யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.
40 topics in this forum
-
மகளின் 21 வது பிறந்த தினத்துக்குத் தன்னை தான் விரும்பும் மூன்று நாடுகளுக்குக் கூட்டிக்கொண்டு போவீர்களா அம்மா?? செலவும் அதிகம் இல்லை என்றாள். சரி நாம் மற்றவர்கள் போல் ஆடம்பரமாக எதையும் கொண்டாடுவதில்லை. மகளின் சாட்டில் நானும் போய்வரலாம் என்று எண்ணி சரி என்று கூறி இரு மாதங்களுக்கு முன்னர் விமானச்சீட்டுக்களை வாங்கியாகிவிட்டது. மூன்று நாட்கள் ஒரு நாட்டிலும் இரண்டு நாட்கள் இன்னொரு நாட்டிலும் மூன்றாவதாக சுவிசுக்கும் போவதாக ஏற்பாடு. நான் பலதடவை சுவிஸ் போயுள்ளேன். என் கடைக்குட்டி போகாதபடியால் கட்டாயம் அங்கும் தான் போகவேண்டும் என்றதனால் சரி மீண்டும் அந்நாட்டின் அழகை இரசிப்போம் என்று காத்துக்கொண்டிருக்க உந்தக் கொரோனா வந்து தடையாய் நிக்குது. டிக்கற் தங்குமிடம் இரண்டும் சேர்த்து…
-
- 72 replies
- 8.9k views
- 1 follower
-
-
வணக்கம், வரலாற்றை பின் களமாக வைத்து வரும் புனைகதைகள் என்றால் எனக்கு சிறு வயது முதலே மிகவும் ஆர்வம். அந்த வகையில் ஈழத்தின் வரலாற்றை பின் புலமாக வைத்து நானும் ஒரு உரை நடை கவிதை எழுதலாம் எனவிழைகிறேன். கவனிக்க - இது வெறும் புனை கதை. இதில் வரலாற்றின் பாத்திரங்கள் வருவர், போவர் ஆனால் இது வரலாறுஇல்லை. சொல்லப்போனால் இதில் இப்போ இலங்கையில் வரலாறு என ஏற்கப்பட்டிருக்கும் நிகழ்வுகள் பலதும், 180 பாகை நேரெதிர் திசையில் சித்தரிக்கப் படுகிறன. இந்த முயற்சிக்கு கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி, அவதார புருசன், ராமானுஜகாவியம் என்பனவே இன்ஸ்பிரேசன். ஆனால் அந்த தரத்தில் எதிர்பாராதீர்கள். உயர, உயரப் பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது 😂. நன்றி, கோஷான் சே …
-
- 22 replies
- 3.1k views
-
-
தைரொய்ட் குறைபாடும் அதற்கான நிவர்த்திகளும் தைரொய்ட் சுரப்பி வண்ணத்தி பூச்சி போன்ற அமைப்பில் கழுத்தடியில் உள்ளது. இது சுரக்கும் தைரொக்சின் எமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு நிமிடமும் தேவையானது.மூளையில் உள்ள கபச்சுரப்பியின் TSH (ஹோர்மோன் ) உத்தரவுப்படி செயல்படும். சிலவேளைகளில் TSH போதிய அளவு இருந்தாலும் தைரொய்ட் சுரப்பி தேவையான அளவு தைரொக்ஸினை சுரக்காது. இதற்கு முக்கிய காரணம் மரபு அணு சம்பந்தப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி செயல்பாடாகும். Autoimmune என்று சொல்லப்படும், எமது வெண்குருதி கலங்கள் தமக்கு கொடுக்கப்பட்ட நோய் எதிர்ப்பு வேலையை செய்யாமல் எமது உடலின் பல பாகங்களையும் தாக்கும். அந்த வழியில் தைரொய்ட் சுரப்பியையும் தாக்கும். அதனால் தைரொக்சின் அளவு குறைந…
-
- 391 replies
- 59.8k views
- 4 followers
-
-
அழகிய பனிபடர் அல்ப் மலைத்தொடர் ஐக்கிய நாடுகள் சபை தலைமைக்காரியாலம்.. மற்றும் போர் வேண்டாம் என்பதை உணர்த்த வைப்பட்டுள்ள பீரங்கியும். பல்லாயிரம் சொந்தங்களைப் பறிகொடுத்த பின்னும்.. தமது உரிமைக்காக பாதுகாப்பான ஜெனிவாவில் கூடிக் கூட போராட மனநிலையற்ற தமிழர்கள் பலர். ஒரு சிலரின் சொந்த முயற்சியால்.. ஜெனிவா வாழ் பிற இன மக்களிடம் உள்ள ஈழத்தமிழர் துயர் பட்டறிவு அதிகம். ஐநா சபை. ஐநா வின் முன் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கால் முறிந்த கதிரை. இதன் அர்த்தம்.. இன்னும் சரிவரப் புரியவில்லை.. தெரிந்தவர்கள் சொல்லலாம்..?! எனி ஐநாவில் இருந்து அறிவியல் நோக்கி.. இங்கு தான் இந்தப் பிரபஞ்சத்தை ஆக்கியுள்ள.. கடவுளின் துகள…
-
- 18 replies
- 2.3k views
- 1 follower
-
-
உ. நிலம் தழுவாத நிழல்கள். நிலம் ..... 1. அழகிய பாரிஸ் நகருக்கு அணிகலனாய் விளங்கும் ஷேன்நதி கடல் காதலனின் கரங்களில் தவழ இரு கரைகளின் தழுவலில் அடங்கி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறாள். ஆங்காங்கே ஓரிரு சுற்றுலாப் படகுகளும் சுமைதாங்கிப் படகுகளும் நதியன்னைக்கு வலிக்காமல் நீரை விலக்கி நகர்ந்து செல்கின்றன. படகின் மேல் தளத்தில் சில சிறுவர்கள் நின்று வீதியில் போய் வருகிறவர்களையும், கரையோர பூங்காக்களின் கதிரைகளில் இருப்பவர்களையும் பார்த்து குதூகலத்துடன் கையசைத்துக் கொண்டு செல்கின்றனர். …
-
- 73 replies
- 8.3k views
-
-
வறுமையின் நிறம் கதிரவன் கடல் குளித்து கிழக்குவானில் தலைதுவட்டத் தொடங்கியிருந்தான். வாடைக்காற்று புழுதியை வாரி இறைத்தபடி சுழன்றடித்துக்கொண்டிருந்தது. காலை ஜந்து மணிக்கே விழித்துவிடும் எமது ஊரான காவலூர். அதிகாலையானால் எமது ஊரில் குடிநீருக்கான போராட்டம் தொடங்கிவிடும். பட்டினசபையால் வழங்கப்படும் குடிநீரை குழாய்களில் எடுப்பதற்காக குழாயடியில் வரிசையாக குடங்களும் வாளிகளும் நிரையாக நிற்கத் தொடங்கிவிடும். (இது நடந்தது இன்றைக்கு 40 வருடங்களுக்கு முன்னைய காலம்.) இன்று வீடுகளுக்கு குழாய்நீர் வசதி வந்து விட்டதால் குழாயடியில் குழுமும் பெண்கள் கூட்டமும் வரிசையாக நிற்கும் குடங்களும் காணாமல் போய்விட்டன. அன்றைய நாட்களில் வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை எல்லாமே அந்தக் குழாயடிச் செய்திக…
-
- 11 replies
- 2k views
-
-
இப்போதெல்லாம் புலம்பெயர்ந்த தமிழர்கள் எதிர்கொள்ளும் பெரிய சவால் அல்லது பிரச்சனை என்றால் அது தம் பிள்ளைகளுக்குத் திருமணம் பேசுவதுதான். பிள்ளைகள் படிக்கும் காலங்களில் ஒருத்தனையும் நிமிர்ந்தும் பார்க்கக் கூடாது. படி படி என்று கூறிவிட்டு அவர்களும் எமது அதீத கட்டுப்பாட்டால் ஆண்பிள்ளைகளுடன் அதிகம் பலரது விட்டுவிட்டு அல்லது பழகினாலும் காதல் கீதல் என்று போகாது ஒதுங்கிவிடுவார்கள். பிள்ளைகள் படித்து முடித்து நல்ல வேலை சம்பளம் என்று சுதந்திரமாய் இருக்கவாரம்பித்ததும் திருமணம் பேச ஆரம்பித்துவிடுவர். சில பிள்ளைகள் மிக அன்பாக வெளியுலகம் அதிகம் தெரியாதவர்களாகவும் புலம்பெயர் நாடுகளில் இருக்கின்றனர். சிலர் தன்னம்பிக்கை அதிகம் உள்ள பிள்ளைகள் பலர் இப்போது ஐரோப்பிய நாடுகளில் முப்பத்தைந்து நாற…
-
- 405 replies
- 37.2k views
- 2 followers
-
-
அவரை எனக்கு பார்த்த அந்த கணத்திலேயே பிடிக்காமல் போய்விட்டது. ஒரு சிலரை பார்த்தவுடன் பிடிக்காமல் போய், பிறகு பழக வேண்டி வந்து அதன் பின் பிடித்து போய்விட்ட சந்தர்ப்பங்களும் உள்ளது. ஆனால் இந்த மனிசனை கண்டவுடன் ஒரு போதுமே ஆளுடன் பழகக் கூடாது எனும் அளவுக்கு எனக்கு அப்படி ஒரு வெறுப்பு வந்து விட்டது. அரைவாசி மட்டுமே திறந்து பார்க்கும் கண்கள், மற்ற எல்லாரும் மயிருகள் என்ற மாதிரி பார்க்கும் அந்த ஏளனப் பார்வை, முகத்தில் எப்பவும் இருக்கும் ஒரு கிழமைக்கும் மேல் சவரம் செய்யாத தாடி, சாயம் போனது போன்று தோன்றும் முழுக்கை ஷேர்ட்டும் காக்கி நிற டவுசரும், அருகில் வந்தால் மூக்கில் அடைக்கும் சிகரெட் மணமும் என்று ஆள் ஒரு டைப்பாகவே இருப்பார். இலங்கை இந்திய உணவுப் பொருட்களை வாங்கு…
-
- 18 replies
- 3.2k views
-
-
அத்தை மகள் அங்கே சோலையில் அத்திப்பழம் பறிக்க அவள் அழகை கண்டு அக்கா மகன் மனம் தடுமாற திட்டம் போட்டு திருட தானோ பொழுதெல்லாம் கண்டும் காணாத மாதிரி நோட்டம் விடுகிறான் என அவள் எண்ண சந்தர்ப்பங்களில் சந்திக்க முற்படும்போதெல்லாம் நாணமும் பிறந்து நாழிகையும் இறக்குதே உரையாடமல் நடைபோட்டு இருவரும் விலகி சென்றதாலே கண்மூடித்தனமான எண்ணங்கள் பிறக்குதே திருமணத்திற்கு பின்பு கணவன் பிறை நுதலில் இடும் முத்தம் திருத்தாமாகுதே திருமணத்திற்கு முன்பு காதலன் இதழில் வைக்கும் முத்தம் கீழான உணர்வு மேலும் வளர காரணமாகுதே ஊடலில் ஏற்படும் பிரிவுகளே உண்மையான அன்பை விரிவாக்கும் தூண்டுக…
-
- 7 replies
- 1.7k views
-
-
டிஸ்கி : இந்தாண்டு நம்மளும் ஏதாவது கிறுக்குவோமே..! என்ற முயற்சிதான்..கீழே..! ஏறக்குறைய 45 வருடங்களுக்கு முன்.. புகுமுக வகுப்பை (PUC) முடித்துவிட்டு, மதிப்பெண்கள் வெளிவரும் நேரம்.. 'திக் திக்' மனதோடு அடுத்த எதிர்கால படிப்பை 'எந்தப் பிரிவில் தொடரலாம்..?' என மனதில் ஆயிரம் கேள்விகள்..குழப்பங்கள்..! தோட்டத்திற்கு சென்றால் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள், அக்கம்பக்கம் உள்ளோர் எனது ஐயாவிடம் "மைனர் அடுத்து என்ன செய்யப்போறார்..?" எனக் கேள்விகள்.. மதிப்பெண்கள் வரும்வரை என்னிடம் பதிலில்லை.. ஒருமாத கால காத்திருப்பிற்கு பின் பெறுபேறுகள் வந்தாயிற்று.. எதிர்பார்த்தபடியே நல்ல மதிப்பெண்கள்..! நிச்சயம் எனது கனவான பொறியாளராக முடியும…
-
- 63 replies
- 10k views
- 1 follower
-
-
ஏனுங்க அம்மணி மினுமினுக்குது தாவணி எங்கே கிளம்பி போகிறிங்கிலாக்கு பட்டணத்துக்கு சினிமா மொத ஆட்டத்துக்கு போறேனுங்கோ ஆகட்டும் அது சரி ஊருக்குள்ள உங்களப்பத்தி ஏதோ பேசிக்கிட்டாங்கோ நீங்கள் யாரையோ காதலிக்கிறதாகவும் சீக்கிரம் அவரையே கண்ணாலம் செய்துகிறதாகவும் அது அம்புட்டும் உண்மையாங்க ? அப்படியெல்லாம் எதுவுமில்லிங்க முச்சுட்டும் புரளிங்க மக்க இப்படியெல்லாம் இல்லாத பொல்லாததெல்லாம் பேசி ஊர்குடியை கெடுப்பதாலே பலர் வாழ்வில் இழப்புகள் மட்டுமே மிஞ்சுமுங்க நேரங்கணக்க பேசிக்கிட்டிருந்ததால தாமதமாயிடுச்சிங்க படம் முடிச்சிடுங்கோ நான் போயி வாறேனுங்கோ எனக் கூறி வறப்பிலே ஓடினால் அம்மணி…….
-
- 7 replies
- 1.3k views
-
-
கார் முகில்கள் கலந்துரையாடி அடை மழை தூவுதே எழில் மயில்கள் நடனம் புரியவே சாரல்களும் பாராட்டி கைதட்டுதே சோலைக்கு பசுமை சேலை கட்டிவிடும் உரிமை நீருக்கு கிடைத்ததே எண்ணிலடங்கா முத்தங்கள் வைக்கவே மண்ணில் விதை வித்துக்கள் பிறக்குதே மாரி நீ மகர்ந்தசேர்க்கை செய்யவே ஏரியும் தூறு வாரி தவம் கிடக்குதே திரை சென்று உவர்ப்பாகும் முன்பே இதழ்களில் இனிப்பானதே
-
- 2 replies
- 995 views
-
-
ஊர் விட்டு ஊரோடி வான் விட்டு நாடோடி நிலவரம் கலவரமாக நீயே என் கதி என ஊர்ப்புதினத்தின் விடுப்புக்காரி கண் எதிரே திரை விரித்தாய். தாய்க்கு நிகர்த்து மொழி பேசி உறவுக்கு நிகர்த்து கதை பேசி கடுகதி வாழ்வில் கனதிகள் குறைக்கும் திரைபேசியானாய் நான் அலைபேசி மறந்தேன். காலவெளியில் கண்ட சங்கதிகள் ஆயிரம் ஆயிரம் அத்தனையும் அடக்கி அமுசடக்கமாய் வளர்ந்து குமரியாய் குலுங்கி நிற்கும் யாழே... நீயே என் மனதை தைத்த மோக முள்... ஊர் தொலைத்தவனின் ஊனத்தை ஊமையாய் புரிந்து கொண்டவள்..! சாதனைக்குள் சோதனை சாதாரணம்..! சார்ந்திருந்தோர் எதிர் நின்றோர் எ…
-
- 10 replies
- 1.8k views
-
-
கலைந்து சென்ற கார்மேகம். கார்குழலில் இருந்து நழுவிய மலரொன்று நர்த்தனமாடுகின்றது அசைந்து வரும் அவள் அசைவுகளில் அவள் நடந்து வருகின்றாள்........! பெருமழையின் தூறல்களில் விழும் சிறு துளிகள் முகமலரில் விழுந்து முன்னழகில் மோட்சமடைகின்றன அவள் ஓடி வருகின்றாள்......! எதிரே பார்த்து புன்னகைக்கையில் என்னிடமும் சிறு மலர்ச்சி மழைநீரில் குமிழ்களாய் மனசுக்குள் சிதறுகின்றன அவள் சிரிப்புடன் வருகிறாள் ........! என்னை கடந்து செல்கையில் என் மனசில் சிறு சலனம் குழந்தையோடும் குடையோடும் என் பின்னே வருகின்றான் அவள் கணவன் அவள் அவர்களிடம் செல்கிறாள் ......! …
-
- 16 replies
- 2.5k views
-
-
சின்னத்துரையாருக்கு ஒரு வருத்தம். கிளி போல பெண்டாட்டியை வைத்துக் கொண்டு ஊரெல்லாம் காகங்களைத் தேடித் திரியிற சில சபலங்களைப் போல அவருக்கு வீட்டில் எவ்வளவு பொருட்கள் இருந்தாலும் போதுமான பணம் வைத்திருந்தாலும் போற வாற இடங்களில் எதையாவது களவெடுக் காட்டில் சரிவராது. அவர் இந்த வருசம் விடுமுறைக்கு பீக்கிங்கு போயிருக்கிறார். அங்கை ஒரு பப்பிளிக் ரொயிலற்றக்கு போவேண்டிய அவசரம் அவருக்கு வந்திருக்கு. போனவருக்கு அங்கை இருந்த ரொயிலற் ரிசு வை பார்த்ததும் அந்தப் புத்தி எடு எடு என்று சொல்லிச்சுது. எடுத்திட்டார். உந்த விளையாட்டு பீக்கிங் இல் அதிமென்றதாலை ரொயிலற்றுக்குள்ளை ஸ்கான் மெசின் பூட்டி வைச்சிருந்ததையும் அவர் உள்ளே போன உடனேயே அவரது முகம் ஸ்கான் செய்யப்பட்டு விட…
-
- 4 replies
- 1.4k views
-