யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.
40 topics in this forum
-
வறுமையின் நிறம் கதிரவன் கடல் குளித்து கிழக்குவானில் தலைதுவட்டத் தொடங்கியிருந்தான். வாடைக்காற்று புழுதியை வாரி இறைத்தபடி சுழன்றடித்துக்கொண்டிருந்தது. காலை ஜந்து மணிக்கே விழித்துவிடும் எமது ஊரான காவலூர். அதிகாலையானால் எமது ஊரில் குடிநீருக்கான போராட்டம் தொடங்கிவிடும். பட்டினசபையால் வழங்கப்படும் குடிநீரை குழாய்களில் எடுப்பதற்காக குழாயடியில் வரிசையாக குடங்களும் வாளிகளும் நிரையாக நிற்கத் தொடங்கிவிடும். (இது நடந்தது இன்றைக்கு 40 வருடங்களுக்கு முன்னைய காலம்.) இன்று வீடுகளுக்கு குழாய்நீர் வசதி வந்து விட்டதால் குழாயடியில் குழுமும் பெண்கள் கூட்டமும் வரிசையாக நிற்கும் குடங்களும் காணாமல் போய்விட்டன. அன்றைய நாட்களில் வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை எல்லாமே அந்தக் குழாயடிச் செய்திக…
-
- 11 replies
- 2k views
-
-
எப்ப இளைப்பாரலாம் என்ற சிந்தனையுடன் கட்டிலை விட்டேழுந்தேன்.எனது வயதையும் இளைப்பாறுவதற்கு அரசாங்கம் வைத்திருக்கும் வயதெல்லையையும் எண்ணிபார்த்தேன் இன்னும் 10 வருடங்கள் வேலை செய்தால் தான் ஓய்வுதியம் கிடைக்கும் என்பதை உணர்ந்தேன் .சிறிலங்காவிலிருந்தால் நான் இப்ப பென்சனியர் ஆனால் இங்க பொல்லுபிடிச்சு கொண்டு வேலைக்கு போகவேண்டி இருக்கு என சலித்தபடியே காலைக்கடன்களை முடிக்க தொடங்கினேன். "டேய் நீ சிறிலங்காவிலிருந்தால் உனக்கு அரசாங்க உத்தியோகம் கிடைத்திருக்குமா?அரச உத்தியோகம் இல்லாவிடின் பென்சனே இல்லை".. மனச்சாட்சியின் அதட்டலினால் காலைகடன்களை விரைவாக முடித்து கொண்டு வேலைக்கு புறப்பட தயாரானேன். "இஞ்சயப்பா வரும் பொழுது வூலியில் டொய்லெட் டிசுவும்,தமிழ் கடைகளில் போய் அரிசி…
-
- 10 replies
- 3.3k views
-
-
மங்கை அவளது அகமது புதிராகிடும் விழிகளிரண்டில் கணை தொடுப்பாள் கார்மேகக் கூந்தலின் பூவும் கமழும் இடையின் வளைவுகள் கண்டு கம்பனும் மயங்கிக்கிடக்க சாரை போல் நடந்து வருகையில் ஊரும் திகைக்க.....கவர்ந்திடும் புருவங்கள் புருசர்களையும் ஈர்க்க நாணமும் நாணித்திட .... தவம் கிடக்கிறாள் மனம் கவர்ந்தவனை அடைந்திட......
-
- 10 replies
- 2k views
-
-
நீரோடடத்தில் செல்லும் துரும்பாக இயந்திரங்களோடு இயந்திரமாய் கால நிலையோடும் போட்டி போட்டு ஓடி யோடி உணவு உறக்கமின்றி எந்திரமாய் உழைத்த மனிதா வங்கியிலே பணம் பகடடான வீடு களி த்திருக்க மனைவி பிள்ளைகள் மதி மயங்க மது வகைகள் பவனி செல்ல படகு போன்ற கார் என மமதை கொண்ட மானிடா சற்றே நில் ..எல்லாம் உனக்கே நானே ராஜா ..எனக்கே ராச்சியமென உண்டு களித்து உலகை ஆண்ட மானிடா அறிவியல் கொண்டு ஆயுதங்கள் செய்து அணுகுண்டுகள் போர்க் கப்பல்கள் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவு கணை கள் .ஏழைகளை சுரண்டி ஏகாதிபத்திய ஆடசி பெரியவன் என்னை விட யாரும் இல்லை என்னால் எதையும் அழிக்க முடியு…
-
- 10 replies
- 2k views
-
-
ஊர் விட்டு ஊரோடி வான் விட்டு நாடோடி நிலவரம் கலவரமாக நீயே என் கதி என ஊர்ப்புதினத்தின் விடுப்புக்காரி கண் எதிரே திரை விரித்தாய். தாய்க்கு நிகர்த்து மொழி பேசி உறவுக்கு நிகர்த்து கதை பேசி கடுகதி வாழ்வில் கனதிகள் குறைக்கும் திரைபேசியானாய் நான் அலைபேசி மறந்தேன். காலவெளியில் கண்ட சங்கதிகள் ஆயிரம் ஆயிரம் அத்தனையும் அடக்கி அமுசடக்கமாய் வளர்ந்து குமரியாய் குலுங்கி நிற்கும் யாழே... நீயே என் மனதை தைத்த மோக முள்... ஊர் தொலைத்தவனின் ஊனத்தை ஊமையாய் புரிந்து கொண்டவள்..! சாதனைக்குள் சோதனை சாதாரணம்..! சார்ந்திருந்தோர் எதிர் நின்றோர் எ…
-
- 10 replies
- 1.8k views
-
-
எழுதவேண்டும் என்று எண்ணும் பொழுதுகளில் எல்லாம் என் முன் வந்தமர்ந்துவிடுகிறது ஆண் என்ற முகமும் அதன் அகங்காரமும் எத்தனையோ வார்த்தைகளை மனதின் எழுத்தாணி எழுதித்தான் விடுகின்றது ஆயினும் அத்தனையிலும் எத்தனை எழுத்தை சுதந்திரமாய் நான் எழுத உன்னால் அனுமதிக்க முடியும் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த இரகசியம் …
-
- 9 replies
- 2k views
-
-
காலங்கள் வேகமாகக் கடக்கின்றன கடந்த காலங்களில் ஏற்பட்ட இழப்புக்களும் இடர்களும் தந்த மனவலிகள் வேகம் இல்லாமல் கடந்து சென்ற பாதையில்....... இந்தக்கணம் எதோ ஒரு உணர்வு எனைத் தட்டிச் செல்கின்றது கண்களுக்குத் தெரியாத முகங்கள் மறக்க முடியாத நட்புக்கள் உணர்வான வார்த்தைகள் மனம் விட்டுச் சிரித்த வரிகள் யாழ் என்ற களம் தந்த உறவுகள் இவையெல்லாம் சேர்ந்து இந்தக் கடினமான காலத்தில் உங்களுடன் கைகோர்க்கத் தூண்டுகின்றது காத்திருப்போம் தனிமையில் விழித்திருப்போம் அச்சமின்றி கொரோனாவையும் கடந்து செல்லும் இந்தக்களம் இன்னும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்
-
- 9 replies
- 1.3k views
-
-
விதியே கதை எழுது…….. ( 1 ) வானத்தில் வட்டநிலவு இரவல் ஒளியில் எறித்துக் கொண்டிருந்தது. கட்டிலில் விழி மூடாமல் விழித்திருந்தாள் கவிதா. வானில் ஓடி மேகத்திரையில் முகம் மறைத்து விளையாடிக்கொண்டிருக்கும் வெண்நிலவின் அழகை ரசிக்க மனமின்றி மேகக் கூட்டத்தை வெறித்து நோக்கிக் கொண்டிருந்தன அவள் விழிகள். ஒரு காலத்தில் வெள்ளி நிலா பவனி வரும் அழகை ரசித்து ரசித்து கவிதை எழுதி அந்த மோகத்தைத் தூண்டுகின்ற முழுமதியின் அழகில் மனதைப் பறி கொடுத்து மனம் லயித்துக் கிடந்தவள் அவள். அதிலும் பனிக்காலம் முழுவதும் பார்க்க முடியாத அந்த நிலவு வசந்தகாலத்தில் பார்க்கக் கூடியதாக மூடிக்கிடந்த சாளரங்கள் திறக்கப்பட்டு திரைச் சீலைகள் விலக்கப்பட்டு வானத்திரையின் நீல வண்ணத்தை ரசிக்கும் யாருக்கும் மனம…
-
- 8 replies
- 2.2k views
-
-
கலையாத கனவு ---------------------------- என்றுமில்லாத ஒரு பரவசத்தில் தமிழீழமெங்கும் மகிழ்ச்சிப் பிரவாகம். பார்க்கும் முதன்மை வாய்ந்த இடங்களில் எல்லாம் தமிழீழ தேசியக்கொடி பட்டொளிவீசிப் பறந்து கொண்டிருந்தது. மாவீரர்துயிலும் இல்லங்கள் மஞ்சள் சிவப்பு வண்ணக்கொடிகளால் அழகூட்டப்பட்டு, வித்துடல்கள் உறங்கும் கருவறைகள் எங்கும் மலர்கள் தூவித் தீபங்கள் ஏற்றப்பட்டு உற்றார் உறவுகளின் விசும்பலும் மக்களின் வாழ்த்தொலியுமாக ஒருபுறமென்றால், குடாரப்பு, திருகோணமலை, மன்னார், காங்கேசன்துறை எனக் கடலிலே காவியமான மாவீரர்களுக்கும் வானிலே மேலெளுந்து காவியமானோருக்கு இரணைமடுவிலுமென மக்கள் தமது நன்றிக் கடனைச் செலுத்த, ஆல…
-
- 8 replies
- 2k views
- 1 follower
-
-
அத்தை மகள் அங்கே சோலையில் அத்திப்பழம் பறிக்க அவள் அழகை கண்டு அக்கா மகன் மனம் தடுமாற திட்டம் போட்டு திருட தானோ பொழுதெல்லாம் கண்டும் காணாத மாதிரி நோட்டம் விடுகிறான் என அவள் எண்ண சந்தர்ப்பங்களில் சந்திக்க முற்படும்போதெல்லாம் நாணமும் பிறந்து நாழிகையும் இறக்குதே உரையாடமல் நடைபோட்டு இருவரும் விலகி சென்றதாலே கண்மூடித்தனமான எண்ணங்கள் பிறக்குதே திருமணத்திற்கு பின்பு கணவன் பிறை நுதலில் இடும் முத்தம் திருத்தாமாகுதே திருமணத்திற்கு முன்பு காதலன் இதழில் வைக்கும் முத்தம் கீழான உணர்வு மேலும் வளர காரணமாகுதே ஊடலில் ஏற்படும் பிரிவுகளே உண்மையான அன்பை விரிவாக்கும் தூண்டுக…
-
- 7 replies
- 1.7k views
-
-
இயற்கையே சக்தி தா! ----------------------------------------------- காலையைக் கடந்து செல்லும் பொழுது மலர்கள் மலர்ந்திருக்கின்றன கதிரோன் காலாற நடக்கின்றான் மனித மனங்கள் வாடியிருக்கிறது தெருக்கள் வெறிச்சோடியிருக்க நாயை நடப்பதற்கு அழைத்துச்செல்லும் முதியவர் ஆனந்தமாகப் புகைவிட்டவாறு சிறியதொரு குளிரோடு காற்று மெதுவாக வீசுகிறது வீட்டுக்குள் சிறைப்பட்ட சூழல் கொறொனாவை இந்த உலகு வென்று நிமிரும் காலம் விரைந்து வர வேண்டும் இயற்கை அதற்கான சக்;தியைத் தர வேண்டும்! ஒடுங்கி மடியும் உலகு உயிர்பெற்று உயர்வடைய இயற்கையே சக்தி தா! உன்னுள் ஒளிந்திருக்கும் புதிரகன்று புத்தொளி பரவிட இயற்கையே சக்தி தா! எல்லையற்று விரிகின்ற உயிரிழப்பை நிறுத்தும்…
-
- 7 replies
- 1.7k views
-
-
ஏனுங்க அம்மணி மினுமினுக்குது தாவணி எங்கே கிளம்பி போகிறிங்கிலாக்கு பட்டணத்துக்கு சினிமா மொத ஆட்டத்துக்கு போறேனுங்கோ ஆகட்டும் அது சரி ஊருக்குள்ள உங்களப்பத்தி ஏதோ பேசிக்கிட்டாங்கோ நீங்கள் யாரையோ காதலிக்கிறதாகவும் சீக்கிரம் அவரையே கண்ணாலம் செய்துகிறதாகவும் அது அம்புட்டும் உண்மையாங்க ? அப்படியெல்லாம் எதுவுமில்லிங்க முச்சுட்டும் புரளிங்க மக்க இப்படியெல்லாம் இல்லாத பொல்லாததெல்லாம் பேசி ஊர்குடியை கெடுப்பதாலே பலர் வாழ்வில் இழப்புகள் மட்டுமே மிஞ்சுமுங்க நேரங்கணக்க பேசிக்கிட்டிருந்ததால தாமதமாயிடுச்சிங்க படம் முடிச்சிடுங்கோ நான் போயி வாறேனுங்கோ எனக் கூறி வறப்பிலே ஓடினால் அம்மணி…….
-
- 7 replies
- 1.3k views
-
-
சின்னத்துரையாருக்கு ஒரு வருத்தம். கிளி போல பெண்டாட்டியை வைத்துக் கொண்டு ஊரெல்லாம் காகங்களைத் தேடித் திரியிற சில சபலங்களைப் போல அவருக்கு வீட்டில் எவ்வளவு பொருட்கள் இருந்தாலும் போதுமான பணம் வைத்திருந்தாலும் போற வாற இடங்களில் எதையாவது களவெடுக் காட்டில் சரிவராது. அவர் இந்த வருசம் விடுமுறைக்கு பீக்கிங்கு போயிருக்கிறார். அங்கை ஒரு பப்பிளிக் ரொயிலற்றக்கு போவேண்டிய அவசரம் அவருக்கு வந்திருக்கு. போனவருக்கு அங்கை இருந்த ரொயிலற் ரிசு வை பார்த்ததும் அந்தப் புத்தி எடு எடு என்று சொல்லிச்சுது. எடுத்திட்டார். உந்த விளையாட்டு பீக்கிங் இல் அதிமென்றதாலை ரொயிலற்றுக்குள்ளை ஸ்கான் மெசின் பூட்டி வைச்சிருந்ததையும் அவர் உள்ளே போன உடனேயே அவரது முகம் ஸ்கான் செய்யப்பட்டு விட…
-
- 4 replies
- 1.4k views
-
-
பெரிய அளவிற் பேசப்படாத வாகை சூடவா – திரை விமர்சனம் உங்க வீட்டுப்பிள்ளை படம் திரையில் போகிறது. அதிலே எம்ஜிஆரை நம்பியார் சவுக்கால் அடிக்கிறார். அதனைப் பொறுக்காது படம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு ரசிகன் சுடுகலனால் சுடத் திரை பற்றி எரிகிறது. இப்படித்தான் காட்சி தொடங்குகின்றது. 2011 இல் வெளியாகிய இந்தத் திரைப்படத்தை கொறோனா முடக்கத்தால் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. கற்றலின் அவசியத்தை வலியுறுத்தி எடுத்துள்ள திரைப்படம். ஏழைத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வியை மறுக்கும் கிராமத்துத் தலையாரி. படிக்காத பாமர மக்களை மட்டுமன்றி அவர்களது பிள்ளைகளையும் வயது வித்தியாசமின்றிக் கற்சூளையில் வேலைசெய்ய நிர்பந்திக்கப்பட்ட கிராமத்தை நோக்கி உதவி நிறுவனமொன்றின் வழிகாட்டலோடு அந்த…
-
- 2 replies
- 1.5k views
-
-
கார் முகில்கள் கலந்துரையாடி அடை மழை தூவுதே எழில் மயில்கள் நடனம் புரியவே சாரல்களும் பாராட்டி கைதட்டுதே சோலைக்கு பசுமை சேலை கட்டிவிடும் உரிமை நீருக்கு கிடைத்ததே எண்ணிலடங்கா முத்தங்கள் வைக்கவே மண்ணில் விதை வித்துக்கள் பிறக்குதே மாரி நீ மகர்ந்தசேர்க்கை செய்யவே ஏரியும் தூறு வாரி தவம் கிடக்குதே திரை சென்று உவர்ப்பாகும் முன்பே இதழ்களில் இனிப்பானதே
-
- 2 replies
- 994 views
-