தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
2010ல் அதிக முறை தரவிறக்கம் செய்யப்பட்டவை சென்ற ஆண்டில் அதிகமான எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்ட புரோகிராம்களில் முதல் பத்து இடங்களைப் பிடித்த புரோகிராம்களின் பெயர்களை, இந்த புரோகிராம்களைத் தரும் சிநெட் (CNET Download.com) என்ற இணைய இதழ் வெளியிட்டுள்ளது. இந்த தளத்திலிருந்து நூறு கோடிக்கு மேலான எண்ணிக்கையில் சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் சென்ற 2010ல் டவுண்லோட் செய்யப்பட்டன. அவற்றில் முன்னணி அப்ளிகேஷன்கள் என்ன என்ன என்று இப்போது பட்டியலிடப் பட்டுள்ளன. பலரின் பயன்பாட்டிற்கு உள்ளான இந்த புரோகிராம்களை நீங்கள் பயன்படுத்தினீர்களா? இல்லையெனில் இனிமேலாவது தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாமே! 1. ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் இலவச தொகுப்பு ( AVG AntiVirus Free editi…
-
- 0 replies
- 1.4k views
-
-
பயனாளர்களே கேள்வி கேட்டு அவர்களே பதில் அளிக்கும் வகை இணையதளங்களில் கோரா (Quora) இணையதளம் உலக அளவில் முன்னிலையில் இருக்கிறது. ஆங்கில மொழியில் தொடங்கப்பட்ட இந்த இணையதளம் பின்னர் பல்வேறு மொழிகளுக்காகவும் தொடங்கப்பட்டது. தற்பொழுது அந்த வரிசையில் தமிழ் மொழியும் இணைந்திருக்கிறது. கடந்த வாரம் முதல் கோராவின் தமிழ் இணையதளம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.அதைப் பயன்படுத்தி இனிமேல் தமிழில் கேள்விகளைக் கேட்கவும், பதில் அளிக்கவும் முடியும். https://ta.quora.com/ என்ற இணையதள முகவரியில் இந்த தளத்துக்குச் செல்ல முடியும். அதைப் பயன்படுத்தி இனிமேல் தமிழில் கேள்விகளைக் கேட்கவும், பதில் அளிக்கவும் முடியும். `` உலகின் அறிவுச் செல்வத்தைப் பகிர்வதும் வளர்ப்பத…
-
- 2 replies
- 1.2k views
-
-
கணினி / லேப்டாப்பில் எளிதாக வாட்ஸ் ஆப்-பை உபயோகிப்பது எப்படி...? ஆண்ட்ராயிட் மொபைல், ஐபோன் மற்றும் டேப்லட்டுகளில் மட்டுமென பிரத்யேகமாக இருந்து வந்த வாட்ஸ் ஆப்-பை இனி நமது PC, லேப்டாப்பிலும் பயன்படுத்த முடியும். மொபைல், PC, லேப்டாப், டேப்லட் போன்ற அனைத்து டிவைசிலும் ஒரே நேரத்தில் வாட்ஸ் ஆப்-பை பயன்படுத்தலாம். ஒரு டிவைசிலிருந்து அனுப்பப்படும் மெசேஜ் அனைத்து டிவைசிலும் sync ஆகி விடும். மொபைலில் சிரமப்பட்டு டைப் அடிப்பதை விட கணினியில் எளிதாக வேகமாக வாட்ச் அப் அனுப்புவது இலகுதானே? எப்படி PC / லேப்டாப்பில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவது ? முக்கியமாக இதனை பயன்படுத்த மொபைல் மற்றும் உங்கள் கணினி ஒரே நேரத்தில் இணையத்துடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். Step 1 மொபைலில…
-
- 1 reply
- 1.7k views
-
-
அப்பிள் நிறுவனம் அவசர எச்சரிக்கை நவீன தொழில்நுட்பங்கள் மனித வாழ்விற்கு ஆரோக்கியமானதாக இருக்கின்ற போதிலும், அதனூடாக தமது கைவரிசையைக் காட்டுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இவ்வாறானபிரச்சினைகள் அதிகளவில் இணைய வலையமைப்பு, தொலைபேசிவலையமைப்புக்களில் இடம்பெறுவதை காணலாம். தற்போது இப் பிரச்சினை புதிய வடிவில் அப்பிள் பயனர்களை குறிவைத்துள்ளது. அதாவது அப்பிள் சாதனங்களை பயன்படுத்தும்போது அவற்றிற்கு தனியான Apple ID உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு உருவாக்கினால்தான் குறித்த சாதனத்தின் அனைத்து வசதிகளையும் அனுபவிக்க முடியும். இதை நன்கு அறிந்து கொண்ட ஹேக்கர்கள் நூதனமான முறையில் குறுஞ்செய்தி ஒன்றினை அனுப்புகின்றனர். அதில்“உங்கள் Apple I…
-
- 0 replies
- 300 views
-
-
தடுப்பூசிக்கு எதிரான... அனைத்து தவறான தகவல்களையும், நீக்குகிறது யூடியூப் (YouTube) கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக மக்களுக்கு செலுத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளையும் பற்றி தவறான தகவல்களை பரப்பும் உள்ளடக்கத்தை நீக்குவதாக யூடியூப் (YouTube) மீண்டும் அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் ஆபத்தானவை மற்றும் ஆட்டிசம், புற்றுநோய் அல்லது கருவுறாமை ஆகியவற்றை ஏற்படுத்தும் காணொளிகள் அகற்றப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், தவறான தகவல்களை பரப்புவதன் மூலம் தடுப்பூசி போடுவதில் மக்கள் சந்தேகம் கொள்வதற்கு சமூக ஊடக தளங்கள் பெரும்பாலும் பொறுப்பாகும் என்றும் இந்த பிரச்சினையை தீர்க…
-
- 0 replies
- 757 views
-
-
விலங்குகள்தன் உணவுக்காகவும், இயற்கை இடர்பாடுகள் மற்றும் எதிரிகளிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ள வாழ்நாள் முழுவதும் போராடும் குணம் கொண்டவை. விலங்குகளின் வழித்தோன்றலான மனிதனும் ஆரம்ப காலத்தில் இத்தகையதொரு போரட்டத்தில் பங்கு கொண்டவனே. கூட்டு உழைப்பே உயிர்வாழ அடிப்படை என புரிந்து கொண்டவன் நாகரீக சமுதாயத்தை கட்டமைத்தான் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இந்த சார்ந்து வாழும் உளவியல் தான் ஃபேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களை வெற்றிகரமாக இயங்கச் செய்கிறது. Personality and Individual Differencesஎன்ற ஆய்வின் மூலம் உளவியலாளர்களும் இதனை உறுதி செய்கிறார்கள். இந்த ஆய்வின் படி இரண்டு விதமான அடிப்படை சமூக தேவையே நம்மை ஃபேஸ்புக் நோக்கி இழுக்கிறது. 1. சார்புநிலை – அடிப்படையில் சார்ந்…
-
- 2 replies
- 1.2k views
-
-
புதன்கிழமை, 6, அக்டோபர் 2010 (11:11 IST) படங்களுக்கான புது இமேஜ் பார்மேட் : கூகுளில் அறிமுகம் இணையத்தில் பதிவிறக்கத்தின் போது படங்கள் வேகமாக லோட் ஆவதற்கு வசதியாக புது வகையான இமேஜ் பார்மேட்டை கூகுள் அறிமுகப்படுத்துகிறது. சில இணையதளங்களுக்கு செல்லும்போது அந்த இணையதளம் கணினியில் லோட் ஆவதற்கு நிறைய நேரம் எடுக்கிறது. அதற்கு காரணம் அந்த இணையப் பக்கங்களில் உள்ள புகைப்படங்கள் லோட் ஆவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரமே ஆகும்.அதாவது குறிப்பிட்ட பக்கங்களில் உள்ள இமேஜ்களின் பைல் சைஸ் என்றழைக்கப்படும் கோப்புகளின் அளவு பெரியதாக இருப்பதே இதற்கு காரணம். இதுபோன்ற சமயங்களில் நாம் எரிச்சலடைந்து அந்த வலைப்பக்கத்தை மூடி விடுகிறோம், இதனை கருத்தில் கொண்டு எளிதாக படங்கள் லோட…
-
- 0 replies
- 924 views
-
-
பேஸ்புக் சேவைக்கு சவால் விடுக்கும் வகையில் கூகிளின் புதிய சேவை? 29 ஜூன் 2011 இந்த புதிய சேவையில் படங்கள், தகவல்கள், கருத்துக்களை பரிமாறிக் கொள்ள முடிவதுடன் வரைபடங்களையும் பகிர்ந்து கொள்ள முடியும்.. பேஸ்புக் சேவைக்கு சவால் விடுக்கும் வகையில் கூகிளின் புதிய சேவை? பேஸ்புக் சமூக இணைய வலையமைப்பிற்கு சவால் விடுக்கும் வகையில் இணைய தேடுதல ஜாம்பான்களாகக் கருதப்படும் கூகிள் புதிய சேவை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. பேஸ் புக்;கைப் போன்ற அம்சங்களைத் தாங்கிய இந்த புதிய சேவைக்கு கூகிள்ப்ளஸ் என பெயரிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் 500 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பேஸ் புக்கைப் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த புதிய சேவையில் படங்கள், தகவல்கள், கரு…
-
- 1 reply
- 1.1k views
-
-
ரூ.6,500க்கு விண்டோஸ் 10 கம்ப்யூட்டர்! கம்ப்யூட்டர் சந்தையை உற்று நோக்கினால் அதன் வளர்ச்சியை கண் கூடாக பார்க்க முடியும். தொழில்நுட்ப உலகில், சிறிய கணினி மற்றும் கைகளில் எடுத்து செல்ல வசதியாக இருக்கும் கணினி வாடிக்கையாளர்களை அதிகம் கவர்வதால், சிறிய வகை கணினிகளின் வரவு அதிகரித்து இருக்கின்றது என்றுதான் கூற வேண்டும். அந்த வகையில் அமெரிக்க நிறுவனமான இன்ஃபோகஸ் நிறுவனம், கங்காரு எனும் புதிய வகை கணினியை அறிமுகம் செய்துள்ளது. கங்காரு கணினியின் சிறப்பம்சங்கள்: * உலகின் சிறிய கணினி என்ற பெருமையை பெற்றிருக்கும் இந்த கணினி 124 mm நீளம், 80.5 mm அகலமும், 12.9 mm சுற்றளவும் கொண்டிருக்கின்றது. * இந்த கணினியில் கழற்றக் கூடிய ஒரே பேஸ் யூனிட், எச்.டி.எம்.ஐ போர்ட், யு.எஸ்.பி-2…
-
- 0 replies
- 1.9k views
-
-
அமெரிக்காவின் முக்கிய அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் பலவற்றின் இணையத்தளங்களில் ஊடுருவிய ஹெக்கர்கள் சுமார் 1.6 மில்லியன் கணக்குகளின் தகவல்களை திருடியுள்ளனர். நாசா, எப்.பி.ஐ, பென்டகன், உட்பட பல அமைப்புகளின் இணையக்கட்டமைப்புகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தவிர அமெரிக்க பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட நிறுவனங்களையும் ஹெக்கர்கள் விட்டுவைக்கவில்லை. 'Ghost Shell' என்ற ஹெக்கர்களின் குழுவே இத்தாக்குதல்களை நடத்தியுள்ளது. இத்திட்டத்திற்கு #ProjectWhiteFox என அக் குழு பெயரிட்டுள்ளது. பாவனையாளர்களின் இணைய முகவரிகள், கடவுச் சொற்கள், கணக்கு விபரங்கள் என பல விபரங்கள் அக்குழுவினால் திருடப்பட்டுள்ளன. மேலும் திருடப்பட்ட தரவுகளை வெவ்வேறு இணையத்தளங்களில…
-
- 0 replies
- 804 views
-
-
பேஸ்புக் முன்னுரிமை அளிக்கும் நபர்கள் யார் என்று தெரியுமா.? ஏன் அது நீங்களாவும் இருக்கலாம்..! இதோ தெரிந்துகொள்ளுங்கள் உலக தற்கொலை தடுப்பு தினம் எதிர்வரும் 10 ஆம் திகதி அனுசரிக்கப்படுவதையொட்டி, பிரபல சமூக வலைதளமான பேஸ்புக், சமூக ஆர்வர்களுடன் இதில் பங்கேற்கவுள்ளது. பேஸ்புக் கண்காணிப்பார்கள், தற்கொலை எண்ணங்களோடு பதிவிடுபவர்களின் நிலைத்தகவல்களுக்கு முன்னுரிமை அளிப்பர். அந்தத் தகவல்கள் அவர்களின் நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ அனுப்பப்படும். தற்கொலை எண்ணத்தோடு பதிவிடுபவர்களின் நண்பர்களை அணுக சமூக ஆர்வலர்கள் பயன்படுத்தப்படுவார்கள். சமூக ஆர்வலர்கள் துயர மனநிலை, விரக்தி, மனக்கசப்பு மற்றும் தற்கொலை எண்ணங்களில் இருக்கும் மக்களுக்கு உளரீத…
-
- 0 replies
- 326 views
-
-
மவுஸ் பயன்படுத்துவதால் ஏற்படும் வலியை தடுப்பதற்கான வழிகள்.. [Friday, 2014-05-02 22:08:15] கம்ப்யூட்டருடன் சேர்ந்து, நம் அன்றாட வாழ்வில் நம்முடன் கலந்ததாக மவுஸ் மாறிவிட்டது. நாம் அறியாமலேயே நம் கைகளில் ஏற்படும் பலவிதமான பிரச்சினைகளுக்குக் காரண மாகவும் மவுஸ் அமைந்துவிட்டதாகப் பல டாக்டர்கள் கூறுகின்றனர். கைகளில், குறிப்பாக மணிக்கட்டினைச் சுற்றி ஏற்படும் வலி மற்றும் எலும்பு தேய்மானத்திற்கு மவுஸ் காரணமாய் அமைகிறது என்கிறார்கள். இதனை ஆங்கிலத்தில் musculoskeletal injury என்று அழைக்கின்றனர். இதற்குக் காரணம் அதனைப் பிடித்துப் பயன்படுத்தும் விதத்தில் நாம் சரியாக அக்கறை காட்டாததுதான். இங்கு மவுஸைப் பிடித்துப் பயன்படுத்தும் வழிகளில் பின்பற்ற வேண்டிய சில மருத்துவ அறிவுரைகளை இங்கு க…
-
- 2 replies
- 757 views
-
-
பெடிச்சி என்னும் வலைப்பதிவர் போர் பற்றியும், தேசியம்,தேசம்,தியாகம்,மாவீரம
-
- 14 replies
- 1.9k views
-
-
44.6 பில்லியன் டொலர்கள் கொடுத்து யாஹூவை வாங்க மைக்ரோசஃப்ட் முன்வந்துள்ளது உலக அளவில் இணையதள சேவையை வழங்கிவரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான யாஹூவை 44.6 பில்லியன் டொலர்களுக்கு வாங்க உலகின் மிகப்பெரிய கணினி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் முன்வந்துள்ளதை தாங்கள் மதிப்பீட்டு செய்துவருவதாக யாஹூ கூறியுள்ளது. இணையதளத்தில் அதிக இலாபத்தை அளிக்கக் கூடிய விளம்பர உலகில், கூகிள் நிறுவனத்துககு எதிராக மேலும் திறம்பட ஒரு கடுமையான போட்டியை அளிக்கும் நோக்கிலேயே யாஹூவை வாங்க மைக்ரோசாஃட் முன்வந்துள்ளது. யாஹூவை வாங்க மைக்ரோசாஃப்ட் அளிக்க முன்வந்துள்ள தொகை தற்போது பங்குச் சந்தையில் நிலவி வரும் யாஹூவின் பங்குகளின் விலையை விட அறுபது சதவீதம் அதிகமானது. யாஹூ மற்றும்…
-
- 3 replies
- 1.7k views
-
-
-
தைப்பூசம் என்றால் என்ன? தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். தை மாதத்திலே பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக இந்துக்களால் கொண்டாடப் படுகின்றது. தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக (பறுவம்) இருக்கும்.தைப்பூசம் முருகப்பெருமானுடைய விஷேட தினமாகும். அன்றைய தினம் குழந்தைகளுக்கு தோடு குத்துதல், ஏடு தொடக்குதல் போன்றவற்றை சிறப்பாக செய்து வைப்பார்கள். மற்றும் அடியார்கள் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவார்கள்.இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில் களிலும்…
-
- 4 replies
- 248 views
-
-
83 கோடி டன் கரியமில வாயு இன்டர்நெட்டினால் வெளியாகிறது இன்டர்நெட் இணைப்பு உலகின் செயல்பாடுகளுக்கான அடிப்படைக் கட்டமைப்பாக மாறிவிட்ட நிலையில், இதில் பயன்படுத்தப்படும் சாதனங்கள், ஆண்டுக்கு 83 டன் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவினை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில் நுட்ப துறை இயக்கம் குறித்து ஆய்வு நடத்தி வரும் ஜெர்மனி நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது. இது உலக அளவில் வெளிப்படும் இந்த வாயுவில் 2% ஆகும். இது வரும் 2020 ஆம் ஆண்டில் இரு மடங்காக உயரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் வழிகளைக் கண்டறிய பல்வேறு நிலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இன்டர்நெட் மற்றும் பிறவகை நெட்வொர்க்கில் இயங்கும் அனைத்தையும் ஆய்வில் கொண்டு வர வேண்…
-
- 0 replies
- 574 views
-
-
உங்கள் கணனியில் போட்டோ ஷாப் (Photo shop) இல்லாவிடாலும் கவலையில்லை.. ஆன்லைனிலேயே படங்களை எடிட் செய்து கொள்ளலாம்.. http://pixlr.com/
-
- 1 reply
- 1.6k views
-
-
இணையத்தமிழ் ஊடகம்! – நான்காம் தமிழின் வளர்ச்சியில் அடுத்த கட்ட முயற்சி! : கணினியில் தமிழ் வளர்ச்சி பற்றிய கட்டுரைப் போட்டி - வகை (1) கணினியில் தமிழ் வளர்ப்பது என்றாலே நம் நினைவுக்கு வருபவை தமிழில் தட்டெழுத்துக் கருவிகள் வடிவமைத்தல், சமூக வலைத்தளங்களின் சேவைகளைத் தமிழில் வரச் செய்தல், தமிழிலேயே கணினிக்கான நிரல் (programming) எழுதுதல் போன்றவைதாம். ஆனால், மூன்று பதிற்றாண்டுகளாகத்1 (decades) தமிழ்த் தன்னார்வலர்கள் பலரும் மேற்கொண்டு வரும் அயரா உழைப்பின் விளைவாக, மேற்படி நோக்கங்களில் நாம் ஓரளவு தன்னிறைவு எட்டிவிட்ட நிலையில், தமிழினம் தற்பொழுது தன் பார்வையைச் செலுத்த வேண்டிய இடம் கணினியில் தமிழர்களுக்கான பொருளாதார அடித்தளத்தை உருவாக்குதல். …
-
- 0 replies
- 1.5k views
-
-
-
http://www.mediafire.com/download/n3zqzqydwzm/karuvachi+kaviyam.pdf
-
- 0 replies
- 227 views
-
-
இணைய இணைப்பு இல்லாமல் ஜிமெயிலை பயன்படுத்துவதற்கு கூகுளின் ஜிமெயிலை அனைவரும் உபயோகிக்கிறோம் நாளுக்கு நாள் புது புது வசதிகளை அறிமுகபடுத்துவதால் அனைவரும் ஜிமெயிலை பயன்படுத்துகிறோம். அதில் ஏதாவது ஒரு நேரத்தில் நமக்கு ஏதேனும் முக்கியமான மின்னஞ்சல் வந்துள்ளதா என சோதிக்க வேண்டும் அல்லது யாருக்கேனும் முக்கிமாக ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் சரியாக அந்த நேரம் பார்த்து நம்முடைய கணணியில் இணைய இணைப்பு துண்டிக்கபட்டிருக்கும் அல்லது நாம் வேறு எங்காவது வெளியில் இருப்போம் மடிக்கணணியில் இணைய இணைப்பு இருக்காது. அது போன்ற சமயங்களில் நமக்கு உதவி செய்யவே கூகுள் ஒரு அருமையான வசதியை வெளியிட்டுள்ளது. ஓப்லைனில் நம்முடைய ஜிமெயிலுக்கு வந்துள்ள மின்னஞ்சலை பார்…
-
- 0 replies
- 905 views
-
-
[size=4]புதிய இணையத்தள முகவரிகள் [/size] [size=1] [size=4]அமெரிக்காவில் உள்ள சர்வதேச இணையத்தள நிர்வாகம, ICANN, பல நாடுகள், நிறுவனங்கள் ஊடாக புதிய இணையத்தள முகவரிக்களுக்கான 1930 கோரிக்கைகளை பெற்றுள்ளது.[/size][/size] [size=1] [size=4]உதாரணத்திற்கு கூகிளும் அமசொனும் தரப்பிற்கு பன்னிரண்டு வரையான புதிய தள முகவரிகளை கேட்டுள்ளன: [/size][/size] [size=1] [size=5].app (i.e.: www.google.app)[/size][/size][size=1] [size=5].home[/size][/size][size=1] [size=5]..shop[/size][/size][size=1] [size=5].game[/size][/size] [size=1] [size=5]ஒரு விண்ணப்பத்தின் செலவு :185,000 USD [/size][/size][size=1] [size=5]சட்ட, தயாரிப்பு என மொத்த செலவு ~ 370,000 USD[/size][size=…
-
- 1 reply
- 1.1k views
-
-
நாம் இறந்த பிறகுகூட நமது டிஜிட்டல் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என நாம் உருவாக்கி வைக்கலாம். இந்தியாவில் இதுபோன்ற விஷயங்கள் பெரிய அளவில் இல்லை என்றாலும், உலகம் முழுவதும் பல நாடுகளில் இந்தப் பழக்கம் உள்ளது. இன்று உலகில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் இருவேறுவித வாழ்க்கை இருக்கிறது. நிஜ வாழ்க்கை மற்றும் டிஜிட்டல் வாழ்க்கை என இரண்டு வாழ்க்கை வாழ்ந்துவருகிறோம். நாம் இறந்த பிறகு, நமது டிஜிட்டல் வாழ்க்கை என்னாகும் என எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அந்த அளவுக்கு முக்கியமா அது எனக் கேட்கத்தான் தோன்றும். 2007-ல் மைக்ரோசாஃப்ட் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, ஒரு சாதாரண நபருக்கு ஃபேஸ்புக், கூகுள், ட்விட்டர், வங்கிக் கணக்கு எனச் சராசரியாக 25 டிஜிட்டல் கணக்குகள் உள்ளன எனக் க…
-
- 0 replies
- 449 views
-
-
முதன்முறையாக இலச்சினையை மாற்றியது யூடியூப் பிரபல காணொளி பகிர்வுத் தளமான யூடியூப் ஆரம்பிக்கப்பட்டு 13 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், முதன்முறையாக தமது இலச்சினையை (Logo) மாற்றியுள்ளது. பிரபல தேடுபொறி தளமான கூகுளின் உப பிரிவுகளில் ஒன்றாக, காணொளிப் பகிர்வுக்கான தளமாக 2004 ஆம் ஆண்டு யூடியூப் இணைய உலகில் அறிமுகமானது. அது முதல் உலகமெங்கும் காணொளிப்பகிர்வு மற்றும் தரவிறக்கம் ஆகிய சேவைகளை வழங்கும் முன்னணி நிறுவனமாக யூடியூப் திகழ்கிறது. தற்போது தனி நபர்கள் முதல் பிரபல நிறுவனங்கள் வரை தங்களுக்கென தனி யூடியூப் அலைவரிசைகளை வைத்துள்ளனர். அதன் மூலம் பெரும் புகழ் பெற்றவர்களும் உண்டு. இந்நிலையில், ஆர…
-
- 0 replies
- 432 views
-