாள். ஆனால் அவளுக்கு எட்டு அல்லது பத்து மாதங்கள் இருக்கும் போது அவள் கழுத்து சாயத்தொடங்கியது. இதற்கு முன்பு தனது சகோதரியின் கைகளில் இருந்து அவள் தவறி விழுந்துவிட்டாள். அதுதான் காரணமாக இருக்கலாம் என்று நாங்கள் நினைத்தோம். உள்ளூர் மருத்துவரிடம் கொண்டு சென்றோம். மருத்துவர் மருந்துடன் கழுத்துக்கு பெல்ட்டையும் கொடுத்தார். நாங்கள் ஏழைகள் என்பதால் மேற்கொண்டு சிகிச்சை பெற முடியவில…

  20. செர்வாவேக்: இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பு மருந்து - ரூ.400க்குள் கிடைக்கும் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,BSIP/GETTY IMAGES படக்குறிப்பு, முக்கோணமிடப்பட்டுள்ள பகுதிதான் கருப்பை வாய். அதன் அடிப்பகுதியில்தான் இந்த வகைப் புற்றுநோய் ஏற்படும். செர்விகல் கேன்சர் என்று கூறப்படும் கருப்பை வாய்ப் புற்று நோய்க்கு ஏற்கெனவே தடுப்பூசிகள் இருந்தாலும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்தான 'செர்வாவேக்' ரூ.200 முதல் ரூ.400 விலைக்குள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக…

  21. இந்தியாவில் ஐ.எஸ். ஆதரவுக் குழுவின் பாரிய தாக்குதல் திட்டம் முறியடிப்பு December 27, 2018 இந்தியாவில் மிகப் பெரிய தீவிரவாதத் தாக்குதல் நடத்துவதற்கு ஐ.எஸ். ஆதரவு பெற்ற குழு ஒன்று தீட்டிவந்த திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகாமை தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் தலைநகர் டெல்லியிலும், உத்தரப்பிரதேசத்திலும் 17 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ஒரு பெண் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது அவர்கள் தற்கொலைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும், வெடிகுண்டு தயாரித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஹர்கத்-உல்-ஹர்ப்-இ-இஸ்லாம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனவ…

  22. பட மூலாதாரம்,GETTY IMAGES 23 பிப்ரவரி 2024 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சீன ஆராய்ச்சிக் கப்பல் கடந்த வியாழக்கிழமை (பிப்ரவரி 22) மாலத்தீவு சென்றடைந்தது. இந்தக் கப்பல் கடந்த ஒரு மாதமாக இந்தியப் பெருங்கடலில் இருந்தது. இது குறித்து மாலத்தீவு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. பி.டி.ஐ செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்தியா மற்றும் இலங்கையின் கடலோர காவல்படை கப்பல்களும் ராணுவ பயிற்சிக்காக அப்பகுதியை வந்தடைந்த அதே நாளில் சீனக் கப்பல் மாலத்தீவை அடைந்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் உள்ள இந்தக் கப்பல் குறித்து இந்தியா முன்னர் கவலை தெரிவித்திருந்ததுடன், கொழும்பு துறைமுகத்தில் க…

  23. நண்பர் எனக் கூறி ட்ரம்புக்கு மோடி வாழ்த்து! 2024 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டெனால்ட் டர்ம்பின் வெற்றி உறுதியாகியுள்ள நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோசடி குடியரசுக் கட்சியின் வேட்பாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். எக்ஸ் கணக்கில் வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ள நரேந்திர மோடி, ட்ரம்ப்பை நண்பர் என வர்ணித்துள்ளார். மோடியின் வாழ்த்துச் செய்தியானது அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி, அமெரிக்க-இந்தியா விரிவான உலகளாவிய மற்றும் மூலோபாய கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கான உற்சாகத்தை வெளிப்படுத்தியது. அந்த செய்தியில், எனது நண்பர் டொனால்ட் ட்ரம்ப்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், உங்கள் வரலாற்றுத் தேர்தல் வெற்றியில் உங்…

  24. இந்திய இராணுவம் காஸ்மீரில் அரச பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என பாக்கிஸ்தானின் இராணுவதளபதி குற்றம்சாட்டியுள்ளார். பாக்கிஸ்தான் இராணுவம் அனைத்து வகையான தியாகங்களிற்காகவும் தயாராக உள்ளது என தெரிவித்துள்ள குயுமார் ஜாவிட் பஜ்வா பாக்கிஸ்தான் இராணுவம் காஸ்மீர் மக்களை ஒருபோதும் கைவிடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். காஸ்மீர் தொடர்பான ஐநா தீர்மானங்களின் அடிப்படையில் பாக்கிஸ்தான் இராணுவம் காஸ்மீர் மக்களின் சுயநிர்யண உரிமைக்கு ஆதரவை வழங்கும் எனவும் பாக்கிஸ்தான் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தான் அவர்களை கைவிடாது என்ற உறுதிமொழியை நான் காஸ்மீர் மக்களிற்கு வழங்க விரும்புகின்றேன்,பாக்கிஸ்தான் மக்களினதும் காஸ்மீர் மக்களினதும் இதயங்களும் ஒன்றாக துடிக்கின்றன…

    • 0 replies
    • 422 views
  25. நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் 3 ஆவது முறையாக மரண தண்டனை விதிப்பு! நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று மூன்றாவது முறையாக டெல்லி நீதிமன்றம் மரண தண்டனைக்கான ஆணையை பிறப்பித்துள்ளது. இதன்படி குற்றவாளிகள் 4 பேருக்கும் மார்ச் 3 ஆம் திகதி காலை 6 மணிக்குள் தூக்கு தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கெனவே கடந்த ஜனவரி 22 ஆம் திகதி முதல் மரண தண்டனையும், அதன்பின் பெப்ரவரி 1ஆம் திகதி 2 ஆவது மரண தண்டனைக்கானக்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், குற்றவாளிகள் தங்களுக்கு இருக்கும் சட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்தி தண்டனையைத் தள்ளிப்போட்டனர். இறுதியாக ஜனவரி 31 ஆம் திகதி, விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.